Jump to content

மகிந்த ராஜபக்ஸ மக்களின் நாயகன்; ஒரு மக்கள் சக்தி: சம்பந்தன் புகழ் மாலை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ஸ மக்களின் நாயகன்; ஒரு மக்கள் சக்தி: சம்பந்தன் புகழ் மாலை

மகிந்த ராஜபக்ச தான் வகித்த ஒவ்வொரு பதவியிலும் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று, மக்களின் நாயகனாக விளங்கினார். அவர் மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக விளங்கினார். தீர்க்கப்படாமலுள்ள இனப்பிரச்சனையை தீர்க்கவல்ல பலமிக்க தலைவர் அவர்தான் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழ்மாலை சூட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் 50 ஆண்டு அரசியல் பூர்த்தியை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் அனுப்பியிருந்த வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கௌரவ மகிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்க்கையில் ஐம்பது (50) ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளமை தொடர்பாக அவருக்குப் பாராட்டுத் தெரிவிப்பதோடு, எனது உளமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

இக்காலப்பகுதியில் அவர் ஓர் அரசியல்வாதியாக, ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, ஓர் அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, பிரதம மந்திரியாக, நாட்டின் சனாதிபதியாக சாத்தியமான ஒவ்வொரு பதவியிலும் இலங்கைக்குச் சேவையாற்றியுள்ளார். தான் வகித்த இவ்வொவ்வொரு பதவியிலும் அவர் தனிச் சிறப்புடன் விளங்கியதோடு, நாட்டு மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் வென்றெடுத்தார். அவர் அடிப்படையில் தன்னை நம்பிய, தன்னால் வழிநடத்தப்படுவதற்கு விரும்பிய சாதாரண மக்களின் ஒரு தலைவராகத் திகழ்ந்தார்.

தான் வகித்த பதவிகளிலெல்லாம் அவர் அடிப்படையில் மக்களின் ஒரு நாயகனாகவே திகழ்ந்தார். மக்கள் அவரை மதித்தார்கள். அவர் மக்களை மதித்தார். அவர் மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக விளங்கினார். மறுபுறத்தில் மக்களே அவரது பெரும் சக்தியின் மூலமாக விளங்கினர். இதுவே எந்தவொரு அரசியல் தலைவரினதும் பலம்மிக்க பண்பாகும். மகிந்த ராஜபக்ஷவிடம் இப்பண்பு மிகப் பெருமளவில் நிறைந்து காணப்பட்டது. அதுவே அவரது அரசியல் வெற்றிக்குத் திறவுகோலாகத்
திகழ்ந்தது. இது ஏற்றுக் கொள்ளபடவேண்டிய ஒன்று.

இலங்கை மக்களின் சார்பாக, குறிப்பாக பாராளுமன்றத்தில் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் சார்பாக அவருக்கு எமது உளமார்ந்த வாழ்த்துக்களையும் வெற்றிகரமானதோர் அரசியல் எதிர்காலத்திற்கான எமது நல்வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு நாடு என்ற வகையில் இலங்கை தீர்க்கப்படாத பாரதூரமான பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது.

நாட்டின் அதி உன்னத சட்டமாக அமையும் புதியதோர் அரசியலமைப்பு நாட்டிற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது. நீண்டகாலமாக மக்கள் சிந்தனையிலிருந்துவரும் மாற்றங்களை உள்ளடக்கி புதியதோர் அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இலங்கை மக்கள் கடந்த பல தசாப்தங்களாக தமது தேசிய ஜனநாயகத் தீர்ப்புகளில் ஆணை வழங்கியுள்ளனர். அதுகுறித்து பெருமளவு கருத்தொருமைப்பாடும் நிலவுகிறது. இவ் அவசரமானதும் கட்டாயமானதுமான தேவையை நிறைவேற்றுவதற்கு மக்கள் ஆதரவுபெற்ற ஒரு பலமிக்க தலைவர் தேவை.

