Jump to content

தமிழகத்தில் தீவிரமாகும் கோரோனோ.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தீவிரமாகும் கோரோனோ.

கோரோனோ தீவிரமாக பரவாத நேரத்தில், அவசரப்பட்டு லோக்கடவுன் அறிவித்து, இப்பொது வேகமாக பரவும் நேரத்தில், லோக்கடவுனை நீக்கி, நோய் தீவிரமாக பரவுவதால், தமிழ்நாட்டில் பரபரப்பும், பீதியும் நிலவுகின்றது.

திமுக MLA அன்பழகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், அரசு தேர்வுகள் ஆணைய இயக்குனர் கொரோன நோயினால் பாதிக்கப்பட்டுள்தாக அறிவிக்கப்படுள்ளது. இன்று 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்களின் முதலாம், இரண்டாம் தவணை முடிவுகளின் படி, பெறுபேறுகள் கொடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் ஒரு பெண் சினிமா இயக்குனரும் பாதிக்கப்படுள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் பல மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

எல்லாமே சென்னையில்.. ஷாக்! தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக கொரோனாவுக்கு 21 பேர் மரணம்!

சுகாதாரத்துறை ஜுன் 9ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 21 பேரும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இந்த 307ல் 244 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். செங்கல்பட்டில் 15 பேர், திருவள்ளூரில் 15 பேர், காஞ்சிபுரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 274 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பள்ளி கல்வித்துறையில் அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி..

அரசுத் தேர்வுகள் தேர்வுகள் இயக்கக இயக்குனருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தராவி யில் நோய்  தொற்று ஆரம்பித்தவுடன் டெல்லி யின் உத்தரவின் பேரில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு தராவியில்  உள்ள தமிழர்கள் தமிழ்நாடு அனுப்பிவைக்கப்பட்டனர் எந்த சோதனையும் இல்லாமல் அதுவும் கொரனோ  தமிழ்நாட்டில் இப்படி பல்கி பெருக  ஒரு காரணம் .தராவியில்  மக்கள் தொகையை குறைப்பதன் மூலம் நோயை கட்டுக்குள் கொண்டுவரலாம் என்று நம்புகின்றனர் .ஆனால் அப்படி செய்வதால் தமிழ்நாட்டில் நோய்  பெருகும் என்று எச்சரிக்க பட்ட போது  சென்ரல்  கண்டு கொள்ளவில்லை சாவது தமிழன்தானே என்ற மனநிலையாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கோரோனோ தீவிரமாக பரவாத நேரத்தில், அவசரப்பட்டு லோக்கடவுன் அறிவித்து, இப்பொது வேகமாக பரவும் நேரத்தில், லோக்கடவுனை நீக்கி, நோய் தீவிரமாக பரவுவதால், தமிழ்நாட்டில் பரபரப்பும், பீதியும் நிலவுகின்றது.

ஆரம்பத்தில் அமெரிக்கா தொடங்கி கொரோனா கூடுதலாக இருந்த எல்லா நாடுகளையும் கிண்டலடித்தார்கள்.
இப்போது அங்கே அசுர வேகத்தில் பரவுகிறது.
இன்னும் 2-3 நாட்களில் 6 வது இடத்திலிருந்து 4 இடத்துக்கு வரும்.
நாளடைவில் அமெரிக்காவுடன் போட்டி போடலாம்.

Link to comment
Share on other sites

தமிழகத்தில் 1,927 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 36,841 ஆக அதிகரிப்பு: சென்னையில் 1,392 பேருக்கு தொற்று

தமிழகத்தில் இன்று 1,927 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,392 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 24,531 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது.

1,927 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 72.25 சதவீதத் தொற்று சென்னையில் (1,392) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 36,841-ல் சென்னையில் மட்டும் 24,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 66.58 சதவீதம் ஆகும்.

19,333 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 52.47 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களின் தினசரி எண்ணிக்கையை விட ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 36 ஆயிரம் என்கிற எண்ணிகையைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்துக்கு தமிழகம் வந்துள்ளது.

சென்னையும் 25 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்து 26 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 42 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 1,71,091. இதில் மொத்த எண்ணிக்கை 1,947 பேர் (1.13%) .

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 326 பேரில் சென்னையில் மட்டுமே 260 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 79.75 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 25,937-ல் 260 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1% என்கிற எண்ணிக்கையில் உள்ளது.

இதனால் சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிராவில் 90,787 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 36,841 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 31,309 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 21,014 ஆக உள்ளது.

சென்னையைத் தவிர மீதியுள்ள 27 மாவட்டங்களில் 535 பேருக்குத் தொற்று உள்ளது. 9 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் மூன்று இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 5 மண்டலங்கள் 2,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. ராயபுரம் மண்டலம் 4,000-ஐக் கடந்து விட்டது

* தற்போது 44 அரசு ஆய்வகங்கள், 33 தனியார் ஆய்வகங்கள் என 77 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 19,333 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 6,09,856.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 16,667.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 11.56 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 36,841.

* மொத்தம் (36,841) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 22,828 (61.96%) / பெண்கள் 13,996 (37,99%)/ மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் ( .05 %)

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,927.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,162 (60.30%) பேர். பெண்கள் 765 (39.70%) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,008 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 19,333 பேர் (52.47 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 19 பேர் உயிரிழந்தனர். இதில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 12 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 326 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 260 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,392 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 24,531 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 25,937ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை மட்டும் 25,937 என்ற தொற்று எண்ணிக்கையைக் கடந்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 70.40 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 29.60 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 2,328, திருவள்ளூர் 1,581, கடலூர் 498, திருவண்ணாமலை 548, காஞ்சிபுரம் 600, அரியலூர் 381, திருநெல்வேலி 407, விழுப்புரம் 392, மதுரை 343, கள்ளக்குறிச்சி 299, தூத்துக்குடி 389, சேலம் 213, கோவை 167, பெரம்பலூர் 144, திண்டுக்கல் 185, விருதுநகர் 159, திருப்பூர் 144, தேனி 134. ராணிப்பேட்டை 164, திருச்சி 132, தென்காசி 106, ராமநாதபுரம் 126, வேலூர் 122, தஞ்சாவூர் 127,கன்னியாகுமரி 105.

