Jump to content

தமிழகத்தில் தீவிரமாகும் கோரோனோ.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சிபுரத்தில் இன்று இதுவரை 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

காஞ்சிபுரத்தில் இன்று இதுவரை 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

காஞ்சிபுரத்தில் இன்று தற்போது வரை 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதிவு: ஜூலை 09,  2020 14:30 PM
காஞ்சிபுரம்,

சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரத்தில் நேற்று 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 67 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனால் காஞ்சிபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,037 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் தற்போது 1,822 பேர் கொரோனா சிகிச்சை பெர்று வரும் நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,177 ஆக உள்ளது. காஞ்சிபுரத்தில் இதுவரை 38 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09143012/Corona-affects-67-people-in-Kanchipuram.vpf

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரில் 90 சதவீதம் பேர் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள்: மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் தகவல்

கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரில் 90 சதவீதம் பேர் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள்: மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் தகவல்

 

கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரில் 90 சதவீதத்தினர் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்ற தகவல், மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் வெளியானது.
பதிவு: ஜூலை 10,  2020 05:00 AM
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலவரம் குறித்து ஆராய்வதற்காக மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தலைமையில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் எஸ்.ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி, அஷ்வினி குமார் சவுபே, மன்சுக் மாண்டவியா மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோல் பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில் நாட்டில் அதிகளவு கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

‘அன்லாக்- 2’ என்ற பெயரில் கட்டுப்பாடுகள் இரண்டாவது முறையாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதிலும், கண்காணிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தின்போது, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு முயற்சிகள் குறித்த விரிவான அறிக்கையை நோய்களுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் டாக்டர் சுஜித் கே.சிங் தாக்கல் செய்தார்.

மேலும், இந்த கூட்டத்தில் வெளியான முக்கிய தகவல்கள் வருமாறு:-

* உலகளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 5 நாடுகளுடன் ஒப்பிடுகிறபோது, இந்தியாதான் குறைவான பாதிப்பை சந்தித்துள்ளது. 10 லட்சம் பேரில் 538 பேருக்குத்தான் இங்கு தொற்று உள்ளது. 10 லட்சம் பேரில் பலி எண்ணிக்கை 15 ஆக உள்ளது. உலகளவில் சராசரியாக 10 லட்சம் பேரில் 1,453 பேருக்கு தொற்று இருக்கிறது, 68 பேர் பலியாகி உள்ளனர்.

* இந்தியாவில் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களில் 90 சதவீதத்தினர், மராட்டியம், தமிழகம், டெல்லி, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய 8 மாநிலத்தினர் ஆவார்கள். சிகிச்சை பெறுவோரில் 80 சதவீதத்தினர் 49 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

* கொரோனாவில் பலியானவர்களில் 86 சதவீதத்தினர், மராட்டியம், டெல்லி, குஜராத், தமிழகம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். பலியானவர்களில் 80 சதவீதத்தினர், 32 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான்.

* இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை எதிர்கொள்வதற்காக தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், நாடு முழுவதும் சிகிச்சைக்கு 3,914 இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 737 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 39 ஆயிரத்து 820 தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள், 1 லட்சத்து 42 ஆயிரத்து 415 ஆக்சிஜன் ஆதரவு படுக்கைகள், 20 ஆயிரத்து 47 வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் போடப்பட்டுள்ளன.

* இதுவரையில் 21.3 கோடி என்-95 முக கவசங்கள், 1.2 கோடி சுய பாதுகாப்பு கவச உடைகள், கருவிகள், 6.12 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.

* பொது மக்களிடையே தகவல் தொடர்பு, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரம் பெற்ற 8-வது குழுவின் தலைவர் அமித் கரே விளக்கினார். இந்த குழுவுக்கு போலி செய்திகள் தொடர்பாக 6.755 எச்சரிக்கைகள் வந்ததாகவும், அவற்றில் 5,890-க்கு பதில் அளிக்கப்பட்டதாகவும், 17 வெளிநாட்டு ஊடக செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10022927/More-than-90-percent-of-the-corona-influenza-patients.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,216 பேர் பாதிப்பு: மாவட்டங்களில் அதிகரிக்கும் தொற்று

people-infected-with-coronavirus-in-tamil-nadu-people-affected-in-chennai

தமிழகத்தில் இன்று 4,231பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,216 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது.

4,231 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 28.7 சதவீதத் தொற்று சென்னையில் (1,216 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,26,581-ல் சென்னையில் மட்டும் 73,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 58.2 சதவீதம் ஆகும். 78,161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 61.7 சதவீதமாக உள்ளது.


நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சத்து 26 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 72 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3 லட்சத்து 35 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 4,175 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 145 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 3,35,739.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 1,765-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,765 பேரில் சென்னையில் மட்டுமே 1,169 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 66.2 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 73,728-ல் 1,169 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.5% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.3% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா 2 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 2,23,724 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் சவுதி அரேபியாவைப் பின்னுக்கு தள்ளி 13-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. உலக அளவில் கொலம்பியாவைப் பின்னுக்குத் தள்ளி 19-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இன்றைய எண்ணிக்கை 1,26,581 என்கிற எண்ணிக்கையுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 104,864 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் கத்தாரைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 38,419 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 3,015 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் எகிப்துக்கு அடுத்தபடியாக ஸ்வீடனைப் பின்னுக்குத் தள்ளி சென்னை 25-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 53 அரசு ஆய்வகங்கள், 47 தனியார் ஆய்வகங்கள் என 100 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,652. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 36.8 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 14,91,783. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 1.8 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 42,369. இது .52 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 9.9 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,26,581.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,231.

* மொத்தம் (1,26,581 ) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 78,161 (63.2 %) / பெண்கள் 49,173 (38.8 %)/ மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் ( .01 %)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,544 (60.1%) பேர். பெண்கள் 1,687 (39.9 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,994 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 78,161 பேர் (61.7 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 65 பேர் உயிரிழந்தனர். இதில் 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,765 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,169 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 64 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 10 பேர் ஆவர். இது 15.3 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 8 பேர் ஆவர். இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 25 நாட்களேயான பச்சிளங்குழந்தையும் அடக்கம். 3 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தை கரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த எவ்வித இணை நோய்கள் எதுவுமில்லாத 32 வயது இளைஞர் கரோனாவால் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டைச் சேர்ந்த 35 வயது இளைஞர் மூச்சுத்திணறால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இதேபோன்று திருவள்ளூரைச் சேர்ந்த 38 வயது இளைஞர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டைச் சேர்ந்த 34 வயது இளைஞர் 3 நாட்கள் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 39 வயது இளைஞர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் எவ்வித நோய் பாதிப்புமில்லாதவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார்.

