Jump to content

தமிழகத்தில் தீவிரமாகும் கோரோனோ.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 2,865 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,654 பேர் பாதிப்பு: சென்னை 45 ஆயிரத்தைக் கடந்தது

corona-virus-infections-in-tamil-nadu-affected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 2,865 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,468 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,654 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 45,814 ஆக அதிகரித்துள்ளது.

2,865 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 57.7 சதவீதத் தொற்று சென்னையில் (1,654) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 67,468-ல் சென்னையில் மட்டும் 45,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 67.9 சதவீதம் ஆகும்.

37,763 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 55.9 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, மற்ற மாநிலங்களின் ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 67 ஆயிரத்தைக் கடந்து 70 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் 67 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் தொட்ட நிலையில், இன்று சென்னையும் 45 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 91 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,57,745.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 866 பேரில் சென்னையில் மட்டுமே 668 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 77.1 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 45,814-ல் 668 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.4 % ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.2 % ஆக உள்ளது.

இதனால் சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 580 முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒரு லட்சத்தைக் கடந்து 1.40 லட்சத்தை நோக்கிச் செல்கிறது. அங்கு 1,39,010 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவில் தொற்று எண்ணிக்கை காரணமாக மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்குச் சென்றுள்ளது. அதன் எண்ணிக்கை 70,390 அதற்கு அடுத்த இடத்தில் 67,468 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 28,371 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,211 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 2 மண்டலங்கள் 5,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. 2 மண்டலங்கள் 4,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. ராயபுரம் மண்டலம் 6,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. மொத்தம் 15 மண்டலங்களில் 11 மண்டலங்கள் 4 இலக்க எண்களைக் கடந்துள்ளது.

* தற்போது 47 அரசு ஆய்வகங்கள், 41 தனியார் ஆய்வகங்கள் என 88 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 28,836.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 9,76,431.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 32,079.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 8.9 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 67,468.

* மொத்தம் (67,468) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 41,678 (61.7%) / பெண்கள் 25,770 (38.2%)/ மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் ( .05 %)

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,865.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,781 (62.1%) பேர். பெண்கள் 1084 (37.9 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,424 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 37,763 பேர் (54.7%).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 33 பேர் உயிரிழந்தனர். இதில் 8 பேர் தனியார் மருத்துவமனையிலும், 25 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 866 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 668 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரணங்கள் சதவீதம் அதிக அளவில் உள்ளன. 50 வயதுக்கு உட்பட்டோர் 8 பேர் ஆவர். இது 24.2 சதவீதம் ஆகும். முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 30 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 3 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,654 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 45,814 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 67.9 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 32.1 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் 35 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 4,202, திருவள்ளூர் 2,907, காஞ்சிபுரம் 1,375, திருவண்ணாமலை 1,372, மதுரை 1073, கடலூர் 892, திருநெல்வேலி 680, விழுப்புரம் 654, தூத்துக்குடி 732, வேலூர் 580, ராணிப்பேட்டை 545, அரியலூர் 440, கள்ளக்குறிச்சி 448, சேலம் 404, கோவை 314, பெரம்பலூர் 168, திண்டுக்கல் 367, விருதுநகர் 275, திருப்பூர் 121, தேனி 365, திருச்சி 434, தென்காசி 277, ராமநாதபுரம் 338, தஞ்சாவூர் 335, கன்னியாகுமரி 200, நாகப்பட்டினம் 228, திருவாரூர் 272, கரூர் 129, புதுக்கோட்டை 101 என்ற எண்ணிக்கையில் உள்ளன.

37 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 4 மாவட்டங்கள் 4 இலக்கத்தைத் தாண்டியுள்ளன. சென்னை 5 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் தொற்று உறுதியாகியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 91 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 2,736 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 3,317 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 1,711 பேர் (51.5 %) . பெண் குழந்தைகள் 1,606 பேர் (48.5 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 56,124 பேர் (83.1 %). இதில் ஆண்கள் 34,966 பேர். (62.3%) பெண்கள் 21,138 பேர் (37.5 %). மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் (.04 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 8,027 பேர் (11.8 %). இதில் ஆண்கள் 5,001 பேர் (62.3 %). பெண்கள் 3,026 பேர் (37.7%).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/560995-corona-virus-infections-in-tamil-nadu-affected-in-chennai-7.html

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Country,
Other
Total
Cases
New
Cases
Total
Deaths
New
Deaths
Total
Recovered
Active
Cases
Serious,
Critical
Tot Cases/
1M pop
Deaths/
1M pop
Total
Tests
Tests/
1M pop
Population
  World 9,527,124 +7,642 484,972 +1,013 5,175,405 3,866,747 58,421 1,222 62.2      
1 USA 2,462,554   124,281    1,040,605 1,297,668 16,541 7,440 376 30,059,864 90,823 330,970,517
2 Brazil 1,192,474   53,874    649,908 488,692 8,318 5,611 253 2,751,953 12,948 212,533,446
3 Russia 606,881   8,513    368,822 229,546 2,300 4,159 58 17,803,955 122,000 145,933,597
4 India 472,985   14,907    271,688 186,390 8,944 343 11 7,352,911 5,329 1,379,752,264
5 UK 306,862   43,081    N/A N/A 311 4,521 635 8,542,186 125,842 67,880,218
6 Spain 294,166   28,327    N/A N/A 617 6,292 606 5,162,909

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,837 பேர் கொரோனாவால் பாதிப்பு!

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,837 பேர் கொரோனாவால் பாதிப்பு!

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,837 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பதிவு: ஜூன் 25,  2020 11:37 AM
சென்னை
 
சென்னையில் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு 45 ஆயிரத்து 814ஆக அதிகரித்த நிலையில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6 ஆயிரத்து 837 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
 
இதற்கடுத்து அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் 5,531 பேருக்கும், தேனாம்பேட்டையில் 5316 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
 
 
202006251137377873_chennaicorporation._Lஇதையடுத்து அண்ணாநகரில் 4922 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 4908 பேருக்கும், திருவிக நகரில் 3896 பேருக்கும், அடையாறில் 2777 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
 
வளசரவாக்கத்தில் 1957ஆகவும், திருவொற்றியூரில் 1755ஆகவும், அம்பத்தூரில் 1741ஆகவும், மாதவரத்தில் 1383ஆகவும், ஆலந்தூரில் 1124ஆகவும் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.
 
இதுவரை 26 ஆயிரத்து 472 பேர் சிகிச்சையில் குணமான நிலையில், 668 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18,673 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
 
இதையடுத்து சென்னையில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனால் அதனையும் மீறி சிலர் பாதுகாப்பு இல்லாமல் அரசு உத்தரவை மீறி வெளியில் சுற்றுவது முககவசம் அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல் செய்து வருகின்றனர். இதனால் வேகமாக தொற்று பரவி வருகிறது.
 
எனவே ஊரடங்கை மீறுவோருக்கு  அதிரடி படை  மூலம் கூடுதல் காவல்படையை களமிறங்கி உள்ளனர். வடசென்னையில் இருசக்கர வாகனங்களில் மற்றும் தெருக்களில் சுற்றுபவர்கள் நோய்த்தொற்று பரப்பும் வகையில் சுற்றி வருபவர்களை கட்டுப்படுத்த  இன்று முதல் வட சென்னை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர், ஆய்வாளர்கள் ரவி, கவிதா மற்றும் அதிவிரைவு படை ஆய்வாளர் பூமாறன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட அதிவிரைவு படை வீரர்கள் வடசென்னையில் உள்ள அனைத்து தெருக்களிலும் ஆட்கள் நடமாட்டங்களை குறைக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் உச்சபட்சமாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கரோனா; 70 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு எண்ணிக்கை; சென்னையில் 1,856 பேருக்குத் தொற்று

3-509-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu  

சென்னை

தமிழகத்தில் உச்சபட்சமாக இன்று மட்டும் 3,509 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,856 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று (ஜூன் 25) கரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

'தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 32 ஆயிரத்து 543 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 10 லட்சத்து 8,974 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 30 ஆயிரத்து 307 தனி நபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 9 லட்சத்து 60 ஆயிரத்து 674 தனிநபர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அரசு சார்பாக 47, தனியார் சார்பாக 41 என மொத்தம் 88 கரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

இன்று மட்டும் 2,236 பேர் ஒரே நாளில் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 39 ஆயிரத்து 999 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இன்று 45 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். அதில் 16 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 29 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் இருந்தவர்கள் 42 பேர். இணை நோய் அல்லாதவர்கள் 3 பேர்.

