Jump to content

தமிழகத்தில் தீவிரமாகும் கோரோனோ.


Recommended Posts

  • Replies 167
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 1,843 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,257 பேர் பாதிப்பு; 44 பேர் உயிரிழப்பு

1-843-people-infected-with-coronavirus-in-tamil-nadu-1-257-people-affected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 1,843 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,257 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது.

1,843 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 68.2 சதவீதத் தொற்று சென்னையில் (1,257) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 46,504-ல் சென்னையில் மட்டும் 33,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 71.4 சதவீதம் ஆகும்.

25,344 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 54.4 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, மற்ற மாநிலங்களின் தினசரி எண்ணிக்கையை விட ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 45 ஆயிரம் என்கிற எண்ணிகையைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 40 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் தொட்ட சில நாட்களிலேயே சென்னையும் 30 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்து 35 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 54 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,07,857.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 479 பேரில் சென்னையில் மட்டுமே 382 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 79.7 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 33,244-ல் 382 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.1 % என்கிற எண்ணிக்கையில் உள்ளது.

இதனால் சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகின்றனர்.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு 1,07,958 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 46,504 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 41,182 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 23,544 ஆக உள்ளது.

சென்னையைத் தவிர மீதியுள்ள 31 மாவட்டங்களில் 586 பேருக்குத் தொற்று உள்ளது. 5 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 5 மண்டலங்கள் 3,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. ராயபுரம் மண்டலம் 5,000-ஐக் கடந்துவிட்டது.

* தற்போது 45 அரசு ஆய்வகங்கள், 34 தனியார் ஆய்வகங்கள் என 79 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20,678 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 7,29,002.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 18,403.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 10 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 46,504.

* மொத்தம் (46,504) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 28,652 (61.6%) / பெண்கள் 17,834 (38.3%)/ மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் ( .05 %)

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,843.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,132 (59.4%) பேர். பெண்கள் 710 (40.6%) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 797 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 25,344 பேர் (54.4 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 44 பேர் உயிரிழந்தனர். இதில் 12 பேர் தனியார் மருத்துவமனையிலும், 32 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 479 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 382 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,257 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 71.4 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 28.6 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 3,005, திருவள்ளூர் 1,922, கடலூர் 560, திருவண்ணாமலை 710, காஞ்சிபுரம் 751, அரியலூர் 393, திருநெல்வேலி 489, விழுப்புரம் 440, மதுரை 442, கள்ளக்குறிச்சி 337, தூத்துக்குடி 436, சேலம் 226, கோவை 180, பெரம்பலூர் 146, திண்டுக்கல் 220, விருதுநகர் 179, திருப்பூர் 117, தேனி 157, ராணிப்பேட்டை 234, திருச்சி 171, தென்காசி 144, ராமநாதபுரம் 158, வேலூர் 173, தஞ்சாவூர் 167,கன்னியாகுமரி 127, நாகப்பட்டினம் 123, திருவாரூர் 138.

37 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 2 மாவட்டங்கள் 4 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. சென்னை 5 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 32 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 5 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 54 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 2,160 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2,362 (5 %) பேர். இதில் ஆண் குழந்தைகள் 1,212 (51.3 %) பேர். பெண் குழந்தைகள் 1,150 (48.7 %) பேர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 38,696 பேர் (83.2 %). இதில் ஆண்கள் 24,067 பேர். (62.1%) பெண்கள் 14,611 பேர் (37.9 %). மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் (.07%). 60 வயதுக்கு மேற்பட்டோர் 5,446 பேர் (11.7 %). இதில் ஆண்கள் 3,373 பேர் (61.9%). பெண்கள் 2073 பேர் (38.1%).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/559563-1-843-people-infected-with-coronavirus-in-tamil-nadu-1-257-people-affected-in-chennai-6.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 ஆயிரத்தை நெருங்கும் தமிழகம்; இன்று 1,515 பேருக்கு கரோனா தொற்று: சென்னையில் 919 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 919 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்துள்ளது.

1,515 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 60.6 சதவீதத் தொற்று சென்னையில் (919) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 48,019-ல் சென்னையில் மட்டும் 34,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 71.3 சதவீதம் ஆகும்.

26,782 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 55.7 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, மற்ற மாநிலங்களின் ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 50 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. இந்திய அளவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 45 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் தொட்ட சில நாட்களிலேயே சென்னையும் 34 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்து 35 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 61 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,15,443.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 528 பேரில் சென்னையில் மட்டுமே 422 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 79.9 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 34,245-ல் 422 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.2 % என்கிற எண்ணிக்கையில் உள்ளது.

இதனால் சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகின்றனர்.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு 1,10,744 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 48,019 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 42,829 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 24,055 ஆக உள்ளது.

சென்னையைத் தவிர மீதியுள்ள 30 மாவட்டங்களில் 596 பேருக்குத் தொற்று உள்ளது. 6 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 5 மண்டலங்கள் 3,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. ராயபுரம் மண்டலம் 5,000-ஐக் கடந்துவிட்டது.

* தற்போது 45 அரசு ஆய்வகங்கள், 34 தனியார் ஆய்வகங்கள் என 79 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 26,782 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 7,48,244.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 19,242.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 7.8 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 48,019.

* மொத்தம் (48,019) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 29,594 (61.6%) / பெண்கள் 18,407 (38.3%)/ மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் ( .05 %)

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,843.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 942 (62.1%) பேர். பெண்கள் 573 (37.9%) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,438 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 26,782 பேர் (55.7 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 49 பேர் உயிரிழந்தனர். இதில் 14 பேர் தனியார் மருத்துவமனையிலும், 35 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 528 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 422 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 919 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 71.3 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 28.7 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் 31 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 3,108, திருவள்ளூர் 1,945, கடலூர் 568, திருவண்ணாமலை 768, காஞ்சிபுரம் 803, அரியலூர் 397, திருநெல்வேலி 507, விழுப்புரம் 458, மதுரை 464, கள்ளக்குறிச்சி 338, தூத்துக்குடி 437, சேலம் 231, கோவை 183, பெரம்பலூர் 148, திண்டுக்கல் 234, விருதுநகர் 188, திருப்பூர் 117, தேனி 161, ராணிப்பேட்டை 311, திருச்சி 171, தென்காசி 157, ராமநாதபுரம் 156, வேலூர் 179, தஞ்சாவூர் 171,கன்னியாகுமரி 123, நாகப்பட்டினம் 166, திருவாரூர் 148.