சந்தேகத்திற்கிடமின்றி கௌரவ மகிந்த ராஜபக்ஷ அந்த நிலையில் இருக்கிறார்.

அந்தப் பணியை ஏற்று நிறைவேற்றுவதன்மூலம் கௌரவ ராஜபக்ஷ மேலும் பாரிய உச்சத்திற்கு உயர்ந்தெழ வேண்டும். அது அவரை ஒரு சிறந்த இராஜதந்திரி என்ற மட்டத்திற்கு உயர்த்துவதோடு, அவருக்கு வெறுமனே தேசிய அங்கீகாரத்தை மாத்திரமின்றி சர்வதேச அங்கீகாரத்தையும் மதிப்பையும் வழங்கும். இந்த விடயத்தில் எமது முழுமையான ஆதரவு அவருக்கு உண்டு.

நீதி, சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்மையானதும்
நிரந்தரமானதுமான ஒரு தீர்வினைக் கொண்டு வந்த ஒரு தலைவராக அவர் இலங்கை வரலாற்றில் தனக்கெனஓர் இடத்தைப் பெறுவார்.

கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்

http://www.samakalam.com/செய்திகள்/மகிந்த-ராஜபக்ஸ-மக்களின்/

Link to comment
Share on other sites

Quote

மகிந்த ராஜபக்ஸ மக்களின் நாயகன்; ஒரு மக்கள் சக்தி: சம்பந்தன் புகழ் மாலை

படித்த ஆட்கள் இப்படித்தான் கதைப்பினமோ??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மே எழுதி சம் பெயரில் விட்டிருப்பார்.

வேடிக்கை என்னவென்றால்.. கடந்த ஆட்சியில் 13 சுற்றுப் பேசி ஏமாத்தினவர்.. இந்த ஆட்சியில் இவர்களுக்கு நாயகன் ஆகிவிட்டார்.

மைத்திரியை நல்லாட்சி நாயகன் ஆக்கி வாங்கியாச்சு.. எனி இவர்.

இன்னொரு வேடிக்கை.. அண்ணன் நாயகன்.. தம்பி வில்லன் என்பதுதான். அவரையும் புகழ்ந்து தள்ள வேண்டியானே.. தனிச் சிங்களச்  செயலணிச் செயல்வீரனுன்னு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வ.உ.சி பதிப்பகம் - விலை ரூ 140 

Swaq.jpg

தெரியாம அச்சடிக்குறாங்க..☺️.😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

படித்த ஆட்கள் இப்படித்தான் கதைப்பினமோ??  

அதற்குப் பெயர் இராசதந்திரம் 😏

1 hour ago, பெருமாள் said:

Vadivelu Images : Tamil Memes Creator | Comedian Vadivelu Memes Download |  Vadivelu comedy images with dialogues | Tamil Cinema Comedians Images |  Online Memes Generator for Vadivelu - Memees.in

இவர் லூசா நான் லூசா ?

நாங்கள்தான் லூசுப் பயல்கள்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

படித்த ஆட்கள் இப்படித்தான் கதைப்பினமோ??  

53 minutes ago, Kapithan said:

அதற்குப் பெயர் இராசதந்திரம் 😏

நாங்கள்தான் லூசுப் பயல்கள்.😂

ஓமோம் ! படிச்சவை  தலைப்பாக்கை வைசசுக்கொண்டு போனதிலை இருந்தே படிச்சவைதானே. அவையளிலை ஆரும் சிங்களப்படை யிடம் சூடுபட்டிருககினமோ.  குழந்தை குட்டியள் எங்காவது முகாமிலையோ கோவில்லையோ குளத்திலையோ அலைஞ்சிருப்பினமோ.  அப்படி அனுபவப்பட்டிருந்தால் இப்படிப் பேசவருமா?  

இது ராசதந்திரமென்றால்  ராசதந்திரத்தை என்வென்பதோ.!

இறுதியாக இவர்கள்  ஒற்றையாட்சியென்றவாறு  தமிழினத்தை பைத்தியக்காரராக்கி அடகுவைத்து  விடுவார்கள் என்றுதான் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

இவர் லூசா நான் லூசா ?