ராணிப்பேட்டையைச் சேர்ந்த 36 வயது இளைஞர் எவ்வித நோயுமில்லாத நிலையில் கோவிட் தாக்கத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்ததில் ஆண்கள் 47 பேர் (72.3 %). பெண்கள் 18 (37.7 %) பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 58 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 7 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,216 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 3,015.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 28.7 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 71.3 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 7,386, திருவள்ளூர் 5,877, மதுரை 5,299, காஞ்சிபுரம் 3,038, திருவண்ணாமலை 2,758, வேலூர் 2,344, கடலூர் 1,480, தூத்துக்குடி 1,754, ராமநாதபுரம் 1,754, சேலம் 1,502, கள்ளக்குறிச்சி 1,539, விழுப்புரம் 1,370, ராணிப்பேட்டை 1,404, திருநெல்வேலி 1,409, தேனி 1,387, திருச்சி 1,170, விருதுநகர் 1,595, கோயம்பத்தூர் 1026 ஆகியவை 1000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

18 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 18 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னையில் தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 5 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன, 12 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 34 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 145 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 4,175 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 6,277 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 3,255 பேர் (51.8 %). பெண் குழந்தைகள் 3,022 பேர் (48.2%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,04,970 பேர் (82.9%). இதில் ஆண்கள் 64,656 பேர். (61.5%) பெண்கள் 40,292 பேர் (38.5%). மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 15,334 பேர் (12.1%). இதில் ஆண்கள் 9,475 பேர் (61.7%). பெண்கள் 5,859 பேர் (38.3 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/563585-people-infected-with-coronavirus-in-tamil-nadu-people-affected-in-chennai-9.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா: அ.தி.மு.கவில் மூன்றாவது அமைச்சர்! மருத்துவமனையில் செல்லூர் ராஜு

 

செல்லூர் ராஜு

 

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, கொரோனா தொற்று காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குக் கொரோனா; அதிர்ச்சியில் பிற அமைச்சர்கள்... விழித்துக்கொள்ளுமா அரசு?!

தமிழக அமைச்சர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவரும் சூழலில், தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம், அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


அவர் அங்கு சிகிச்சை எடுத்துவரும் நிலையில், தற்போது செல்லூர் ராஜுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவதாக அமைச்சர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக செல்லூர் ராஜு நெருக்கிய வட்டாரத்தில் கேட்ட போது, ``அவரின் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டபோது, செல்லூர் ராஜுவுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது.


எனவே, சென்னையில் இருந்தே தனது அலுவலகப் பணிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை நந்தம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்” என்றனர். ஏற்கெனவே உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட அ.தி.மு.க முக்கிய பிரபலங்கள் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/minister-selur-raju-admitted-in-chennai-hospital-over-corona-virus-infection

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 3680 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,205 பேர் பாதிப்பு : சென்னையில் தொடர்ந்து குறைந்து வரும் தொற்று

corona-infection-affects-3680-people-in-tamil-nadu-today-1-205-affected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 3680 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,205 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது.

3680 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 32.7 சதவீதத் தொற்று சென்னையில் (1,205 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,30,261-ல் சென்னையில் மட்டும் 74,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 57.5 சதவீதம் ஆகும். 82,324 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 63.1 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 74 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3 லட்சத்து 41 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 4,219 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 44 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 3,41,677.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 1,829-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,829 பேரில் சென்னையில் மட்டுமே 1,196 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 65.3 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 74,969 -ல் 1,196 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.5% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.4 % ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 6 முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா 2 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 2,30,600 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் சவுதி அரேபியாவைப் பின்னுக்கு தள்ளி பாகிஸ்தானுக்கு கீழே 13-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. உலக அளவில் கொலம்பியாவைப் பின்னுக்குத் தள்ளி பிரான்ஸுக்கு கீழே 19-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இன்றைய எண்ணிக்கை 1,30,261 என்கிற எண்ணிக்கையுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 107,054 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் கத்தாரைப் பின்னுக்குத் தள்ளி 20-வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 39,280 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 36 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 35 மாவட்டங்களில் 2475 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் எகிப்துக்கு அடுத்தபடியாக ஸ்வீடனைப் பின்னுக்குத் தள்ளி சென்னை 25-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 53 அரசு ஆய்வகங்கள், 48 தனியார் ஆய்வகங்கள் என 101 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,105. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 35.3 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 15,29,092. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 1.9 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 37,309. இது .04 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 9.8 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,30,261.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3680.

* மொத்தம் (1,30,261) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 79,582 (61 %) / பெண்கள் 50,657 (39 %)/ மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் ( .01 %)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,196 (59.6 %) பேர். பெண்கள் 1,484 (40.3 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,163 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 82,324 பேர் (63.1 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 64 பேர் உயிரிழந்தனர். இதில் 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 47 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,829 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,196 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 64 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 7 பேர் ஆவர். இது 10.9 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒருவர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 1 வயது ஏழு மாத குழந்தை கரோனாவால் உயிரிழந்தது. உயிரிழந்ததில் ஆண்கள் 44 பேர் (73.4 %). பெண்கள் 17 (26.5 %) பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 57 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 7 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,205 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 2,475.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 32.7 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 67.2 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 36 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 7,635, திருவள்ளூர் 6,075, மதுரை 5482, காஞ்சிபுரம் 3,099, திருவண்ணாமலை 2,861, வேலூர் 2,486, கடலூர் 1,493, தூத்துக்குடி 1,949, ராமநாதபுரம் 1,691, சேலம் 1,630, கள்ளக்குறிச்சி 1,621, விழுப்புரம் 1,411, ராணிப்பேட்டை 1,415, திருநெல்வேலி 1,551, தேனி 1,495, திருச்சி 1,273, விருதுநகர் 1,738, கோயம்பத்தூர் 1,071 ஆகியவை 1000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

18 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 18 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னையில் தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 5 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன, 12 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 34 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 44 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 4,219 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 6442 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 3,344 பேர் (51.8 %). பெண் குழந்தைகள் 3,098 பேர் (48.2%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,08,035 பேர் (82.9%). இதில் ஆண்கள் 66,482 பேர். (61.5%) பெண்கள் 41,531 பேர் (38.5%). மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 15,784 பேர் (12.1%). இதில் ஆண்கள் 9,750 பேர் (61.9%). பெண்கள் 6,028 பேர் (38.1 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/563790-corona-infection-affects-3680-people-in-tamil-nadu-today-1-205-affected-in-chennai-8.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு

சென்னை,

அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. தற்போது 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது.

அதன்படி, முதல் ஞாயிறான கடந்த 5ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இம்மாதத்தின் இரண்டாவது ஞாயிறான நாளை (12-ம் தேதி) மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளான பால் கடைகள், மருந்தகங்கள் மட்டுமே நாளை இயங்கும். காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும். இதேபோல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் நாளை திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டல்கள், டீக்கடைகள் செயல்படாது. பெட்ரோல் பங்குகளும் செயல்படாது. அத்தியாவசியப் சேவைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக மிகச் சொற்பமான பெட்ரோல் பங்குகள் செயல்படும். மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் நாளை வழக்கம்போல செயல்படும்.

தமிழகத்தில், நாளை  (12-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடை பிடிக்கப்படுகிறது. இதனால் மளிகை, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக  கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/11160822/Full-curfew-in-Tamil-Nadu-tomorrow-without-any-relaxation.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

 

கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன், தற்போது ஓய்வில் உள்ளேன் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பதிவு: ஜூலை 11,  2020 17:18 PM
சென்னை,

இந்தியாவில் மராட்டியத்தை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் நேற்று சென்னையைச் சேர்ந்த 27 பேர் உள்பட மொத்தம் 64 பேர் மரணம் அடைந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்தது. தலைநகர் சென்னை மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவிவருகிறது. அரசியல் பிரபலங்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

ஏற்கனவே, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை
மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியிலும், அமைச்சர் பி.தங்கமணி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் இன்னும் குணம் அடையாத நிலையில், தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் அவர் உடனடியாக மியாட் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3-வது அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவார்.

