• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

வடமாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க  நடவடிக்கை - ஆளுநர்

Recommended Posts

வடமாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க  நடவடிக்கை - ஆளுநர்

வடமாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். 

jaffana.jpg

நேற்று முன்தினம் ஆளுநர் செயகத்தின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற சந்திப்பின் போதே வடமாகாண ஆளுநர் மேற்கண்ட வலியுறுத்தலைச் செய்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண பொலிஸார் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவற்காக அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த அளப்பரிய சேவைகளை பாராட்டுக்கின்றேன்.  தற்போது வடக்கு மாகாணத்தில் சட்டத்திற்கு விரோதமான முறையில் சமுதாயத்தைப் பாதிக்கின்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. 

குறிப்பாக,  சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை, களவுகள் மற்றும் வாள்வெட்டு, போதைப்பொருள் துஷ்பிரயோகம், வீதி விபத்துக்கள் ஆகியன தொடர்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

முக்கியமான மணல் அகழ்வை முறையான சட்டங்களுக்கு உட்படுத்தி அதற்கான  அனுமதிகளை வழங்கி தேவைப்படும் பட்சத்தில் மட்டும் மணல் அகழ்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது. மணல் அகழ்வு வியாபாரம் அல்ல என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தை பாதிக்கின்ற வகையில் களவு, வாள் வெட்டு, போதைப்பொருள் விற்பனை போன்ற விடயங்களின் பின்னணிகள் உள்ளிட்ட அனைத்துக் காரணங்களையும் கண்டறிந்து அவற்றை தடைசெய்வதோடு நிலைமகளை முற்றாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். 

வீதிவிபத்துக்கள் தொடரும் நிலையில் அதற்கான காரணற்களை முழுமையாக ஆராய்ந்து போக்குவரத்துச் சட்டங்களை இறுக்கமாக பின்பற்றுவதோடு  சட்டத்தை மீறுவோருக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும்.

இதுபோன்ற சட்டவிரோதமான விடங்களை தடுப்பதன் ஊடாகவே எமது மாணவர்களையும், இளம் சந்ததியினரையும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் நேரிய முன்னேற்றப்பாதையொன்றில் இட்டுச் செல்லமுடியும்.

அச்செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக கிராம அலுவலர்கள் முதல் மாவட்ட அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள் உள்ளிட்டவர்கள் பொலிஸாருக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

அதன் மூலமே எமது சமுதாயத்தை கண்ணியமுள்ள ஒழுக்கமான சமுதாயமாக முன்னேற்றம்மிக்கதாக மாற்றமுடியும் என்பதை கருத்திற்கொள்ள வேண்டிடும்.  

மிக முக்கியமாக பாடசாலைகளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.  அத்துடன் பாடசாலை மாணவர்களுக்காக பாடசாலை கால அட்டவணையையும், அரச மற்றும் தனியார் பேருந்துக்களின் கால அட்டவணையையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய கால அட்டவணையை தயார் செய்து நடைமுறைப்படுத்த போக்குவரத்துத் அதிகாரசபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சமுதாய நலனில் அக்கறை கொள்ளவேண்டிய மாணவர்களையும் இளைஞர் யுவதிகளையும் உருவாக்க திணைக்களங்கள் தங்களுக்கான அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தவேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது என்றார்,  

வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், விசேட பொலிஸ் செயலணியின் உறுப்பினர்கள், மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபர்கள், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்கள், உள்ளுர் அதிகாரசபை ஆணையாளர், கல்வித்திணைக்கள செயலாளர், உள்ளுர் அதிகாரசபை செயலாளர், போக்குவரத்துத் அதிகாரசபை தலைவர் மற்றும் செயலாளர், ஆளுநரின் செயலாளர் மற்றும் உதவிச்செயலாளர், ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

 

https://www.virakesari.lk/article/83407

Share this post


Link to post
Share on other sites

வட மாகாணத்தில் சொறிலங்கா போலீசுக்கும் முப்படைக்கும் முற்று புள்ளி வைச்சா சட்டவிரோத செயல்களும் முற்றுப்பெறும்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

வடமாகாணம் கடந்த பத்து வருடமாக சிறிலஙா அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கு இது என புதுக்கதை இப்பதான் எல்லோரும் நித்திரையால எழும்பியதுபோல.

