Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் காலமானார்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் காலமானார்

   Web Team
 Published : 10,Jun 2020 08:38 AM

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ  ஜெ.அன்பழகன் இன்று காலமானார்.

Advertisement

திமுக எம் எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டாம் ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அண்மையில் அன்பழகனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

lg.php?bannerid=0&campaignid=0&zoneid=71

Corona damage; DMK MLA J. Anbhazagan is a good improvement in ...

Advertisement
VDO.AImute.png
 
இந்நிலையில் இன்று அன்பழகன் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமாக மாறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். நள்ளிரவில் அவருக்கு அதிகமான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சிகிச்சைப் பலனின்றி இன்று ஜெ.அன்பழகன் காலமானார். இன்றுதான் அன்பழகனின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthiyathalaimurai.com/newsview/71717/j-anbazhagan-passed-away

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்

திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்

திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளராகவும்,,சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெ.அன்பழகன். 61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக கடந்த 2ம் தேதியன்று கொரோனா, மூச்சுத் திணறலுடன்  சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று உடல்நிலை மோசமடைந்த நிலையில் காலை 8 மணியளவில் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/10085527/DMK-MLA-J-Anbazhagan-passed-away.vpf

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

103019790_3095855020508598_64802103942927450_o.png?_nc_cat=101&_nc_sid=730e14&_nc_eui2=AeGXCzCh48X3VcOg9zChSX8VQb-mG3OqK1VBv6Ybc6orVSiK_9S6oLIK2QxvU2KlypD1BHMukxQi1EvV7yfNhCpT&_nc_ohc=zXKJTJJJ5AwAX8gF6ZR&_nc_ht=scontent-frt3-2.xx&oh=d3987d4de9acddf0418574f5a61f7cbc&oe=5F07B31A

இன்று தான்... அவரின் பிறந்த நாளாம்.

கொரோனாவால் வாழ்விழந்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க 
வெளியே வந்ததாலயே ஜெ அன்பழகன் கொரோனாவால் தாக்கப்பட்டு 
இப்போது உயிரை இழந்திருக்கிறார்.. 

அவரது தியாகம் போற்றுதலுக்குரியது.. 

அதோடு ஒரு மனிதர் தன் பிறந்த நாளிலே மரித்துப்போதல் 
அவரின் குடும்பத்திற்கு, எத்தனை துன்பகரமானது...  வேதனை.. 
ஆழ்ந்த இரங்கல்.. 🙁

Cartoonist Bala

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்........!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏன் அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது?

why-anbazhagan-death-should-be-spoken  

இந்தியாவில் கரோனாவுக்குப் பலியான முதல் மக்கள் பிரதிநிதி என்பதால் மட்டும் அல்ல; வேறு ஒரு விஷயத்துக்காகவும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது. தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் அரசியலர்கள் மீது உருவாக்கப்பட்டிருக்கும் மோசமான பிம்பத்தின் மீது இந்த மரணம் தாக்குதல் நடத்துகிறது. அது முக்கியமானது.

தமிழ்நாட்டின் பொதுப்புத்தி விதந்தோதும் எந்தக் கூறுகளையும் கொண்டதல்ல அன்பழகனின் கதை என்பதே இங்கு விசேஷம் ஆகிறது. அன்பழகன் ஒரு எளிய குடும்பத்திலிருந்து வந்தவர் அல்ல; பேச்சு – எழுத்து என்று கருத்துத் தளத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டவர் அல்ல; மக்களுக்காகப் பல ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர் அல்ல; அரசியலில் ஈடுபட்டதால் தன்னுடைய சொத்துகளை இழந்து வீதியில் தன் குடும்பத்தை நிறுத்திச் சென்றவரும் அல்ல. இன்னும் சொல்லப்போனால், மேலோட்ட வர்ணனைகள் மூலமாக ஒரு எதிர்மறைப் பிம்பத்தை அன்பழகன் மீது எளிதாகக் கட்டிவிடலாம். அரசியல் பின்னணியுள்ள ஒரு வசதியான குடும்பத்தின் வாரிசு, அரசியல் பலத்தைத் தன் செல்வத்தையும் கூட்டிக்கொள்ளப் பயன்படுத்தியவர், பிரச்சினை என்று வந்தால் முட்டி மோதிப் பார்க்க ஆட்கள் சகிதம் மல்லுக்கு நிற்பவர், பஞ்சாயத்துகளில் முன்னால் உட்காருபவர் என்றெல்லாம் சொல்லி அவர் வாழ்வைப் பலர் அர்த்தமற்றதாக ஆக்கிவிடலாம்

சரி, இப்படிப்பட்ட ஒருவரின் மரணம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது? ஏனென்றால், இப்படிப்பட்டவர்கள்தான் இந்தத் தலைமுறைக் கள அரசியலின் ரத்தமும் சதையுமான தளகர்த்தர்கள். எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டும் மக்கள் மத்தியில் தங்களைக் கரைத்துக்கொண்டிருப்பவர்கள். எளிய மக்கள் ஒரு பிரச்சினை என்று நாடும்போது அவர்களோடு ‘வா, பார்க்கலாம்’ என்று சொல்லி உடன் செல்பவர்கள். வறட்சியோ, புயலோ, வெள்ளமோ, கொள்ளைநோயோ எந்தப் பாதிப்பு என்றாலும் தன் சொந்தக் காசைச் செலவிட்டு, மக்களுக்கு உடனடி உதவிகளைத் தருபவர்கள். அதிகார அமைப்புடன் சாமானிய மக்கள் பேசுவதற்கான இடத்தைப் பராமரிப்பவர்கள். கட்சித் தலைமையிடம் உள்ளூர் நிலைமையைப் பேசுபவர்கள். கருத்துத் தளத்திலிருந்து அரசியல் கட்சிகளை அன்றாடத் தளத்துக்குக் கடத்துபவர்கள்.

