-
Tell a friend
-
Topics
-
Posts
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, கார்த்திகை 2007 பாராளுமன்ற உறுப்பினரின் உறவினரைக் கடத்திச்சென்ற பிள்ளையான் துணைப்படைக் கூலி அரசுக்கெதிராக வரவுசெலவுத் திட்டத்தில் வாக்களிக்கவேண்டாம் என்று பாராளுமன்ற உறுப்பினருக்கு அச்சுருத்தல் இலங்கை ராணுவத்தின் கொலைப்படையாகச் செயற்பட்டுவரும் பிள்ளையான் குழு எனப்படும் கொலைக்கும்பலின் உறுப்பினர்கள் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபையின் வீட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து அவரது மகளின் கணவரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட பிள்ளையான், அரசுக்கெதிராக வரவுசெலவுத் திட்டத்தில் வாக்களித்தால் உனது மருமகனைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதாக அவர் தெரிவிக்கிறார். களுதாவளையில் , பொலீஸ் பாதுகாப்பிலிருந்த பாரளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு வெளிப்படையாகச் சென்ற இக்குழு அவரது மருமகனைக் கடத்தியதுடன், பொலிஸாரும் இதுபற்றி எதுவித நடவடிக்கையினையும் எடுக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த பொலீஸ் பாதுகாப்பினை முற்றாக விலக்கிக்கொண்டுள்ள அரசாங்கம், அவர்களின் பாதுகாப்பினை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. பாராளுமன்ற உறுப்பினரின் மருமகனின் பெயர் சஜிதரன் என்றும், அவர் ஆசிரியராகக் கடமையாற்றி வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அரசுக்கெதிராக வரவுசெலவுத் திட்டத்தில் வாக்களித்தால் கொல்லப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையினை பிள்ளையானே மட்டக்களப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி, அரியநேந்திரன் ஆகியோருக்கு விடுத்ததாகவும், இதன் பின்னரே அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலீஸ் பாதுகாப்பினை அரசு நீக்க்கியதாகவும் தெரியவருகிறது.
-
இங்கை ஒரு பரியாரியார் இருக்கிறார்.... பைடன் பதவி ஏற்ற பின்னர் வந்து விளக்கம் தருவார். அதுவரை பொறுப்போம். 😁
-
By பிழம்பு · பதியப்பட்டது
புத்தரின் பெயரால் மீண்டும் ஒருமுறை தமிழர்களின் பூர்வீக நிலத்தை விழுங்கும் படலம் தொடங்கியுள்ளது. மிக நீண்டகாலமாகவே கண்வைத்திருந்த குமுளமுனை தண்ணிமுறிப்பு – குருந்தூர் மலையில் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டபடி நேற்று புத்தரின் சிலையை பிரதிஷ்டை செய்துவிட்டது. ‘புத்தர் வருவார் முன்னே, நிலம் விழுங்கிகள் வருவர் பின்னே’ என்பது இலங்கையில் காலம்காலமாக இடம்பெற்றுவரும் ஒன்றுதான். இப்போதும் அதே பழைய உத்தியோடு குருந்தூர் மலையைக் கொள்ளை கொள்வதற்கு அகலத்திறந்த வாயோடும் படைப்பிரசன்னத்தோடும் பேரினவாதம் கால் வைத்திருக்கின்றது. வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைப்போல