இன்று கரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக, 1,856 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளது''.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. பட்டியலைக் காண: ஜூன் 25-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. பட்டியலைக் காண:ஜூன் 25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

https://www.hindutamil.in/news/tamilnadu/561152-3-509-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் -ஒரே வார்டில் 10 பேர் பலி

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் -ஒரே வார்டில் 10 பேர் பலி

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 10 பேர் நேற்று ஒரே நாளில் பலி ஆனார்கள்.
பதிவு: ஜூன் 26,  2020 05:45 AM
மதுரை, 

தமிழகத்தில் கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்து இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 3,509 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 977 ஆக அதிகரித்தது. மேலும் நேற்று 45 பேர் உயிர் இழந்தனர். இதனால் தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 911 ஆக உயர்ந்தது.

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மதுரை மாவட்டத்தில் 204 பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 140 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 28 பேருக்கும், சிவகங்கை மாவட்டத்தில்25 பேருக்கும் நேற்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

மதுரையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் நகரிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வருகிற 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 பேர் நேற்று அதிகாலை முதல் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். சிகிச்சை பலன் இன்றி ஒரே நாளில் 10 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

நேற்று மரணம் அடைந்த 10 பேரில் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபரும் ஒருவர். இவர் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இவருக்கு மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவருக்கு வேறு எந்த நோய் தொற்றும் இல்லாத நிலையில் கொரோனாவால் இறந்திருக்கிறார்.

இதேபோல் மதுரை தெற்கு மாரட் வீதியைச் சேர்ந்த 63 வயது நபர், அய்யர் பங்களா பகுதியைச் சேர்ந்த 87 வயது முதியவர், விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் என 3 பேரும் உயிர் இழந்தனர்.

கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த மற்ற 6 பேர் மரணம் அடைந்தது குறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, அவர்கள் 6 பேரும் கொரோனா வார்டில் கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும், அவர்களுடைய பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும், மேலும் அவர்களில் வயதானவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர்கள் இறந்து இருக்கலாம் என்றும் கூறினார்கள். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர்கள் மரணம் குறித்து உறுதியாக கூற முடியும் என அவர்கள் தெரிவித்தனர். மரணம் அடைந்த 10 பேரின் உடல்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ராமநாதபுர மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். பருந்து விமானதளத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள ஹெலிகாப்டர் மற்றும் ஆளில்லாத விமானங்கள் மூலம் இந்திய கடல் எல்லை கண்காணிக்கப்படுகிறது.

அங்கு பணியாற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் சிலர் சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். அங்கிருந்து சென்னை திரும்பிய அவர்கள் கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் பணியில் சேருவதற்காக சென்னையில் இருந்து உச்சிப்புளி சென்றனர்.

அங்கு வீரர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு கடற்படை விமானதளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறையினர் உச்சிப்புளி கடற்படை விமானதளத்துக்கு சென்று நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கினர். மேலும் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/26044344/10-Corona-patients-died-in-madurai.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 3,645 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,956 பேர் பாதிப்பு: 50 ஆயிரத்தை நெருங்கும் தலைநகரம்

coronavirus-causes-3-645-cases-in-tamil-nadu-1-956-affected-in-chennai-50-thousand-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 3,645 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,956 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 49,690 ஆக அதிகரித்துள்ளது.

3,645 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 53.66 சதவீதத் தொற்று சென்னையில் (1,956) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 74,622 -ல் சென்னையில் மட்டும் 49,690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 66.58 சதவீதம் ஆகும்.

41,357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 55.4 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, மற்ற மாநிலங்களின் ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 70 ஆயிரத்தைக் கடந்து 75 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் 74 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் தொட்ட நிலையில், இன்று சென்னையும் 49 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 151 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,61,724.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 957 பேரில் சென்னையில் மட்டுமே 730 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 76.2 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 49,690-ல் 730 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.4% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.4% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தப்படுவதாகவும் அதில் 3500 பேர் நோய் அறிகுறியுடன் உள்ளதாகவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒரு லட்சத்தைக் கடந்து 1.50 லட்சத்தை நோக்கிச் செல்கிறது. அங்கு 1,47,741 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அதிக அளவில் தொற்று எண்ணிக்கை காரணமாக மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்குச் சென்றுள்ளது. அதன் நேற்றைய எண்ணிக்கை 73,780. அதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் 74,622 என்ற எண்ணிக்கையுடன் இன்று உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 29,520 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 36 மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,689 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் 2 மண்டலங்கள் 5,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டன. 2 மண்டலங்கள் 4,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளன. ராயபுரம் மண்டலம் 6,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. மொத்தம் 15 மண்டலங்களில் 11 மண்டலங்கள் 4 இலக்க எண்களைக் கடந்துள்ளன.

* தற்போது 47 அரசு ஆய்வகங்கள், 42 தனியார் ஆய்வகங்கள் என 89 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 41,357.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 10,42,649.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 33,675.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 10.8 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 74,622.

* மொத்தம் (74,622) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 46,046 (61.7%) / பெண்கள் 28,556 (38.2%)/ மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் ( .05 %)

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,645.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,211 (60.6%) பேர். பெண்கள் 1,434 (39.4 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,358 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 41,357 பேர் (55.4%).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 46 பேர் உயிரிழந்தனர். இதில் 15 பேர் தனியார் மருத்துவமனையிலும், 31 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 957 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 730 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரணங்கள் சதவீதம் அதிக அளவில் உள்ளன. 50 வயதுக்கு உட்பட்டோர் 8 பேர் ஆவர். இது 17.3 சதவீதம் ஆகும். 40 வயதுக்குட்பட்டவர்கள் 2 பேர் ஆவர். ஆண்கள் 32 பேர். பெண்கள் 14 பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 44 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 2 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,956 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 49,690 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 66.5 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 33.5 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் 36 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 4,651, திருவள்ளூர் 3,277, காஞ்சிபுரம் 1,580, திருவண்ணாமலை 1,498, மதுரை 1,477, கடலூர் 929, வேலூர் 901, தூத்துக்குடி 789, திருநெல்வேலி 710, விழுப்புரம் 712, ராணிப்பேட்டை 620, அரியலூர் 454, கள்ளக்குறிச்சி 527, சேலம் 599, கோவை 393, பெரம்பலூர் 165, திண்டுக்கல் 344, விருதுநகர் 314, திருப்பூர் 141, தேனி 477, திருச்சி 493, தென்காசி 294, ராமநாதபுரம் 546, தஞ்சாவூர் 382, கன்னியாகுமரி 275, நாகப்பட்டினம் 209, திருவாரூர் 295, கரூர் 135, புதுக்கோட்டை 112, திருப்பத்தூர் 100, சிவகங்கை 130, ஈரோடு 100 என்ற எண்ணிக்கையில் உள்ளன.

37 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் மட்டுமே தொற்று எண்ணிக்கை 100-க்குள் உள்ளது. 27 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 5 மாவட்டங்கள் 4 இலக்கத்தைத் தாண்டியுள்ளன. சென்னை 5 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. இன்று தமிழகத்தில் 36 மாவட்டங்களிலும் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 151 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 2,887 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 3,481 பேர் (4.6 %). இதில் ஆண் குழந்தைகள் 1,788 பேர் (51.3 %) . பெண் குழந்தைகள் 1,693 பேர் (48.7 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 59,073 பேர் (79.1 %). இதில் ஆண்கள் 36,808 பேர். (62.3%) பெண்கள் 22,245 பேர் (37.5 %). மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் (.04 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 8,423 பேர் (11.2 %). இதில் ஆண்கள் 5,239 பேர் (62.1 %). பெண்கள் 3,184 பேர் (37.9%).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/561341-coronavirus-causes-3-645-cases-in-tamil-nadu-1-956-affected-in-chennai-50-thousand-in-chennai-8.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 3,713 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,939 பேர் பாதிப்பு: 50 ஆயிரத்தைக் கடந்தது தலைநகரம்

chennai-over-50-thousand-3-713-cases-of-coronavirus-in-tamil-nadu-1-939-affected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 3,713 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,939 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 51,699 ஆக அதிகரித்துள்ளது.

