Sign in to follow this  
கிருபன்

படைமய சூழலுக்குப் பழக்கப்படுதல்

Recommended Posts

படைமய சூழலுக்குப் பழக்கப்படுதல்

கே. சஞ்சயன்   / 2020 ஜூன் 05

கொரோனா வைரஸ் தொற்றால், கடந்த மூன்று மாதங்களாக, உலகளாவிய ரீதியாகப் பொருளாதார உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், புதிய அச்சுறுத்தல் ஒன்று, வெட்டுக்கிளிகளின் வடிவத்தில் வந்திருக்கிறது.

சோமாலியா, எதியோப்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளில், வெட்டுக்கிளிகள் பயிர்களுக்குப் பேரழிவுகளை ஏற்படுத்துவது வழக்கம்.

உள்நாட்டுப் போர், வறுமை, பொருளாதார வளமின்மை போன்ற காரணிகளால், இந்த நாடுகள் பலமான உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதில்லை. இதனால், இங்கு வெட்டுக்கிளிகள் கட்டுக்கடங்காமல் பரவுகின்றன. இந்த வெட்டுக்கிளிகள், அவ்வப்போது உலகத்துக்கே அச்சுறுத்தலாகவும் மாறுகின்றன.

ஒரு நாளைக்கு 150 கி.மீ வேகத்தில், பெருங்கூட்டமாக இவை பயணிக்கின்றன. இந்த வெட்டுக்கிளிகளின் கூட்டம், சிலவேளைகளில் பல கி.மீ பரப்பளவைக் கொண்டதாகவும் இருப்பதுண்டு.

இவ்வாறான வெட்டுக்கிளிகள் தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்குப் படையெடுத்துள்ளன.

இலங்கையிலும் ஆங்காங்கே, வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாகச் செய்திகள் வரத் தொடங்கி இருக்கின்றன.

குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களில், வெட்டுக்கிளிகளால் பயிர்கள் நாசம் செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்ற போதும், அவை ஆபிரிக்க வெட்டுக்கிளிகள் அல்ல என்றும் உள்ளூர் இனங்களே என்றும் விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் கூறியிருக்கிறார். எவ்வாறாயினும், இலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருவதாக, அவர் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அதற்குத் தேவையான இரசாயனங்களை இனங்காணவும் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவால், கட்டுப்படுத்த முடியாது போனால், படையினரின் உதவியும் பெறப்படும் என, விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வீரகோன் கூறியிருக்கிறார்.

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு நிகழ்ந்தால், அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், படையினரை ஈடுபடுத்துவதற்கான எத்தனங்களில், அரசாங்கம் இறங்கியிருக்கிறது என்பதையே, அவரது இந்தக் கருத்து வெளிக்காட்டுகிறது.

விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், படையினரை இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடிய அதிகாரம் படைத்தவரோ, அதுபற்றித் தீர்மானிக்கக் கூடியவரோ அல்ல.

இந்த நிலையில், அவரிடம் இருந்து வெளிப்பட்டிருக்கின்ற இந்தக் கருத்தை, இரண்டு வகையாக நோக்கலாம்.

ஒன்று, அரசாங்க மேலிடத்தில் இருந்து, இவ்வாறான நிலை ஏற்பட்டால், படையினரின் உதவியைப் பெறலாம்; அல்லது, பெறவேண்டும் என்ற அறிவுறுத்தல் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.

அதன்படி, நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், பாதுகாப்புப் படையினரின் உதவி பெறப்படும் என்று, விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் கூறியிருக்கலாம்.

இரண்டாவது, எந்தத் துறையை எடுத்தாலும், படையினரை ஈடுபடுத்துவது ஒரு நோயாக மாறி விட்ட நிலையில், அரச அதிகாரிகள் மட்டத்துக்கு, இது பழக்கப்பட்டு விட்ட ஒன்றாக மாறியிருக்கலாம். அதன் அடிப்படையில் கூட அவர், இவ்வாறு கூறியிருக்க வாய்ப்புகள் உள்ளன.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்காகக் கட்டியெழுப்பப்பட்ட இராணுவக் கட்டமைப்பை, இப்போது எதற்கெல்லாம் பயன்படுத்துவது என்ற வரையறையே இல்லாமல் போய் விட்டது.

போர் முடிவடைந்த பின்னர், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், இராணுவத்தினர் கொழும்பில், கால்வாய் சுத்திகரிப்புப் பணிகளில் தொடங்கி, ரதுபஸ்வெலவில் குடிநீருக்காகப் போராட்டம் நடத்தியவர்களை அடங்குவது வரையான பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர்.

இதனால், இராணுவத்தினருக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டதுடன், அவர்களின் மதிப்பும் குறைக்கப்பட்டதாக, தற்போதைய எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

இவ்வாறான நிலையில், தற்போதைய அரசாங்கம், மீண்டும் இராணுவத்தினரை டெங்கு ஒழிப்பு, கொரோனா வைரஸ் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு என்று களமிறக்கி, கடைசியாக அரிசி பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கிப் பார்த்து விட்டது.

நுகர்வோர் அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சாந்த திஸநாயக்க, அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கையாண்ட தவறான அணுகுமுறைகளால், அரிசி விலையை அரசாங்கமே உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்போது, வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் இராணுவத்தை இறக்குவதற்கும் அரசாங்கம் தயாராகிறது; அதற்கேற்ற மனநிலைக்கு, அதிகாரிகளைக் கொண்டு வந்திருக்கிறது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில், ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்தும் போது, கொஞ்சம் திறமையாகச் செயற்பட்டால், அத்தனை வேலைகளிலும் அவரையே ஈடுபடுத்தும் ஒரு வழக்கம் இருக்கிறது.

