Jump to content

அமெரிக்காவில் முதியவரை தள்ளி மண்டையை உடைத்த விவகாரம் : 57 போலீசார் கூண்டோடு ராஜினாமா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் முதியவரை தள்ளி மண்டையை உடைத்த விவகாரம் : 57 போலீசார் கூண்டோடு ராஜினாமா

அமெரிக்காவில் முதியவரை தள்ளி மண்டையை உடைத்த விவகாரம் :  57 போலீசார் கூண்டோடு ராஜினாமா

 

அமெரிக்காவில் முதியவர் ஒருவரை தள்ளிவிட்டு மண்டை உடைய காரணமான இரு போலீசார் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சக போலீசார் 57 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
பதிவு: ஜூன் 06,  2020 15:00 PM
வாஷிங்டன்

வாகனங்களும், கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்ற 6 காவலர்கள் கொல்லப்பட்டனர்.போராட்டங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், அதனையும் மீறி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


நாடு முழுவதும் கட்டுக்கடங்காமல் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த நியூயார்க் நகரில் பேரணியாகச் சென்றவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர்.மேலும் பேரணிகளைத் தலைமையேற்று நடததுபவர்களை உடனுக்குடன் கண்டறியும் போலீசார் அவர்களை கைவிலங்கிட்டு சாலையில் அமரவைத்து எச்சரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மான்ஹாட்டன் நகரில் இரவில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்பட்டாலும், பகலில்ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடுவதைத் தடுக்க போலீசார் தடுக்க முடியவில்லை.

வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்கு செல்லும் பிரதான சாலையில் கருப்பர்களும் வாழவேண்டும் என்று பொருள்படும் BLACK LIVES MATTER என பிரமாண்டமாக எழுதியுள்ளனர். 

இந்த நிலையில் ராணுவத்தினர் பயன்படுத்தும் சில ஆயுதங்களை போலீசாருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2015ல் கருப்பின இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போலீசாருக்கு எதிராக போராட்டம் நடந்த நிலையில் நவீன ஆயுதங்களை போலீசார் கையாள அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பப்பலோ பகுதியில் கலவர தடுப்பு போலீசார் குழு ஒன்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.அப்போது அவர்களிடம் கேள்வி எழுப்பிய 75 வயது முதியவர் ஒருவரை சில போலீசார் மூர்க்கத்தனமாக தள்ளிவிட்டதில், அவர் கீழே விழுந்தார்.  அதில் அவரது மண்டை உடைந்தது. இந்த விவகாரம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் பூதாகரமாக மேலும் வெடிதத்து. இந்த  சம்பவத்தில் தொடர்புடைய இரு போலீசார் மீது நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.அந்த போலீசார் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

இதற்கு பப்பலோ கலவர தடுப்பு போலீசார் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் ஒருபகுதியாக பப்பலோ கலவர தடுப்பு போலீசார் குழுவில் மொத்தமுள்ள 57 பேரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து திடீர் ராஜினாமா செய்துள்ளனர்.இதனிடையே மண்டை உடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவரும் அந்த முதியவர் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/06150013/Buffalo-officers-quit-special-team-after-2-officers.vpf

Link to comment
Share on other sites

https://www.cnn.com/2020/06/05/us/buffalo-police-suspension-shoving-man-trnd/index.html

The 57 officers resigned from the emergency unit but not from the force. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.