இந்நிலையில்,  கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன், தற்போது ஓய்வில் உள்ளேன் என்று  அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் எனது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுவதை நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கொரோனாவல் பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் விரைவாக குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/11171808/In-Corona-I-have-recovered-from-KPAnbalagan.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 3,965 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,185 பேர் பாதிப்பு: கவலை தரும் தொடர் மரணங்கள்

3965-people-infected-with-coronavirus-in-tamil-nadu-1-185-affected-in-chennai-the-worrying-serial-death-toll  

சென்னை

தமிழகத்தில் இன்று 3,965 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,185 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 76,158 ஆக அதிகரித்துள்ளது.

3,965 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 29.8 சதவீதத் தொற்று சென்னையில் (1,185 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,34,226 -ல் சென்னையில் மட்டும் 76,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 56.7 சதவீதம் ஆகும். 85,915 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 64 சதவீதமாக உள்ளது

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சத்து 34 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 76 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3 லட்சத்து 46 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 4,277 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 44 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 3,46,923.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 1,898-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,898 பேரில் சென்னையில் மட்டுமே 1,221 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 64.3 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 76,158 -ல் 1,196 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.6% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.4% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 6-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா 2 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 2,38,461 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் பாகிஸ்தானைப் பின்னுக்கு தள்ளி இத்தாலிக்கு கீழே 12-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. உலக அளவில் கொலம்பியாவைப் பின்னுக்குத் தள்ளி பிரான்ஸுக்குக் கீழே 19-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இன்றைய எண்ணிக்கை 1,34,226 என்கிற எண்ணிக்கையுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 1,09,140 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் கத்தாரைப் பின்னுக்குத் தள்ளி 20-வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 39,280 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 2475 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் எகிப்துக்கு அடுத்தபடியாக ஸ்வீடனைப் பின்னுக்குத் தள்ளி சென்னை 25-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 53 அரசு ஆய்வகங்கள், 48 தனியார் ஆய்வகங்கள் என 101 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,410. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 34.5 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 15,66,917. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 1.9 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 37,825. இது .04 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 10.4 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,34,226 .

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,965.

* மொத்தம் (1,34,226 ) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 81,992 (61%) / பெண்கள் 52,212 (39%)/ மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் ( .01 %)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,410 (60.7 %) பேர். பெண்கள் 1,555 (39.3%) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,591 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 85,915 பேர் (64%).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 69 பேர் உயிரிழந்தனர். இதில் 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 51 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,898 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,221 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 69 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 9 பேர் ஆவர். இது 13 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 4 பேர். சென்னையைச் சேர்ந்த 30 வயது இளைஞர் (cerebrovascular accident ) பெருமூளை விபத்து பாதிக்கப்பட்டவர், கரோனா தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கரோனா தொற்றால் உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் இதய பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் . ராணிப்பேட்டையைச் சேர்ந்த 38 வயது இளைஞர் எவ்வித நோயும் இல்லாத நிலையில் கரோனாவால் உயிரிழந்தார். உயிரிழந்ததில் ஆண்கள் 50 பேர் (72.4 %). பெண்கள் 19 (27.6 %) பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 61 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,185 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 76,158 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 2,780.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 29.8 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 70.2 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 36 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 7,872, திருவள்ளூர் 6421, மதுரை 5,757, காஞ்சிபுரம் 3,218, திருவண்ணாமலை 2,925, வேலூர் 2,622, கடலூர் 1,510, தூத்துக்குடி 2,124, ராமநாதபுரம் 1,774, சேலம் 1,767, கள்ளக்குறிச்சி 1,723, விழுப்புரம் 1,455, ராணிப்பேட்டை 1,463, திருநெல்வேலி 1,629, தேனி 1,614, திருச்சி 1,401, விருதுநகர் 1,833, கோயம்பத்தூர் 1,142 ஆகியவை 1000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

18 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 18 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னையில் தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 5 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன, 12 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 34 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 58 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 4,277 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 6,640 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 3,447 பேர் (51.9 %). பெண் குழந்தைகள் 3,193 பேர் (48.1%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,11,287 பேர் (82.9%). இதில் ஆண்கள் 68,477 பேர். (61.5%) பெண்கள் 42,788 பேர் (38.5%). மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 16,299 பேர் (12.1%). இதில் ஆண்கள் 10,068 பேர் (61.7%). பெண்கள் 6,231 பேர் (38.3 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/563952-3965-people-infected-with-coronavirus-in-tamil-nadu-1-185-affected-in-chennai-the-worrying-serial-death-toll-8.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு

சென்னை,

சென்னையில் மண்டல வாரியக கொரோன சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் தற்போது வரை 17,989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் 

அதன் விவரம் வருமாறு:-

* கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக 2481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


* அண்ணா நகர்-1,941, தேனாம்பேட்டை-1760, ராயபுரம்-1304, தண்டையார்பேட்டை-1407 பேருக்கு சிகிச்சை

*திரு.வி.க. நகர்-1273, அம்பத்தூர்-997, அடையாறு-1224, வளசரவாக்கம்-1059 பேருக்கு சிகிச்சை

* திருவொற்றியூர்-1,211 மாதவரம்-651, பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/12154716/Zone-wise-in-Chennai-Corona-Therapeutic-Profile-Release.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா: 3,617 பேர் குணம்; 68 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா: 3,617 பேர் குணம்; 68 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 4,244 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 77 ஆயிரத்து 338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனாவில் இருந்து 3 ஆயிரத்து 617 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரையில் 89 ஆயிரத்து 532 பேர் குணம் அடைந்து உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 43 பேர், தனியார் மருத்துவமனைகளில் 25 பேர் என 68 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 17 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 32 பேரும், மதுரை, திருவள்ளூரில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, விருதுநகரில் தலா 4 பேரும், காஞ்சீபுரம், தூத்துக்குடியில் தலா 3 பேரும், தேனி, ராமநாதபுரத்தில் தலா 2 பேரும், கோவை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். தற்போது மொத்த கொரோனா உயிரிழப்பு 1,966 ஆக உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 6 ஆயிரத்து 843 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 16 ஆயிரத்து 870 முதியவர்களும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 203 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 571 முதியவர்களும் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 41 ஆயிரத்து 325 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதுவரை 15 லட்சத்து 42 ஆயிரத்து 234 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

202007130406565401_tamilnadu-today._L_styvpf.gif

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/13040657/Corona-for-4244-newcomers-in-Tamil-Nadu-3617-cured.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை 31-ந் தேதி வரை பஸ்கள் ஓடாது - தடையை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை 31-ந் தேதி வரை பஸ்கள் ஓடாது - தடையை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பஸ் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் அன்று வரை பஸ்கள் ஓடாது.
பதிவு: ஜூலை 14,  2020 05:30 AM
சென்னை, 

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

முழுஊரடங்கு நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் அன்று முதல் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அப்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளுடன் அரசு பஸ் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.


இதற்கிடையே, அந்த மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்தது. இதற்கு பொது போக்குவரத்தும் ஒரு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் குழு கூறியதால், பஸ் போக்குவரத்துக்கு 15-ந் தேதி (நாளை) வரை தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. குடும்பத்தினரின் திருமணம், மருத்துவ சிகிச்சை, இறுதிச்சடங்கு போன்ற அத்தியாவசிய காரணங்களுக்கு செல்பவர்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.

மேலும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் அந்தந்த நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர், அலுவலகங்களுக்கு சென்று வருவதற்காக சில அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், பஸ் போக்குவரத்துக்கு நாளையுடன் முடிவடைவதாக இருந்த தடையை, வருகிற 31-ந் தேதி வரை மேலும் 16 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31-ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா நோய்த் தொற்றை தடுக்க தமிழக அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொது பஸ் போக்குவரத்து சேவை கடந்த 1-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை நிறுத்தப்பட்டது.