37 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 28 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 9 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 30 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 1,947 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1,933 (5.31%) பேர். இதில் ஆண் குழந்தைகள் 981 (51.38%) பேர். பெண் குழந்தைகள் 952 (48.62%) பேர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 30,850 பேர் (83.98%). இதில் ஆண்கள் 19,323 (62.49%) பேர். பெண்கள் 11,510 பேர் (37.43%). மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் (.07%). 60 வயதுக்கு மேற்பட்டோர் 40,58 பேர் (10.70 %). இதில் ஆண்கள் 2524 பேர் (62.59%). பெண்கள் 1,534 பேர் (37.41%).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/558812-coronation-for-1-927-tamil-nadu-candidates-1-392-people-infected-in-chennai-7.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: சென்னைக்கு மத்திய குழு வருகிறது

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: சென்னைக்கு மத்திய குழு வருகிறது

இந்தியாவிலேயே மும்பை நகரில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை நெருங்குகிறது.


மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே இந்த நகரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவுவதற்காக மத்திய அரசு குழுக்களை அமைத்து உள்ளது.

மத்திய அரசு அமைத்துள்ள குழுக்களில் ஒன்று ஒரு வாரத்துக்குள் சென்னை வர இருக்கிறது.

இந்த குழுவினர் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதார அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவார்கள். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.

இதேபோல் டெல்லி, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, பெங்களூரு நகரங்களுக்கு செல்லும் மத்திய குழுவினரும் அந்தந்த மாநில சுகாதார துறை அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

இந்த தகவலை மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/11031554/Action-to-control-corona-Central-committee-comes-to.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரையில் கரோனாவை தடுக்க 155 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்: காய்ச்சல் உள்ளோரை கண்காணித்து பரிசோதனை செய்ய மாநகராட்சி ஏற்பாடு 

madurai-corona-testing-to-gear-up  

மதுரை

மதுரைக்கு சென்னை மற்றும் வடமாநிலங்களில் இருந்து நேரடியாக இ-பாஸ் மூலமும், மறைமுகமாகவும் ஏராளமானோர் வந்துள்ளதால் கரோனா பரவலை தடுக்க 155 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாமிற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

வீடு, வீடாக ஆய்வு செய்து, காய்ச்சல் உள்ளோரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று வரை 34,914 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் மட்டும் 24,545 பேரும், மதுரையில் 333 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து மதுரைக்கு இ-பாஸ் பெற்று இரு சக்கர வாகனத்தில் 8 ஆயிரம் பேர் வந்துள்ளனர். ரயிலில் 5 ஆயிரம் பேர் வந்துள்ளனர். விமானத்தில் 2 ஆயிரம் பேர் வந்துள்ளனர். இதுதவிர மறைமுகமாகவும் ஏராளமானோர் மதுரைக்கு வந்துள்ளனர். அவர்களை முழுமையாக இன்னும் பரிசோதனை செய்யவில்லை.

அதனால், அவர்கள் சமூகத்தில் புகுந்துவிட்டதால் மதுரையில் சென்னை போல் ‘கரோனா’ பரவல் தீவிரமாக வாய்ப்புள்ளது. அதனால், மதுரை மாநகராட்சி கரோனா பரவலை தடுக்க 100 வார்டு பகுதிகளில் 155 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் கடந்த 9-ம் தேதி முதல் தொடங்கி நடக்கிறது.

இந்த முகாம்களில் பணியாற்றும் சுகாதாரத்துறையினர், வீடு,வீடாக காய்ச்சல், சளி உள்ளவர்களை கண்காணித்து அவர்களை மருத்துவ முகாமிற்கு அழைத்து வந்து ‘கரோனா’ பரிசோதனை செய்யவுள்ளனர்.

மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் கூறுகையில், "மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 142 வரையறுக்கப்பட்ட குடிசைப் பகுதிகள், 189 வரையறுக்க படாத குடிசைப் பகுதிகள் என சுமார் 1.50 லட்சம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் இலவசமாக வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், சூரணப் பொடி வழங்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தொற்றைக் குறைக்கும் வகையில் மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும் 155 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று முதல் தொடங்கி நடக்கிறது.

இம்முகாமில் பொதுமக்களுக்கு மாநகராட்சியின் சார்பில் வீடு வீடாக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடிகள், ஹோமியோபதி மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்களை கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வழங்கப்படும் மாத்திரைகளை முறையாக உட்கொள்ள வேண்டும்.

முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல், சளி உள்ளோரை கண்காணித்து ‘கரோனா’ பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/558817-madurai-corona-testing-to-gear-up-2.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

101902478_1223634614646160_8897509320801503152_o.jpg?_nc_cat=110&_nc_sid=dbeb18&_nc_eui2=AeHmuK_c7NQbdZbKf6eKVNEsBKuQ_0F_qH4Eq5D_QX-ofhyO7t6gpdyWWa0e8ZAhVwA-bW4xaqM6ILfz70mEu-gl&_nc_ohc=e8IXAfGaaGIAX9Fsckr&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5e75402e905e12ea5b51c6d729f7423f&oe=5F033790

தமிழகம், தனது  சொந்தக் காசில்... 
செய்வினை வைத்தது, என்று தான்.. நான் சொல்வேன். 

இந்தியாவிலேயே.... கல்வியும், பொருளாதாரமும், மருத்துவ வசதியும்... 
நிறைந்த... நாடு தமிழகம், தமிழகம் எனப் பெருமைப் பட்டேன்.

அத்தனையையும்.... முழு முட்டாள், தமிழக அரசியல் வாதிகள்....   
சுக்கு... நூறாக்கி விட்டார்கள்.

ஒவ்வொரு... தமிழ் உயிரும், எமக்கு பெறுமதியானது.

ஈழத்தில்.... நாம், எத்தனையோ... இழப்புகளை சந்தித்து, 
செய்வதறியாது  நிற்கின்றோம். 

அன்பான... தமிழகமே.... உன்னை நேசிக்கின்றேன்.
இனியும்... கொரோனா போன்ற, உயிரிழப்புகளை தவிருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரிக்கும் கொரோனா: தமிழக பாதிப்பில் 70 சதவீதம் சென்னையில்...

அதிகரிக்கும் கொரோனா: தமிழக பாதிப்பில் 70 சதவீதம் சென்னையில்...

 

தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட 1927 தொற்றுகளில், சென்னையில் 1404 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 25,937-ஆக அதிகரித்துள்ளது. இதில், 12,507 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 258 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையின் பங்கு 70.4 சதவிகிதம் ஆகும்.