இன்று இந்தியாவிலேயே அதிக வியாபாரம் நடக்கும் பகுதிகளில் ஒன்றான தியாகராய நகரின் வரலாற்றோடும், திராவிட இயக்க வரலாற்றோடும் இணைத்துப் பார்க்க வேண்டிய வாழ்க்கை அன்பழகனுடையது. நூற்றாண்டைத் தொடும் தியாகராய நகரானது நீதிக் கட்சியின் பெயர் பெற்ற முதல்வரான பனகல் அரசரின் சிந்தனையில் உருப்பெற்றது. ஐரோப்பாவின் சில மாதிரிகளைப் பின்பற்றிக் கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்படும் தியாகராய நகரின் பூங்காக்கள், வீதிகளுக்கு திராவிட இயக்க முன்னோடிகளின் பெயர்கள் சூட்டப்பட்டதில் தீர்க்கமான பார்வை உண்டு. லண்டன், பாரீஸ், அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் கல்கத்தா, பம்பாய், மதறாஸின் பிரசித்தி பெற்ற பூங்காக்கள், வீதிகள் தாங்கியிருந்த மன்னர்களின், பிரபுக்களின் பெயர்களை இந்தச் சாமானியர்களின் பெயர்கள் மாற்றீடு செய்தன. பிற்பாடு, வடிகாலுக்காகக் குழி வெட்டும்போது உயிரிழந்த தொழிலாளர்கள் பெயரிலும் வீதிகள் அமைந்தன. சாமானியர்களை அதிகாரப்படுத்தும் உந்துசக்தி தியாகராய நகரின் உருவாக்கத்திலேயே பொதிந்திருக்கிறது. நிறுவனங்களினூடாக சாதாரணர்களும் இயங்குவதற்கான தாராளவெளியை அது எப்போதும் பராமரிக்கிறது.

திமுகவை அண்ணா தொடங்கியபோது அதன் துடிப்பான அடித்தட்டுத் தொண்டர்களில் ஒருவராக இருந்தவர் பழக்கடை கி.ஜெயராமன். தியாகராய நகரில் இருந்த அவருடைய பழக்கடையே பிற்பாடு அவருடைய மகன் அன்பழகனுக்கும் அடையாளம் ஆனது. திமுகவின் முன்னணித் தலைவர்கள் அனைவருக்கும் அறிமுகமானவர் என்றாலும், கட்சியில் ஒரு களத் தொண்டராகவே தன்னை இருத்திக்கொண்டவர் ஜெயராமன். தந்தையின் வழியில் திமுக அபிமானத்திலேயே வளர்ந்த அன்பழகன் தந்தை போலன்றி தீவிர அரசியலுக்குள் நுழைந்தார்.

உலகமயமாக்கலுக்குப் பிந்தைய கால் நூற்றாண்டில் ஆண்டுக்கு சுமார் ஐம்பதாயிரம் கோடி வர்த்தகம் நடக்கும் சந்தையாக விரிந்த தியாகராய நகரின் அரசியல் டெல்லி, மும்பை, கொல்கத்தாவின் பெருநகர ஆட்டங்களோடு பிணைந்தது. துணிச்சலான அன்பழகன் தியாகராய நகரோடு இணைந்து வளர்ந்தார்.

தலைநகர் சென்னையில் திமுகவின் எந்தப் போராட்டம், பேரணி, கூட்டத்துக்கும் பெரும் கூட்டத்தைத் திரட்டிவந்தவர் அன்பழகன். ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருந்தால் வாக்குச்சாவடியையும்கூட கையில் வைத்துக்கொள்ள முடியும் எனும் அளவுக்கு மலிந்த இந்தியத் தேர்தல் அரசியலின் அதிகாரச் சண்டித்தனத்துக்கு எதிரே வரிந்து கட்டிக்கொண்டு நிற்க எதிர்க்கட்சிகளுக்கு ஆள் பலம் முக்கியம்; அந்தப் பலம் அன்பழகனிடம் இருந்தது. சிறை செல்லும் போராட்டமாக இருந்தாலும் அநாயசமாகப் பத்தாயிரம் பேரை அன்பழகனால் திரட்ட முடிந்தது. அடித்தட்டு மக்களோடு அவ்வளவு பிணைப்பு அவருக்கு இருந்தது. அதுதான் அவருடைய அரசியலின் உயிர்நாடி. அதுதான் இப்போது அவருடைய உயிர் பறிபோகவும் காரணமாக இருந்திருக்கிறது.

அன்பழகன் பேசும் சில காணொலிகளை நான் பார்த்தேன். கரோனா தொற்று தொடர்பில் அவர் போதிய விழிப்புணர்வைப் பெற்றிருந்தவராகவே தெரிகிறார். கூடுமானவரை வீட்டுக்குள்ளேயே இருத்தல், சமூக இடைவெளியைப் பராமரித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்திகூட அவர் ஒரு காணொலியில் பேசுகிறார். கட்சியினருடனும் கட்சியின் தலைமையுடனும் உரையாட கணினியையும் இணையத்தையும் அன்றாடம் பயன்படுத்தியிருக்கிறார். அதேசமயம், மக்களைச் சந்திக்கையில் கறாரான சமூக இடைவெளியைப் பராமரித்தல் சாத்தியமே இல்லை என்பதை அறிந்திருந்தும் மக்கள் சந்திப்பை அவர் நிறுத்தவே இல்லை. முகக்கவசமும், கையுறையும் அணிந்தபடி எளிய மக்களுக்கான உதவிகளை, அவர்களுக்கான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வழங்க நெரிசலான குடிசைப் பகுதிகளுக்கு அபாயத்தை உணர்ந்தும் தினமும் சென்றிருக்கிறார். துணிந்தே உயிரை விட்டிருக்கிறார். மக்களுக்காக உரமாகியிருக்கிறார்.

ஒரு அன்பழகன் இறந்ததால் இப்போது கவனத்துக்கு வந்திருக்கிறார்; அரசியலர்கள் மீதான நம்முடைய மோசமான வெறுப்பைச் சுமந்தபடியே பல அன்பழகன்கள் களத்தில் எப்போதும் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கிருமித் தொற்றுக்கு அஞ்சி, வீட்டையே தீவாக மாற்றிக்கொண்டு, வீட்டுக்கு வரும் காய்கறிகளையும் கிருமிநாசினியால் கழுவி, பணத்தைக்கூட துவைத்துப் பயன்படுத்தியபடி பாதுகாப்பைப் பேணும் சூழலை அன்பழகன்களும் தேர்ந்தெடுக்கலாம். மாறாக, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நிலையிலும், தன் சொந்த செலவில் கரோனா நிவாரண உதவிகள் அளிக்க மக்களை நோக்கி அவர்களைத் தள்ளுவது எது? வெறுமனே பதவி, அதிகாரத்துக்கான முனைப்பு என்று இதைப் புறந்தள்ளிவிட முடியுமா? மிக முக்கியமாக, நாம் தீர்மானித்திருக்கும் அரசியல் மதிப்பீடுகளில் அன்பழகன் போன்ற சாமானிய கள அரசியல் செயல்பாட்டாளர்களுக்கான சமூக மதிப்பு என்ன?