3,713 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 52.2 சதவீதத் தொற்று சென்னையில் (1,939 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 78,335 -ல் சென்னையில் மட்டும் 51,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 65.99 சதவீதம் ஆகும். 44,094 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 56.2 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, மற்ற மாநிலங்களின் ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 78 ஆயிரத்தைக் கடந்து 80 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் 78 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் தொட்ட நிலையில், இன்று சென்னையும் 51 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 89 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,71,572.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 1000-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,025 பேரில் சென்னையில் மட்டுமே 776 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 75.7 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 51,699 -ல் 776 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.5% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.3% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்குச் சோதனை நடத்தப்படுவதாகவும் அதில் 3,500 பேர் நோய் அறிகுறியுடன் உள்ளதாகவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒன்றரை லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 1,52,765 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அதிக அளவில் தொற்று எண்ணிக்கை காரணமாக மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்குச் சென்றுள்ளது. அதன் நேற்றைய எண்ணிக்கை 77,240. அதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் 78,335 என்ற எண்ணிக்கையுடன் இன்று உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 30,095 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 36 மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 35 மாவட்டங்களில் 1,774 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் 4 மண்டலங்கள் 5,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டன. 1 மண்டலம் 4,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளன. ராயபுரம் மண்டலம் 7,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. மொத்தம் 15 மண்டலங்களில் 13 மண்டலங்கள் 4 இலக்க எண்களைக் கடந்துள்ளன.

* தற்போது 47 அரசு ஆய்வகங்கள், 42 தனியார் ஆய்வகங்கள் என 89 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 44,094.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 10,77,454.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 34,805.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 10.6 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 78,335.

* மொத்தம் (78,335) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 48,346 (61.7%) / பெண்கள் 29,968 (38.2%)/ மூன்றாம் பாலினத்தவர் 21 பேர் ( .05 %)

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,713 .

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,300 (61.9 %) பேர். பெண்கள் 1,412 (38.1 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,737 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 44,094 பேர் (56.2 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 68 பேர் உயிரிழந்தனர். இதில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 45 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,025 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 776 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 68 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 14 பேர் ஆவர். இது 20.5 சதவீதம் ஆகும். 40 வயதுக்குட்பட்டவர்கள் 8 பேர் ஆவர். ஆண்கள் 52 பேர். பெண்கள் 16 பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 60 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,939 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 51,699 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 65.9 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 34.1 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 36 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 4,911, திருவள்ளூர் 3,420, காஞ்சிபுரம் 1,683, திருவண்ணாமலை 1,624, மதுரை 1,703, கடலூர் 940, வேலூர் 1,011, தூத்துக்குடி 832, விழுப்புரம் 765, திருநெல்வேலி 723, ராணிப்பேட்டை 719, ராமநாதபுரம் 648, சேலம் 604, கள்ளக்குறிச்சி 552, தேனி 513, திருச்சி 503, அரியலூர் 458, கோவை 428, தஞ்சாவூர் 396, திண்டுக்கல் 369, திருவாரூர் 340, விருதுநகர் 313, கன்னியாகுமரி 304, தென்காசி 303, நாகப்பட்டினம் 249, பெரம்பலூர் 161, சிவகங்கை 157, திருப்பூர் 147, கரூர் 136, புதுக்கோட்டை 131, திருப்பத்தூர் 115, கிருஷ்ணகிரி 115, ஈரோடு 112 என்ற எண்ணிக்கையில் உள்ளன.

37 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் மட்டுமே தொற்று எண்ணிக்கை 100க்குள் உள்ளது. 28 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 5 மாவட்டங்கள் 4 இலக்கத்தைத் தாண்டியுள்ளன. சென்னை 5 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. இன்று தமிழகத்தில் 36 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 89 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 3,098 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 3,796 பேர் (4.8 %). இதில் ஆண் குழந்தைகள் 1,946 பேர் (51.2 %) . பெண் குழந்தைகள் 1,850 பேர் (48.8 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 65,213 பேர் (83.2 %). இதில் ஆண்கள் 40,617 பேர். (62.2%) பெண்கள் 24,575 பேர் (37.7 %). மூன்றாம் பாலினத்தவர் 21 பேர் (.04 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 9,326 பேர் (11.9 %). இதில் ஆண்கள் 5,783 பேர் (62.0 %). பெண்கள் 3,543 பேர் (38 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/561475-chennai-over-50-thousand-3-713-cases-of-coronavirus-in-tamil-nadu-1-939-affected-in-chennai-7.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200628-154413.jpg

திருவண்ணாமலை , விழுப்புரம் , வேலூர் பின்னி பெடல் எடுக்குது..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 3,940 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,992 பேர் பாதிப்பு: செங்கல்பட்டு 5000-ஐ கடந்தது

chengalpet-reach-5000-3-940-cases-of-coronavirus-in-tamil-nadu-1-992-affected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 3,940 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82,275 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,992 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 53,762 ஆக அதிகரித்துள்ளது.

3,940 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 50.5 சதவீதத் தொற்று சென்னையில் (1,992 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 82,275 -ல் சென்னையில் மட்டும் 53,762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 65.3 சதவீதம் ஆகும். 45,537 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 55.3 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, மற்ற மாநிலங்களின் ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 80 ஆயிரத்தைக் கடந்து 85 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் 82 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் தொட்ட நிலையில், இன்று சென்னையும் 53 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 179 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,73,836.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 1000-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,079 பேரில் சென்னையில் மட்டுமே 809 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒருநாள் சென்னையில் மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 74.9 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 53,762 -ல் 809 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.5% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.3% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்குச் சோதனை நடத்தப்படுவதாகவும் அதில் 3,500 பேர் நோய் அறிகுறியுடன் உள்ளதாகவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒன்றரை லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 1,59,133 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அதிக அளவில் தொற்று எண்ணிக்கை காரணமாக மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்குச் சென்றுள்ளது. அதன் நேற்றைய எண்ணிக்கை 80,188. அதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் 82,275 என்ற எண்ணிக்கையுடன் இன்று உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 30,709 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 35 மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 34 மாவட்டங்களில் 1948 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் 4 மண்டலங்கள் 5,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டன. 1 மண்டலம் 4,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளன. ராயபுரம் மண்டலம் 7,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. மொத்தம் 15 மண்டலங்களில் 13 மண்டலங்கள் 4 இலக்க எண்களைக் கடந்துள்ளன.

* தற்போது 47 அரசு ஆய்வகங்கள், 43 தனியார் ஆய்வகங்கள் என 90 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 45,537 .

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 11,10,402.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 32,948.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 11.9 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 82,275 .

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,940 .

* மொத்தம் (82,275 ) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 50745 (61.6 %) / பெண்கள் 31,509 (38.3%)/ மூன்றாம் பாலினத்தவர் 21 பேர் ( .05 %)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,399 (60.8 %) பேர். பெண்கள் 1,541 (39.1 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,443 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 45,537 பேர் (55.3 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 54 பேர் உயிரிழந்தனர். இதில் 10 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,079 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 809 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 54 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 10 பேர் ஆவர். இது 20.5 சதவீதம் ஆகும். 40 வயதுக்குட்பட்டவர்கள் 5 பேர் ஆவர். இதில் ஒன்றரை வயது குழந்தையும், 17 வயது சிறுவனும் அடக்கம். உயிரிழந்ததில் ஆண்கள் 39 பேர். பெண்கள் 15 பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 46 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,992 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 53,762 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 65.3 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 34.7 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 35 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 5,051, திருவள்ளூர் 3,524, மதுரை 1,995, காஞ்சிபுரம் 1,791, திருவண்ணாமலை 1,769, வேலூர் 1,095, கடலூர் 982, தூத்துக்குடி 866, விழுப்புரம் 814, திருநெல்வேலி 744, ராணிப்பேட்டை 730, ராமநாதபுரம் 742, சேலம் 710, கள்ளக்குறிச்சி 707, தேனி 575, திருச்சி 546 ஆகியவை 500 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