சென்னையில், ஒரே நாளில் நேரத்தில் அதிகபட்சமாக, தேனாம்பேட்டையில் 223 பேரும், தண்டையார்பேட்டையில் 213 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 213 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று மண்டலங்களில் ஒரே நாளில் 200-க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. குறிப்பாக, தேனாம்பேட்டையில் தொற்று பரவல் வேகம் தீவிரமடைந்துள்ளது.

அண்ணாநகரில் 184 பேரும், கோடம்பாக்கம் 149 பேரும்,  திரு.வி.க.நகரில் 105 பேரும், அடையாறு 70 பேரும், அம்பத்தூரில் 53 பேரும், மாதவரத்தில் 42 பேரும், திருவொற்றியூரில் 38 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஆலந்தூரில் 38 பேரும், சோழிங்கநல்லூரில் 34 பேரும், வளசரவாக்கத்தில் 34 பேரும், பெருங்குடியில் 31 பேரும், மணலியில் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ராயபுரம் - 4405
தண்டையார்பேட்டை - 3405
தேனாம்பேட்டை - 3069
கோடம்பாக்கம் - 2805
திரு.வி.க.நகர் - 2456
அண்ணா நகர் - 2362
அடையாறு - 1481
வளசரவாக்கம் - 1170
திருவொற்றியூர் - 972
அம்பத்தூர் - 901
மாதவரம் - 724
ஆலந்தூர் - 521
பெருங்குடி - 481
சோழிங்கநல்லூர் - 469
மணலி - 383

ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை மண்டலங்களில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.  சென்னையில் இதுவரை 258 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.

இதில், அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் 54 பேரும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 44 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல், சென்னையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளோரின் எண்ணிக்கை 12,507 ஆக உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 12,839 ஆக இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை ஆண்கள் 60.15 சதவிகிதத்தினரும், பெண்கள் 39.84 சதவிகிதத்தினரும், திருநாங்கைகள் 0.01 சதவிகிதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பினால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது. 
குறிப்பிட்ட ஏதேனும் ஒரு தெருவில் அல்லது பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொற்று உறுதியானால் அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்டு அடைக்கப்படுகிறது. இவ்வாறாக சென்னையில் தற்போது 360 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிலும், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 78 பகுதிகளும் , கோடம்பாக்கம் மண்டலத்தில் 73 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நாள்தோறும் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யும் சென்னை மாநகராட்சி, இந்த பகுதியில் வசிப்பவர்கள் வெளியே வரக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/11134452/Increasing-corona-70-of-Tamil-Nadus-impact-in-Chennai.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரம்; ஒரே நாளில் டாக்டர் உள்பட 10 பேர் பலி

சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரம்; ஒரே நாளில் டாக்டர் உள்பட 10 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது.  அதிலும், சென்னையில் அன்றாடம் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் அடைகிறது. 10 நாட்களில் மட்டும் 14 ஆயிரத்து 508 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் இருந்து 1,897 பேரும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 30 பேர் என மொத்தம் 1,927 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரையில் 326 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று மட்டும் 19 பேர் பலியாகி உள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 16 பேரும், செங்கல்பட்டை சேர்ந்த 3 பேரும் அடங்குவர். இறந்தவர்களில் 12 பேர் அரசு மருத்துவமனையிலும், 7 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்புக்கு டாக்டர் உள்பட 10 பேர் இன்று பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  சென்னையில் கீழ்பாக்கத்தில் வசித்து வந்த 70 வயது டாக்டர் ஒருவர் மின்ட் சாலையில் கிளினிக் நடத்தி வந்துள்ளார்.  அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார்.

இதேபோன்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.  அவர்களில் ஒருவர் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 56 வயது ஆண் மற்றும் ஏழுகிணறு பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர் என தெரிய வந்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  சென்னை சூளையை சேர்ந்த முதியவர் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அண்ணா சாலையை சேர்ந்த 66 வயது மூதாட்டி உயிரிழந்து உள்ளார்.  சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.  பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் ஐ.சி.எப். பகுதியை சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

இதனால், சென்னையில் இன்று ஒரே நாளில் 10 பேர் கொரோனா சிகிச்சையில் பலனின்றி பலியாகி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/11143418/Corona-impact-intensifies-in-Chennai-10-people-including.vpf

 

Link to comment
Share on other sites

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கவில்லை – தமிழக முதலமைச்சர்

 

 

   by : Dhackshala

EPS.jpg

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது என்றும் எதையும் மறைக்கவில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் 441 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம், ரயில்வே மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், ‘புள்ளி விபரங்கள் அடிப்படையில் கொரோனா காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது. எதையும் மறைக்கவில்லை. மறைக்கவும் முடியாது. உயிரிழப்புகளை மறைப்பதால், அரசுக்கு என்ன பயன்?

கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது. கொரோனா பாதிப்புடன் பல்வேறு நோய் உள்ளவர்களால்தான், இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. தமிழகத்தில்தான் அதிகளவில் வென்டிலேட்டர்கள் உள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகபரவலாக மாறவில்லை. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் பாதிப்பு அதிகமாக உள்ளது.

சேலம் உட்பட பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால், கொரோனா வேகமாக பரவும்.  சமூக இடைவெளியை பின்பற்றினால் தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும்” என தெரிவித்தார்.

http://athavannews.com/கொரோனா-வைரஸினால்-உயிரிழ-4/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus-Tamilnadu.jpg

தமிழகத்தில் ஒரேநாள் பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கியது!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1875 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 11 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இன்றும் 1,875 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 38,716 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இன்று ஒரேநாளில் 23 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்தமாக தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா வைரஸால் 349 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இன்று அதிகபட்சமாக 1,372 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 16,829 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இதுவரை 6 இலட்சத்து 55 ஆயிரத்து 675 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

http://athavannews.com/தமிழகத்தில்-ஒரேநாள்-பாதி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தீவிரம்;1 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தது

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தீவிரம்;1 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தது

1 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்தடைந்தது - கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பதிவு: ஜூன் 12,  2020 09:09 AM
சென்னை

வைரஸ் தொற்று, தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டு உள்ளதால், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, இதற்கு கூடுதலாக பிசிஆர் கருவிகள் தேவை என்பதால், தென்கொரியாவில் இருந்து வாரம் ஒரு லட்சம் என்ற அளவில் பிசிஆர் கருவிகள் வரவழைக்கப்பட்டு  வருகின்றன. அந்த வகையில் இதுவரை, சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட  பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்து சேர்ந்து விட்டதாகவும் , வரும் வாரங்களில் 1 லட்சம் பி.சி.ஆர். கிட்கள் வீதம் மேலும் 5 லட்சம் பி.சி.ஆர். கிட்கள் வர இருப்பதாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/12090943/Intensity-to-increase-corona-test-1-lakh-PCR-Tools.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 12-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை

june-12  

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது அதன் விவரம்:

