Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் – மாவை அழைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Mavai-Senathirajah-1.jpg

விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் – மாவை அழைப்பு

விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலைப்புலி போராளிகள் பலர் என்னோடு சந்திக்கவேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர். அந்தவகையில் இன்று புனர்வாழ்வுபெற்ற புலிகள் சார்ந்த போராளிகளை வவுனியாவில் சந்தித்திருந்தோம்.

தாங்கள் கடந்த காலங்களில் வறுமையிலும், எதிர்காலமற்ற நிலையில் இருப்துடன், கூட்டமைப்பு தங்களுக்கு உதவவில்லை என்ற கருத்தை அவர்கள் முன்வைத்திருந்தனர். எதிர்காலத்திலாவது கூட்டமைப்பு தங்களுக்கு உதவவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மக்களுடைய வாக்குகள் பிளவுபடாமல் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காக வருகின்ற தேர்தலில் ஆதரவு வழங்குவதாக அவர்கள் எமக்கு கூறியிருக்கின்றார்கள்.

இறுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கட்சி என்ற பெயரில் என்னிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தனர். அப்படி ஒரு கட்சியோடு பேச வேண்டும் என்ற கோரிக்கை என்னிடம் விடுவிக்கபடவில்லை. போராளிகள் தரப்பில் பேசப்போவதாகவே எனக்கு தெரிவித்திருந்தார்கள்.

எதிர்காலத்தில் போராளிகள் எங்களோடு இணைந்து செயற்பட வேண்டும் என்ற வகையில் பேசுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தேன். எனவே இந்த சந்திப்பானது போராளிகள் என்ற வகையில்தான் இடம்பெற்றது.

கட்சி சார்பாக அவர்கள் தந்திருக்கும் கோரிக்கை தொடர்பாக தமிழரசு கட்சியிடத்திலும், கூட்டமைப்பின் தலைவர்களோடும் பேசிய பின்னர் தான் பதில் தர முடியும் என்று அவர்களிடம் சொல்லியிருக்கின்றேன்.

அத்துடன் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள் அமைப்புகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். அதன் மூலம் ஒரு பொது வேலைத்திட்டத்தை நோக்கி செயற்பட வேண்டிய எதிர்காலத்தை கொண்டிருக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஒவ்வொரு தேர்தல்களிலும் முன்வைத்த கோரிக்கைளின் அடிப்படையில் செயற்பட்டு வந்திருக்கின்றோம். அந்த தேர்தல் அறிக்கைளின் அடிப்படையில் தமிழ் மக்கள் எம்மை தமது பிரதிநிதிகளாக அங்கிகரித்து வந்திருக்கின்றனர். நாம் இதுவரை செய்த விடயங்களையும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் எமது தேர்தல் அறிக்கையில் தெரிவிப்போம்.

கடந்த ஆட்சியில் கூட புதிய அரசியல் அமைப்பின் மூலம் தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வுவழங்கப்படவேண்டும் என்பது முதல் போரினால் பாதிக்கபட்ட எமது பகுதிகளை பொருளாதார ரீதியாக மீளகட்டி எழுப்பவேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்திருந்தோம்.

அதில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த நெருக்கடியான காலப்பகுதிகளிலும் எமது மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி, எதிர்கால அரசியலை தீர்மானிப்பதில் பல புதிய அணுகுமுறைகளை கடைப்பிடித்துவருகின்றோம். அதனை மக்களுக்க நாம் அறிவிப்போம்.

இந்தநாட்டில் ஒரு இனப்பிரச்சினை இருந்தது என்பதை பற்றி குறிப்பிட விரும்பாத மனநிலையில் புதிய ஜனாதிபதி இருக்கும் நிலையிலும் அவர்களோடும் நாம் பேசவேண்டிய தந்திரோபாயங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம்.

தேர்தல் முடிந்த பின்னர் ஏனைய புலம்பெயர் அமைப்புகளோடும் கட்சிகளோடும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தீர்மானங்களை எடுப்போம்” என்றார்.

http://athavannews.com/விடுதலைப்புலிகள்-என்ற-பெ/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம் சும் புலிநீக்கம் என்று சொல்ல இவர் புலி புலி என்று கூவுகிறார். இவர் கூட்டமைப்பில் இல்லையோ?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இது மாவையின்ர தனிப்பட்ட கருத்தென்று சம்பந்தர் கூறாதவரை Ok தான். 😏

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

சம் சும் புலிநீக்கம் என்று சொல்ல இவர் புலி புலி என்று கூவுகிறார். இவர் கூட்டமைப்பில் இல்லையோ?

