Jump to content

நல்லிணக்கமென்றால் நல்லிணக்கம், கடும்போக்கென்றால் கடும்போக்கு


Recommended Posts

நல்லிணக்கமென்றால் நல்லிணக்கம், கடும்போக்கென்றால் கடும்போக்கு

 
image_1476468605-0ccab3bfba-620x300.jpg?

அரசியலுக்காக நடிக்க விரும்பாத ஒரு அரசியல் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ. நல்லிணக்கத்துடன் அணுகினால் அவர் நல்லிணக்கம் காட்டுவார். கடும்போக்கில் அணுகினால் கடும்போக்கையே கடைப்பிடிப்பார். 

இது நானும் பிரபாகரனும் அவரிடம் கண்ட அனுபவங்களென டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஐம்பதாண்டு அரசியல் வாழ்வின் நிறைவு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்-,

நல்லிணக்கம் என்பது சரணாகதி அடைதல் அல்லது அடிமையாக இருத்தல் என்பதல்ல. எமது நியாயமான கோரிக்கைகளை விட்டுக் கொடுகாமல், நாம் நாமாகவே இருந்து கொண்டு எமது அரசியல் பலத்தில் இணக்கமாகப் பேசி இழந்தவற்றை பெறுதலேயாகும். 

அதற்கான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்திலும் சக தமிழ் தரப்பால் அதிகமாக இழக்கப்படிருக்கின்றன. 

2005 ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு என்ன சொல்ல வேண்டுமென்று என்னிடம் அவர் கேட்டிருந்தார். 

நான் அவருக்கு சொன்னபடி, யுத்தத்தை நிறுத்தி பிரச்சினைக்கு தீர்வுகாண புலிகளின் தலைவர் பிரபாகரனோடு பேசுவேன் என மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக கூறினார். அவர் அப்படிக் கூறியும் அது நடக்கவில்லை. அது யார் தவறோ? எமது மக்களுக்கு தெரியும். 

 

13 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுமாறு கேட்டோம். கிழக்குக்கு முதலிலும் வடக்கிற்கு பின்னரும் மாகாண சபை தேர்தல்களை நடத்தி அதை தமிழர் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார். 

சேற்றுக்குள் புதைந்திருந்த 13ஆவது திருத்தச்சட்டத்தை, மாகாண சபை முறைமையை வெளியே இழுத்து வந்து நகர வைத்தார். அதுமட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதி கூடிய நிதியை ஒதுக்கியிருந்தார். 

சர்வகட்சி மாநாட்டின் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணலாம் வாருங்களென அதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கி துணிச்சலோடு அழைத்தார். 

இன்று மஹிந்தவால் மட்டுமே தீர்வுகாண முடியுமென கூறும் சக தமிழ் தரப்பினர் எவரும் அப்போது இணங்கி வர மறுத்து விட்டனர். 

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே நான் அதிகப்படியான அபிவிருத்திகளை முன்னேடுத்திருந்தேன். கடும்போக்கானவரென்று பலராலும் கருதப்படும் அவரை அணுகி பல்லாயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்தேன். அறிவியல் நகரை மீட்டு அங்கு பொறியியல் பீடமும் விவசாய பீடமும் அமைத்தேன். 

இவையனைத்தையும் அவர் ஆட்சியில் என்னால் ஆற்ற முடிந்திருக்கின்றதென்றால் யதார்த்த வழிமுறைக்கு சகலரும் ஒத்துழைத்து வந்தால், தேசிய பிரச்சினைக்கும் தீர்வு காணலாம்.   இதுவரைகால ஆட்சியாளர்களில் மிக சக்தி வாய்ந்த ஒரு அரசியல் தலைவர். அவருக்கு நடிக்கத் தெரியாது. வல்லமையானவர். ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை. வெளிப்படையாகவே கூறிவிடும் உண்மை மனிதர். இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் ஆணையை பெற்றவர். 