அதன்படி இன்று (ஜூன் 12) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

 
மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள்
மண்டலம் 01 திருவொற்றியூர் 1024
மண்டலம் 02 மணலி 405
மண்டலம் 03 மாதவரம் 747
மண்டலம் 04 தண்டையார்பேட்டை 3584
மண்டலம் 05 ராயபுரம் 4584
மண்டலம் 06 திருவிக நகர் 2550
மண்டலம் 07 அம்பத்தூர் 949
மண்டலம் 08 அண்ணா நகர் 2571
மண்டலம் 09 தேனாம்பேட்டை 3291
மண்டலம் 10 கோடம்பாக்கம் 2966
மண்டலம் 11 வளசரவாக்கம் 1217
மண்டலம் 12 ஆலந்தூர் 555
மண்டலம் 13 அடையாறு 1534
மண்டலம் 14 பெருங்குடி 515
மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 493
  மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 413

மொத்தம்: 27,398 (ஜூன் 12-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)

https://www.hindutamil.in/news/tamilnadu/559039-june-12.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்தது

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1982 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த 1982 பேரில் 1933 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதமிருப்பவர்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு வரும்போது சோதிக்கப்பட்டதில் கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்கள்.

1982 பேரில் 1477 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஆகவே சென்னையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டில் 128 பேரும் காஞ்சிபுரத்தில் 26 பேரும் மதுரையில் 31 பேரும் திருவள்ளூரில் 92 பேரும் திருவண்ணாமலையில் 22 பேரும் தூத்துக்குடியில் 18 பேரும் விழுப்புரத்தில் 16 பேரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 22,047 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நீலகிரி, திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில்தான் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லாத நிலை இருந்தது. ஆனால், இன்று திருப்பூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்று 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. இதில் எட்டு பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 10 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்த 18 பேரில் 17 பேர் வேறு தீவிரமான உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்கள் என்றும் ஒரே ஒருவர் மட்டுமே வேறு நோய்களால் பாதிக்கப்படாமல், கொரோனாவால் உயிரிழந்தவர் என மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

38 வயதான அந்த நபர் சென்னையைச் சேர்ந்தவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களில் 15 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் செங்கல்பட்டையும் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். 4 பேர் பெண்கள், 14 பேர் ஆண்கள்.

தற்போது 18,281 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.https://www.bbc.com/tamil/india-53025722

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 13-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை

june-13  

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது அதன் விவரம்:

அதன்படி இன்று (ஜூன் 13) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ

 
மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள்
மண்டலம் 01 திருவொற்றியூர் 1072
மண்டலம் 02 மணலி 418
மண்டலம் 03 மாதவரம் 780
மண்டலம் 04 தண்டையார்பேட்டை 3781
மண்டலம் 05 ராயபுரம் 4821
மண்டலம் 06 திருவிக நகர் 2660
மண்டலம் 07 அம்பத்தூர் 987
மண்டலம் 08 அண்ணா நகர் 2781
மண்டலம் 09 தேனாம்பேட்டை 3464
மண்டலம் 10 கோடம்பாக்கம் 3108
மண்டலம் 11 வளசரவாக்கம் 1268
மண்டலம் 12 ஆலந்தூர் 587
மண்டலம் 13 அடையாறு 1607
மண்டலம் 14 பெருங்குடி 536
மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 527
  மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 527

மொத்தம்: 28,924 (ஜூன் 13-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)

https://www.hindutamil.in/news/tamilnadu/559190-june-13.html

 

 

1,982 பேருக்கு கரோனா தொற்று; 40 ஆயிரத்தைக் கடந்த தமிழகம்: சென்னையில் 1,479 பேருக்கு தொற்று

coronation-for-1-982-tamil-nadu-candidates-1479-people-infected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 1,982 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,479 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது.

1,982 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 74.89 சதவீதத் தொற்று சென்னையில் (1,479) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 40,698-ல் சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 71. சதவீதம் ஆகும்.

22,047 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 54.17 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களின் தினசரி எண்ணிக்கையை விட ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 40 ஆயிரம் என்கிற எண்ணிகையைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்துக்கு தமிழகம் வந்துள்ளது.

சென்னையும் 28 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்து 29 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 49 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 1,86,135.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 367 பேரில் சென்னையில் மட்டுமே 294 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 80 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 28,924-ல் 294 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1% என்கிற எண்ணிக்கையில் உள்ளது.

இதனால் சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சுகாதாரத்துறைச் செயலர் மாற்றப்பட்டு ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிராவில் 97,648 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 40,698 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 34,698 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 22,032 ஆக உள்ளது.

சென்னையைத் தவிர மீதியுள்ள 30 மாவட்டங்களில் 503 பேருக்குத் தொற்று உள்ளது. 6 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 5 மண்டலங்கள் 3,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. ராயபுரம் மண்டலம் 4,000-ஐக் கடந்து விட்டது

* தற்போது 45 அரசு ஆய்வகங்கள், 33 தனியார் ஆய்வகங்கள் என 78ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22,047 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 6,73,906.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 18,231.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 10.81 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 40,698.

* மொத்தம் (40,698) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 25,167 (61.8%) / பெண்கள் 15,514 (38.1%)/ மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் ( .05 %)

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,982.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,186 (59.8%) பேர். பெண்கள் 796 (40.2%) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,342 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 22,047 பேர் (55 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 18 பேர் உயிரிழந்தனர். இதில் 8 பேர் தனியார் மருத்துவமனையிலும், 10 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 367 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 294 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,479 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 71 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 29 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் 31 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 2,569, திருவள்ளூர் 1,752, கடலூர் 521, திருவண்ணாமலை 586, காஞ்சிபுரம் 650, அரியலூர் 391, திருநெல்வேலி 425, விழுப்புரம் 408, மதுரை 394, கள்ளக்குறிச்சி 319, தூத்துக்குடி 397, சேலம் 217, கோவை 173, பெரம்பலூர் 143, திண்டுக்கல் 198, விருதுநகர் 161, திருப்பூர் 115, தேனி 138. ராணிப்பேட்டை 189, திருச்சி 148, தென்காசி 115, ராமநாதபுரம் 135, வேலூர் 129, தஞ்சாவூர் 140,கன்னியாகுமரி 10, நாகப்பட்டினம் 106, திருவாரூர் 105.