துறைசார் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உரிய ஊதியம், வசதிகளைச் செய்து கொடுப்பதை விட, குறைந்த செலவில் அந்த வேலையை முடிக்கலாம் என்றே அவர்கள் பார்ப்பார்கள்.

போரில் திறமையாகச் செயற்பட்டனர் என்பதற்காக, இராணுவத்தினரையே எல்லாப் பணிகளிலும் ஈடுபடுத்தி, வெற்றி காணலாம் என்ற மனோநிலையும் அது போன்றது தான்.

எல்லா மட்டங்களிலும், இராணுவத் தலையீடுகளை மேற்கொள்ள அனுமதிப்பதன் மூலம், அரச அதிகார மட்டங்களும் நாட்டு மக்களும், அதற்குப் பழக்கப்பட்டுப் போன ஒன்றாக மாற்றப்பட்டு விட்டனர்.

கடந்த வாரம், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில், ஓர் ஊடக மாநாடு நடத்தப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகமாக அண்மையில் நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, அந்தச் செய்தியாளர் சந்திப்பில், இராணுவச் சீருடையிலேயே பங்கேற்றிருந்தார்.

ஆனால், அவர் சேவையில் உள்ள இராணுவ அதிகாரி அல்ல; ஓய்வுபெற்று விட்ட அவர், இராணுவச் சீருடையில் அந்த ஓடக சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

சேவையில் உள்ள ஓர் இராணுவ அதிகாரி, சீருடையுடன் பங்கேற்பதற்கும், ஓய்வுபெற்ற ஒருவர் சீருடையுடன், சிவில் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.

இது, தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும், ஒருவித உளவியல் நிகழ்ச்சி நிரலாகவும் கூட இருக்கக் கூடும்.

ஆரம்பத்தில், கொரோனா வைரஸை ஒழிப்போம் என்று சூளுரைத்தவர்கள் எல்லோருமே, ஒரு கட்டத்துக்கு மேல், அது சாத்தியமற்றது என்று உணர்ந்தவுடன், ''கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்'' என்று, ஆலோசனை கூறத் தொடங்கினார்கள்.

அதுபோலத் தான், சிவில் அதிகாரிகளைச் சீருடையினருடன் இணைந்து பணியாற்றப் பழகிக் கொள்ளுங்கள் என்று கூறும் வகையில் தான், சிவில் பணிகளில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

இராணுவ ஆட்சி பற்றிய குற்றச்சாட்டுகள், வலுவாகக் கூறப்பட்டு வருகின்ற போதும், அரசாங்கம் எல்லாத் துறைகளிலும் இராணுவத்தை ஈடுபடுத்துவதில், உறுதியாக இருக்கிறது.

image_742ad69fae.jpgஅதற்கேற்ற வகையிலேயே, முக்கியமான துறைகளை இலக்கு வைத்து, சீருடை மயப்படுத்தும் போக்குத் தீவிரம் பெற்று வருகிறது.

அண்மையில், விவசாய மற்றும் மகாவலி அமைச்சின் செயலாளராக, மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டுள்ள சூழலில், அவருக்குக் கீழ் உள்ள விவசாயத் திணைக்களப் பணிப்பாளரிடம் இருந்து, வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் படையினரின் உதவியைப் பெறப்படும் என்ற கருத்து வெளியாகியிருப்பது ஆச்சரியமில்லை.

ஆனால், இது ஓர் ஆபத்தான போக்கு என்பதில் சந்தேகமில்லை. சீனா, வடகொரியா போன்ற நாடுகளில் தான், நாட்டில் எல்லாத் துறைகளிலும், இராணுவ ஆதிக்கம் இருக்கும்.

அரசியல் தொடக்கம், அடி மட்டம் வரை அங்கு இராணுவ செல்வாக்குப் பரவியிருக்கும். அதுபோன்ற நிலைக்கு, இலங்கையும் மிகவேகமாக மாறி வருகிறது.

அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில், முன்னாள் இராணுவ அதிகாரியான லெப்.கேணல் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமையானது, கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர், தனக்கு நெருக்கமான, தமக்கு நம்பிக்கையானவர்களின் மூலம், நாட்டை நிர்வகிக்க விரும்புகிறார். தனக்கு எதிராகச் செயற்பட மாட்டார்கள் என்று நம்புகிறவர்களை மாத்திரம், அதிகாரத்தில் அமர்த்துகிறார்.

இதன் மூலம், இராணுவ அதிகாரத்தின் மூலம் ஆட்சி நடத்தும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற பெயரை, அவர் பெறப்போவது, தவிர்க்க முடியாததாகி வருகிறது.

பாகிஸ்தானின் முன்னாள் ஜெனரல்களான ஷியா உல் ஹக், பர்வேஸ் முஷரப் போன்றவர்களும் கூட, மக்களால் தெரிவு செய்யப்பட்டு, இராணுவ ஆட்சியை நடத்தியிருந்தனர்.

ஒரே வேறுபாடு, அவர்கள் இராணுவப் புரட்சியால் ஆட்சியைப் பிடித்து, பின்னர் தேர்தலின் மூலம் தம்மை அதிகாரத்தில் தக்க வைத்துக் கொண்டனர்.

ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாநாயக ரீதியாக ஆட்சியைப் பிடித்து, இராணுவ ஆட்சி மூலம் நாட்டை நிர்வகிக்க முனைகிறார்.

இந்த இரண்டுக்கும் இடையில், பெரிதாக எந்த வேறுபாட்டையும் உணரமுடியாது.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/படைமய-சூழலுக்குப்-பழக்கப்படுதல்/91-251449

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • போட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி? SUPPLIED தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஆய்வக சோதனை முடிவுகள் வெளியாக இன்னும் சில வார காலம் ஆகும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து 350க்கும் அதிகமான யானைகளின் இறந்த உடல்களை தானும் தனது சகாக்களும் கண்டுள்ளதாக டாக்டர் நியால் மெக்கேன் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் பிரிட்டனில் இருந்து இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சேர்ந்தவர். ஒகவாங்கோ டெல்டா பகுதியின் மேல் விமானம் மூலம் பறந்து கண்காணித்த போது யானைகளின் இறந்த உடல்களைப் பார்த்த உள்ளூர் பல்லுயிரின பாதுகாவலர்கள் மே மாத தொடக்கத்திலேயே அந்நாட்டு அரசுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுத்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். Getty Images (கோப்புப்படம்) "அவர்கள் மூன்று மணி நேரம் பறந்தில் 169 யானைகளின் இறந்த உடல்களை கண்டுள்ளனர். இவ்வளவு குறுகிய நேரத்தில் இத்தனை உடல்களை பார்ப்பது என்பது மிகவும் அதிகமானது. அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மொத்தமாக 350க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. வறட்சியுடன் தொடர்பில்லாமல் ஒரே சமயத்தில் இத்தனை யானைகள் உயிரிழப்பது என்பது இதற்கு முன்பு கண்டிராதது," என்றும் அவர் தெரிவித்துள்ளார். "இந்த யானைகளின் உயிரிழப்புக்கு வேட்டையாடப்பட்டதுதான் காரணம் என்று அவற்றின் உடல்களில் தந்தம் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி போட்ஸ்வானா அரசு தெரிவித்தது. விலங்குகளை வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தும் சயனைடை உண்டிருந்தால் யானைகள் மட்டுமல்லாது பிற உயிர்களும் இறந்திருக்கும். ஆனால் இப்போது யானைகள் மட்டுமே உயிரிழந்திருக்கின்றன" என்று கூறுகிறார் மெக்கேன். SUPPLIED கடந்த ஆண்டு இயற்கையாகப் பரவிய ஆந்த்ராக்ஸ் கிருமியால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. ஆனால் இப்போது அதற்கும் அதிகமான வாய்ப்பு இருக்காது என்று அவர் கூறுகிறார். ஆனால் நச்சு மூலமாகவோ நோய் தாக்குதலாலோ இந்த யானைகள் உயிர் இழந்திருக்க கூடும் என்பதையும் முழுதாக மறுக்க முடியாத சூழல் நிலவுகிறது. முகம் கண்ணில்படும்படி யானைகள் கீழே விழுந்து கிடக்கும் நிலை உயிருடன் இருக்கும் யானைகள் வட்ட வடிவமான பாதையில் நடப்பது ஆகியவை அந்த யானைகளின் நரம்பு மண்டலங்களை ஏதோ தாக்குகிறது என்றும் அவர் கூறுகிறார். SUPPLIED யானைகளின் இந்த இறப்புகளுக்கான மூலம் எது என்பதை அறியாமல் இத்தகைய நோய் மனிதர்களுக்கும் பரவும், குறிப்பாக நீர் மற்றும் மண் வழியாகப் பரவும், என்பதையும் மறுக்க முடியாது என்கிறார் அவர். கோவிட் -19 நோய்ப் பரவல் விலங்குகளிடையே பரவி வருவது குறித்து அவர் சுட்டிக்காட்டினார். வன உயிர்கள் பாதுகாப்பை பொறுத்தவரை இது மிகவும் பேரழிவுதான். அதேசமயம், இது மக்களுக்கான பொது சுகாதாரப் பிரச்சனையாக மாறும் வாய்ப்பு உள்ளது என்கிறார் அவர்.     https://www.bbc.com/tamil/global-53260885
    • கொரோனா வைரஸ்: போலிச் செய்திகளால் இந்தியா கொடுக்கும் விலை ஸ்ருதி மேனன் பிபிசி உண்மை கண்டறியும் குழு Getty Images தவறான கண்ணோட்டங்களை அளிக்கக்கூடிய செய்தியோ, போலிச் செய்தியோ, யாரை இலக்காக கொண்டு வெளிவருகிறதோ, அவர்களுக்கு பெரிய ஆபத்தை அதனால் உருவாக்க முடியும். கொரோனா தொற்று பரவிவரும் இந்த காலத்தில், உண்மையான பல செய்திகள், இணையத்தில் சரிபார்க்கப்படாமல் வெளியாகும் ஏகப்பட்ட தகவல்களால் நசுக்கப்படுகின்றன. இது இந்தியாவில் குறிப்பாக முக்கிய பிரச்சனையாக உள்ளது. இவ்வாறு வெளிவரும் தவறான தகவல்கள், சிறுபான்மை இன, மத மக்களுக்கு அதிக பின்விளைவுகளை ஏற்படுத்துவதோடு, இறைச்சி வியாபாரம் போன்ற குறிப்பிட்ட சில தொழிற்துறையையும் பாதிக்கின்றன. பிபிசியின் உண்மை கண்டறியும் குழு, இவ்வாறு வெளியாகும் சில தவறான தரவுகள் எந்த அளவிற்கு உள்ளன என்பதையும், இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள சிலர் குறித்து கண்டறிந்துள்ளது. இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரவ, மதரீதியிலான போலித்தரவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாலும், கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், இது சற்று அதிகமாகவே கவனிக்க வைத்துள்ளது என்று கூறலாம். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில், இந்தியாவின் ஐந்து உண்மைத் தன்னை சரிபார்க்கும் இணையதளங்களால், கண்டறிந்து விளக்கப்பட்ட போலிச் செய்திகளை நாங்கள் எடுத்துக்கொண்டோம். அவை நான்கு தலைப்புகளுக்கு கீழ் வருகின்றன: 1. கொரோனா நோய்ப்பரவல் 2. பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி மத வன்முறைகள் 3. குடியுரிமை திருத்தச் சட்டம் 4. இஸ்லாமிய சிறுபான்மையினர் குறித்து கூறப்படும் கருத்துகள்   இந்தியாவின் உள்ள ஐந்து உண்மைத் தன்மை சரிபார்க்கும் இணையதளங்கள் வெளியிட்டுள்ள 1447 கட்டுரைகளில் கொரோனா நோய் குறித்த தகவல்களை சரிபார்த்தவை மட்டும் 58% இருக்கின்றன. இதில் பெரும்பான்மையானவை, கொரோனாவிற்கான மருந்து, பொதுமுடக்கம் குறித்த புரளிகள் மற்றும் இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என்பது குறித்த கூற்றுகள் ஆகும். ஜனவரி முதல் மார்ச் மாதத்தின் ஆரம்ப காலம் வரை( கொரோனாவின் பரவல் அதிகம் ஆகும் முன்பு), போலிச் செய்திகள் பலவும், இந்தியாவின் குடியுரிமைத் திருத்த சட்டம் குறித்தே பெருமளவில் உள்ளன. இந்தச் சட்டம், இந்தியாவின் அருகாமையில் அமைந்துள்ள மூன்று நாடுகளிலிருந்து (பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கனிஸ்தான்) வரும் அந்நாடுகளில் உள்ள மத சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை அளிக்கிறது. ஆனால், அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கக்கூடாது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று கூறி, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அந்த சமயத்தில் வெளியான பல்வேறு உறுதி செய்யப்படாத தகவல்களும், வடகிழக்கு டெல்லியில் அமைந்துள்ள இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் நடந்த மத வன்முறைகளுக்கு உந்துகோலாக அமைந்தன. தவறாக சித்தரிக்கப்பட்ட காணொளிகள், போலியான புகைப்படங்கள், பழைய புகைப்படங்களைப் பயன்படுத்துதல், வேறு காரணங்களுக்காக நடந்த சம்பவங்களை இந்த வன்முறையின்போது நடந்தவையாக கண்பிப்பது ஆகியவையும் இவற்றில் அடங்கும். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது என்ன நடந்தது? எங்களின் ஆய்வில், ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில், இஸ்லாமியர்களை குறிவைத்து பல தவறான தகவல்கள் வெளிவந்ததை கண்டறிய முடிந்தது. டெல்லியில் நடந்த தபிலிக் ஜமாத் குழுவை சேர்ந்தவர்களின் நிக்ழச்சியில் பங்கேற்ற பல இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு இவை நடந்துள்ளன. அந்த குழுவைச் சேர்ந்தவர்களில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, இஸ்லாமியர்கள் இந்த வைரஸை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்ற ரீதியில் வெளியான பல போலிச்செய்திகள் வைரலாகத் தொடங்கின. இந்திய நாட்டின் பல பகுதிகளில், இஸ்லாமியர்களின் கடைகளில் பொருட்களை வாங்குவதை நிறுத்துமாறு அழைப்புகளும் விடுக்கப்பட்டன. இஸ்லாமியர் ஒருவர் ரொட்டித்துண்டின் மீது எச்சில் துப்புவது போல வாட்சப் செயலியில் காணொளி ஒன்று வெளியான பிறகே, இஸ்லாமியர்களின் வியாபாரங்களை புறக்கணிப்பதற்கான அழைப்புகள் அதிகமாகின என பிபிசியிடம் கூறினார் , தனது உண்மையான பெயரை கூற விரும்பாத ஒரு காய்கறி வியாபாரி இம்ரான். (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) உத்தரப் பிரதேசத்தில் வாழும் இவர், "நாங்கள் வழக்கமாக விற்பனை செய்யும் கிராமங்களுக்குக்கூட காய்கறிகளை எடுத்துச்செல்ல பயந்தோம்," என்கிறார் இம்ரான். இம்ரானும், இந்த பகுதியைச் சேர்ந்த சில முஸ்லிம் வியாபாரிகளும், இந்த நகரில் அமைந்துள்ள சந்தையில் மட்டுமே இப்போது காய்கறிகளை விற்பனை செய்கிறார்கள். டெல்லியில் உள்ள சிறுபான்மையினர் ஆணையம், இஸ்லாமிய மக்களை தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் அனுமதிக்காதவர்களையும், இஸ்லாமியர்கள் வியாபாரம் செய்வதை தடுப்பவர்களை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என சட்டப்படி அறிக்கை வெளியிட்டுள்ளது. "தப்லிக் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடந்தன." என்கிறார் சிறுபான்மையினர் ஆணையத்தில் தலைவர் சஃபரூல் இஸ்லாம். இறைச்சி வியாபாரிகள் மீதான தாக்குதல் கொரோனாவிலிருந்து தப்பிக்க, இறைச்சி சாப்பிடுவதை விடுத்து, காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பொய்யான தகவல் இந்தியா முழுவதும் அதிகம் பகிரப்பட்டது. இத்தகைய தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க இந்திய அரசும் சில பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது. இத்தகைய தவறான செய்திகள், இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள, இஸ்லாமியர் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களையும் பாதித்தது. ஏப்ரல் மாதம், இந்திய அதிகாரிகள் நடத்திய கணக்கெடுப்பின்படி, கோழி இறைச்சி விற்பனையில் நாட்டிற்கு ஏற்பட்ட 130 பில்லியன் (13000 