37 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 2 மாவட்டங்கள் 4 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. சென்னை 5 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 31 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 6 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 61 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 2,221 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2,444 பேர் (5 %). இதில் ஆண் குழந்தைகள் 1,263 பேர் (51.6 %) . பெண் குழந்தைகள் 1,181 பேர் (48.4 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 39,911 பேர் (83.1 %). இதில் ஆண்கள் 24,811 பேர். (62.1%) பெண்கள் 15,082 பேர் (37.9 %). மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் (.07%). 60 வயதுக்கு மேற்பட்டோர் 5,664 பேர் (11.7 %). இதில் ஆண்கள் 3,520 பேர் (62.1%). பெண்கள் 2144 பேர் (37.9%).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/559745-people-infected-with-coronavirus-in-tamil-nadu-people-affected-in-chennai-7.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Country,
Other
Total
Cases
New
Cases
Total
Deaths
New
Deaths
Total
Recovered
Active
Cases
Serious,
Critical
Tot Cases/
1M pop
Deaths/
1M pop
Total
Tests
Tests/
1M pop
Population
  World 8,204,006 +95,339 443,618 +5,022 4,274,433 3,485,955 54,295 1,052 56.9      
1 USA 2,198,551 +15,601 118,814  +531 892,093 1,187,644 16,447 6,644 359 25,517,156 77,109 330,922,877
2 Brazil 904,734 +13,178 44,657  +539 464,774 395,303 8,318 4,258 210 1,628,482 7,664 212,496,348
3 Russia 545,458 +8,248 7,284  +193 294,306 243,868 2,300 3,738 50 15,395,417 105,497 145,932,063
4 India 354,148 +11,122 11,921  +2,006 187,552 154,675 8,944 257 9 5,921,069 4,292 1,379,418,901
5 UK 298,136 +1,279 41,969  +233 N/A N/A 395 4,393 618 6,981,493 102,863 67,871,466
6 Spain 291,408 +219 27,136    N/A N/A 617 6,233 580 4,826,516 103,232 46,754,084
7 Italy 237,500 +210 34,405  +34 178,526 24,569 177 3,928 569 4,695,707 77,660 60,465,149
8 Peru 232,992   6,860    119,409 106,723 1,121 7,071 208 1,376,478 41,773 32,951,046
9 Iran 192,439 +2,563 9,065  +115 152,675 30,699 2,815 2,292 108 1,293,609 15,410 83,944,885
10 Germany 188,343 +299 8,902  +17 173,100 6,341 419 2,248 106 4,694,147 56,034 83,773,297

இந்தியாவில் இன்று மட்டும் 2006 பேர் கொரோனாவால் மரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உயிரிழப்பு 528 ஆக உயர்வு கொரோனாவுக்கு 22 வயது இளம்பெண் உள்பட 49 பேர் பலி பாதிப்பு 48 ஆயிரத்தை தாண்டியது
 
உயிரிழப்பு 528 ஆக உயர்வு கொரோனாவுக்கு 22 வயது இளம்பெண் உள்பட 49 பேர் பலி பாதிப்பு 48 ஆயிரத்தை தாண்டியது
 
தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் சென்னையை சேர்ந்த 22 வயது இளம்பெண் 49 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு 528 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு 48 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
பதிவு: ஜூன் 17,  2020 06:00 AM
சென்னை,

தமிழகத்தில் கொரோனா உச்ச நிலையை தொட்டு உள்ளது. தினமும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், உயிரிழப்பும் கூடிக்கொண்டே செல்கிறது. அதன்படி இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 49 உயிர்களை கொரோனா பறித்து உள்ளது. இதையடுத்து பலி எண்ணிக்கை 500 தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 48 ஆயிரத்தை கடந்துள்ளது.


இதுகுறித்து சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் வருமாறு:-

தமிழகத்தில் நேற்று 942 ஆண்கள், 573 பெண்கள் என 1,515 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து வந்த 2 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 59 பேரும் உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,438 பேர் நேற்று பூரண குணம் அடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 782 ஆக உயர்ந்துள்ளது. தமிழக மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி 20 ஆயிரத்து 706 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 40 பேர் பலி

தமிழகத்தில் நேற்று 49 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதில் 35 பேர் அரசு மருத்துவமனையிலும், 14 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். உயிரிழந்தவர்களில் 46 பேருக்கு கொரோனாவுடன் மற்ற நோய் பாதிப்புகளும் இருந்து உள்ளது. 3 பேர் கொரோனாவுக்கு மட்டும் உயிரிழந்து உள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பட்டியலில் சென்னையில் 22 வயது இளம்பெண் உட்பட 40 பேரும், திருவள்ளூர், செங்கல்பட்டில் தலா 3 பேரும்,

மதுரை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டையில் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து சென்னையில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 422 ஆகவும், தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 528 ஆகவும் அதிகரித்துள்ளது.

32 மாவட்டங்களில்...

தமிழகத்தில் நேற்று 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் 919 பேரும், செங்கல்பட்டில் 88 பேரும், ராணிப்பேட்டையில் 76 பேரும், திருவண்ணாமலையில் 65 பேரும், திருவள்ளூரில் 52 பேரும், காஞ்சீபுரத்தில் 47 பேரும், நாகப்பட்டினத்தில் 43 பேரும், மதுரையில் 20 பேரும், ராமநாதபுரம், நெல்லை, விழுப்புரத்தில் தலா 18 பேரும், வேலூரில் 16 பேரும், திருச்சி, திண்டுக்கலில் தலா 14 பேரும், தென்காசியில் 13 பேரும், கடலூரில் 11 பேரும், திருவாரூரில் 10 பேரும், விருதுநகரில் 8 பேரும், கள்ளக்குறிச்சியில் 7 பேரும், கன்னியாகுமரியில் 6 பேரும், சேலத்தில் 5 பேரும், தேனி, தஞ்சாவூர், அரியலூரில் தலா 4 பேரும், நாமக்கலில் 3 பேரும், சிவகங்கை, பெரம்பலூர், தர்மபுரி, கோவையில் தலா 2 பேரும், கரூர், தூத்துக்குடி, திருப்பூரில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

19 ஆயிரத்து 242 மாதிரிகள்

தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 19 ஆயிரத்து 242 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/17021536/Death-toll-rises-to-528-49-people-including-22yearold.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 20 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 20 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்

சென்னை:
 
தமிழகத்தில் நேற்று புதிதாக 1,515 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது.  
இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். 
 