சாதாரண நாட்களில் அன்பழகன்களின் வாழ்வும் மரணமும் சாதாரணமாகக் கடந்துவிடும். ஆனால், ஒரு கொள்ளைநோய் காலகட்டமானது அரசியலையும் அரசியலர்களையும் இழிந்த பார்வையுடன் நோக்கும் போலியான நம்முடைய மேட்டிமை மதிப்பீடுகளின் மீது கல் எறிகிறது. கரோனா காவலர்கள் என்று மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை வரிசைப்படுத்தி வாழ்த்தும் வரிசையில் அன்பழகனைப் போல ஒவ்வொரு கட்சியிலும் மக்களுக்காக அர்ப்பணிப்போடு களத்தில் செயலாற்றும் அரசியலர்கள் இடம்பெறுவார்களா? முடியாது என்றால், ஏன் அது நமக்கு சாத்தியமாகவில்லை? அதற்கும் நம் மனதிலுள்ள மேட்டிமைக்கும் சம்பந்தம் இல்லையா?

https://www.hindutamil.in/news/opinion/columns/558994-why-anbazhagan-death-should-be-spoken-2.html

Link to post
Share on other sites

80 களில் தலைவர பிரபாகரன் அவர்களை தமிழக காவல்துறை கைது செய்த வேளை அவரை பிணை (ஜாமீன்) எடுத்தவர் இவர் என சமூக வலைத்தளங்களில் சிலர் எழுதி உள்ளனர். இது உண்மையா?

எது எப்படியோ, தன் உடல்நிலை பற்றி கவலைப்படாமல் மக்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் முன்வந்து களப்பணி ஆற்றி இருக்கின்றார் என அறிய முடிகின்றது. அதனால் தான் தொற்றும் வந்ததாக சொல்கின்றனர்.

அஞ்சலி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, நிழலி said:

நிழலி, 

 நீங்கள் கூறிய விடயம்  தொடர் பாக ஒரு காணொலி பார்த்தேன். 1982 ம் ஆண்டு பாண்டி பஜார் துப்பாக்கி சண்டை அதன் அதன் பின்னரான சம்பவங்களை திகதி வாரியாக விளக்கும் காணொலி  என்பதால் இதனை இணைக்கிறேன். 

Edited by tulpen
 • Thanks 1
Link to post
Share on other sites
6 hours ago, tulpen said:

நிழலி, 

 நீங்கள் கூறிய விடயம்  தொடர் பாக ஒரு காணொலி பார்த்தேன். 1982 ம் ஆண்டு பாண்டி பஜார் துப்பாக்கி சண்டை அதன் அதன் பின்னரான சம்பவங்களை திகதி வாரியாக விளக்கும் காணொலி  என்பதால் இதனை இணைக்கிறேன். 

அட சீமானின் உடன் பிறவா தம்பி அமீர் சொன்ன தகவலா அது ...அது தான் முழுது தவறாக இருக்கின்றது 

விளக்கமான வீடியோ வை இணைத்தமைக்கு நன்றி ருல்பன் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
 
அது போன்ற செயல்களில் ஒரு போதும் நான் ஈடுபடுவதில்லை"- அமீர் விளக்கம்
Published on 12/06/2020 (14:24) | Edited on 12/06/2020 (16:07)
 
ameer

மறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனின் மறைவிற்கு இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அமீரின் இயக்கத்தில் உருவான 'ஆதிபகவன்' படத்திற்கு ஜெ. அன்பழகன்தான் தயாரிப்பாளர். சமீபத்தில் ஒரு பேட்டியில் அமீர் ஜெ.அன்பழகன் தொடர்பான நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசிய ஒரு விஷயம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதனால் அதற்கு விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் அமீர். 
அதில், “அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு, 

நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து கொள்வது மனித மாண்பு. அதுவே இன்று வரை நம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில் மறைந்த எம்எல்ஏ அண்ணன் ஜெ. அன்பழகனை நினைவு  கூறும் விதமாகப் பல்வேறு நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டிருக்கும் போது மேலதிகமாக மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சென்னையில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டு பாண்டி பஜார் காவல் நிலையத்திலிருந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிணையில் இருந்து வெளியே வந்த போது தங்களது கட்சி அலுவலகத்தில் இருந்ததாகவும் அப்போதே அவரை தான் பார்த்ததாகவும் அவரிடம் பேசியதாகவும் அவரைப் பற்றி பெருமையாக அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்கள் என்னிடம் சொன்ன தகவல்களை ஒரு நேர்காணலில் நான் பகிர்ந்திருந்தேன். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நான் சொன்ன தகவலில் உண்மை இல்லை என்றும் அந்த வழக்கில் பிரபாகரன் அவர்களை ஜாமீனில் எடுத்தது கே.எஸ். ராதாகிருஷ்ணன் (திமுகவின் செய்தித் தொடர்பாளர்) அவர்களும் அதன் பின்னர் அவரோடு தொடர்பில் இருந்தது ஐயா பழநெடுமாறன் மற்றும் இன்ன பிற சிலர் தான் என்கிற தகவல்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அந்தச் சம்பவத்தில் கே. எஸ். ராதாகிருஷ்ணன், ஜெ. அன்பழகன் போன்றோர் உடன் இருந்ததாகவும் அன்றைய 116வட்ட பகுதி செயலாளராக இருந்த  து.ச. இளமாறன் மற்றும் அவரது சகோதரர் சந்திரன் இருவரும் ஜாமீன் கையெழுத்திட்டதாகவும் திமுகவின் கோ.அய்யாவு போன்றோரும் உடன் இருந்தனர் என்கிற தகவலும் இன்னொரு புறம் வந்துகொண்டிருக்கிறது. 