லூசு என்றாலும் பரவாயில்லை, அதைக்கொண்டு ஏதாவது செய்விக்கலாம். அறளை பெயர்ந்தால் அவ்வளவுதான்.... 

அறளை பெயராமல் இருக்கத் தினமும் பல மைல்கள் நடப்பதும், பழவகைகள், இலைவகைகள் , நார்ப்பொருள் உணவுகளை தினசரி உணவில் தாராளமாகச் சேர்ப்பது அவசியமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Paanch said:

அறளை பெயராமல் இருக்கத் தினமும் பல மைல்கள் நடப்பதும், பழவகைகள், இலைவகைகள் , நார்ப்பொருள் உணவுகளை தினசரி உணவில் தாராளமாகச் சேர்ப்பது அவசியமாகும்.

உதுகளுக்கு பழவகை இலைவகையள் குடுத்தாலும் வேலை செய்யாது.தேவையில்லாத செலவு.
ஒரு செலவும் இல்லாமல் தள்ளி விழுத்துறதுதான் எல்லாருக்கும் நல்லது.

Link to comment
Share on other sites

47 minutes ago, nochchi said:

இது ராசதந்திரமென்றால்  ராசதந்திரத்தை என்வென்பதோ.!

ராஜதந்திரத்தை பற்றியும் அதற்கான சிறந்த உதாரணங்கள் பற்றியும் நாம் கலந்துரையாடுவது குறைவு. எமது மக்களின் தலைவர்களுக்கு மிகவும் தேவையான அறிவு ராஜதந்திரம் பற்றிய அறிவு. சிறந்த உதாரணங்களாக,

  1. துங்கு ரஃமானிடம் இருந்து சிங்கப்பூர் பிரிந்தபோது அதை லீ குவான் யூ கையாண்ட விதம்,
  2. சோமாலிலாண்ட் இன்றுவரை அங்கிகரிக்கப்படாத தனிநாடாக இயங்குவதற்கு பயன்படுத்தும் இராஜதந்திரம்,
  3. எரித்ரியா எதியோப்பியாவின் ஆதரவுடன் பிரிந்ததற்கு பயன்படுத்திய இராஜதந்திரம்,
  4. யூதர்களை வெறுக்கும் கிறீஸ்தவர்களால் நிரம்பி இருந்த அமெரிக்காவின் ஆதரவை தன்பக்கம் திருப்பி, அமெரிக்க யூத காங்கிரஸ் இஸ்ரேலை பிரித்தெடுக்க பயன்படுத்திய ராஜதந்திரம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

இவை பற்றிய இணைப்புகளை அறிந்தவர்கள் தந்து அவை பற்றி கலந்துரையாடுவது பயனுள்ளதாக இருக்கும்.

44 minutes ago, Paanch said:

அறளை பெயராமல் இருக்கத் தினமும் பல மைல்கள் நடப்பதும், பழவகைகள், இலைவகைகள் , நார்ப்பொருள் உணவுகளை தினசரி உணவில் தாராளமாகச் சேர்ப்பது அவசியமாகும்.

Alzheimer's Disease என ஆங்கிலத்தில் அறியப்படுவதே தமிழில் அறளை பெயர்தல் எனப்படுகிறது. இது குறுகியகால மறதி நோய். 5 நிமிடத்துக்கு முதல் செய்தது நினைவிருக்காது. 10 வருடங்களுக்கு முந்திய விடயங்கள் நல்ல நினைவில் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 வ.உ.சி பதிப்பகம் - விலை ரூ 140 

