Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழீழ கலைஞர்களின் படைப்புகள்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் யாழின் நரம்பிழுத்தே  எந்த 
நாளும் உருகி பண்ணிசைத்தே 
மெல்லவே தோகை விரித்தாடும் எழில் 
மயிலினைப் போலவே நீ ஆடு  

நீலக்குறிஞ்சி மலர் எடுத்தே எழில் 
நீல மலர் ஆரம் நீ தொடுத்தே 
கோலக்கலைமகள் அன்னையவள் வரிக்
கோலக் கழுத்தினில் நீ அணிவாய்

வண்ணக் கலைத்தேவி கோவிலிலே என்றும்
வாசப்புகை சேலை நீ இடுவாய் 
மண்ணக மாந்தர்கள் கூடுமிடம் அதில் 
மாமணி தீபங்கள் ஏற்றிடுவாய் 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வடை வடையென விற்றுவந்தால் வாயாடி கிழவி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மால் மருகா எழில் வேல் முருகா

யாழ்பாணம் என்று சொன்னால் தேன் சுவையூறும் 

ஆய் கூய் எலிகள் பட்டாலம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உருமி மேளம் கொட்டு மச்சான் உல்லாசமாய் ஆடு மச்சான்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தே. பிரியனின் வரிகளில் தாரகையே பாட்டு 34நிமிடத்தில் இருந்து....  இயற்கை காட்சியுடன் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உன்னை நம்பி என்னை நம்பி உலகம்  இருக்கிறது - இந்த 
உழைக்கிற கைகளை நம்பித்தானே பொழுதே விடிகிறது 

இரத்த துளிகளை வியர்வையாக்கி உழைப்போர் பலருண்டு
இந்த உத்தமர் தேகம் உதிரம் குடிக்கும் அட்டைகளும் உண்டு

சமுதாயத்தின் தாழ்வாரத்தில் வாழும் தோழர்களே - நம்
சக்தியை நாமே உணர்ந்துகொண்டாலே உயர்வோம் வாழ்வினிலே

மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று 
மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று

தேயிலையோடு தேயிலையாக தேயுது ஒரு கூட்டம் - நம்
தேவைகள் தம்மை  தியாகம் செய்தும் வாழ்வே போராட்டம்

உரிமைகள் தன்னை கேட்டுப் பெறவே உரத்தக் குரல் வேண்டும் - நம்
உரத்தக் குரலை எதிரொலிக்கவே சங்கம் ஒன்று போதும்

மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று 
மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று

ஈரமில்லா இதயம் கொண்டவர் பேரம் பேசுகிறார் - நம்மை 
ஏமாற்றுவதையே தொழிலாய் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்

காட்டையும் மேட்டையும் கழனிகளாக்கி கவலையை போக்கிடுவோம் = நம்
நாட்டுக்காகவே சேவைகள் செய்து நன்மைகள் பெருக்கிடுவோம் 

மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று 
மலை நாட்டில் ஒரு மாற்றம்  தரவேண்டும் புதிய காற்று

புதிய காற்று' 1975ம் ஆண்டு வெளியான திரைப்படம், இலங்கை திரை இரசிகர்களை சற்று புருவங்களை உயர்த்தி நோக்கவைத்த திரைப்படம்.
இப்பாடலில் குறிப்பிடுவதைப்போலவே இலங்கை தமிழ் திரையுலகில் பல மாற்றங்களை கொணர்ந்த திரைப்படம் என்றே இதைச்  சொல்லவேண்டும், 
இலங்கை தமிழ் சினிமா வரலாற்றில் வி. பி. கணேசன் எனும் பெயர் மறக்கப்படமுடியாத பெயர்,

தொழிற்சங்க வாதியும் தொழிலதிபருமான வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன் என்ற வி. பி. கணேசன் ஒரு நல்ல சினிமா தயாரிப்பாளராக  பெயர் எடுத்தவர். 
புதிய காற்று இலங்கைத் தமிழ்த்திரைப்படத்துறையில் புதிய திரைப்பட நடிக, நடிகைகள். புதிய பின்னணிப் பாடகர், பாடகிகள், புதிய திரைப்படக் கதை வசனகர்த்தாக்கள் புதிய இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியது.