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 706 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 26 ஆயிரத்து 782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 
 
ஆனாலும், கொரோனாவுக்கு தமிழகத்தில் இதுவரை 528 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-
 
அரியலூர் - 25
செங்கல்பட்டு - 1,576
சென்னை - 15,257
கோவை - 31
கடலூர் - 111
தர்மபுரி - 9
திண்டுக்கல் - 55
ஈரோடு - 2
கள்ளக்குறிச்சி - 76
காஞ்சிபுரம் - 355
கன்னியாகுமரி - 42
கரூர் - 10
கிருஷ்ணகிரி - 18 
மதுரை - 158
நாகை - 107
நாமக்கல் - 8
நீலகிரி - 3
பெரம்பலூர் - 7
புதுக்கோட்டை - 32
ராமநாதபுரம் - 69
ராணிப்பேட்டை - 196
சேலம் - 41
சிவகங்கை - 14
தென்காசி - 64
தஞ்சாவூர் - 64
தேனி - 44
திருப்பத்தூர் - 6
திருவள்ளூர் - 1,001
திருவண்ணாமலை - 305
திருவாரூர் - 90
தூத்துக்குடி - 129
திருநெல்வேலி - 127
திருப்பூர் - 2
திருச்சி - 52
வேலூர் - 120
விழுப்புரம் - 82
விருதுநகர் - 45
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 132
உள்நாடு - 64
ரெயில் நிலைய கண்காணிப்பு - 177
 
மொத்தம் - 20,706
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் 5,486 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் 5,486 பேர் பாதிப்பு!

 

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் 5,486 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பதிவு: ஜூன் 17,  2020 13:18 PM

சென்னை

சென்னை ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 5,486 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

மண்டலம் வாரியாக விவரம் வருமாறு:-

தண்டையார்பேட்டை - 4370
தேனாம்பேட்டை- 4143
கோடம்பாக்கம்- 3648
அண்ணாநகர்- 3431
திருவிக நகர்- 3041

வளசரவாக்கம்- 1444
திருவொற்றியூர்-1258
அம்பத்தூர் -1190
அடையாறு - 1931
மாதவரம்- 922
பெருங்குடி- 646
சோழிங்கநல்லூர்- 639
ஆலந்தூர்- 699 (2/2)

சென்னையில் கொரோனாவிலிருந்து 18,565 பேர் குணமான நிலையில், 422 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதித்தோரில் 60,09 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர், 39 புள்ளி 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/17131831/The-maximum-in-TamilNadu--In-the-Raiyapuram-zone-5486.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சை குறித்து தீவிர ஆய்வு: மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

intensive-review-of-coronary-treatment-across-tamil-nadu-chief-secretary-directs-district-inspection-officers  

சென்னை

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள், அங்குள்ள குழுக்களுடன் இணைந்து கரோனா சோதனை, நோயாளிகள் நிலை, சோதனைக் கருவிகள் இருப்பு உள்ளிட்ட பல விஷயங்களைக் கண்காணிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்கள், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது

'தமிழகம் முழுவதும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மண்டல சிறப்புப் பணிக்குழு, மாவட்ட சிறப்பு ஆதரவுக் குழு இணைந்து மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையிலான குழுக்களுடன் கண்காணிப்புப் பணியில் கீழ்க்கண்ட முறையில் செயல்பட வேண்டும்.

தினசரி எடுக்கப்படும் சோதனையில் தொற்றுள்ளவர்கள், மற்றவர்களின் நோய்த்தொற்று தொடர்பு குறித்துப் பட்டியல் தயாரித்து தினந்தோறும் கண்காணிக்க வேண்டும்.

சோதனை, சோதனை மாதிரிகள் எடுப்பது, சோதனை முடிவுகள் உடனடியாக சரியான நேரத்திற்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைக் கண்காணிப்பது, தேர்வு செய்வது, நோய்த்தொற்றுள்ளவர்களைக் கண்காணிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கண்காணிப்பது, தேர்வு செய்வது, நோய்த்தொற்றுள்ளவர்களைக் கண்காணிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கட்டுப்பாட்டுப் பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் தடையின்றிக் கிடைக்கிறதா? முகக்கவசம், கவச உடைகள், பிபிஇ ஆய்வு உபகரணங்கள் உள்ளிட்டவை கிடைக்கிறதா? அவை சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும்.

மாவட்டங்கள், மற்ற பகுதிகளில் தீவிர சுவாசத் தொற்று நோயாளிகள், காய்ச்சல் உள்ளவர்களைக் கண்காணிக்க வேண்டும்.

கோவிட் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோய் சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

கிருமிநீக்க நடவடிக்கை தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அனைத்துவகை நலன் சார்ந்த பணிகளும் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

இதுதவிர சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் வழக்கமான பணிகளுடன் கோவிட் மேலாண்மைப் பணிகள், அத்திவாசியப் பொருட்கள் கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

அரசு கரோனா தொற்றுப் பரவலுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மாவட்ட வாரியாக கரோனா தடுப்புப் பணியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் குழுக்களுடன் இணைந்து மாவட்ட அளவில் கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்கும் வகையில் செயல்படவேண்டும்.

அதிக அளவில் சோதனையில் கவனம் செலுத்துவது, நோய்த்தொற்றாளர்களின் தொடர்புகளைக் கண்டறிவது, நோயைத்தடுக்கும் வகையில் தனிமைப்படுத்துதல், கட்டுப்பாட்டுப் பகுதியில் வைப்பது ஆகிய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்''.

இவ்வாறு தலைமைச் செயலர் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/559857-intensive-review-of-coronary-treatment-across-tamil-nadu-chief-secretary-directs-district-inspection-officers-3.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் பணியாற்ற கூடுதலாக 3,000 செவிலியர்கள் வருகை

சென்னையில் பணியாற்ற கூடுதலாக 3,000 செவிலியர்கள் வருகை

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

 
கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் கொரோனா சிகிச்சையில் பணியாற்ற கூடுதலாக 3,000 செவிலியர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.  

இவர்கள் நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோயில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலமாக 2,000 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/17135621/1618211/Coronavirus-3000-Nurses-arrives-chennai.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்முறையாக 2,000-த்தைக் கடந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை!

தமிழகத்தில் இன்று மட்டும் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,276 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது.

