Jump to content

ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   05 , 2020  06:29:10 IST

 

Jayamohan%2C_Writer.jpgகொரோனா விளைவாக நிலவும் பொது முடக்க காலத்தில் மனம் எதிலும் நிலைகொள்ளாமல் தவித்தது.எதிலும் கவனம் குவியாமல் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது. ஊரடங்கு காலத்தை விடுமுறையாக மாற்றிக்கொள்ளும் மனமும் இல்லை. தொலைக்காட்சி ,சினிமா என்று கேளிக்கையில் மூழ்கும்   உற்சாக மனநிலையும் இல்லை. தொலைக்காட்சி செய்திகள், விவாதங்கள் என்று வேடிக்கை பார்த்து பற்றிக்கொள்ளும் பரபரப்புகளில் கவனம் செல்லவும் ஆர்வமில்லை.

 

கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கைகளைப் பார்த்துவிட்டு நேற்று எத்தனை? இன்று எத்தனை என்று ஒப்பிட்டுப் பார்க்கும் பொறுமையும் சகிப்பும் இல்லை .என்ன செய்வது? என்று குழம்பித் தவித்தது மனம். அந்த நிலையில்தான எழுத்தாளர் ஜெயமோகன் தளத்திற்குள் நுழைந்தேன் .குறிப்பாக சிறுகதைகளில்  இறங்குவது என்று ஒருநாள் நுழைந்து பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.அதில் தீவிரமான போது எனக்குள் ஒரு கேள்வி வந்தது யார் சொல்லித் தந்தார்கள் இங்கே நுழைய வேண்டும் என்று ?யார் தூண்டி விட்டார்கள் இங்கு வரவேண்டும் என்று? தெரியவில்லை

 

 

எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகள் ஆழமானவை, புரிந்துகொள்ளக் கடினமானவை என்று எனக்குள் ஒரு சித்திரம் இருந்தது. தொண்ணூறுகளில் இயக்குநர் பாலுமகேந்திராவை நான் சந்தித்த போது என்னிடம் "நவீன இலக்கியத்தையும் படிக்க வேண்டும் என்றவர் இதையும் படிக்க வேண்டும் தம்பி" என்று

'ரப்பர்'  என்ற நாவலைக் கொடுத்தார். அப்போது படித்துப் பார்த்தேன். ஓடிக்கொண்டிருந்த வேலை பரபரப்பில் மனம் அதன் உள்ளே நுழையவில்லை. நீண்ட காலம் கழித்துதான் அதைப் படித்தேன். விரைவாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் நவீன இலக்கியம் பற்றி புரிதல் ஆர்வம் இருந்தாலும் முடியாமல் ஏதோ ஒரு மனத்தடை தொடர்ந்து கொண்டே இருந்தது. அவ்வப்போது ஆங்காங்கே பத்திரிகைகளில் வெளியாகும் சில கட்டுரைகள் படித்ததோடு சரி.தீவிரமாக உள்நுழையாமல் இருந்தேன்.

இதுதான் சமயம் என்று ஜெயமோகனின்  தளத்துக்குள் நுழைந்தேன்.

புரியாமை என்று எதுவுமில்லை. பூடகம் எதுவுமில்லை; பொருள்மயக்கம் பற்றிய குழப்பமும் இல்லை.எல்லாமே புரியும் அளவுக்கு இருந்தன.

அப்போது நினைத்துக் கொண்டேன், நமது கால வயதும் மன வயதும்  அதிகரித்திருக்கிறது என்று.

 

ஜெயமோகனின்  சிறுகதைகளை வாசித்த சில நாட்களில் எனக்குள்  நுழைந்து நுழைந்து மெல்ல மெல்ல எனக்குள் பரவி விட்டார்.

அப்போது ஒன்று புரிந்தது சுந்தரராமசாமி கூறியதாக ஜெயமோகன்  குறிப்பிட்டது 'ஒரு புத்தகத்தை நாம் வாசிக்க விரும்பினால் அது நம்மைத் தேடி வந்துவிடும்' நினைவுக்கு வந்தது .இந்தக் கதைகளும் அப்படித்தான் என்னைத் தேடி வந்ததாக நினைத்தேன்.

எனக்குள் இருந்த விருப்பம் அவரைத் தேடி வந்து இருக்கலாம்.

 

ஜெயமோகனின்   சிறுகதை நீளமாக இருந்தாலும் அது சலிப்பூட்டும்படி தெரியவில்லை. ஒவ்வொன்றும் ஓர் அனுபவமாக கிளர்ந்தெழுந்து கொண்டிருந்தது. அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் கதையின் தளம், பின்புலம், மாந்தர்கள் , உணர்வுகள் போன்றவை தனித்தன்மையோடு யாரும் எதிர்பாராத யாரும் தொடாத ஒன்றாகத் தெரிந்தன. ஒவ்வொரு கதையிலும் கதையைவிடக்  காலம், பின்புலம், மன உணர்வுச்சித்தரிப்புகள் போன்றவை புது திசையில், புது விசையில் விரிவதாக எனக்குத் தோன்றின.ஒவ்வொன்றிலும் ஒரு வாழ்க்கை. அவை எனக்குள் புதிய புதிய திறப்புகளை அளித்தன. ஒவ்வொரு கதையும் படித்து முடித்ததும் எனக்குள் இருந்த பூட்டுகள் ஒவ்வொன்றாக திறப்பது போல் உணர்ந்தேன். ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு சாவி உள்ளதாகப் படும். வாசிப்பின்பம் அளிக்கவும் தவறவில்லை.

 

ஜெயமோகனின்  பெரும்பாலான கதைகள் இதுவரை பலராலும் சிறுகதை இலக்கணம் என்று சொல்லப்பட்டு  வந்த ,முதல் வாக்கிய ஈர்ப்பு, நல்ல தொடக்கம், கதை வளர்ச்சி, முடிச்சு போன்ற திருப்பம், எதிர்பாராத  முடிவு என்கிற சூத்திரத்தில் அடங்காதவை .  சிறுகதை இலக்கணத்தின் வரையறைகளில் அடங்காமல், சட்டங்களில் சிக்காமல் ,சட்டகங்களில் ஒடுங்காமல் அந்த எல்லைக்குள் அடங்காத பல கதைகள் இதில் உள்ளன.ஆனாலும் ஒரு புதிய அனுபவ அசைவை, அதிர்வை அளிக்கும்படி இருந்தன.

 

பேருந்தில்பயணம் செல்லும்போது ஜன்னல் திரை விலக்கி வெளியேபார்க்கும் காட்சி இன்பத்தையும், இருளில் செல்லும்போது மின்னும் திடீர் மின்னல் வெளிச்சத்தில் தோன்றும் கண் கூச வைக்கும் காட்சி ஒளிர்வில் தெரியும் காட்சிகளையும் அவரது கதைகளில் காணமுடிகிறது. பலவும் பலவாறாகத் தரிசனங்கள் தந்து கொண்டிருந்தன. சிலநாட்களிலேயே ஆர்வம், மோகம், ஈடுபாடு அதிகரித்து ஒரு பித்து மனநிலைக்குச் சென்றுவிட்டேன். அதிகாலையில்எழுந்தவுடன் செய்யும் முதல் வேலையாக ஜெயமோகனின்  சிறுகதை வாசிப்பு அமைந்தது.

 

ஒரு படைப்பாளி பெரிதும் இன்புறுவது அவனது படைப்புகள் வாசிக்கப்படும் போதுதான். நான் அந்தப் படைப்பாளிக்குக் கொடுக்கும் மிகச்சிறிய அன்புப்பரிசு  இந்த வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்வதுதான் என்று நினைக்கிறேன்.

 

சில வரிகளில் அந்தச் சிறுகதைகளைப் பற்றிக் கூறி நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

முதலில் அவற்றைப் புனைவுக் களியாட்டு சிறுகதைகள் வெளியீட்டுக் காலவரிசைப் பட்டியலின்படி பார்ப்போம்.

 

என் மனதில் பட்டவை பற்றி தாறுமாறாக சிதற விடுகிறேன்.அப்படித் தான் என்னால் சொல்ல முடியும்.

 

1.யா தேவி!

 

எல்லா ஆன்செல் என்கிற ஸ்வீடன் நாட்டு பாலுறவுப் பட நடிகை கேரளாவுக்கு ஆயுர்வேத உறழ்ச்சி சிகிச்சைக்கு வருகிறாள்.அங்கே அவளுக்குச் சிகிச்சை செய்பவன் ஸ்ரீதரன் என்கிற ஆயுர்வேத வைத்தியன்.திருமணமாகாத இளைஞன் தான்.மருத்துவத்தை தெய்வீகத்தோடு இணைத்து அவன் செயல் படுவதால் எந்த மலின உணர்ச்சிகளுக்கும் ஆட்படாத மனம் கொண்டவன்.சக்தி உபாசகன். தொடுதல் மூலம் அவளுக்கு சிகிச்சை தொடங்குகிறது.அவளை அவன் ஒரு நோயராகவே பார்க்கிறான். பெண்ணாக அல்ல.அது அவளுக்குள் அகங்காரத்தைத் தூண்டுகிறது மருத்துவனின் உணர்ச்சியைத்  தூண்ட நினைக்கிறாள் .ஆனால் அவனோ கருமமே கண்ணாக இருக்கிறான்.அவளது வாழ்க்கை அனுபவத்தைச் சொல்கிறாள். கேட்கும் பிறருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் அவன் உளச்சமநிலையோடு இருக்கிறான்.

பெண்ணின் எல்லா நல்ல கெட்ட வடிவங்களையும் இறைவியின் அம்சமாகப் பார்ப்பவன் .அவன் சலனப் படாதது அவளை அகங்காரத்தில் பற்றி எரிய வைக்கிறது இப்படிச் செல்கிறது கதை.

 

 

2.சர்வ ஃபூதேஷு

 

இது யாதேவியின் இரண்டாம் பாகம் என்று கூறலாம். வெளிநாட்டு 'பால் 'பட அழகி ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்குக் கேரளா வந்தவள் ,சிகிச்சைக்கு வரும் சக நோயாளியான மாத்தனைச் சந்திக்கிறாள். அவனோ பரிவு வழியாகப் பார்த்தவுடன் காதல் கொள்கிறான்.அவர்களுக்குள் ஒரு புரிதலும் காதலும் வருகிறது.அந்த அடுத்த கட்டத்தை சொல்கிறது கதை.

ஆனால் வைத்தியன் அவளை சக்தியின் வடிவாக பார்க்கிறான்.

“முலைகளில் பாலாக ஊறுவது அன்னையின் உயிர்தான். நாங்கள் அதைச் சைதன்யம் என்கிறோம். முதிய அன்னையின் பத்துவிரல்களும் முலைக்கண்களாக ஆகிவிடுகின்றன”என்று கதையில் வரும் வரிகள் அற்புதம்.

 

 

3.எண்ண எண்ணக் குறைவது

 

தங்கள் மனம் கவர்ந்த தலைவர் எம்.கே.என்பவருக்கு நினைவு மலர் வெளியிட்டு  பாராட்டு விழா திட்டத்தின் முன் தயாரிப்புக்கான விவாதம் தொடங்குகிறார்கள் தோழர்கள்.கருத்துப் பரிமாற்றமாக தொடங்குகிறது. வாதமாக விரிகிறது. சித்தாந்தங்கள் அலசப்படுகின்றன. அவரது நிறைகுறைகள் பேசப்படுகின்றன என்று தொடங்குகிறது கதை. ஒரு தலைவருக்கு பாராட்டு விழா எடுக்கிற முடிவில் அவரைப் பற்றிய கலந்துரையாடலில் அவரது பலவீனங்கள் மெல்ல மெல்ல அலசி ஆராயப்பட்டு, அவரது பெருமித பிம்பம் எண்ண எண்ணக் குறைவதாக இருக்கிறது என்பதை பற்றி பேசுகிறது இக்கதை.

 

4.சக்தி ரூபேண!   

 

யா தேவி ,சர்வ பூதேஷு கதைகளின் தொடர்ச்சியாக இது வருகிறது. யாதேவின் மூன்றாம் பாகமாக உருவான கதை.

 

 அந்த நடிகை எல்லா தனது வைத்தியனுக்கு ஒரு பெண் பொம்மையை வரவழைத்துக் கொடுக்கிறாள் பரிசாக,அவளுக்கு மாற்றான  வடிவம் தான் அது.அவளை நினைத்து அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள் பால் வேட்கை கொண்டவர்கள். அந்தப் பொம்மையைத் தான் அவனுக்குப் பரிசளிக்கிறாள். அவளது நோய்மையிலிருந்து மெல்ல மீண்டவள்,ஆசுவாசம் தேடி மருத்துவமனையில் இருந்து கடற்கரைக்குச் சென்றுகாணாமல் போகிறாள். பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது அவர்களுக்கு. முடிவு என்ன என்பதுதான் கதை.     

 

 5.தவளையும் இளவரசனும்

 

வெளிநாட்டில் சந்தித்துக்கொள்ளும் இரு முரண்பட்ட குணச்சித்திரங்கள் ஒன்றிணையும் காதல் கதை.மியான்மர் பெண்ணும் தமிழ்ப் பையனும் சந்தித்துப் பேசிப் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயல்கிறார்கள். எல்லாவற்றிலும் அருகே சென்று நெருங்க நெருங்க  முரண்கள் விரிகின்றன. இப்படிப்பட்ட  முரண்கள் இணைவதே சுவாரஸ்யம் என்று மனங்கள் இணையும் கதை.

 

6.ஆனையில்லா!

 

ஒரு சிறிய வீட்டுக்குள் யானை புகுந்த தருணமும் அது சார்ந்த மனிதர்களின் எண்ணங்களும் பதிவுகளும் அதை பூசாரி சாதுரியமாக விடுவிக்கும் காட்சிகளும், நினைவுகளும்.பாத்திர உரையாடல்களின் மூலம் ஒவ்வொரு வினாடியும் நகைச்சுவை பொறி பறக்கும் கதை.

 

7.வருக்கை

 

டீக்கடை பெஞ்சில் உலக அரசியல் அலசப்படும். அது போல பார்பர் ஷாப்பில் இங்கே. அதிலும்  ஒரு மனிதனின் வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது. சலூன் கடை பெஞ்சில் தொடங்கும் கதை. திருடனுக்கு தேள் கொட்டியது என்று கேள்விப்பட்டிருப்போம். அப்படி ஒரு திருடன் சார்ந்த இக்கதை செல்லும் பாதையில் சில அதிர்ச்சியான திருப்பங்களும் உண்டு. காளி மாணிக்கத்தின் மனைவி கோமதிக்கும், திருடன் தங்கனுக்கும் என்ன உறவு என நினைத்தால் சிரிப்பு வரும். பேச்சு அரட்டை போகிற போக்கில் தெறிக்கும் உண்மையை அறியும் போது அழுகையும் வரும்.

 

8.பூனை

 

ஒரு பூனையைப் புலி என்று நினைத்து பயந்து அலப்பறை செய்யும் ஒருவனின் கதை. ஆனால் முடிவு வேறாக இருக்கிறது.கதாபாத்திரத்துக்கான பய உணர்ச்சி படிப்பவர்களுக்கும் கடத்தப்படுகிறது.

 

9.அங்கி

 

கேரளத்து மலைப்பாதை வழியே நண்பர்கள் இருவர் வாகமன் பகுதியில் பயணம் செய்கிற போது மாலை மயங்கி இருட்டி விடுகிறது.யானைகளுக்குப் பயந்து ஒரு சிறிய கட்டடத்தில் தஞ்சம் அடைகிறார்கள். அங்கே ஒரு அமானுஷ்யமான சூழல்.அங்கே அங்கி அணிந்த போதகர் போல ஒருவரைப் பார்க்கிறார்கள். ஆனால் அவர் ஆவி உருவம் கொண்டவர் என்றும் பிறகுதான் தெரிகிறது. பதறுகிறார்கள்.இப்படிச் செல்கிறது கதை.

 

10.வேட்டு

 

சாப்பாட்டுக் கடை நடத்தும் ஜானகி.அவள் கடையில் மாட்டு இறைச்சி பிரசித்தம்.அவளது பிளாஷ்பேக் என்று கதை விரிகிறது.ஜானகி , பார்வதி சர்க்கஸில் வேலை பார்க்கிறாள்.சர்க்கஸில் துப்பாக்கி சுடும் முயற்சி பற்றிய கதை. எதிரில்  தலையில் ஆப்பிள் வைத்துக்கொண்டிருக்கும் பெண் தலையில் இருக்கும் ஆப்பிளைக் குறி தவறாமல் சுடுவதாக சர்க்கஸில் ஒரு காட்சி இடம்பெறும்.

அதன் பின்னே இருக்கும் காதலும் காமமும் கோபமும் குரோதமும் ஆபத்தான நுண்ணுணர்வும்  எப்படி வெளிப்படுகின்றன என்பன பற்றிப் பேசுகிற கதை.

 

11.துளி

 

கோவில் உற்சவத்துக்கு அழைத்துவரப்பட்ட இரு யானைகள் இடையே இணக்கம் இல்லை.ஒன்றை ஒன்று பார்த்து வெகுண்டு முரண்டு பிடிக்கின்றன. யானைகளைச் சமாதானப்படுத்துவது எப்படி என்று திணறுகிறார்கள். யானையின் காலில் யானைக்காரரின் வளர்ப்பு நாய் ஒரு துளி சிறுநீர் சிந்துகிறது. இன்னொரு யானைக்கும்.

அந்தச் சிறுநீர்த் துளியால் யானைகள் மனதில் மாற்றம் உண்டாகிறது ;இணக்கம் ஏற்படுகிறது.நாயின் சிறுநீர் துளிக்கு அவ்வளவு மகத்துவம்.இது சார்ந்த கதைமாந்தர்கள் நிகழ்த்தும் உரையாடல்கள் நகைச்சுவை ரசம்.

 

12. விலங்கு

 

செம்மறி ஆட்டுத் தலையும் மனித உடலும் கொண்ட மனித மிருகம் இருப்பதாகச் செய்திகள், நம்பிக்கைகள் .அந்தச் சூழலில் அந்தக் குகையில் தங்கி இருக்கும் விலங்கு டாக்டரின் அந்த விலங்கு பற்றிய ஆழமான கேள்விகள், புதிர்கள், புரிதல் பற்றிய அனுபவங்கள்.அமானுஷ்ய நிறம் கொண்ட கதை.

 

13.கோட்டை

 

பெண்கள் பால் உணர்வு சார்ந்து வெளிப்படையாகப் பேசும் உரையாடல்கள் நிறைந்த கதை.அந்த வாய்த்துடுக்குக் கிழவி அணஞ்சியம்மைக் கிழவி போகிறபோக்கில் பேசுவதெல்லாம் நமக்குள் சிரிப்பலைகளை எழுப்பும்.

 

14.ஆடகம்

 

 நவரத்தினங்களில் ஒன்றாக சொல்லப்படும் ஆடகம் சார்ந்த ஒரு மேஜிகல் ரியலிசம் கதை .

தற்கொலை வேட்கை நிறைந்த ஒருவனின் கதை.,

 

"நான் எவரும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத ஓர் இடத்தில் செத்துக்கிடப்பேன். மழைத்தாரைகள் என் உடலை அறைந்து கொண்டிருக்கும். நீரோடைகள் என் உடலை தொட்டு ஒதுங்கிச் செல்லும்.

மறுநாள், அல்லது அதற்கு அடுத்தநாள் எவரேனும் என் உடலைக் கண்டடைவார்கள். என் உடலைச்சுற்றி மெல்லிய மழைமணல் சருகுகளுடன் கலந்து வரிகட்டியிருக்கும். என் உடலெங்கும் உதிர்ந்த சிறிய இலைகளும் சருகுப்பொடிகளும் படர்ந்திருக்கும். சிறிய நத்தைகள் என்மேல் ஏறி மென்மையான தளிர்க் கொம்புகளை ஆட்டியபடிச் சென்றுகொண்டிருக்கும்."என்றெல்லாம் கற்பனை செய்கிறான். அவனை நாகம் தீண்டி விடுகிறது.அவனது உயிரைப் பொன்னாக மாற்றுகிறது இப்படிச் செல்கிறது கதை.

 

15.மொழி

 

உலகத்தில் ஆயிரம் மொழிகள் இருக்கலாம். ஆனால் மழலையின் மொழி என்பது வேறானது. மழலைகளுக்கு மட்டுமே அவர்களின் மொழி புரியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது கதை. தரைகீழ் அறையில் சிக்கிக்கொண்ட குழந்தை இருட்டுக்குள் தவிக்கிறது .யார் பேச்சுக்கும் செவி கொடுக்காமல். வேறுஒரு குழந்தையின் பேச்சுக்கு செவிகொடுத்து தன்னைத்தானே மீட்டுக் கொள்கிற கதை.

 

16.ஏதேன்

 

ஆப்பிரிக்க நாட்டுக்குப் பிழைக்கச் சென்ற ஒருவன் அங்கே விவசாயம் செய்ய எண்ணி லட்சக்கணக்கில் முதலீடு செய்து செய்து வாழைத் தோட்டம் போடுகிறான்.அந்த ஊர் மக்களின் காட்டுமிராண்டித்தனத்தால் தோட்டங்கள் எப்படி அழிகின்றன அவன் பணம் எப்படி நாசமாகிறது அவன் எப்படி அழிகிறான் என்பதுதான் கதை.

 

17.வானில் அலைகின்றன குரல்கள்

 

நோயுடன் போராடுவோம் நோயாளிகளுடன் அல்ல என்று இப்போதும் தொலைபேசியில் குரல்கள் ஒலிக்கின்றன. இதுபோல் தொலைபேசியில் குரலை ஒலிக்க விட்டு மறைந்து போன ஒருத்தியின் கணவன் காற்றில் கலந்து, வானில் அலைகிற அந்தக் குரலைப் பிடித்துச் சேமித்துக்கொள்ள விரும்புகிறான் .தன் மனைவியின் குரலை மீட்டெடுத்து அதை அவன் கேட்கிறான். அது சார்ந்த தேடல் சம்பவங்கள் நினைவுகள் தான் கதை.

 

18. தங்கத்தின் மணம்

 

நாகலிங்கம் தேடித்திரியும் ஒரு மனிதனின் கதை.உண்மையில் நாகலிங்கம் என்பது என்ன என்பதை அனுபவம் அவனுக்குப் பாடமாகக் கற்பிக்கிறது.