Swaq.jpg

தெரியாம அச்சடிக்குறாங்க..☺️.😊

இதைத்தான் நானும் சொல்ல வந்தேன்.  எல்லாத் தந்திரத்தையும் சொல்லிக்கொடுத்து, முண்டு கொடுத்து வளர்த்துவிட்டு, இப்போ புகழ்ந்து என்ன பிரயோசனம்? இவரைப் பார்த்து, "நான் ஒன்றும் பனங்காட்டு நரியில்லை, உந்தச் சலசலப்புக்கெல்லாம் எடுபட்டு ஓட." என்று ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிக்கும் சிங்களம். அதுமட்டுமல்ல, தனது கொள்கைகளை தமிழரே ஏற்றுக்கொண்டு, வாழ்த்துகின்றனர். என்று பிரச்சாரமும் செய்யும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

ஓமோம் ! படிச்சவை  தலைப்பாக்கை வைசசுக்கொண்டு போனதிலை இருந்தே படிச்சவைதானே. அவையளிலை ஆரும் சிங்களப்படை யிடம் சூடுபட்டிருககினமோ.  குழந்தை குட்டியள் எங்காவது முகாமிலையோ கோவில்லையோ குளத்திலையோ அலைஞ்சிருப்பினமோ.  அப்படி அனுபவப்பட்டிருந்தால் இப்படிப் பேசவருமா?  

இது ராசதந்திரமென்றால்  ராசதந்திரத்தை என்வென்பதோ.!

இறுதியாக இவர்கள்  ஒற்றையாட்சியென்றவாறு  தமிழினத்தை பைத்தியக்காரராக்கி அடகுவைத்து  விடுவார்கள் என்றுதான் தோன்றுகின்றது.

உங்கட கதையப் பாத்தா த்ட்டுத் தவறியேனும் அடகு வைக்காம விடச் சின்ன ஒரு சாண்ஸ் ஒண்டு இன்னமும்  இருக்கிறதா  உங்களுக்கு சின்ன நம்பிக்கை ஒண்டு ஓரத்தால தட்டுப்படுகிற மாதிரித்  தெரியுது. அது பிழையல்லோ ☹️

1 hour ago, கற்பகதரு said:

ராஜதந்திரத்தை பற்றியும் அதற்கான சிறந்த உதாரணங்கள் பற்றியும் நாம் கலந்துரையாடுவது குறைவு. எமது மக்களின் தலைவர்களுக்கு மிகவும் தேவையான அறிவு ராஜதந்திரம் பற்றிய அறிவு. சிறந்த உதாரணங்களாக,

  1. துங்கு ரஃமானிடம் இருந்து சிங்கப்பூர் பிரிந்தபோது அதை லீ குவான் யூ கையாண்ட விதம்,
  2. சோமாலிலாண்ட் இன்றுவரை அங்கிகரிக்கப்படாத தனிநாடாக இயங்குவதற்கு பயன்படுத்தும் இராஜதந்திரம்,
  3. எரித்ரியா எதியோப்பியாவின் ஆதரவுடன் பிரிந்ததற்கு பயன்படுத்திய இராஜதந்திரம்,
  4. யூதர்களை வெறுக்கும் கிறீஸ்தவர்களால் நிரம்பி இருந்த அமெரிக்காவின் ஆதரவை தன்பக்கம் திருப்பி, அமெரிக்க யூத காங்கிரஸ் இஸ்ரேலை பிரித்தெடுக்க பயன்படுத்திய ராஜதந்திரம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

இவை பற்றிய இணைப்புகளை அறிந்தவர்கள் தந்து அவை பற்றி கலந்துரையாடுவது பயனுள்ளதாக இருக்கும்.

உண்மையில் சீமான் சாப்பிட்டது ஆமை இறைச்சியா இல்லையா என்பது போன்ற பிடுங்குப்பாடுகளைத் தவிர்த்து நீங்கள் கூறியதுபோன்று பயனுள்ள திரிகளை திறந்தால் நிச்சயம் நன்மை பயக்கும். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தன் அவர்கள் தனது நண்பராக தனிப்பட்ட ரீதியில் வாழ்த்து கூறலாம். 

