-
Tell a friend
-
Topics
-
46
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
இயேசு அழைக்கிறார், மன்னிக்கவும் வருமானவரி துறையினர் அழைக்கிறார்கள் - வசந்தன் நடராசா பால் தினகரனிடம் அவரது சபையை சேர்ந்த ஒருவர், "ஐயா இவை தான் இன்று காலையில் முதலில் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள், செபக் கூட்டங்களின் பட்டியல்" என்று ஒரு பட்டியலை கொடுக்கிறார். பால் தினகரன் இன்றைய நிலையில் என்ன சொல்லுவார். நான் செய்வேன், ஆனால் எனக்கு முதலில் கட்டாயமாக போக வேண்டிய ஒரு கூட்டம் இருக்கிறது. அது வருமான வரித்துறைக்காரர்களுடனான கூட்டம். இயேசு அழைத்தல் போகாமல் இருக்க முடியும், ஆனால் வருமான வரித்துறையினர் அழைத்தால் போகாமல் இருக்க முடியுமா? பால் தினகரனின் தந்தையான துரைசாமி ஜெப்ரி சாமுவேல் தினகரன் என்பவர் புரட்டஸ்தாந்து கிறீஸ்தவத்தின் ஒரு அமைப்பான தென்னிந்திய திருச்சபையைச் (Church of South India) சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் எளிமையான வாழ்நிலையை கொண்ட குடும்பமாக இருந்தது. தினகரன் வங்கி ஊழியராக வேலை செய்தார். பின்பு "இயேசு அழைக்கிறார்" என்னும் சுவிசேச சபையை தொடங்கினார். சுவிசேசம் என்றால் "நல்ல செய்தி" என்று நல்ல தமிழில் சொல்லலாம். இயேசுவின் தந்தையான கடவுளின் அரசை பற்றியும், தேவ குமாரன் என்று சொல்லப்படும் இயேசுவை நம்பி தொழுபவர்களுக்கு கிடைக்கும் மீட்சியையும் சொல்லும் கிறீஸ்தவ வேத ஆகமத்தை பரப்புதல் என்பதே இந்த நல்ல செய்தி என்று செல்லப்படுகிறது. "இயேசு அழைக்கிறார்" என்று மக்களை தினகரன் அழைத்தார். அந்த கூட்டங்களுக்கு வரும் நோயாளிகள் குணமடைவார்கள்; பார்வையற்றவர்கள் விழிகளில் ஒளிகள் பெறுவார்கள்.;பேச முடியாதவர்கள் பேசுவார்கள் என்று நற்செய்தி எங்கும் விளம்பரம் செய்யப்பட்டது. நீங்கள் ஒரு சிறிய நன்கொடை மட்டும் செலுத்தினால் போதும். கடவுளின் நல்ல செய்தி தினகரனின் ஊடாக உங்களை வந்தடையும். நல்ல செய்தி வந்தது. ஆனால் அந்த நல்ல செய்தி மக்களுக்கும் வரவில்லை. தினகரனுக்கு வந்தது. பணம் என்ற நல்ல செய்தி கோடி, கோடியாக வந்தது. இயேசு தினகரனை அழைக்கவில்லை. ஆனால் வங்கிகள் தினகரனை தங்களிடம் முதலீடு செய்யும்படி அழைத்தார்கள். காருண்யா பல்கலைக்கழகம் என்னும் தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் அளவிற்கு சுவிசேச வியாபாரத்தில் இலாபம் குவிந்தது. நோயாளிகளுக்கு நற்செய்தி சொல்லி குணப்படுத்துவேன் என்று பொய்ச்செய்தி சொன்னவருக்கு சிறுநீரகத்திலும், இருதயத்திலும் நோய்கள் வந்தன. அந்த நோய்களை தீர்ப்பதற்கு தினகரன் செபம் செய்யவில்லை; பிரார்த்தனை செய்யவில்லை; தனக்குத் தானே நற்செய்தி சொல்லவில்லை. அவர் மருத்துவமனைக்கு சென்று அங்கேயே இறந்தார். தினகரன் இறந்த பிறகு இயேசு அழைத்தாரா தெரியவில்லை மகன் பால் தினகரன் குடும்ப வியாபாரத்தை தொடர்கிறார். . இவரிடம் இயேசு