 

19.ஆயிரம் ஊற்றுக்கள்

 

ஒரு மகாராணியின் புத்திர சோகத்தை வெளிப்படுத்தும் கதை.கொலை செய்யப்பட்ட தன் ஆறு பிள்ளைகளைப் பற்றிய ஒரு தாயின் ஆவேசமும் அதன் பின் அவளது தெளிவு மனமும் வியப்பூட்டுகிறது.

 

20.வேரில் திகழ்வது

 

குற்றப் பின்னணியின் வேர் தேடி அலையும் விசாரணைப்  பயணம். குற்றத்தின் வேர்தேடிச் சென்றபோது தனது மேலதிகாரிக்கு அதில் தொடர்பு இருக்கும் இருக்கிறது என்று வருகிறபோது கீழ் அதிகாரி அடையும் அதிர்ச்சி அதன் விளைவுகள், முடிவு என்ன என்பது கதை.

 

21. பொலிவதும் கலைவதும்

 

நார்வே ரிட்டர்னான சுந்தரன் அப்பு மாமா வீட்டுக்குச் செல்கிறான். அங்குள்ள கோயிலில் 'களமெழுத்துப் பாட்டு' காண்கிறான்.அங்கே வண்ணப் பொடிகள் கலந்து வழிபாட்டுக்காக தேவதைகளை ஓவியமாக வரைவதைப் பார்க்கிறான். வண்ணங்கள் சேர்த்து பொலிந்து அதில் இறைசக்தி வந்ததாக உணர்கிறான்.அப்போது அவளுக்கு விருப்பமான இந்திராவைச் சந்திக்கிறான்.அவளுக்கு திருமணமாகி விட்டது. அந்த ஓவியத்தோடு தனது வாழ்க்கையை ஒப்பிட்டுப்பார்க்கிறான். மறுநாள் அந்த ஓவியம் கலைக்கப்பட்டதையும் பார்க்கிறான்.நன்றாகப் பொலிந்து கலைந்தது ஓவியம் மட்டுமல்ல தனது வாழ்க்கையும் கூட என்று எண்ணுகிறான் .சிதைந்து வண்ணக் துகள்களாகக் கலைந்த அந்த ஓவியத்தை மீண்டும் பொலிய வைக்க முடியாது. அது போல் கடந்த கால வாழ்க்கையையும் மீட்டெடுக்க முடியாது என்று நினைத்துக் கொள்கிறான்.மன உணர்வுகளை நுட்பமாக எடுத்துக்காட்டும் கதை. .

 

22. சுற்றுகள்

 

தொலைபேசித் துறையில் சர்க்யூட்கள் எனப்படும் சுற்றுகள் பற்றிய கதை.சுற்றுகள் எந்த விதத்தில் உள்ளன. அது சார்ந்த தொழில்நுட்ப அனுபவங்கள் விவரிப்புகள் கதையாக மலர்ந்துள்ளது.

 

23.இடம்

 

வீட்டுக்குள் திடீரெனப் பிரவேசிக்கும் குரங்கும் அதன் சேட்டைகளும் அந்தத் தருணம் குறித்து மனிதர்களின் உரையாடல்களும் நகைச்சுவை பேச்சுகளும் காட்சிகளும்.குரங்கு சேட்டைகளை ரசிப்பதா மனிதர்களின் பேச்சில் சந்தடி சாக்கில் விழும் நகைச்சுவை தூறல்களில் நனைவதா என்று திணறவைக்கும். இது நகைச்சுவை ரசமிக்க கதை.

 

24 . பெயர்நூறான் 

 

குழந்தைக் கனவில் இருக்கும் தாய், தனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு நூறு பெயர்களை நினைத்துக் கற்பனையோடு இருக்கிறாள். பிறந்தபின் நிறம் மாறும் அவளது மனமும் மனவெழுச்சிகளும் சார்ந்த சித்தரிப்புகள்தான் இந்தக் கதை.

 

25 .அனலுக்குமேல் 

 

தற்காலத்தில் இருந்து கற்காலத்துக்குச் சென்று அக்காலத்தில் கரைந்து காணாமல் போவதில் இன்பம் கொண்ட தொன்ம விரும்பிகள் பால், ஈவா பேக்கர்

சந்திக்கும் அசாதாரண அனுபவங்கள் காட்சிகளாக விரிகின்றன.பசிபிக் கடலில் உள்ள டான்னா தீவில் நடக்கும் அதிர்ச்சிகரமான சடங்கின் தருணங்களில் கலந்துகொண்டு புது அனுபவம் பெறுகிறார்கள்.அதிர்ச்சியூட்டும் கதை.

 

26. லூப்

 

தொலைத்தொடர்பு பணிகளின் பின்னணியில் மலரும் கதை.கேரள மலைப்பகுதி சாலையில் தொலைத்தொடர்புக் கம்பிகளின் மீது ஒரு மலைப்பாம்பு மேலே சுற்றிக் கொண்டு பெரும் இடையூறாக இருக்கிறது. அதனால் தொடர்புகள் அறுபடுகின்றன. அதை அப்புறப்படுத்தினால் மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்து கொள்கிறது அந்தப் பாம்பு. அதை சுட்டுவிடச்சொல்கிறார் வெள்ளைக்கார அதிகாரி. மறுக்கிறார் சீனியர் அலுவலர் ஞானம்.

சூழலியல் சார்ந்த கரிசனத்தின் முன் அதிகாரம் செல்லாது என்பதைச் சொல்கிற கதை. இக்கதையில் நெல்சன், சீனியர் ஞானம் உரையாடல்கள் சிரிப்பை வரவழைக்கும் தன்மை கொண்டவை.

 

27. சூழ்திரு

 

மகிழ்ச்சி செல்வம் என்று நிறைவாழ்வு வாழும் சின்னையன் பெருவட்டர் என்பவர், தன் மகளின் திருமணத்தைத் திருவிழா போல நடத்துகிறார் .இதற்குத் திருவெல்லாம் சூழ எல்லா வகையிலும் எல்லாமும் எப்படி சிறப்பாகத் துணை புரிகின்றன என்பதைக் கூறுகிறது கதை.குறிப்பாகக் கேரளத் திருமண சமையலில் பதார்த்தங்களின் பட்டியலும் அது சார்ந்த விவரிப்புகளும் படித்தாலே நாக்கில் நீர் ஊறும் . மனதில் தேனூறும்.

 

28. குருவி

 

நான்தான் திறமையானவன் படைப்பாளி ஆர்டிஸ்ட் என்று செருக்குற்றுத் திரியும் ஒருவனை ஒரு குருவி தனது  செயலால் ’எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது ’எனப்பாடம் சொல்கிறது.அக்குருவியால் அவன் எப்படித் தலைகீழாக மாறிப் போகிறான். அவன் கர்வம் எப்படி உடைந்து நொறுங்குகிறது என்பதைச் சொல்கிறது கதை.பிற உயிர்களை உற்றுநோக்கினால் மனிதன் கர்வம் தூள் தூளாகும்.

 

29. ஆட்டக்கதை

 

ஒரு கலைஞர் தனது வாழ்க்கையின் முன்கதையைக் கூறுகிறார் சற்று விரிவாக.

கதகளி ஆட்டக்காரர் தனது வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் பேச ஆரம்பிக்கிறார்.கடந்தகால நினைவுகளுக்குள் செல்கிறார். அவர் திருமணம் செய்த பெண் இரட்டைப் பிறவிகளில் ஒருத்தி. தன் மனைவியாகக் கொண்டவள் சரஸ்வதியா,லட்சுமியா என்ற குழப்பம் அவருக்கு இருக்கும். அது சார்ந்த மெல்லுணர்வுகள் பற்றிச் சொல்கிற கதை.அந்தஉணர்வுகளை அவர் பேசும் போது ஒரு புதிய உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது கதை.

 

30. ஏகம்

 

ஒரு கலையையும் அதை ரசிப்பவன் மனோபாவத்தையும்  விளக்குகிறது.ரசனை மனத்தின் அழகுணர்வுகளைச் சொல்கிற கதை.புல்லாங்குழல் இசையில் கரைந்து போகிற மகா ரசிகன் ஜேகேவின் ரசிப்பு மனம் வானளாவியது.

 

31. நகைமுகன்

 

தொலைத்தொடர்பு அலுவலகங்களில் தொடர் இணைப்புகளில் பல குளறுபடிகள் நடக்கும்போது அனுபவம் கொண்டவர்களே மனம் குழம்பித் தத்தளிப்பதுண்டு. அப்போது படிப்பாளிகள் ,அனுபவசாலிகள் சொல்லமுடியாத ஒரு பாதை சாதாரண ஒருவனுக்குத் தெரியக்கூடும். பலரும் பார்த்து நகைப்புக்கிடமான ஒருவன் பல இணைப்புகளில் ஆப்புகளை வைத்து சீர்கெட்ட இணைப்பை   சாதாரணமாகச் சரி செய்கிறான். அந்த நகைமுகன் பற்றிய கதைதான் இது.

 

32. எழுகதிர்

 

இது ஒரு மிகப்பெரிய கொள்ளையின் கதை. ஐம்பதாண்டுகளுக்கு முன், அதாவது 1971 ல் நடந்தது. குகையுறைந்த கோயிலில்  பெரிய கொள்ளையைத் திட்டமிட்டு நடத்தி விட்டுக் கொள்ளைக்காரன் தனது அறிவாலும் ஆற்றலாலும் எப்படிக் தப்பித்துச்செல்கிறான் அதன்பின் அவன் வாழ்க்கை எப்படி ஓடுகிறது? இதையெல்லாம் அவனுடன் துணைக்குச் சென்ற ஒருவன் நடந்த கதையாகச் சொல்கிறான் அவன் போகிற பயணம் இது.

 

33. வான்கீழ்

 

தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கும் அடிமட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மலரும் காதல்  கதை. கால் ஊனமுற்ற குமரேசன் , டீ கொண்டு வரும் ராஜம்மை மீது மையல் கொள்கிறான் .அவளை அடைய பல பேர் போட்டி போடுகிறார்கள்.அவளை அசத்த அவன் ஒரு காரியம் செய்கிறான். என்ன  என்பதைச் சொன்னால் சுவாரஸ்யம் கெட்டுவிடும் .ஒரு செயலைச் செய்து அவளை வியப்பில் ஆழ்த்துகிறான். காதல் சகலத்தையும் கற்றுத் தரும் என்பது கதை சொல்லும் நீதியாக இருக்கலாம்.

 

34.பத்துலட்சம் காலடிகள்

 

வழக்குகளில் குற்றவாளிகளைத் தேடி அரசு பல்வேறு வழிகளில் இருக்கும் பல லட்சம் காலடிகளை மோப்பம் பிடித்துக்கொண்டு பின் தொடரும் துப்பறியும் கதை. ஏராளமான மனிதர்கள் சம்பவங்கள் திருப்பங்கள் உள்ளன.இதில் வரும் மாப்பிள்ளைக் கலாசிகளின் மரக்கலம் கட்டும் திறமைகள் வியப்பூட்டும் சரித்திரச் சான்றுகள்.

பல்வேறு மடிப்புகளும் அடுக்குகளும் கொண்ட இது ஒரு நாவலாக விரிவுத் தகுதி பெற்ற கதை. இதில் இடம்பெற்ற சாதியம் பற்றிய ஒரு வரி இணைய வாசிகளை கொந்தளிக்க வைத்ததையும் குறிப்பிடவேண்டும்.

 

 

-அருள்செல்வன், சென்னை- 92

- தொடரும்-

 

http://andhimazhai.com/news/view/jeyamohan-short-stories-analysis-05-06-2020.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2

35.பாப்பாவின் சொந்த யானை

இது 'ஆனையில்லா' கதையின் தொடர்ச்சி போலத் தோன்றும்.குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகள்  நாடகமாக நடித்துக் காட்டுவது அதில் குழந்தை,தான் ஏற்றுள்ள  யானை பாத்திரத்துக்கு மனதளவில் கொடுத்துள்ள குணச்சித்திரத்தை எப்படி வெளிப்படுத்துகிறது என்பது சுவாரஸ்யம். குழந்தைகளின் மன விசித்திரங்களைச் சித்தரிக்கும் கதை .உலகத்தில் உள்ள யானைகள் பொதுவாக இருக்கலாம். ஆனால் இந்த பாப்பாவின் யானை அதன் மன உலகத்தை விரிப்பதாக அவற்றின் தன்மைகள் வேறு என்றும் காட்டும் கதை.

36.வான்நெசவு

தொலைத்தொடர்புக் கோபுரங்கள் அமைக்கும் மனிதர்களின் உணர்வுகள் பற்றிய கதை. கோபுரத்தின் உயர்வு எழுச்சி போலவே அவர்களின் தொழில்சார்ந்த வாழ்க்கை அன்பு ,பாசம், காதல் பற்றிச் சொல்லும் கதை. 38 ஆண்டுகளுக்கு முன் தொலைத்தொடர்பு டவரில் மலர்ந்த காதல் பற்றிய நினைவுகள். இது 'வான்கீழ்' கதையின் இரண்டாம் பாகம் எனலாம்.

37.ஓநாயின் மூக்கு

தவறு செய்த ஒருவனைச் சட்டம் எந்த வகையிலும் மோப்பம் பிடித்துக்கொண்டு வரும். அவனை தேடிக்கொண்டே இருக்கும். ஓநாயின் மூக்கைப் போல மோப்பம் பிடித்துக்கொண்டு  வரும் என்று சொல்கிற துப்பறியும் கதை.

மர்மக் கொலைகள் பற்றி துப்பறியும் வரலாறு சார்ந்த கதை. தொன்மம், மரபு ,நவீனம்  அனைத்தும் சேர்ந்த படைப்பு மட்டுமல்ல அமானுஷ்யமும் கலந்த  கதை.

38.மதுரம்

எருமை மாடு என்று நாம் நினைக்கிற ஒரு பிராணியின் மகப்பேறு அனுபவத்தை அணுவணுவாகச் சித்தரிக்கும் கதை.அதன் உளவியல் அதன் விசுவாச அசைவுகள் அனைத்தையும் பற்றிப் பேசுகிறது.விலங்கின் உளவியல் சார்ந்த சித்தரிப்புகள் பிரமாதம்.

39. வனவாசம்

நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசுகிறார்கள். பலநாள்கள் தொடர்பற்று தொழிலில் ஈடுபடாமல் இருப்பது அவர்களுக்கு ஒரு வனவாசம் போலத்தான்.அப்படி ஒரு இடைவெளிக்குப் பிறகு இணைகிற ’அர்ஜுனன் ’  சுப்பையா மற்றும் ’ அல்லி ’ குமரேசன் பாத்திரங்கள் சிறப்பு .அதற்குப் பின் அவர்கள் இணைகிற போது அவர்களுக்குள் தான் எவ்வளவு பகிர்வுகளும் பரவசமும் கனவுகளும்.

40. ஆழி

ப்ரேக் அப் ஆன  இரு காதலர்கள் கடைசிச் சந்திப்பாகக் கடற்கரை செல்கிறார்கள்.  ஆழியின் சுழலில் சிக்கிக் கொள்ளும்போது அவர்களுக்குள் ஏற்படும் மன மாற்றங்கள். கடல் அலையின் சுழலையும் எழுச்சியையும் அற்புதமாக வர்ணிக்கப்பட்டிருக்கும்..

41. மாயப்பொன்

எந்தத் தொழிலும் உளப்பூர்வமான அர்ப்பணிப்போடு செய்யப்படும்போது அது கலையாக மாறுகிறது. அப்படித்தான் மலை, புதர் இடுக்குகளில் மறைந்துகொண்டு சாராயம் காய்ச்சும் இந்த மனிதர்களின் தொழிலும் கலையாக மாறுகிறது.

நல்ல தரமான சாராயத்தை மாயப்பொன் போல் அவர்கள் பார்க்கிறார்கள்.சாராயத் தயாரிப்பு முறையும் மறைத்து  நிற்கும் மலை காடு சார்ந்த ஒவ்வொரு அசைவையும் பற்றிய சித்தரிப்புகள் நினைத்தாலே  இனிப்பவை.

42.உலகெலாம்

உலகெல்லாம் மின் அலைகளும் மின்காந்த அலைகளும் விரவிக்கிடக்கின்றன. இந்த அறிவியல் உண்மையை பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்ட ஒரு மனிதனின் இதயம் உணர்கிறது. அதன் தாக்கத்தை உணர்ந்து அதிரும்  அவனது உணர்வுகளைச் சொல்லும் கதை.

43. கைமுக்கு

களவுக் குற்றச்சாட்டை நிரூபிக்க கைமுக்கு என்ற பழக்கம் தெற்கத்தி மண்ணில் இருந்திருக்கிறது.

இந்தக்கதையில் வரும் மகேஷ் கல்லூரியில் படிக்கும் மாணவன். வறுமை தந்த தாழ்வுணர்ச்சியால் திருடுகிறான். குற்றவுணர்ச்சி மறைகிறது .அதன் எல்லை வரை தொடுகிறான் அவனைப் பற்றிய கதை இது.சமகால சித்தரிப்பாக மலர்ந்துள்ள யதார்த்த கதை இது.

44. பிடி

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மலரும்  கலை உணர்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கலா உணர்ச்சி உடையவர்களைத்தான் ராமையா போன்ற கலைஞர்களும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அப்படி இருவர் இணையும் கதைதான் பிடி.நிஜக் கலைஞன் நிஜ ரசிகனை இனம் கண்டுணரும் கதை.

45.முதல் ஆறு

ஒரு பஸ் பயணத்தில் மலர்கின்ற காதல் உணர்வை அழகாகச் சித்தரிக்கும் கதை .இதைப் படிப்பவர்கள் அனைவரும்  ஆண்கள் நாயகனாகவும் பெண்கள் நாயகியாகவும் இடம் மாறி அமர்ந்து கொள்வார்கள். கதையுணர்வில் உணர்ந்து நுழைந்து வாலிப உணர்வுகள் விழித்துக்கொண்டு வாழ்ந்து அனுபவிக்க வைக்கும் கதை.

46. மலைகளின் உரையாடல்

ஒரு ஜடப் பொருளாக தோன்றும் மலைகள் தங்களுக்குள்ளே பேசிக் கொள்வது எப்படி?அதை தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் எப்படி உணர்கிறார்கள் ?அதன் மொழியை எப்படி அறிகிறார்கள்? என்பதுதான் கதை மையம்.மாயத்தன்மையும் சூழலியல் சிந்தனையும்   புதிர் நிறமும் கொண்ட கதை.

47. இறைவன்

எந்தத் தொழிலிலும் கலைஞனாக உச்சம் கொள்ளும் தருணம் அவன் பூமிக்கு மேலே சில அடிகள் உயரே நிற்கிறான். ஒருவன்  தன்னுடைய தூரிகையின் மூலம் வண்ணங்களின் மூலம் ஒரு தேவதையை வீட்டுக்குள் வரவழைக்கும் கதை.

பாமரனாகக் தெரியும் மாணிக்கம் ஆசாரி தன் ஓவியத் திறமையால் உச்சத்துக்குப் போகும் காட்சிகள்,சித்தரிப்புகள் பிரமாதம்.

ஓவியத் திறமையால் இறைவனாக உருவெடுக்கும் மாணிக்கம் ஆச்சாரியின் கலையின் விஸ்வரூபம் தெரிவது உணர்ச்சிகரமான தருணங்கள்.

48. நற்றுணை

ஒரு பெண் தான் அடைய நினைக்கும் இலக்கை அடைவதற்கு அவளுக்குள் குவியும் ஆவேசத்தையும் வேட்கையையும் ஒரு யட்சியாக,தன்னுடைய வேட்கையை ஒரு தேவதையாக தன்னுள் இருந்து வெளிப்படுத்தி ஜெயிக்கும் அம்மணி தங்கச்சி என்ற பெண்ணின் கதை.

49. கரவு

பாம்பின் கால் பாம்பறியும் என்பதாக திருடர்களுக்குள் உள்ள அனுசரணையை எதிர்பாராத திருப்பமாக வெளிப்படுத்தும் கதை.

50. ஐந்து நெருப்பு

நான்கு திசைகளிலும் நெருப்பு இருப்பதாகச் சொல்வார்கள். அந்த கோர தாண்டவத்தில் சிக்கிக் கொண்டவன் எதற்கும் அஞ்சாமல் உடைமுள் குவியலில் குதித்தால் எப்படி இருக்கும்? வறுமை அனைத்தையும் செய்ய வைக்கும்.அப்படித்தான் கதை நாயகன் முத்து அனைத்து வெம்மைக்கும் நெருப்புக்கும் முள்ளுக்கும்  துணிகிறான்.அவனது வறுமையின் கோர முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

51. லீலை

’சைக்கிள் ரேஸ்’  ரெக்கார்ட் டான்ஸ் ஆட்டக்காரி தாட்சாயணியின் கதை. ஒரு பெண் தன் வாழ்க்கையைப்பற்றி முடிவெடுக்கமுடியும் எனவும் தன் சுதந்திரத்தை எந்த ஒரு பின்புலத்திலும் சாத்தியப்படுத்த இயலும் என்றும் வெளிப்படுத்தும்  கதை.

52. காக்காய்ப்பொன்

துறவறத்தில் தான் முழுமையாக இருப்பதாக அகங்காரம் மிக்க துறவி ஒருவர். காகம் கொண்டு வந்து அவர் வீட்டு முன் போடும் சின்னச் சின்ன பொருள்கள்  அவரது அகங்காரத்தை சீண்டுகிறது. நிலை குலைகிறார். அதன் விளைவைச் சொல்லும் கதை.

53. பலிக்கல்

அதிகார ஆதிக்கம் நிறைந்த ஒருவனால் பழி சுமத்தப்பட்டு சிறை சென்று சகல கசப்புகளையும் சந்தித்த ஒருவரிடம் சம்பந்தப்பட்ட குற்றவாளி அழகிய நம்பியா பிள்ளையின் மகன்  மனம்  மன்னிப்பு கோர வருகிறது. மனசாட்சியுடன் வந்து பலியிடப்பட்ட பலிக்கல்லிடம் அதாவது சங்கரன் போற்றி என்பவரிடம் மன்னிப்பு கோரத் துடிக்கிறது .அதன் உணர்வுகள் சார்ந்த உன்னதமான கதை.குற்றவிணர்ச்சியின் தாக்கத்தையும்

மன்னிப்பின் மகத்துவத்தையும் உணர்த்தும் கதை. 