கோடி) ரூபாய் இழப்பிற்கு இந்த தவறான தகவல் காரணமும் பங்களித்துள்ளது என்பதை கண்டறிந்தார்கள். "எங்களிடம் உள்ள கோழிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் அவற்றை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம்" என்றார் மராட்டிய மாநிலத்தின் கோழி இறைச்சி வியாபாரியான சுஜித் பிரபாவ்லே. "எங்களின் வியாபாரம் 80% குறைந்துவிட்டது"  Getty Images "சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவும் என்று வாட்ஸ்சப்பில் வந்த செய்தியை நான் பார்த்தேன். அதிலிருந்து மக்கள் எங்களிடம் இறைச்சி வாங்குவதை நிறுத்தி விட்டார்கள்." என்கிறார் தௌஹித் பராஸ்கர் என்கிற வியாபாரி. மிகவும் பிரபலமான போலித் தகவல்களில் ஒன்று, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இறைச்சி கடைகளை மூடுமாறு கேட்டுக்கொண்டார் என்பதும் ஒன்றாகும். "தங்களுக்கு நம்பிக்கையான ஒரு வழியிலிருந்து தகவல்கள் வரும்போது, அதை ஆராய்ந்து பார்க்காமல் மக்கள் நம்புகிறார்கள்" என்கிறார் ஆல்ட்-நியூஸ் செய்தி நிறுவனத்தின் தலைவர் பிரதிக் சின்ஹா. போலிச்செய்திகளுக்கு பலியானது இறைச்சி வியாபாரத்துறை மட்டுமல்ல. கோழி இறைச்சி விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சியால், முட்டை மற்றும் கோழித்தீவன விற்பனையும் பாதிக்கப்பட்டன. ஜனவரி முதல் ஜூன் வரையில், முட்டையின் விலை டெல்லியில் 30%, மும்பையில் 21% குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கோழித்தீவனம் விற்கும் வியாபாரிகள் கூட, வியாபார வீழ்ச்சி காரணமாக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விலையைவிட 35% குறைவான விலைக்கே அவற்றை விற்கிறார்கள்.   https://www.bbc.com/tamil/india-53260324
    • கட்சிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் : இலங்கைத் தமிழரசுக் கட்சியின்   மகளிர் அணி செயலாளர் போர்க்கொடி (எம்.நியூட்டன்) கட்சியின் தலைமை எடுக்கின்ற முடிவுகளுக்கு நான் கட்டுப்படுகின்றேன். என்மீது நடவடிக்கை எடுப்பது போன்று கட்சியிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி சிறீகாந்த ரூபன் கட்சியின் தலைவருக்கம், செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, என்மீது நீங்கள் மேற்கொள்ள இருக்கின்ற விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் நான் எனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன் என்பதுடன், நீங்கள் எடுக்கும் முடிவினை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக உள்ளேன்.  அதற்கு முன்னராக, எமது கட்சின் சிலர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்ற கோரிக்கையினையும் தங்கள் முன் தாழ்மையுடன் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.  என்னால் இதன்கீழ் பரிந்துரைக்கப்படும் விடயங்களிற்கு தங்கள் சட்ட நடவடிக்கைகளையும் ஒழுக்காற்று விசாரணைகளையும் செய்ய வேண்டும் என்பதனை நான் வெளிப்படையாகவே கேட்டுக் கொள்கின்றேன். சுன்னாகத்தில் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், சுமந்திரனின் அறிவுறுத்தலின் படி மாணிப்பாய் தொகுதி தமிழரசுக் கட்சித் தலைவர் பிரகாஸ் என்பவரால், ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தமிழ் மக்களின் விசுவாசத்திற்குரிய தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவை தரம் தாழ்த்தி ஊடகவியலாளர் வித்தியாதரனைவைத்து விமர்சித்து  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுமந்திரனையும் கூட்டத்தில் இருந்து விமர்சிக்கும் போது கைகொட்டி ஆரவாரம் செய்த சயந்தன், கரிகரன், தயாளன் ஆகியோரையும் விசாரணைக்கு உட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நானும், தமிழ்த் தேசியவாதிகளும் கட்சி உறுப்பினர்களும் தங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.  இது தொடர்பான கருத்தை செல்வா நினைவுத்தூபிக்கு முன்னாள் நடந்த நேர்காணலிலும் நான் பல ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தேன்.  சுமந்திரனால் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட நேர்காணலில் வேதனையடைந்த தமிழ் மக்கள் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் சுமந்திரன் அவர்களை தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்று தங்களுக்கு கொடுத்த அழுத்தத்தை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள்.  அதற்கு தமிழரசுக் கட்சியின் மத்திய குழு நடவடிக்கை எடுக்கும் என மாவை சேனாதிராஜா வழங்கிய உறுதி மொழி இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை உடன் நடைமுறைப்படுத்துங்கள்.  விடுதலைப் புலிகள்தான் ஏகப்பிரதிநிதிகள் என்று மக்கள் கொடுத்த ஆணையினால் தான் 22 பேர் பாராளுமன்றம் சென்றார்கள் என்பதனை யாரும் மறுக்க முடியாது.  