37 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் மட்டுமே தொற்று எண்ணிக்கை 100க்குள் உள்ளது. 28 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 5 மாவட்டங்கள் 4 இலக்கத்தைத் தாண்டியுள்ளன. சென்னை 5 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. இன்று தமிழகத்தில் 35 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 179 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 3,277 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 4,012 பேர் (4.8 %). இதில் ஆண் குழந்தைகள் 2,057 பேர் (51.2 %) . பெண் குழந்தைகள் 1,955 பேர் (48.8 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 68,509பேர் (83.2 %). இதில் ஆண்கள் 42,658 பேர். (62.2%) பெண்கள் 25,830 பேர் (37.7 %). மூன்றாம் பாலினத்தவர் 21 பேர் (.04 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 9,754 பேர் (11.8 %). இதில் ஆண்கள் 6,030 பேர் (61.8 %). பெண்கள் 3,724 பேர் (38.2 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/561618-chengalpet-reach-5000-3-940-cases-of-coronavirus-in-tamil-nadu-1-992-affected-in-chennai-7.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுக்கும் காரணம் தாராவி திரும்பல்  அதைவிட டாஸ்க் மாஸ்க் எனும் சாராய கடையை திறந்தது லோக்கல் ஊடகங்கள் டாஸ்க் மாஸ்க் பற்றி எழுதினாலே பின்னாலே லத்தி புகுந்துவிடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 3,943 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2,393 பேர் பாதிப்பு: உலக அளவில் 22-வது இடத்தில் தமிழகம் 

cases-of-coronavirus-in-tamil-nadu-2393-affected-in-chennai-tamil-nadu-again-2nd-place  

சென்னை

தமிழகத்தில் இன்று 3,943 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 2,393 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது.

3,943 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 54.8 சதவீதத் தொற்று சென்னையில் (2,393 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 90,167-ல் சென்னையில் மட்டும் 58,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 64.9 சதவீதம் ஆகும். 50,074 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 55.3 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, மற்ற மாநிலங்களின் ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் 90 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் தொட்ட நிலையில், இன்று சென்னையும் 58 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3,500 பேர் இதுவரை திரும்பியுள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 87 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,83,660.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 1201-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,201 பேரில் சென்னையில் மட்டுமே 888 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 73.9 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 58,327-ல் 888 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.5% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.1 % ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒன்றரை லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 1,69,883 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 16-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. உலக அளவில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி 22-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்திய அளவில் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு மீண்டும் வந்துள்ளது.

இன்றைய எண்ணிக்கை 90,167. அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 85,161 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 31,938 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 34 மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 35 மாவட்டங்களில் 1,550 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் 4 மண்டலங்கள் 5,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டன. 1 மண்டலம் 4,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. ராயபுரம் மண்டலம் 7,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. மொத்தம் 15 மண்டலங்களில் 13 மண்டலங்கள் 4 இலக்க எண்களைக் கடந்துள்ளன.

* தற்போது 47 அரசு ஆய்வகங்கள், 43 தனியார் ஆய்வகங்கள் என 90 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 50,074.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 11,70,683.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 30,242.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 13 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 90,167.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,943 .

* மொத்தம் (90,167) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 55,502 (61.5 %) / பெண்கள் 34,644 (38.4%)/ மூன்றாம் பாலினத்தவர் 21 பேர் ( .05 %)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,378 (60.3 %) பேர். பெண்கள் 1,565 (39.7 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,325 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 50,074 பேர் (55.5 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 60 பேர் உயிரிழந்தனர். இதில் 16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,201 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 888 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 60 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 8 பேர் ஆவர். இது 13.3 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒருவர் ஆவர். உயிரிழந்ததில் ஆண்கள் 42 பேர் (70 %). பெண்கள் 18 (30 %) பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 57 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 3 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 2,193 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 64.6 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 34.4 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 36 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 5,419 திருவள்ளூர் 3,830, மதுரை 2,557, காஞ்சிபுரம் 1,977, திருவண்ணாமலை 1,824, வேலூர் 1,308, கடலூர் 1073, தூத்துக்குடி 943, விழுப்புரம் 915, திருநெல்வேலி 796, ராணிப்பேட்டை 754, ராமநாதபுரம் 839, சேலம் 780, கள்ளக்குறிச்சி 850, தேனி 702, திருச்சி 682,கோவை 538 ஆகியவை 500 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

37 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் மட்டுமே தொற்று எண்ணிக்கை 100க்குள் உள்ளன. 28 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 7 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னையில் தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. இன்று தமிழகத்தில் 36 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 87 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 3,472 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 4,437 பேர் (4.9 %). இதில் ஆண் குழந்தைகள் 2,288 பேர் (51.5 %) . பெண் குழந்தைகள் 2,149 பேர் (48.5 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 74,967 பேர் (83.1 %). இதில் ஆண்கள் 46,572 பேர். (62.1%) பெண்கள் 28,374 பேர் (37.8 %). மூன்றாம் பாலினத்தவர் 21 பேர் (.04 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 10,763 பேர் (11.9 %). இதில் ஆண்கள் 6,642 பேர் (61.7 %). பெண்கள் 4,121 பேர் (38.2 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/561984-cases-of-coronavirus-in-tamil-nadu-2393-affected-in-chennai-tamil-nadu-again-2nd-place-8.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 ஆயிரத்து 852 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் 52 ஆயிரத்து 926 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் 37 பேரும், தனியார் மருத்துவமனையில் 26 பேர் என மொத்தம் 63 பேர் நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனா உயிரிழப்பு 1,264 ஆக உயர்ந்து உள்ளது.


நேற்று உயிரிழந்தவர்களில் சென்னையில் 41 பேரும், மதுரையில் 7 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், காஞ்சீபுரம், ராமநாதபுரம், செங்கல்பட்டில் தலா 2 பேரும், தேனி, புதுக்கோட்டை, விருதுநகர் கரூரில் தலா ஒருவரும் அடங்குவர்.

31 ஆயிரத்து 521 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் 3,807 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 16 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த 59 பேர் என 3 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 12 லட்சத்து 2 ஆயிரத்து 204 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு 39 ஆயிரத்து 856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று சென்னையில் 2 ஆயிரத்து 182 பேரும், மதுரையில் 297 பேரும், செங்கல்பட்டில் 226 பேரும், சேலத்தில் 178 பேரும், திருவள்ளூரில் 147 பேரும், ராமநாதபுரத்தில் 111 பேரும், காஞ்சீபுரத்தில் 86 பேரும், வேலூரில் 77 பேரும், விருதுநகரில் 45 பேரும், திருவண்ணாமலையில் 42 பேரும், திண்டுக்கலில் 35 பேரும், கன்னியாகுமரி, தேனி, நெல்லையில் தலா 33 பேரும், திருச்சியில் 31 பேரும், சிவகங்கை, புதுக்கோட்டையில் தலா 30 பேரும், கள்ளக்குறிச்சியில் 28 பேரும், விழுப்புரத்தில் 27 பேரும், கோவையில் 23 பேரும், தென்காசியில் 21 பேரும், ஈரோட்டில் 19 பேரும், நீலகிரியில் 18 பேரும், திருப்பத்தூரில் 17 பேரும், தூத்துக்குடியில் 15 பேரும், திருவாரூரில் 13 பேரும், திருப்பூரில் 10 பேரும், நாகப்பட்டினத்தில் 9 பேரும், ராணிப்பேட்டை, கடலூரில் தலா 8 பேரும், தஞ்சாவூரில் 7 பேரும், கிருஷ்ணகிரியில் 6 பேரும், தர்மபுரியில் 5 பேரும், கரூரில் 4 பேரும், நாமக்கலில் 3 பேரும், அரியலூரில் ஒருவரும் என 36 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. பெரம்பலூரில் மட்டும் புதிய பாதிப்பு இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/02030308/Corona-impact-in-Tamil-Nadu-exceeds-94-thousand-3882.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்கு கரோனா: தொற்று எண்ணிக்கை 95 ஆயிரத்தை நெருங்கியது; சென்னையில் 2,182 பேர் பாதிப்பு

3-882-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய நிலவரம்

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 2,182 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 60,333 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய (ஜூலை 1) நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட விவரங்கள்:

''தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 31 ஆயிரத்து 521 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக, 12 லட்சத்து 2,204 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 30 ஆயிரத்து 571 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தமாக, 11 லட்சத்து 47 ஆயிரத்து 193 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சையில் குணமடைந்து இன்று மட்டும் 2,852 பேர் வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 52 ஆயிரத்து 926 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 39 ஆயிரத்து 856 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் 37 பேர், தனியார் மருத்துவமனைகளில் 26 பேர் என மொத்தம் 63 பேர் இன்று கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது. இன்று பதிவான உயிரிழப்புகளில் 55 பேர் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்களாவர். 8 பேருக்கு இணை நோய்கள் இல்லை.