இப்படத்தில் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் ஆகியோரின் பெயர்கள் பாடல் உருவாக்கத்திலும்  சங்கர் - கணேஷின் பெயர் இசையமைப்பிலும் பேசப்படுகிறது. இத்தகவல்கள் படம் வெளியான நேரத்தில் வெளிப்படவில்லை, இவை படத்தில் ஆரம்ப  தலைப்புகளிலும் இடம்பெறவில்லை.  காரணம் அப்போதிருந்த  அரச கட்டுப்பாடுகளே.  இல்லையெனில் அதையே விளம்பர உத்தியாக கையாண்டிருக்க நிறையவே  வாய்ப்புகள் இருந்திருக்கும்.  தமிழக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த ஒரு இலங்கைத்திரைப்படத்திலும் இந்த பிரச்சனையால் அவரை சென்னையில் இருந்து கோலாலம்பூர்அழைத்து சென்று அங்கிருந்து கொழும்பிற்கு அழைத்து வந்தார்கள் என்றும் சொல்லப்பட்டது. பின்னர் அவரை வசன ஒலிப்பதிவுக்காக இலங்கை அழைத்து வர முடியாமல் அவருக்காய் அறிவுப்பாளரும் நடிகருமான நடராஜசிவம் குரல் கொடுத்தார். 

இப்பாடலை எழுதியவர் கவிஞர் சாது (சாஹுல் ஹமீது) என்று ஒரு பத்திரிகைக்கான கட்டுரையில் இப்படத்தின் நெறியாளர் ராமநாதனுக்கு ஆலோசகராகவும் உதவியாளராகவும் மேலும் தயாரிப்பு நிர்வாகியாக கடமையாற்றிய கொட்டகலை - மு சிவலிங்கம் குறிப்பிட்டு இருந்தார்

இப்பாடலைப் பற்றிய இன்னொரு சுவையான தகவலை, பாடகர்கள் முத்தழகுவும், பாலச்சந்திரன் இருவருமே பகிர்ந்து கொண்டார்கள். கே. எஸ். பாலச்சந்திரன் கலாவதியுடன் புதிய காற்றுக்காய் முதலில் பாடியது, 'ஓ ஓ என் ஆசை ராதா' பாடல். ஆனால் வானொலி மெல்லிசைப்  பாடல்களில் ஏ எம் ராஜாவின் குரல் சாயலில் தன் திறைமையை காட்டிவந்த வி முத்தழகுவின் பாடல்களில் இலயித்துப்போன திருமதி  வி. பி. கணேசன், கணவரிடம் முத்தழகுவிற்கு ஓ ஓ என் ஆசை ராதா பாடலை பாடக்கொடுத்துப் பார்க்கச் சொன்னாராம். எனினும்  வி. பி. கணேசன் பாலச்சந்திரனை கைவிடாமல், படத்தின் முக்கிய, கதாநாயக அறிமுகப் (theme) பாடலாகிய 'உன்னை நம்பி என்னை நம்பி உலகம்  இருக்கிறது' கலாவதியுடன் பாடக் கொடுத்தார்.  கே. எஸ். பாலச்சந்திரன் பின்னர் வி. பி. கணேசனின் முக்கிய  கதாநாயக அறிமுக  பாடகராகிப்போனார்.  கே. எஸ். பாலச்சந்திரன் பாடிய 'நான் உங்கள் தோழன் எந்த நாலுமே நல்ல நண்பன்' மற்றும் 'எல்லாமே பணத்தாலே' போன்ற பாடல்கள்  பிரபல்யமாகியது இதற்குச் சான்று.. 
 