37 மாவட்டங்களில் 26 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 31 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 6 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 49 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 2,038 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2,097 (5.31%) பேர். இதில் ஆண் குழந்தைகள் 1,073 (51.1%) பேர். பெண் குழந்தைகள் 1,024 (48.8%) பேர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 34,042 பேர் (83.6%). இதில் ஆண்கள் 21,262 பேர் . (62.4%) பெண்கள் 12,763 பேர் (37.6%). மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் (.07%). 60 வயதுக்கு மேற்பட்டோர் 4,559 பேர் (11.2 %). இதில் ஆண்கள் 2,832 பேர் (62.1%). பெண்கள் 1,727பேர் (37.9%).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/559127-coronation-for-1-982-tamil-nadu-candidates-1479-people-infected-in-chennai-6.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை: ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை: ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை

சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 924ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக 4 ஆயிரத்து 821ஆக உள்ளது. 

தண்டையார்பேட்டை மண்டலத்தில்  3 ஆயிரத்து 781ஆகவும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3 ஆயிரத்து 464ஆகவும், கோடம்பாக்கத்தில் 3 ஆயிரத்து 108ஆகவும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.திருவொற்றியூர்-1072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


அண்ணாநகரில் 2 ஆயிரத்து 781ஆகவும், திருவிக நகரில் 2 ஆயிரத்து 660ஆகவும், அடையாறில் ஆயிரத்து 607ஆகவும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 268ஆகவும் உயர்ந்துள்ளது.

 இதன்மூலம் 9 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதுவரை 14 ஆயிரத்து 614 பேர் குணமான நிலையில், 290 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 ஆயிரத்து 493 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/13122345/Chennai-Corona-in-Rayapuram-is-approaching-5-thousand.vpf

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா தொற்று: ஜூன் 15-ல் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை 

increasing-coronavirus-in-tamil-nadu-cm-s-consultation-with-medical-professionals-on-june-15  

சென்னை

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகமாகும் தொற்று, அடுத்தகட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து ஆலோசிக்க தமிழக அரசு அமைத்துள்ள 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி திங்கட்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலை அடுத்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி தலைமைச் செயலரை தலைவராக கொண்ட டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டது. அதன் கீழ் துறைவாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. அதேபோன்று பொருளாதாரப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது

அதேபோன்று ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரடங்கு நிறைவுபெறும்போதும் இந்தக் குழு முதல்வர், சுகாதார அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்து மேற்கொள்ள வேண்டிய நிலை குறித்த ஆய்வறிக்கையை அளிக்கும்.

தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதும், உயிரிழப்பு அதிகரிப்பதும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு தொற்று பரவாமல் இருக்க சென்னையைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

அதேபோல் சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 5 மண்டலங்களையாவது தனிமைப்படுத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜூன் 15-ம் தேதி (திங்கட்கிழமை) மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

வரும் திங்கட்கிழமை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கை பிரதானமாக இருக்கும் எனத் தெரிகிறது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/559242-increasing-coronavirus-in-tamil-nadu-cm-s-consultation-with-medical-professionals-on-june-15-1.html

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா- சென்னை மருத்துவமனையில் அனுமதி

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா- சென்னை மருத்துவமனையில் அனுமதி

 

தமிழகத்தில் கொரேனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பலருக்கும் நோய் தொற்றி உள்ளது.

 
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணம் அடைந்த நிலையில், மற்றொரு எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/13143528/1607471/Sriperumbudur-ADMK-MLA-tests-positive-for-coronavirus.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சம் கொள்ள வைக்கும் மதுரை கரோனா நிலவரம்: சென்னையைப்போல் வந்தால் தாங்காது 

corona-spread-on-high-rise-in-madurai  

மதுரை

அரசு அன்றாடம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் தகவல்களைத் தாண்டி செவிவழி செய்தியாக வரும் மதுரை ‘கரோனா’ நிலவரம் தகவல்கள் அச்சம் கொள்ள வைக்கிறது. அத்தகைய தகவல்கள் மதுரை மக்கள் தங்களைத் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள அடுத்த 15 நாட்கள் மிக முக்கியம் என்று உணர வைக்கிறது.

இதேபோல் நோய்த் தொற்று அதிகரித்தால் சிக்கல்தான். மதுரை அரசு மருத்துவமனை ‘கரோனா’ வார்டுகள் நிரம்பிவிடும். மருத்துவக்குழுவினர் நெருக்கடிக்கு ஆளாவார்கள். சிகிச்சை, கவனிப்பு தற்போது போல் இருக்குமா? என்று சொல்ல முடியாது. இதனால், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா’ பரவிய ஆரம்பத்தில் இந்த தொற்று நோய் மதுரையை மிரட்டியது. தமிழகத்திலேயே இந்த நோய்க்கு மதுரையில்தான் முதல் உயிரிழப்பு நடந்தது. விரைவாக 2 பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

சென்னைக்கு இணையாக மதுரையில் தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதும் மதுரையில் ‘கரோனா’ பாதிப்பு அப்படியே குறையத்தொடங்கியது. அதற்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் எடுத்த நடவடிக்கைகள் முக்கியமானது. அதேபோல், மாநகர மற்றும் புறநகர் போலீஸாரும் தூக்கமில்லாமல் சாலைகளில் வருவோர், செல்வோரை வழிமறித்து அறிவுரை வழங்கியும், எச்சரித்தும் அனுப்பினர்.

‘கரோனா’ அச்சத்தால் யாரும் வெளியே வரத் தயங்கிய அந்த நேரத்தில் தன்னார்வலர்கள் எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் அரசு அதிகாரிகளுடன் வீதிகளில் இறங்கி பணிபுரிந்தனர். இப்படி பலரின் கூட்டு முயற்சியின் பலனாக மதுரையில் ‘கரோனா’ கட்டுக்குள் இருந்தது.

ஆனால், கடந்த 1-ம் தேதி ஊரடங்கு தளர்விற்குப் பிறகு மதுரையில் கரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சென்னை, மகாராஷ்டிரா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வந்தவர்களுக்குக்கூட முழுமையான பரிசோதனை நடத்தப்படவில்லை. கண்காணிப்பும் இல்லை.