இவரது ஆட்சியிலேயே அரசியல்தீர்வு உட்பட சகல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். அவரது ஐம்பது ஆண்டு கால அரசியல் வாழ்வு அதையும் கடந்து நீண்டு செல்ல வாழ்த்துகிறேனென தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாம் நாமாக இருந்து எம் மீது நம்பிக்கை கொண்டால் வல்லமை மிக்கவர்களை வைத்தே நாம் எதையும் சாதிக்க முடியுமென்றும் தெரிவித்தார். 

http://www.vaaramanjari.lk/2020/06/07/செய்திகள்/நல்லிணக்கமென்றால்-நல்லிணக்கம்-கடும்போக்கென்றால்-கடும்போக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த அடிமை தொடங்கீற்றார். யார் முழு  அடிமை என்கிற போட்டி இவர்களுக்குள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதோ நாங்கள் எல்லாம் நேற்று பிறந்து இன்று அரசியல் செய்தி வாசிக்கிறம் என்ற நினைப்பு நம்ம மத்திய அரசு பிர்திநிதிகளுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால்.. போர் என்றா போர்.. சமாதானம் என்றால் சமாதானம் என்ற ஜே ஆருக்கு எதிராக எதற்கு  அப்பாவி அமெரிக்க.. அலன் தம்பதிகளை கடத்தி இவர் போர் தொடுத்தார்...???!

இவருக்கு போக்கிடம் இல்லை.. சிங்களத்திடம் சொந்த இனத்தைக் காட்டிக்கொடுத்துச் செய்வதை அரசியல் என்று சொல்லித் திரிகிறார். 

வேடிக்கை என்னவென்றால்.. இவருக்கு ஒவ்வொருமுறையும் வாக்குப் போட்ட தீவக மக்கள் தான் யாழில் மிகவும் வறுமைக்கோட்டில் வாழும் மக்களாக உள்ளனர். அதிலும் அனலைதீவு மக்களுக்கு ஒரு வங்கி கூட இல்லை. இதுதான் இவர் காட்டிய அபிவிருத்தி...!!!

இவருடைய வால்பிடித்தனத்தால்.. காட்டிக்கொடுப்பால்.. சிங்களப் படைகளாலும்.. இவரது சகாக்களாலும்.. குண்டு வைத்து தகர்க்கப்பட்ட எத்தனை வீடுகளை தீவகத்தில் இவர் மீள் நிர்மாணித்துக் கொடுத்தார்..??!

விட்டால்.. அளந்து கட்டுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அவர் யதார்த்த வாதியாகத் தெரிகிறார்" என்று மகிந்த பற்றி பிரபாகரன் மாவீரர் தின உரையில் சொன்னாரல்லவா?

Link to comment
Share on other sites

முண்டுகொடுத்து பொய்களை அள்ளிவீசி பிழைப்பு நடத்தும் பலர் தேர்தல் காலமென்பதால் புற்றீசல் போல வெளிப்படுவார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

"அவர் யதார்த்த வாதியாகத் தெரிகிறார்" என்று மகிந்த பற்றி பிரபாகரன் மாவீரர் தின உரையில் சொன்னாரல்லவா?

அதைத்தான் இவர் கூறுகின்றார் என்கிறீரா 🤔

ம்ம்ம்ம்ம்ம்.. இருக்கலாம். 🤔

பிள்ளைபூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் எண்டு யார் கண்டது 😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி இலங்கையில் நடந்தால் ஒருத்தருக்கும் ஒரு பிரச்னையும் வராது ஒன்றரை லெட்ச்சம் பேரை கொன்று இனவழிப்பு செய்துவிட்டு அப்படி ஒன்று நடக்கவே இல்லை சொல்லும் சிங்கள கூட்டத்திடம் எதிர்பார்க்கும் இவரை என்னவென்று சொல்வது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு நல்லிணக்கமும் தெரியவில்லை. கடும் போக்கும் தெரியவில்லை. இரண்டுக்கும் நடுவில் நின்று நக்கிப்பிழைக்கிறார். அதற்கு இப்படி ஒரு விளக்கம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.