54. நஞ்சு

தன்னுடைய குடும்ப பிரச்சினைக்காக கண்ணில்பட்ட இளைஞனை பகடைக்காயாக்கித் தன் கணவனைப் பழி வாங்கப் பயன்படுத்திக் கொள்கிறாள். தான் ஏமாற்றப்பட்டதை இதில் பயன்படுத்தப்பட்டஇளைஞன் உணர்கிறான்.அவளை எங்கு பார்த்தாலும் அவமானப்படுத்த வேண்டும் என்கிற நஞ்சு நெஞ்சுடன் காத்திருக்கிறான். அவளைத் தேடிப் பழிவாங்கத் துடிக்கிறான் .ஒரு நாள் அவளைப் பார்க்க நேரிடுகிறது.ஓடித் துரத்திப் பிடித்து விடுகிறான். அவர்களுக்குள் நிகழும் சந்திப்பும் உரையாடலும் எதிர்பாராத திருப்பமும் தான் கதை.

55.போழ்வு

வரலாற்றில் ரத்தக்கறை படிந்த பக்கங்களைப் புரட்டிக் காட்டும் கதை. தளவாய் வேலுத்தம்பி தன் அதிகார மமதையாலும் சந்தேகத்தாலும்  சந்தேகப்பட்ட , மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை இருபுறமும் யானையை இழுக்கவிட்டு இரண்டாகப் பிளக்கிறார். அன்று பார்த்தவர்கள் மட்டுமல்ல இன்று அதைப் படிக்கிறவர்களுக்கும் குலைநடுங்கும்.

56.சீட்டு

வாழ்க்கையே ஒரு சீட்டாட்டம் போலத்தான் .ஒரு பெண்ணின் கனிந்த பேச்சையும் மெலிதான சிரிப்பையும் வேறு மாதிரி அர்த்தப்படுத்திக் கொண்டு வாழ்பவர்கள் சமூகத்தில் ,அதை கருவியாகக் கொண்டு சாதித்தும் வாழலாம் என்று நினைக்கும் ஒரு கணவனைப்பற்றிய கதை.நடுத்தர வர்க்கத்தின் நெருக்கடி சூழ் பொருளாதாரம் பற்றிப் பேசுகிறது.

 57.கூடு

பெளத்தம் அடையாளங்கள் சார்ந்த அறிவுபூர்வமான ஒரு கதை .அந்த மடாலயங்களில் நிகழ்ச்சிகள், ஆலயங்கள் அமைப்பு  ,பற்றற்ற வாழ்க்கை, அந்த மலைக் குகைகளில் சூழல் அனைத்தையும் கண் முன்னே நிறுத்துகிறது கதை.நிகழ்விடம் சார்ந்த நிலக்காட்சிகளின் வர்ணிப்பு அருமை.

58.முத்தங்கள்

ஆடு திருடும் திருடன் ஒருவன் துரத்தப்பட கிணற்றில் குதித்து  தப்பிக்க முயல்வதும்,  அங்கே தேவதைபோல் ஒரு அமானுஷ்ய சக்தி அவனை ஆட்கொள்ளப் பார்ப்பதும் கதை. மேஜிக்கல் ரியலிசம்  கொண்ட கதை.நாய்கள் பற்றிய சித்தரிப்புகள் அது சார்ந்த விவரிப்புகள் சுவை அளிப்பவை.

59. சிவம்

காசியையும் காசியைச் சார்ந்த இடங்களையும் அணுவணுவாக படம்பிடித்து காட்டும் கதை. நாம் ஏதோ ஒரு வாரம் காசியில் தங்கி வாழ்ந்து வந்தது போல் ஒரு உணர்வு தரும் விவரணைகள் கொண்ட கதை.

60.தேவி

ஒரு நாடகம் அரங்கேற்றுகிறார்கள் மூன்று வேடங்கள் .மூன்றிலும் நடிக்க வேண்டியது ஒரே நடிகை .ஏற்று நடித்து அனாயாசமாகத் தன் திறமையை வெளிப்படுத்துகிறாள் நாடக நடிகை ஸ்ரீதேவி. மூன்று என்ன முந்நூறாகவும்  தன்னை வெளிப்படுத்திக் காட்ட முடியும் என்கிற நடிகையின் ஆற்றலின் வீரியத்தை உணர வைக்கும் கதை.

61. லாசர்

ஒரு வண்டைப் பிடித்து லாசர் அது இறந்து போனதாக நினைக்கிறான். பாதிரியாரிடம் சென்று உயிர்ப்பிக்க வேண்டுகிறான். அதேபோல் தன் கண்முன் எதிரில் இறந்த தன் பாப்பாவும் உயிர்ப்பித்து விடுவாரா என்று நினைக்கிறான்.பாதிரியாரால் எல்லாவற்றையும் உயிர்ப்பிக்க முடியுமா என்று யோசிக்கிறான்.

62.நிழல்காகம்

தாத்தா ஒரு காகத்தைக் கொன்று விடுகிறார். அந்த காகத்தின் சாபம் அவரை மட்டுமல்ல அடுத்தடுத்த மூன்று தலைமுறைக்கும் நிழலாய் தொடர்ந்து கொத்திக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த  பேரன் எப்படிச் சாப விமோசனம் பெற்றவனாக மீள்கிறான்

என்பதுதான் கதை.

63.பிறசண்டு

தன் வீட்டுக்கு வந்து தன் கண் முன்னே அமர்ந்து மாமா என்று அழைத்துவிட்டு அவர் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு வீட்டில் நகைகளையும் செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்ற திருடனுக்கு தண்டிக்க வாய்ப்பு இருக்கும்போது  மன்னிப்பு கொடுக்கும்  ஒரு பெரிய மனிதரின் குணம் குன்றில் ஏறி நிற்கிறது.மன்னிப்பை விட சிறந்த அறம் இல்லை என்கிறது கதை.

64.கரு1- 2

வெளிநாட்டிலிருந்து திபெத் பீடபூமி பகுதியில் பயணிக்கும் மதம் தேடல் சார்ந்த மனிதர்களின் கதை .கிறிஸ்தவ நிறம் ஏறிய பயணக்கதை.வரலாறு, புதிர், சூழல், நிலக்காட்சி என  இணைந்து வாசிப்பதற்கு ஏற்ற கதை.வாசிப்பின் வழியே அக வெளியை விரிய வைக்கும் அற்புதமான ஒரு சோதனை முயற்சி.

65. இணைவு

’போழ்வு’ கதையின் இரண்டாம் பாகம். திருவிதாங்கூர் வரலாற்றில் ரத்தக்கறை படிந்த பக்கங்களை நினைவூட்டும் கதை. முதல் பாகமான போழ்வில் தான் சந்தேகப்பட்ட ஒரு மனிதரை இரண்டாகப் பிளந்த வேலுத்தம்பி இரண்டாம் பாகத்தில் தன் தம்பியால் கொலை செய்யப்படுகிறார் .அதுமட்டுமல்ல தன் விருப்பப்படியே அப்படிக் கொலை செய்யப்பட்டு உயிர் இழக்க நேர்கிறது.

66. முதுநாவல்

திருவிதாங்கூரில் நடந்த கதையாகத் தொடங்குகிறது. ஊரையே மிரட்டிக் கொண்டிருக்கும் ஆரியசாலை ரவுடி தலைக்கெட்டு காதருக்கும் அவனை அடக்க நினைக்கும் ஏட்டு இடும்பன் நாராயணனுக்கும் நடக்கும் நேருக்கு நேர் மோதல்.மயிர்க்கூச்செறியும் சம்பவங்கள் நிறைந்த கதை. இருவருக்குமான மோதல் காட்சிகள் எந்த ஒரு ஆக்ஷன் படத்தையும்  தோற்கடிக்கும்.அனைத்திற்கும் வாய்பேசாது மௌனமாக நிற்கிறது முதுநாவல் மரம்.

67. தேனீ

குடும்பத்திற்காக உழைத்துக் தேய்ந்துபோன தன் தந்தையைப் பற்றிய மகனின் நினைவுகள் கதை.பொற்கொல்லர் குடும்பத்தில் பிறந்து ஓய்வின்றி உழைத்தாலும் அவர்  நாதஸ்வரத்துக்குத் தீவிர ரசிகராக இருந்தார்.திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் பரம ரசிகரான தன் தந்தையைப் பற்றிய நினைவுகளை மகன் சொல்வதுதான் கதை. கலை ரசனை கோணத்தில் பல நுண்ணுணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது இக்கதை.

68..ராஜன்

பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் தன் அகங்காரத்தாலும் வேறு ஊரில் உள்ள பர்வதராஜன் என்ற யானையை வாங்க வேண்டும் என்று துடிக்கிறார் ஒருவர். இல்லையேல் அந்த யானையைக் கொன்று விடவேண்டும் என்று ஆணையிடுகிறார். அப்படி மிரட்டிப் பணிக்கப்பட்ட பூதத்தான் ஓடிப்போய் அந்த யானையிடம் தஞ்சம் அடைகிறான் . அந்த யானை அவனை ஆட்கொண்டு தானும் விடுதலை அடைந்து அவனையும் விடுதலை பெறச் செய்கிறது. இது ஓர் உணர்ச்சிமிக்க கதை.

69. ஆகாயம்

சிற்பிகள் கோயிலுக்காகப் பல சிற்பங்களை செதுக்கி வருகிறார்கள். அவர்களில் ஒருவன் குமாரன் என்பவன், வாய் பேச முடியாதவன். ஏதோ அவன் மனக்கண்ணில் கண்ட சிற்பத்தை செதுக்கிக் கொண்டிருக்கிறான். அது சிற்ப சாஸ்திரத்திற்கு உட்பட்டதா?ஆகம  நெறிகளுக்குள் அடங்குமா? அது பூஜிக்கப்பட வேண்டியதா? என்ற விவாதம் வருகிறது. அவன் சிற்பம் செதுக்கக் கூடாது என்றும் அவன் விரலை வெட்டவேண்டும், அவனைத் தண்டிக்க வேண்டும் என்றெல்லாம்  பேச்சு எழுகிறது. . எது பாவம் எது புண்ணியம் என்கிற விவாதம் நடக்கிறது .முடிவு என்ன எனத் தெரியாமல் விடை தேடி அலைகிறார்கள்.

கடைசியில் அந்த வாயில்லாச் சிற்பி என்ன ஆகிறான் என்பது கதை.

(தொடர்ச்சி பகுதி மூன்றில்)

-அருள்செல்வன், சென்னை 92

 

http://andhimazhai.com/news/view/jeyamohan-short-stories-analysis-part-2-05-06-2020.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3

முந்தைய இரு பகுதிகளிலும் இந்தக் குறிப்புகளின் மூலம் உணர்ச்சிவசப்பட்டுக் கதையின் மையக் கருத்தையோ  சொல்ல வந்த உள்ளடக்கத்தையோ நான் வெளிப்படுத்த முடியாமல் போய் இருக்கலாம் .  என் மனதில்  மலர்ந்த அனுபவத்தை எனக்கு விளக்கிச் சொல்லத் தெரியாமல் போய்  இருக்கலாம். மனம் பேதலிக்கும் பரவச நிலைதான் அதன் காரணமாக இருக்கக்கூடும்.

ஆனால் தினமும் ஒரு பித்துப்பிடித்த மனநிலையில்  ஜெயமோகனின் சிறுகதைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். அவர் எவ்வளவு வேகமாக ஓடினாலும் பின்தொடர்வது என்று முடிவு செய்திருந்தேன்.ஆனால் பொசுக்கென நிறுத்திவிட்ட உணர்வு. மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

நிறைவு என்ற பகுதியை பார்த்தவுடன் மனம் சோர்ந்து உற்சாகம் வடிந்து விட்டது என்பது உண்மை.

இருந்தாலும் இந்தக் கோடையை வாடையாக மாற்றிய ஜெயமோகனின் கதைகளுக்கு நன்றி.

மீண்டும் தொடர்வா என்பது எங்களுக்குக் தெரியும்.எழுதாமல் அவரால் இருக்க முடியாது.

சோழிகளை குவளையில் போட்டு குலுக்கி குப்புறக் கவிழ்த்து மல்லாந்து கிடக்கும் சோழிகள் எத்தனை? கவிழ்ந்து கிடக்கும் சோழிகள் எத்தனை? கோடு போட்டவை எத்தனை ? புள்ளி விழுந்தவை எத்தனை? என்று எண்ணுவது போல,இந்தக்கதைகளையும் மாற்றி மாற்றி நினைவுகளில் புரட்டிக் கலந்து உதிர விட்டு ஒப்பிட்டு மகிழ்ச்சி அடைகிறது மனம்.

கதைகளில் வரும் பாத்திரங்களை,கதைமாந்தர்களை ஒப்பிட்டுப்  பார்ப்பதை அனிச்சையாக மனம் அசைபோட்டுக் கொண்டே இருக்கிறது. இதைத் தவிர்க்க முடியவில்லை ஏனென்றால்  மனதிற்கும் வேறு வேலை இல்லை.

பிரெஞ்சுக்காரி  பாலியல் பட அழகி எல்லாவின்  கதைதான்  யாதேவி, சர்வ பூதேஷு, சக்தி ரூபேண என்று மூன்று பாகங்களாக வந்திருக்கின்றன.

’வான் நெசவி’ன் பிளாஷ்பேக் தான் ’வான் கீழ்’.அல்லது ’வான் கீழ்’ கதையின் தொடர்ச்சிதான் ’வான்நெசவு’.

போழ்வு கதையின் தொடர்ச்சி தான் ’இணைவு’.’ஐந்து நெருப்பி’ன் கதை மேலும் தொடரும் சாத்தியமுள்ளது.

கேரளா திருவிதாங்கூர் பின்னணியில் ஆயிரம் ஊற்றுக்கள், ஆட்டக் கதை உள்ளன.

சுற்றுகள் ,குருவி ,வானில் அலைகின்ற குரல்கள், உலகெலாம் நான்கும் தொலைத் தொடர்புப் பணிகள் பற்றிய பின்னணியில் அமைந்த கதைகள் என்று புரிந்து கொள்ள முடியும். ’லூப்’ பைக்கூட இந்த வரிசையில் சேர்க்க முடியும்.

ஜெயமோகனின்   கதைகளில் விலங்குகளுக்கும்  மனிதர்களுக்குமான  தொடர்புகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. யானை தொடர்பான கதைகளாக வரும்

’ஆனையில்லா’ கதையின்  இன்னொரு முகமாக ’பாப்பாவின் சொந்த யானை’யைக் கூறலாம்.’துளி’யும் ’ராஜ’னும் இந்த வரிசையில் அடங்குவன.

துப்பறியும் தன்மைகொண்ட வகையில் பத்துலட்சம் காலடிகள், வேரில் திகழ்வது ,கைமுக்கு, போன்ற கதைகளைக் கூறலாம். இவை குற்றப்பின்னணி  கொண்டதாகவும் திகழ்வன.

அனைத்து கதைகளின் மையமும் அகம் நோக்கிய நகர்வாக இருப்பதை உணர முடிந்தது. நிலமும் சூழலும் மன உணர்வுக்குத் துணைக்கருவிகள் ஆகியுள்ளன .’எந்த இலக்கியமும் சொல்வதல்ல ,பேசுவதல்ல, கூறுவதல்ல, வாழ்ந்து காட்டுதல் வாசகனை வாழ்ந்து பார்க்கச் செய்தல் ’என்கிற வகையில் ஜெயமோகனின் படைப்புகள் இருக்கின்றன.இத்தனை நாள்களும் வாசிக்கவில்லை; வாழ்ந்து பார்த்தோம்.

இக்கதைகளைத்தொடர்ந்து அவரது பிற தொகுப்பிலுள்ள சிறுகதைகளையும்  வாசித்துவிட உந்தப்பட்டு பெரும்பாலும் வாசித்து விட்டேன்.

கலையின் உன்னதக் கணத்தில் கலைஞன் ஒருவன் விஸ்வரூபம் எடுக்கிறான். அப்போது அவனை இறைவனாகக் கூட கூப்பிடத் தோன்றும் என்பதை உணர முடிந்தது. கலைகளை ஆராதிக்கும் ,உயர்த்திப் பிடிக்கும் ஜெயமோகனின் மனம் பல கதைகளின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. பல கலை மாந்தர்கள் இருப்பதை  கதைகளின் மூலம் கண்டு கொண்டேன்.

பகவதியின் தோற்றத்தை சுவரில் வரையும்’ இறைவன்’ மாணிக்கம் ஆசாரியாகட்டும் ,மூன்று வேடங்கள் புனைந்து நாடகத்தில் நடிக்கும்  ’தேவி’ ஸ்ரீதேவியாகட்டும் ,நாடகத்தைத் தொழிலாகக் கொண்டு திரியும் ’வனவாசம்’ அர்ஜுன் பார்ட் சுப்பையா, அல்லி பார்ட் குமரேசனாகட்டும், கேரளத்து சமையலில் கொடிகட்டிப் பறக்கும் ’சூழ்திரு’ மாணிக்கம் நாயராகட்டும், தொலைதொடர்பு துறையில் சுற்றுகளில்  கைதேர்ந்த ’குருவி ’மாடன் பிள்ளையாகட்டும், துப்பறிவதில் குருவை மிஞ்சிய  ’வேரில் திகழ்வது’ ரொசாரியோ சீடனாகட்டும்,சாராயம் காய்ச்சுவதில் செய்தொழில் நேர்த்தி கொண்ட’ மாயப்பொன் ’நேசையனாகட்டும்,நகை வேலையில் கரைகண்ட நல்ல நாதஸ்வர ரசிகராக வாழ்ந்த , ’தேனீ ’சண்முகமணியின் தந்தையாகட்டும், மனக்கண்முன் விரியும் உருவங்களை சிற்பமாக வடிக்கும் வாய் பேச முடியாத ’ஆகாயம் ’குமாரனாகட்டும் அனைவரிடமும் இந்தத் தன்மையை காண்கின்றேன்.

இந்த வரிசையில் பல கதைகள் பல பாத்திரங்கள் மூலம் அறத்தின் குரலை ஆவேசமான குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.அந்த வகையில் ’பலிக்கல்’ சங்கரன் போற்றி ,’போழ்வு’  மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை, ’இணைவு’ பத்மநாபன் தம்பி, ’ஐந்து நெருப்பு’ முத்து,’இறைவன்’ இசக்கி அம்மை, ’மாயப்பொன்’ நேசையன்,  ’பிறசண்டு’ சிரோமணி  என்று பலர் மூலம் விரிந்து எழுந்து ’ராஜன்’ பூதத்தான் வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஆன்ம உணர்வுகளின் ஈரத்தில் பயணம் செய்யும்  அனுபவங்களாக   கூடு, கரு, போன்ற கதைகளைச் சொல்லலாம்.

யட்சிகளின் ஆதிக்கம் சில கதைகளில் உண்டு.நற்றுணை,படுகை, சிவமயம் என்று தொடர்கிறது.கதை நிகழ்விடங்கள் தமிழ்நாடு குமரிப் பகுதி, கேரளா, காசி, திபெத் பீடபூமி, பசிபிக்கடலிலுள்ள டான்னா தீவு என்று புறப்பட்டு ஆப்பிரிக்கா வரை செல்கிறது.பெரும்பாலான கதைகள் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியில் நிகழ்வன.

கதைகளிடையே ஜெயமோகன் கூறுகின்ற தத்துவ விசாரங்கள், ஞானமரபு கருத்துக்கள், சித்தாந்த வளைவுகள், திரிபுகள் ,எழுச்சிகள் போன்றவை ரசிக்கத் தக்கவை. அவை ஞானத் துளிகளாக ஆங்காங்கே தெறிக்கின்றன.

பெண் பாத்திரங்கள்!

ஒவ்வொரு பெண் பாத்திரமும் தங்களது வாழ்க்கையில் நல்லதோ கெட்டதோ  உச்சம் தொட்டவர்களாக இருக்கிறார்கள்.

ஸர்வபூதேஷு கதையில் வரும் பிரெஞ்சுக்காரி பாலியல் பட நடிகை எல்லா ஆன்சல்,சர்க்கஸ் காரி ’வேட்டு’ ஜானகி ,சரஸ்வதி பலே கைகாரிகள். சைக்கிள் ரேஸ் ரெக்கார்ட் டான்ஸ் கூத்துக் காரி ’லீலை’ தாட்சாயணி தன் மனதில் பட்டதை செய்வதில் துணிச்சல் காரி நிமிடத்துக்குள் நிறம் மாறுபவள் ,’பால்’மணக்கப் பேசும் ’கோட்டை’ அணஞ்சியம்மை கிழவி,ஒரு டைரி எழுதிவிட்டு அதன் பக்கங்களில் வாழ்க்கையைத் தொலைக்கும் ’தேவகிச் சித்தியின் டைரி’ தேவகி,

தற்காலத்தில் இருந்து கற்காலத்துக்குச் செல்ல விரும்பும் தொன்மப் பயணி ’அனலுக்கு மேல்’ டச்சுக்காரி ஈவா பேக்கர்,’தேவதை ’பெண் பத்திரிக்கையாளர் மேரி பென்சாம் ,’கண்ணாடிக்கு அப்பால்’ கதையில் மாயாவி போல பயமுறுத்தும் சிசிலி,வழியில் கண்ணில் படுபவர் பற்றியெல்லாம்  செய்தி சொல்லும் ’நூஸ்’ நாணி ஆசாரிச்சிக்கிழவி,ஆறு பிள்ளைகளைப் பறிகொடுத்து ஆவேசமாய் எழுகிற  ’ஆயிரம் ஊற்றுக்கள்’ உமையம்மை ராணி,

தன்னுடைய கல்வி வேட்கையை ரகசிய யக்ஷியாக வைத்துக்கொண்டு படித்து மேலே உயர்ந்த ’நற்றுணை’ அம்மிணித் தங்கச்சி,எத்தனை வேடங்கள் என்றாலும் ஏற்று துவம்சம் செய்யும் நாடக நடிகை’ தேவி’ ஸ்ரீதேவி ,பகவதி ஓவியத்தை வரைந்து தரும் மாணிக்கம் ஆசாரியை முதற் கடவுளாக பார்க்கும் ’இறைவன்’ இசக்கியம்மா, குழந்தை மனம் மாறாத ’ஆயிரங்கால் மண்டபம்’ சிறுமி செண்பகக் குழல்வாய்மொழி, அறிவாளியாகி உயரே பறக்கும் பெண் விஞ்ஞானி ’என் பெயர்’ பத்மாவதி, அமெரிக்கா செல்ல ஆங்கிலம் கற்கும் கிழவி ’பெரியம்மாவின் சொற்கள்’ பெரியம்மா,யாருடைய பாவமும் நமக்கு வேண்டாம் என்று கூறும் ’நிலம் ’ராமலட்சுமி இப்படி எத்தனை பெண்கள்!  எத்தனை குணச்சித்திரங்கள் வழியே மனதில் வந்து அலையடிக்கிறார்கள்.