இன்று வரை சர்வதேச அங்கிகாரத்துடன் உள்ள மிகப் பெரும் மக்கள் ஆணையை கேள்விக்குட்படுத்தி 75 கள்ள வாக்குகளை நான் போட்டுள்ளேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கூறியது தமிழரசுக் கட்சிக்கு அவமானம் என்பதுடன் பொது வெளியில் எமது மக்கள் ஆணைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  கள்ள ஓட்டுக்கள் போட்டு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 22 பேர் நாடாளுமன்றம் சென்றார்களா? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது? விடுதலைப் போருக்கு பின் எங்கள் பிரசன்னங்கள் கள்ள ஓட்டில் தான் கொண்டுவரப்பட்டதா? இதற்கான விசாரணையும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். தனது நேர்காணலால் தமிழ் இனத்துக்கும், தமிழ்த் தேசியத்திற்கும், தமிழரசுக் கட்சிக்கும் மிகுந்த தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ள சிறிதரனுக்கு எதிராக, கட்சி எடுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை, நிச்சயம் ஒரு முன்மாதிரியான நடவடிக்கையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.  தமிழ்த் தேசியத்திற்கும் விடுதலைக்கும் எதிரான பெண் வேட்பாளர் அம்பிகா சற்குணநாதனை நானும் மிதிலைச் செல்வியும், சரோஜா சிவச்சந்திரனும் பெண்கள் அமைப்புக்களுடாக செய்த போராட்டங்களினால் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கிய போதும் தேசியப் பட்டியலில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவை முதல் இடத்தில் இருந்து தவிர்த்து, வேட்பாளர் கையொப்பமிடும் போது அம்பிகாவை அழைத்து இருந்ததையும் எல்லோரும் அறிவார்கள். ஆனால், எம் இனத்திற்கு எதிரான ஒருவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை தேசியப் பட்டியலின் முதலாவதாக இன்று பெயரிடப்பட்டுள்ள அம்பிகா சற்குணராஜா 2018ம் ஆண்டு ஜெனிவா வரை சென்று எம் இனத்திற்கு எதிராக செயற்பட்டதை மனித உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இவராது பெயர் உள்வாங்கப்பட்டமைக்கு விசாரணையும் சட்ட நடவடிக்கையும் உடனடியாகத் தேவை என்பதையும் தங்கள் முன்கோரி நிற்கின்றேன்.  மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் வேட்பாளராக கொண்டு வரப்பட்ட சாணக்கியனும் தமிழருக்கு விரோதமாக 2010ம் ஆண்டு தேர்தலில் இலங்கை அரச சார்பு சுயேட்சைக் குழுவில் செயற்பட்டவர் என்பதனை உலகமே அறியும்.  நளினி இரட்ணராஜாவின் வேட்பாளருக்கான விண்ணப்பம் மட்டக்களப்பு வேட்பாளர் தெரிவில் இருக்கவில்லை. ஆனால், கொழும்பில் நடைபெற்ற வேட்பாளர் தெரிவில் இந்த விண்ணப்பம் மின்னஞ்சல் ஊடாக கொண்டு வரப்பட்டது என சுமந்திரனின் பிழையான வழிநடத்தல் ஊடாக இவரின் பெயர் உள் நுழைக்கப்பட்டது.  இந்த முறையற்ற விண்ணப்பத்திற்கு யார் உடந்தையாக இருந்தார்கள்? விசாரணை செய்ய வேண்டிய தகுதி வாய்ந்த இடத்தில் இருந்த எமது கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் இந்த விடயத்தில் நேரடியாக தொடர்பு பட்டிருப்பதால் அவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.  சுமந்திரனால் நடத்தப்பட்ட சகல நேர்காணல்கள் கூட்டங்களிலும், நானும் சம்பந்தர் ஐயாவும் தான் வேறு மொழி தெரிந்தவர்கள். சட்டத்தரணிகள் என்பதை பல தடைவைகள் சொல்வதுடன் எந்த நேர்காணலிலும் எங்கள் தமிழரசுக் கட்சி தலைவரை முன்னிறுத்தியது கிடையாது.  இது தலைமையை மலினப்படுத்தும் செயலாகும் எதிர் காலத்தில் இவற்றிற்கு முடிவு வைக்கப்பட வேண்டும். தமிழரசுக் கட்சியில் இருந்து கொண்டே தமிழரசுக் கட்சித் தலைவரை அவமதிப்பதை எப்படி விசுவாசிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?. அதனால்,  தலைமைக்குக்கட்டுப்படும் நாம் உங்களிடம் வைக்கும் மிக முக்கிய கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழரசுக் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றுள்ளது.   https://www.virakesari.lk/article/84974
    • நூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான் இன்று தமிழ் மக்களின் தீர்ப்புக்கு காத்திருக்கிறேன்: கிளிநொச்சியில் விக்கி உரை July 2, 2020 தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஒரு மதிப்பீட்டை செய்து அதன்பின் இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென கோரியுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் தமிழ் மக்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்டுவதாகவும் சென்றமுறை வழங்கிய அதிகாரத்தை அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து சலுகைகளை அனுபவித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாகவும் அமைய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். எனது வாழ் நாளில் நூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான், இன்று தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் ஒரு முக்கியமான தீர்ப்பினை இந்தத் தேர்தலின் ஊடாக வழங்குமாறு எனதருமை மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் பிரசாரக்கூட்டம் நேற்று புதன்கிழமை கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றபோது அதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன் மேலும் பேசுகையில், எமது முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தை நாம் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் மிக்க வட்டுகோட்டை தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தோம். அந்த கூட்டத்தில் நான் ஆற்றிய உரையில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நாம் கைவிடுவதாக அறிவிக்கவில்லை என்று கூறி இருந்தேன். காரணம் சில கட்சிகள் அதனை முற்றிலும் நிராகரித்தது போல் செயற்படுகின்றார்கள். இது பற்றி என்னிடம் கேள்வி எழுப்பிய சிலர் அப்படியானால் தனி நாட்டு கோரிக்கையை நீங்கள் கைவிடவில்லை என்று இதன் மூலம் கூறுகின்றீர்களா என்று கேட்டார்கள். இதுபற்றி நான் சுருக்கமாக விளக்கவேண்டி இருக்கிறது.   தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசங்களான இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய உரிமை அடிப்படையில் பகிரப்பட்ட இறையாண்மையுடன் கூடிய சமஸ்டி தீர்வு ஒன்றினை அடைவதே எனது கட்சி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நோக்கம் என்று தெளிவாகக் கூறி இருக்கின்றோம். அதேவேளை நாம் வட்டுக்கோட்டை தீர்மானத்தினை கைவிடுவதாக அறிவிக்கவில்லை என்று கூறியதும் உண்மைதான். வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது ஒரு வரலாற்று உண்மை. அதனை நாம் எமது வரலாற்று புத்தகத்தில் இருந்து அகற்றிவிட முடியாது.   வட்டுக்கோட்டை தீர்மானத்தில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அதிலே, சமதர்மத் தமிழீழ அரசை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்ற ஒரு விடயம் தவிர ஏனைய அனைத்து விடயங்களும் இன்றும் அவசியமானவை மற்றும் பொருத்தமானவையுங் கூட. எந்த சந்தர்ப்பதிலும் தனி நாடு ஒன்றை அமைக்கப்பாடுபடப்போவதாக நாம் குறிப்பிட்டது கிடையாது. எமது கோரிக்கை சமஸ்டி அரசியல் முறை எனினும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், அவர்களின் சுய நிர்ணய உரிமை, சாதி ஒழிப்பு, சுரண்டல் ஒழிப்பு போன்ற பல விடயங்களை வட்டுக்கோட்டை தீர்மானம் வலியுறுத்துகின்றது. இவற்றை தமிழ் மக்கள் ஒருபோதும் கைவிட முடியாது. ஆகவே தான் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நாம் கைவிட்டதாக அறிவிக்கவில்லை என்று கூறியிருந்தேன்.   இன்றைய தினம் நாங்கள் எம்மக்களுக்காக ஒன்றிணைந்து உங்கள் முன் வாக்கு கேட்க வந்திருக்கின்றோம். எமது கூட்டணியில் வேறு சிலரையும் இணைத்துக் கொள்வதற்காக முயன்றிருந்தோம். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அது இம்முறை கைகூடி வரவில்லை. எதிர்காலத்தில் ஒத்த கொள்கையுடையவர்களை ஒன்றாக இணைப்பதற்காக தொடர்ந்து முயற்சிப்போம். எம்மை மாற்றுத் தலைமை என்று பலர் கூறுகின்றார்கள். ஆனால் மாற்றுத் தலைமை என்று கூறுவது நாம் மாற்றுக் கொள்கை ஒன்றை முன்வைத்திருக்கின்றோம் என்று பொருள் அல்ல. தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகள் எல்லாமே இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி தீர்வினையே கோருகின்றன. தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடசமஸ்டி பற்றியும், வடக்கு கிழக்கு இணைப்பு பற்றியும், இறையாண்மை பற்றியும் கூறி வந்துள்ளது.   ஆனால், அரசாங்கங்களுக்கு முண்டு கொடுப்பதன் மூலமும் இனப்படுகொலைக்கு நீதி கோரி எமது மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களை மழுங்கடிப்பதன் மூலமும் அரசாங்கத்தை குளிரச் செய்து ஏதோ ஒரு தீர்வினை பெற்றுவிடலாம் என்ற வழி வரைபடத்தின் அடிப்படையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வந்துள்ளது. அத்துடன் தேர்தல்கள் முடிவடைந்தவுடன் சமஸ்டி கோட்பாடுகளையும் தாயக கோட்பாடுகளையும் சாத்தியம் அற்றவை என்று கூட்டமைப்பு காற்றில் பறக்க விடுவது வரலாறு. அது உங்களுக்குத் தெரியும். ஆனால், தமிழ் தேசிய கோட்பாடுகளை அடைவதற்கான மாறுபட்ட வழிமுறைகளை முன்வைத்திருப்பதன் மூலமும் அவற்றை பற்றுறுதியுடன் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலமும் மாற்று அணியாக நாம் பரிணமித்துள்ளோம். 