8 minutes ago, Kapithan said:

இது மாவையின்ர தனிப்பட்ட கருத்தென்று சம்பந்தர் கூறாதவரை Ok தான். 😏

 

நான் நினைக்கிறன் கூத்தமைப்புக்குள்ளை எங்கையோ புகைய வெளிக்கிட்டுதெண்டு...:cool:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் தங்களை தக்க வைக்க முயற்சி எடுக்கிறாப்பல தெரியுது.

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, satan said:

ஒவ்வொருவரும் தங்களை தக்க வைக்க முயற்சி எடுக்கிறாப்பல தெரியுது.

அதுதான் உண்மை நிலைமை. இந்தமுறை தமிழ் தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன சமபலத்துடன் உள்ளது போல தெரிகிறது. எனவே தமது இருப்பை நிலைநிறுத்த வேண்டி உவையள் எதுவும் செய்வினம்  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்ப சொற்ப சலுகைகளும் சுயலாபங்களுக்கும் தமிழின படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுப்பவர்கள் தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றுவதற்கு அறிக்கைகள் விட்டுப் பார்க்கிறார்கள்.

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சும்தான் அதற்கு தலைவர் என்று நாளைக்கு அறிக்கையும் வரலாம்..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாவையரும் கொஞ்சம் திருவாய் மலர்ந்து அப்ப அப்ப ஏதாவது சொல்லி தானும் இருகிறன் என்பதை காட்ட முயற்சிக்கிறார். ஆனாலும் தானும் ஒரு சராசரி அரசியல்வாதிதான்  என்பதை இந்த மாதிரி காட்டியிருக்ககூடாது.

ஊருக்குதான் உபதேசம் எனக்கில்லை என்பதைபோல மாவை ஒற்றுமைக்கு அறைகூவல் விடுப்பது சந்தர்ப்பவாத கேலிகூத்து. தமிழினத்துக்கென பொதுவான ஒரு வேலைத்திட்டம் தேவை என்பதை உணராத இந்த காவோலை அரசியல்வாதிகள் இனத்தை பிளவுபடுத்தி வைப்பதிலேயே குறியாயிருந்து சுயலாப அரசியல் செய்துகொண்டிருப்பார்கள்.