திருடர்கள் வருகிறார்கள் ! 

இந்தக் கதை வரிசையில் நிறைய திருடர்கள் வருகிறார்கள் சின்னஞ்சிறிய திருடனிலிருந்து கொள்ளைக்காரன் வரை.

‘எழுகதிர்’ கதையில் வரும் கோயில் கொள்ளையன் தொடங்கி ’வருக்கை’யில் வரும் உள்ளூர் திருடன் தங்கன்,’முத்தங்கள்’ ஆடு திருடன் மூக்கன்,வெளியூர் சென்று  திருடும் ’கரவு ’கதையில் வரும் தங்கன், செல்லன், கண்ணெதிரே வீடு புகுந்து கொள்ளையடித்த ’பிறசண்டு’ இன்னாசி,சென்னை வீடுகளில் திட்டமிட்டு கொள்ளையடிக்கும் படித்த திருடன் ’கைமுக்கு’ மகேஷ் என்று காலத்துக்கேற்ற எத்தனை வித திருடர்கள்.

விந்தை உணர்வு தரும் விலங்குகள்!

இந்தக் கதைகளில் எத்தனை விலங்குகள்?

’விலங்கு’ கதையில் வரும் அமானுஷ்ய செம்மறியாடு,’மாயப் பொன்’ புலி, ’இடம் ’ குரங்கு , ஆனையில்லா, துளி,பாப்பாவின் யானை, ராஜன்  கதைகளில்  வரும் யானை, ’மதுரம்’ எருமை மாடு,

’கரடி’யில் வரும் சர்க்கஸ் கரடி ஜாம்பன், ’கிடா’வில் வரும் பலி ஆட்டுக்கடா, ’பூனை’யில் புலியாக வரும் பூனை , ’முத்தங்க’ளில் துரத்தும் நாய்கள்,

’துளி’யில் வரும் கருப்பன் நாய், ’பெரியம்மாவின் சொற்கள்’ கதையில் வரும் நாய் வெட்டுமணி,

’வெண்கட’லில் வரும் எருமைகள் காளி,கோணக்கொம்பி என எத்தனை விலங்குகள்.!

’லூப்’ மலைப்பாம்பு. ’ஆடகம்’ நாகப்பாம்பு, ’நச்சரவு’, ’நாகம்’, ’கயிற்றரவு ’என வரும் நல்லபாம்பு,

என எத்தனைப் பாம்புகள்!

’குருவி’ யில் ஒயரில்கூடு கட்டும் குருவி, ’காக்காய்ப் பொன்’னில் வரும்  துறவியின் துறவறத்தை கேள்விக்குள்ளாக்கும் காகம், ’நிழல் காக’த்தில் வரும் விடாது துரத்தும் காகம் , ’விசும்பு ’கதையில் வரும் வெள்ளை கறுப்பு ஸ்டார்க்குகள், நீலவால்டால்கள் , மங்கோலிய சேண்ட் ப்ளோவர்கள் என எத்தனைப் பறவைகள்!

சில கதைகள் நுண்ணிய வர்ணிப்பால் மனம் கவருகின்றன. அனலுக்கு மேல், சூழ்திரு ,பெயர் நூறான்,மாயப்பொன், முது நாவல்,படுகை, பாடலிபுத்திரம், மன்மதன்,போன்றவற்றை நான் ரசித்ததாகச் சொல்வேன்.

ஜெயமோகன்  வைத்திருக்கும் தலைப்பு பொருண்மை மிக்கதாக இருக்கும்.சில ,கதையைச் சொல்லும் .சில கதையை வெளிப்படச் சொல்லாது .சில பூடகமாக இருக்கும் .சில மௌனமாக இருக்கும்.சில அழகு காட்டும்.சில செறிவு மறைத்திருக்கும்.

எனக்கு பிடித்த தலைப்புகள் பொலிவதும் கலைவதும், துளி, வேரில் திகழ்வது ,சூழ்திரு, பலிக்கல், நிழல்காகம் ,ஆகாயம், கைதிகள் ,ஒரு கணத்துக்கு அப்பால், நிலம், குருதி, படுகை போன்றவை சில.

கதைகளில் எத்தனை எத்தனை உணர்ச்சிகள் !

அன்பு , பாசம்,காதல், வன்மம், காமம், கழிவிரக்கம்,குற்ற உணர்ச்சி, வீரம், தாய்மை, புத்திர சோகம், பரிவு, அச்சம், குழப்பம், விரக்தி, செருக்கு, ஆதிக்கம், அகங்காரம், பெருமை, எழுச்சி, கள்ளம், நகைச்சுவை,இழிவு,மன்னிப்பு என்று எத்தனை உணர்ச்சிகள், உணர்வுகள் வெளிப்பட்டுள்ளன!

கதையில் வரும் நான் ரசித்த உவமைகள் ,   வரிகள் நிறைய உண்டு. சில ஒரு சோற்றுப் பதங்கள்.

’வான் கீழ்’ கதையில் வரும்  ராஜம்மை பற்றிக்கூறும் போது  ஜெயமோகன் எழுதியுள்ள  ’அவள் நகங்களும் சற்றே கருமை கலந்த செம்மை. வாழைப்பூ நிறம்போல  என்பதை  ரசித்தேன்.  கதையில் இறுதிவரியாக வரும் .

அவளை அவன் முத்தமிட்டபோது உழுதுபோட்ட புதுமண்ணின் மணம்..’என்பதை எல்லாம் ரசித்தேன்.

’முதல் ஆறு ’கதையில் வரும்

’தக்கலை பஸ் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். ஒரு மாணவர் கூட்டத்தை அப்படியே இரண்டு கைகளாலும் நெல்லை எடுப்பதுபோல அள்ளி எடுத்துக்கொண்டு வரும்’  என்பதையும்  ரசித்தேன்.

’நிழல்காகம் ’ கதையில் வரும் உவமைகள் ,  உதாரணங்கள்,

’பழுதடைந்த மடாலயம். இருண்டு புழுதிபடிந்து பின்பக்கம் சற்று சரிந்து ஏதோ பூச்சியின் கழற்றப்பட்ட குருதிச்செந்நிறமான ஓடு போல ரசிப்புக்குரியவை.

’வெண்கடல் ’கதையில் வரும்  ’சுரைக்காய்க்குடுக்கை போலக் கன்னங்கரிய பளபளப்புள்ள சருமம். சுருண்ட கூந்தல் தார் போல பளபளப்பாக பெஞ்சிலிருந்து தரைநோக்கி வழிந்திருந்தது.

உருண்டையான முகம். மெல்லிய புருவங்களுக்குக் கீழே பெரிய கண்கள். சிப்பிபோல இமைகள் மூடியிருக்க உள்ளே விழிகள் நிலையில்லாமல் அசைவது தெரிந்தது.

தைலத்தில வாசன வாறது பெண்ணு சமையுறதுக்குச் சமானமாக்கும்’ ரசித்தேன்..

மாடு காளியின் தோற்றம் பற்றி, ’பாறைக்குழியில் தேங்கிய மழைநீர் போல இருந்தன அவள் கண்கள். உப்புத்தாள்போன்ற நாக்கு.

 அவளுடைய பெரிய உடல் நீர் நலுங்காமல் காற்றில் அலைவருவதுபோல வந்தது. கரையில் ஏறிப் பெருமூச்சுடன் கைக்குழந்தை கைநீட்டி வாங்குவதுபோல கனத்த நாக்கை நீட்டித் தழையை வாங்கிச் சுருட்டி வாய்க்குள்ளே கொண்டுசென்றாள் என்பதையும்

 நான் அவள் காம்புகளைப்பிடித்து அட்டைகளை எடுத்தபோது ஒரு காம்பிலிருந்து பால் ஊறி சொட்ட ஆரம்பித்தது. இலைக்கள்ளிச்செடியின் தண்டை முறித்ததுபோல ’ என்பதை எல்லாம் ரசித்தேன்.

’ வெறும் முள் ’ கதையில் வரும்    அந்த நதிக்கு மேல் செஸபான் மரங்களைப் பார்த்தால் பாலைநிலத்தில் விழுந்து கிடக்கும் ஒரு பச்சைத்துவாலை போல தெரியும்  என்பதையும்  ரசித்தேன்.

’மதுரம் ’    கதையில் வரும்  சற்றுநேரத்தில் மெல்லிய படலத்தால் சுற்றப்பட்ட வெள்ளைநிறமான கன்றுக்குட்டி உள்ளிருந்து சலவைக்காரியின் மூட்டை போலப் பிதுங்கி வெளிவந்தது.  வாழைப்பூமடல் போல நாக்கு ,என்பதை ரசித்தேன்.

நாயின் குரைப்புக்கு,  பெரிய செம்புக்குட்டுவத்தில் செம்பு அகப்பையால் அடிப்பதுபோன்ற ஒலி என்று நாயின் குரைப்பைச்சொல்லியிருந்ததை எல்லாம் ரசித்தேன்.

’முதுநாவல்’  கதையில் வரும்  ’ காதரின் கைகள் மிகநீளமானவை, . விரல்கள் ஒவ்வொன்றும் மூங்கில்கள் போல. தலைப்பாகை முகத்திற்குமேல் ஒரு பெரிய துணிப்பறவை அமர்ந்திருப்பதுபோல தோன்றும்.

முழங்கால்வரை நீண்டு கிடக்கும் மிகநீளமான அங்கிபோன்ற சட்டை.

காதர் மிகக்குறைவாகவே பேசினான்.  அவன் குரல் உறுமியை மீட்டியதுபோல ஆழமான கார்வை கொண்டிருந்தது.  ஒருகாலை மடித்துவைத்து தலையை ஓணான்போல சற்றே நீட்டிஅமர்ந்திருந்தான்.

அவன் கையில்  இருக்கும் சுருட்டு  பித்தளைப் பூண்போட்ட இரும்புலக்கை போலத் தெரியும்’  என்பதை எல்லாம் ரசித்தேன்.

’என்பெயர்’ கதை நாயகி பத்மாவதி கூறும்

’திருவிழாக் கூட்டத்தில் யானை போன வழியே பின்தொடர்ந்து போவதுபோல எளிதாக நான் முன்னேறினேன்’  என்பதையும்  ரசித்தேன்.

’பெயர் நூறான் ’கதையில் வரும்

புல்லரித்து கழுத்தில் மயிர்ப்புள்ளிகள்  தெரிந்தன.

கற்பனைக்கு அளவே இல்லை அது நுரைமாதிரி அப்படியே வளர்ந்திரும். என்பதை எல்லாம்  ரசித்தேன்.

’ஆட்டக் கதையில்’  ஒரு நீண்ட பேட்டியை உயிரோடு இருப்பவர்களை போஸ்ட்மார்ட்டம் செய்யும் வழக்கம் இது ’என்பார். அதை  ரசித்தேன்

’ ஏகம் ’ கதையில் வரும்

குழல் குழைந்தது. மெல்லிய புகைபோல சுருளவிழ்ந்தது. பட்டுத்திரைச்சீலை போல குழைந்து நெளிந்தது.பொன்னிற நாகம். மயிலின் திரும்பும் கழுத்து. மெல்ல எழும் நாரையின் சிறகுவிரிப்பு. அசையாச்சிறகுகளுடன் வட்டமிடும் பருந்து. அதன் நிழல். தொலைவில் ஒளிர்ந்தபடிச் செல்லும் சிற்றோடை ’ என்ற வரிகள் அருமை.

’ நாகம் ’ கதையில் வரும்    ’ கதவின்  இடுக்குகள் வழியாக குளிர்க் காற்று நாலைந்து இடங்களில் பீறிட்டது. குளிர்ந்த நீர்த் தாரைகளின் தொடுகை போலிருந்தன ’ என்பதை எல்லாம்  ரசித்தேன்

’ படுகை ’   கதையில் வரும்

’உலகுடன் பிணைக்கும் நிஜம் போல அவர் குரல் இருட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும்.,

மூளியலங்காரி கண்ணீர் போல முப்பது நாளும் மழை,மூத்தபட்டன் பூணூல் போல ஒரு ஒற்றையடிப்பாதை,

எங்கள் இளம் பருவத்திலேயே வள்ளியாறு ஒரு நீல ரிப்பன் போல ஆகிவிட்டிருந்தது,

ஒரு செயற்கைத் தோட்டம். காட்டுக்குள் வழி தவறி வந்த நகரத்துக் குழந்தை போல குரோட்டன்ஸ் சிவப்புடன் நின்று கொண்டிருந்தது.’என்பதை எல்லாம்  ரசித்தேன்

 பெரியம்மாவின் சொற்கள் ’  கதையில் வரும்

"அதை எப்படிச் சொல்வது? chastity என்றேன். இன்னும் கொஞ்சம் நகர்ந்து piety என்றேன். அர்த்தம் சரியாக உட்காரவில்லை. என்பதை அவன் சொல்ல,பெரியம்மாவோ யுத்தம்னா அப்டித்தான். கையூக்குள்ளவன் காரியக்காரன். நாக்குள்ளவன் நாடுபிடிப்பான்.” என்பாள். ரசித்தேன்

’ஏறும் இறையும்’ கதையில் வரும்

’ஆரபி, தேவகாந்தாரம் ரெண்டும் பாடினா. அதுவும் சேந்தாப்ல…”

“ரெட்டைக் குழந்தகளை ஒரே சமயம் தூக்கி ரெண்டு மார்பிலயும் பால் குடுக்கிற மாதிரின்னு தோணித்து. என்கிற வரிகள் ரசித்தேன்.

இவை கிளிச்சீட்டாய் நான் எடுத்த ஒரு துளி மாதிரிகள்.எடுக்கவும் சொல்லவும் ஏராளம் உள்ளன.

நிறைவாக ஒன்று சொல்வேன். ஜெயமோகனின்  சிறுகதைகள் வாசித்தல் அனுபவம் என்பது அவர்  எங்களை எல்லாம் பறக்கும் மாயக் கம்பளத்தில் அமரவைத்து ஆகாய வெளியில் மிதக்கவிட்டு அலையடித்து பறக்கச் செய்து, திடீரென கீழே இறக்கி ,கடலுக்கு மேலே சுழல விட்டு ,மலை முகட்டுக்கு அருகில் மோதுவது போல் சென்று, மழையில் நனைய வைத்து, வெயிலில் அலைய விட்டு,குகைகளுக்குள் நுழைய விட்டு,பனி மூட்டத்தில் குளிர வைத்து,மேகத்தைத் தீண்டவிட்டு, திடீரென்ற பள்ளத்தாக்கில் இறக்கி அதிரவைத்து  , மீண்டும் மேலேற்றி புல்வெளியில் அலையவிட்டு , தரையில் கொண்டு வந்து இறக்கிய அனுபவத்தை தந்தது.

ஜெயமோகன்  கதைகள் ஒவ்வொன்றும் தனித்தனி வகைமைக்குள் அடங்குவன .

அவை என் போன்ற வாசகர்களுக்கு ஏற்படுத்தியுள்ள எழுச்சிகள், மகிழ்ச்சிகள், நெகிழ்ச்சிகள்,துடிப்புகள், , விரிவுகள், செறிவுகள் பல வகையின.

வாழ்வியல் தளங்களிலும் அழகியல் தளங்களிலும் தத்துவ தளங்களிலும் ஒவ்வொன்றும் காதோரம் வந்து ரகசியக்கிசுகிசுப்பாய் அணுக்கம் கொடுத்தவை.வான விரிவு அளவுக்கு ஞான விரிவு கொடுத்தவை.

பேசிக்கொண்டே இருந்தால் பிதற்றல்கள் ஆகிவிடுகின்றன என் வார்த்தைகள்.

நிறைவாக  சொல்லத் தோன்றுவது இதுதான்  ’மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு கதைதான்’.

69 கதைகளில் ஜெயமோகன்  காட்டிய படைப்பூக்கம், அந்தப் ’பித்திசைவு’ என்னைப் பிரமிக்க வைத்திருக்கிறது. ஜெயமோகன்  கதைகளைப்படித்து முடித்தபின் அவற்றின் விளைவாக ,வாசித்த வாசகனுக்குள்ளும் படைப்பூக்கம் மலர்ந்து கிளர்ந்தெழ வைக்கும்.

ஜெயமோகன்  அவரது சித்தாந்த எல்லைகளை விடுத்தும் கருத்துக்கட்டங்களை விலக்கியும் கூட ரசிக்கத்தக்கவர்.  அவர் மீதுள்ள விமர்சன விலகல்களைத் தாண்டியும் அவர் நல்லதொரு  படைப்பூக்கம் கொண்ட படைப்பாளி என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர்.

(முடிந்தது)

- அருள்செல்வன்

 

http://andhimazhai.com/news/view/jeyamohan-short-stories-analysis-part-3-05-06-2020.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

69 கதைகளையும் படிக்க விரும்புவர்கள் கீழுள்ள கட்டுரையில் உள்ள இணைப்புக்கள் மூலம் படிக்கலாம்.

சில கதைகளை யாழில் இணைத்திருந்தேன்.

 

நிறைவு

nithyame.png

இந்தக் கதைகளை எழுதத் தொடங்கியபோது எந்த நோக்கமும் இல்லை. முன்னரே சிறுகதைக்கான உந்துதல் இருந்தது . யாதேவி வரிசை சிறுகதைகளை எழுத தொடங்கியிருந்தேன். நான் சிறுகதைகளை எழுதுவது வெண்முரசின் நடையில் இருந்து வெளியே வருவதற்காகத்தான். என் இயல்பான நடையையும் மனநிலையையும் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு.

வெண்முரசின் நடை தூயதமிழ், செவ்வியல் பார்வை , கனவுத்தன்மை கொண்டது. அன்றாடத்தை ஒட்டிய நடையையும் யதார்த்தம் சார்ந்த பார்வையையும் புறவயத்தன்மையையும் தக்கவைத்துக்கொள்ள எப்போதுமே முயல்வேன். வெண்முரசு எழுதுவதற்கு நடுவே முப்பதுக்கும் மேல் சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். உச்சவழு,பிரதமன் என்னும் இரு தொகுதிகள் வந்துள்ளன. தொகுக்கப்படாத கதைகளும் உள்ளன

மார்ச்சில் சிக்கிம் வழியாக அருணாச்சலப்பிரதேசம் சென்று திபெத் எல்லை வரை உலவிவரும் ஒரு நீண்ட பயணத்தை வகுத்திருந்தோம். விமானமும் முன்பதிவுசெய்திருந்தோம். ஆகவே வெண்முரசு பதினெட்டு அத்தியாயங்கள் முன்னால் சென்றிருந்தேன். அப்போதுதான் கரோனா தாக்குதல்,வீடடங்கு. அந்த இடைவேளையில் சிறுகதைகளை எழுதலாம் என்று தோன்றியது.

நான் எழுதுவதெல்லாம் முக்கியமாக எனக்கே. நான் வெளியே செல்வதற்கு. உள்ளத்தின் தேங்குதலில் இருந்து கனவுக்குள் செல்வதற்காக. இந்த வீடடங்கு உடல்சார்ந்த தேங்குதலும் கூட. இந்தக் கதைகள் என்னை வெளியே கொண்டு சென்றன. நான் வாழ்ந்து கடந்து வந்த நிலங்களில், நான் கனவுகாணும் நிலங்களில் வாழச்செய்தன. நான் அறிந்த மனிதர்களை என் கற்பனையில் மீளப்படைக்கச் செய்தன. நான் அறியாதவர்களை எனக்காகப் புனைந்துகொள்ளச் செய்தன

இதுவரை எழுதாத பல களங்களுக்குச் சென்று எழுதினேன். என் பழைய தொழிற்சூழல். என் சிற்றூர்ச்சூழல். லடாக், திபெத்.இக்கதைகள் வழியாக நான் கடந்துசென்றது என்னை நானே கண்டெடுத்து புதுப்பித்துக்கொள்ள உதவியது. இத்தனை ஆயிரம் வாசகர்கள் உலகமெங்கும் உடன் வந்தது என்பது தொழில்நுட்பத்தின் ஆற்றலால்தான்

இவற்றில் எல்லாவகையான கதைகளும் உள்ளன. யதார்த்தக் கதைகள், மிகுபுனைவுகள், சிக்கலான ஊடுபாவுகள் கொண்டவை, எளிமையானவை. ஆனால் பொதுவாக நம் மண்ணுக்கே உரிய ஆழ்படிமங்களில் இருந்து எழும் படிமங்கலும் உருவகங்களுமே அடிப்படையான நுண்கட்டுமானத்தை அளித்தன. அவற்றுடன் ஆழ்மனத் தொடர்பு கொண்டவர்களுக்கான கதைகள் இவை.வாசகர்கள் பலர் இயல்பாகவே அந்த நுண்ணுணர்வை கொண்டவர்கள் என்பதைக் கண்டேன். கதைகள் அந்த  நுண்தளங்களை எளிதாகத் தொட்டுவிடுகின்றன

அடிப்படையில் நான் கதைசொல்லி. கதைசொல்ல மட்டுமே வந்தவன். அதற்கப்பால் எல்லாமே என் வகையில் பொருளற்றவை. கதைவழியாகவே என் மெய்த்தேடல் நிகழமுடியும் என்பது குருவின் வழிகாட்டல்

இக்கதைகளிலும் என் ஆழ்ந்த மெய்த்தேடல் நிகழ்ந்துள்ளது. சொல்லப்போனால் இக்கதைகள் அனைத்துமே அந்த இலக்கு நோக்கி மெல்லமெல்லச் சென்றுகொண்டிருப்பவையே. முன்பு எப்போதுமில்லாத சில தருணங்களை அவை சென்றடைந்தன. அடிப்படையில் அவற்றைப் பங்கிட்டுக்கொள்பவர்கள் மட்டுமே என் வாசகர்கள்.

