Jump to content

திராவிடமும் தமிழ்தேசியமும் — திராவிட புரட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடமும் தமிழ்தேசியமும் — திராவிட புரட்டு

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

- திருக்குறள்

முதலில் திராவிடமென்றால் என்னவென்று தங்களை திராவிடர்கள் என்று சொல்லிகொள்பவரிடமே பெரும் குழப்பம் உள்ளது.

திராவிடம் என்பது மொழிப்பெயரா ? அல்லது இனப்பெயரா? அல்லது இடப்பெயரா? மூன்றுமே ஒன்றுதான் என்பர் சிலர், மூன்றும் வெவ்வேறு என்பர் சிலர். வித்தியாசம் தெரியாமல் நாம் குழப்பிக்கொள்கிறோம் என சொல்பவரும் உண்டு. திராவிடம் என்றால் என்ன? இந்த திராவிட கட்சிகள் தங்கள் பெயரில் தாங்கி நிற்கும் திராவிடம் எதனைக் குறிப்பது? அதற்கான தேவையென்ன என ஆராய்ந்தால், சுழியத்தில் வந்தே முடியும்.

1. திராவிட மொழிக் குடும்பம்

ராபர்ட் கால்டுவெல் (1814-1891) என்கிற ஒரு மொழியியல் அறிஞர், கிபி 1856 ஆண்டு "திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்" (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages) என்னும் நூலை தன் ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதுகிறார். தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுகு, கன்னடம், மற்றும் மலையாளத்தை பிரதானமாக கொண்டு அவற்றின் ஒலியமைப்பு, ஒப்பிலக்கிணத்தின் அடிப்படையில் வகைப்படுத்தினார். மற்ற இந்திய மொழிகளில் இருக்கும் சமஸ்கிருத கலப்பு, ஒலியமைப்பில் இவை வேறுபட்டுள்ளதால் அவ்வாறு வகைப்படுத்தினார். அவர் தெற்கு என குறிக்கும் 'திராவிட' என்கிற சொல்லையே  'மனுஸ்ருமிதி'யில் இருந்து தான் எடுத்திருக்கிறேன் எனவும் குறிப்பிடுகிறார். மேலும், திராவிட அல்லது தென்னிந்திய மொழிக்குடும்பத்தில், தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் மட்டுமல்லாமல், துளு மொழி (கர்நாடகம்), பிராகுயி மொழி (பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில்) இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்த பிரதான மொழிகளிலிருந்து பல நூறு மொழிகள் பிரிந்து இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

எனவே, தென்னிந்திய மொழிகள் அல்லது திராவிட மொழிகள் என குறிப்பிட்டதும் தவறு. திராவிட மொழிகள் தென்னிந்திய மொழிகளை மட்டும் குறிப்பதென்றால் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திராவிட மொழிகள் என பிரிக்கத்தேவை இருக்காது. ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் திராவிட வரையரைக்குள் வருமோ? அப்படியென்றால் அவர்களும் திராவிடர்கள் தானே? ஏன் நான்கு மொழிகளுக்குள் சுருங்கிக்கொள்ளவேண்டும்?

மேலும், இவர் செய்த இன்னொரு பிழை, தமிழ் மொழியையும் சேர்த்து 'மூல திராவட மொழி' (Proto Dravidian Language) என ஒன்று இருந்தது, அதிலிருந்து தான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப்பிரிந்தது எனச் சொன்னார். அந்த மூல மொழியே தமிழ்தான் என்பதை அவர் குறிப்பிடவில்லை. தமிழிலிருந்து முதலில் தோன்றிய மொழி தெலுங்கு, பிறகு தெலுங்கிலிருந்து பிரிந்தது கன்னடம், மீண்டும் தமிழிலிருந்து பிரிந்தது மலையாளம் என தற்போது, காலவரையறையின் படி நிருவப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 1812 ஆம் ஆண்டே, பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் (Francis Whyte Ellis) எனும் மொழியியல் அறிஞர், சமஸ்கிருத மொழியிலிருந்து தான் அனைத்து இந்திய மொழிகளும் வந்தன எனும் கூற்றை மறுத்தார், குறிப்பாக தென்னிந்திய (திராவிட) மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தொடர்பில்லையென நிருவினார், அதனடிப்படையிலேயே கால்டுவெல் தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார்.