அவ்வப்போது வந்து பேசுகிறார். அவர் சும்மா சொல்லவில்லை. இயேசு வந்து அவரிடம் பேசுவதற்கு சாட்சி உண்டு. அது வேறு யாரும் இல்லை பால் தினகரனின் சொந்த மனைவி தான் அந்த சாட்சி. மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களை கொல்லவில்லை என்று இலங்கை அரசினது பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபையில் சாட்சி சொல்வதை ஏற்று கொள்கிறார்களே அது மாதிரித் தான் பால் தினகரனின் மனைவியும் சாட்சி சொல்கிறார். மோடி வெற்றி பெறுவார் என்பதை இயேசு இவருக்கு சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறுவார் என்பதையும் இயேசு இவருக்கு முதலிலேயே சொல்லி விட்டாராம். Graham Stuart Staines என்னும் அவுஸ்திரேலிய கிறீஸ்தவ மத போதகரையும் அவரது பத்து வயது மகன் பிலிப்பையும் ஆறு வயது குழந்தை திமோத்தியையும் 23.01.1999 அன்று நெருப்பிலே எரித்து "பஜ்ரங் தள்" என்னும் பயங்கரவாத அமைப்பு கொன்றது. இந்த அமைப்பு விசுவ இந்து பரிசம் அமைப்பின் இளைஞர் பிரிவாகும். விசுவ இந்து பரிசம் ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா கட்சி என்பவற்றின் ஒரு அங்கம். இந்த பயங்கரவாதிகளின் அமைப்பை சேர்ந்த மோடி வெற்றி பெறுவார் என்று இயேசு தனக்கு சொன்னார் என்னும் அளவிற்கு பால் தினகரனின் அதிகாரங்களுடன் தொடர்பு வைத்து வசதிகளை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற பேராசை இருந்திருக்கிறது. கடவுள் தனது கண்களுக்கு தெரிகிறார் என்ற நித்தியானந்தாவுக்கு கமரா இருந்தது கண்ணுக்கு தெரியவில்லை. மோடி வெற்றி பெறுவார், ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்று பால் தினகரனிடம் தேர்தல் கருத்து கணிப்புகளை சொன்ன இயேசு வருமானவரித் துறையினர் சோதனை செய்ய வருவார்கள் என்பதை சொல்லவில்லை. என்ன இருந்தாலும் கடவுள்கள் இப்படி தங்களின் தரகர்களை கை விட்டிருக்க கூடாது. http://poovaraasu.blogspot.com/2021/01/blog-post_24.html
-
தோன்றுவதெல்லாம் அபிப்பிராயங்களே, உண்மைகளல்ல. தமிழ்நாட்டாரை ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவளக்கச் சொல்லி நான் கேட்டதுமில்லை. இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பச்சொல்லி கேட்டதும் நானல்ல. ஈழத்தமிழரை இந்திய இரணுவத்துடன் மோதச்சொல்லி சொன்னவரும் நானல்ல. இராஜீவ் காந்தியை கொன்றது ஈழத்தமிழர் என்று செய்திகளில் படித்தே தெரிந்து கொண்டேன். தமிழக மீனவர்கள் ஈழத்து மீனவர்களை தாக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் சொன்னதில்லை. இலங்கை கடற்படையுடன் இந்திய மீனவர்களின் மோதல் கூட எனக்கு தெரியவந்தது இந்த செய்திகள் மூலம் தான். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய். 😃😀🙂😮🙂😀😃
-
By தமிழ் சிறி · Posted
பொல்லு பிடித்து... நடக்கிற வயசிலை, ஓடலாமா....
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.