மேலும் அந்த வழக்கின் பிண்ணனியில் அதிமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரும் செயல்பட்டிருக்கிறார் என்கிற தகவல்களும் எனக்கு அலைபேசியின் வழியே வந்து சேர்ந்திருக்கிறது. எதுவாயினும் தேசிய தலைவர் பிரபாகர் அவர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் பிணையில் எடுக்கப்பட்டது குறித்தும் பல்வேறு உண்மை தகவல்கள் ஆதாரங்களுடன் இன்றைக்கு வெளிவந்திருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை ஆனால் அதே நேரத்தில் இணையத்தள ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்வு குறித்த விவாதங்கள் அரசியல் விவாதங்களாக மாறி மாபெரும் சர்ச்சையாகத் தொடர்ந்து கொண்டிருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து அண்ணன் ஜெ. அன்பழகன் என்னிடம் பேசியது உண்மை, நான் கேட்டதும் உண்மை. அதற்கு மறைந்த அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்களும் இறைவனுமே சாட்சி. அந்தச் செய்தியை நான் பகிர்ந்ததில் சிறு தவறு நிகழ்ந்திருக்கலாமே தவிர இதில் வேறு எந்த உள்நோக்கமும் அரசியலும் கிடையாது. வரலாற்றைத் திரித்துச் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்படவில்லை அது போன்ற செயல்களில் ஒரு போதும் நான் ஈடுபடுவதில்லை என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்"""

இன்று நக்கீரனில் வெளிவந்த செய்தி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1982 பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு… பிரபாகரனிற்கு ஜாமீன் கிடைத்தது யாரால்?: 38 வருடங்களின் பின் வெளியான வரலாற்று தகவல்!

prabakaran2.jpg
 
1982ஆம் ஆண்டு சென்னை பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் கைது செய்யப்பட்ட போது நடந்த விவரங்களை மூத்த சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் விளக்கி இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் சென்னை பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. நேற்று காலமான தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்தான் பிணை வாங்கி கொடுத்ததாக, இயக்குனர் அமீர் பிழையான தகவல. ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, அப்போது பிரபாகரனுடன் தங்கியிருந்த மூத்த சமூக செயற்பாட்டாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் 1982இல் நடந்தது என்ன என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளதாவது,

ட்விட்டர் எனப்படும் சமூக ஊடகத்தில் கண்டதாக நண்பர் ஒருவர் ஓரு படத்தை எனக்கு அனுப்பி இருந்தார். மிகவும் ரசித்தேன், மகிழ்ச்சி அடைந்தேன். வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்படுகின்றது என்பதற்கு கண்முன் காணப்படும் உதாரணமாக கொள்க. அந்த சம்பவத்தை பற்றி முழுதும் அறிந்த பலரும் இன்றும் அரசியலில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மை தெரியும். நினைவில் உள்ளதை பகிர விரும்புகின்றேன்.

கவனிக்க. பிரபாகரன், முகுந்தன் (உமா மகேஸ்வரன்) உள்ளிட்ட பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவம் 19-05-1982 அன்று நடந்தது. கடந்த 19.05.1982 அன்று ‘தொட்டால் சுடும்’ என்ற திரைப்படத்தை தி.நகர் ராஜகுமாரி தியேட்டரில் பார்த்து விட்டு அங்குள்ள செலக்ட் ஓட்டலில் இரவு உணவை முடித்துக் கொண்டு பாண்டி பஜாரில் நடந்து செல்லும் போது கீதா கபே முன்பு முகுந்தனும் பிரபாகரனும் இரவு 9.30 மணியளவில் சுட்டுக் கொண்ட போது ஏற்பட்ட சத்தத்தில் பாண்டி பஜாரில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் ஓடி வந்தார்கள்.

கரிகாலன் என்ற பிரபாகரன், ரவீந்திரன் மற்றவர்களையும் பிடித்து பாண்டி பஜாரில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் தப்பித்து ஓடி விட்டார். அவரை இரண்டு நாள் கழித்து கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தார்கள்.

அப்போது அந்த பாண்டி பஜார் காவல் நிலையத்தில் நந்தகுமார் என்ற துணை ஆய்வாளர், பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கியை கையகப்படுத்தினார். ஜோதீஸ்வரன் என்ற கண்ணனும் கைது செய்யப்பட்டார். அங்கு தலைமை காவலர் எஸ். ரெங்கசாமி எண்: HC 3425 இது குறித்தெல்லாம் எழுதி ஆவணப்படுத்தினார். இதெல்லாம் நினைவுகள்.

இந்த வழக்கில் பழ. நெடுமாறன், பிரபாகரன், எனது வாக்குமூலம், முகுந்தன் வாக்குமூலம், இரவீந்திரன் வாக்குமூலம், ஜோதீஸ்வரன் வாக்குமூலம் மற்றும் தெருவில் நடந்துச் சென்ற சிலரின் வாக்குமூலம் மட்டுமே காவல் துறையால் பெறப்பட்டது.

தலைமை காவலர் எஸ். ரெங்கசாமி எண்: HC 3425 இது குறித்தெல்லாம் எழுதி ஆவணப்படுத்தினார். 20, 21 – 05-1982 ஆகிய இருநாட்கள் காவல்துறை மந்தவெளி Admiralty hotel இல் விசாரணை நடைபெற்றது. பின் இது சிபிசிஐடி க்கு மாற்றி கண்காணிப்பாளர் வெள்ளியங்கிரி தலைமையில் புலன் விசாரணை நடந்தது.

103768106_2744494552506883_7101514181963அதற்கு அடுத்த நாள் நானும் பிராபாகரன் தங்கியிருந்த சாலைத்தெரு வீட்டில் 22-05-1982 அன்று டி.ஐ.ஜி மோகன்தாஸ் தலைமையில் ரெய்டு நடத்தப்பட்டது. நான் வழக்கு நடத்தும் ஆவணங்கள், எனது உடமைகளை மற்றும் பிரபாகரனின் ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.