இதிலிருந்து தெரிகிரதல்லவா ஆட்சியாளர்களதும் அரசு அதிகாரிகளதும் லட்சணம்.

இலங்கைத் தீவில் உள்ள வளங்களைவிட குறைவான வளத்துடன் காணப்படும் பின்லாந்து தேசத்தின் சுமார் ஐந்து இலட்சமே மக்கள் தொகையைக்கொண்டதலைநகர் கெல்சிங்கி மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் சிறீலங்காவின் வருடாந்த மொத்த வரவுசெலவுத்திட்டத்தைவிட மூன்று மடங்கு , இப்போது உங்களுக்குத் தெரியுதா அந்த நாட்டை எப்படியானவர்கள் ஆள்கிறார்கள் என. 

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, கிருபன் said:

வடமாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். 

யாரிடம் வலியுறுத்தியுள்ளார்?

2 நாளைக்கு முன்னர் வடமராட்சியில் குழந்தையை க டத்தினவனுக்கு சப்போர்ட் செய்த போலீஸ் எப்பிடி சட்டவிரோத செயல்களை நிறுத்தும்?

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, கிருபன் said:

சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை, களவுகள் மற்றும் வாள்வெட்டு, போதைப்பொருள் துஷ்பிரயோகம், வீதி விபத்துக்கள் ஆகியன தொடர்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகின்றது

இவற்றை இறக்குமதி செய்து, வியாபாரம் செய்வதற்கே, அரச இராணுவ போலீஸ் படை வடபகுதியில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவற்றை கட்டுப்படுத்த வேண்டுமானால்: இந்தப்படைகள் நமது தாயகத்தை விட்டு வெளியேறவேண்டும். இதை கூற வேண்டியவர்கள் அரசுக்கு சாமரம் வீசும் போது, உங்களால் வெறும் கூட்டங்களை கூட்டி, அறிக்கைகளை விட மட்டுந்தான் முடியும். இரண்டு பக்கமும் தாளம் போடவேண்டிய இக்கட்டான வேலை உங்களது.

Share this post


Link to post
Share on other sites

ஊரை ஏமாற்றும் நடவடிக்கையில் ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இறங்கியுள்ளார்!

