Jump to content

முன்னேறுவதை தடுக்கும் தாழ்வு மனப்பான்மை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னேறுவதை தடுக்கும் தாழ்வு மனப்பான்மை

நாம் நம்மை தாழ்வாக நினைக்கத்தொடங்கினால் அந்த எண்ணமானது நம் குடும்பத்திற்கும், வருங்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து கொண்டே போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முன்னேறுவதை தடுக்கும் தாழ்வு மனப்பான்மை

 

பேதம் என்ற தமிழ் சொல்லுக்கு வேற்றுமை என்பது பொருளாகும். உண்மையில் இதற்கான பொருளை நாம் தேடவே தேவையில்லை. அன்றாட வாழ்க்கையில் காலம் காலமாக நம் நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் சூழலே இதற்கான விளக்கத்தை அளிக்கிறது. நிறைய பேர் சாதியினாலோ, மதத்தினாலோ ஏற்பட்டிருப்பது தான் பேதம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக சாதியும், மதமுமே நமது நாட்டில் உள்ள மிகப்பெரிய பேதமாகும். ஆனால், அதையும் தாண்டி நிறைய பேதங்கள் உள்ளன.

ஆண், பெண் என்ற பேதம், முதலாளி, தொழிலாளி என்ற பேதம், பணக்காரன், ஏழை என்ற பேதம், படித்தவன், படிக்காதவன் என்ற பேதம், மொழிகளுக்குள் பேதம், மண்ணுக்குள் பேதம் என்று கூறிக்கொண்டே போகலாம். வித்தியாசம் என்று பொருள் கொண்ட பேதமானது, நம் மக்களால் ஒருவித வெறுப்பு தன்மையை ஏற்படுத்துகிறது. காலம் காலமாக எந்த ஒரு பேதமாக இருந்தாலும், அதை ஒழிக்க வேண்டும், அதை உருவாக்கிக்கொண்டிருப்பவர்களின் கருத்தை மாற்றி அவர்களை திருத்த வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறோம். இது மிகவும் சரியான கருத்து என்று வைத்துக்கொள்வோம். இம்மாதிரியான முற்போக்கு கருத்துக்களை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறிவிட முடியாது. இன்று ஒரு கூட்டம் திருந்துகிறது என்றால் நாளை வேறு ஒரு கூட்டம் உருவாகும். சாதியை ஒழிப்போம், மதத்தை ஒழிப்போம், முதலாளித்துவத்தை ஒழிப்போம் என்று போராடிக்கொண்டும், கூப்பாடு போட்டுக்கொண்டும் இன்னும் எத்தனை நாளைக்கு செய்து கொண்டிருக்கப்போகிறோம்.


இவை அனைத்தும் மற்றவர்களை திருத்தும் செயல் என்று பார்த்தால், பேதத்திற்கு உள்ளாகும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்னைவிட நீ தாழ்ந்தவன் என்று ஒருவன் கூறினால், உடனே மனம் நொந்து தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாதலை நிறுத்த வேண்டும். பார்க்கும் வேலையில் என்னை விட நீ தாழ்ந்தவன் என்றாலும், இனத்தில் நீ என்னைவிட தாழ்ந்தவன் என்றாலும், பணத்தில் நீ என்னை விட தாழ்ந்தவன் என்றாலும், செருக்கோடு எண்ணுங்கள், “நீ யார் என்னை தாழ்ந்தவன் என்று கூறுவதற்கு?” என்று. அவர்கள் உயர்ந்தவர்கள், நாங்கள் தாழ்ந்தவர்கள். அதனால் நாங்கள் போராடுகிறோம் என்று கூறி பல வருடங்களாக பேதத்தில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறோம். உயர்ந்தவர்கள் என்று கூறுவதில் தான் பெருமை, கவுரவம் என்று மார்தட்டிக் கொண்டிருப்பவர்களை ஒரு பொருட்டாகவே எண்ணக்கூடாது.

தான் இருக்கும் இடமும், பார்க்கும் வேலையும், பேசும் மொழியும், முன்னோர்கள் வழி வந்த பரம்பரையும் மிகச் சிறந்தது என்று ஒவ்வொருவரும் மனதில் நினைக்கத் தொடங்கவேண்டும். அதை விடுத்து கொஞ்சமும் தேவையற்ற பேதத்தினால் உருவான தாழ்வு மனப்பான்மையை மனதிற்குள் வளர்க்கக்கூடாது. இதற்கான எடுத்துக்காட்டாக மேலை நாட்டு மக்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். அங்கே மத பேதமும், தொழில் பேதமும், இதர பேதங்களும் இல்லை என்று கூறவில்லை. அங்கேயும் இதுபோன்ற வேற்றுமை உணர்வுகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அங்கு வாழும் மக்கள் அதை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை நாம் பார்க்கவேண்டும். அங்கு முதலாளியானாலும், தொழிலாளியானாலும், ஆணானாலும், பெண்ணானாலும், யாராக இருந்தாலும் சக மனிதர்கள்தான். ஒருவரை விட ஒருவர் பெரியவர் இல்லை என்ற எண்ணம் பெரும்பான்மையான மக்களிடத்தில் காணப்படும்.