காணிபிடிக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கு வாய்த்திருக்கிறது தொல்லியல் திணைக்களம். இந்தத் திணைக்களம்தான் தொன்மையான தமிழர் பகுதிகளிலெல்லாம் விகாரையின் எச்சங்களும் பௌத்தத்தின் மிச்சங்களும் புதைந்து கிடப்பதாக ஒரு புனைவை முதலில் ஏற்படுத்தும். பின்னர் அதனை ஊதிப்பெருப்பிக்கும். காலப்போக்கில் யாருமறியா வண்ணம் வர்த்தமானியில் புகுத்திவிடும். அதன் பின்னர் குறித்த இடத்தில் அந்த மண்ணின் மைந்தர்களே உட்புக முடியாத அளவுக்கு ‘இது தொல்லியல் திணைக்களத்துக்குச் சொந்தமான இடம்’ என்ற அறிவிப்புப் பலகையின் மூலம் சுற்றிவர அடைத்துவிடும். இந்த அடைப்புக்குள் என்னென்ன திருகுதாளங்கள் எல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் கச்சிதமாகச் செய்து அந்த இடம் பௌத்த பேரினவாதத்துக்கு மட்டுமே சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை உருவாக்கிவிடும். பின்னர் ஒப்புக்காக ஒரு பகிரங்க ஆய்வு நடப்பதாக காட்டப்படும். ஏற்கனவே சோடிக்கப்பட்ட தடயங்களை கண்டுபிடிப்பதாகக் காட்டி தங்களின் செயலுக்கு நியாயம்வேறு கற்பிப்பார்கள். அந்த நிலத்துக்கு பல நூற்றாண்டுகளாக இருந்த பெயர் நீக்கப்பட்டு வாய்க்குள் நுழையாத சிங்களப் பெயரொன்று வைக்கப்பட்டு அது முற்றுமுழுதாக தமிழர்களிடம் இருந்து பிடுங்கப்படும். இத்தகைய சூத்திரத்தின் படிமுறை ஒன்றுகூடத் தவறாமல் குருந்தூர்மலையில் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது. அங்கிருந்த ஆதிசிவன் ஐயனார் புத்தர் வருவதற்காக அகற்றப்பட்டிருக்கின்றார். தமிழர்களின் எந்தவொரு அடையாளமும் அங்கு இருக்கவேகூடாது என்பதில் இலங்கை அரசு கொண்டுள்ள அக்கறை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைத்து அழிக்கப்பட்டதில் இருந்து அறியமுடிகின்றது. இனி மெல்லமெல்ல குருந்தூர்மலை சிங்களத்தின் ஏகபோக நிலமாகிவிடும். ஏற்கனவே நெடுங்கேணி வெடுக்குநாறி மலையையும் இதேபோன்ற படிமுறையோடு தங்கள் வசமாக்க சிங்களப் பேரினவாதம் முனைந்து கொண்டிருக்கின்றது. இப்படியே தமிழர்களின் தொன்மையையும் இருப்பையும் அடையாளப்படுத்துகின்ற நிலங்கள் எல்லாவற்றையும் புத்தரின் பெயராலும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையோடும் ஆட்சியாளர்கள் ஆக்கிரமிப்பதை இனியும் பார்த்துக்கொண்டு இருக்கத்தான் போகின்றோமா?. எப்படி முள்ளிவாய்க்கால் தூபி உடைப்புக்கு மாணவர்கள் துணிச்சலோடு போராடி மீண்டும் தூபியை அமைக்க வைத்தார்களோ அதேபோன்ற ஓர்மத்தோடு ஜனநாயக ரீதியான நிலமீட்புப் போர்கள் தொடங்கப்பட வேண்டும். தனித்தனியே கட்சிச் சாயத்தோடு முன்னெடுக்காமல் தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த ஆதரவோடும் அனைத்துக் கட்சிகளினதும் அமைப்புக்களினதும் ஒன்றுபடுதலோடும் இந்த ஜனநாயகப் போர் பரவலடைந்து அதன் உக்கிரம் தாங்காமல் புத்தரின் பெயர்சொல்லி மண்விழுங்கும் பதர்கள் பதறியோட வேண்டும். அத்தகைய மண்மீட்புப் போராட்டங்களை முன்னெடுக்க இனியும் தவறுவோமானால் நாளை எங்கள் காணிகளுக்குள்ளும் புத்தர் சிலைகள் புதிதாக முளைக்கலாம். நிலம் விழுங்கும் புத்தர் |19.01.2021| செவ்வாய்க்கிழமை | – உதயன் | UTHAYAN (newuthayan.com) -