 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நீதானே இறைவா நிலையான சொந்தம்  உனையன்றி உலகில் எனக்கேது பந்தம் (2)  உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம்  உனை என்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம் - 2  நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் -2 1. கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே  உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே (2)  கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே - 2  வருவாயே தலைவா என் உயிர் மூச்சிலே - 2 2. நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ  இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன (2)  நானெங்கு போவது உனைப் பிரிந்து - 2  நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து - 2    
  • வடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால்போதும் அதிகாரப்பகிர்வு அவசியமில்லை..! இந்தியாவால் திணிக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கமுடியாது. அது இல்லாதொழிக்கப்படவேண்டும். இவ்வாறு வலியுறுத்தினார் ராவணா பலய அமைப்பின் பொதுச்செயலர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர். அத்துடன், "வடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால் போதும் அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமில்லை " , எனவும் அவர் குறிப்பிட்டார். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவித்ததாவது:- “அரசமைப்பின் 13-ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய அரசால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். எனவே, அதனை மதிக்கவேண்டும், ஆனால் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை. தேர்தல் காலத்தில் மாத்திரமே 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி பேசப்படுகின்றது. தேர்தல் முடிந்த பிறகு 13 என்று ஒன்று இருக்கின்றதா என்றுகூட தெரியாது. வடக்கு மக்களுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையே அவசியமாகின்றது. வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படவேண்டும், வீடுகள் நிர்மாணிக்கப்படவேண்டும், விவசாயத்தை முன்னெடுப்பதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும். இவை நடைபெற்றால் அதிகாரப் பகிர்வுக்கான அவசியம் எழாது. அரசியல்வாதிகளே 13 பற்றி கருத்து வெளியிடுகின்றனர். மக்கள் அதிகாரப்பகிர்வை கோரவில்லை. தமிழ் அடிப்படைவாதிகள் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காகவும், சிங்கள சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காகவுமே இவ்வாறான அறிவிப்புகளை விடுத்துவருகின்றனர். எனவே, அதிகாரப்பகிர்வு அவசியமில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எமது அமைப்பு முழுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றது” – என்றார். http://puthusudar.lk/2020/07/09/வடக்கு-மக்களுக்கு-வாழும்/
  • அமெரிக்காவில் நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது!         by : Anojkiyan உலகிலேயே கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட நாடாக விளங்கும் அமெரிக்காவில், நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் 61,848பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 890பேர் உயிரிழந்துள்ளனர். இதற்மைய அமெரிக்காவில் வைரஸ் தொற்று தோன்றியதிலிருந்து பதிவான, நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். அத்துடன், அமெரிக்காவில் கொவிட்-19 பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31இலட்சத்து 58ஆயிரத்து 932ஆகும். அதேபோல, அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 34ஆயிரத்து 862ஆகும். இதுதவிர அங்கு 16இலட்சத்து 31ஆயிரத்து 391பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15ஆயிரத்து 457பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 13இலட்சத்து 92ஆயிரத்து 679பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் அதிகப்படியாக, நியூயோர்க் மாநிலத்தில் அதிகமாக கொவிட்-19 பாதிப்பு பதிவாகியுள்ளது. அங்கு 4 இலட்சத்து 24ஆயிரத்து 263பேர் பாதிப்படைந்துள்ளனர். https://athavannews.com/அமெரிக்காவில்-நாளொன்று-3/
  • கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி கொரோனாவிற்கு மருத்து கண்டறிவது தொடர்பான விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதினறம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. பதிவு: ஜூலை 09,  2020 15:53 PM சென்னை, சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் தந்தை தொடர்ந்த வழக்கில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சென்னை உயர்நீதிமன்றம் சேர்த்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது, நீதிபதிகள் மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதன்படி, “கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்? கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? தமிழகத்தில் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, சித்த மருத்துவ வளர்ச்சிக்கு இதுவரை எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது? சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது? நாட்டில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனைகள் உள்ளன? அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளனரா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். மேலும், நமது மருத்துவர்களுக்கு கட்டமைப்பு, பண உதவி செய்து அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதிகள், சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். https://www.dailythanthi.com/News/State/2020/07/09155309/If-Siddha-doctors-found-medicine-for-Corona-why-doubt.vpf   எல்லாம் தமிழன் என்ற ஒரு இழக்காரம். அத்துடன் எம்மவர்களுக்கும் சித்த மருத்துவம் என்றால் பேதி மட்டும்தான் தெரியும்
  • உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்து சீனா பகிரங்க குற்றச்சாட்டு   உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது "சர்வதேச தொற்றுநோய்க்கு எதிரான முயற்சிகளை பின்னடைவை ஏற்படுத்தும் சீனா குற்றச்சாட்டி உள்ளது. பதிவு: ஜூலை 09,  2020 15:12 PM பீஜிங் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறோம் என்பதற்கான அறிவிப்பு கடிதத்தை ஐ.நா. சபையில் அமெரிக்கா வழங்கியுள்ளது. இதை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான முடிவு குறித்து சீனா குற்றஞ்சாட்டி உள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:- இந்த நடவடிக்கை "அமெரிக்கா ஒருதலைப்பட்சமான நடவடிகைகளை பின்பற்றுதல், அணிகளிடமிருந்து விலகுதல் மற்றும் ஒப்பந்தங்களை மீறுதல் ஆகியவற்றின் மற்றொரு நிரூபணம் ஆகும்  உலக சுகாதார அமைப்பு என்பது உலகளாவிய பொது சுகாதார பாதுகாப்பு துறையில் மிகவும் அதிகாரப்பூர்வ மற்றும் தொழில்முறை சர்வதேச நிறுவனம் ஆகும். இந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது "சர்வதேச தொற்றுநோய்க்கு எதிரான முயற்சிகளை பின்னடைவை ஏற்படுத்தும், குறிப்பாக சர்வதேச ஆதரவின் அவசர தேவையில் வளரும் நாடுகளில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என கூறினார்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09151209/China-defends-WHO-slams-US-move-to-withdraw.vpf