இந்த மொழிக்குடும்ப அடிப்படையில் தான் சிலர் தங்களை திராவிடர் என்று சொல்லிக்கொள்கின்றனர். தமிழரும் திராவிடர் என்று அடையாளப்படுத்தப்படுகின்றனர். இது அவசியமற்றது, தமிழனைத தவிர வேறு எந்த மொழியைச் சேர்ந்தவனும் தன்னை திராவிடன் என சொல்லிக்கொள்ள மாட்டான். ஏனெனில் இவை அடிப்படையிலேயே தவறானது, அவரவர் அவரவருக்கான மொழி தேசிய அடையாளத்தோடு வாழும்போது, தமிழன் மட்டும் திராவிடன் ஆக்கப்பட்டான். அது வேற்றுமொழியாளர்களின் சூழ்ச்சியே! தமிழன் என்கிற அடையாளத்திற்குள் வரமுடியாமல் புதிதாக திராவிடம் என்கிற ஒன்றை உருவாக்கிவிட்டனர்.

இந்த திராவிட என்கிற சொல் முதலில் தமிழே கிடையாது. சமஸ்கிருதம் கலக்காததால் தமிழுக்கு தனித்தன்மையென சொல்லிவிட்டு அதற்கு சமஸ்கிருத்திலேயே பெயர் வைக்கும் அறிவை என்னவென்று சொல்வது? தமிழுக்குத்தான் தமிழ் என்கிற பெயர் இருக்கிறதே, அதையேன் திராவிடம் என சொல்லவேண்டும்? எனக்கேட்டால் தமிழ் தான் திராவிடம், திராவிடம் தான் தமிழ் என்று, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வர், 50 ஆண்டுகளுக்கு மேலாக அதில் வெற்றி பெற்றுமுள்ளனர்.

2. பெரியாரின் திராவிடம்

யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும்

நானே சொன்னாலும் உனது புத்திக்கும்

பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.

- தந்தை பெரியார்

அதிகாரத்திலும், காங்கிரஸ் கட்சியிலிருந்த பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்ததே வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் பார்ப்பனரல்லாதோர் அமைப்பும், அதன் காலக்கோடு கீழே தரப்பட்டுள்ளது.

1. 1909 இல் பி. சுப்ரமணியம், எம். புருசோத்தம் நாயுடு எனும் இரு வழக்கறிஞர்கள் “சென்னை பிராமணரல்லாதோர் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினர். ஆனால் மக்களிடையே இதனால் எவ்விதத் தாக்கமும் இல்லாததனால் இந்த அமைப்பு நீர்த்துப் போனது.

2. 1912 இல் சரவணப் பிள்ளை, ஜி. வீராசாமி நாயுடு, துரைசாமி நாயுடு, எஸ். நாராயணசாமி நாயுடு போன்ற பிராமணரல்லாதோர் தலைவர்கள் ”சென்னை ஐக்கிய சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினர். நடேச முதலியார் இதன் செயலாளராக இருந்தார்.

3. அக்டோபர் 1, 1912 இல் இவ்வமைப்பு புனரமைக்கப்பட்டு சென்னை திராவிடர் சங்கம் என்று பெயரிடப்பட்டது.

4. நவம்பர் 20, 1916 இல் பிராமணரல்லாதோரின் 30 முக்கிய தலைவர்கள் தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயரின் தலைமையில், நடந்த கூட்டத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உருவானது. இதன் அரசியல் பிரிவே நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் கட்சி).