இன்று அதிகபட்சமாக சென்னையில் 2,182 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 60,333 ஆக அதிகரித்துள்ளது.

அரசு சார்பாக 48 மற்றும் தனியார் சார்பாக 43 என, மொத்தம் 91 கரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன''.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/562162-3-882-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu-1.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உச்சம் தொட்ட எண்ணிக்கை; தமிழகத்தில் 4,343 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2,027 பேர் பாதிப்பு 

number-of-peaks-coronavirus-causes-4-343-cases-in-tamil-nadu-2-027-casualties-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 4,343 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 2,027 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது.

4,343 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 46.6 சதவீதத் தொற்று சென்னையில் (2,027 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 98,392-ல் சென்னையில் மட்டும் 62,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 63.6 சதவீதம் ஆகும். 56,021 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 57 சதவீதமாக உள்ளது

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தை நெருங்கும் வகையில் 98 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் 98 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் கடந்த நிலையில், இன்று சென்னையும் 62 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3,500 பேர் இதுவரை திரும்பியுள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 75 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,87,725.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 1321-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,321 பேரில் சென்னையில் மட்டுமே 964 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 72.9 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 62,598-ல் 964 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.5% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.3 % ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒன்றரை லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 1,80,298 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 16-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. உலக அளவில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி 22-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்திய அளவில் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு மீண்டும் வந்துள்ளது.

இன்றைய எண்ணிக்கை 98,392. அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 89,802 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 33,232 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 34 மாவட்டங்களில் 2,316 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் 4 மண்டலங்கள் 5,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டன. 1 மண்டலம் 4,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. ராயபுரம் மண்டலம் 7,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. மொத்தம் 15 மண்டலங்களில் 13 மண்டலங்கள் 4 இலக்க எண்களைக் கடந்துள்ளன.

* தற்போது 48 அரசு ஆய்வகங்கள், 43 தனியார் ஆய்வகங்கள் என 91 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 56,021.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 12,35,692.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 33,488.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 12.9 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 98,392.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,343.

* மொத்தம் (98,392) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 60,395 (61.3 %) / பெண்கள் 37,395 (38.7%)/ மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் ( .05 %)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,551 (58.7 %) பேர். பெண்கள் 1,792 (41.3 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,095 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 56,021 பேர் (57 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 63 பேர் உயிரிழந்தனர். இதில் 26 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,321 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 964 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 63 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 8 பேர் ஆவர். இது 12.6 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 5 பேர் ஆவர். உயிரிழந்ததில் ஆண்கள் 29 பேர் (46 %). பெண்கள் 34 (54 %) பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 55 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 2,027 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 63.6 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 36.4 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 36 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 5,807 திருவள்ளூர் 4,167 மதுரை 3,133, காஞ்சிபுரம் 2,151, திருவண்ணாமலை 2,029, வேலூர் 1,521 கடலூர் 1,121, தூத்துக்குடி 1,028, ராமநாதபுரம் 1,069, சேலம் 1,034, கள்ளக்குறிச்சி 1,017, விழுப்புரம் 986, ராணிப்பேட்டை 891, திருநெல்வேலி 879, தேனி 801, திருச்சி 755,விருதுநகர் 614, கோவை 608, திண்டுக்கல் 601 ஆகியவை 500 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

37 மாவட்டங்களில் 2 மாவட்டங்களில் மட்டுமே தொற்று எண்ணிக்கை 100-க்குள் உள்ளன. 28 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 7 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னையில் தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. இன்று தமிழகத்தில் 36 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 75 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 3,547பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 4,617பேர் (4.6 %). இதில் ஆண் குழந்தைகள் 2378 பேர் (51.5 %) . பெண் குழந்தைகள் 2,239 பேர் (48.5 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 78,138 பேர் (79.4 %). இதில் ஆண்கள் 48,513 பேர். (62 %) பெண்கள் 29,603 பேர் (38 %). மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் (.02 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 11,294 பேர் (11.4 %). இதில் ஆண்கள் 6,953 பேர் (61.5 %). பெண்கள் 4,341 பேர் (38.5 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/562385-number-of-peaks-coronavirus-causes-4-343-cases-in-tamil-nadu-2-027-casualties-in-chennai-8.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus-Pandemic.jpg

உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் நகரங்களில் 2ஆவது இடத்தில் சென்னை

உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் நகரங்களில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு அடுத்த இடத்தில் சென்னை உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜூன் 30ஆம் திகதி சென்னையில் 2,393 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதே நாளில், டெல்லியில் 2,199 பேருக்குத்தான் தொற்று ஏற்பட்டது.

சென்னையில் மார்ச் 9ஆம் திகதி முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் குறைவாகவே இருந்தது. ஏப்ரல் மாதத்தில் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது.

தற்போது, இந்தியாவின் ஏனைய நகரங்களை விடவும் சென்னையில்தான் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

ஜூன் 30ஆம் திகதி முதல் இந்தியாவிலேயே அதிக தொற்று ஏற்படும் நகரமாக சென்னை மாறியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக டெல்லி, தானே, புனே, மும்பை, ஹைதரபாத், பெங்ளூர், கௌகாத்தி, பால்கர், ராய்கட் நகரங்கள் உள்ளன.

உலகளவில் லாஸ்ஏஞ்சல்ஸ், சென்னை, சாண்டியாகோ, டெல்லி, சா பாலோ, தானே , மியாமி, பியூனஸ்அயர்ஸ், சல்வாடர், லிமா ஆகிய நகரங்கள் கொரோனா தொற்று அதிகம் பரவும் நகரங்களாக உள்ளன.

இந்தியாவில் ஏப்ரல் மே மாதங்களில் கொரோனா தொற்று அதிகமாக பரவும் நகரமாக மும்பை இருந்தது. ஜூன் மாதத்தில் டெல்லி அதிக தொற்றுக்குள்ள நகரமானது. தற்போது, ,சென்னை அந்த இடத்தை பிடித்துள்ளது. ஜூலை மாதத்தில் சென்னை மக்கள் கடும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகிறது.

https://athavannews.com/உலகளவில்-கொரோனா-வைரஸ்-வே/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 லட்சத்தை கடந்த தமிழகம்; 4,329 பேருக்கு இன்று கரோனா தொற்று; சென்னையில் 2,082  பேர் பாதிப்பு 

corona-virus-tamil-nadu-reach-1-lakh-4-329-coronary-infections-2-082-affected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 4,329 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 2,082 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

4,329 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 48 சதவீதத் தொற்று சென்னையில் (2,082 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,02,721 -ல் சென்னையில் மட்டும் 64,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 62.9 சதவீதம் ஆகும். 58,378 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 56.8 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சம் தொற்று எண்ணிக்கையைத் கடந்த நிலையில், இன்று சென்னையும் 64 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3 லட்சம் பேர் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 3685 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 65 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 3,00,520.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 1385-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,385 பேரில் சென்னையில் மட்டுமே 996 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 71.9 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 64,689 -ல் 996 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.5% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.3 % ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒன்றரை லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 1,80,298 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 16-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. உலக அளவில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி 22-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்திய அளவில் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு மீண்டும் வந்துள்ளது.