சம்மந்தரின் தனிப்பட்ட வாழ்த்து அவரது கட்சியோ அல்லது அவரது மக்களோ ஏற்றுக்கொள்ளும் கருத்தாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் அரசியல்வாதிகள் காலையில் பாராளுமன்றத்தில் அனல் பறக்க சிங்கள அரசியல்வாதிகளுடன் வாதம் செய்துவிட்டு மாலையில் ஒன்றாக அமர்ந்து தண்ணி அடித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

ஆக மொத்தத்தில் சம்மந்தரின் இந்த வாழ்த்து செய்தியில் எமக்கு செய்தி ஏதும் இல்லை? 

Link to comment
Share on other sites

9 hours ago, கிருபன் said:

மகிந்த ராஜபக்ஸ மக்களின் நாயகன்; ஒரு மக்கள் சக்தி: சம்பந்தன் புகழ் மாலை

சொதப்பல் சம்பந்தனின் காட்டமான அறிக்கை வெளியாகிவிட்டது.

தமிழ் மக்களை ஏமாற்ற சொதப்பல் சம்பந்தனின் புது நாடகம்.

Link to comment
Share on other sites

6 hours ago, கற்பகதரு said:

Alzheimer's Disease என ஆங்கிலத்தில் அறியப்படுவதே தமிழில் அறளை பெயர்தல் எனப்படுகிறது. இது குறுகியகால மறதி நோய். 5 நிமிடத்துக்கு முதல் செய்தது நினைவிருக்காது. 10 வருடங்களுக்கு முந்திய விடயங்கள் நல்ல நினைவில் இருக்கும்.

அறளை பெயர்தல் என தமிழில் அறியப்படுவதே ஆங்கிலத்தில் Alzheimer's Disease எனப்படுகிறது.

முன்தோன்றி மூத்தமொழி தமிழ் என்கிறார்கள். ஆனால் தமிழனாலேயே அதனை ஏற்கமுடியாதிருப்பது கவலை தருகிறது.😩 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா புது வழில முயற்சிக்கிறார், வாற தேர்தலிலும் ஐயாவையும் கூட்டமைப்பையும் வெல்ல வையுங்கோ. எப்பிடியும் தீர்வெடுத்து தருவார். ஓய்வறியா சூரியன்.

Link to comment
Share on other sites

8 hours ago, கற்பகதரு said:

Alzheimer's Disease என ஆங்கிலத்தில் அறியப்படுவதே தமிழில் அறளை பெயர்தல் எனப்படுகிறது. இது குறுகியகால மறதி நோய். 5 நிமிடத்துக்கு முதல் செய்தது நினைவிருக்காது. 10 வருடங்களுக்கு முந்திய விடயங்கள் நல்ல நினைவில் இருக்கும்.

1 hour ago, Paanch said:

அறளை பெயர்தல் என தமிழில் அறியப்படுவதே ஆங்கிலத்தில் Alzheimer's Disease எனப்படுகிறது.

முன்தோன்றி மூத்தமொழி தமிழ் என்கிறார்கள். ஆனால் தமிழனாலேயே அதனை ஏற்கமுடியாதிருப்பது கவலை தருகிறது.😩 

வயது போனவர்களின் பேச்சு, அறிவு பற்றிய பலவீனங்கள் பலவற்றுக்கும் தமிழில் அறளை பெயர்ந்து விட்டது என்று சொல்கிறார்கள். வயது போகப் போக அதிகரிக்கும் மறதி நோயே Alzheimer's Disease எனப்படுகிறது. இந்த நோய் பற்றிய ஆய்வுகளும் மருத்துவமும் கிடைப்பது போல அறளை பெயர்தல் பற்றி கிடைக்கவில்லை. ஆகவே, அந்த பின்னணியிலேயே எனது கருத்து அமைந்திருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

சம்மந்தன் அவர்கள் தனது நண்பராக தனிப்பட்ட ரீதியில் வாழ்த்து கூறலாம். 