பிரபாகரனை 23-05-1982 அன்று சென்னை மத்திய சிறையில் சந்தித்தேன். அடுத்த நாள் நெடுமாறன் அவர்களுடன் சென்று சந்தித்தேன். 24-07-1982 அன்று வை.கோ அவர்களை அழைத்து சென்று பிரபகரனை சந்தித்தேன். 05-08-1982 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை ஆணை கோரி மனுவை தாக்கல் செய்தேன். அடுத்தநாள் 6-8-1982 நிபந்தனையின் பேரின் பிணை ஆணை கிடைக்கப்பெற்றேன். மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமலையும் நானும் ஆஜர் ஆனோம். நிபந்தனையின் படி பிரபாகரன் மதுரையிலும், முகுந்தன் சென்னையிலும் தங்கி காவல்நிலையத்தில் கையொப்பமிட வேண்டும்.

நெடுமாறன் பிரபாகரனை அழைத்துக் கொண்டு மதுரை சென்றார். மதுரை, மேலவாசி வீதி, விவேகானந்த அச்சகத்திற்கு எதிரே உள்ள தனது பழைய வீட்டில் தங்க வைத்தார் நெடுமாறன். அந்த வீட்டிற்கு அருகில் தான் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி காசிம் வீடும் இருந்தது. இவையாவும் தமிழீழ அரசியல் புரிதல் உள்ள பலருக்கும் தெரியும். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 9 எம்.எல்.ஏ.க்கள் மரணம்… திமுகவில் 5 பேர்… அதிமுகவில் 4 பேர் இந்த வழக்குக்கு பாடுப்பட்ட நெடுமாறன், மற்றும் வை.கோ, மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமலை, எனது ஜூனியரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமானகே.எம்.பாஷா, எனது சீனியர் மாநில வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் ஆர்.காந்தி ஆகியோர் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றார்கள். உயிருடன் இல்லாதவர்களை சாட்சியாக குறிப்பிட விரும்பவில்லை. பாண்டிபஜார் காவல்நிலையத்தின்அன்றைய மூத்த காவலர் எஸ்.ரங்கசாமி (HC3425) ஆகியோரிடம் வழக்கின் போக்கை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். இன்றைக்கும் இந்த ஆவணங்களை வழக்குமன்றத்தில் பார்க்கலாம். SC No.8/1983 on the file of 7th Additional Court ,High Court வளாகத்தில் பார்க்கலாம்.

வரலாறுகளை திரித்து சொல்வதால் இவர்களுக்கு என்ன இலாபம் என அறியேன். அதே சமயத்தில் உண்மையை வெளிக்காட்ட வேண்டிய நிலையும் வரலாறு திரிக்கப்படாமல் காக்கப்பட வேண்டிய அவசியமும் இருக்கின்ற காரணத்தால் இதனை எல்லாம் பதிவு செய்கின்றேன். இத்துடன் காவல்நிலையத்தில் தட்டச்சு செய்யப்பட்ட சிறுபகுதியையும் இணைக்கின்றேன். ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றது. தேவைப்பட்டோர் வந்து பார்த்துக் கொள்ளலாம். இது தான் நடந்தது இது தான் உண்மை. வரலாறு. இதற்கு மேலும் மாற்றிப் பேசினால் என்ன சொல்ல முடியும். இது குறித்தான ஆவணங்களோடு என்னுடைய நினைவுகள் சுவடுகள் என்ற நூலில் விரைவில் வெளிவர இருக்கின்றது. அவ்வளவுதான்.

இது குறித்த பழைய எனது பதிவுகள்: http://ksradhakrishnan.in/?p=2776 http://ksradhakrishnan.in/?p=2770 நீதிமன்றத்தின் உத்தரவுகளை பொதுவெளியில் மாற்றிப் பேசுவதும் சட்டத்துக்குட்பட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும். யார்மீதும் உள்ள மரியாதையை குறைக்கவோ, காயப்படுத்தவோ இப்பதிவை செய்யவில்லை. நான் சம்மந்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி திரித்து பேசப்படும் போது அமைதியாக இருக்க இயலாது அல்லவா? இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

http://www.pagetamil.com/129535/

Edited by நியானி
செய்தி முழுமையாக இணைக்கப்படவேண்டும்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

தேசிய தலைவரை அன்று  காப்பாற்றி ஜாமீன் எடுத்து உபசரித்தவர்களும் இப்ப  நம்ம ஆட்கள் பார்வையில் துரோகிகள் தான்.  🤣🤣🤣🤣🤣

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தேசிய தலைவரை அன்று  காப்பாற்றி ஜாமீன் எடுத்து உபசரித்தவர்களும் இப்ப  நம்ம ஆட்கள் பார்வையில் துரோகிகள் தான்.  🤣🤣🤣🤣🤣

யார் செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல

என்ன செய்கிறார்கள் என்பதே முக்கியம்.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

தேசிய தலைவரை அன்று  காப்பாற்றி ஜாமீன் எடுத்து உபசரித்தவர்களும் இப்ப  நம்ம ஆட்கள் பார்வையில் துரோகிகள் தான்.  🤣🤣🤣🤣🤣

2009 வரை காசு கொடுத்து பின்னால் நின்றவர்களெல்லாம் குதிரைப் பந்தயத்தில் காசு கட்டியவர்கள் போல் 🤪

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

1982 பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு… பிரபாகரனிற்கு ஜாமீன் கிடைத்தது யாரால்?: 38 வருடங்களின் பின் வெளியான வரலாற்று தகவல்!

June 12, 2020
prabakaran2.jpg
 
1982ஆம் ஆண்டு சென்னை பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் கைது செய்யப்பட்ட போது நடந்த விவரங்களை மூத்த சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் விளக்கி இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் சென்னை பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. நேற்று காலமான தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்தான் பிணை வாங்கி கொடுத்ததாக, இயக்குனர் அமீர் பிழையான தகவல. ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, அப்போது பிரபாகரனுடன் தங்கியிருந்த மூத்த சமூக செயற்பாட்டாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் 1982இல் நடந்தது என்ன என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளதாவது,

ட்விட்டர் எனப்படும் சமூக ஊடகத்தில் கண்டதாக நண்பர் ஒருவர் ஓரு படத்தை எனக்கு அனுப்பி இருந்தார். மிகவும் ரசித்தேன், மகிழ்ச்சி அடைந்தேன். வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்படுகின்றது என்பதற்கு கண்முன் காணப்படும் உதாரணமாக கொள்க. அந்த சம்பவத்தை பற்றி முழுதும் அறிந்த பலரும் இன்றும் அரசியலில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மை தெரியும். நினைவில் உள்ளதை பகிர விரும்புகின்றேன்.