ஆக, என்று நாம் நம்மை தாழ்வாக நினைக்கத்தொடங்கினால் அந்த எண்ணமானது நம் குடும்பத்திற்கும், வருங்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து கொண்டே போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வேற்றுமை உணர்வினால் தன்னை இழிவுபடுத்துபவர்களுக்காக முக்கியத்துவம் அளிக்காமல், அவர்கள் முன்பு வாழ்க்கையில் முன்னேறி வாழ்ந்து காட்டுதலே பெருமை சேர்க்கும் செயலாகும். முன்னேறுவதற்கான பாதையை உருவாக்க வேண்டுமே தவிர, ஏற்கனவே முட்கள் நிறைந்து காணப்படும் சகதியான பாதைக்கு, தான் போவது மட்டுமில்லாமல் உடன் இருப்பவர்களையும் சேர்த்துக்கொண்டு வீணாதலை நிறுத்த வேண்டும். நான் முட்களை நீக்கி அந்த பாதையில் பூக்களை நிரப்புவேன் என்று போர்க்கொடி தூக்கிக்கொண்டு இருந்தால், தன்னுடைய நேரமும், உழைப்பும் வீணாகுமே தவிர முன்னேற்றத்தை பார்ப்பது மிகவும் கடினமானது.

உனக்கான தனித்துவ பாதையை உருவாக்கி உன்னைச் சேர்ந்த மக்களிடத்தில் நீ கொடுத்தாயானால், அந்த நல்வழியை பின்பற்றி ஒரு பெரும் அமைதியான சமூகமே உருவாதலை கட்டாயம் பார்க்க முடியும். நான் பெரியவன் என்று ஒருவன் கூறினால், நான் உனக்கு எந்த விதத்திலும் சிறியவன் இல்லை என்பதை வாயால் கூறுவதை காட்டிலும், செயலால் காட்டுவதே தனக்குத்தானே உற்சாகமூட்டும் வழியாகும். வேற்றுமையை உடைத்து முன்னேறி வாழ்ந்து காட்டும் கதையம்சமுள்ள திரைப்படங்களைப் பார்த்து விசில் அடித்து கொண்டாடி மகிழும் மக்களால், தங்களுடைய வாழ்வில் அதுபோன்று வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏனோ எழுவதில்லை.

தான் முன்னேறுவதை வேறு ஒருவன் எவ்வித பேதத்தினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. இக்காலகட்டத்தில் முன்பைவிட சூழலும், வாய்ப்புகளும் நிறைய உள்ளன. அதை நல்ல முறையில் பயன்படுத்தி தனக்கென தனியான ஒரு அடையாளத்தை அனைவரும் மேற்கொள்ள தொடங்க வேண்டும். கூட்டத்தினரோடு இருக்கும்பொழுது எவருக்கும், நீ தாழ்ந்தவன் என்று பிறர் சொல்லும் சொல்லைக் கேட்டு தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதில்லை. ஏனென்றால் என்னைப் போன்று இங்கு ஒரு பெரிய கூட்டமே உள்ளது. நான் தனி ஆள் அல்ல என்ற எண்ணமும், பலமும் தானாக உருவாகிறது. ஆனால் இதே சூழ்நிலை தனிப்பட்ட முறையில் நிகழும் பொழுது பலவீனமாகி மனம் நொந்து துவண்டு போகும் நிலை ஏற்படுகிறது.

அங்கு தான் நிலை தடுமாறாமல், சூழ்நிலைகளால் இழுக்கப்பட்டு தைரியம் இழக்காமல் திமிரோடு நிற்கவேண்டும். முன்னேற்றம் ஒன்றே நான் பெரியவன் என்று காட்டும் என்ற வைராக்கியத்தை மனதில் கொள்ள வேண்டும். இதையே வேதமாக ஏற்று பின்பற்ற தொடங்க வேண்டும். எந்த இடத்தில் கூனிக்குறுகி மனம் புண்பட்டதோ, அதே இடத்தில் தலைநிமிர்ந்து என்னுடைய நிலை இதுதான் என்று மிடுக்கோடு கூற வேண்டும். பிறருடைய பேதச் செருக்கை அடக்க வேண்டும் என்ற எண்ணத்தை காட்டிலும், தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை அறவே ஒழித்து சமூகத்தில் நிற்பதே மாபெரும் வெற்றியாக கருதப்படும். பேதம் தீக்குச்சி என்றால், உரசியவுடன் பற்றிக்கொள்ளும் காய்ந்த சருகல்ல நாம். முளைத்து, துளிர்த்து, செழித்து, வளர்ந்து, மரமாகும் விதை நாம். வளர்வோம். நிமிர்வோம்.

 

https://www.maalaimalar.com/health/womensafety/2020/06/06151929/1586233/Inferiority-that-prevents-them-from-progressing.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.