தற்போது, தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் 31-ந் தேதி முடிய தனியார் மற்றும் அரசு பொது பஸ் போக்குவரத்து சேவை இயக்கப்படாது.

தமிழ்நாடு அரசின் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/14030816/Measures-to-control-corona-spread-Buses-will-not-run.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு கரோனா தொற்று: சென்னையில் 1,140 பேர் பாதிப்பு

people-infected-with-coronavirus-in-tamil-nadu-1-185-affected-in-chennai-the-worrying-serial-death-toll  

சென்னை

தமிழகத்தில் இன்று 4,328 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,140 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 78,573 ஆக அதிகரித்துள்ளது.

4,328 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 26.3 சதவீதத் தொற்று சென்னையில் (1,140 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,42,798-ல் சென்னையில் மட்டும் 78,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 55 சதவீதம் ஆகும். 92,567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 64.8 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சத்து 42 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 78 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3 லட்சத்து 69 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 4,369 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 44 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 3,46,923.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 2,032-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 2,032 பேரில் சென்னையில் மட்டுமே 1,277 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

* தற்போது 53 அரசு ஆய்வகங்கள், 52 தனியார் ஆய்வகங்கள் என 105 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 48,196. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 33.7 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 16,54,008.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 44,560.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,42,798.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,328.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 87,111/ பெண்கள் 55,664 / மூன்றாம் பாலினத்தவர் 23 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,410 (60.7%) பேர். பெண்கள் 1,555 (39.3%) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,035 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 92,567 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 66 பேர் உயிரிழந்தனர். இதில் 16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,032 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,277 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 7,065 பேர். இதில் ஆண் குழந்தைகள் 3,689 பேர். பெண் குழந்தைகள் 3,376 பேர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,18,358 பேர் . இதில் ஆண்கள் 72,699 பேர். பெண்கள் 45,636 பேர். .மூன்றாம் பாலினத்தவர் 23 பேர்.

60 வயதுக்கு மேற்பட்டோர் 17,375 பேர். இதில் ஆண்கள் 10,723 பேர் . பெண்கள் 6,652 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/564257-people-infected-with-coronavirus-in-tamil-nadu-1-185-affected-in-chennai-the-worrying-serial-death-toll-4.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதிப்பு: யோகா, இயற்கை மருத்துவத்தால் பயனடைந்த 61 ஆயிரம் பேர் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரோனா பாதிப்பு: யோகா, இயற்கை மருத்துவத்தால் பயனடைந்த 61 ஆயிரம் பேர் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 61 ஆயிரம் பேருக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ பயிற்சிகளால் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பதிவு: ஜூலை 15,  2020 04:15 AM
சென்னை, 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்தா மற்றும் யோகா சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.


கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் தொடர்ந்து மூச்சுப் பயிற்சிகளை மேற்கொண்டால் நுரையீரலின் செயல்திறன் அதிகரித்து சுவாசப் பாதைகள் சீராகும். மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க எளிய முறையிலான சில ஆசனங்களும் வழி வகுக்கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் இடங்களுக்கே சென்று இப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனைத் தவிர, மூலிகை பானங்கள், நவதானிய வகைகள், சிறு தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளும், நீராவி பிடித்தல், சுவாசத்திற்கான நறுமணச் சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.

இப்பணிகளில் 200-க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்ட மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்கள் என 86 இடங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் இதுவரை 61 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளனர். தேவையின் அடிப்படையில் இச்சிகிச்சை முறைகள் மேலும் விரிவுபடுத்தப்படும்.

முதல்-அமைச்சரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/15031151/Corona-vulnerability-61-thousand-people-have-benefited.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 1.5 லட்சத்தைக் கடந்த கரோனா; இன்று 4,496 பேருக்குத் தொற்று: சென்னையில் 1,291 பேர் பாதிப்பு

people-infected-with-coronavirus-in-tamil-nadu-1-185-affected-in-chennai-the-worrying-serial-death-toll  

சென்னை

தமிழகத்தில் இன்று 4,496 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,291 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 80,961 ஆக அதிகரித்துள்ளது.

4,496 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 28.7 சதவீதத் தொற்று சென்னையில் (1,291 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,51,820-ல் சென்னையில் மட்டும் 80,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 53 சதவீதம் ஆகும். 1,02,310 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 67.3 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சத்து 51 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 80 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3 லட்சத்து 71 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 4,494 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 66 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 3,71,101.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 2,167-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 2,167 பேரில் சென்னையில் மட்டுமே 1,318 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

* தற்போது 54 அரசு ஆய்வகங்கள், 53 தனியார் ஆய்வகங்கள் என 107 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 47,340 .

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 17,36,747.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 41,382.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,42,798.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,328.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 92,514 பேர்/ பெண்கள் 59,283 பேர்/மூன்றாம் பாலினத்தவர் 23 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,680 பேர். பெண்கள் 1,816 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,000 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,02,310 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 68 பேர் உயிரிழந்தனர். இதில் 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 48 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,167 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,318 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/564622-people-infected-with-coronavirus-in-tamil-nadu-1-185-affected-in-chennai-the-worrying-serial-death-toll-4.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கு அடுத்த இடத்தில் சென்னை; தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,157 பேர் பாதிப்பு 

chennai-is-next-to-china-corona-infection-affects-4-549-people-today-1-157-people-affected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 4,549 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,157 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 82,128 ஆக அதிகரித்துள்ளது.

4,549 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 25.4 சதவீதத் தொற்று சென்னையில் (1,157 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,56,369-ல் சென்னையில் மட்டும் 82,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 52.5 சதவீதம் ஆகும். 1,07,416 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 68.6 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சத்து 56 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 82 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3 லட்சத்து 78 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 4,560 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 66 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 3,78,663.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 2,236 -ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 2,236 பேரில் சென்னையில் மட்டுமே 1,341 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 59.9 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 82,128-ல் 1,341 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.6% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.4% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 6-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. சில மாநிலங்கள் மட்டுமே 25 ஆயிரத்தைக் கடந்த நிலையில் இன்று பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள மாநிலங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

மகாராஷ்டிரா 2.5 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 2,75,640 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 9-ம் இடத்திலிருந்த மெக்சிகோவை பின்னுக்குத் தள்ளி 9-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் கொலம்பியாவைப் பின்னுக்குத் தள்ளி பிரான்ஸுக்கு நெருக்கமாக கீழே 19-வது இடத்தில் உள்ளது. இன்றைய எண்ணிக்கை 1,56,369 என்கிற எண்ணிக்கையுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 1,16,993 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் கனடாவைப் பின்னுக்குத் தள்ளி 20-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் குஜராத்தைப் பின்னுக்கு தள்ளி கர்நாடகா 47,253 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், குஜராத் 44,552 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 41,383 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், தெலங்கானாவில் 39,342 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், ஆந்திராவில் 35,451 என்கிற எண்ணிக்கையுடன் 8-வது இடத்திலும், மேற்கு வங்கம் 34,427 எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும் உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 3,392 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினாவைப் பின்னுக்குத் தள்ளி சென்னை 82,128 என்கிற எண்ணிக்கையுடன் 23-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 54 அரசு ஆய்வகங்கள், 53 தனியார் ஆய்வகங்கள் என 107 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,714. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 29.8 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 17,82,635. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 2.2 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 45,888. இது .05 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 9.9 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,56,369 .