5. நீதிக்கட்சி,1920–26, 1930–37 காலகட்டங்களில் ஆளுங்கட்சியாகவும்; 1926–30, 1937-44 வரை எதிர்கட்சியாகவும் செயல்பட்டது.

6. 1944 இல் பெரியாரின் தலைமையில் திராவிடர் கழகமாக மாறியது.

7.1949 இல் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கினார் அண்ணா.

8. 1972 இல திமுகவிலிருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கினார் எம்ஜிஆர்.

1*saTADdo4q4r3KEzXhJx6Uw.png?q=20
1*saTADdo4q4r3KEzXhJx6Uw.png

இதில் பங்கேற்ற, இயக்கம் உருவாக காரணமானவர்கள் யார் யாரென பார்த்தாலே, இது யாருக்கானது என தெரிந்துவிடும். அதிகாரத்தை முன்னேறிய பார்ப்பனரிடமிருந்து அதற்கு அடுத்தாக முன்னேறிய பார்ப்பனரல்லாதோரிடம் தருவது, பெறுவது தான் குறிக்கோள். குறிப்பாக தமிழரல்லாதோரிடம்.

தொடக்கத்தில், நீதிக்கட்சிக்கு பிராமணரல்லாத அனைத்து பிரிவினரின் ஆதரவு இருந்தாலும், பெரு முதலாளிகளின் ஆதிக்கம் நிலவி வந்ததால் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும், இஸ்லாமியரும் விலகினர். தனித்தமிழ் இயக்கங்களுக்கான தேவையும் வந்தது, மறைமலை அடிகள் அதனை தோற்றுவித்தார்.

இன்றைய தமிழ்நாடுடன், ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களின் பெரும்பகுதி இணைந்திருந்து சென்னை மாகாணம், அப்போது உருவான திராவிட இயக்கங்கள், தமிழ்நாடாக, மொழிவாரி மாநிலமாக உருவெடுத்தப்பின்னரும் கூட, திராவிட இயக்கங்கள் தமிழ் இயக்கங்களாக மாறவில்லை. ஏனென்றால் அதை நடத்தியவர்கள் பெரும்பாலானவர்கள் தமிழரல்லாதவர்.

பெரியார் தமிழ் சமுதாயத்திற்கு செய்த தொண்டு மறுக்கமுடியாதது, அவர் போற்றுதலுக்குறியவர் என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை. ஆனால் அவர் விமர்சனத்திற்க்கு அப்பார்ப்பட்டவர் என்பது ஏற்புடையதல்ல. திராவிடத்தை மறுத்தாலே அது பார்ப்பனீயத்திற்கு ஆதரவானது என இவர்களே சொல்லிக்கொள்கிறார்கள். கடவுளை மறுத்தால், நீ சாத்தானை ஆதரிப்பவன் என பக்தர்கள் சொல்வது போல தான் இதுவும். பகுத்தறிவு பக்திமார்க்கமாகத் தான் மாறிவிட்டது இந்த திராவிடம்.

திராவிடர் என்றால் யார் எனக்கேட்டால், தந்தை பெரியார், "தமிழர்" என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழனென்று கூறிக்கொண்டு, நம்முடன் கலந்துகொண்டு மேலும் நம்மை கெடுப்பார்ப்பான். திராவிடர் என்றால் எந்த பார்ப்பானும் தன்னை திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்ப்படமாட்டான்' எனச்சொல்கிறார்.

ஆனால், மேலே குறிப்பிட்டதுபோல, திராவிடம், திராவிடர் என்கிற சொல்லே சமஸ்கிருதத்திலிந்து தான் வந்தது. மேலும், 1947 ஆம் ஆண்டு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவில் (Encyclopedia Britannica) திராவிடர்கள் என்றால் யார் என விவரிக்கப்பட்டுள்ளது. அதில், "தென்னாட்டில் வாழும் பிராமணர்களை குறிக்கும் சொல்லே திராவிடர் என்பதும், ஆனால் கெடுவாய்ப்பாக தற்போது தென்னாட்டில் வாழும் அனைத்து மக்களையும் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு எடுத்துக்காட்டாக, கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட், ஒரு பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அவர் பெயரில் இருக்கும் திராவிட் என்பது தமது குடும்பப்பெயர் எனவும், பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். பெயருக்குப் பின்னால் திராவிட் என்று எந்த தமிழரும் போட்டுக்கொள்ள மாட்டார், ஏனெனில் அது ஒரு பிராமண சாதிப்பெயர். பிறகெப்படி திராவிடர் என்பது பார்ப்பனரல்லாதோரை குறிக்கும் ?