   

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 842 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

https://www.vikatan.com/news/general-news/17-06-2020-just-in-live-updates

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடிக் கழிச்சுப் பார்த்தால் வீட்டுக்குள்ளேயே இன்னும் ஓராண்டாவது இருக்கவேண்டியதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கூடிக் கழிச்சுப் பார்த்தால் வீட்டுக்குள்ளேயே இன்னும் ஓராண்டாவது இருக்கவேண்டியதுதான்

காசு தாறாங்கள் தானே.இருங்கோவன் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக 2,174 பேருக்கு தொற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது 21 வயது வாலிபர் உள்பட 48 பேர் பலி

புதிதாக 2,174 பேருக்கு தொற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது 21 வயது வாலிபர் உள்பட 48 பேர் பலி

 

தமிழகத்தில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. நேற்று 48 பேர் பலியாகினர்.
பதிவு: ஜூன் 18,  2020 05:45 AM
சென்னை,

தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 24 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் 1,367 ஆண்கள், 805 பெண்கள், 3-ம் பாலினத்தவர்கள் 2 பேர் என மொத்தம் 2,174 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 16 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 64 பேரும் உள்ளனர்.

இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது.

21 வயது வாலிபர் பலி

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 38 பேர், தனியார் மருத்துவமனையில் 10 பேர் என மொத்தம் 48 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 21 வயது வாலிபர், 90 வயது முதியவர் உள்பட 40 பேரும், காஞ்சீபுரம், செங்கல்பட்டை சேர்ந்த தலா இருவரும், திருவள்ளூர், விழுப்புரம், திண்டுக்கல், மதுரையை சேர்ந்த தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 842 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து உள்ளனர். இதுவரை 27 ஆயிரத்து 624 பேர் குணம் பெற்று உள்ளனர். இதையடுத்து 21 ஆயிரத்து 990 பேர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 89 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 254 முதியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 1,276 பேருக்கு...

தமிழத்தில் நேற்று 33 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் சென்னையில் 1,276 பேரும், செங்கல்பட்டில் 162 பேரும், திருவள்ளூரில் 90 பேரும், கடலூரில் 77 பேரும், ராணிப்பேட்டையில் 70 பேரும், காஞ்சீபுரத்தில் 61 பேரும், ராமநாதபுரத்தில் 51 பேரும், தூத்துக்குடியில் 50 பேரும், திருவண்ணாமலையில் 49 பேரும், மதுரையில் 27 பேரும், சேலத்தில் 25 பேரும், விழுப்புரத்தில் 20 பேரும், கள்ளக்குறிச்சியில் 16 பேரும், திண்டுக்கல், வேலூர், திருவாரூர், நெல்லையில் தலா 15 பேரும், நாகப்பட்டினத்தில் 13 பேரும், சிவகங்கை, தஞ்சாவூரில் தலா 12 பேரும், தர்மபுரியில் 10 பேரும், கன்னியாகுமரி, புதுக்கோட்டையில் தலா 9 பேரும், திருச்சி, கரூரில் தலா 8 பேரும், நீலகிரி, தென்காசியில் தலா 5 பேரும், தேனி, கிருஷ்ணகிரியில் தலா 3 பேரும், விருதுநகர், நாமக்கல், கோவையில் தலா 2 பேரும், திருப்பத்தூரில் ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியாக பலி?

தமிழகத்தில் இதுவரை சென்னையில் 461 பேரும், செங்கல்பட்டில் 33 பேரும், திருவள்ளூரில் 31 பேரும், காஞ்சீபுரத்தில் 10 பேரும், விழுப்புரம், மதுரையில் தலா 6 பேரும், திருவண்ணாமலையில் 4 பேரும், வேலூர், திண்டுக்கலில் தலா 3 பேரும், ராணிப்பேட்டை, தேனி, தூத்துக்குடியில் தலா இருவரும், விருதுநகர், திருச்சி, நெல்லை, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, ஈரோடு, கடலூர், கோவை மற்றும் விமான கண்காணிப்பு முகாமில் தலா ஒருவரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 231 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 108 பேரும், ரெயில் மூலம்

வந்த 338 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,619 பேரும், கடல் மார்கமாக வந்த 5 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 301 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/18021349/2174-new-infections-in-Tamil-NaduCorona-casualties.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தினமும் உயிர் பலி கேட்கும் கொரோனா: தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி 49 பேர் உயிரிழப்பு - புதிதாக 2,141 பேருக்கு தொற்று

தினமும் உயிர் பலி கேட்கும் கொரோனா: தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி 49 பேர் உயிரிழப்பு - புதிதாக 2,141 பேருக்கு தொற்று
 

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று 49 பேர் உயிரிழந்தனர். புதிதாக 2,141 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
பதிவு: ஜூன் 19,  2020 04:30 AM
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தினமும் உயிர் பலி கேட்கிறது. சிகிச்சை பலனின்றி நேற்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்து உள்ளனர். புதிதாக 2,141 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500-ஐ கடந்து உள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


தமிழகத்தில் நேற்று 1,280 ஆண்கள், 861 பெண்கள் என 2 ஆயிரத்து 91 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 40 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2 ஆயிரத்து 141 பேர் புதிதாக கொரோனாவில் சிக்கி உள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சி பெற்று வந்த 13 பேரும், என மொத்தம் 49 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு 625 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் சென்னையில் மட்டும் 34 வயது வாலிபர் உட்பட 40 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் பலி எண்ணிக்கை எண்ணிக்கை 501 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டியில் 5 பேரும், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலையை சேர்ந்த தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 1,017 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 28 ஆயிரத்து 641 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் தமிழக மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி 23 ஆயிரத்து 65 பேர் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சென்னை மருத்துவமனைகளில் மட்டும் 12 ஆயிரத்து 570 பேர் உள்ளனர். தமிழகத்தில் நேற்று 26 ஆயிரத்து 736 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், சென்னையில் 1,373 பேரும், திருவள்ளூரில் 123 பேரும், செங்கல்பட்டில் 115 பேரும், காஞ்சீபுரம், வேலூரில் தலா 55 பேரும், தென்காசியில் 34 பேரும், நெல்லையில் 30 பேரும், ராமநாதபுரத்தில் 28 பேரும், திருவண்ணாமலை, தூத்துக்குடி, விழுப்புரத்தில் தலா 27 பேரும், கோவையில் 23 பேரும், தஞ்சாவூரில் 21 பேரும், ராணிப்பேட்டையில் 20 பேரும், கன்னியாகுமரியில் 19பேரும், கடலூரில் 17 பேரும், சேலத்தில் 16 பேரும், சிவகங்கையில் 15 பேரும், திருச்சியில் 14 பேரும், விருதுநகரில் 13 பேரும், நாகப்பட்டினத்தில் 10 பேரும், மதுரையில் 9 பேரும், திருவாரூரில் 8 பேரும், புதுக்கோட்டையில் 7 பேரும், தேனியில் 6 பேரும், திருப்பூர்,திருப்பத்தூர், நீலகிரியில் தலா 4 பேரும், அரியலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூரில் தலா 3 பேரும், தர்மபுரி, திண்டுக்கலில் தலா இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 86 குழந்தைகளும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 1,771 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 284 முதியவர்களும் நேற்று பாதிப்புக்கு உள்ளாகினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/19025507/Treatment-in-Tamil-Nadu-is-ineffective-49-people-killed.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் முழு ஊரடங்கு: தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுக்கும் மக்கள்