6 வருடங்களுக்கு முன்னர் முதலமைச்சராகப் பதவி ஏற்று யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களைச் சந்தித்து, எமது மக்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதைப் பகுத்தறிந்து உணர்ந்துகொண்டேன். இதன்காரணமாக, எத்தகைய ஒரு பெரும் பொறுப்பு எம் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். எத்தனை இடர் வந்தாலும் எமது உரிமைகள் விடயத்தில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களையோ அல்லது காட்டிக்கொடுப்புகளையோ நான் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் தான், கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும் இனப்படுகொலை தீர்மானத்தை கைவிடவோ அல்லது பொறுப்புக்கூறல் விடயத்தில் விட்டுக்கொடுப்புக்களை செய்யவோ நான் தயாராக இருக்கவில்லை. உண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது நீரோ பிடில் வாசித்தது போல்தான் நடந்து கொண்டிருந்தார்கள். பிரச்சினைகளை அப்படியே விட்டு விட்டு தமது சுயலாப சிந்தனைகளில் இலயித்திருந்தார்கள். எனக்கு சிங்கள மக்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் இருந்த தொடர்புகள் காரணமாக நான் அரசாங்கத்துடன் இணைந்து அவர்களுக்கு ஏற்ப தாளம் போட்டிருந்தால் அல்லது அவர்களை நெல்சன் மண்டேலாவுக்கு ஒப்பிட்டு துதி பாடி இருந்திருந்தால் எனது மாகாண சபைக்கு பல மடங்கு நிதியை அவர்கள் ஒதுக்கி இருந்திருப்பார்கள். பல செயற்திட்டங்களை இங்கு முன்னெடுக்க அனுமதி வழங்கி இருப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்திருந்தால், தமிழ் மக்களின் பல தசாப்த கால உரிமை போராட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி பெரும் துரோகத்தை நான் இழைத்திருப்பேன். அதனால் நான் அத்தகைய தவறை செய்யவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மட்டுமல்ல, அப்போதைய பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் நான் பல தடவைகள் இதன் காரணமாக முரண்பட நேர்ந்தது. பல மாத காலம் ரணில் விக்கிரமசிங்க என்னுடன் கதைக்கவில்லை. எனது முகத்தைப் பார்ப்பதை கூட அவர் தவிர்த்து வந்திருந்தார். என்னைப் பொறுத்தவரையில், எனது 5 வருட கால முதலமைச்சர் காலத்தில் முடிந்தளவுக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை சிறப்பாக செய்திருக்கிறேன் என்ற திருப்தி எனக்கு இருக்கின்றது. அரசுடன் நான் முரண்பட்டதாலோ என்னவோ எமக்கு அரசாங்கம் போதிய நிதியை அனுப்பவில்லை. ஆனாலும் நாம் கிடைத்த நிதியை வைத்து சிறப்பாகவே செயற்பட்டிருக்கின்றோம். பல்வேறு திட்டங்களை மேற்கொண்டோம். புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதியைப் பெற்று சில செயற்திட்டங்களை மேற்கொண்டோம். ஆனாலும், அரசாங்கம் எதற்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. உதாரணமாக, நான் கனடா சென்ற போது அங்குள்ள சில அமைப்புக்கள் எமது மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒருதொகை நிதியை சேகரித்தார்கள். ஆனால், அந்த நிதியை நான் எடுத்துவர மறுத்துவிட்டேன். சட்டப்படி அனுப்பப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எனவே அப்பணத்தை இங்கு கொண்டுவருவதில் சிக்கல் இருந்தது. ஏன் என்றால் முதலமைச்சர் நிதியத்தை தாமதித்து, தாமதித்து கடைசியில் அனுமதிக்காது விட்டிருந்தார்கள் அரசாங்கத்தினர். தற்பொழுது நான் உருவாக்கியுள்ள நம்பிக்கை பொறுப்பின் ஊடாக அந்த நிதியைப் பெற நடவடிக்கைகள் எடுத்துள்ளேன். இது பற்றி விபரமாக பின்னர் அறிவிப்பேன். வட மாகாண சபைக்கு முதலமைச்சர் நிதியத்தை அமைத்து புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள பகீரத பிரயத்தனம் மேற்கொண்ட போதிலும் அரசாங்கம் அதனை செய்யவிடாத காரணம் நிதியம் அனுமதிக்கப்பட்டால் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துவிடும் என்று நினைத்துப்போலும். கூட்டமைப்பின் தலைவர்கள் கூட அவ்வாறு நினைத்தார்களோ என்னவோ அந்த நிதியத்தை உருவாக்கும்படி தாங்கள் முண்டுகொடுத்து வந்த அரசாங்கத்திடம் ஒரு போதும் கேட்கவில்லை. முற்றுமுழுதாக எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தாமல் வெறுமனே அரசியல் இலாபங்களை கருத்தில் கொண்டே கூட்டமைப்பு செயற்பட்டு வந்திருக்கின்றது. ஆகவே, மக்களே தயவுசெய்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஒரு மதிப்பீட்டை செய்து அதன்பின் இம்முறை தேர்தலில் வாக்களியுங்கள். எனது வாழ் நாளில் நூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான், இன்று தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் ஒரு முக்கியமான தீர்ப்பினை இந்தத் தேர்தலின் ஊடாக வழங்குமாறு எனதருமை மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்கள் வழங்கும் இந்த தீர்ப்பு எமது தமிழ் மக்களின் அபிலாஷை களை வென்றெடுப்பதற்கு எமக்கு வலுச் சேர்ப்பதாக அமையட்டும்.இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாக அமையட்டும். உங்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்டுவதாக அமையட்டும். நீங்கள் சென்றமுறை வழங்கிய அதிகாரத்தை அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து சலுகைகளை அனுபவித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாக அமையட்டும். எமது உரிமைகளை வென்றெடுக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்பதை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் சொல்லி வைக்கின்றேன் என்றார்.   http://thinakkural.lk/article/50973