சம்மந்தரின் தனிப்பட்ட வாழ்த்து அவரது கட்சியோ அல்லது அவரது மக்களோ ஏற்றுக்கொள்ளும் கருத்தாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் அரசியல்வாதிகள் காலையில் பாராளுமன்றத்தில் அனல் பறக்க சிங்கள அரசியல்வாதிகளுடன் வாதம் செய்துவிட்டு மாலையில் ஒன்றாக அமர்ந்து தண்ணி அடித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

ஆக மொத்தத்தில் சம்மந்தரின் இந்த வாழ்த்து செய்தியில் எமக்கு செய்தி ஏதும் இல்லை? 

உண்மை இதுவே. தமிழர் சார்பாக  வாழ்த்தும் தகமை சம்பந்தனென்றவருக்குக் கிடையாது.

Link to comment
Share on other sites

6 hours ago, Paanch said:

அறளை பெயர்தல் என தமிழில் அறியப்படுவதே ஆங்கிலத்தில் Alzheimer's Disease எனப்படுகிறது.

முன்தோன்றி மூத்தமொழி தமிழ் என்கிறார்கள். ஆனால் தமிழனாலேயே அதனை ஏற்கமுடியாதிருப்பது கவலை தருகிறது.😩 

4 hours ago, கற்பகதரு said:

வயது போனவர்களின் பேச்சு, அறிவு பற்றிய பலவீனங்கள் பலவற்றுக்கும் தமிழில் அறளை பெயர்ந்து விட்டது என்று சொல்கிறார்கள். வயது போகப் போக அதிகரிக்கும் மறதி நோயே Alzheimer's Disease எனப்படுகிறது. இந்த நோய் பற்றிய ஆய்வுகளும் மருத்துவமும் கிடைப்பது போல அறளை பெயர்தல் பற்றி கிடைக்கவில்லை. ஆகவே, அந்த பின்னணியிலேயே எனது கருத்து அமைந்திருந்தது. 

தமிழ் முன்தோன்றி மூத்த மொழியாக இருந்தாலும் அறளை பெயர்தல் நோய் தொட்பான துல்லியமான தகவல்களும் அதற்காக மருத்துவம் தொடர்பான பல்லாயிரக்கண‍க்கான கட்டுரைகள் ஆங்கிலத்தில் கிடைப்பதால் அதை கூறி உள்ளீர்கள்.  முன் தோன்றி மூத்த குடி என்று வெட்டி வீரம் கதைப்பதில்  வாழ்வில் அதிக நேரத்தை துறைசார் புலமை பெற்ற  தமிழர்கள்கூட செலவிடுவதாலும் பழைய பஞ்சாங்க பித்தலாட்டங்களை நடைமுறையில் அதிகம் நம்புவதாலும் தமிழில் கிடைக்காத பல தகவல்கள்   ஆங்கிலத்தில் எமக்கு கிடைக்கின்றன என்பதை கூறியுள்ளீர்கள். 

Link to comment
Share on other sites

8 hours ago, Paanch said:

அறளை பெயர்தல் என தமிழில் அறியப்படுவதே ஆங்கிலத்தில் Alzheimer's Disease எனப்படுகிறது.

முன்தோன்றி மூத்தமொழி தமிழ் என்கிறார்கள். ஆனால் தமிழனாலேயே அதனை ஏற்கமுடியாதிருப்பது கவலை தருகிறது.😩 

அது தான் சிலரின் மனப் பிரச்சினை! மேற்குலகம் உசத்தி என்கிற மூடநம்பிக்கை!

Link to comment
Share on other sites

4 hours ago, Rajesh said:

அது தான் சிலரின் மனப் பிரச்சினை! மேற்குலகம் உசத்தி என்கிற மூடநம்பிக்கை!

உசத்தி என்று பாராட்டுவது நல்லதொரு பண்பு. பாராட்டுவதற்காகத் தனது தாயைத் தாழ்த்திக் குறைகாண்பது நல்லதொரு பண்பல்ல. தமிழில் கிடைக்காதது எதுவுமில்லை என்று மூதறிஞர்களும் கூறுகிறார்கள். எங்களுக்குத் தெரியாவிட்டால் எதுவும் இல்லை என்று ஆகிவிடாது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.