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,549 .

* மொத்தம் (1,56,369 ) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 95,308 பேர் (60.9 %) / பெண்கள் 61,038 பேர் (39 %)/ மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் ( .01 %)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,794 (60.4 %) பேர். பெண்கள் 1,755 (39.6 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,106 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,07,416 பேர் (68.6 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 69 பேர் உயிரிழந்தனர். இதில் 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,236 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,341 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 69 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 15 பேர் ஆவர். இது 21 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 3 பேர். கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 50 பேர் (72.4 %). பெண்கள் 19 (27.6 %) பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 63 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 6 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,157 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 82,128 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 3,392.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 25.4 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 74.6 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 8,908, திருவள்ளூர் 8,107, மதுரை 7,597, காஞ்சிபுரம் 4,310, திருவண்ணாமலை 3,563, வேலூர் 3,445, கடலூர் 1646 , தூத்துக்குடி 2,940, ராமநாதபுரம் 2,167, சேலம் 2,123, கள்ளக்குறிச்சி 2,049, விழுப்புரம் 1,926, ராணிப்பேட்டை 1,858, திருநெல்வேலி 2,228, தேனி 2,053, திருச்சி 1,902, விருதுநகர் 2,749, கோயம்பத்தூர் 1,644, திண்டுக்கல் 1,193, சிவகங்கை 1,188 ஆகியவை 1000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

16 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 20 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னையில் தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 5 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 9 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 66 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 4,560 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 7782 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 4,075 பேர் (52.3 %). பெண் குழந்தைகள் 3,707 பேர் (47.7 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,29,430 பேர் (82.7%). இதில் ஆண்கள் 79,379 பேர். (61.3%) பெண்கள் 50,028 பேர் (38.6%). மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 19,157 பேர் (12.2%). இதில் ஆண்கள் 11,854 பேர் (61.8%). பெண்கள் 7,303 பேர் (38.2 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/564848-chennai-is-next-to-china-corona-infection-affects-4-549-people-today-1-157-people-affected-in-chennai-9.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிழகம் மொத்த கரோனா தொற்று 4538: சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் புள்ளி விவரம்

chennai-is-next-to-china-corona-infection-affects-4-549-people-today-1-243-people-affected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 4,538 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1243 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 83,377 ஆக அதிகரித்துள்ளது.

4,538 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 27.3 சதவீதத் தொற்று சென்னையில் (1,243 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,60,907-ல் சென்னையில் மட்டும் 83,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 51.8 சதவீதம் ஆகும். 1,10,807 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 68.8 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 83 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3 லட்சத்து 84 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 4,635 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 79 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 3,84,699.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 2,315 -ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 2,315 பேரில் சென்னையில் மட்டுமே 1,376 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 59.4 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 83377-ல் 1,376 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.6% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.4% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 6-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. சில மாநிலங்கள் மட்டுமே 25 ஆயிரத்தைக் கடந்த நிலையில் இன்று பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள மாநிலங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

மகாராஷ்டிரா 2.5 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 2,84,281 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 9-ம் இடத்திலிருந்த மெக்சிகோவை பின்னுக்குத் தள்ளி 9-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் கொலம்பியாவைப் பின்னுக்குத் தள்ளி பிரான்ஸுக்கு நெருக்கமாக கீழே 19-வது இடத்தில் உள்ளது. இன்றைய எண்ணிக்கை 1,60,907 என்கிற எண்ணிக்கையுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 1,18,645 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் கனடாவைப் பின்னுக்குத் தள்ளி 20-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் குஜராத்தைப் பின்னுக்கு தள்ளி கர்நாடகா 51,422 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், குஜராத் 45,481 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 43,441 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், தெலங்கானாவில் 41,018 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், ஆந்திராவில் 38,044 என்கிற எண்ணிக்கையுடன் 8-வது இடத்திலும், மேற்கு வங்கம் 36,117 எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும் உள்ளது. ராஜஸ்தான் 27,174 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 3,295 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினாவைப் பின்னுக்குத் தள்ளி சென்னை 83,377 என்கிற எண்ணிக்கையுடன் 23-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 55 அரசு ஆய்வகங்கள், 54 தனியார் ஆய்வகங்கள் என 109 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 47,782. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 29.6 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 18,31,304. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 2.2 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 48,669. இது .06 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 9.3 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,60,907 .

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,538 .

* மொத்தம் (1,60,907 ) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 95,308 பேர் (59.2 %) / பெண்கள் 61,038 பேர் (40.7 %)/ மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் ( .01 %)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,755 (60.7 %) பேர். பெண்கள் 1,783 (39.3 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,391 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,10,807 பேர் (68.8 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 79 பேர் உயிரிழந்தனர். இதில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 56 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,315 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,376 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 79 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 16 பேர் ஆவர். இது 21 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 2 பேர். கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 47 பேர் (59.5 %). பெண்கள் 32 (40.5 %) பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 78 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் ஒருவர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,243 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 83,377 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 3,295.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 27.3 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 72.7 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 9035, திருவள்ளூர் 8329, மதுரை 7,858, காஞ்சிபுரம் 4422, திருவண்ணாமலை 3709, வேலூர் 3628, தூத்துக்குடி 3129, விருதுநகர் 2948, திருநெல்வேலி 2345, ராமநாதபுரம் 2249, தேனி 2229, சேலம் 2186, கள்ளக்குறிச்சி 2107, விழுப்புரம் 2039, திருச்சி 2004, ராணிப்பேட்டை 1915, கோயம்பத்தூர் 1785, கடலூர் 1690 , திண்டுக்கல் 1356, சிவகங்கை 1260 ஆகியவை 1000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

16 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 20 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னையில் தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 5 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 9 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 79 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 4,635 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 7991 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 4,184 பேர் (52.3 %). பெண் குழந்தைகள் 3,807 பேர் (47.7 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,33,177 பேர் (82.7%). இதில் ஆண்கள் 81,666 பேர். (61.3%) பெண்கள் 51,488 பேர் (38.6%). மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 19,739 பேர் (12.2%). இதில் ஆண்கள் 12,213 பேர் (61.8%). பெண்கள் 7,526 பேர் (38.2 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/565037-chennai-is-next-to-china-corona-infection-affects-4-549-people-today-1-243-people-affected-in-chennai-9.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொற்று புதிய உச்சம் தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிர் பலி ஒரே நாளில் 88 பேர் சாவு

தொற்று புதிய உச்சம் தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிர் பலி ஒரே நாளில் 88 பேர் சாவு

சென்னை,

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் கடந்த சில தினங்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 88 பேர் பலியாகி உள்ளனர். அதே போன்று தொற்று பாதிப்பும் 4 ஆயிரத்து 807 என்று புதிய உச்சத்தை தொட்டது.

இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 47 ஆயிரத்து 179 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனை முடிவில் 4 ஆயிரத்து 807 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் ஆண்கள் 2 ஆயிரத்து 907 பேரும், பெண்கள் 1,900 பேரும் அடங்குவர். வெளிநாடுகளில் இருந்து வந்த 17 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 59 பேர், 12 வயதுக்கு உட்பட்ட 260 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 601 முதியவர்களுக்கும் பாதிப்பு பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் தொற்று கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,219 பேரும், திருவள்ளூரில் 370 பேரும், செங்கல்பட்டில் 323 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 4 பேரும், திருப்பத்தூரில் 3 பேரும் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் இதுவரை 18 லட்சத்து 4 ஆயிரத்து177 பேருக்கு கொரோனாபரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 1 லட்சத்து 970 ஆண்களும், 64 ஆயிரத்து 721 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 23 பேரும் பாதிக்கப்பட்டனர். இதில் 12 வயதுக்கு உள்பட்ட 7 ஆயிரத்து 825 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 20 ஆயிரத்து 340 முதியவர்களும் அடங்குவர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 64 பேரும், தனியார் மருத்துவமனையில் 24 பேரும் சிகிச்சையில் இருந்தவர்கள்.