இன்றைய எண்ணிக்கை 1,02,721 . அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 92,175 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 33,913 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 34 மாவட்டங்களில் 1972 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் 4 மண்டலங்கள் 5,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டன. 1 மண்டலம் 4,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. ராயபுரம் மண்டலம் 7,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. மொத்தம் 15 மண்டலங்களில் 13 மண்டலங்கள் 4 இலக்க எண்களைக் கடந்துள்ளன.

* தற்போது 48 அரசு ஆய்வகங்கள், 43 தனியார் ஆய்வகங்கள் என 91 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 58,378.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 12,70,720.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 35,028.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 12.3 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,02,721 .

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,329.

* மொத்தம் (1,02,721 ) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 63,016 (61.3 %) / பெண்கள் 39,683 (38.7%)/ மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் ( .05 %)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,621 (60.5 %) பேர். பெண்கள் 1,708 (39.5 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,357 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 58,378 பேர் (56.8 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 64 பேர் உயிரிழந்தனர். இதில் 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 42 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,385 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 996 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 64 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 15 பேர் ஆவர். இது 12.6 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 பேர் ஆவர். இதில் 27 வயது இளைஞரும், 29 வயது இளம்பெண்ணும் அடக்கம். உயிரிழந்ததில் ஆண்கள் 49 பேர் (76.5 %). பெண்கள் 15 (23.5 %) பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 58 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 6 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 2,027 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 62.9 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 37.1 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 35 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 6,139 திருவள்ளூர் 4,343 மதுரை 3,423, காஞ்சிபுரம் 2,272, திருவண்ணாமலை 2,181, வேலூர் 1,667கடலூர் 1,143, தூத்துக்குடி 1055, ராமநாதபுரம் 1,143, சேலம் 1,127, கள்ளக்குறிச்சி 1,102, விழுப்புரம் 1,020, ராணிப்பேட்டை 978, திருநெல்வேலி 921, தேனி 927, திருச்சி 803,விருதுநகர் 679, கோவை 645, திண்டுக்கல் 618, திருவாரூர் 513 ஆகியவை 500 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும். அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டது.

37 மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன. 24 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 12 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னையில் தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. இன்று தமிழகத்தில் 35 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 65 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 3,685பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 5,053 பேர் (4.9 %). இதில் ஆண் குழந்தைகள் 2,607 பேர் (51.5 %) . பெண் குழந்தைகள் 2,446 பேர் (48.5 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 85,305 பேர் (83 %). இதில் ஆண்கள் 52,797 பேர். (61.8 %) பெண்கள் 32,486 பேர் (38.1 %). மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் (.02 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 12,363 பேர் (12 %). இதில் ஆண்கள் 7,612 பேர் (61.5 %). பெண்கள் 4,751 பேர் (38.5 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/562542-corona-virus-tamil-nadu-reach-1-lakh-4-329-coronary-infections-2-082-affected-in-chennai-8.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,842 பேர் பாதிப்பு: தலைநகரில் பலி எண்ணிக்கை 1000-ஐக் கடந்தது

4-280-people-infected-with-coronavirus-today-1-842-casualties-in-chennai-death-rate-cross-1000-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 4,280 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,842 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 66,538 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் பலி எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

4,280 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 43 சதவீதத் தொற்று சென்னையில் (1,842 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,07,001-ல் சென்னையில் மட்டும் 66,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 62.1 சதவீதம் ஆகும். 60,592 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 56.6 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சத்து ஏழாயிரம் தொற்று எண்ணிக்கையைத் கடந்த நிலையில், இன்று சென்னையும் 66 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3 லட்சத்து 6 ஆயிரம் பேர் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 3785 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 65 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 3,06,977.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 1,450-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,450 பேரில் சென்னையில் மட்டுமே 1,033 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 71.2 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 66,538 -ல் 1,033 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.5% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.3 % ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாளை மறு நாள் (ஜூலை-6) ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒன்றரை லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 1,92,990 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 16-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. உலக அளவில் கனடாவை பின்னுக்குத் தள்ளி 20-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்திய அளவில் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு மீண்டும் வந்துள்ளது.

இன்றைய எண்ணிக்கை 1,07,001. அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 94,695 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 34,600 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 34 மாவட்டங்களில் 1,972 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஸ்வீடனுக்கு அடுத்தபடியாக சென்னை உலக அளவில் 26-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 49 அரசு ஆய்வகங்கள், 45 தனியார் ஆய்வகங்கள் என 94 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 44,956.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 13,06,884.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 36,164.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 11.8 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,07,001.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,280.

* மொத்தம் (1,07,001 ) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 65,604 (61.3 %) / பெண்கள் 41,375 (38.7%)/ மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் ( .05 %)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,588 (60.4 %) பேர். பெண்கள் 1,692 (39.6 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 60,592 பேர் (56.6 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 65 பேர் உயிரிழந்தனர். இதில் 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 47 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,450 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,033 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 65 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 7 பேர் ஆவர். இது 10.7 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 2 பேர் ஆவர். இதில் 29 வயது இளைஞரும் அடக்கம். உயிரிழந்ததில் ஆண்கள் 47 பேர் (72.3%). பெண்கள் 18 (27.7 %) பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 59 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 6 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,842 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 66,538 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 2,438.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 62.1 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 37.9 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 35 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 6,355, திருவள்ளூர் 4,596, மதுரை 3,776, காஞ்சிபுரம் 2,404, திருவண்ணாமலை 2,355, வேலூர் 1,752, கடலூர் 1,218, தூத்துக்குடி 1,120, ராமநாதபுரம் 1,292, சேலம் 1,197, கள்ளக்குறிச்சி 1,123, விழுப்புரம் 1,077, ராணிப்பேட்டை 1,083, திருநெல்வேலி 982, தேனி 985, திருச்சி 886,விருதுநகர் 782, கோவை 712, திண்டுக்கல் 633, கன்னியாகுமரி 552, திருவாரூர் 524 ஆகியவை 500 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும். அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

23 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 13 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னையில் தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. இன்று தமிழகத்தில் 35 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 100 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 3,785 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 5,277 பேர் (4.9 %). இதில் ஆண் குழந்தைகள் 2,739 பேர் (51.9 %) . பெண் குழந்தைகள் 2,538 பேர் (48.1 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 88,847 பேர் (83 %). இதில் ஆண்கள் 54,928 பேர். (61.8 %) பெண்கள் 33,897 பேர் (38.1 %). மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் (.02 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 12,877 பேர் (12 %). இதில் ஆண்கள் 7,937 பேர் (61.6 %). பெண்கள் 4,940 பேர் (38.4 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/562716-4-280-people-infected-with-coronavirus-today-1-842-casualties-in-chennai-death-rate-cross-1000-in-chennai-8.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்வு; சென்னையில் 1,713 பேருக்குத் தொற்று

4-150-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய நிலவரம்.

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1,713 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய (ஜூலை 5) தொற்று விவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

''தமிழகத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 34 ஆயிரத்து 831 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தமாக, 13 லட்சத்து 41 ஆயிரத்து 715 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று மட்டும் 34 ஆயிரத்து 102 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. மொத்தமாக, 12 லட்சத்து 83 ஆயிரத்து 419 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

தமிழகம் முழுவதும் இன்று மட்டும் 2,186 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 62 ஆயிரத்து 778 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா தொற்றுக்கு இன்று மட்டும் தமிழகம் முழுவதும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 17 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 43 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இன்று உயிரிழந்தவர்களுள் 57 பேருக்கு ஏற்கெனவே இணை நோய்கள் இருந்துள்ளன. 3 பேர் இணை நோய்கள் அல்லாதவர்கள் ஆவர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.

46 ஆயிரத்து 860 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,713 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

அரசு சார்பாக 49 பரிசோதனை மையங்கள் மற்றும் தனியார் சார்பாக 46 பரிசோதனை மையங்கள் என தமிழகத்தில் மொத்தமாக 95 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன''.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஜூலை 5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/562856-4-150-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu-3.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரோனாவைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை: 98.7 சதவீதம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர்- சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல் 

don-t-get-scared-of-corona-virus-health-secretary-radhakrishnan அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்,மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன். (இடமிருந்து வலமாக)

மதுரை

"கரோனாவைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை, 98.7 சதவீதம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர்", என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா’ வைரஸ் ஒரு நுண் கிருமி, புதிய வகை வைரஸ். கண் நோய் போல் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது. ஆனால், சாதாரண சோப்புத் தண்ணீரில் கூட இந்த வைரஸ் அழிந்துவிடுகிறது.