பாடல் இரம்மியமான மலையக சூழலில் படமாகி கண்ணுக்கும், நல்ல பாடல் வரிகளினால் செவிக்கும் விருந்து படைத்தது. துரதிஷ்ட்டவசமாக, இலங்கை தமிழ் படங்களுக்கு நேர்ந்த கதியே புதிய காற்றுக்கும் நேர்ந்து, படப்பிரதிகள் இல்லாமல் ஆவணப்படுத்தப் படாமலேயே போனது பெரும்சோகம்.

https://www.youtube.com/watch?v=EqNEeDr4ht8

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள கலைஞர்களால் இயன்றப்பட்ட பாட்டு - குடிப்போம் கொத்தமல்லி

ஆடுபவருக்கு ஒரு ஓ... போடுங்கோ 😂

சிங்களத்தில்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உத்தரதேவி யாழ்தேவி ஓடுது எங்கள் சீதேவி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உடுத்துறை மண்ணில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வேம்படி வைரவர் புகழ் கூறும் பாடல் இது 
பாடல் இசை -இசை வேந்தன் .கந்தப்பு ஜெயந்தன் 
பாடல் வரிகள் -சின்னப்பு பாலா (நோர்வே )
பாடல் தயாரிப்பு -S.S.சங்கரப்பிள்ளை குடும்பத்தினர்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மழையும் முகிலும்.

பாடலை இயற்றி  குரலினிமை சேர்ப்பவர் ஜெயபாரதிதாசன்
இசை இனிமை அப்சராஸ் இரட்டையர்  மோகன் - ரங்கன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

‘எம்மவர்’ மனோகரன் பாடிய சிறந்த பாடல்களில் மிக முக்கியமான பாடல் என்று இப்பாடலைச் சொல்ல வேண்டும். துரதிர்ஷ்டமாக அவரின் ஏனைய பாடல்களைப் போன்று இது பிரபலமாகப் பேசப்படவில்லை என்பதில் பல மனோ இரசிகர்களுக்கு கவலைதான். இந்த பாடலுக்கு அருமையாக இசையமைத்தவர் ‘எம்மவர்’ விக்டர் இரத்னாயக்க. மனோவும் விக்டரும் “எம்மவர் இசைமழை” பதிவுகளில் ஏலவே பேசப்பட்டு இருக்கிறார்கள். எனவே இப்பாடலின் பெண்குரலான திருமதி கெளரீஸ்வரி இராஜப்பனைப் பற்றி இப்போது பார்க்கலாம். 

கர்னாடக இசைப் பாடகியான கெளரீஸ்வரி கனகரத்தினம் இலங்கைத் தமிழ் திரையுலகின் முதல் பின்னனிப் பாடகிகளில் ஒருவர். தோட்டக்காரி என்னும் திரைப்படத்தில் கெளரீஸ்வரி ஒரு பாடலைப்பாடினார். தோட்டக்காரி, தயாரிப்பில் இரண்டாவது இலங்கை திரைப்படமானாலும் முதலில்  திரையில் காட்சிப்படுத்தப் பட்ட முழு நீள 35 மி.மீ படம் என்று இலங்கை சினிமா பற்றி எழுதும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கெளரீஸ்வரி கனகரத்தினம் மணவாழ்வில் புகைப்பட நிபுணர் திரு இராஜப்பனுடன் இணைந்து கெளரீஸ்வரி இராஜப்பன் ஆனார். 

தென்னக நட்சத்திரங்கள் திரு MG இராமச்சந்திரன் திருமதி சரோஜாதேவி இருவரின் 1965ம் ஆண்டு இலங்கை விஜயம் ஒரு சரித்திரம். அவர்கள் வருகையை முன்னிட்டு சில கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடாகி இருந்தன. இந் நிகழ்வுகளில்   எம்மவர்களான கெளரீஸ்வரி இராஜப்பன், MA குலசீலநாதன் ஆகியோரின் பாடல்களும் இடம்பெற்றன. எம்மவர்கள் கண்ணன்-நேசன் இரட்டையரில் ஒருவரான நேசதுரை தியாகராசா சிறுவனாக மிருதங்கத்துடன் அரங்கேறினார். பின்னாளில் அவர் drums கலைஞராக இலங்கை மேடைகளை கலக்கியது துள்ளிசை இரசிகர்கள் அறிந்தது. 