உயிரிழப்பு பட்டியலில் சென்னையில் 31 பேரும், மதுரையில் 9 பேரும், திருவள்ளூரில் 7 பேரும், காஞ்சீபுரத்தில் 5 பேரும், வேலூர், தேனி, ராமநாதபுரத்தில் தலா பேரும், சேலம், தஞ்சாவூரில் தலா 3 பேரும், விருதுநகர், திருவண்ணாமலை, திண்டுக்கல், செங்கல்பட்டில் தலா இருவரும், கோவை, கன்னியாகுமரி, கரூர், நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் இடம் பெற்றனர். இதுவரையில் 2,403 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனாவில் இருந்து 3 ஆயிரத்து 49 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதில் சென்னையில் 1,116 பேரும், திருவள்ளூரில் 243 பேரும் அடங்குவர். கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 856 ஆக அதிகரித்து உள்ளது. சிகிச்சையில் 49 ஆயிரத்து 452 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 673 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 439 பேரும், ரெயில் மூலம் வந்த 424 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 141 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 711 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/19040635/Rising-corona-death-toll-rises-to-88-in-Tamil-Nadu.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 4,979 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 70,693 ஆக உயர்வு; இன்று மட்டும் 78 பேர் உயிரிழப்பு

4-979-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu தமிழகத்தில் கரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம்

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 4,979 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழகத்தில் இன்றைய (ஜூலை 19) கரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

தமிழகத்தில் இன்று புதிதாக 4,979 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 993. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 19 லட்சத்து 32 ஆயிரத்து 492.

இன்று மட்டும் 51 ஆயிரத்து 640 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக, 18 லட்சத்து 55 ஆயிரத்து 817 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் தமிழகத்தில் 4,059 பேர் குணமாகி மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 915 பேர்.

இன்று மட்டும் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 23 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 55 பேர் என மொத்தம் 78 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 2,481 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணைநோய்கள் உள்ளவர்கள் 75 பேர். இணை நோய் அல்லாதவர்கள் 3 பேர்.

இன்று வரை 50 ஆயிரத்து 294 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,254 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 85 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,434 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசு சார்பாக 57 மற்றும் தனியார் சார்பாக 55 என மொத்தம் 112 கரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

https://www.hindutamil.in/news/tamilnadu/565364-4-979-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு 85,859; சிகிச்சையில் 15,042 பேர்

சென்னையில் கொரோனா பாதிப்பு 85,859; சிகிச்சையில்  15,042 பேர்

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 85,859 பேராக அதிகரித்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 15,042 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சிகிச்சை பெற்று 69,382பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் சென்னையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,434 பேராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


சென்னையில் மண்டலம் வாரியாக சிகிச்சைபெற்று வருபவர்கள் விவரம்

மண்டலம்    குணமடைந்தவர்கள்    இறந்தவர்கள்    பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
திருவொற்றியூர்    2627    73    545
மணலி    1306    17    255
மாதவரம்    2234    35    389
தண்டையார்பேட்டை    7751    192    807
ராயபுரம்    9031    176    1033
திருவிக நகர்    5691    153    1009
அம்பத்தூர்    3346    53    905
அண்ணா நகர்    8011    148    1586
தேனாம்பேட்டை    7896    209    1316
கோடம்பாக்கம்    7456    152    2119
வளசரவாக்கம்    3515    50    723
ஆலந்தூர்    1934    33    537
அடையாறு    4442    82    1085
பெருங்குடி    1872    32    355
சோழிங்கநல்லூர்    1507    12    389
இதர மாவட்டம்    763    17    1989
மொத்தம்    69,382    1,434    15,042

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/20122853/Corona-damage-in-Chennai-85859-15042-in-treatment.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.75 லட்சத்தை எட்டிய தமிழகம்;  4,807 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் புள்ளிவிவரம்

tamil-nadu-reaches-1-75-lakhs-corona-infection-in-4-807-people-statistics-of-districts-including-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 4,985 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,298 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 87,235 ஆக அதிகரித்துள்ளது.

4,985 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 26 சதவீதத் தொற்று சென்னையில் (1,298) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,75,678 -ல் சென்னையில் மட்டும் 87,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 49.6 சதவீதம் ஆகும். 1,21,776 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 69.3 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 87 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 02 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 4,843 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 88 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,02,603.

தமிழகத்தில் உயிரிழப்பு 2,551-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 2,551 பேரில் சென்னையில் மட்டுமே 1,456 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 57 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 87,235 -ல் 1,456 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.6% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.4% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 6-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்கள் 30 ஆயிரத்தைக் கடந்து வேகாமாக தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிரா 3 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 3,10,455 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 9-ம் இடத்திலிருந்த ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி 9-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி 19-வது இடத்தில் உள்ளது. இன்றைய எண்ணிக்கை 1,75,678 என்கிற எண்ணிக்கையுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 1,22,793 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் கனடாவைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் குஜராத்தைப் பின்னுக்கு தள்ளி கர்நாடகா 63,792 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், ஆந்திரா 49,650 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 49,297 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், குஜராத் 48,355 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், தெலங்கானா 45,076 என்கிற எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 42,487 எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், ராஜஸ்தான் 29,434 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 3,687பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையை கடந்தது.

உலக அளவில் கத்தாருக்கு அடுத்தபடியாக சீனாவைப் பின்னுக்குத் தள்ளி சென்னை 87,235 என்கிற எண்ணிக்கையுடன் 26-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 57 அரசு ஆய்வகங்கள், 55 தனியார் ஆய்வகங்கள் என 112 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 51,348. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 29.2 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 19,84,579. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 2.4 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 52,087. இது .05 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 9.5 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,75,678.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,985.

* மொத்தம் (1,75,678) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,06,828 பேர் (60.8 %) / பெண்கள் 68,827 பேர் (39.2 %)/ மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் ( .01 %)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,921 (58.5 %) பேர். பெண்கள் 2,064 (41.5 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,861 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,21,776 பேர் (69.3 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 70 பேர் உயிரிழந்தனர். இதில் 21 பேர் தனியார் மருத்துவமனையிலும், 49 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,551 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,456 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 70 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 9 பேர் ஆவர். இது 12.8 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 2 பேர். கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 55 பேர் (78.5 %). பெண்கள் 15 (21.5 %) பேர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 63 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 7 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 3,687.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 26 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 74 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 10027, திருவள்ளூர் 9424, மதுரை 8357, காஞ்சிபுரம் 5095, திருவண்ணாமலை 4070, வேலூர் 4068, தூத்துக்குடி 3643, விருதுநகர் 3563, திருநெல்வேலி 2783, ராமநாதபுரம் 2525, தேனி 2601, சேலம் 2374, கள்ளக்குறிச்சி 2388, விழுப்புரம் 2299, திருச்சி 2343, ராணிப்பேட்டை 2196, கோயம்பத்தூர் 2183, கடலூர் 1863, திண்டுக்கல் 1680, சிவகங்கை 1612, தென்காசி 1200, தஞ்சாவூர் 1245 , புதுக்கோட்டை 1087 ஆகியவை 1000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

13 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 23 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னையில் தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 7 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 7 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 55 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 4,843 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 8,776 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 4586 பேர் (52.2 %). பெண் குழந்தைகள் 4190 பேர் (47.8 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,45,220 பேர் (82.6%). இதில் ஆண்கள் 88,868 பேர். (61.1 %) பெண்கள் 56329 பேர் (38.7 %). மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 21,682 பேர் (12.3%). இதில் ஆண்கள் 13,374 பேர் (61.6%). பெண்கள் 8,308 பேர் (38.4 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/565553-tamil-nadu-reaches-1-75-lakhs-corona-infection-in-4-807-people-statistics-of-districts-including-chennai-9.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக அளவில் 19-ம் இடத்தில் தமிழகம்;  4,965 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் புள்ளிவிவரம்

tamil-nadu-ranked-19th-in-the-world-new-corona-infection-in-4-965-people-statistics-of-districts-including-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 4,965 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,130 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது.