எழுதித்தீர்ந்தமையால் அல்ல, எங்காவது நிறுத்திக்கொள்ளவேண்டுமே என்பதனால் இப்போதைக்கு நின்றுகொள்கிறேன். வழக்கம்போல பாதி எழுதியவை, தொடங்கி வைத்தவை என பல கதைகள் கணிப்பொறியில் உள்ளன. மீண்டும் எப்போதாவது எழுதலாம் என்று நம்புகிறேன்.

ஆனால் என்னால் ஒரே மூச்சில் ஒரே விசைகொண்டு எழுதினால் மட்டுமே முடிக்கமுடியும். இப்படி தொட்டு விட்டுவிட்ட நாலைந்து நாவல்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் கையில் உள்ளன என்பதும் நினைவுக்கு வருகிறது .

நான் யோசித்து எழுதுபவன் அல்ல. என்னை மீறி நிகழவேண்டும். கதை எழுத எனக்கு ஒரு மெல்லிய உணர்வு ஒரு வரி ஒரு படிமம் போதுமானது. மீதி அனைத்தும் தானாகவே உருவாகி வரும். ஆனால் உருவாகாவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது.

மீண்டும் கதைகள் வரும். ஏனென்றால் நான் தேடும் வினாக்கள் அத்தகையவை. ஒரு குரல் இமைய மலைமடிப்புகளில் ஆயிரமாக திரும்பி வருவதுபோல அவை வெளிவந்ததுமே பெருகுபவை.

ஒவ்வொரு சொல்லிலும் உடனிருந்த குரு நித்யாவுக்கு வணக்கம்.

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

 

 

https://www.jeyamohan.in/131731/#.XuTjay14VR7

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்


 

ஜெயமோகனின் கதைத் திருவிழா – விஷ்வக்சேனன்


சில நாட்களுக்கு முன்பு, கேரளாவில் ஒரு பிடி யானையை வெடி வைத்துக் கொன்ற செய்தியைக் கேட்ட போது நினைவுக்கு வந்த முதல் விஷயம், ஜெயமோகன் எழுதிய ராஜன் என்ற சிறுகதை தான். ராஜன் ஒரு யானையைப் பற்றிய கதை. தென் திருவிதாங்கூரில், சிற்றூர்களின் மாடம்பிகளான இருவருக்கும் இடையே நடக்கும் ஒரு கர்வப் போட்டியில், பர்வதராஜன் என்ற அந்த யானையை விஷம் வைத்துக் கொல்ல ஒரு தரப்பின் எஜமானன் முடிவெடுத்து தனது பாகனிடம் பேசுவதில் தொடங்குகிறது அக்கதை.

பூதத்தான் நாயர் என்ற அந்தப் பாகனை அந்த இல்லத்தில் நடத்தும் முறையில் இருந்தே அவன் அவர்களிடம் எப்படிப்பட்ட அடிமட்ட சேவகனாக உள்ளான் என்று நமக்குப் புரியும். யானையின் காலில் சாவது மோட்சத்துக்கான வழி என்று நினைத்து வாழ்ந்திருக்கும் பாகன்களின் பாரம்பரியத்தைச் சேர்ந்த அவனிடம் யானையைக் கொல்வதற்கான சகல நியாய தர்மங்களையும் எஜமானனின் உதவியாளன் எடுத்துச் சொல்லி இச்செயலைச் செய்யச் சொல்கிறான். அதோடு இந்தத் திட்டத்திற்கு உடன்படாவிட்டால் பாகனின் குடும்பம் கருவறுக்கப்படும் என்ற மிரட்டலும் சேர்ந்து கொள்கிறது. பதறித் தவித்துக் குழம்பி நிற்கும் பாகன், தனக்குள் இதன் நியாய தர்மங்களைத் தேடும் போது, தொன்மங்களின் வழி வந்து சேர்கிறது ஒரு நியாயம். அதன்படி அவன் நின்றதும், பின் நடந்ததும் இக்கதையின் உச்சப்புள்ளி.

கேரளத்தில் பரசுராம ஷேத்ரம் என்பது மிகப் பழமையானதொரு தொன்மம். பரசுராமரின் மழுவைக் கடலில் வீசி அதிலிருந்து மீட்ட நிலமே கேரளம் என்பது அவர்களின் நம்பிக்கை. அதில் புதிதாக இன்னொரு முடிச்சை சேர்க்கிறார் ஆசிரியர். பரசுராமரின் தெற்கு விஜயத்தின் போது, உண்பதற்கான பசும்புல் இன்றி வாடும் ஒரு குட்டி யானைக்காகத் தான், இந்தப் புல்வெளிப் பச்சை நிலத்தை மீட்டெடுத்துக் கொடுக்கிறார். கேரளத்தின் தொல்குடிகளின் மூதன்னையர் அனைவரும் யானைகளுக்குப் பாத்தியப்பட்ட இந்த நிலத்தின் உரிமையை யானைகளின் மூதன்னையின் கருணையினாலே வாங்கி, தன் சந்ததியினருக்குக் கொடுக்கின்றனர். இது யானையின் நிலம், அதன் கருணையினால் நமக்குத் தரப்பட்டது என்று அந்தத் தொன்மம் போகும். பிரமாதமானதொரு நாடகீய உச்சப்புள்ளியில் முடியும் இந்தக் கதையின் முடிவில் யார் ராஜன் என்று யோசிக்கத் தொடங்கி விடுவோம்.

கொரானா ஊரடங்கு காலத்தில் தினமும் ஒரு கதை எழுதப் போவதாக அறிவித்த ஜெயமோகன், மொத்தமாக அறுபத்து ஒன்பது கதைகளை எழுதியிருக்கிறார். இவற்றில் சில, குறுநாவல் அளவுக்குப் பெரியவை, மற்றவை அவரது அளவுகளில் பெரிய சிறுகதைகள். இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வித்தியாசமான பின்புலத்தில் வெவ்வேறான உணர்ச்சிகளைத் தருவனவாக இருக்கின்றன. இவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் உட்கார்ந்து படிக்க மிகவும் சிரமமாக இருந்தது. ஒரு கதை காட்டும் உலகத்தில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளவே நேரம் தேவைப்பட்டது. அதன் பின்னர்தானே அடுத்தக் கதைக்குள் புக முடியும்? அப்படியான வலுவான பிணைப்புகளுடனும் ஆழமாகவும் வேறு உலகத்திற்கு எடுத்துச் செல்வனவாக அவை இருந்தன. தவிர, அறுபத்து ஒன்பது கதைகள் என்பது பெரிய எண்ணிக்கை. ஒவ்வொரு கதையைப் பற்றிக் கொஞ்சமாக எழுதினாலும் ஒரே கட்டுரைக்குள் கொண்டுவர முடியாத அளவு பெரியதாகி விடும். இதில் முடிந்த அளவுக்கு ஒரு பொதுவான பார்வையை முன்வைக்க சிரத்தை எடுத்திருக்கிறேன். அதோடு சில கதைகளைப் பற்றிய குறிப்புகளை மட்டும் கொடுத்திருக்கிறேன்.

இக்கதைகள் அனைத்தையும் பொதுவான அடைப்புகளுக்குள் கொண்டு வரவேண்டுமானால் இப்படி பிரித்துக் கொள்ளலாம்: 1. அனந்தன் கதைகள் 2. ஔசேபச்சன் கதைகள் 3. திருவிதாங்கூர் வரலாறு – நாட்டார் பாடல் கதைகள் 4. பி.எஸ்.என்.எல் கதைகள் 5. கலை – கலைஞன் பற்றிய கதைகள் 6.நித்தியா – ஞானம் – அகப்பயணம் சார்ந்த கதைகள் 7. இவையல்லாத பொதுவான கதைகள்.

அனந்தன் என்ற கதாபாத்திரம், கிட்டத்தட்ட ஜெயமொகனின் சிறுவயதுப் பாத்திரம் என்ற கருத்து உண்டு. ஏற்கனவே தீயறியும், கிளி சொன்ன கதை போன்ற ஜெயமோகனின் பழைய படைப்புகளில் அனந்தன் வந்ததுண்டு. அவரது புறப்பாடு 1 & 2 மற்றும் இந்த அனந்தன் வரும் படைப்புகள் என்று ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அது தனிப்பட்டதொரு புனைவுத் தளமாக கூடி வரும். கிட்டத்தட்ட மால்குடி டேஸ் போல, கன்னியாகுமரி மாவட்ட கிராமத்துப் பின்னணியில் இந்தக் கதைகள் அனைத்தும் தனித்த சுவை கொண்டதாக இருக்கும். கொரானா காலத்தில் எழுதப்பட்டிருக்கும் அறுபத்து ஒன்பது கதைகளுள், கிட்டத்தட்ட பன்னிரண்டு  சிறுகதைகளை, அனந்தன் கதைகள் என்று ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அந்தப் புனைவுலகுடன் தொடர்புபடுத்தலாம்.

இதில் ஆனையில்லா, வருக்கை, பூனை, துளி, கோட்டை, தங்கத்தின் மணம், இடம், மதுரம், பிடி, தேவி போன்ற கதைகளை அனந்தன் கதைகள் என்று சொல்லலாம். இந்த வகைச் சிறுகதைகள், பொதுவாக யதார்த்தவாத சித்தரிப்புடனும் பெரும்பாலும் திடுக்கிடும் திருப்பங்கள் ஏதுமின்றியும் எளிய கன்னியாகுமரி வட்டார கிராமத்துச் சூழலில், அங்குள்ள எளிய மனிதர்களின் உரையாடல் வழியாகவும் நடவடிக்கைகள் வாயிலாகவும் அவர்களது வாழ்க்கையைக் காட்டி, புன்முறுவல் அல்லது மனமலர்ச்சியோடு முடிகிறது.

முந்தைய ஜெயமோகனின் அனந்தன் படைப்புகளில் அனந்தனது அப்பா ஒரு இறுக்கமான மனிதராக, முன் கோபம் உள்ளவராக, அவ்வப்போது கடந்து செல்லும் துணைப் பாத்திரமாக இருப்பார். ஆனால் இந்தக் கதைகளில் அவரது பாத்திரம் கொஞ்சம் நெகிழ்வுடையதாக மாறி கிட்டத்தட்ட முக்கியப் பாத்திரமாகவே பல கதைகளில் வருகிறார். கரடி நாயர் என்று அழைக்கப்படும் முரட்டுத்தனமான முன்கோபியான இந்த அப்பா பாத்திரம், மதுரம் கதையில் பிரசவிக்கும் எருமைக்காகவும், பிறந்த எருமைக் குட்டிக்காகவும் அழுகிறார், “மொழி”யில் பத்தாய அறைக்குள் அகப்பட்டுக் கொண்ட சிறிய மகளுக்காக அறைந்து அறைந்து அழுகிறார்.

இடம், துளி, பூனை, ஆனையில்லா போன்ற கதைகளில் விலங்குகளுக்காகவும் சக மானுடருக்காகவும் எதோ தன்னளவிலான உதவிகளை இயல்பாகச் செய்ய முயல்கிறார் என்பதே முந்தைய புனைவுகளில் இருந்து இந்தக் கதாப்பாத்திரம் அடைந்து வந்த பரிணாம வளர்ச்சி என்று சொல்லலாம். டீக்கனார், தங்கையா பெருவட்டர் போன்ற இவரது சகாக்களும் அவர்களது குணாம்சத்தால் ஈர்க்கிறார்கள், இது தவிர தங்கம்மை, கேசவன் தம்பி நாயர், அச்சு ஆசான், கள்ளன் தங்கன், தவளைக் கண்ணன், லாரன்ஸ் போன்றவர்களும் வருகிறார்கள். இந்தக் கதைகளில் முக்கியப் பாத்திரங்களாக யானை வருகிறது, குரங்கு வருகிறது, சிறுத்தை, நாய், எருமை எல்லாம் வருகின்றன. கள்ளக் காதல், காமம், கலை, ரசனை எனக் கலந்து வருகின்றன. ஒருமுறை படிக்க ஆரம்பித்தால், இந்தப் புனைவு உலகத்தில் இருந்து எளிதாக வெளியே வரமுடியாது. மேலே கொடுக்கப்பட்ட கதைகள் அனைத்தையும் ஒரே வரிசையில் படிக்கலாம்.

ஔசேபச்சன் பாத்திரம் ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. இவர் துப்பறிந்த காலகட்டத்தில் நடந்த சில வித்தியாசமான கதைகளை இப்போதுள்ள தனது நண்பர்களுக்குக் குடி விருந்தினிடையே, அடுக்கடுக்கான சம்பவங்களின் வழியே, ஒவ்வொரு முடிச்சாகப் போட்டு, பின் ஆற அமர ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து இயல்பாகப் பகிர்கிறார். அவர் தூக்கி வீசும் சம்பவக் கோவைகளின் அடுக்கு வழியாகக் கதை துலங்கி வரும் இந்தக் கதை சொல்லல் முறையே ஒரு பெரிய கவர்ச்சி. ஒரு துப்பறியும் கதைக்குத் தேவையான எல்லா விஷயங்களும் இருந்து, அது கொடுக்கும் சில்லிடும் அனுபவங்கள் வழியாக, சாதாரணமானதொரு வெகுஜனப் புனைவாக இல்லாமல், இதை இலக்கியமாக்குவது இந்தக் கதை சொல்லல் முறையும், அதன் பாத்திரப் படைப்புகளும், அதன் பல்பரிமாணங்களும், கொட்டிக் கிடக்கும் தகவல்களும், நுணுக்கமான விவரணைகளும் தான்.

வேட்டு, வேரில் திகழ்வது, பத்து இலட்சம் காலடிகள், ஓநாயின் மூக்கு, கைமுக்கு என்ற ஐந்து கதைகளையும் ஔசேபச்சன் கதைகள் என்று சொல்லலாம். இதில் உச்சம் என்று பத்து லட்சம் காலடிகளையும், ஓநாயின் மூக்கினையும் சொல்லலாம், அடுத்து கைமுக்கு, பின் வேரில் திகழ்வது. வேட்டு ஒரு நல்ல வெகுஜனத் துப்பறியும் புனைவு, ஆனால் அது மற்ற கதைகளின் ஆழத்துக்குச் செல்லவில்லை என்பது அதன் பலவீனம். பத்துஇலட்சம் காலடிகளில், கேரளத்தின் கடற்கரையோர மாப்பிள்ளா முஸ்லிம்களின் கலாச்சாரத்தைப் பற்றியும், அவர்களின் கடற்கலமான பத்தேமாரியைப் பற்றியும், அரபிக்கடலோர கடத்தல் குழுக்களின் வழக்கங்கள் பற்றியும் நிறைய குறிப்புகள் வருகின்றன. அவற்றால் இந்தக் கதையின் கனம் வேறொரு தளத்துக்குச் சென்றுவிடுகிறது, அதற்கேற்றாற் போன்ற ஒரு முடிவுடன் நிறைவடைகிறது.

ஓநாயின் மூக்கு தென் திருவிதாங்கூர் அரசின் முக்கியமான ஒரு குடும்பத்துச் சாபத்தில் ஆரம்பித்து, திருவிதாங்கூர் வரலாறு, யக்‌ஷி, மனநலக் கோளாறு, சொத்தின் பொருட்டு நடக்கும் சதி என்று பலவாறாக மாறி யாருமே எதிர்ப்பார்க்காத முடிவுடன் முடிகிறது. கைமுக்கு தமிழகப் பின்னணியில் வறிய குடும்பத்தில் பிறந்த ஒரு எளிய மாணவன் விரட்டப்படும் தூரத்தையும் அது திறந்து விடும் குற்றச் செயல்களையும் காட்டுகிறது. ஔசேபச்சன் கதைகளில் அவர் யாருக்கும் தண்டனை வாங்கிக் கொடுப்பதில்லை, அப்படிக் கொடுத்தாலும் அவர்கள் அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள். அவர் எடுத்து வைப்பதெல்லாம் கேள்விகள் தான், நிலைத்த சரி தவறு எதுவுமில்லை, எல்லாம் பார்க்கும் பார்வையில் மாறிவிடுகிறது. கடைசியில் ஒரு பெருமூச்சுடன், அறிதலின் பாரத்தின் பொருட்டே அதிகம் குடிக்கிறார். ஔசேபச்சன் கதைகளின் ஒரே இடைஞ்சல் என்று சொல்வதானால் ஆரம்பத்தில் நடக்கும் நீண்ட குடி சம்பாஷனைகள் தான். அதிலும் கணினி யுகத்து ஃபேக் ஐடி போல ஔசேபச்சன் எல்லோரையும் வசைபாடி விடுகிறார், அதில் அவரது சுயசாதி கூடத் தப்புவதில்லை. சில சமயங்களில் அதுவே ஒரு சிறுகதையின் அளவுக்கு
வந்துவிடுகிறது. ஆனால் அதன் பின்னரே மையக் கதைக்குள் நகர்கிறது. இதைத் தவிர்த்துப் பார்த்தால், தமிழ்த் துப்பறியும் புனைவிலக்கியத்துக்கு கிடைத்த மிகச்சிறந்த வரவு ஔசேபச்சன் கதைகள்.

தமிழ் எழுத்தாளர்களில் திருவிதாங்கூர் வரலாறு மற்றும் நாட்டுப்புறக் கதைகள் சார்ந்த சிறுகதைகளை எழுத ஒருவர் உண்டென்றால் அது ஜெயமோகனைத் தவிர வேறு யாராய் இருக்க முடியும்? பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து வந்த வரலாற்றுக் கதைகள் தமிழில் ஆயிரம் இருந்தாலும், ஒரு கட்டத்தில், எம்ஜியார் சிவாஜியின் ராஜா காலப் படங்களை நினைவுறுத்தும்படியான வரலாற்றுப் புனைவுகளையே தமிழில் அதிகம் காண்கிறோம். ஆனால், ஜெயமோகன் எழுதும் திருவிதாங்கூர் சார்ந்த வரலாற்றுக் கதைகளோ முன்னெப்போதும் சுவைத்திராத சுவையில் வருவன. இந்த அறுபத்து ஒன்பது கதைகளில் அப்படிப்பட்ட சில சிறுகதைகள் உண்டு. இந்தக் கதைகள் ஒன்றல்ல. ஆனால், ஒன்றை ஒன்று தொட்டுச் செல்லும் கண்ணுக்குத் தெரியாத நாண், இதன் பின்னணிச் சம்பவங்களை இணைக்கின்றது.

திருவிதாங்கூர் மன்னரான மார்த்தாண்ட வர்மா, தனது அதிகாரத்தைத் தக்க வைக்க, அவரை எதிர்த்த குறுநிலத் தலைவர்களும் திருவிதாங்கூரின் பலம் பொருந்திய கூட்டாகவும் திகழ்ந்த எட்டு வீட்டில் பிள்ளைமார் என்ற எட்டுக் குடும்பங்களை இருநூற்று சொச்சம் ஆண்டுகளுக்கு முன் அழிக்கிறார். ராமனாமடத்தில் பிள்ளை, மார்தாண்ட மடத்தில் பிள்ளை, குளத்தூர் பிள்ளை, கழக்கூட்டத்துப் பிள்ளை , செம்பழஞ்சிப் பிள்ளை, பள்ளிச்சல் பிள்ளை, குடமண் பிள்ளை, வெங்ஙானூர் பிள்ளை ஆகிய எட்டுக் குடும்பங்கள். அதன் ஆண்கள் கொல்லப்படுகிறார்கள். வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு அந்தப் பாவம் தீர அந்த இடத்திலேயே குளங்கள் கட்டப்படுகின்றன. அந்தக் குடும்பங்களின் பெண்கள் சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டு மீனவர்களுக்கும் பிற தேசத்தவருக்கும் அடிமைகளாக விற்கப்பட்டனர். அங்கிருந்து ஒரு புல் பூண்டு கூட மகாராஜாவை எதிர்த்து எதிர்காலத்தில் கிளம்பிவரக் கூடாது என்ற எண்ணத்தில் செய்த அழித்தொழிப்புகள் இவை.

இதன் கசப்புகள் மறையவும், பாவங்கள் நீங்கவுமே மகாராஜா தனது கிரிடத்தைப் பத்மநாபனின் காலடிகளில் வைத்து அவனது தாசனாக அவனது பேரால் திருவிதாங்கூரை ஆளும் வழக்கம் வந்தது. ஆனால் வரலாறு என்பது ஒரு பக்கமான சங்கதிகள் மட்டும் அல்ல. நாணயத்தின் இன்னொரு பக்கம் போல், எந்தக் கோரமான அழித்தொழிப்பில் எட்டுவீட்டில் பிள்ளைமார் குடும்பங்கள் அழிந்ததோ அதை போன்றதொரு கோரமான அரசப் படுகொலைகளை, அதற்கு முன் நிகழ்த்தியது, இதே எட்டுவீட்டில் பிள்ளைமார் கூட்டணியே. மார்த்தாண்ட வர்மாவுக்கு முன்னான காலத்தில் திருவிதாங்கூர் ராஜ்யத்தை நடத்திச் சென்ற உமையம்மை ராணியின் ஆறு புதல்வர்களை, அதாவது பட்டம் தரிக்கத் தயாராயிருந்த ஆறு இளவரசர்களை, துள்ளத் துடிக்க அரசியல் படுகொலை செய்தது அப்போது பலம்பொருந்தியவர்களாக இருந்த எட்டுவீட்டில் பிள்ளைமார் மாடம்பிகளின் கூட்டு. அந்த இரத்தம் அவர்களின் கைகளில் கடைசிவரை இருந்தது.