கெளரீஸ்வரி, இலங்கை வானொலியில் "மெல்லிசை" அறிமுகமாகிய போது மெல்லிசைப் பாடகியாகவும் பங்களித்தார். விக்டரின் இசையில் அவர் மனோகரனுடன் இரு இனிமையான பாடல்களைப் பாடினார். இருவரும் கைதேர்ந்த பின்னனிப் பாடகர்களைப்போன்று இந்த இரு பாடல்களையும் பாடினார்கள். இந்த முயற்சிகள் தொடராமல் போனதும் எம் துரதிர்ஷ்டமே. கெளரீஸ்வரி தனியாகவும்  பல மெல்லிசைப் பாடல்களை பாடினார். சங்கீத சபை என்னும் இசைகல்லூரியை உருவாக்கி ஆரம்பமுதல் இசை ஆசிரியையாக தொடர்ந்த கெளரீஸ்வரி பல இசை கலைஞர்கள் உருவாவதில் பங்களிப்பு செய்தார். இவர் சகோதரி ‘எம்மவர்’ பத்மினி கனகரத்தினம், “பொப்பிசைப் புயல்” நிகழ்வில் ‘காதோடுதான் நான் பாடுவேன்’ பாடலுடன் மேடையேறியதும் நினைவு. இசைக்குயில், இன்னிசைவாணி, பாசுரப் பாமணிப் பட்டங்கள் கெளரீஸ்வரிக்கு சொந்தமானவை. இன்று இசைக்கல்லூரிக்கு இயன்ற ஆலோசனைகளுடன் இசையுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். 

இ.ஒ.கூ. துள்ளிசை மெல்லிசை பரீட்சார்த்த முயற்சிகளில் தன் பங்களிப்பை அதிகமாகவே வழங்கிய குமார் கனகரத்தினம் கெளரீஸ்வரியின் சகோதரர். இ.ஒ.கூ.வில் குமார் – ஹமீது – இராமச்சந்திரன் – டேவிட் போன்ற அக்கால இளையதலைமுறையின் பரீட்சார்த்த பாடல் உருவாக்கங்களுக்கான பங்களிப்புகள் அளப்பரியவை. இப்பாடல் உருவாக்கத்திலும் குமார் கனகரத்தினம் - அப்துல் ஹமீது பங்கு புறந்தள்ள முடியாதது. அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் குமார் கனகரத்தினம், கலிபோர்னியாவில் லிவர்மோர் (Livermore) நகரில் சிவா - விஷ்னு ஆலய தொண்டில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ஆலய அரங்கத்தில் மேடையேறும் உள்ளூர் வெளியூர் கலைஞர்களின் இசை, நாட்டிய நிகழ்வுகளுக்கு தொழிநுட்ப திறமையாலும் கைவண்ணத்தாலும் தனது பங்களிப்பை வழங்கிவருகிறார். ஆலய வழிநடத்தல் குழு உறுப்பினராகவும் இருந்து சேவை செய்கிறார். 

Video credits to original artists of album Pranayam Vithumbunnu - Entho Mozhiyuvaan and artist - Vidhu Pratap Thanks

வானகம் சூழ்ந்திடும் காரிருள் வாழ்வில் 
வளர்மதியான என் உயிரே
வளர்மதியாகவே வாழ்ந்திட துடித்தேன் 
தளர்ந்திடும் காதலில் தேய்மதியானேன்

ஆழ்கடல் நீல நிறமது எடுத்தேன் 
அன்னத்தின் உருவை அமைத்திடத் துடித்தேன்
வாழ்வது போனால் ஆழ்கடல் திண்ணம்  
அழிந்திடும் என் உயிர் வாழ்வின் வண்ணம்

ஆயிரம் ஆசை என் இதயத்தின் சொல்லை   
அறிந்திட உன் எழில் என் இசையில்லை
ஆயிரம் ஆசைகள் என்னிடம் இல்லை 
அன்பனின் ஒசையே என் மன எல்லை

பாடல் - வானகம் சூழ்ந்திடும் காரிருள் வாழ்வில் 
இரு குரலிசையில் இணையும் = A. E. மனோகரன் & கௌரீஸ்வரி இராஜப்பன் 
இயற்றியவர் - A. E. மனோகரன் 
இசை - விக்டர் இரத்னாயக்க 