By மல்லிகை வாசம் · Posted
நீங்கள் கூறியதில் 'திறமை வளர்த்துக்கொள்வது' என்ற கருத்துடன் உடன்படுகிறேன். நிச்சயமாகக் கடின உழைப்பின் மூலம் வளர்க்கப்பட வேண்டிய ஒன்று தான் திறமை. நான் சொல்லவந்தது, பிறப்பினால் கிடைத்த திறமைக்கான அடிப்படைக் காரணிகளைப் பற்றி. ரிச்சர்ட் பிரான்சனை எடுத்துக்கொண்டால், அவர் பெரிதாகப் படிக்காவிட்டாலும் கூட படித்த குடும்பத்தில் பிறந்தமையால் திறமைக்கான சில காரணிகள் அவருக்குப் பிறப்பிலேயே இயற்கையாகக் கிடைத்திருக்கக்கூடும். அதற்காகத் தந்தை போல நீதிபதியாக வேண்டிய அவசியமில்லை. சட்டத்துறையில் அவருடைய தந்தைக்கு big picture view இருந்திருக்கக்கூடும். அவருடைய மகளுக்கு மருத்துவத்துறையில் இந்தப் பார்வை இருக்கக்கூடும். பிரான்சன் வியாபாரத்தில் அந்தத் திறமையைப் பயன்படுத்தினார். இதனுடன் உழைப்பின் அளவும், கிடைத்த வாய்ப்புக்களும், timingம் ஒவ்வொருவரின் வெற்றியின் அளவைத் தீர்மானிக்கும். ஏனைய திறமைகள் அவருடைய தாயார் மூலமோ, பாட்டன், முப்பாட்டன் மூலமோ பிறப்பினால் வந்து அவையும் அவருக்குக் கைகொடுத்திருக்கும். ஒரு திறமையை வளர்க்க அது மரபணு மூலம் ஒருவருக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்பதும், அப்படிக் கிடைக்காத ஒன்றை வளர்க்க முடியாது என்பதும் எனது கருதுகோள். (உயிரியல் விஞ்ஞானத்தில் வல்லவர்கள் யாராவது இதைப் பற்றித் தெளிவுபடுத்தவும். தவறென்றால் சொல்லவும்.). ஆகவே, எனது கண்ணோட்டத்தில், பிறப்பால் வராத ஒரு திறமையை வளர்க்க முடியாது; பிறப்பில் இயற்கையாக வந்தது என்பதற்காக அதை உழைப்பின் மூலம் வளர்க்காவிட்டாலும் அது தானாக வெளிப்படாது. பிறப்பால் பல திறமைகள் கலவைகளாக ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ளன; ஆனாலும் எல்லோரிடமும் எல்லாத் திறமையும் இருப்பதில்லை. கலவைகளாகப் பல திறமைகள் இருந்தாலும் கல்வி, அனுபவம், உலகத்துக்கு அவற்றுக்கான தேவை, கிடைத்த வாய்ப்புக்கள், பெற்றோரின் வளர்ப்பு இவையெல்லாம் சேர்ந்தே அவற்றில் எந்தத் திறமைகள் தனியாகவோ, கலவையாகவோ வளர்க்கப்பட்டு ஒருவரைப் பிரகாசிக்கச் செய்யும் என்பது எனது நம்பிக்கை. இது நான் வாசித்து, அனுபவபூர்வமாக உணர்ந்து, பிற மனிதர், குடும்பங்களை அவதானித்து உருவாக்கிய கருதுகோள். மீண்டும், யாராவது உயிரியல் நிபுணர்களின் உதவி இங்கு தேவை. தெரிந்தால் இதற்கு மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டவும். நன்றி 😀
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.