Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்கள் நாயகன் என்று சம்பந்தன் கூறுவது அரசியல் கபடத்தனம் என்கிறார் தவராஜா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நாயகன் என்று சம்பந்தன் கூறுவது அரசியல் கபடத்தனம் என்கிறார் தவராஜா

thavarasa.jpg?189db0&189db0

 

இலங்கையில் இராணுவ ஆட்சிக்கு வித்திடப்பட்டுள்ளதாக வெளிவரும் கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (09) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

‘எங்கு இராணுவ ஆட்சி என தெரிவிக்கின்றார்கள் என தெரியவில்லை. ஜனாதிபதியின் செயலணியில் இராணுவத்தினர் மட்டுமன்றி, படைத்தரப்பினரும் உள்வாங்கப்பட்டு உள்ளார்கள். வடக்கில் போதைப் பொருள் பாவணை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் போதைப்பொருள் பாவணைக்கு அடிமையாகி வருகின்றனர். போதைப்பொருள் வியாபாரத்தை இராணுவத்தினரால் கட்டுப்படுத்த முடியும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது சமூகத்தில், இன்று போதைப் பொருள் பாவணையால் எமது இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சகல படைத்தரப்பினரையும் ஒன்றிணைத்து, செயற்பாட்டை முன்னெடுப்பதன் மூலமே போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

இது இளைஞர் சமுதாயத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். இளம் சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டும். அதைவிடுத்து வேறு எங்கு இராணுவ ஆட்சி உள்ளதென்பது தெரியவில்லை.

அத்துடன், நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடுத்பத்தினரை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே. அண்மையில் மஹிந்த ராஜபக்சவை மக்களின் நாயகன் என பல வார்த்தைகளை தொட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கூட்டமைப்பின் தலைவரின் புகழாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் மஹிந்த அரசினை கடுமையாக விமர்சித்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரைக் கையாண்ட முறைமை தொடர்பில் பல விமர்சனங்களை முன்வைத்தனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட ராஜபக்ச குடும்பத்தினரை கடுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட அவரது கட்சியினர் விமர்சித்தனர். சம்பந்தனின் திடீர் புகழாரம் அரசியல் கபட நாடகமே. இன்று நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் மாகாண சபை ஆட்சிமுறை நடைபெறாது ஆளுநர்களின் அதிகாரம் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்தத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே இவர்களின் செயற்பாடுகளினாலேயே மாகாண சபைத் தேர்தல் இடம்பெறாது போனது.’ – என்றும் தெரிவித்தார்.

 

https://newuthayan.com/மக்கள்-நாயகன்-என்று-சம்ப/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, உடையார் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட அவரது கட்சியினர் விமர்சித்தனர். சம்பந்தனின் திடீர் புகழாரம் அரசியல் கபட நாடகமே. இன்று நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் மாகாண சபை ஆட்சிமுறை நடைபெறாது ஆளுநர்களின் அதிகாரம் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்தத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே இவர்களின் செயற்பாடுகளினாலேயே மாகாண சபைத் தேர்தல் இடம்பெறாது போனது.’

கபடதாரிகள் ஒருவரை ஒருவர் வசைபாடுவது தமிழின கொலைகாரர்களுக்கு யார் முண்டு கொடுப்பது என்ற போட்டியினால் தான்.

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.