சென்னையில் முழு ஊரடங்கு: தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுக்கும் மக்கள்

 

சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுத்ததால் வண்டலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பதிவு: ஜூன் 19,  2020 08:16 AM
சென்னை

சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுத்ததால் வண்டலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

கொரோனா தொற்று தீயாய் பரவிய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 


இதில், எந்தவித விதி மீறலிலும் ஈடுபடாமல் இருந்து சட்ட நடவடிக்கைகளுக்கு ஆட்படாமல் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது. 12 நாள் ஊரடங்கு எப்படி இருக்கும் என்றும் விளக்கம் அளித்து அறிவுறுத்தல் செய்த காவல்துறை, யாரும் அலட்சியமாக நடமாட வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். 

நேற்றிரவு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை நோக்கி ஏராளமானவர்கள் வாகனங்களில் புறப்பட்டனர்.

இதன் காரணமாக வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுந்தன. இ பாஸ் குறித்த பரிசோதனை நடத்தப்படாத நிலையில், செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கட்டணம் இன்றி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/19081622/Full-curfew-in-Chennai-People-invading-south-districts.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

சென்னையில் முழு ஊரடங்கு: தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுக்கும் மக்கள்

அப்படி செல்லும் மக்களுக்கு, தடை விதித்திருக்க வேண்டும்.
அல்லது... அவர்களை சோதித்து அனுப்பியிருக்கலாம்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்ட  சென்னையிலிருந்து...
மக்கள் மற்றைய மாவட்டங்களுக்கு... செல்லும் போது,    
மற்றைய மாவட்டங்களும், கொரோனா தொற்றுக்கு இலக்கு ஆகலாம். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 2,141 பேருக்கு கரோனா தொற்று: சென்னையில் 1,373 பேர் பாதிப்பு; சென்னை மொத்த உயிரிழப்பு 500-ஐக் கடந்தது

coronavirus-in-tamil-nadu-affects-2-141-people-1373-people-affected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,334 அதிகரித்துள்ளது. சென்னையில் 1,373 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 37,070 ஆக அதிகரித்துள்ளது.

2,141 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 64.1 சதவீதத் தொற்று சென்னையில் (1,373) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 52,334-ல் சென்னையில் மட்டும் 37,070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 70.8 சதவீதம் ஆகும்.

28,641 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 54.7 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, மற்ற மாநிலங்களின் ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 52 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் தொட்ட நிலையில், இன்று சென்னையும் 37 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 50 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,27,121.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 625 பேரில் சென்னையில் மட்டுமே 501 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 80 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 37,070-ல் 501 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.3 % என்கிற எண்ணிக்கையில் உள்ளது.

இதனால் சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு 1,16,752 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 52,334 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 47,102 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 25,093 ஆக உள்ளது.

சென்னையைத் தவிர மீதியுள்ள 33 மாவட்டங்களில் 768 பேருக்குத் தொற்று உள்ளது. 3 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 5 மண்டலங்கள் 3,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. ராயபுரம் மண்டலம் 6000 என்ற எண்ணிக்கையை நோக்கிச் செல்கிறது.

* தற்போது 45 அரசு ஆய்வகங்கள், 36 தனியார் ஆய்வகங்கள் என 81 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 28,641.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 8,00,433.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 26,736.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 8 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 52,334.

* மொத்தம் (52,334) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 32,241 (61.6%) / பெண்கள் 2,00,73 (38.3%)/ மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் ( .05 %)

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,141.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,280 (62.8%) பேர். பெண்கள் 861 (37.2%) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,017 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 28,641 பேர் (55%).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 49 பேர் உயிரிழந்தனர். இதில் 13 பேர் தனியார் மருத்துவமனையிலும், 36 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 625 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 501 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. உயிரிழப்புகளில் இளவயது மரணங்கள் சதவீதம் அதிக அளவில் உள்ளது. 50 வயதுக்கு உட்பட்டோர் 7 பேர் ஆவர். 35 வயதுக்குட்பட்டவர்கள் 2 பேர். முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,373 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 37,070 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 70.8 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 28.2 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 3,285, திருவள்ளூர் 2,155, கடலூர் 646, திருவண்ணாமலை 843, காஞ்சிபுரம் 945, அரியலூர் 400, திருநெல்வேலி 552, விழுப்புரம் 505, மதுரை 495, கள்ளக்குறிச்சி 357, தூத்துக்குடி 514, சேலம் 271, கோவை 211, பெரம்பலூர் 146, திண்டுக்கல் 250, விருதுநகர் 181, திருப்பூர் 120, தேனி 170, ராணிப்பேட்டை 404, திருச்சி 189, தென்காசி 196, ராமநாதபுரம் 222, வேலூர் 248, தஞ்சாவூர் 204, கன்னியாகுமரி 149, நாகப்பட்டினம் 181, திருவாரூர் 174, கரூர் 106 என்ற எண்ணிக்கையில் உள்ளன.