இ-பாஸ் கிடைக்காதவர்கள் சென்னையில் இருந்து சாலை வழியாக தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அந்த வகையில் மதுரை மாவட்டத்திற்குள் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் இ-பாஸ் பெறாமல் வந்ததால் இவர்கள் பற்றிய விவரங்களை மாவட்ட நிர்வாகத்தால் கண்டறிய முடியவில்லை. அதற்குள் இவர்கள் பொதுவெளியில் உலாவ ஆரம்பித்துவிட்டனர். தற்போது இவர்களில் தொற்று உள்ளவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. அதன்பிறகே தற்போது இ-பாஸ் பெற்று வருகிறவர்கள். பரிசோதனைக்கு பிறகே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்த நடைமுறை வருவதற்குள்ளே மதுரையில் ஏற்கெனவே வந்தவர்களில் தொற்று இருந்தவர்கள் மூலம் ‘கரோனா’ பரவிவிட்டது. ஊரடங்கு தளர்வும் செய்யப்பட்டுவிட்டதால் ஸ்கூல், கல்லூரி, மால், தியேட்டர்களைத் தவிர மதுரையில் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் திறந்துவிட்டவிட்டன.

அதனால், ‘கரோனா’ பரவல் அதிகரித்து தற்போது அதன் பாதிப்பு தெரிய ஆரம்பித்துள்ளது. இன்னும் 10 நாட்களுக்கு தொற்றின் வீரியம் தெரியும். அதற்கு ஏற்றார்போல் 8-ம் தேதி முதலே மதுரையில் ‘கரோனா’ தொற்று வேகம் தெரிய ஆரம்பித்துள்ளது. கடந்த 10-ம் தேதி 10 பேருக்கும், 11-ம் தேதி 19 பேருக்கும், நேற்று 12-ம் தேதி 31 பேருக்கும் ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 15 பேருக்கு ‘கரோனா’வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் அனைத்தும், அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல். ஆனால், பின்னணியில் தொற்று கண்டறியப்படுவோர் ஏராளமானோர் மறைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது தேவைப்படக்கூடிய அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டும் பரிசோதனையை நடத்தாமல் அதிகாரமையத்தில், அரசியல் பின்புலத்தில் இருக்கும் அறிகுறி இல்லாதவர்களுக்கும் பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ முடிவுகளைக் கூடுதலாக காட்ட பரிசோதனைகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் பரிசோதனை தேவைப்படும் அறிகுறியுடன் இருப்பவர்களுக்கு உடனுக்குடன் நடத்தப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இன்னும் 10 நாட்கள் இதுபோல் 30 முதல் 50 பேர் வரை மதுரையில் ‘கரோனா’ தொற்றுக்கு பாதிக்கப்பட்டால் அடுத்தடுத்த நாட்களில் சென்னையைப்போல் தினந்தோறும் 500 பேர் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அப்போது நிலைமை சிக்கலாகிவிடும். சாலை வழியாக மதுரைக்கு நுழைகிறவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். அவர்கள் பரிசோதனை செய்யப்பட வேண்டும். பரிசோதனையில் நெகட்டிவ் வந்தாலும் அவர்களைக் குறிப்பிட்ட 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

அதற்கு முன்போல் அவர்கள் வீட்டிற்கு ‘சீல்’ வைத்து ஸ்டிக்கர் முத்திரை ஓட்ட வேண்டும். மதுரையில் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர்களை வெளிநோயாளிகள் யாருக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அனுமதிக்கவில்லை. அவர்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மட்டும் ‘கரோனா’ பரிசோதனை செய்து கொள்கின்றனர். அரசே ஒரு புறம் அறுவை சிகிச்சை போன்ற அவசர சிகிச்சைகளுக்கு வருவோருக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்யக்கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது.

ஆனால், மறுபுறம் அரசே அவர்களை உள் நோயாளிகளை மட்டும் பரிசாதனை செய்துகொள்ள அனுமதிக்கிறது. அவர்களை வெளி நோயாளிகளுக்கும் பரிசோதனை செய்ய அனுமதித்தால் வசதிப்படைத்தவர்கள் அங்கு செல்வார்கள். நடுத்தர, ஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யயலாம். அப்போது பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

தனியார் மருத்துவமனைகளில் அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை தள்ளி வைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகளில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.

தற்போது அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதே சவாலானதுதான். நோயாளிகள் 2 அல்லது 3 நாட்களாவது மருத்துவமனையில் இருக்க வேண்டும். நோய் பரவலுக்கு அது வாய்ப்பாகிவிடும். அதனால், தற்காலிகமாக ’காப்பர் டி’ போட்டுவிட்டால் 1 ஆண்டு கழித்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அதனால், அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கலாம்.

சென்னையை போல் நோயாளிள் எண்ணிக்கை அதிகரித்தால் மதுரை தாங்காது. இதேவேகத்தில் தொற்று அதிகரித்தால் 10 நாளிலேயே மதுரை ‘கரோனா’ வார்டுகளில் நோயாளிகள் நிரம்பிவிடுவார்கள். புதிய நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்க இடம் இல்லாமல் போய்விடும்.

மதுரை மாவட்டத்தில் தற்போது அதிகமான நோயாளிகள் சிகிச்சை முடிந்து ஆரோக்கியமாக குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அதேநேரத்திலும் நோய் பரவலும் அதிகமாகியுள்ளது. நோயின் வீரியம் சற்று அதிகரித்தால் ‘கரோனா’ வார்டுகளில் பணிபுரியும் மருத்துவக்குழுவினருக்கு நெருக்கடி ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

https://www.hindutamil.in/news/reporters-page/559304-corona-spread-on-high-rise-in-madurai-4.html

 

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ்: 42,000-ஐ கடந்த பாதிப்பு; 400-ஐ நெருங்கும் மரணங்கள்

கொரோனா

தமிழகத்தில் புதிதாக 1,989 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது.

கோவிட்-19 தொற்றால் மேலும் 30 நபர்கள் இறந்துள்ளனர். இது மரணங்களின் எண்ணிக்கையில் ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச உயர்வாகும்.

இதுவரை தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 397ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இன்று இறந்த 30 நபர்களில், 12 நபர்கள் அரசு மருத்துவமனைகளிலும், 18 நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர்.