அதனால், இந்த தொற்று நோயைப் பார்த்து அச்சப்படவோ, தேவையற்ற பீதியடையவோ வேண்டாம். முகக்கவசம் அணியாமல் செல்வோர் மட்டுமே அச்சப்பட வேண்டும். நுரையீரல் பாதிப்பிற்கு முன் வந்தால் மிக விரைவாகவே இந்த நோயில் இருந்து குணமடையலாம். இன்னும் உயிரிழப்பை தடுக்கலாம்.

பெருமைக்காக சொல்லவில்லை. நம்பிக்கையூட்டுவதற்காக சொல்கிறோம். தற்போது வரை 98.7 சதவீதம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு இந்த தொற்று நோய்க்கு 1.5 சதவீதத்திற்கு கீழேதான் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதலின் கீழ் 12 விதமான சிகிச்சைகளை நோயாளிகளுக்கு வழங்குகிறோம்.

உயிரிழப்பை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. வெண்டிலேட்டர்களை அதிகரியுங்கள், இந்த நோய் சிகிச்சைக்கு அதுதான் முக்கியம் என்று உலக சுகாதாரநிறுவனமே சொன்னது. ஆனால், மதுரையில் தற்போது ஒரு நோயாளிக்குக் கூட வெண்டிலேட்டர் பயன்படுத்தப்படவில்லை.

இதேநிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த மருந்துகளை மதுரைக்கு கூடுதலாக வழங்கியுள்ளோம். இந்த நோயை ஒழிக்க முககவசம், சமூக விலகல் மட்டுமே முக்கியம்.

முகக்கவசங்களை கழட்டி கைகளில் வைத்துக் கொள்ளக்கூடாது. இவர்களால் அவர்களுக்கு மட்டுமில்லை, மற்றவர்களுக்கும் இந்தத் தொற்று நோய் பரவி பாதிக்கப்படுகிறார்கள்.

அரசு மருத்துவமனைகளில் கரோனா தவிர மற்ற நோயாளிகளில் நடக்கும் அனைத்து இறப்புகளையும் கணக்கீடு செய்து அவற்றையும் குறைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலே அதிகமாக தமிழகத்தில் 35 ஆயிரம் பரிசோதனைகள் தினமும் செய்யப்படுகிறது. இன்னும் பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்,’’ என்றார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/562979-don-t-get-scared-of-corona-virus-health-secretary-radhakrishnan-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,747 பேர் பாதிப்பு: மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு

3-827-people-infected-with-corona-virus-in-tamil-nadu-1-747-affected-in-chennai-epidemic-increase-in-districts  

சென்னை

தமிழகத்தில் இன்று 3,827 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,747 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 70,017 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் பலி எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

3,827 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 45.6 சதவீதத் தொற்று சென்னையில் (1,747 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,14,978 -ல் சென்னையில் மட்டும் 70,017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 60.8 சதவீதம் ஆகும். 66,571 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 57.8 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சத்து 14 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 70 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 3,902 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 61 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 3,18,317.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 1,571-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,571 பேரில் சென்னையில் மட்டுமே 1,082 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 68.8 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 70,017 -ல் 1,082 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.5% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.3 % ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா 2 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 2,06,619 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 16-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. உலக அளவில் கனடாவைப் பின்னுக்குத் தள்ளி 20-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்திய அளவில் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு தமிழகம் மீண்டும் வந்துள்ளது.

இன்றைய எண்ணிக்கை 1,14,978. அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 99,444 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 36,037 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 34 மாவட்டங்களில் 1,080 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஸ்வீடனுக்கு அடுத்தபடியாக சென்னை உலக அளவில் 26-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 49 அரசு ஆய்வகங்கள், 45 தனியார் ஆய்வகங்கள் என 95 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,833. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 40.7 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 13,16,937. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 1.88 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 33,518.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 11.4 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,14,978 .

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,827.

* மொத்தம் (1,14,978 ) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 70,370 (61.2 %) / பெண்கள் 44,586 (38.7%)/ மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் ( .01 %)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,285 (59.7 %) பேர். பெண்கள் 1,542 (41.3 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,793 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 66,571 பேர் (57.8 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 61 பேர் உயிரிழந்தனர். இதில் 15 பேர் தனியார் மருத்துவமனையிலும், 46 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,571 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,082 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 61 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 12 பேர் ஆவர். இது 19.6 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 பேர் ஆவர். இதில் 14 வயதுச் சிறுமியும் (ரத்தசோகை காரணமாக மரணம்) 28 வயது நபர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்ற நிலையிலும், 32 வயது நபர் மாரடைப்பு காரணமாகவும், 37 வயது நபர் மதுப் பழக்கத்தால் கல்லீரல் பாதிப்புக்குள்ளானவர் என்ற நிலையிலும், 32 வயதுக்குட்பட்ட நபர் அதீத உடல் எடை காரணமாகவும், 35 வயதுப் பெண் இதய சிகிச்சை காரணமாகவும் உயிரிழந்தனர், உயிரிழந்ததில் ஆண்கள் 47 பேர் (72.3%). பெண்கள் 18 (27.7 %) பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 53 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,747 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 70,017 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 1,080.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 60.8 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 39.2 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 35 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 6,853, திருவள்ளூர் 4,983, மதுரை 4,338, காஞ்சிபுரம் 2,729, திருவண்ணாமலை 2,534, வேலூர் 1,980, கடலூர் 1,277, தூத்துக்குடி 1,271, ராமநாதபுரம் 1,454, சேலம் 1,288, கள்ளக்குறிச்சி 1,246, விழுப்புரம் 1,232, ராணிப்பேட்டை 1,193, திருநெல்வேலி 1,114, தேனி 1,128, திருச்சி 1,004, விருதுநகர் 975, கோவை 802, திண்டுக்கல் 725, கன்னியாகுமரி 638, திருவாரூர் 553 ஆகியவை 500 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும். அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

23 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 13 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னையில் தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. இன்று தமிழகத்தில் 35 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 100 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 3,902 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 5,668 பேர் ( 4.9 %). இதில் ஆண் குழந்தைகள் 2,932 பேர் (51.8 %) . பெண் குழந்தைகள் 2,722 பேர் (48.9 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 95,390 பேர் (82.9 %). இதில் ஆண்கள் 58,840 பேர். (61.6 %) பெண்கள் 36,528 பேர் (38.4 %). மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் (.09 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 13,920 பேர் (12 %). இதில் ஆண்கள் 8,584 பேர் (61.6 %). பெண்கள் 5,336 பேர் (38.4 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/563036-3-827-people-infected-with-corona-virus-in-tamil-nadu-1-747-affected-in-chennai-epidemic-increase-in-districts-7.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,203 பேர் பாதிப்பு: தலைநகரில் தொற்று எண்ணிக்கை குறைந்தது 

3616-people-infected-with-coronavirus-in-tamil-nadu-1-203-affected-in-chennai-the-epidemic-in-the-capital-has-dropped  

சென்னை

தமிழகத்தில் இன்று 3,616 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,203 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 71,230 ஆக அதிகரித்துள்ளது.

3,616 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 33.2 சதவீதத் தொற்று சென்னையில் (1,203) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,18,594 -ல் சென்னையில் மட்டும் 71,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 60 சதவீதம் ஆகும். 71,116 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 59.9 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சத்து 18 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 71 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3 லட்சத்து 24 ஆயிரம் பேர் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 3,967 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 65 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 3,24,620.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 1,636-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,636 பேரில் சென்னையில் மட்டுமே 1,120 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 68.4 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 71,230-ல் 1,120 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.5% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.3% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா 2 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 2,11,967 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 16-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. உலக அளவில் கொலம்பியாவைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்திய அளவில் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு தமிழகம் மீண்டும் வந்துள்ளது.