37 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 3 மாவட்டங்கள் 4 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. சென்னை 5 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 32 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 5 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 50 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 2,358 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2,619 பேர் (5 %). இதில் ஆண் குழந்தைகள் 1,357 பேர் (51.8 %) . பெண் குழந்தைகள் 1,262 பேர் (48.2 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 43,513 பேர் (83.1 %). இதில் ஆண்கள் 27,040 பேர். (62.2%) பெண்கள் 16,453 பேர் (37.7 %). மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் (.04 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 6,202 பேர் (11.8 %). இதில் ஆண்கள் 3,844 பேர் (61.9%). பெண்கள் 2,358 பேர் (38.1%).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/560064-coronavirus-in-tamil-nadu-affects-2-141-people-1373-people-affected-in-chennai-7.html

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் : சென்னையில் புதிதாக 40 பேர் உயிரிழப்பு!

chennai--720x450.jpg

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் வரையில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து சென்னையில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 501 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 3 முதியவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அத்துடன் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேரும்,  ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும்,  ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒரு பெண் உட்பட 3 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை சென்னையை பொருத்தவரையில் மண்டலவாரியாக ராயபுரம் மண்டலத்தில்  அதிகூடிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து முறையே தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர், திருவிக நகர், அடையாறு ஆகிய மண்டலங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-சென்னையில்-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 2,115 பேருக்கு கரோனா தொற்று: சென்னையில் 1,322 பேர் பாதிப்பு; 35 மாவட்டங்களில் தொற்று 

people-infected-with-coronavirus-in-tamil-nadu-1-322-affected-in-chennai-infection-in-35-districts  

சென்னை

தமிழகத்தில் இன்று 2,115 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,449 அதிகரித்துள்ளது. சென்னையில் 1,322 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்துள்ளது.

2,115 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 62.5 சதவீதத் தொற்று சென்னையில் (1,322) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 54,449-ல் சென்னையில் மட்டும் 38,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 70.3 சதவீதம் ஆகும்.

30,271 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 55.5 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, மற்ற மாநிலங்களின் ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 54 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 54 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் தொட்ட நிலையில், இன்று சென்னையும் 38 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 40 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,32,309.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 666 பேரில் சென்னையில் மட்டுமே 529 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 79.4 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 38,327-ல் 529 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.3 % ஆக உள்ளது.

இதனால் சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், சென்னையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.சென்னையில் இன்று முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் வீடு வீடாக சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 680 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒரு லட்சத்தைக் கடந்து 1.25 லட்சத்தை நோக்கிச் செல்கிறது. அங்கு 1,20,504 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 54,449 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 49,979 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 25,601 ஆக உள்ளது.

சென்னையைத் தவிர மீதியுள்ள 34 மாவட்டங்களில் 793 பேருக்குத் தொற்று உள்ளது. 2 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 5 மண்டலங்கள் 3,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. ராயபுரம் மண்டலம் 6000 என்ற எண்ணிக்கையை நோக்கிச் செல்கிறது.

* தற்போது 45 அரசு ஆய்வகங்கள், 38 தனியார் ஆய்வகங்கள் என 83 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 30,271.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 8,27,980.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 27,537.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 7.6 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 54,449.

* மொத்தம் (54,449) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 33,520 (61.5%) / பெண்கள் 20,909 (38.4%)/ மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் ( .05 %)

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,115.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,279 (60.4.8%) பேர். பெண்கள் 826 (39.2%) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,630 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 30,271 பேர் (55%).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 41 பேர் உயிரிழந்தனர். இதில் 15 பேர் தனியார் மருத்துவமனையிலும், 26 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 666 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 529 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரணங்கள் சதவீதம் அதிக அளவில் உள்ளது. 50 வயதுக்கு உட்பட்டோர் 9 பேர் ஆவர். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 3 பேர். முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,322 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 70.3 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 29.7 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் 35 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 3,432, திருவள்ளூர் 2,291, கடலூர் 647, திருவண்ணாமலை 853, காஞ்சிபுரம் 1,001, அரியலூர் 407, திருநெல்வேலி 584, விழுப்புரம் 528, மதுரை 550, கள்ளக்குறிச்சி 364, தூத்துக்குடி 529, சேலம் 280, கோவை 244, பெரம்பலூர் 147, திண்டுக்கல் 272, விருதுநகர் 179, திருப்பூர் 119, தேனி 185, ராணிப்பேட்டை 409, திருச்சி 207, தென்காசி 210, ராமநாதபுரம் 245, வேலூர் 354, தஞ்சாவூர் 213, கன்னியாகுமரி 151, நாகப்பட்டினம் 191, திருவாரூர் 186, கரூர் 103 என்ற எண்ணிக்கையில் உள்ளன.

37 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 3 மாவட்டங்கள் 4 இலக்கத்தைத் தாண்டியுள்ளன. சென்னை 5 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 35 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 2 மாவட்டங்களில் தொற்று இல்லை. மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 40 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 2,428 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2,701 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 1,399 பேர் (51.7 %) . பெண் குழந்தைகள் 1,302 பேர் (48.3 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 45,299 பேர் (83.1 %). இதில் ஆண்கள் 28,132 பேர். (62.1%) பெண்கள் 17,147 பேர் (37.8 %). மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் (.04 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 6,449 பேர் (11.8 %). இதில் ஆண்கள் 3,989 பேர் (61.8%). பெண்கள் 2,460 பேர் (38.2%).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/560224-people-infected-with-coronavirus-in-tamil-nadu-1-322-affected-in-chennai-infection-in-35-districts-7.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 2,396 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆக உயர்வு; ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு

2-396-more-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய நிலவரம்

சென்னை

தமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் அதிகபட்சமாக, 1,276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று (ஜூன் 20) கரோனா தொற்று பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரம்:

 

'தமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 33 ஆயிரத்து 231 மாதிரிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 8 லட்சத்து 61 ஆயிரத்து 211 மாதிரிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 32 ஆயிரத்து 186 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 8 லட்சத்து 21 ஆயிரத்து 594 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

அரசு சார்பில் 45, தனியார் சார்பில் 40 என மொத்தம் 85 கரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

இன்று மட்டும் தமிழகம் முழுவதும் 1,045 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, இதுவரை 31 ஆயிரத்து 316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று மட்டும் 38 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதில், 14 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 24 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் இணை நோய் உள்ளவர்கள் 33 பேர் மற்றும் இணை நோய் அல்லாதவர்கள் 5 பேர் ஆவர்.

தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 822 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக, 1,276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது''.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலைக் காண: ஜூன் 20-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

பட்டியலைக் காண: ஜூன் 20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

 

https://www.hindutamil.in/news/tamilnadu/560368-2-396-more-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-3.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புதிதாக 2,532 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 53 பேர் பலி - தொற்று 60 ஆயிரத்தை தொடுகிறது
 
புதிதாக 2,532 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 53 பேர் பலி - தொற்று 60 ஆயிரத்தை தொடுகிறது
 

தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 53 பேர் பலியானார்கள். புதிதாக 2,532 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் தொற்று 60 ஆயிரத்தை தொடுகிறது.
பதிவு: ஜூன் 22,  2020 04:00 AM
சென்னை, 

தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 2 ஆயிரத்து 480 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்த 5 பேர், வெளிமாநிலங்களில் இருந்து 47 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 532 பேர் நேற்று கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 1,579 பேர் ஆண்கள், 953 பேர் பெண்கள் ஆவார்கள்.


இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 59 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரசு மருத்துவமனையில் 37 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் என 53 பேர் நேற்று உயிரிழந்தனர். இதில் சென்னையில் 42 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், திருவள்ளூரில் 3 பேரும், விழுப்புரத்தில் 2 பேரும், திருவண்ணாமலை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் அடங்குவர். 50 பேர் பிற நாள்பட்ட நோய்களுடன் கொரோனா பிடியில் சிக்கியதால் உயிரிழந்து இருக்கின்றனர். 3 பேர் கொரோனாவால் மட்டும் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரையில் கொரோனா 757 பேரின் உயிரை பறித்து உள்ளது. சென்னையில் மட்டும் 601 பேர் இறந்து உள்ளனர்.

சென்னையில் 1,493 பேர்

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதித்தவர்களில் சென்னையில் 1,493 பேரும், செங்கல்பட்டில் 121 பேரும், திருவள்ளூரில் 120 பேரும், கடலூரில் 102 பேரும், வேலூரில் 87 பேரும், திருவண்ணாமலையில் 77 பேரும், மதுரையில் 69 பேரும், காஞ்சீபுரத்தில் 64 பேரும், தஞ்சாவூரில் 49 பேரும், திருச்சியில் 36 பேரும், ராமநாதபுரம், திருவாரூர், விழுப்புரத்தில் தலா 30 பேரும், நெல்லையில் 28 பேரும் திண்டுக்கலில் 27 பேரும், நாகப்பட்டினத்தில் 25 பேரும், தென்காசியில் 23 பேரும், கள்ளக்குறிச்சியில் 21 பேரும், விருதுநகரில் 13 பேரும், கோவை, சேலத்தில் தலா 12 பேரும், ஈரோடு, சிவகங்கை, தேனியில் தலா 7 பேரும், அரியலூர், கன்னியாகுமரியில் தலா 6 பேரும், தர்மபுரி, கரூரில் தலா 5 பேரும், திருப்பூரில் 4 பேரும், தூத்துக்குடி, ராணிப்பேட்டை, நாமக்கலில் தலா 2 பேரும், புதுக்கோட்டையில் ஒருவரும் உள்ளனர்.

எத்தனை பேருக்கு பரிசோதனை?

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து நேற்று 1,438 பேர் குணம் அடைந்தனர். இதுவரையில் 32 ஆயிரத்து 754 பேர் குணமடைந்து உள்ளனர். சிகிச்சையில் 25 ஆயிரத்து 863 பேர் உள்ளனர். தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 130 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 279 முதியவர்களும் நேற்று பாதிக்கப்பட்டனர். இதுவரையில் 12 வயதுக்கு உட்பட்ட 2 ஆயிரத்து 934 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 7 ஆயிரத்து 43 முதியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 31 ஆயிரத்து 401 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 8 லட்சத்து 92 ஆயிரத்து 612 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/22034057/2532-new-people-affected-To-Corona-in-Tamil-Nadu-53.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 2,710 பேருக்கு கரோனா தொற்று: சென்னையில் 1,487 பேர் பாதிப்பு; 37 மாவட்டங்களிலும் தொற்று

people-infected-with-coronavirus-in-tamil-nadu-affected-in-chennai-infection-in-37-districts  

சென்னை

தமிழகத்தில் இன்று 2,710 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,487 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 42,752 ஆக அதிகரித்துள்ளது.

2,710 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 54.8 சதவீதத் தொற்று சென்னையில் (1,487) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 62,087-ல் சென்னையில் மட்டும் 42,752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 68.8 சதவீதம் ஆகும்.

34,112 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 54.9 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, மற்ற மாநிலங்களின் ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 62 ஆயிரத்தைக் கடந்து 65 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. இந்திய அளவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 62 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் தொட்ட நிலையில், இன்று சென்னையும் 42 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 52 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,47,564.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 794 பேரில் சென்னையில் மட்டுமே 623 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 78.4 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 42,752-ல் 623 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.4 % ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.2 % ஆக உள்ளது.

இதனால் சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 580 முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்கு சோதனை செய்யப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாக சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒரு லட்சத்தைக் கடந்து 1.40 லட்சத்தை நோக்கிச் செல்கிறது. அங்கு 1,32,075 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 62,087 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 59,377 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 27,260 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,223 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 4 மண்டலங்கள் 3,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. தண்டையார் பேட்டை மண்டலம் 5,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. ராயபுரம் மண்டலம் 6,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது.

* தற்போது 46 அரசு ஆய்வகங்கள், 41 தனியார் ஆய்வகங்கள் என 87 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 27,178.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 9,19,204.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 26,592.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 10.1 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 62,087.

* மொத்தம் (62,087) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 38,340 (61.7%) / பெண்கள் 23,727 (38.2%)/ மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் ( .05 %)

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,710.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,742 (64.2 %) பேர். பெண்கள் 968 (35.8.1%) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,358 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 34,112 பேர் (54.9 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 37 பேர் உயிரிழந்தனர். இதில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 30 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 794 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 623 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரணங்கள் சதவீதம் அதிக அளவில் உள்ளன. 50 வயதுக்கு உட்பட்டோர் 11 பேர் ஆவர். இது 29 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 2 பேர். முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 35 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 2 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,487 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 42,752 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 68.8 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 31.2 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் 33 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 3,872, திருவள்ளூர் 2,645, காஞ்சிபுரம் 1,215, திருவண்ணாமலை 1,199, கடலூர் 823, திருநெல்வேலி 644, மதுரை 849, விழுப்புரம் 606, தூத்துக்குடி 639, வேலூர் 491, ராணிப்பேட்டை 525, அரியலூர் 432, கள்ளக்குறிச்சி 395, சேலம் 352, கோவை 280, பெரம்பலூர் 151, திண்டுக்கல் 312, விருதுநகர் 208, திருப்பூர் 122, தேனி 236, திருச்சி 310, தென்காசி 261, ராமநாதபுரம் 317, தஞ்சாவூர் 308, கன்னியாகுமரி 178, நாகப்பட்டினம் 219, திருவாரூர் 231, கரூர் 119 என்ற எண்ணிக்கையில் உள்ளன.