திருவிதாங்கூர் ராஜ்யத்தின் இன்னொரு இரத்த சரித்திரமானது, அந்த ராஜ்ஜியத்தின் புகழ்பெற்ற / பிரச்சனைக்குரிய தளவாயும் பின்னர் சுதந்திரப் போராட்டத் தியாகி எனப் போற்றப்பட்டவருமான வேலுத்தம்பி தளவாயின் காலத்தில் நடக்கிறது. முதல் சம்பவமானது, நாயர் குலத்தில் பிறந்து நாயர் படைகளின் ஆதரவில் ராஜ்ஜியத்தின் தளவாய் ஆன வேலாயுதன் என்ற வேலுத்தம்பி தளவாய், அதே நாயர் படைகளை இறக்கமின்றி கழுவிலேற்றிக் கொல்வதிலும் யானைகளால் உடலைக் கிழித்து கொல்வதிலும் நடக்கின்றது. இதன் ஆடிப் பிம்பமான எதிர் இரத்த சரித்திரமானது, எந்த பிரிட்டிஷ் படைகளின் துணைகொண்டு இவற்றையெல்லாம் செய்தாரோ, அதே பிரிட்டிஷாரால் வேலுத்தம்பி வேட்டையாடப்பட்டு தற்கொலையில் முடிவதில் இருக்கின்றது. இந்த வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் புனையப்பட்ட கதைகளே ஆயிரம் ஊற்றுக்கள், ஓநாயின் மூக்கு, போழ்வு, இணைவு ஆகியன. இதுபோக, அம்மண்ணின் நாட்டுப்புறக் கதைகளின் பின்னணியில் அமைந்த ராஜன், ஆகாயம், நற்றுணை, முதுநாவல் போன்ற கதைகளையும் இவற்றோடு சேர்க்கலாம்.

ஜெயமோகன் இருபதாண்டுகளுக்கும் மேலாக அரசுத் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் என்று யாவரும் அறிந்திருப்பர். ஆனால், ஆச்சரியகரமாக அவரது கதைகளில் இதுவரை அந்தக் களத்தை பற்றிப் பெரிதாகப் பேசியதில்லை என்ற குறையை இந்தப் புனைவுக் களியாட்டுச் சிறுகதைத் தொடர் மூலம் உடைத்திருக்கிறார். வானில் அலைகின்றன குரல்கள், சுற்றுகள், லூப், குருவி, நகைமுகன், வான்கீழ், வான்நெசவு, உலகெலாம், மலைகளின் உரையாடல் போன்ற கதைகள் இந்தப் பின்னணியில் எழுதப்பட்டவை. சில கதைகள் குமரி மாவட்டப் பின்னணியிலும், சில கதைகள் காசர்கோடு பின்னணியிலும் உள்ளவை. கதையின் காலமானது பெரும்பாலும் எண்பதுகளில் நடப்பவை. அதன் நாயகர்கள் ஒருவரல்லர். அந்த நிறுவனத்தின் பலதரப்பட்ட முகங்களை அவர்களின் அனுபவத்தில் ஏற்பட்ட சிறு உச்சப்புள்ளிகளைப் பதிவு செய்திருப்பதன் மூலம் இந்தத் துறையின் மறக்கப்பட்ட, அல்லது விஞ்ஞான வளர்ச்சியால் அடித்துச் செல்லப்பட்ட இன்னொரு உலகத்தையும் அதன் சமன்பாடுகளையும் நமக்குக் காட்டுகிறார்.

இந்த வரிசையில் அமைந்த அருமையான கதைகளுள் லூப் சிறுகதையும் ஒன்று. ஆரம்பகால தொலைபேசித் தொடர்புத்துறை ஊழியர்கள், முதிர்வுறாத வாடிக்கையாளர்களையும் அபரிமிதமான வேலை அழுத்தங்களையும், தங்களுக்குக் கிடைத்த குறைந்த வசதிகளை வைத்துக் கொண்டு சமாளிப்பதைக் காட்டும் கதையில், மனிதத்தன்மையும் விட்டு போகாமல் ஒரு எளிய மலைப்பாம்பின் பொருட்டு சிந்திக்கும் அழகிய ஒரு நாடகீயத் தருணத்தில் கதை முடியும்போது உச்சம் பெருகிறது. இதே போன்ற களத்தில், எண்பதுகளின் தேர்தலுக்கு முன்னான ஒரு தினத்தில், உச்சபட்ச வேலை அழுத்தத்தில் பணியாற்றும் ஊழியரின் பார்வையில், அழுத்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, இதற்கு மேல் போக ஒன்றும் இல்லை என்ற உச்சப்புள்ளியில் எல்லாமே அணைந்து, ஒரு குளிர்ந்த எரிமலையின் நிசப்தமாய் மாறுவதும், அதன்பின்னுள்ள ஒரு ஆசுவாசமான நகைச்சுவையுடன் முடிவும் வெகு கச்சிதமான வடிவ நேர்த்தி அமைந்த கதை நகைமுகன்.

அடையாளமற்ற உதிரியாய் சமூகத்தில் கரைந்து போக இருந்தவனுக்கு அடையாளமளிக்கும் ஒரு புதுத் துறையானது, என்னவென்றே பலராலும் அறிந்திராத அறிவியலைச் சுமந்து வந்து கொண்டிருக்கும் நவீன உலகின் இராட்சச இரும்புக் கூடாரங்கள், அவன் வணங்கும் மாடனின் விண்முட்டும் பூடமாய் உருவகம் கொள்கிறது வான்கீழ் சிறுகதையில். பின்னர் அதே இரும்பு மாடனே வானத்துக்கான ஏணியாய் மாறி அவனது வாழ்வின் காதலை அவனுக்கு அருளிச் செய்கிறது. இதன் தொடர்ச்சியாக, வாழ்ந்து முடித்த கட்டத்தில் கடந்து வந்த காலங்களையும், நாட்டை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்ற அந்த அறிவியல் மாற்றங்களையும் அசை போட்டபடி, அதே காதல் இணையர் தங்களது காதலின் தொடக்கப் புள்ளியான இரும்புக் கோபுரத்தின் வான் நுனி அனுபவத்தை, மறுபடியும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கத் தேடிச் செல்வது வான்நெசவு கதை.

கலைஞனின் மனம் என்பது சிக்கலான இறுகிய உள்ளடுக்குகளைக் கொண்டது. சகஜமான சராசரி மனிதனின் மன அமைவில் இருந்துகொண்டே கலையின் உச்சத்தைத் தொடமுடியாது என்ற சூத்திரங்களோ கட்டுப்பாடுகளோ இல்லையெனினும், கலையின் உச்சத்தைத் தொடுவதற்கான ஒரு திறவுகோல், சராசரி சகஜத்தன்மையை உதறிய ஒரு கட்டத்தில் வருகிறது. அதனாலோ என்னவோ அதிகலைஞர்களில் பலர் நிலைத்த தன்மையற்ற குறுகிய காலப் பித்துநிலை கைவரப் பெற்றவர்களாக இருக்கின்றனர். இந்தக் கதைத் தொகுதியில், ‘கலைஞன்’ என உபயோகிக்கப்படும் வழக்கமான சட்டகத்தில் இருந்து மாறுபட்டு, வாழ்வின் போக்கில் நம்மிடையே உலவும் சாதாரண மனிதர்கள், கலை என்னும் சன்னதம் புகுந்து உச்சம் பெறும் புள்ளிகளைப் பல கதைகளில் கொண்டு வருகிறார். அந்தப் புள்ளிக்குப் பின், அவர்களது சன்னதம் மறைந்து, மறுபடியும் நம்மை அச்சப்படுத்தாத கைதொடு தூரத்திலான சாதாரண மனிதர்களாகி விடுகின்றனர்.

இறைவன் கதையில், ஒரு சித்திரக்கார ஆசாரிக்கான எந்தவொரு வழக்கமான அடையாளங்களும் அற்றவனாக அறிமுகமாகி, பகவதியின் சித்திரம் வரைய நேரம் எதிர்பார்த்து பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த மாணிக்கம் ஆசாரி, அந்தக் குறிப்பிட்ட கணத்தில், உயிர்ப்புள்ள தெய்வச் சித்திரமாய் பகவதியைச் சுவரில் கொண்டுவரும் இறைவன் ஆகிறான். முன்னிலும் அணுக்கமாய், அன்பான தெய்வ வடிவமாய், எசக்கியம்மைக்கு இந்தப் பகவதி தெரிகிறாள். அதனால் தான், அவனிடம் அவன் பார்த்தேயிராத தனது சிறுவயதில் இறந்து போன மகளின் சித்திரத்தைக் கேட்டு இறைஞ்சுகிறாள். ‘புது ராகம் படைப்பதாலே நானும் இறைவன்தான்’ என்று இசைஞன் சொல்லும் அதே உச்ச மனநிலையிலே மாணிக்கம் ஆசாரி தனது வாக்கை அவளுக்கு அளிக்கிறான், ஏனெனில் அந்தக் கணத்தில் அவனே இறைவன்.

‘வனவாச’த்தில் கூத்தில்லாத நாட்களில் ஆடு மேய்க்கும் சம்சாரியாக வனவாசம் புரியும் தலைவன்கோட்டை சாமியப்பா, கூத்துக் கட்டி அர்ஜூனனாக மேடையேறும் அந்தக் கணத்தில் தனது இன்னொரு கனவு வாழ்க்கையில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுகிறார். இந்தக் கனவை பகிர்ந்து கொள்ளும் அல்லி வேடமிடும் குமரேசனும் இதே போன்றதொரு இரட்டை வாழ்வை வாழ்ந்து, கூத்தின் மூலமே தங்களது மீட்சியை அடைபவர்கள். வாய் பேசமுடியாத சிற்பக் கலைஞனைக் காட்டும் ‘ஆகாயம்’ சிறுகதையில், அவன் கொண்டுவந்த பெயரில்லாத மூர்த்தியைப் பற்றிய தண்டனை விவாதத்தில், அந்த ஊமைக் கலைஞனை, பரந்து விரிந்த இந்த உலகத்தில் நிறைந்திருக்கும் பெயர் தெறியாத தெய்வங்களின் மூர்த்தியைக் கூட மண்ணுக்குக் கொண்டுவரும் பணியின் திறவுகோலாக்கி, சிற்பியின் உன்னதத்தை மிரட்டிச் சொல்கிறார். செய்யும் வேலையைக் கலையாகக் கண்டு, அதற்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்து, அதன் உன்னதத்தைத் தொடமுயலும் கர்மயோகி, அதைத் தொட்ட கணம், தனது மோட்சத்தை அடைகிறான், பரிநிர்வாணத்தை ஒரு வலிய கடுத்தாப் புலியாக வந்து அருளும் தெய்வம், ஆட்கொள்ளுவது ஒரு சாராயம் காய்ச்சும் கலைஞனை.

தேவி கதையும் நிகழ்வாழ்வில் சாதாரணமாக இருந்து நாடக மேடையில் உச்சம் பெறும் ஒரு நடிகையைப் பற்றி பேசுகிறது. பிடி கதையில் பாடலும் வாழ்வுமாக திருவாரூர் தேர் போல பிரமாண்டமாக வாழும் கர்னாடக சங்கீதப் பாடகர் ராமையாவின் ஒருநாளைப் பேசுகிறது. கச்சேரிக்கு அடுத்த நாளில் ஊரெல்லாம் பவனி வந்து எல்லோருக்கும் பாடல் பாடி மகிழ்விக்கும் அவர், தனது கச்சேரியைத் தவறவிட்ட எளிய ரசிகையின் வீடுதேடிச் சென்று பாடிக்காட்டும் போது தெய்வமே தன் வீடு வந்து அணுகிரகிக்கும் அருளென பொசிந்து அழுகிறார் அவ்வீட்டுக் கிழவர். வாழ்வெல்லாம் நகைப் பட்டறையிலேயே வாழ்ந்து அதிலேயே தனது ஜென்மக் கடனைத் தீர்க்கும் ஆசாரியின் பாடலே இல்லாத பாடலின் ரசனையை பேசும் தேனீயில், ஒரு உன்னத ரசிகன் ஒரே ஒரு பாடலின் வழி கலையைத் தனதாக்கிக் கொள்கிறான். இந்தக் கதைகள் எல்லாம் கலையின், கலைஞனின் வெவ்வேறான பரிமாணங்களை, உன்னதத்தைப் பேசி ஓர் உச்ச நிகழ்வில் முடிகின்றன.

ஜெயமோகனின் ஆன்மீக குருவான நித்ய சைதன்ய யதி இதுவரையிலான அவரது கதைகளில் எங்கும் பெரிதாக வந்ததாகத் தெரியவில்லை. முதன்முதலாக இந்தக் கதைத் தொகுதியில் தான் வருகிறார். அதுபோக ஞானம், தேடல், அது சார்ந்த அகவெளிப் பயணம் ஆகியவற்றை மையப்படுத்திய கணிசமான கதைகள் இதில் உண்டு. கரு, சிவம், கூடு, காக்காய்ப் பொன், நிழல்காகம், முதுநாவல் கதைகளை இந்த வகைமையில் கொண்டுவரலாம். அதுசார்ந்த தேடல் உள்ளவர்களுக்கும் இரசனை கொண்டவர்களுக்கும் இந்தக் கதைகள் புதுவிதமான அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கும்.

இது தவிர இன்னும் பல வித்தியாசமான கரு மற்றும் தளங்களில் பயணிக்கும் கதைகளும் உண்டு. விதவிதமான திருடர்களும் அவர்தம் தொழில் நுணுக்கங்களுடன் வரும் எழுகதிர், கரவு, முத்தங்கள், பிறசண்டு போன்ற கதைகளும் உண்டு. அனுபவங்களைத் தேடிச் செல்பவர்களைக்
கொண்ட அனலுக்கு மேல், விலங்கு, ஆடகம், அங்கி போன்ற கதைகள். இந்தக் கட்டுக்குள் எதிலும் வராத, இந்தத் தொகுதியின் சிறந்த கதைகளான பொலிவதும் கலைவதும், பலிக்கல் போன்ற கதைகளும் உண்டு. இதுபோக ஒரு குறுநாவலை மூன்று தொடர்புள்ள சிறுகதைகளாகப் பிரித்தது போல் இருக்கும் யாதேவி, சர்வஃபூதேஷு, சக்திரூபனே கதைகள்.

இளம் எழுத்தாளர்களே வருடத்திற்கு பத்து இருபது சிறுகதைகளுக்கு வருந்தி உழைக்கும் போது, தினம் ஒரு சிறுகதையென அறுபத்து ஒன்பது சிறுகதைகளை எழுதுவதென்பது அசாத்தியமான விஷயம். அந்த எல்லாக் கதைகளிலும் உச்சபட்ச இலக்கியத்திற்குச் சாத்தியமிருக்காவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு பதினைந்து கதைகள் காலத்தை மீறி நிற்கும். தமிழின் உச்ச சிறுகதை இலக்கியமாக பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால் இத்தனை கதைகளில் குறைகள் எனப் பார்த்தால் சிலவற்றைச் சொல்லலாம். நிறைய கதைகள் சிறுகதைக்கான வடிவ ஒருங்கு பற்றியதான எந்தவிதமான பாவனைகளும் இன்றி கட்டற்று மீறிச் செல்வது ஜெயமோகன் போன்ற மாஸ்டர்களுக்கு கைவரப் பெற்றதுதான். அதன் சரியான இரசாயன கலவை கூடி வரும்போது உன்னதமான இலக்கியமாகவும், மற்ற நேரங்களில் அதன் குறைகளுடனான ஒரு படைப்பாகவும் ஆகி விடுகிறது.

ஆயிரம் ஊற்றுக்கள் போன்ற ஒரு படைப்பில் வடிவ ஒருங்கு அமைந்து சிலபல திருத்தல்களுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தால் அதன் பிரமாதமான கருவுக்கும், தளத்திற்கும், உச்சமான கவித்துவ முடிவுக்கும், அது இன்னும் ஒரு சிறந்த படைப்பாகியிருக்கும். இதையே கைமுக்கு கதைக்கும் சொல்லலாம். அடுத்ததாக, சில படைப்புகளில் வரும் மிக நீண்ட வர்ணிப்புகளும் அதீதமான முன் உரையாடல்களும் கதையைத் தொடங்கும் புள்ளியைத் தாமதமாக்கி சிறு அயர்ச்சியைக் கொடுக்கிறது. இந்தத் தொகுதியில் பலவீனமான கதைகள் என்று சொல்வதனால் நவீன கால இளைஞர்களின் மனதைப் பற்றிய ஆழி, நஞ்சு, சீட்டு போன்ற கதைகளைச் சொல்லலாம். நவீன இளைஞர்கள் மனதைப் பற்றி சமகால இளைய தலைமுறை எழுத்தாளர்கள் வேறு தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் போது, இளைய மனதைப் பெரிதும் நெருங்க முடியாத இக்கதைகளின் போதாமை, இவற்றைக் கீழிழுப்பது உண்மை.

இவற்றையெல்லாம் மீறித் தான் இந்தப் புனைவுக் களியாட்டுச் சிறுகதைகள், அதன் பரந்த தளங்கள், பரிசோதனைகள், வித்தியாசமான வாழ்வனுபவங்கள், சில்லிடும் மேஜிக்கல் ரியலிச கதைகள், பெரும்பாலான கதைகள் அளிக்கும் வாசிப்பின்பம் போன்றவற்றால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் புனைவுக் களியாட்டுச் சிறுகதைகளில் பிரமாதமான கதைகள் என்று பின்வருவனவற்றைச் சொல்லலாம்.

  1. பத்து இலட்சம் காலடிகள்
  2. ஓநாயின் மூக்கு
  3. பொலிவதும் கலைவதும்
  4. போழ்வு
  5. மதுரம்
  6. மாயப்பொன்
  7. ராஜன்
  8. கைமுக்கு
  9. பலிக்கல்
  10. முத்தங்கள்
  11. நற்றுணை
  12. வனவாசம்
  13. மொழி
  14. தேனீ
  15. ஆயிரம் ஊற்றுக்கள்
  16. இறைவன்
  17. அனலுக்குமேல்
  18. பூனை
  19. லூப்

*

அனந்தன் கதைகளைத் தனித்தொகுப்பாகக் கொண்டுவந்தால் சிறந்த வாசிப்பின்பம் அளிக்கக் கூடிய படைப்பாக இருக்கும். ஔசேபச்சன் கதைகள் தமிழில் இதுவரை வந்துகொண்டிருந்த துப்பறியும் கதைகளை ஒரு திருப்பத்திற்கு உட்படுத்தி இலக்கிய அந்தஸ்து கோரும் படைப்பாக மாறி விடுகிறது. இன்னும் பல ஔசேபச்சன் கதைகளை வேண்டி நிற்கும் தீவிர இரசிகர்களைக் கொண்ட இந்தக் கதைத்தளம், தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது சினிமா, வெப் சீரிஸ் போன்ற பிற கலை வடிவங்களிலும் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்த போகின்றது என்று கவனிக்க வேண்டும். திருவிதாங்கூர் வரலாறைத் தமிழில் படிக்கக்கூடிய வாய்ப்பாக அமைந்த சிறுகதைளைப் போன்று, தமிழகத்தின் மற்ற பகுதிகளின் பேசப்படாத வரலாற்றுப் பகுதிகளை புனைவில் கொண்டு வருவதில் ஒரு புது அலையைக் கொண்டுவரலாம். மொத்ததில், தமிழ் இலக்கியத்திற்கு, இது பெருவரவான ஒரு காலகட்டம்.

 

http://tamizhini.co.in/2020/06/16/ஜெயமோகனின்-கதைத்-திருவிழ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்ச்சுழலின் பாதை

ஜெ

இலக்கியத்தின் மகத்தான பணியாக வாழ்க்கைக்குத் தேவையான தன்னறத்தைப் போதித்தலை ஜெயமோகன் மீள மீளக் குறிப்பிட்டிருக்கின்றார். உலகின் சரிபாதி மக்கள் தத்தம் இல்லங்களில் உறைந்து இயல்பு வாழ்வு கெட்டு இருக்கும் கொரோனா காலத்துச் சூழலில் வாழ்வு மீதான நம்பிக்கையையும் அறத்தையும் வலியுறுத்துவது இலக்கியம் ஆற்ற வேண்டிய மிக முக்கியமான பணியாக இருக்கிறது. அத்தகைய சூழலில் ஜெயமோகன் நாள்தோறும் ஒரு சிறுகதையாக 69 கதைகளைப் புனைவு களியாட்டெனத் தம் தளத்தில் பதிவேற்றிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு சிறுகதையும் தம்மளவில் பல கண்ணிகளையும் வாசகர்களுக்குப் பெரும் அறிவுழைப்பின் வாயிலாகப் புரிந்து கொள்ளக் கூடியதுமான தன்மையையும் கொண்டிருந்தன.

எண்ணற்ற திறப்புகளையும் சாத்தியங்களையும் வாசகனுக்கு அளிக்கும் அம்சத்தையே இச்சிறுகதைகளின் பொது அம்சமாகக் காண்கிறேன். ஜெயமோகனே பலமுறை குறிப்பிட்டிருப்பதைப் போன்று வைரத்தின் முடிவற்றப் பக்கங்களை உருட்டிப் பார்ப்பதைப் போன்றுதான் இச்சிறுகதைகளின் வாசிப்பு அனுபவம் அமைந்திருந்தது. ஜெயமோகனின் சிறுகதைகள் அளவில் நீண்டவையாகவும் குறுநாவல் வடிவத்திலும் கூட அமைந்திருந்தது. ஒவ்வொரு சிறுகதையும் தன்னளவில் ஒரு நீர்ச்சுழலைப் போன்று இருந்தது. முதல் பத்து வரிகளிலே நாம் அடையும் அந்நிய நிலம் மீதான சித்திரிப்பும் உரையாடலும் ஒரு வகையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தக் கூடியன. அந்தக் கதைகளை இன்னும் வாசித்து உள்நுழைகிற போது அந்தச் சுழல் நம்மை அறியாத நிலங்களில் புதிய மனிதர்களின் முன் புதிய அனுபவங்களை வாழச்செய்து சுழலிலே விட்டுச் செல்லும் மாயத்தை ஏற்படுத்துகின்றன.