தமிழ் இலக்கியங்கள் எதிலும் திராவிடம் என்கிற சொல்லே பயன்படுத்தப்படவில்லை எனக்கேட்டால், ஆதிசங்கரர், திராவிட சிசு என கூறியிருக்கிறார் எனச் சொல்கிறார்கள். அதுவும், தமிழிலில்லை, இருந்தாலும் பதில் சொல்லுவோம்.

ஆதிசங்கரர், திருஞானசம்பந்தரை தான் அப்படி குறிப்பிடுவதாகவும், வேறு சிலர், ஆதிசங்கரர், தன்னைத்தானே அப்படி சொல்லிக்கொள்கிறார் எனவும் குறிப்பிடுகின்றனர், எப்படி பார்த்தாலும் அது தவறே, ஏனெனில் இருவருமே பார்ப்பனர் தான், பிறகு பார்ப்பனரல்லாத தமிழர் எங்கிருந்து அங்கு வந்தார்கள்?

தங்களை திராவிடர், திராவிடர் கட்சிகள் என சொல்லிக்கொள்பவர் எதனைச் சொல்கின்றனர்? பெயரே தவறாக இருக்கின்றதே?

பார்ப்பன எதிர்ப்பு என்பதே, ஏதோ இந்த இயங்கங்கள் கண்டுபிடித்தது தான், என்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தப்பார்க்கின்றனர். பன்னெடுங்காலமாகவே பார்ப்பன எதிர்ப்பு என்பது தமிழ் வாழ்வியல் முறையில் இருந்துள்ளது.

ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர், திருமந்திரம் என்னும் நூலில்

"பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்

போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்

பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே

சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே."

- திருமூலர் திருமந்திரம்.

பொழிப்புரை: தம் பெயரில் மட்டுமே (பிறப்பால்) பார்ப்பான்/ பிராமணன்/ அந்தணன் என்போர் எம்பிரானை அர்ச்சனை செய்யத் தகுதியற்றவர்கள். அப்படி அவர்கள் செய்தால் அந்த நாட்டுக்கும், அரசனுக்கும் தாங்கொணா வேதனைகளும், நாட்டு மக்களுக்கும் பொல்லாத வியாதிகளும், பஞ்சமும் வந்துசேரும் என்பதை தன்னாசானான சித்தபெருமான் நந்தீசர் உரைத்ததாகக் கூறுகிறார் திருமூலர். இதன் மூலம் திருமூலர் சொல்வது பிறப்பால் / பெயரால் யாரும் இறையை அர்ச்சிக்கும் தகுதியைப் பெறமாட்டார். மெய்யாக அறவழியில் நிற்கும் அனைவருக்கும் இறையை அர்ச்சிக்கும்(பூசிக்கும்) தகுதியுண்டு. அவர்களே ஈற்றில் இறையுடன் இரண்டறக் கலக்க வல்ல 'அறவாழி அந்தணர்' (சித்தர்/ஞானிகள்) ஆவார்கள்.

மேலும், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருமுறையில்

"சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் கோத்திரமும்

குலமும் கொண்டென் செய்வீர்

பாத்திரம் சிவமென்று பணிதிரேல்

மாத்திரைக்கு ளருமாற் பேறரே"

(திருமுறை - 5:60:3)

என பார்ப்பனீயத்தை சாடுகின்றார்.