இன்றைய எண்ணிக்கை 1,18,594 . அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 1,00,823 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 36,858 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 34 மாவட்டங்களில் 2,413 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் ஸ்வீடனுக்கு அடுத்தபடியாக சென்னை 27-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 50 அரசு ஆய்வகங்கள், 45 தனியார் ஆய்வகங்கள் என 96 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 45,839. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 38.6 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 14,13,345. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 2 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 36,938.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 9.7 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,18,594.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,616.

* மொத்தம் (1,18,594) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 72,550 (61.1 %) / பெண்கள் 46,022 (45.1%)/ மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் ( .01 %)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2180 (60.28 %) பேர். பெண்கள் 1436 (39.71 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,545 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 71,116 பேர் (59.9 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 65 பேர் உயிரிழந்தனர். இதில் 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 45 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,636 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,120 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 65 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 14 பேர் ஆவர். இது 21.5 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 9 பேர் ஆவர். இதில் 25 வயது இளம் பெண்ணும் ஒருவர். 35 வயதுக்குட்பட்ட 3 பேரும் அடக்கம். உயிரிழந்ததில் ஆண்கள் 43 பேர் (66.1%). பெண்கள் 22 (33.9 %) பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 53 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,203 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 71,230 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 2,413.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 60 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 40 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 34 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 6,942, திருவள்ளூர் 5,205, மதுரை 4,674, காஞ்சிபுரம் 2,836, திருவண்ணாமலை 2,633, வேலூர் 2,097, கடலூர் 1,342, தூத்துக்குடி 1,416, ராமநாதபுரம் 1,479, சேலம் 1,340, கள்ளக்குறிச்சி 1,274, விழுப்புரம் 1,233, ராணிப்பேட்டை 1312, திருநெல்வேலி 1,295, தேனி 1,222, திருச்சி 1,059, விருதுநகர் 1,228, கோவை 839, திண்டுக்கல் 730, கன்னியாகுமரி 757, திருவாரூர் 576, தஞ்சாவூர் 533, தென்காசி 530, சிவகங்கை 576 ஆகியவை 500 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும். அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

19 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 17 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னையில் தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 5 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன, 12 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 34 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 65 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 3,967 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 5,877 பேர் ( 4.9%). இதில் ஆண் குழந்தைகள் 3,057பேர் (52 %) . பெண் குழந்தைகள் 2,820 பேர் (48%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 98,350 பேர் (82.9%). இதில் ஆண்கள் 60,636 பேர். (61.6%) பெண்கள் 37,692 பேர் (38.4%). மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 14,367 பேர் (12.1%). இதில் ஆண்கள் 8,857 பேர் (61.6%). பெண்கள் 5,510 பேர் (38.4 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/563233-3616-people-infected-with-coronavirus-in-tamil-nadu-1-203-affected-in-chennai-the-epidemic-in-the-capital-has-dropped-8.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று ;அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று ;அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவு: ஜூலை 08,  2020 14:18 PM
சென்னை

தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தங்கமணி பங்கேற்றார்.  தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால், வைப்பீட்டாளர்கள் நலனிற்காக அதன் செயல்பாடுகளை ஆன்லைன் மூலமாக செயல்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள http://tnpowerfinance.com என்ற புதிய வலைதளம், TNPFCL என்ற கைப்பேசி செயலியை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/08141809/Corona-infection-to-Minister-Thangamani-For-the-first.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் தங்கமணிக்கு கரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதி: சென்னை ஐபிஎஸ் அதிகாரிக்கும் தொற்று

corona-infection-to-minister-thangamani-chennai-ips-officer-also-affected  

சென்னை

மின்துறை அமைச்சர் தங்கமணிக்குக் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கூடுதல் டிஜிபிக்கும் தொற்று உறுதியானதை அடுத்து அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவினாலும் நிவாரணப் பணி, அரசுப் பணிகளில் திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, செயல்பட்டு வருகின்றனர்.
இதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

அதிமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பழனி, சதன் பிரபாகர், குமரகுரு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், ஆர்.டி.அரசு, மஸ்தான், தங்க பாண்டியன் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களுக்கு அம்மன் அர்ச்சுணன், பா.வளர்மதி ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதியானது.

இதில் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி சிகிச்சையில் குணமான நிலையில், நேற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அமைச்சர் தங்கமணிக்கும் அவரது மகனுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர், முதல்வர் பழனிசாமியைச் சந்தித்த நிலையில் அமைச்சர் தங்கமணியும் அந்நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது.

அமைச்சர் தங்கமணி நேற்று முதல்வர் பழனிசாமியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை துறைச் செயலர்கள், மின்துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கமணி ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். ஐசிஎம்ஆர் விதிப்படி அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதிக்க சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.

இதேபோன்று காவல்துறை கூடுதல் டிஜிபி ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஊர்க்காவல்படை கூடுதல் டிஜிபியாக இருப்பவர் ராஜீவ்குமார். இவரது மனைவிக்கு சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இவரும் பரிசோதித்துக் கொண்டார். அதில் அவருக்கும் கரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/563321-corona-infection-to-minister-thangamani-chennai-ips-officer-also-affected-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகனுக்கும் தொற்று உறுதி ஆனது: தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 10-வது எம்.எல்.ஏ. அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா சென்னை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

மகனுக்கும் தொற்று உறுதி ஆனது: தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 10-வது எம்.எல்.ஏ. அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா சென்னை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

மின்துறை அமைச்சர் தங்கமணிக்கும், அவரது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பதிவு: ஜூலை 09,  2020 05:45 AM
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 3,756 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 1,261 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 ஆகவும், சென்னையில் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 500 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

கொரோனாவுக்கு நேற்று 64 பேர் பலி ஆனார்கள். இதனால் தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழந்த 64 பேரில் 26 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து சென்னையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக அதிகரித்து உள்ளது.

கடந்த வாரம் வரை சென்னையில் அதிகரித்து வந்த கொரோனா தற்போது சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.

பெருந்தொற்று நோயான கொரோனா அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது. ஏற்கனவே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி) கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். அந்த கட்சியைச் சேர்ந்தஎம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), ஆர்.டி. அரசு (செய்யூர்), செஞ்சி மஸ்தான் (செஞ்சி) ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பழனி (ஸ்ரீபெரும்புதூர்), குமரகுரு (உளுந்தூர்பேட்டை), சதன் பிரபாகர் (பரமக்குடி), அம்மன் கே.அர்ஜூனன் (கோவை தெற்கு) ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, கடந்த மாதம் 30-ந் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது மின்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது மகன் தரணிதரனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இருவரும், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவராகவே கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது, கொரோனா பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி வந்தார். நேற்று முன்தினமும் தனது ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார்.

இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று காலை வெளிவந்த நேரத்தில்தான், கொரோனா பாதிப்பு அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமைச்சர் பி.தங்கமணியையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 10 ஆகவும், அமைச்சர்களின் எண்ணிக்கை 2 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

அமைச்சர் பி.தங்கமணி கடந்த வாரம் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிக்கு ரூ.5 கோடியை வழங்கினார்.

மத்திய எரிசக்தித் துறை இணை மந்திரி ராஜ்குமார் சிங், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய நிகழ்ச்சியிலும், அமைச்சர் பி.தங்கமணி கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக கொரோனா உறுதிசெய்யப்பட்ட மருத்துவ அறிக்கை கிடைத்ததால், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல், நேராக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டார்.

அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நாமக்கல்லில் உள்ள அவரது அலுவலகம் மூடப்பட்டுஉள்ளது. சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பீதி அடைந்து உள்ளனர். குறிப்பாக, நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்து பேசி இருக்கிறார்.

இதேபோல், மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக கடந்த 6-ந் தேதி இரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார். எனவே, இதில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09052402/To-Minister-ThangamaniCorona-Intensive-care-in-Chennai.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus-Tamilnadu.jpg

தமிழகத்தில் 120,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளன.

இதேவேளை, சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 72 ஆயிரத்து 500 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 26 பேர் மரணித்துள்ளனர்.

சென்னை நீங்கலான தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இன்று மொத்தமாக 2 ஆயிரத்து 495 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், 3 ஆயிரத்து 51பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று ஒரே நாளில் 35 ஆயிரத்து 979 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/தமிழகத்தில்-ஒரேநாளில்-3700இ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.