4,965 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 26 சதவீதத் தொற்று சென்னையில் (1,130) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,80,643-ல் சென்னையில் மட்டும் 88,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 49.6 சதவீதம் ஆகும். 1,26,670 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 69.3 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 88 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 8 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 4,921 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 78 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,08,596.

தமிழகத்தில் உயிரிழப்பு 2,626-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 2,626 பேரில் சென்னையில் மட்டுமே 1,475 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 56.1 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 88,377-ல் 1,130 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.6% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.4% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் 30 ஆயிரத்தைக் கடந்து தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிரா 3 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 3,18,695 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 9-ம் இடத்திலிருந்த ஸ்பெயினைப் பின்னுக்குத் தள்ளி 9-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி 19-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 1,80,643 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 1,23,747 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் கனடாவைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் குஜராத்தைப் பின்னுக்கு தள்ளி கர்நாடகா 67,420 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், ஆந்திரா 53,724 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 51,160 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், குஜராத் 49,353 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், தெலங்கானா 46,274 என்கிற எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 44,769 எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், ராஜஸ்தான் 30,390 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 3,835 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையை கடந்து விட்டது.

உலக அளவில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக எகிப்தைப் பின்னுக்குத் தள்ளி சென்னை 88,377 என்கிற எண்ணிக்கையுடன் 25-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 58 அரசு ஆய்வகங்கள், 55 தனியார் ஆய்வகங்கள் என 113 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 51,344. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 28.4 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 20,35,645. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 2.5 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 51,066. இது .06 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 9.7 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,80,377.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,965.

* மொத்தம் (1,80,377) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,09,838 பேர் (60.8%) / பெண்கள் 70,782 பேர் (39.2%)/ மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் ( .01%)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,010 (60.6 %) பேர். பெண்கள் 1,955 (39.3%) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,894 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,26,670 பேர் (70.2%).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 78 பேர் உயிரிழந்தனர். இதில் 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 48 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,626 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,475 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 78 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 7 பேர் ஆவர். இது 8.9 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் ஒருவர். கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 53 பேர் (67.9%). பெண்கள் 25 (32.1%) பேர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 69 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 6 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 3,835.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 22.7 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 77.3 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 10,289, திருவள்ளூர் 9,774, மதுரை 8,517, காஞ்சிபுரம் 5,362, திருவண்ணாமலை 4,233, வேலூர் 4,226, தூத்துக்குடி 3,914, விருதுநகர் 3,924, திருநெல்வேலி 2,851, ராமநாதபுரம் 2,603, தேனி 2,732, சேலம் 2,459, கள்ளக்குறிச்சி 2,435, விழுப்புரம் 2,396, திருச்சி 2,470, ராணிப்பேட்டை 2,370, கோயம்பத்தூர் 2,359, கடலூர் 1,921, திண்டுக்கல் 1,725, சிவகங்கை 1,687, தென்காசி 1,259, தஞ்சாவூர் 1,316 , புதுக்கோட்டை 1,127, திருவாரூர் 1,014 ஆகியவை 1000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

12 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 23 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 7 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 7 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 78 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 4,921 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 9,028 பேர் (5%). இதில் ஆண் குழந்தைகள் 4725 பேர் (52.3%). பெண் குழந்தைகள் 4303 பேர் (47.7%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 14,92,83 பேர் (82.7%). இதில் ஆண்கள் 91,328 பேர். (61.1%) பெண்கள் 57,932 பேர் (38.7%). மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 22,332 பேர் (12.3%). இதில் ஆண்கள் 13,782 பேர் (61.7%). பெண்கள் 8,547 பேர் (38.3 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/565716-tamil-nadu-ranked-19th-in-the-world-new-corona-infection-in-4-965-people-statistics-of-districts-including-chennai-9.html

 

Link to comment
Share on other sites

தமிழகத்தில் முதல்தடவையாக ஒரேநாளில் ஐயாயிரம் பேருக்குமேல் தொற்று!

    by : Litharsan

Coronavirus-Pandemic-Tamilnadu.jpg

தமிழகத்தில் முதல்தடவையாக ஒரேநாளில் ஐயாயிரம் பேருக்குமேல் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.

அந்தவகையில், கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 849 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாக 74 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் மூவாயிரத்து  144 ஆக உயர்ந்துள்ளன. நேற்றுவரையான காலப்பகுதியில் இரண்டாயிரத்து 626 ஆக பதிவாகியிருந்த நிலையில் விடுபட்ட மரணங்களாக 444 பேரின் உயிரிழப்புக்களையும் சேர்த்து இன்று மொத்த உயிரிழப்பு மூவாயிரத்தைக் கடந்துள்ளது.

சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 89ஆயிரத்து 561 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகபட்சமாக நான்காயிரத்து 910 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 583 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று அதிகபட்சமாக 60 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்து 20 இலட்சத்து 15 ஆயிரத்து 147ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/தமிழகத்தில்-முதல்தடவையா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் முதன்முறையாக 5,000-ஐ கடந்த தொற்று எண்ணிக்கை: 10,000-ஐ கடந்த மாவட்டங்களின் புள்ளிவிவரம்

for-the-first-time-the-number-of-infections-passed-5-000-corona-infection-in-5-849-people-in-tamil-nadu-statistics-of-over-10-000-districts  

சென்னை

தமிழகத்தில் முதன் முறையாக அதிக அளவில் 5849 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,171 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டை தொடர்ந்து திருவள்ளூரும் 10 ஆயிரம் எண்ணிக்கையை கடந்தது.

5849 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 20 சதவீதத் தொற்று சென்னையில் (1,171) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,86,492 -ல் சென்னையில் மட்டும் 89,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 48 சதவீதம் ஆகும். 1,31,589 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 70.5 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 1.5 லட்சத்தைக் கடந்து 2 லட்சத்தை நோக்கி செல்கிறது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சத்து 86 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 89 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 13ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 4,995 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 74 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,13,857.

தமிழகத்தில் உயிரிழப்பு 3144-ஐக் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 3144 பேரில் சென்னையில் மட்டுமே (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) 1,939 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 61.6 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 89,561-ல் 1,939 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 2.1 % ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6 % ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் 30 ஆயிரத்தைக் கடந்து தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிரா 3 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 3,27,031 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 9-ம் இடத்திலிருந்த ஸ்பெயினைப் பின்னுக்குத் தள்ளி 9-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி ஜெர்மனிக்கு அடுத்து 19-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 1,86,492 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 1,25,096 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் கனடாவைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் குஜராத்தைப் பின்னுக்கு தள்ளி கர்நாடகா 71,069 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், ஆந்திரா 58,668 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 53,288 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், குஜராத் 50,379 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், தெலங்கானா 47,705 என்கிற எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 47,030 எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், ராஜஸ்தான் 31,373 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,678பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டை அடுத்து திருவள்ளூரும் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையை கடந்து விட்டது.