கவனிக்க. பிரபாகரன், முகுந்தன் (உமா மகேஸ்வரன்) உள்ளிட்ட பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவம் 19-05-1982 அன்று நடந்தது. கடந்த 19.05.1982 அன்று ‘தொட்டால் சுடும்’ என்ற திரைப்படத்தை தி.நகர் ராஜகுமாரி தியேட்டரில் பார்த்து விட்டு அங்குள்ள செலக்ட் ஓட்டலில் இரவு உணவை முடித்துக் கொண்டு பாண்டி பஜாரில் நடந்து செல்லும் போது கீதா கபே முன்பு முகுந்தனும் பிரபாகரனும் இரவு 9.30 மணியளவில் சுட்டுக் கொண்ட போது ஏற்பட்ட சத்தத்தில் பாண்டி பஜாரில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் ஓடி வந்தார்கள்.

கரிகாலன் என்ற பிரபாகரன், ரவீந்திரன் மற்றவர்களையும் பிடித்து பாண்டி பஜாரில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் தப்பித்து ஓடி விட்டார். அவரை இரண்டு நாள் கழித்து கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தார்கள்.

அப்போது அந்த பாண்டி பஜார் காவல் நிலையத்தில் நந்தகுமார் என்ற துணை ஆய்வாளர், பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கியை கையகப்படுத்தினார். ஜோதீஸ்வரன் என்ற கண்ணனும் கைது செய்யப்பட்டார். அங்கு தலைமை காவலர் எஸ். ரெங்கசாமி எண்: HC 3425 இது குறித்தெல்லாம் எழுதி ஆவணப்படுத்தினார். இதெல்லாம் நினைவுகள்.

இந்த வழக்கில் பழ. நெடுமாறன், பிரபாகரன், எனது வாக்குமூலம், முகுந்தன் வாக்குமூலம், இரவீந்திரன் வாக்குமூலம், ஜோதீஸ்வரன் வாக்குமூலம் மற்றும் தெருவில் நடந்துச் சென்ற சிலரின் வாக்குமூலம் மட்டுமே காவல் துறையால் பெறப்பட்டது.

தலைமை காவலர் எஸ். ரெங்கசாமி எண்: HC 3425 இது குறித்தெல்லாம் எழுதி ஆவணப்படுத்தினார். 20, 21 – 05-1982 ஆகிய இருநாட்கள் காவல்துறை மந்தவெளி Admiralty hotel இல் விசாரணை நடைபெற்றது. பின் இது சிபிசிஐடி க்கு மாற்றி கண்காணிப்பாளர் வெள்ளியங்கிரி தலைமையில் புலன் விசாரணை நடந்தது.

103768106_2744494552506883_7101514181963அதற்கு அடுத்த நாள் நானும் பிராபாகரன் தங்கியிருந்த சாலைத்தெரு வீட்டில் 22-05-1982 அன்று டி.ஐ.ஜி மோகன்தாஸ் தலைமையில் ரெய்டு நடத்தப்பட்டது. நான் வழக்கு நடத்தும் ஆவணங்கள், எனது உடமைகளை மற்றும் பிரபாகரனின் ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.

பிரபாகரனை 23-05-1982 அன்று சென்னை மத்திய சிறையில் சந்தித்தேன். அடுத்த நாள் நெடுமாறன் அவர்களுடன் சென்று சந்தித்தேன். 24-07-1982 அன்று வை.கோ அவர்களை அழைத்து சென்று பிரபகரனை சந்தித்தேன். 05-08-1982 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை ஆணை கோரி மனுவை தாக்கல் செய்தேன். அடுத்தநாள் 6-8-1982 நிபந்தனையின் பேரின் பிணை ஆணை கிடைக்கப்பெற்றேன். மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமலையும் நானும் ஆஜர் ஆனோம். நிபந்தனையின் படி பிரபாகரன் மதுரையிலும், முகுந்தன் சென்னையிலும் தங்கி காவல்நிலையத்தில் கையொப்பமிட வேண்டும்.

நெடுமாறன் பிரபாகரனை அழைத்துக் கொண்டு மதுரை சென்றார். மதுரை, மேலவாசி வீதி, விவேகானந்த அச்சகத்திற்கு எதிரே உள்ள தனது பழைய வீட்டில் தங்க வைத்தார் நெடுமாறன். அந்த வீட்டிற்கு அருகில் தான் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி காசிம் வீடும் இருந்தது. இவையாவும் தமிழீழ அரசியல் புரிதல் உள்ள பலருக்கும் தெரியும். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 9 எம்.எல்.ஏ.க்கள் மரணம்… திமுகவில் 5 பேர்… அதிமுகவில் 4 பேர் இந்த வழக்குக்கு பாடுப்பட்ட நெடுமாறன், மற்றும் வை.கோ, மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமலை, எனது ஜூனியரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமானகே.எம்.பாஷா, எனது சீனியர் மாநில வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் ஆர்.காந்தி ஆகியோர் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றார்கள். உயிருடன் இல்லாதவர்களை சாட்சியாக குறிப்பிட விரும்பவில்லை. பாண்டிபஜார் காவல்நிலையத்தின்அன்றைய மூத்த காவலர் எஸ்.ரங்கசாமி (HC3425) ஆகியோரிடம் வழக்கின் போக்கை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். இன்றைக்கும் இந்த ஆவணங்களை வழக்குமன்றத்தில் பார்க்கலாம். SC No.8/1983 on the file of 7th Additional Court ,High Court வளாகத்தில் பார்க்கலாம்.