மேலும், சிலப்பதிகாரத்தில்,வஞ்சிக் காண்டம்/26.கால்கோட் காதை, 27.நீர்ப்படைக் காதையில்,

சேரன் செங்குட்டுவன் வடநாடு நோக்கி படையெடுத்துச் சென்று, ஆரிய மன்னர்களை வென்று, கண்ணகிக்கு சிலைவடிக்க கல்லெடுத்து அதை ஆரிய மன்னன் கனக விசயன் தலையில் சுமக்கச்செய்து கொண்டுவந்தான் எனப்பாடல் உள்ளது. இது கற்பனை கதையாகவே இருக்கட்டும் ஆனால், இளங்கோவடிகளின் பார்ப்பன எதிர்ப்பு மிகத்தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த பார்ப்பனிய எதிர்ப்பு என்பது தமிழர்களுக்கு சங்க காலத்திலிருந்தே இருக்கின்ற ஒரு தொடர்ச்சி. பார்ப்பனீய எதிர்ப்பும், கடவுள் மறுப்பும் பேசிய பெரியார், ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ பேசியிருந்தால் அவர் தனிமைப் படுத்தப்பட்டிருப்பார். ஏனெனில் தமிழர் மரபு என்பதே பகுத்தறிவு மரபு, பார்ப்பனீய எதிர்ப்பு மரபு. கடவுள் மறுப்பும், ஒர் கடவுள் என்கிற தத்துவமும் தமிழர் வரலாற்றில் நெடுங்காலமாக இருந்துள்ளது, அதனால் தான் அவர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

3. திராவிட நாடு (திராவிட நிலப்பரப்பு)

1940 இல் ஆரம்பித்து, 1944 இல் முழுவடிவம் பெற்றது திராவிட நாடு கோரிக்கை. திராவிடர் கழகத்தில் பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்த அண்ணா, 1949 இல் பெரியாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், திமுக ஆரம்பிக்கப்படுகிறது. தங்கள் கட்சியின் பெயரிலுள்ள திராவிட எனும் சொல்லில் 'ர்' கிடையாது, எனவே அது மக்களைக்கு குறிக்காது, அது இந்த மண்ணை, அதாவது நிலப்பரப்பை குறிக்கிறது என சொன்னார் அண்ணா.

1*3rVqsgexpWwgQ2blysJ3aQ.jpeg?q=20
1*3rVqsgexpWwgQ2blysJ3aQ.jpeg

கட்சி ஆரம்பித்த சில காலத்திலேயே, பிராமணர்களை கட்சியில் சேர்த்துக்கொள்ளலாம் என ஆலோசித்தனர். அதன்படி பொதுச்செயலாளர் அண்ணா, பிராமணர்கள் திமுகவில் சேரலாம் என அறிவிக்கவும் செய்தார். அதனை ஆசைத்தம்பி எனும் திமுக தலைவர், தான் நடத்திவந்த 'தனியரசு' எனும் நாளேட்டில் செய்தியாக போட்டார், அண்ணாவை விமர்சிக்கும்வகையில் அண்ணாவின் படத்தை தலைகீழாகவும் போட்டார். பார்ப்பனருக்கெதிராக எப்படியெல்லாமோ பேசிவிட்டு இப்படி தலைகீழாக மாறிவிட்டாரே என குறிக்கும்படி அதனை செய்தார். பின் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையாக, ஏ.வி.பி.ஆசைத்தம்பியை கட்சியை விட்டு ஒருவருடம் நீக்கி வைத்திருந்தனர்.

இந்த பார்ப்பன எதிர்ப்பு பேசிய திமுக தான், அமைச்சர் பதவிகளுக்காக, மத்தியில் பாஜக அரசை 6 வருடம் தாங்கிப்பிடித்திருந்தது. ஆரியம் திராவிடம் எனப்பேசிக்கொண்டு வந்தவர்கள் தற்போது இந்திய தேசியம் பேசுகின்றனர். இப்போது அவர்கள் ஆரிய திராவிடமும் பேசுவதில்லை, மண்ணைக்குறித்தும் பேசுவதில்லை, தமிழ் தான் திராவிடம் என புது முகமுடியுடன் வருகின்றனர். இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், நாட்டால் இந்தியன் என, நடைமுறையில் யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாத புதிய தத்துவத்தை உதிர்க்கிறார் கருணாநிதி.

