Jump to content

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்

Recommended Posts

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்

 by : Yuganthini

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதற்கான செயற்பாடுகளை தற்போது அவதானிக்க கூடியதாக உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள விசேட செயலணி அரசியல் யாப்புக்கு முரணானது

மேலும் சிறந்த அரச சேவையை, குறித்த விசேட செயலணியின் கீழ் கொண்டு வருவதானது நாட்டை முழுவதுமாக இராணுவ ஆட்சிக்குள் தள்ளிவிட முயற்சிக்கும் செயலாகும்.

அத்துடன் சுயாதீன அரச சேவை, அரச சேவைகள் ஆணைக்குழுவால் நிர்வகிக்கப்படுக்கப்படுகின்றது. ஆனால் தற்போது  குறித்த  செயலணியின்  உத்தரவிற்கமையவே அரச சேவை செயற்பட வேண்டியுள்ளது. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/நாடு-இராணுவ-ஆட்சியை-நோக்-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதற்கான செயற்பாடுகளை தற்போது அவதானிக்க கூடியதாக உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அங்கை ராணுவ ஆட்சிதான் நடக்குதெண்டு நான் சொல்லுறன்.

டேய் குமாரசாமி கவனமாய் கதையடா....பிறகு நீ சிலோனுக்கு போறதை கனவிலையும் நினைச்சு பாக்கமாட்டாய்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் அறிவுரை அதை கொத்தா  செயல் படுத்துகின்றார்

பாகிஸ்தானில் பல சீனாவின் திட்டங்கள் பாகிஸ்தான் இராணுவத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் நடைபெறுகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2020 at 16:10, குமாரசாமி said:

அங்கை ராணுவ ஆட்சிதான் நடக்குதெண்டு நான் சொல்லுறன்.

டேய் குமாரசாமி கவனமாய் கதையடா....பிறகு நீ சிலோனுக்கு போறதை கனவிலையும் நினைச்சு பாக்கமாட்டாய்..

உண்மை!

இலங்கையில் என்று சனாதிபதிக்கு ஏகஅதிகாரங்கள் கொடுக்கப்பட்டு யே.ஆரால் கொண்டுவரப்பட்ட  அரசியல் அமைப்பு மாற்றத்தோடு(1978முதல்) இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.