37 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 4 மாவட்டங்கள் 4 இலக்கத்தைத் தாண்டியுள்ளன. சென்னை 5 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. முதன்முறையாக தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் தொற்று உறுதியாகியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 58 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 2,605 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 3,060 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 1,574 பேர் (51.4 %) . பெண் குழந்தைகள் 1,486 பேர் (48.6 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 51,653 பேர் (83.1 %). இதில் ஆண்கள் 32,180 பேர். (62.3%) பெண்கள் 19,453 பேர் (37.6 %). மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் (.04 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 7,374 பேர் (11.8 %). இதில் ஆண்கள் 4,586 பேர் (62 %). பெண்கள் 2,788 பேர் (38%).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/560662-people-infected-with-coronavirus-in-tamil-nadu-affected-in-chennai-infection-in-37-districts-7.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

65 ஆயிரத்தை நெருங்கும் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை - மாவட்ட வாரியாக விவரம்

65 ஆயிரத்தை நெருங்கும் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை - மாவட்ட வாரியாக விவரம்

தமிழகத்தில் நேற்று புதிதாக 2,516 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். 


 
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 35 ஆயிரத்து 339 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 833 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அரியலூர் - 432
செங்கல்பட்டு - 4,030
சென்னை - 44,205
கோவை - 292
கடலூர் - 850
தர்மபுரி - 43
திண்டுக்கல் - 357
ஈரோடு - 87
கள்ளக்குறிச்சி - 437
காஞ்சிபுரம் - 1,286
கன்னியாகுமரி - 180
கரூர் - 120
கிருஷ்ணகிரி - 67 
மதுரை - 988
நாகை - 165
நாமக்கல் - 89
நீலகிரி - 48
பெரம்பலூர் - 163
புதுக்கோட்டை - 88
ராமநாதபுரம் - 339
ராணிப்பேட்டை - 551
சேலம் - 347
சிவகங்கை - 103
தென்காசி - 272
தஞ்சாவூர் - 319
தேனி - 284
திருப்பத்தூர் - 75
திருவள்ளூர் - 2,826
திருவண்ணாமலை - 1,313
திருவாரூர் - 241
தூத்துக்குடி - 678
திருநெல்வேலி - 648
திருப்பூர் - 120
திருச்சி - 352
வேலூர் - 526
விழுப்புரம் - 617
விருதுநகர் - 234
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 275
உள்நாடு - 155
ரெயில் நிலைய கண்காணிப்பு - 401

மொத்தம் - 64,603
https://www.maalaimalar.com/news/topnews/2020/06/24025623/1639495/Coronavirus-Confirmed-Cases-Nears-65-Thousand-in-Tamilnadu.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 2,516 பேருக்கு கரோனா தொற்று: சென்னையில் 1,380 பேர் பாதிப்பு

2-516-corona-virus-infections-in-tamil-nadu-1-380-affected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 2,516 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,603 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,380 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 44,205 ஆக அதிகரித்துள்ளது.

2,516 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 54.8 சதவீதத் தொற்று சென்னையில் (1,380) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 64,603-ல் சென்னையில் மட்டும் 44,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 68.4 சதவீதம் ஆகும்.

35,339 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 54.7 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, மற்ற மாநிலங்களின் ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 64 ஆயிரத்தைக் கடந்து 65 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. இந்திய அளவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 64 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் தொட்ட நிலையில், இன்று சென்னையும் 44 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 33 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,52,676.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 833 பேரில் சென்னையில் மட்டுமே 645 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 77.4 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 44,205-ல் 645 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.4 % ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.2 % ஆக உள்ளது.

இதனால் சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 580 முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்கு சோதனை செய்யப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாக சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒரு லட்சத்தைக் கடந்து 1.40 லட்சத்தை நோக்கிச் செல்கிறது. அங்கு 1,35,796 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 64, 603 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 62,655 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 27,825 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 34 மாவட்டங்களில் 1,223 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 4 மண்டலங்கள் 3,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. தண்டையார் பேட்டை மண்டலம் 5,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. ராயபுரம் மண்டலம் 6,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது.

* தற்போது 46 அரசு ஆய்வகங்கள், 41 தனியார் ஆய்வகங்கள் என 87 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 28,428.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 9,44,352.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 25,148.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 10 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 64,603.

* மொத்தம் (64,603) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 39,897 (61.7%) / பெண்கள் 24,686 (38.2%)/ மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் ( .05 %)

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,516.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,557 (61.8 %) பேர். பெண்கள் 959 (38.1%) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,227 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 35,339 பேர் (54.7 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 39 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் தனியார் மருத்துவமனையிலும், 28 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 833 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 645 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரணங்கள் சதவீதம் அதிக அளவில் உள்ளன. 50 வயதுக்கு உட்பட்டோர் 3 பேர் ஆவர். இது 6 சதவீதம் ஆகும். முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 36 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 3 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,380 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 44,205 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 68.4 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 31.6 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் 35 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 4,030, திருவள்ளூர் 2,826, காஞ்சிபுரம் 1,286, திருவண்ணாமலை 1,313, கடலூர் 850, திருநெல்வேலி 648, மதுரை 988, விழுப்புரம் 617, தூத்துக்குடி 678, வேலூர் 526, ராணிப்பேட்டை 551, அரியலூர் 437, கள்ளக்குறிச்சி 437, சேலம் 347, கோவை 292, பெரம்பலூர் 193, திண்டுக்கல் 357, விருதுநகர் 234, திருப்பூர் 120, தேனி 284, திருச்சி 352, தென்காசி 272, ராமநாதபுரம் 339, தஞ்சாவூர் 319, கன்னியாகுமரி 180, நாகப்பட்டினம் 165, திருவாரூர் 241, கரூர் 120 என்ற எண்ணிக்கையில் உள்ளன.

37 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 4 மாவட்டங்கள் 4 இலக்கத்தைத் தாண்டியுள்ளன. சென்னை 5 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. முதன்முறையாக தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் தொற்று உறுதியாகியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 58 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 2,643 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 3188 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 1,645 பேர் (51.5 %) . பெண் குழந்தைகள் 1,543 பேர் (48.5 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 53,740 பேர் (82.7 %). இதில் ஆண்கள் 33,477 பேர். (62.2%) பெண்கள் 20,243 பேர் (37.6 %). மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் (.04 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 7,675 பேர் (11.8 %). இதில் ஆண்கள் 4,775 பேர் (62.2 %). பெண்கள் 2,900 பேர் (37.8%).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

 

https://www.hindutamil.in/news/tamilnadu/560839-2-516-corona-virus-infections-in-tamil-nadu-1-380-affected-in-chennai-7.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.