தமிழ்ப் புனைவுச் சூழலில் ஒருசில கதைமாந்தர்கள் மிகவும் அறியப் பெற்றவர்களாக இருப்பார்கள். எழுத்தாளர்கள் ஒருகதையில் தனித்த பாத்திரப்படைப்புடன் நிறுவுகிற பாத்திரங்கள் தொடர்ந்து பல புனைவுகளில் வந்து கொண்டே இருப்பார்கள். அவர்களின் மூலப்பாத்திர வார்ப்பு மேம்பட்ட படியே செல்லும். சுஜாதா கதைகளில் வசந்த் நாஞ்சில் நாடன் புனைவுகளில் கும்பமுனி போன்ற பாத்திரங்களைச் சான்றாக முன்வைக்கலாம். அதைப் போன்றே ஜெயமோகன் எழுதியக் கதைகளில் சில பாத்திரங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. இந்தக் கதைகள் நிகழும் களங்கள் அதன் உரையாடல் தளம் ஆகியவை ஜெயமோகனின் வாழ்வுக்கு நெருக்கமானதாக இருந்ததை அவரின் முந்தைய கதைகளையும் கட்டுரைகளையும் வாசித்தவர்களால் அறிய இயலும். கதை நிகழும் இடங்கள் அல்லது களங்கள் என்பது குமரி மாவட்டம், தென் திருவிதாங்கூர் (கேரள மாநிலத்தின் தென்பகுதி), கேரளா, திபெத் ஒட்டிய இமையமலைப்பகுதி என விரிந்திருந்தது. இளம் வயது ஜெயமோகனின் பார்வையிலும் அவரின் தொலைத்தொடர்பு பணியிலிருந்த போதிலான கதைகள், இந்திய மெய்யியல் தளத்தில் நிகழ்கின்ற கதைகள், கேரளாவின் வரலாற்றுக் கதைகள் என்ற அடிப்படையிலே அமைந்திருந்தன. இந்தக் கதைகளில் பெரும்பாலானவற்றில் தம் துறையில் உச்சம் தொட்ட அல்லது தனித்துவம் வாய்ந்த கலைஞனொருவனைப் பற்றியதாக இருந்தது. இந்த உச்சம் எய்துதல் என்பது பயின்று வரக்கூடியது மட்டுமின்றி பிறவியிலே கைக்கூடியதாகவும் அமைந்தது.

குமரி மாவட்ட மக்களின் நகைச்சுவை என்பது ஜெயமோகன் சிறுகதை மாந்தர்களின் உரையாடலில் எப்பொழுதும் உள்ளிழையாக இருக்கும். இந்தத் தொடர் கதை வரிசையில் வந்த ‘ஆனையில்லா‘ எனும் கதை தமிழில் வெளிவந்திருக்கும் மிகச்சிறந்த பகடிக்கதைகளில் ஒன்று எனக் குறிப்பிடலாம். பொதுவாகவே, தமிழில் வெளிவரும் சிறுகதைகளில் நகைச்சுவை அம்சம் என்பது உரையாடலில் கதைமாந்தர்களின் செயலில் ஆங்காங்கே இருக்கும். சிறுகதைகளின் குறுகிய வடிவத்தாலும் கூறுமுறையாலும் நகைச்சுவை என்பது முக்கியமில்லாததாகக் கருதப்பட்டிருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். பகடிக்கதைகளுக்கும் நகைச்சுவைக் கதைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் உள்ளன. நகைச்சுவை கதைகள் பொழுதுபோக்கு வாசகர்களுக்கானவை. பல உள்ளடுக்குகளைக் கொண்ட பகடிக்கதைகளில் வாழ்வு குறித்து மற்றுமொரு உணர்வுத்தளமும் அதன் அடிநாதமாக இயங்கும்.

‘ஆனையில்லா’ கதையில் யானை ஒன்று வாசல் நிலைப்படியில் சிக்கிக் கொள்கிறது. அதன் பெருத்த உருவத்தால் வாசலிலிருந்து வெளிவர இயலாமல் திமிறிக் கொண்டிருக்கிறது. அந்த ஊரில் இருப்போர் ஒவ்வொருவரும் அதனை வெளிக்கொணர ஒவ்வொரு யோசனைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். வாழைப்பழத்தையும் கருப்பட்டியையும் காட்டி வெளியேற்றுவது, உடல் முழுதும் கீரிஸ் தடவி உடலை பிதுக்கி எடுப்பது என அத்தனையுமே தோல்வியுறுகின்றன. இறுதியாக, மாந்திரீகம் செய்யும் கடுவா மூப்பில் எனும் சிண்டன் காணி அழைத்து வரப்படுகிறார். யானைக்கு அருகில் சென்று கெஞ்சுவது போலவும், ஆணையிடுவது போலவும் மந்திரம் சொல்வதைப் போலவும் சொல்லிக் கொண்டிருக்கிறார். மெல்ல உடல் தாழ்த்தித் தவழ்ந்து பின்னகர்ந்து வாசலிலிருந்து வெளிவருகிறது. யானையை அப்படிச் சிறிதாக்கிய மாயத்தைச் சொல்லும் போது குட்டி யானைகளை அழைப்பதைப் போல அதனை சிண்டன் காணி அழைத்ததும் யானை தன்னைக் குட்டி யானையாகக் கற்பனை செய்து கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியது எனத் தெரிய வருகிறது. அந்த இடமே இந்தக் கதையை மிகச்சிறந்த பகடிக் கதையாக ஆக்குகிறது. வாழ்வில் நேரும் இடர்களைத் தத்தம் தர்க்கத்தால் மண்டையை உடைத்துக் கொண்டு இருக்கும் சூழலில் அதற்கான தீர்வு என்பது மெல்ல அதனைச் சிறியதாக்கிக் கற்பனையால் இல்லாமல் கூட ஆக்கலாம் எனும் படிமத்தை அளிக்கிறது. இந்த வரிசையில் ‘பிறசண்டு‘, ‘வருக்கை‘ ஆகிய கதைகளும் மெல்லிய பகடியும் நகைச்சுவையும் இழையோடும் படைப்புகளாகத் திகழ்ந்தன.

வீட்டிற்குத் திருட வந்த திருடனை அடையாளம் காட்டச் செல்கிறார் வயது முதிர்ந்து நரம்பு தளர்வுற்றவரான சிரோமணி. நேர்மையாக இருந்ததினாலே வேலை இழந்து சிறை சென்ற சிரோமணியைப் பாட்டா என்றழைத்துத் தன்னைக் காட்டிவிட வேண்டாம் எனக் கெஞ்சுகிறான் திருடன். அவனைக் காட்டிக் கொடுக்காமல் ‘அடிக்கடி வீட்டுக்கு வாடே’ எனச் சொல்கிறார். அந்த இறுதி வரி புன்னகையை அளிக்கிறது. வாழ்வு முழுதும் இருந்த இறுக்கம் தளர்ந்து அன்பு ஒளிரும் தருணம் அந்தப் புன்னகை எழுகிறது.

ஜெயமோகன் சிறுகதைகளில் இந்து, கிருஸ்துவ மெய்யியல் குறித்த கதைகள் முன்னரே நிறைய வந்திருக்கின்றன. இந்தத் தொடர் கதைகளில் பெளத்த மெய்ஞான மரபு குறித்து வெளிவந்த ‘கூடு‘ எனும் கதையும் என்னளவில் மிகமுக்கியமான கதையாக இருக்கிறது. நித்ய சைதன்யதியின் குருகுலத்தில் இருக்கும் சுவாமி முக்தானந்தா தனது தொடக்கக் காலத்தின் அலைவில் கண்டதாகச் சொல்லும் கதையே சிறுகதையாகிறது. நில்லாமல் அலைவது பின்னர் நிலைகொள்வதுமாக ஒவ்வொரு மரபிலும் இருக்கும் வாழ்வைத் துறந்தவர்களின் கதையைப் பற்றிப் பேசும் போது அந்தக் கதையைச் சொல்கிறார். திபெத்திய பெளத்த ஞானத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டினால் இமயமலை முழுதும் அமைந்திருக்கும் மடாலயங்களுக்குச் சென்று கொண்டிருந்தார். நான்கு மாதங்கள் மட்டுமே நீடிக்கிறது கோடைக்காலம். உறைந்தது போன்ற இமயமலைப் பகுதிகளில் மிகப்பெரும் மடாலயங்கள் அமைந்திருப்பது அவருக்கு வியப்பை அளிக்கிறது. ஒரு சாகசப் பயணிக்குரிய மனநிலையில் அங்கு கைவிடப்பட்டு இருக்கும் பெரும் மடாலயங்களைக் காணப் பயணம் செய்கிறார் சுவாமி முக்தானந்தா. முதலில் ஸ்பிடுக் கோம்பா எனும் மடத்தில் சில நாட்கள் தங்கியிருக்கிறார். அங்கிருந்து பியாங் கோம்பா எனும் மடத்திற்குச் செல்கிறார். புழுதி நிறைந்த செங்குத்தான மலைப்பகுதியில் கழுதையுடன் ஏறி அங்குச் சென்று அடைகிறார். மிகக்குறைவான மக்கள்தொகை கொண்ட ஊர்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய மடாலயங்கள் என்ற கேள்விக்கு இவை மக்களுக்குரியன அல்ல துறவிகளுக்கு உரியன; கூட்டுப்புழுக்களுக்குக் கூடு போல என்கிறார் ஊரில் இருக்கும் ஊர்த்தலைவர். அங்கிருந்து மீண்டும் உம்லா எனும் பெரிய மடாலயத்தைக் காணப் பயணம் செய்கிறார். எட்டடுக்கு மடாலயத்தில் ஒரே ஒரு புத்தபிட்சு இருக்கிறார். 16 ஆம் நூற்றாண்டில் அந்த மடாலயத்தை எழுப்பிய நோர்பு திரக்பா பற்றி இருவரும் உரையாடி கொள்கின்றனர். அங்கிருக்கும் இருக்கைகள், படுக்கைகள், அறைகள் அத்தனையுமே மிகப்பெரியவையாக இருக்கின்றன. தொடர்ந்து, அதனைப் பெரிதாக்கிக் கொண்டே இருந்திருக்கிறார் நோர்பு திரக்பா. உடலில் தளர்வு ஏற்படத் தொடங்கியவுடன் மெல்ல உள்ளொடுங்க தொடங்கியிருக்கிறார். பெரிய அறைகளிலிருந்து சிறிய அறைகளுக்குச் செல்வது, உணவைக் குறைத்துக் கொள்வது, பேச்சை நிறுத்திக் கொள்வது என மெல்ல உள்ளொடுங்கிக் கொண்டே இருக்கிறார். இறுதியாக, கருவில் இருக்கும் குழந்தையைப் போல உள்ளொடுங்கிக் கூடையொன்றுக்குள் இருள் சூழ் அறையில் இருந்திருக்கிறார். அவர் மரணமடைந்தவுடன் அவரது உடலை மடத்திற்கு மேலிருந்த குறுகிய குகையினுள் வைத்திருந்தனர் என அங்கிருந்தப் புத்தபிட்சு குறிப்பிடுகிறார். அவரை இங்கு வரத் தூண்டியது  இங்கிருக்கும் மலைமுகட்டின் வான்வெளியில் நோர்பு திரக்பாவைக் கண்டதாக ஒருவர் எழுதிய குறிப்பு. அந்தப் புத்தபிட்சுவிடம் நீங்கள் அவரைப் பார்த்தீர்களா என்ற கேள்விக்கு நீண்ட மெளனத்தையே சுவாமி முக்தானந்தா பெறுகிறார். இந்தக் கதையில் இயற்கையுடனான திமிறல்தான் துறவிகள் நிகழ்த்தும் நில்லாத அலைபாய்தலும் நிலையில்லாமையும் என வகுக்க முடிகிறது. எதையோ எண்ணி அலைபாய்கின்ற அனைவருமே இவ்வாறு இயற்கையுடன் திமிறி பேருரு கொள்ளவே முயல்கின்றனர். ஆனால், உள்ளொடுங்கிக் கருக்குழவியாகும் தருணம் அந்த மாபெரும் இயற்கையில் நம் மெய்யான இடம் துலங்கி வரும் இடம். கூடு உறைதல், கூடு நீங்குதல், கூட்டில் உள்ளொடுங்குதலான புத்தபிட்சுக்களின் வாழ்வு பிரமிக்க வைக்கிறது. நாம் சுழற்றாமலே அறச்சக்கரங்கள் சுழலும், ஒத்திசைவும் நெறியும் தன்னிடத்தே கொண்டது எனும் போது ஏற்படுகிற வெறுமைதான் உள்ளொடுங்கும் நிலை. அந்த முற்றொடுங்குதல்தான் ஏதேனும் வகையில் அவர்களை இவ்வுலகில் பேருரு கொள்ளச் செய்கிறது. எத்தனையோ இறப்புகளைக் கண்டப்பின்னரும் மீள் வாழ்வு மீதான மனிதர்களின் நம்பிக்கை உயிர்த்தெழலைப் போன்றே இருக்கிறது.

கிருஸ்துவ மெய்யியலான உயிர்த்தெழல் குறித்து எழுதப்பட்ட ‘லாசர்‘ கதையும் சிறந்த அனுபவத்தை அளித்தது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருநெல்வேலியில் இருக்கும் ராபர்ட் கால்டுவெலின் பொன்னிறமான கடிகாரத்தைக் கண்டெடுக்கும் இரு சிறுவர்கள் அதை வண்டென எண்ணி மண்ணுக்குள்ளும் குடுவைக்குள்ளும் பொத்தி வைத்திருக்கின்றனர்.  அதில் லாசர் எனும் சிறுவனின் தங்கை இறந்துவிடுகிறாள். பெருந்துன்பம் அடைகிறான் லாசர். அதன் பின் செத்துப் போனதாக எண்ணி கடிகாரத்தைக் கால்டுவெலிடம் கொடுக்கிறான். பெருஞ்சோர்வும் துன்பமும் அப்பியிருக்கும் லாசர் முன் கடிகாரத்தைச் சொடுக்கி உயிர்த்தெழ வைப்பதாய்க் கதை முடியும். அத்தருணத்தில் உயிர்த்தெழுவது லாசர்தான். இயேசு உயிர்ப்பித்ததாகப் பைபிளில் குறிப்பிடப்படும் லாசரின் கதையின் நீட்சியே இக்கதை. மனித வாழ்வின் பெரும் விந்தைகளில் ஒன்று மரணம். காலந்தோறும் உற்றாரின் உயிர்ப்பிரிவுகள், நிலையில்லாத வாழ்வு எனத் தெரிந்தே வாழ்க்கையில் மனிதர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அத்தகையச் சூழலில் உற்றார் ஒருவரின் இழப்பிலிருந்து மீள்வது என்பது இன்னொரு வகையான உயிர்த்தெழுதல்தான். அந்த உயிர்த்தெழும் தருணம்தான் இந்தக் கதையில் வெளிப்பட்டிருக்கிறது.

ஜெயமோகனின் கதைகளில் யட்சியர்கள், நீலிகள் குறித்த சித்திரிப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இவ்வகையான கதைகளை மேஜிக்கல் ரியலிச கதைகளாக வரையறுக்கலாம். இந்து மரபில் இஷ்டதேவதைகள் உடன் இருந்து ஒருவரை வழிநடத்துகிறது எனும் நம்பிக்கை இருக்கிறது. அத்தகைய நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதைதான் ‘நற்றுணை‘. ஜெயமோகனின் ‘நூறுநாற்காலிகள்’ சிறுகதையை வாசித்து அடைந்த அலைகழிப்பு இந்தக் கதையின் மூலமும் நிகழ்ந்தது. இன்றைக்குப் பெண்கள் பெற்றிருக்கும் கல்வி, பொருளாதாரம், குடும்பம் ஆகிய தற்சார்பு நிலைக்கு எதையெல்லாம் உடைத்து வரவேண்டியிருந்தது என்பதை உணர்த்தும் கதையாக அமைந்திருந்தது. பழைய தென் கேரளா இன்றைய கன்னியகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கி திருவிதாங்கூர் சமஸ்தானம் என அறியப்பட்டது. கடுமையான பெண் ஒடுக்குதல்களும் தீண்டாமை மரபுகளும் கடைபிடிக்கப்பட்ட இறுக்கமான அரசு அங்கிருந்தது. அந்த ஒடுக்குமுறைகளைத் தாண்டி திருவிதாங்கூரிலிருந்து இரண்டாவது பெண்ணாகக் கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற்று இந்தியாவின் இரண்டாம் பெண் நீதிபதியாகவும் பணியாற்றிய அம்மிணி தங்கச்சியின் நினைவுப் பதிவுகளாகவும் உரையாடலாகவும் அவரை நேர்காணும் பெண்ணின் குரலாகவும் கதை அமைந்திருக்கிறது. நாயர் குடும்பத்துப் பெண்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாக இருந்தனர். நாயர் குடும்பங்களில் இருந்த கற்றப் பெண்களை வேற்றுச் சாதியினர் கடத்திக் கொண்டு மணம் புரிவதால் நிகழும் சாதிசார்ந்த ஏற்பும் உரிமையும் போரையும் தடுக்கவே பெண்களுக்கான கல்வி உரிமை மறுக்கப்பட்டது. அம்மாதிரியான ஆசாரங்களைக் கடைபிடிக்கும் குடும்பத்தில் பிறந்த அம்மிணி தங்கச்சி தங்கள் வீட்டில் குடும்பத்துக்கு வழிகாட்டியாக இருந்துவந்த கேசினி எனும் யட்சியைத் தன்னுள் இறுத்திக் கொள்கிறார். அம்மிணி தங்கச்சி வரித்துக் கொண்ட அந்த நற்றுணை சூழ இருக்கும் அத்தனை தடைகளையும் தகர்க்கச் செய்கிறது. கேசினியாகவே உருமாறி தன் மாமன் நாகத்தான் நாயரையும் கொன்று போடுகிறது. வெறி வந்தவள் போல படிக்கிறார் அம்மிணி. நகரில் கிருஸ்துவ மிஷின் பள்ளியில் படிக்கச் செல்கிறார். வீட்டிலிருந்து மிதிவண்டியால் பள்ளிக்குச் செல்கிறார். அவரின் வண்டி முன்னால் முட்களை இடுகின்றனர். அத்தனையும் மீறி படித்துக் கல்லூரிக்குச் செல்லும் போது அங்கேயும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பெண் கல்வியை ஏற்றுக் கொண்ட வெள்ளையர்கள் கூட பெண்களைக் கல்லூரிக்கு அனுப்பும் வழக்கத்தைக் கேலி செய்கின்றனர். மகாராணியின் பரிந்துரையின் பேரில் கல்லூரிக்குச் சென்று பயின்று மெட்ராஸ் பல்கலைக்கழகத்திலும் பயின்று பட்டம் பெற கவர்னர் வரை சென்று முறையிட்டுப் பெறுகிறார். அதன் பின் சென்னை சட்டக்கல்லூரியில் பயிலவும் வழக்குத் தொடுத்து வெல்கிறார். பார் கவுன்சிலில் சேர்வதற்கும் சட்டப்போராட்டத்தை நடத்தி வெற்றிக் கண்டு நீதிபதியாகப் பணியாற்றி ஒய்வு பெற்று மகளிர் கமிசனிலும் பணியாற்றி முதுமையால் தளர்வுறுவது வரை நற்றுணையாகக் கேசினி உடன்வருகிறாள். யட்சிகள் அல்லது நற்றுணை என்பது ஒரு கற்பனையாகக் கூட இருக்கலாம். ஆனால், பெண்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உயிராற்றலின் வடிவாகவே யட்சியைக் காண்கிறேன். “படி… படித்துக்கொண்டே இரு… யாரும் உன்னை தடுக்கமுடியாது… தடுத்தவர்கள் அழிவார்கள்… அது இந்த இருட்டறைகளில் வாழ்ந்து செத்த உன் மூத்தம்மைகளின் கோபம்… நீ போய்க்கொண்டே இரு… எங்கேயும் நின்றுவிடாதே” என வரும் சிறுகதையின் வரியே மரபின் பெயரால் பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த விலங்குகளை மரபைக் கொண்டே கூர்த்தீட்டி உடைத்தெரிந்ததைப் போன்றே அமைந்திருந்தது யட்சிகளின் கருத்துரு என்பதற்குச் சான்றாகும்.