இந்தியா என்ற நாடு தோன்றி 100 ஆண்டுகள் கூட இன்னும் முழுமையடையவில்லை, மொழி தேசியங்களின் உரிமைகள், சுயாட்சி நிலை நாட்டப்படும் என்பது தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. இந்திய ஒன்றியத்தின் சாரம்சம் அதுதான். ஆனால், இன அடையாள அழிப்பின் மூலம், இந்தியனாக்க முற்படுகின்றனர், இந்தி கற்க சொல்கின்றனர். தமிழ் மொழி உணர்வு பேசி வந்தவர்கள், ஆங்கிலத்தின் பயன்பாட்டை பேசுகின்றனர். தாய்மொழியில் கற்காத எவனும் முன்னேற முடியாது என்கிற அடிப்படை புரிதல், தெளிவு கூட இல்லாமல் இயக்கம் நடத்தி வந்துள்ளனர். ஹிந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து தமிழிரை காப்பாற்ற வேண்டியவர்கள், ஹிந்துத்துவாவிலிருந்து, மதவாத சக்திகளிடமிருந்து தமிழரை காப்பாற்ற வேண்டியவர்களை தமிழ் தேசியத்திற்கு எதிராக பேசுகிறார்கள். அதிலிருந்தே இவர்கள் யாருக்கானவர் என்பது எளிதில் புரிகிறதல்லவா? எப்படியும் தோற்றுவிடுவோம் என தெரிந்து ஓலமிட்டு ஓடுகின்றனர் திராவிடர்கள்.

உலகில் தோன்றிய முதன்மொழி தமிழ், அதன் பெயரை மாற்றுவதற்கு நீங்கள் யார்? உலகில் முதலில் தோன்றியவன் தமிழன்! அவன் அடையாளத்தை மாற்றுவதற்கு நீங்கள் யார்? உலகம் முழுதும் சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி இணைவது மொழி தேசியத்தால் தான். நாம் வாழும் பகுதி, இந்த நாடு — தமிழ்நாடு, மக்கள் — தமிழர், மொழி — தமிழ், எனவே நாம் தமிழ்தேசிய இனத்தின் மக்கள், நமக்கான அரசியலே தமிழ் தேசிய அரசியல்.

முன்னேறிய நாடுகளின், ஒரு நாடு முன்னேற்றமடைவதற்கான அடிப்படையே மொழி தேசியம் தான். உலக வல்லாதிக்க, முன்னேறிய நாடுகளான ஸ்விட்சர்லாந்து, சீனா, ஜப்பான், ஜெர்மனி, கொரியா, பிரான்ஸ், பின்லாந்து, ஹாலாந்து, செக் குடியரசு, போலாந்து என அனைத்துமே மொழி தேசியத்தால் நிலைத்திருக்கும் நாடுகள் தான். இதனை பாசிசம் என்பவரோ,இனத்தூய்மைவாதம் என்பவரோ, பிரிவினை வாதம் என்பவரோ ஒன்று அடிப்படை புரியாதவராக இருக்கலாம், அல்லது தனக்கும், தமிழல்லாத தன் இனத்திற்கும் ஆபத்து என நினைத்திருக்கலாம்.

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

- திருக்குறள்

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதே.