இறந்தவர்களில் மூவரை தவிர மற்றவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள். இறந்தவர்கள் பெரும்பாலானவர்களுக்கு நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, பல்லுறுப்பு செயலிழப்பு, மூச்சுத் திணறல் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பாதிப்புக்கு உள்ளான நபர்களில் 33 நபர்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள், எத்தியோப்பியா, கத்தார், ஓமன், வங்கதேசம் ஆந்திரப் பிரதேசம், கேரளா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிக பாதிப்புகளை கொண்டுள்ள சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,444ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரத்தில் இன்று ஒரே நாளில் 1,503 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தை அடுத்த, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் செயல்படும் 79 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 6, 91,817 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 17,911 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1,362 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,409 ஆக உயர்ந்துள்ளது.

வீட்டை விட்டு வெளியே சென்றால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி

முன்னதாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நபர்கள், வீட்டை விட்டு வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்திருந்தார். அதன்படி, சென்னை நகரம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தில் விதிகளை மீறி பொது இடங்களுக்கு சென்ற 40 நபர்கள் மீது முதல் தகவலறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது என ஆணையர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்

ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''எந்தவொரு அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் அவர்களின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட சில நபர்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அவ்வாறு அவர்கள் தனிமைப்படுத்துதலையும் மீறி வெளியில் செல்லும் போது பிற நபர்களும் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வெளியே சென்ற 40 நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டுள்ளது,'' என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி - நான்கு நாட்களில் நான்கு மரணங்கள்

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. இதில் 76 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தற்போது 91 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, நேற்றுவரை இந்நோய்த்தொற்றினால் மூன்று நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில், "புதுச்சேரியில் கடந்த 10 நாட்களில் தினமும் 6 முதல் 10 நபர்கள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 3 அல்லது 4 நபர்கள் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். இதனால், புதுச்சேரியில் தொற்று பாதிப்பு படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. மருத்துவ ஆய்வாளர் கணிப்பின்படி, இம்மாத இறுதிக்குள் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என்று கூறுகின்றனர்," என்றார்.

https://www.bbc.com/tamil/india-53034209

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

corona-1.jpg

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் புதிதாக 1,484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மேலும் அங்கு இதுவரை 316 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காது செல்கிறது. அதிலும் தமிழகத்தில் இந்த வைரஸின் பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

குறிப்பாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையிலும், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சென்னையில் தொடக்கத்தில் இருந்தே ராயபுரம், தண்டையாா்பேட்டை, கோடம்பாக்கம், திருவிக நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அம்பத்தூா், அடையாறு, திருவெற்றியூா் ஆகிய 10 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயா்ந்து வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 9,451 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து தற்போதைய நிலைவரப்படி, பாதிப்பு எண்ணிக்கை 30,444ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் அதிகபட்சமாக 1,484 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வைரஸ் தொற்று காரணமாக சென்னையில் மாத்திரம் இதுவரையில், 316 போ் உயிரிழந்துள்ளனர்.

இதேநேரம் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 321,626 ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,199 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இந்த தொற்றிலிருந்து இதுவரை 162,326 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன், 150,101 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சென்னையில்-கொரோனா-வைரஸ்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கரோனா: 45 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை; ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு

44-661-persons-affected-with-corona-virus-in-tamilnadu இன்றைய தொற்று நிலவரம்

சென்னை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று (ஜூன் 14) கரோனா தொற்று பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 18 ஆயிரத்து 782 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக, 7 லட்சத்து 10 ஆயிரத்து 599 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

45 அரசு பரிசோதனை மையங்கள், 34 தனியார் பரிசோதனை மையங்கள் என, 79 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

இன்று பதிவான உயிரிழப்புகளில், 16 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 22 பேர் அரசு மருத்துவமனைகளிலும் என 38 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இன்று பதிவான உயிரிழப்புகளில் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் 31 பேர் மற்றும் இணை நோய் அல்லாதவர்கள் 7 பேர் ஆவர்.

இன்று மட்டும் 1,138 பேர் சிகிச்சையில் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக, 24 ஆயிரத்து 547 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

19 ஆயிரத்து 676 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/559407-44-661-persons-affected-with-corona-virus-in-tamilnadu-1.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2020 at 01:00, உடையார் said:

தமிழகத்தில் இன்று வரை 34,914 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் மட்டும் 24,545 பேரும், மதுரையில் 333 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து மதுரைக்கு இ-பாஸ் பெற்று இரு சக்கர வாகனத்தில் 8 ஆயிரம் பேர் வந்துள்ளனர். ரயிலில் 5 ஆயிரம் பேர் வந்துள்ளனர். விமானத்தில் 2 ஆயிரம் பேர் வந்துள்ளனர். இதுதவிர மறைமுகமாகவும் ஏராளமானோர் மதுரைக்கு வந்துள்ளனர். அவர்களை முழுமையாக இன்னும் பரிசோதனை செய்யவில்லை.

அதனால், அவர்கள் சமூகத்தில் புகுந்துவிட்டதால் மதுரையில் சென்னை போல் ‘கரோனா’ பரவல் தீவிரமாக வாய்ப்புள்ளது. அதனால், மதுரை மாநகராட்சி கரோனா பரவலை தடுக்க 100 வார்டு பகுதிகளில் 155 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் கடந்த 9-ம் தேதி முதல் தொடங்கி நடக்கிறது.

தாராவியில் நோய்  தொற்று ஏட்பட்ட  பின் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளார்கள் அவர்களே சென்னையில் இருந்து  மதுரைக்கு வந்துள்ளார்கள்  இதுவும் ஒரு முள்ளிவாய்க்காலாகும் . டெல்லியை சேர்ந்த கிந்திய  இனவெறியர்களின்  தமிழ் இன  அழிப்பு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 15-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை

june-15  

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது அதன் விவரம்:

அதன்படி இன்று (ஜூன் 15) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள்
மண்டலம் 01 திருவொற்றியூர் 1171
மண்டலம் 02 மணலி 448
மண்டலம் 03 மாதவரம் 854
மண்டலம் 04 தண்டையார்பேட்டை 4082
மண்டலம் 05 ராயபுரம் 5216
மண்டலம் 06 திருவிக நகர் 2922
மண்டலம் 07 அம்பத்தூர் 1105
மண்டலம் 08 அண்ணா நகர் 3150
மண்டலம் 09 தேனாம்பேட்டை 3844
மண்டலம் 10 கோடம்பாக்கம் 3409
மண்டலம் 11 வளசரவாக்கம் 1395
மண்டலம் 12 ஆலந்தூர் 624
மண்டலம் 13 அடையாறு 1809
மண்டலம் 14 பெருங்குடி 594
மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 586
  மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 687

மொத்தம்: 31,896 (ஜூன் 15-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)

https://www.hindutamil.in/news/tamilnadu/559465-june-15.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

 

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

 
ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா குறைய ஆரம்பித்தாலும் 3 மாதத்துக்குப் பின் மீண்டும் அதிகரிக்கும். சீனாவில் 2வது அலை ஆரம்பித்தது போல் தமிழகத்திலும் 3 மாதத்துக்குப் பின் ஆரம்பிக்கலாம்.

அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும், மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம்.

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளை கடுமையாக்க பரிந்துரைத்துள்ளோம். தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். 

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/15133738/1607769/medical-experts-recommended-to-tighten-regulations.vpf

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் முழு முடக்கம்!

சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் பழனிசாமி. அதனை தொடர்ந்து அமைச்சரவை கூட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் 30 -ம் தேதி வரை மீண்டும் முழு முடக்கம் அமலுக்கு வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

https://www.vikatan.com/news/general-news/15-06-2020-just-in-live-updates

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 19-ந் தேதி முதல் முழு ஊரடங்கு - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 19-ந் தேதி முதல் முழு ஊரடங்கு - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பதிவு: ஜூன் 15,  2020 16:37 PM
சென்னை,

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை செய்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் வரும் 19-ந் தேதி அதிகாலை 12 மணி முதல் 30-ந் தேதி இரவு 12 மணி வரை பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

* சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் பூவிருந்தவல்லி, ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* செங்கல்பட்டு மறைமலைநகர் நகராட்சிகளிலும் நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* இந்த 4 மாவட்டங்களிளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதார்ர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும்.

* அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும்.

* இந்த பன்னிரண்டு நாட்களில் வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்த வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு எந்த தடையும் இல்லை.

* சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

* மத்திய மாநில அரசு துறை சார்ந்த பணிகளை 33 சதவீத பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை.

* வாடகை ஆட்டோ, டாக்ஸி ஆகியவை இயங்க அனுமதி இல்லை. அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் அனுமதிக்கப்படும்.

* ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேசன் கடைகள் செயல்படாது. அந்த பகுதிகளில் ரேசன் ஊழியர்கள் நேரில் சென்று நிவாரணத்தை வழங்குவார்கள்.

* காயகரி கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து 2 கி.மீ தூரம் வரை மட்டுமே சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதி.

* உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை.

* அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

* தொண்டு நிறுவனங்கள் அரசிடம் முறையான அனுமதி பெற்று இயங்க அனுமதி.

* நீதிமன்றம், நீதித்துறை சார்ந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

* ஊடகத்துறை சார்ந்த பணிகள் தொடர்ந்து நடைபெற அனுமதி வழங்கப்படுகிறது.

* வங்கிகள் 29, 30 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டும் 33 சதவீத பணியாளர்களோடு செயல்படும். ஏ.டி,எம் எந்திரங்கள் செயல்படும்.

* கட்டுமான தொழிலாளர்கள் பணி நடைபெறும் இடத்தில் தங்கி இருந்து பணி செய்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

* திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/15163724/Full-curfew-from-19th-in-4-districts-including-Chennai.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு; 1,843 பேர் பாதிப்பு

கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் 44 பேர் பலியாகியுள்ளனர். 1,843 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,500ஐ கடந்துள்ளது.

மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டில் இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ள 1,843 பேரில் 1,789 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 13 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மீதமுள்ளவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,504ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,344ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18,403 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இதுவரை செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 7,29,002ஆக உயர்ந்துள்ளது. தற்போது 20,678 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இன்று தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட 1,843 பேரில் 1257 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 120 பேர் செங்கல்பட்டை சேர்ந்தவர்கள். 39 பேர் காஞ்சிபுரத்தையும் 33 பேர் மதுரையையும் சேர்ந்தவர்கள். ராணிப்பேட்டையில் 34 பேரும் தஞ்சாவூரில் 12 பேரும் திருவள்ளூரில் 50 பேரும் திருவண்ணாமலையில் 32 பேரும் தூத்துக்குடியில் 34 பேரும் திருநெல்வேலியில் 17 பேரும் வேலூரில் 20 பேரும் இந்நோய்த் தொற்றோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை 33,244 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்று உயிரிழந்த 44 பேரில், 12 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 32 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 11 பேர் கொரோனா தவிர, வேறு எவ்வித நோயாலும் பாதிக்கப்படாதவர்கள். 10 பேர் ஐம்பது வயதுக்குக் குறைவானவர்கள். இவர்களில் நான்கு பேர் 40 வயதுக்குக் குறைவானவர்கள்.

இதற்கிடையில் சென்னையில் காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவை தடுக்க அரசு தடுமாறிக்கொண்டிருக்கிறது என்பது தவறான வாதம் எனக் குறிப்பிட்டார்.

"கொரோனாவை எதிர்கொள்வதில் தமிழ்நாடு சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளே இந்த நோயை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றன."

"தமிழ்நாட்டில் சரியான நடவடிக்கைகள் மூலமாக உயிர் காக்கும் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மிக அதிகமான அளவில் சோதனைகள் செய்கிறோம். அதனால், அதிகமான அளவில் நோயுற்றவர்களைக் கண்டுபிடிக்கிறோம். இன்றோடு 25,344 பேரை குணப்படுத்தியிருக்கிறோம். ஆகவே அரசு திணறிக்கொண்டிருக்கிறது என ஸ்டாலின் சொல்வது தவறான வாதம். அரசு திறமையாக செயல்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

மேலும், "எண்ணிக்கையை வைத்து அரசியலாக்க வேண்டாம். அரசு வெளிப்படையாக இருக்கிறது. சென்னையில் மட்டும் 1.85 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 17,500 படுக்கை வசதி தயாராக இருக்கிறது. இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கிறோம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் தயாராக இருக்கின்றன. தமிழ்நாடு முழுக்க 75 படுக்கை வசதிகள் தயாராக இருக்கின்றன. ஆகவே இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. எங்கேயுமே தாமதமும் இல்லை, தடையுமில்லை. இந்தப் பணிக்காக மு.க. ஸ்டாலின் யாரையாவது பாராட்டியிருக்கிறாரா? பாராட்டவிட்டாலும் விமர்சனங்கள் வேண்டாம்" எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-53055147

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.