வரலாறுகளை திரித்து சொல்வதால் இவர்களுக்கு என்ன இலாபம் என அறியேன். அதே சமயத்தில் உண்மையை வெளிக்காட்ட வேண்டிய நிலையும் வரலாறு திரிக்கப்படாமல் காக்கப்பட வேண்டிய அவசியமும் இருக்கின்ற காரணத்தால் இதனை எல்லாம் பதிவு செய்கின்றேன். இத்துடன் காவல்நிலையத்தில் தட்டச்சு செய்யப்பட்ட சிறுபகுதியையும் இணைக்கின்றேன். ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றது. தேவைப்பட்டோர் வந்து பார்த்துக் கொள்ளலாம். இது தான் நடந்தது இது தான் உண்மை. வரலாறு. இதற்கு மேலும் மாற்றிப் பேசினால் என்ன சொல்ல முடியும். இது குறித்தான ஆவணங்களோடு என்னுடைய நினைவுகள் சுவடுகள் என்ற நூலில் விரைவில் வெளிவர இருக்கின்றது. அவ்வளவுதான்.

இது குறித்த பழைய எனது பதிவுகள்: http://ksradhakrishnan.in/?p=2776 http://ksradhakrishnan.in/?p=2770 நீதிமன்றத்தின் உத்தரவுகளை பொதுவெளியில் மாற்றிப் பேசுவதும் சட்டத்துக்குட்பட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும். யார்மீதும் உள்ள மரியாதையை குறைக்கவோ, காயப்படுத்தவோ இப்பதிவை செய்யவில்லை. நான் சம்மந்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி திரித்து பேசப்படும் போது அமைதியாக இருக்க இயலாது அல்லவா? இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

http://www.pagetamil.com/129535/

முடிந்திருந்தால் முழுமையாய் இணைத்திருக்க மாட்டேனா?...கொப்பி,பேஸ்ட் பண்ண கூட முடியாமல் இருந்தது...நன்றி நியாணி முழுமையான இணைப்பிற்கு 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

முடிந்திருந்தால் முழுமையாய் இணைத்திருக்க மாட்டேனா?...கொப்பி,பேஸ்ட் பண்ண கூட முடியாமல் இருந்தது...நன்றி நியாணி முழுமையான இணைப்பிற்கு 
 
 • பிரபா - உமா துப்பாக்கி சண்டை நடைபெற்று எமது ஆயுதப்போராட்ட இயங்கங்களுக்கு இடையிலான சண்டை ஆரம்பித்து வைக்கபட்ட தினம் 19.05.1982.
 • முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தலைவர் பிரபாகரன் இறந்ததாக அறிவிக்கபட்ட தினம் 19.05.2009

நடைபெற்ற இரு துயர நிகழ்வுகளும்  நடைபெற்ற தினம் ஒரே தினம் என்பது ஆச்சரியம் தான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

18.05.2009 ஐ உங்கள் வசதிக்காக மாற்றி அமைக்கிறீர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

18.05.2009 ஐ உங்கள் வசதிக்காக மாற்றி அமைக்கிறீர்கள்.

மீரா, 19.05.2009  செவ்வாய்கிழமை காலை  நாம் ஜெனிவா ஐநா சபை வாசலில் நின்ற போதே இலங்கை அரசாங்கம் யுத்தம் முடிவுக்கு வந்ததாகவும் தலைவர் பிரபாகரன் வீர மரணம் அடைந்த செய்தியையும் அறிவித்தது என்பதால் எனது ஞாபகத்தை தெரிவித்தேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, tulpen said:

மீரா, 19.05.2009  செவ்வாய்கிழமை காலை  நாம் ஜெனிவா ஐநா சபை வாசலில் நின்ற போதே இலங்கை அரசாங்கம் யுத்தம் முடிவுக்கு வந்ததாகவும் தலைவர் பிரபாகரன் வீர மரணம் அடைந்த செய்தியையும் அறிவித்தது என்பதால் எனது ஞாபகத்தை தெரிவித்தேன்.

https://www.google.com/amp/s/amp.theguardian.com/world/2009/may/18/sri-lanka-conflict

துல்பன், 

மே18 என்பது வாழ்நாளில் மறக்கமுடியாதது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

https://www.google.com/amp/s/amp.theguardian.com/world/2009/may/18/sri-lanka-conflict

துல்பன், 

மே18 என்பது வாழ்நாளில் மறக்கமுடியாதது.

நன்றி மீரா.  சரியான தகவல் வராததால் மே 19 ஜெனீவா முன்றலில் கவனயீர்ப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது மே 19 காலை தகவல் வந்து அதை பொய் செய்தி என்றே அங்கு நின்ற எல்லோரும் நம்பினோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, tulpen said:

மீரா, 19.05.2009  செவ்வாய்கிழமை காலை  நாம் ஜெனிவா ஐநா சபை வாசலில் நின்ற போதே இலங்கை அரசாங்கம் யுத்தம் முடிவுக்கு வந்ததாகவும் தலைவர் பிரபாகரன் வீர மரணம் அடைந்த செய்தியையும் அறிவித்தது என்பதால் எனது ஞாபகத்தை தெரிவித்தேன்.

நீங்கள் சொல்வதும் சரி துல்பன் 19ம் திகதி மே தான் எல்லாம் முடிந்தது என்று உத்தியோக பூர்வமாக அறிவித்தார்கள்...19ம் பாராளுமன்றத்தின் முன்னால் நிற்கும் போது அறிவித்து சனம் குளறிக் கொண்டு போனவர்கள்...ஆனால் மீரா சொன்ன மாதிரி 18ம் திகதியோ அல்லது அதற்கு முதலோ எல்லாம் முடிந்து விட்டது😟 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்றைய செய்திகள் இப்படித்தான் இருந்தன.

மகிந்த 19ம் திகதிதான் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வந்திறங்கி மண்ணை முத்தமிட்டு அறிவிப்பைச் செய்ததாக நினைவு.

இந்து print edition 19ஆம் திகதிச் செய்திகளை 20ம் திகதிதான் பிரசுரித்தது.

LTTE wages hopeless battle

MAY 18, 2009 00:00 IST

B. Muralidhar Reddy

No clarity on the fate of its chief Prabakaran

FROM INSIDE THE WAR ZONE: The Sri Lanka military and the remaining cadres of the LTTE on Sunday were engaged in one of the most intense battles witnessed during the 33-month-old phase of Eelam War IV.

Boxed in an area of approximately 600 metres, the Tigers waged a hopeless battle in a bid to prolong the inevitable, if not exactly to save the LTTE top brass.