உலக அளவில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக எகிப்தைப் பின்னுக்குத் தள்ளி சென்னை 89,561 என்கிற எண்ணிக்கையுடன் 25-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 58 அரசு ஆய்வகங்கள், 55 தனியார் ஆய்வகங்கள் என 113 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 51,765. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 27.7 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 20,95,757. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 2.6 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 60,112. இது .75 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 9.7 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,86,492.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5849.

* மொத்தம் (1,86,492 ) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,31,583பேர் (70.5 %) / பெண்கள் 73,150 பேர் (39.2%)/ மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் ( .01%)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,481 (59.5 %) பேர். பெண்கள் 2,368 (40.5 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,910 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,31,589 பேர் (70.5%).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 74 பேர் உயிரிழந்தனர். இதில் 24 பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3144 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,939 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 74 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 12 பேர் ஆவர். இது 8.9 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் இருவர். கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 59 பேர் (79.7%). பெண்கள் 15 (20.3 %) பேர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 68 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 6 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 4,678

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 20 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 80 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 10,495, திருவள்ளூர் 10,210, மதுரை 8705, காஞ்சிபுரம் 5,697, திருவண்ணாமலை 4,444, வேலூர் 4,359, தூத்துக்குடி 4241, விருதுநகர் 4,287, திருநெல்வேலி 2,972, ராமநாதபுரம் 2,692, தேனி 2,899, சேலம் 2,560, கள்ளக்குறிச்சி 2,517, விழுப்புரம் 2,501, திருச்சி 2,686, ராணிப்பேட்டை 2,784, கோயம்பத்தூர் 2539, கடலூர் 1991, திண்டுக்கல் 1,725, சிவகங்கை 1,826, தென்காசி 1,344, தஞ்சாவூர் 1,422, புதுக்கோட்டை 1,186, திருவாரூர் 1,059 ஆகியவை 1000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

12 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 23 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 7 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 7 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 74 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 4,995 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 9,357 பேர் (5%). இதில் ஆண் குழந்தைகள் 4,885 பேர் (52.2%). பெண் குழந்தைகள் 4,472 பேர் (47.8%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 15,40,60 பேர் (82.6%). இதில் ஆண்கள் 94,226 பேர். (61.1%) பெண்கள் 59,814 பேர் (38.8%). மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 23,072 பேர் (12.3%). இதில் ஆண்கள் 14,208 பேர் (61.5%). பெண்கள் 8,864 பேர் (38.4 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/565902-for-the-first-time-the-number-of-infections-passed-5-000-corona-infection-in-5-849-people-in-tamil-nadu-statistics-of-over-10-000-districts-9.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 6,472 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,336 பேர் பாதிப்பு: 5,210 பேர் டிஸ்சார்ஜ்

for-the-first-time-in-tamil-nadu-the-number-of-infections-has-crossed-6-000-tamil-nadu-infection-number-6472-additional-death-toll  

சென்னை

தமிழகத்தில் முதன்முறையாக அதிக அளவில் 6,472 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,336 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6,472 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 20 சதவீதத் தொற்று சென்னையில் (1,336) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,92,964 -ல் சென்னையில் மட்டும் 90,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 47.1 சதவீதம் ஆகும். 1,36,793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 70.8 சதவீதமாக உள்ளது

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 1.9 லட்சத்தைக் கடந்து 2 லட்சத்தை நோக்கிச் செல்கிறது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 90 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,044 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 49 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,20,925.

தமிழகத்தில் உயிரிழப்பு 3,232-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 3,232 பேரில் சென்னையில் மட்டுமே 1,939 பேர் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 12.5 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 90,900-ல் 1,947 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 2.1% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் 30 ஆயிரத்தைக் கடந்து தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிரா 3 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 3,37,607 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 9-ம் இடத்திலிருந்த சிலியை பின்னுக்குத் தள்ளி 8-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி ஜெர்மனிக்கு அடுத்து 19-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 1,92,964 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 1,26,323 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் கனடாவைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் குஜராத்தைப் பின்னுக்குத் தள்ளி கர்நாடகா 75,833 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், ஆந்திரா 64,713 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 55,588 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், குஜராத் 51,399 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 49,321 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், தெலங்கானா 49,259 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், ராஜஸ்தான் 32,334 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 5,136 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டை அடுத்து திருவள்ளூரும் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.

உலக அளவில் ஈராக்குக்கு அடுத்தபடியாக இந்தோனேசியாவைப் பின்னுக்குத் தள்ளி சென்னை 90,900 என்கிற எண்ணிக்கையுடன் 24-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 58 அரசு ஆய்வகங்கள், 55 தனியார் ஆய்வகங்கள் என 113 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52,939. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 27.4 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 21,57,869. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 2.6 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 62,112. இது .77 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 10.4 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 21,57,869.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,472.

* மொத்தம் (1,92,964) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,17,252பேர் (60.5 %) / பெண்கள் 75,689 பேர் (39.5 %)/ மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் ( .01%)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,933 (60.7 %) பேர். பெண்கள் 2,539 (39.3 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,210 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,36,793 பேர் (70.8 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 88 பேர் உயிரிழந்தனர். இதில் 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 63 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,232 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,947 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 88 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 18 பேர் ஆவர். இது 8.9 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 11 பேர் . இதுவரையில் 40 வயதுக்குட்பட்டவர்களில் 11 பேர் ஒரே நாளில் உயிரிழந்தது இன்றுதான். இதில் கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 67 பேர் (76.1%). பெண்கள் 21 (23.8 %) பேர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 77 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 11 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 5,136.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 20 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 80 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 10,888, திருவள்ளூர் 10,627, மதுரை 8,984, காஞ்சிபுரம் 6,010, திருவண்ணாமலை 4,637, வேலூர் 4,472, தூத்துக்குடி 4,656, விருதுநகர் 4,767, திருநெல்வேலி 3,219, ராமநாதபுரம் 2,792, தேனி 3,087, சேலம் 2,609, கள்ளக்குறிச்சி 2,651, விழுப்புரம் 2,613, திருச்சி 2,872, ராணிப்பேட்டை 3,001, கோயம்பத்தூர் 2,777, கடலூர் 2,070, திண்டுக்கல் 1,930, சிவகங்கை 1,824, தென்காசி 1,412, தஞ்சாவூர் 1,542, புதுக்கோட்டை 1,299, திருவாரூர் 1,061 ஆகியவை 1000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

12 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 23 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 7 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 7 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 74 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 5,044 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 9,699 பேர் (5%). இதில் ஆண் குழந்தைகள் 5,068 பேர் (52.2%). பெண் குழந்தைகள் 4,631 பேர் (47.8%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,59,384 பேர் (82.5%). இதில் ஆண்கள் 97,485 பேர். (61.1%) பெண்கள் 61,876 பேர் (38.8%). மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 23,881 பேர் (12.3%). இதில் ஆண்கள் 14,699 பேர் (61.5%). பெண்கள் 9,182 பேர் (38.4 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/566084-for-the-first-time-in-tamil-nadu-the-number-of-infections-has-crossed-6-000-tamil-nadu-infection-number-6472-additional-death-toll-8.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.