Sign in to follow this  
பிழம்பு

கரோனா பிளாஸ்மா சோதனை சிகிச்சையில் மதுரை அரசு மருத்துவமனை சாதனை: தீவிர நோய்த் தொற்றில் இருந்த 54 வயது நோயாளி மீட்

Recommended Posts

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 கரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கியுள்ளது. அந்த நோயாளிகள் உடல்நிலை நல்ல நிலையில் முன்னேற்றம் அடைவதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் மூலம் பெறப்பட்ட பிளாஸ்மா மூலம் மற்ற கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிளாஸ்மா சிகிச்சை முறை கேரளாவில் பின்பற்றப்பட்டது.

இந்த முறையில் ஏராளமான நோயாளிகள் குணமடைந்தனர். தற்போது இந்த சிகிச்சை தமிழகத்திலும் கடைபிடிக்கப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 நோயாளிகளுக்கு இந்த பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. அந்த நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ‘டீன்’ சங்குமணி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், "கரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும்.

இந்த அடிப்படையில் கரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகள் உடலில் செலுத்தப்படும்போது, அவர்கள் உடலில் உள்ள கரோனா வைரஸை எதிர்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும். அந்த அடிப்படையில் தற்போது பரிசோதனை முறையில் முதலில் 54 வயது நோயாளி ஒருவருக்கு சிகிச்சை வழங்கினோம்.

இவர் பைபாஸ் சர்ஜரி செய்து கரோனா நோய் தோற்றால் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டார்.

இவரை 30 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து 21 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் செலுத்தி உள்ளோம். இவரது உடல்நிலை நல்லநிலையில் உள்ளது. இதையடுத்து மற்றொருவருக்கும் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கி உள்ளோம்" என்றார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/558473-corona-plasma-treatment-saves-a-life-madurai-gh-dean-1.html

Share this post


Link to post
Share on other sites

மதுரையில் முதல்முறையாக கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை

மதுரையில் முதல்முறையாக கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளது.

மதுரையில் முதல்முறையாக கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை

கொரோனா வைரசை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிளாஸ்மா தெரபி என்ற சிகிச்சையை பரிந்துரை செய்தது. பிளாஸ்மா தெரபியில், கொரோனா வைரசிலிருந்து மீண்ட நோயாளியின் ரத்தத்தில் இருந்து எடுத்த நோய் எதிர்ப்பு திறனை பயன்படுத்தி கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது பிளாஸ்மா சிகிச்சை ஆகும்.

 
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, ரத்த அணுக்களும் அதிகரிக்கிறது. கொரோனா வைரசை எதிர்த்து போராட உடல் தயாராகிறது. தமிழகத்திலும் இந்த முறையை சோதனை செய்வதற்கு ஒரு சில மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதில் மதுரை அரசு மருத்துவமனையும் ஒன்று. அதன்படி ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நோயாளிகளிடம் இருந்து பிளாஸ்மா பெறுவதற்கான முயற்சிகளில் மதுரை மருத்துவமனை நிர்வாகத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

பிளாஸ்மா சிகிச்சை

இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேரிடம் இருந்து தலா 500 மி.லி. பிளாஸ்மா சேகரிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கியில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது மதுரையை சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.

அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்ததை தொடர்ந்து அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்ய டாக்டர்கள் குழு முடிவு செய்து, அந்த முதியவரிடம் சம்மதம் வாங்கினர். இதனைத் தொடர்ந்து அவருக்கு 200 மி.லி. பிளாஸ்மா நேற்று உடலில் செலுத்தப்பட்டது. இதுபோல் மீண்டும் அவருக்கு நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதற்காக இந்த பிளாஸ்மா உடலில் ஏற்றப்பட இருக்கிறது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மதுரையை சேர்ந்த 72 வயது முதியவருக்கு உடலில் பல பிரச்சினைகள் இருந்ததால் அவருக்கு கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தது. இதனால் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க முடிவு செய்தோம். அதன்படி அவருக்கு முதல் கட்டமாக பிளாஸ்மா உடலில் ஏற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். இருப்பினும் அவர் தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார். மதுரையில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வது இதுவே முதல் முறை” என்றனர்

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/09061627/1596600/Plasma-therapy-for-a-firsttime-Corona-patient-in-Madurai.vpf

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this