Military commanders on the front believe that LTTE chief Velupillai Prabakaran is among the top leaders holed up in what could be the last battlefield. However, there was no clarity on the fate of the LTTE chief and the Defence Ministry only talked about the presence of Sea Tigers chief Soosai and other top Tiger leaders in the war theatre

https://www.thehindu.com/todays-paper/LTTE-wages-hopeless-battle/article16598557.ece

LTTE supremo Prabakaran believed dead

MAY 19, 2009 00:00 IST

DENOUEMENT IN SRI LANKA: This photograph released by the Sri Lankan military on Monday shows the battle scene near where LTTE leader Velupillai Prabakaran was believed killed.

B. Muralidhar Reddy

End of Eelam War IV as Tigers are eliminated as a military force

FROM INSIDE THE WAR ZONE: The curtains came down on the 33-month-long Eelam War IV as the Sri Lankan military in the early hours of Monday decimated the military capabilities of the Liberation Tigers of Tamil Eelam, resulting in the death of at least 18 top leaders, presumably including the outfit’s chief Velupillai Prabakaran, in an intense battle that lasted nearly 22 hours.

The military commanders on the ground are unable to officially confirm the death of Prabakaran as they have not been able to trace him or his body in the continuing combing operations. They believe that a body burnt beyond recognition recovered from the battle zone could be that of Prabakaran.

https://www.thehindu.com/todays-paper/LTTE-supremo-Prabakaran-believed-dead/article16599304.ece

Troops recover Prabakaran’s body

MAY 20, 2009 00:00 IST

Nation freed from terrorism: Rajapaksa

FROM INSIDE THE WAR ZONE: Ending all suspense and speculation, the Sri Lankan government on Tuesday afternoon announced that troops engaged in combing operations in the 500-metre stretch along the Mullaithivu coast, where the Tamil Tigers were pitted in the last standoff against the military, have recovered the bodies of LTTE chief Velupillai Prabakaran and Sea Tiger head Soosai.

https://www.thehindu.com/todays-paper/Troops-recover-Prabakaranrsquos-body/article16599887.ece

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 13/6/2020 at 20:59, tulpen said:
 • பிரபா - உமா துப்பாக்கி சண்டை நடைபெற்று எமது ஆயுதப்போராட்ட இயங்கங்களுக்கு இடையிலான சண்டை ஆரம்பித்து வைக்கபட்ட தினம் 19.05.1982.
 • முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தலைவர் பிரபாகரன் இறந்ததாக அறிவிக்கபட்ட தினம் 19.05.2009

நடைபெற்ற இரு துயர நிகழ்வுகளும்  நடைபெற்ற தினம் ஒரே தினம் என்பது ஆச்சரியம் தான்.

சம்பந்தமில்லாமல் எதனை, எதனுடன் ஒப்பிடுகிறீர்கள்?

புதிய தமிழ் புலிகளை, பிரபாகரன் ஆரம்பித்த திகதி 22 மே, 1975.

ஆயுத போராட்டம் முடிந்த தினம் 19 மே 2009

ஒரே மாதத்தில், ஒரே வார காலப்பகுதியில் நடந்த இந்த ஒப்பீடு பொருத்தமானது அல்லவா? 

அதனை விடுத்து, இடையே நடந்த ஒரு சம்பவத்தினை, எந்த அடிப்படையில், இறுதி நாளுடன் தொடர்பு படுத்துகிறீர்கள்.?

The Tamil New Tigers (TNT) was a militant Tamil organization founded by Velupillai Prabhakaran on May 22, 1975

Ended on May 19, 2009

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 12/6/2020 at 15:31, நிழலி said:

அட சீமானின் உடன் பிறவா தம்பி அமீர் சொன்ன தகவலா அது ...அது தான் முழுது தவறாக இருக்கின்றது 

விளக்கமான வீடியோ வை இணைத்தமைக்கு நன்றி ருல்பன் 

மீண்டும் உங்கள் அரைகுறை புரிதல். 😟

அமீர், சீமானுடன் இருக்கிறார் என்று இவர் அடித்து விடுகிறாரே.

தான் சீமானுடனும் பேசுவேன், கமலுடனும் பேசுவேன். நாளை தேவையாயின் ரஜனி கூடவேணும் பேசுவேன், நான், நாம் தமிழர் கட் சியில் இல்லை என்று தனது நிலையினை எப்போதே, தெளிவாக அறிவித்து விட்டாரே.

அமீர், தனது படத்துக்கு பைனான்ஸ் செய்தவர் என்பதால், நன்றி உணர்வுடன், தவறாக சொல்லி இருந்தால், இவர் அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி, சீமானுக்கும் சேறடிக்க முனைகிறார். 🤔

நீங்களும் வழக்கம் போலவே, அவசரமும், அரைகுறை புரிதலுடனுன் பதிவிடுகிறீர்கள். 🤦‍♀️

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:
On 12/6/2020 at 07:31, நிழலி said:

அட சீமானின் உடன் பிறவா தம்பி அமீர் சொன்ன தகவலா அது ...அது தான் முழுது தவறாக இருக்கின்றது 

விளக்கமான வீடியோ வை இணைத்தமைக்கு நன்றி ருல்பன் 

மீண்டும் உங்கள் அரைகுறை புரிதல். 😟

அமீர், சீமானுடன் இருக்கிறார் என்று இவர் அடித்து விடுகிறாரே.

தான் சீமானுடனும் பேசுவேன், கமலுடனும் பேசுவேன். நாளை தேவையாயின் ரஜனி கூடவேணும் பேசுவேன், நான், நாம் தமிழர் கட் சியில் இல்லை என்று தனது நிலையினை எப்போதே, தெளிவாக அறிவித்து விட்டாரே.

அமீர், தனது படத்துக்கு பைனான்ஸ் செய்தவர் என்பதால், நன்றி உணர்வுடன், தவறாக சொல்லி இருந்தால், இவர் அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி, சீமானுக்கும் சேறடிக்க முனைகிறார். 🤔

நீங்களும் வழக்கம் போலவே, அவசரமும், அரைகுறை புரிதலுடனுன் பதிவிடுகிறீர்கள். 🤦‍♀️

தலைப்புக்கு பொருத்தமாக கதைக்க வேண்டும் என்று எங்களுக்குத் தான் அறிவுரை.

 • Thanks 1
 • Haha 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.