Song - Vaanakam Soolndhidum 
Duet By - A.E. Manoharan & Gowreeswari Rajappan 
Lyrics - A.E. Manoharan 
Music - Victor Ratnayake 

https://www.youtube.com/watch?v=Qaa19pwJzDY

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

பதிவிற்கு நன்றி உடையார்.இந்தப் பாடலை நான் கேட்டிருக்கிறேன். கெளரீஸ்வரி ராஜப்பன் அவர்களுடைய இனிமையான குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
80களில் எம்மவர் மெல்லிசைப் பாடல்கள் - காதல் காவியம் பாடிடும் நேரம்

இனிய இருகுரலிசையாய் சிவகுமார் - நிலாமதி

பாடல் - ஜெகதீசன்

இசையமைப்பு - நீதிராஜசர்மா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கங்கையாளே இசைத்தட்டு - பாடல் 04

ஈழத்துப்பாடல் பிரியர்களால் விரும்பி கேட்கப்பட்டு, இ.ஒ.கூ. வெளியிட்ட “கங்கையாளே” இசைத்தட்டில் இடம்பெற்ற சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. 

பாடலைப் பாடிய திலகநாயகம் போல் பிரபல கர்னாடக மெல்லிசைப் பாடகர்.  சிறப்பான கவிதை வரிகளுக்கு
உரிமையாளர் சிதம்பரபத்தினி என்னும் புனைப்பெயரில் தன் ஆக்கங்களை வடித்த சிறுகதை எழுத்தாளரும் இலக்கிய ஆர்வலருமான பத்தினியம்மா. இசையமைப்பு ஆர். முத்துசாமி, இவர் பற்றிய மேலும் எழுதுவது இப்பத்தியில் அவசியமற்றது. 

மெல்லிசைப் பாடல்கள் அநேகமாக மெட்டுக்கு எழுதப்பட்டவையல்ல, எழுதப்பட்ட பாடல்களுக்கே இசையமைக்கப்பட்டன. இப்பாடலின் வெற்றிக்கு ஒரு காரணம் முத்துசாமி மாஸ்டரின் ஆளுமையே. “எம்மவர்”களான இம்மூவருமே இப்போது எம்மிடையே இல்லை என்பது மனதை வருடும் விடயம்.

இதயத்தில் இனிமையை உணரவிட்டு அங்கு
இன்பமும் துன்பமும் ஏன் கொடுத்தாய் 
மனதினில் அன்பினை வளரவிட்டு பின்பு
உறவையும் பிரிவையும் ஏன் கொடுத்தாய்

மலரினை மனமுடன் மலரவிட்டு அங்கு 
மதுவையும் முள்ளையும் ஏன் கொடுத்தாய்
மனிதனை உயிருடன் வாழவிட்டு பின்பு
வாழ்வையும் தாழ்வையும் ஏன் கொடுத்தாய்

சிந்தையில் நினைவினை வளரவிட்டு அங்கு
கனவையும் நனவையும் ஏன் கொடுத்தாய்
பந்தத்தில் மனிதனை பழகவிட்டு பின்பு
பாசமும் தோசமும் ஏன் கொடுத்தாய்

பகுத்திட அறிவினை வழங்கிவிட்டு அங்கு
நட்பையும் பகையையும் ஏன் கொடுத்தாய்
மதித்திட  உணர்வினை கொடுத்துவிட்டு பின்பு
நன்மையும் தீமையும் ஏன் கொடுத்தாய்

பாடியவர்   எல். திலகநாயகம்போல்
கற்பனை  பத்தினியம்மா
இசை   ஆர். முத்துசாமி 

Song   Ithayathil inimaiyai - Agony and Ecstasy
Sung By   L. Thilaganayagam Paul
Lyrics   Pathiniamma
Music   R. Muthusamy Master

Just now, உடையார் said:

பாடலைப் பாடிய திலகநாயகம் போல் பிரபல கர்னாடக மெல்லிசைப் பாடகர்.  சிறப்பான கவிதை வரிகளுக்கு