-இரா.மணிமாறன் 07.02.2017

https://medium.com/@iManiMaaran/திராவிடமும்-தமிழ்தேசியமும்-பகுதி-2-62f8b1d24942

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்தக் கட்டுரையை மீடியத்தில் சில மணிநேரங்களுக்கு முன்னர் படித்திருந்தேன்😀

திராவிடம் என்பது ஒரு ப்ராண்ட் தவிர வேறு ஒன்றுமில்லை. Re-brand செய்ய கட்சிகள் விரும்பவில்லை. ஆனால் செய்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

நானும் இந்தக் கட்டுரையை மீடியத்தில் சில மணிநேரங்களுக்கு முன்னர் படித்திருந்தேன்😀

திராவிடம் என்பது ஒரு ப்ராண்ட் தவிர வேறு ஒன்றுமில்லை. Re-brand செய்ய கட்சிகள் விரும்பவில்லை. ஆனால் செய்திருக்கலாம்.

திராவிடம் brand ஆக இருந்திருந்தால் பிரச்சனை இல்லை. அவர்கள் மிக நுட்பமாக இனவழிப்பு செய்கிறார்களோ என்பது தான் சிக்கலே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

திராவிடம் brand ஆக இருந்திருந்தால் பிரச்சனை இல்லை. அவர்கள் மிக நுட்பமாக இனவழிப்பு செய்கிறார்களோ என்பது தான் சிக்கலே.

 

தாய்மொழி தமிழ் என்று certificate இல் போடாதது மொழி வாரியாக இட ஒதுக்கீடு செய்யும்போதுதான் பிரச்சினையாக இருக்கும். அப்படியான நிலை தமிழகத்தில் இருக்கா என்று எனக்குத் தெரியாது.

இந்தச்ப் பிரச்சினையை சட்டசபையில் ஒரு தீர்மானம் போட்டுத் தீர்க்கலாம்.

ஆனால் இனவழிப்பு என்ற சொல் பெரிய வார்த்தை. இறுதி யுத்தகாலத்தில் தமிழர் என்பதற்காகவே ஆயிரமாயிரமாக கொல்லப்பட்டதை ஓர் இனவழிப்பு என்று ஐ.நா. மூலம் தீர்மானம் எடுக்கமுடியாத நிலை இந்தப் பதினொரு ஆண்டு காலத்தில் இருக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

திராவிடம் brand ஆக இருந்திருந்தால் பிரச்சனை இல்லை. அவர்கள் மிக நுட்பமாக இனவழிப்பு செய்கிறார்களோ என்பது தான் சிக்கலே.

 

காணோளியை பார்த்தபின்தான் தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு பிரச்சனையிருக்கு என்று தெரிகின்றது , எப்படி தமிழினத்தை அழிக்கின்றார்கள், இப்பவாவது விழித்துக்கொண்டார்களே. தமிழ் நாட்டை தமிழன் ஆண்டால்தான் பல பிரச்சனைகளுக்கு விடுதலை கிடைக்கும்ந சீமான் ஆழனும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

தாய்மொழி தமிழ் என்று certificate இல் போடாதது மொழி வாரியாக இட ஒதுக்கீடு செய்யும்போதுதான் பிரச்சினையாக இருக்கும். அப்படியான நிலை தமிழகத்தில் இருக்கா என்று எனக்குத் தெரியாது.

இந்தச்ப் பிரச்சினையை சட்டசபையில் ஒரு தீர்மானம் போட்டுத் தீர்க்கலாம்.

ஆனால் இனவழிப்பு என்ற சொல் பெரிய வார்த்தை. இறுதி யுத்தகாலத்தில் தமிழர் என்பதற்காகவே ஆயிரமாயிரமாக கொல்லப்பட்டதை ஓர் இனவழிப்பு என்று ஐ.நா. மூலம் தீர்மானம் எடுக்கமுடியாத நிலை இந்தப் பதினொரு ஆண்டு காலத்தில் இருக்கின்றது. 

தற்போதுள்ள, இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் திட்டமிட்டே தாய்மொழியை குறிக்காது மறைத்துள்ளது தெரிகிறது. இவர்களால் சட்டமன்றில் இனியும் சட்டம் இயற்றப்படும் என்று நம்பிக்கையில்லை.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.