இப்போது தேர்தல் நெருங்கிவரவர வாக்கு வங்கியை பலப்படுத்துவதை தவிர வேறு எந்த எண்ணமும் இவர்களுக்கு இல்லை. இவர்களின் அரசியல் அகராதியில் ஒற்றுமை என்ற சொல்லே இல்லை என்பதுபோல இதுவரை நடந்து காட்டிவிட்டு இப்போது புலிகளின் கட்சிகள் அமைப்புகள் எல்லோரும் ஒற்றுமையாய் சேர்ந்து கதைக்க வாருங்கள் என்று கேட்பதும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட  போராளிகள் விடுத்த கோரிக்கையை இவர் சரிவர புரிந்துகொள்ளவில்லை என்பதுடன் போர் ஓய்ந்தபின் சிக்கலான வாழ்க்கைபோராட்டத்தில் தள்ளப்பட்டிருக்கும் போராளிகளை வைத்தே ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்க்கிறார்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Dfgs.jpg புள்ளடி போட்டால் பாற்கடலுக்கே கனைக்சன குடுப்பியள் அப்படித் தானே.? 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • spb உடல் தாமரை பாக்கத்தில்.. இலட்ச கணக்கான மக்களின் அழுகை குரல்  
    • இலங்கை கபடி அணியின் எட்டு பயிற்றுவிப்பாளர்களில் 2 தமிழர்கள்!       சர்வதேச ரீதியில் நாடுகளுக்கு இடையே இடம்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை கபடி அணியினை பயிற்றுவிக்கும் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இரு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கபடி போட்டிகளில் பங்கு பற்றி பல சாதனைகளை நிலைநாட்டிய மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் துரைசிங்கம் மதன் இலங்கை கபடி ஆண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, துரைசாமி மதன்சிங் இலங்கை கபடி பெண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய கபடி அணிக்கான பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த வீரர்கள் பாகிஸ்தானில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை கபடி அணியின் சார்பாக கலந்துகொண்டு வெங்கலப்பதக்கத்தினை பெற்றுக்கொடுத்ததோடு, பல விளையாட்டு வீரர்களை பயிற்றுவித்து தேசிய சர்வதேச ரீதியில் பல சாதனைகளை நிலைநாட்டவும் காரணமாயிருந்துள்ளனர். இலங்கையை சேர்ந்த 8 வீரர்கள் இவ்வாறு தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுள் தெரிவு செய்யப்பட்டுள்ள இரு தமிழர்களும் அண்மையில் அம்பாறையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண வர்ண கௌரவிப்பு விழாவில் சிறந்த பயிற்றுவிப்பாளர்களாகவும் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.   https://newuthayan.com/இலங்கை-கபடி-அணியின்-எட்ட/
    • நாடாளுமன்றில் மக்களின் பிரச்சினைகளை அதிகம் பேசுகிறார் டக்ளஸ்..! நாடாளுமன்றத்தில் தினந்தோறும் ஏராளமான மக்கள் நலன் சார் பிரச்சினைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம் பெற்ற நிதி அறவீடுகள் தொடர்பான விவாதத்தின் போது கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்தனினால் குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் - " பொது மக்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றில் கட்சித் தலைவர்கள் வெளிப்படுத்துவதற்கு எந்தவிதமான வரையறைகளும் கிடையாது " எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தினமும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதாகவும் சுட்டிக்காட்டினார். https://jaffnazone.com/news/20618
    • Partheepan Pasi (Poem) | பார்த்தீபன் பசி 33 (கவியோசை) Filmed by OsaiFilms  
    • திலீபனை விமர்சிக்க டக்கிக்கு என்ன அறுகதை இருக்கின்றது? – போராளிகள் கட்சி கேள்வி   எமது மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை நீத்த ஒரு தியாகிக்கு டக்ளஸ் போன்ற அரசின் அடிவருடிகள் விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மக்களுக்காகப் போராடிய ஒரு அமைப்பினையும் அதன் தலைவரையும் அவதூறு கதைப்பதென்பது தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார். நாடாளுன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் விடுதலைப் புலிகள் தொடர்பிலும், திலீபன் தொடர்பிலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரையும் அதன் போராளிகளையும் பற்றிக் கதைப்பதற்கு டக்ளஸ் தேவானந்தாவிற்கு என்ன அருகதை இருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்களுக்காகப் போராடிய ஒரு அமைப்பினையும் அதன் தலைவரையும் அவதூறு கதைப்பதென்பது தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும். டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்க்கை வராலாறுகள் தற்போது மக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படவில்லை என்பதால் இவரால் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் அனைத்தையும் மக்கள் மறந்து விட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இவ்வாறு கதைத்தாரோ தெரியவில்லை. அவ்வாறு அவர் நினைப்பாராயின் அது அவரின் வரலாற்றுத் தவறாகும். இனத்திற்கான துரோகிகளை மக்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள. டக்ளஸ் தேவானந்தாவால் சொல்லப்பட்ட விடயங்கள் ஒரு சிங்களப் நாடாளுமன்ற உறுப்பினரால் சொல்லப்பட்டிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் எம்மினத்தில் இருந்து வந்து எம்மினத்தை பெரும்பான்மைக்கு அடிபணிய வைக்கின்ற அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கின்ற டக்ளஸ் போன்ற புல்லுருவிகள் சொல்வதென்பது. அவருக்கு வாக்களித்த மக்களின் வாக்கினை கேள்விக்குட்படுத்துவனாக அமையும். இதற்காகவா மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள். போரினால் பாதிப்புற்ற எமது இனம் இவர்கள் காட்டிய அபிவிருத்தி மாயையை நம்பி ஏமாந்து சற்று அதிகப்படியான வாக்குகளை வழங்கி விட்டது. அதனை வைத்து வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைத்து விடலாம் என்று நினைக்கின்றார்கள் போல. எமது மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை நீத்த ஒரு தியாகிக்கு டக்ளஸ் போன்ற அரசின் அடிவருடிகள் விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மக்களும் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறானவர்களை தேர்ந்தெடுத்த எமது மக்கள் தான் இது குறித்து வருத்தப்பட வேண்டும்” – என்று தெரிவித்தார். (150) https://newuthayan.com/திலீபனை-விமர்சிக்க-டக்கி/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.