பாடியவர்   எல். திலகநாயகம்போல்
கற்பனை  பத்தினியம்மா
இசை   ஆர். முத்துசாமி 

Song   Ithayathil inimaiyai - Agony and Ecstasy
Sung By   L. Thilaganayagam Paul
Lyrics   Pathiniamma
Music   R. Muthusamy Master

மனைவியின் குரு இவர்தான் சிறுவயதில் இருந்து

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தங்கக்குரலினிமையுடன் காதலின் ஊர்வலத்தில் எம்மை அழைத்து செல்பவர்கள் ‘எம்மவர்’ இசை  ஜோடிகளான முத்தழகுவும் சுஜாதாவும். பாடல் இடம்பெற்ற படம் வி.பி. கணேசனின்  ‘நான் உங்கள் தோழன்’.  தென்னக எம்.ஜி.ஆர் போல் எம்மவர் கணேஷும்  (( விபி கணேசனின் முதல் திரைப்படம் ‘புதிய காற்று’ விளம்பரங்களில் BH அப்துல் ஹமீது விபி கணேசனை “உங்கள் அபிமானத்துக்குரிய கணேஷ்” என்று குறிப்பிட்டு கதாநாயக  அறிமுகம் செய்ததை அக்கால இலங்கைத் திரைப்பட இரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்))  தன் படப் பாடல்களின் தரத்தில் மிகுந்த அக்கரை செலுத்தியவர். அவ்வாறே இப்பாடலும்  பிரபலமானது. எம்.கே. ரொக்சாமி இசையமைத்த திரையிசைப்பாடல்களில் சிறப்பான பாடல் என்பது எங்கள் எண்ணம்.  

சிறந்த ஒலி நயத்துடன் இப்பாடலை தரவேற்றம் செய்ய பாடலின் மூலப்பிரதியை தந்துதவிய அண்ணன் முத்தழகுவிற்கு எங்கள் சிரம்தாழ்த்திய நன்றிகள்.

படம் – நான் உங்கள் தோழன்  06th Jan 1978

பாடல் – காதலின் ஊர்வலம் கண்ணிலே தோன்றுதே

பாடியவர்கள் – வி.முத்தழகு & சுஜாதா

இயற்றியவர் – முருகவேள் காந்தி

இசையமைப்பு – எம்.கே. ரொக்சாமி
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துப் பொப்பிசைப் பாடல்: 'மால்மருகா பாடியவர்: ஜேம்ஸ் ராச்

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 38 ஆவது ஆண்டு பொங்கல் விழா நிகழ்வில் (15.01.2017) ஈழத்துப் பொப்பிசைப் பாடல்: 'மால்மருகா ...' பாடியவர்: ஜேம்ஸ் ராச்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மனமாளிகை ரோஜா மணம் வீசுது இலேசா

“உனக்குத் தெரியுமா” பாடலுக்கு பின் ‘எம்மவர்’ பரமேஷ் இசையமைத்துப் பாடிய ஒரு சிறந்த பாடலாக இப்பாடலைக் கொள்ளலாம். 
தன் காதல் மனைவி மாலினியை பரமேஷ் இலங்கைத் திருநாட்டின் சிறப்பினைக் கொண்டு வர்ணித்து இருப்பாரோ ‘உனக்கு தெரியுமாவில்’ தன் காதலி மாலினிக்கு செய்தி சொன்னது போல்????

மனமாளிகை ரோஜா மணம் வீசுது இலேசா

இயற்றி 

இசையமைத்து

குரல் கொடுப்பது

MP பரமேஷ்
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐ.. ஐ.. யோ... அவள் வேண்டாம் மனைவி வேண்டாம் தனிமை போதும்😂🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாடல் – குண்டுமணி தோட்டத்திலே

பாடியவர் – A.E. மனோகரன்

இசை - சரத் டீ அல்விஸ்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இரயில் ஓடுது யாழ் இரயில் ஓடுது

இரயில் ஓடுது யாழ் இரயில் ஓடுது

பாடல் வரிகள் - இராசய்யா
 
இசையமைப்பு - கண்ணன் & நேசம்

குரல் இனிமை - அமுதன் அண்ணாமலை 

பாடல் ஓலிப்பதிவு - இ.ஓ.ப.கூ-1970

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.