இந்தப் புனைவுக்களியாட்ட வரிசையில் ‘கரு‘ எனும் குறுநாவலும் என்னை மிகவும் கவர்ந்தது. இந்தக் கதையின் வாசிப்பனுபவம் நம் கனவையும் தொற்றிக் கொள்ளும் அளவு வீரியமிக்கதாக அமைந்திருந்தது. இதுவும் திபெத்தின் இமயமலைச் சரிவுக்குள்  நடக்கும் கதைதான். விடுதலைக்கு முந்தைய இந்தியா பல மர்மங்களையும் சாகச அனுபவங்களையும் அளிக்கும் நிலமாக மேற்கத்திய நாட்டவர்களால் பார்க்கப்பட்டது. இந்திய தாந்த்ரீக மரபு, பெளத்த மரபு ஆகியவை மேற்கத்திய நாட்டவர்களை இந்தியாவுக்கு வரச்செய்து அலையச் செய்து கொண்டிருந்தது. அவ்வாறாகத் திபெத்தில் இருக்கும் ஞானியானவர்களும் மெய்மை அடைந்தவர்களும் உறையும் ஷம்பாலா எனும் ஒளிநகரைக் காண அனைவரும் வருகின்றனர். சுவாமி முக்தானந்தர் இமயமலையில் தான் சந்தித்த ஆடம் எனும் இராணுவ வீரர் ஒருவர் கூறும் கதையாகத் தொடங்குகிறது. ஷம்பாலாவைக் கண்டு கிருஸ்துவ மதத்தையும் பரப்ப எண்ணும் அன்னி எனும் வெள்ளைக்காரப் பெண் தன்னுடைய திபெத் பயணத்தில் தங்களுடைய மகன் சார்லஸ் மேலே இருக்கிறார் என உயிர் துறக்கும் முன் சொல்லும் துறவியின் சொற்களைக் கேட்டுத் திகைப்படைகிறார். அவரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விசையே ஆடமையும் திபெத் நகருக்குச் செல்லத் தூண்டுகிறது. அன்னிக்கும் முன்னால் அங்கு வந்து பாதி வழியிலே கீழிறங்கி சென்ற சூசான்னா என்பவரது மகன்தான் சார்லஸ் என்பவதைத் தெரிந்து கொள்கிறார். சூசான்னாவின் கதையை இன்னொருவர் சொல்லத் தொடங்குகிறார். கிருஸ்துவ மெய்செய்திகளைப் பரப்ப எண்ணும் சூசான்னா பெட்ரூஸ் எனும் சாகச வெறியும் பெண் பித்தும் நிறைந்தவரைத் திருமணம் செய்கிறார். அவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தையே சார்லஸ். ஒரு வயது மட்டுமேயான சார்லஸையும் அழைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் களவு தொழில் செய்யும் திருட்டுக் கும்பல் வழிகாட்ட மலையேறி செல்கின்றனர். வழியிலே திருட்டுக் கும்பல் அவர்களைக் கைவிட்டுச் செல்கிறது. குளிரின் அழுத்தம் மேலிட பனிப்பொறுக்குகளின் மீது மிகவும் கடினமான வழித்தடத்தில் செல்கின்ற போது குழந்தை மூர்ச்சையாகிறது, அந்தக் குழந்தை இறந்ததாக எண்ணி பனியில் புதைத்து விட்டுச் செல்கின்றனர். அந்தக் குழந்தையை இன்னொரு திருடன் கண்டெடுக்கிறான். ஆனால், அவனைக் கைவிட்டுச் செல்கிறான். அந்தப் பனிமலையில் வழிதவறிய சூசான்னாவுக்கு ஒரு வெள்ளைக்கார இளைஞன் வழிகாட்டுகிறான். அவருக்குப் பின்னால் நிறையப் பேர் அந்த வெள்ளைக்கார இளைஞனால் வழிகாட்டப்பட்டு மீண்டிருக்கின்றனர். இந்தக் கதைகளைக் கூறிக் கொண்டு வரும் ஆடமும் ஒருநாள் அந்த இளைஞனால் வழிநடத்தப்பட்டுப் பயணத்தைத் தொடர்கிறான். இந்தக் கதை மேலை மனதையும் கீழைத்தேயத்து மனதையும் இணைத்த ஆன்மீகச் சரடொன்றைக் குறித்துப் பேசுகிறது. சாகசங்களை நிகழ்த்திப் பார்ப்பதில் மேலைநாட்டினருக்கு இயல்பாக எழுந்துவரும் ஆர்வமும் கீழைத்தேயத்து மக்களின் மனத்தில் உள்ளொடுங்கிச் சென்று அல்லது அகவெளிப்பயணம் மூலம் ஆன்மீக அனுபவத்தை அடையும் முரணையும் குறிப்பிடுகிறது. இவ்வாறான ஆன்மீகத்தேடலில் உலகம் முழுவதும் அலைபவர்கள் காணும் விந்தைகளும் அபூர்வங்களும் எங்கிருந்து வருகின்றன என்ற தத்துவக் கேள்வி இவ்விரண்டு மரபுகளையும் ஒன்றிணைக்கிறது. இந்த மெய்யியல் தளத்தை ஒட்டிய கதைகளாகவே ‘சிவம்‘, ‘பலிக்கல்‘, ‘காக்காய் பொன்‘, ‘நிழல்காகம்‘, ‘அங்கி‘ ஆகிய கதைகள் அமைந்திருந்தன.

இந்தப் புனைவு களியாட்டத்தில் ஒளசேப்பச்சன் எனும் ஓய்வுபெற்ற காவல்துறையதிகாரியைக் கதைசொல்லியாகக் கொண்ட துப்பறியும் கதைகளும் எழுதப்பட்டன. துப்பறியும் இரகக் கதைகளுக்குத் தமிழில் நீண்ட வரலாறு உண்டு. தமிழின் தீவிர இலக்கிய வகைமையில் துப்பறியும் கதைகள் இடம்பெறுவதில்லை எனக் கூட சொல்லலாம். வணிக இலக்கியத்துக்கே உரிய நடை, விறுவிறுப்பான கதையோட்டம் ஆகியற்றைக் கொண்டிருக்கின்றன. இந்தத் தன்மையினாலே துப்பறியும் கதைகள் மெல்ல தீவிர இலக்கிய வகைமையில் ஒரங்கட்டப்பட்டிருக்கலாம். ஜெயமோகன் இப்பெருந்தொற்றுக் காலத்தில் பல துப்பறியும் கதைகளை எழுதியிருந்தார். ஒவ்வொரு சரடாகத் தொட்டெடுத்து இறுதியில் குற்றத்தின் காரணத்தையும் அதனைச் செய்தவரையும் கண்டுபிடிப்பது, குற்றவாளியின் உளவியல் தடங்கள் என்றே தமிழில் துப்பறியும் கதைகள் அறிமுகமாகியிருக்கின்றன. ‘பத்துலட்சம் காலடிகள்‘ கதையில் ஒரு இளைஞன் இறந்துகிடக்கிறான். அந்தக் கொலையின் சான்றாகக் கிடக்கும் பட்டுநூலைக் கையில் எடுத்துக் கொண்டு கேரளாவின் குற்றம் செய்யும் குறுங்குழுக்களில் ஒன்றான மாப்ளாக்களைக் கண்டடைகிறார் ஒளசேப்பச்சன். மாப்ளாக்களின் பத்தேமாரி எனும் பெரும் கப்பல் கட்டும் நுட்பம், குற்றம் செய்வதில் காட்டும் திறம் என விரிகிறது. அந்த மாப்ளாக்களின் தலைவரின் மகன் செய்யும் தவறினால் மெல்ல சரிந்து போனது மாப்ளாக்களின் ராஜ்ஜியம் என்று கதையை முடித்திருப்பார். சமூகத்தில் எழுப்பப்பட்டிருக்கும் அறவிழுமியங்களின் சரிவுதான் குற்றங்கள். அதன் வேரைத் தேடிச் செல்லும் துப்பறியும் கதைகள் அதனை மீட்டெடுத்துத் தருகின்றன என எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் குறிப்பிடுகிறார். குற்றம் புரிந்தவர்கள் தங்களுக்கான அறத்தை உருவாக்கிக் கொள்ளும் கதையான கைமுக்கில் இதைக் காண முடியும். கொதிக்கும் எண்ணெய் நிறைந்த குடத்தில் போட்ட அனுமார் சிலையை வெறுங்கையில் எடுத்துக் காட்டினால் நிரபராதிகளாகக் கருதப்படும் முறை இருந்திருக்கிறது. பாதி எண்ணெய் மட்டுமே கொண்ட கலயத்திலே அனுமார் சிலையை எடுத்துக் குற்றத்தில் மீண்டு பெரும் பொறுப்புகளை அடைந்தவர்களும் இருந்திருக்கின்றனர். அந்த வகையே குற்றம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் எழும் குற்றவுணர்வினைக் கைமுக்கு போன்ற சடங்குகளால் நேர்செய்து வாழ்வைத் தொடர்கிறவர்களைப் பற்றிய கதையாக இருந்தது. தமிழறிந்த மலையாளியான ஒளசேப்பச்சன் எனும் புனைவு பாத்திரத்தின் கதை சொல்லல்களாகவும் விவரிப்பாகவுமே விரியும் கதைகளிலே பகடியும் நையாண்டியும் இழையோடுகிறது. ஆகவே, இக்கதைகளின் உள்ளடக்கத்தில் இருக்கும் இறுக்கம் உரையாடலில் எழும் கேலியால் நிகர் செய்யப்படுகிறது.

துப்பறியும் கதை என்ற தளத்தையெல்லாம் தாண்டி ஒரு சமூகத்தின் வீழ்ச்சியைப் பற்றி சொல்வதாய் அமைந்திருக்கும். அவ்வரிசையில் ‘வேட்டு‘, ‘ஓநாயின் மூக்கு‘, ‘வேரில் திகழ்வது‘ ஆகிய கதைகளையும் வைக்கலாம். கிடைக்கும் புறவயச்சான்றுகளும் நிரூபணவாதத் தரவுகளும் முட்டிநின்றுவிடும் தருணம்தான் இந்தக் கதைகளைச் சிறந்ததாக ஆக்குகிறது. ‘ஓநாயின் மூக்கு’ சிறுகதையில் காலந்தோறும் தொடர்ந்து வரும் மூதாதையர்களின் மனச்சான்று அல்லது யட்சியர்களால் மரணம் விளைவதாய் அமையும். நம் சமூக அமைப்புகளின் உருவாக்கத்தில் வேராக இருக்கும் முந்தைய தலைமுறையினரின் வஞ்சம் ஓநாயின் மூக்காகக் காலந்தோறும் பின் தொடர்ந்து வருவதாக உருவகம் செய்யப்படுகிறது.

ஜெயமோகனின் கதைகளில் மீள வரும் இன்னொரு சித்திரம் தம் கலையில் உச்சம் தொட்ட கலைஞர்களின் சித்திரம். கலைகளில் உச்சம் எய்துதல் என்பது பிறரால் சென்று எட்ட முடியாத பெருஞ்சாதனையை நிகழ்த்திப் பார்ப்பதால் மட்டுமே அடையப்படுவதில்லை. அந்தக் கலையின் நுண்மையான இடங்களைச் சென்று தொடும் பொழுதே கலையின் உச்சம் துலங்குகிறது. ‘இறைவன்‘ எனும் சிறுகதையில் சுவரில் உதிர்ந்து போயிருக்கும் பகவதியை மீள வரைய வந்திருக்கிறான் மாணிக்கம் ஆசாரி. அவ்வீட்டில் தம் குழந்தையை இளவயதிலே இழந்த இசக்கியம்மை எனும் கிழவி இருக்கிறாள். சுவரில் மிகத் தத்ரூபமாகக் கண்கள் அசைய முகம் கனிய பகவதி எழுந்து வருகிறாள். அந்தத் தருணத்தில் நெஞ்சுடைந்து தன் மகளையும் மீட்டு அளிக்க வேண்டுகிறாள் இசக்கியம்மை. அந்தத் தருணம் மாணிக்கத்தைப் படைப்புக்கு இறைவனாகக் கொண்டு வந்து நிறுத்துகிறது. அந்தப் பகவதியை வரைந்து முடித்தவுடன் அவன் மனத்தில் எழும் வெறுப்புக் கலந்த வெறுமை என்பதும் கலைஞர்களின் பித்து மனநிலையை விவரிக்கும் மிகச்சிறந்த நுண்மையான பகுதிகளில் ஒன்றாகும். அந்த வரிசையில் சாராயம் காய்ச்சுவதில் இருக்கும் நுட்பம் துலங்கும் மாயப்பொன், வேண்டியவுடனே வரம் அருளும் தேவியென வேண்டிய உருவைத் தாங்கி வரும் நாடக நடிகையின் நுட்பம் உணர்த்தும் தேவி ஆகிய கதைகளும் கலையையும் கலைஞர்களையும் பிரித்தறிய முடியாத சரடொன்றில் முட்டி நின்ற கதைகளாக இருந்தன. கலைஞர்களின் நுட்பம், மன ஒருமை, கலையிலிருந்து பிறிதிலாமை இவையனைத்தையும் கண்டுணர்பவன் அடையும் உணர்வெழுச்சிகளும் இந்தக் கதைகளில் மிக நுட்பமாக அமைந்திருக்கின்றன. ‘தேனீ‘ எனும் கதையில் பெரும் நாதசுவரக் கலைஞரான திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் இசையின் நுட்பத்தைப் பிறர் சொல்ல கேள்வியுறுகிறார் ஆசாரி ஒருவர். ராஜரத்தினம் பிள்ளை இறந்த செய்தியறிந்து பேச்சற்றுக் கண்ணீர் வழிய நிற்கிறார். அவரின் இசை சூழ்ந்ததாக எண்ணி சுசீந்திரம் கோவிலில் நெக்குருகி வாய் நீர் ஒழுகக் கற்பனையில் ஓடும் இசையைக் கேட்டு உட்கார்ந்திருக்கிறார். அந்தக் கேளா இசையின் நிறைவுடன் இறந்தும் போகிறார். இசை முதலிய கலைகளில் கலைஞர்கள் தொடர்ந்து ஒரே வகையான இசையை நெடுநேரம் இசைப்பதாக இருக்கும். ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் கூர்ந்து கேட்பின் அதன் ஏற்ற இறக்கம், நுட்பக்குலைவுகள் தெரியவரும். அவ்வாறு வரையறுக்கப்பட்டு, பயின்று வரும் கலைகளில் கலைஞன் தான் நிகழ்த்திச் செல்கிற உச்சத்தருணத்தை ரசிகன் அடைய வேண்டும் என எண்ணுகிறான். சூழ்ந்திரு கதையில் திருமணப் பந்தி உணவை உண்டு கடுக்காயின் கசப்பை மட்டுமே தனியாகப் பிரித்தறிந்த கரடிநாயர், குருவி கதையில் தூக்கணாங்குருவி வயரால் பின்னியக் கூட்டைப் பார்த்துக் கண்ணீர்விடும் மாடன்பிள்ளை என கலையின் நுண்மையைக் கண்டுணரும் ரசிகரிகளின் கண்டடைதலே அக்கலைகளின் நிறைவாகவும் இருக்கிறது.

தமிழ்ச்சூழலில் வீரநாயக பிம்பங்கள் தொடர்ந்து கட்டியெழுப்பப்படுவதைக் காண்கிறோம். வன்முறை என்பது மனித மனத்தின் ஆதார உணர்ச்சிகளில் ஒன்று. அதனை மடைமாற்றி சமூக விழுமியங்களில் ஒன்றாக மாற்றி வைப்பது நன்றே. ஆயினும், எவ்வித கேள்வியெழுப்புதல்களும் இன்றி வழிபாட்டுக்குரியப் பிம்பங்களாக வீரநாயகர்களைக் கட்டமைப்பதன் அபத்தத்தைப் ‘போழ்வு‘, ‘இணைவு‘ ஆகிய கதைகள் சொல்லிச் சென்றன. திருவிதாங்கூரின் வரலாற்றில் மிகமுக்கியமானவரான தளபதி வேலுதம்பி தளவாய் அந்நிய ஆட்சியை எதிர்த்து மேலெழுந்து பின் பிரிட்டிஷாரின் கீழ் அடிபணிந்து தன்னுடைய ஆளுகையை நிலைநாட்ட எவ்வாறு உடன் இருந்த நண்பர்களையே ஒடுக்கிப் பிளவாளுமையாக மாறிப் போகிறார் என்பதை போழ்வு சிறுகதையின் மூலம் காட்டிச் செல்கிறார். ‘போழ்வு’ சிறுகதையின் நீட்சியான ‘இணைவு’ சிறுகதையில் இந்திய மனங்களில் பழங்குடி மனநிலையிலிருந்து எழுந்து வரும் வீரவழிபாட்டையும் வீரத்தைக் கடமையாக மட்டுமே எண்ணும் பிரிட்டிஷாரின் மனநிலையுமென இருவேறு முரண்களைக் காட்டிச் செல்கிறார். ‘ஆயிரம் ஊற்றுகள்‘, ‘ராஜன்‘ ஆகிய சிறுகதைகளும் கேரளத்தின் வரலாற்றையும் தொன்மத்தையும் இணைத்த கதைகளாக இருந்தன. பரசுராமர் தெற்கு வந்தபோது காய்ந்த சருகைத் தின்று கொண்டிருந்த குட்டி யானையின் பொருட்டுப் பசுமை குன்றாதிருக்க தம் மழுவைக் கடல் நோக்கி எறிந்து மீட்டுக்கொடுத்த நிலமே கேரளம் என்ற தொன்மம் இருக்கிறது. அந்த நிலம் முழுவதுமாக யானைக்கே பாத்தியப்பட்டதாக இருக்கிறது. அந்த நிலத்தில் அமைந்திருக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தன்னால் வாங்க இயலாத யானையைக் கொல்ல பூதத்தான் நாயர் எனும் பாகனிடம் சொல்கிறான் எஜமானன் கண்ணன் குமாரன் நாயரின் காரியஸ்தன். யானையைக் கொல்வதற்கு ஏற்படும் அனைத்து தயக்கங்களுக்கும் நிவர்த்தியைக் கூறுகிறான். //ஆனைக்க நாடு இது…நான் இங்க இவருக்க அடிமை, ராஜாவுக்க படை. ஆனா ஆனைக்க பிரஜையாக்கும்”// என்கிறான் பாகன். பிணைத்திருந்த சங்கிலிகளை உடைத்தெறிந்து கட்டற்றுத் தெருவில் ஒடி காட்டுக்குள் மறைந்து யானை ராஜனாகும் தருணத்தை விவரித்திருக்கிறார்.

இவைத்தவிர ஜெயமோகனின் கதைகளில் பலமுறை வந்திருக்கும் அறம் குறித்த கேள்வியை முன் வைப்பவையாக ‘பலிக்கல்‘, ‘கைமுக்கு‘ ஆகிய கதைகள் அமைந்திருந்தன. உணர்வெழுச்சிக் கதைகளாக ‘பொலிவதும் கலைவதும்‘, ‘பெயர்நூறான்‘, ‘சுற்றுகள்‘ ஆகிய கதைகள் அமைந்திருந்தன. வண்ணப்பொடிகளால் பகவதி தேவியின் உருவை வரைவதும் அதன் பின் அது கலைவதுமான சித்திரிப்புப் பின்னணியில் இளமையின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் தருணமாகப் பொலிவதும் கலைவதும் சிறுகதை அமைகிறது. முதல்குழந்தையின் பிறப்புத்தருணம் பெயர்நூறான் சிறுகதையில் இருக்கிறது. இவ்வகையான கதைகள் கற்பனையால் விரிவடையச் செய்யும் குறுந்தருணங்களை உடைய இயல்புவாத எழுத்துகளாக இருந்தன. மாய யதார்த்தவாதக் கதைகளாக ‘தங்கத்தின் மணம்‘, ‘ஆடகம்‘ ஆகியன அமைந்தன. வாழ்வில் சலிப்புற்றுத் தற்கொலை புரியச் செல்லுமிடத்தில் நாகத்தின் நஞ்சே மருந்தாக மாறி சலிப்பையும் தளர்ச்சியையும் நீக்கி புத்தெழுச்சியை அளிப்பது ஆடகம் சிறுகதையில் காட்டப்பட்டுகிறது. நாகமணியை எடுத்து வீட்டில் வைத்து மனச்சிதைவுக்கு ஆளாகும் சிறுவனைப் பற்றிய கதை. இயல்பாகவே இந்திய மரபில் நாகங்கள் மீதிலான தொன்மங்களும் புனைவுகளும் மிகுதியாகவே இருக்கின்றன. இந்தக் கதைகளும் இந்திய மரபுக்குரிய சிறந்த மாயயதார்த்தவாதப் புனைவுகளாக அமைந்திருந்தன.

இந்தப் புனைவு களியாட்டத் தொடரில் உள்ள சில கதைகளில் எனக்கு அயர்ச்சியை அளிக்கும் தன்மையாக நீண்ட உரையாடல், சித்திரிப்புகளைக் குறிப்பிடலாம். கதையைக் கண் முன் நிகழ்த்துவதற்கான உத்தியாக இருந்தாலும், கதையின் உச்சமான தருணங்களை நழுவச் செய்யும் வகையில் நீண்டு இருப்பதாகவே உணர முடிந்தது. தேவி சிறுகதையில் மையம் என்பது நாடகத்தில் மூன்று பாத்திரங்களையும் செய்து முடிக்கும் நாடக நடிகையின் கலையின் நுட்பம்தான். ஆனால், நாடகத்தை எழுதுகின்ற அனந்தனைச் சுற்றிலும் எழுகின்ற உரையாடல் நீளம் ஆகியவற்றால் கதையின் மையத்தைத் தவறவிடக்கூடும். பத்துலட்சம் காலடிகள் போன்ற கதைகளில் மூன்றடுக்குக் கதை சொல்லல்கள் உள்ளன. ஒளசேப்பச்சன். சொல்லத் தொடங்கும் கதை. அதில் வரும் பாத்திரங்கள் சொல்லும் கதை, கப்பல் கட்டுதல் பற்றிய சித்திரிப்பு மறுபுறம் என மூன்றடுக்குக் கதை சொல்லல்கள் உள்ளன. இம்மாதிரியான கதை சொல்லல் உத்தி முறை கதையைப் புரிந்து கொள்வதில் சற்றே அதிகமான உழைப்பைக் கோரச் செய்வதோடு கதையின் குவிமையம் நெடுகிலும் பின்னப்பட்டிருக்கும் கதைபின்னல்களையும் தரவுகளையுமே ஒட்டி வாசிப்பு கவனம் படியச் செய்கிறது. குறுக்கும் நெடுக்கும் இழையோடும் பல இழைகளைப் பற்றி மையத்தைச் சென்றடைய மறுவாசிப்பு அவசியமாகிறது. இவற்றில் சில கதைகள் அதில் பேசப்பட்டிருக்கும் தளம் குறித்த அறிதல் இல்லாதவர்களுக்கு எளிய கதையாகவே தெரியக்கூடும். சான்றாக, கிருஸ்துவ, இந்திய மெய்மை தளங்களில் நிகழும் கதைகளில் வரும் தத்துவத்தளங்களைப் பயிற்சியின்மையால் நானும் அவ்வாறே கடந்து சென்றேன். சான்றாக, சிவம் கதையில் கதை நிகழும் காசியில் இருக்கும் மனிதர்கள், சம்பவங்கள் அதற்கு அடியில் தொடர்ந்து கொண்டிருக்கும் மெய்யியல் தளமான மரணமும் வாழ்வும் ஒருசேர நிகழ்ந்து கொண்டிருக்கும் களத்தைச் சென்றடைய மரபு குறித்த எளிய அறிவும் பயிற்சியும் அவசியமே.

இந்தக் கதைவரிசை தெரிவில் எந்தவிதமான போதப்பூர்வமான தர்க்கங்களும் இல்லை. என்னைக் கவர்ந்த ஏதாவது வகையில் பாதிப்பு செலுத்திய கதைகளின் வாசிப்பனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். இந்தச் சிறுகதைகளின் வாசிப்பனுபவத்தை வெறும் பைனரி குறியீடுகளாகச் சுருக்கிக் கொள்ளாமல் விரிவான புலத்தில் வைத்துப் பார்க்கும் போது மாபெரும் வாழ்வனுபவங்களை வாழ்ந்து உய்த்த அனுபவமும் கிட்டும். இந்த உள்ளிருப்பு நாட்களில் மாபெரும் அகப்பயணங்களைச் செய்ய வைத்துப் பொருள் உள்ள நாட்களாக மாற்றியமைக்கு ஜெயமோகனுக்கு நன்றி.

 

http://vallinam.com.my/version2/?p=6926

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.