Sign in to follow this  
உடையார்

நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !

Recommended Posts

நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !

நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !

நிலக்கடலை... கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் உணவுப் பொருள். இதை தொடர்ச்சியாக  உண்பதால் வாழ்நாள் நீடிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று.


மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பன்னாட்டு உணவுக் கம்பெனிகளின் கடைவிரிப்பால் நம் மரபுசார்ந்த உணவுப் பொருளான நிலக்கடலையைக் கைவிட்டவர்கள் நம்மில் அதிகம் என்றால் அது மிகை இல்லை. குறிப்பாக நிலக்கடலை எண்ணையை முற்றிலும் புறக்கணித்து விட்டோம் என்றே சொல்லலாம். சமையல் எல்லாமே ரீபைண்ட் ஆயில்தானே!    

பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில்தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன  என்பது ஆய்வுகள்  தரும் முடிவு. மேலும்  நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு.

நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !


   
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படும்.மேலும், கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க் கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேற்றில் தடை இருக்காது. .

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. இது, மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையைத்  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவ ஆய்வின் மகத்தான முடிவு.

தினசரி நிலக்கடலையை  30 கிராம் அளவுக்கு  சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் என்பது 20 வருடம் தொடர்ந்து நிலக்கடலையை உண்போரிடையே நடத்தப்பட்ட ஆய்வில்  தெரியவந்துள்ளது.

பொதுவாக, நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்பது நம்மிடையே உள்ள எண்ணம். ஆனால் அது உண்மையல்ல. ஒரு மூட நம்பிக்கையே. மாறாக உடல் எடையை சம நிலையில் வைத்திருக்கும் சக்தி நிலக் கடலைக்கு உண்டு.   எனவே தாரளமாக  நிலக்கடலையைச்   சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. இளமையைப்  பராமரிக்கவும் பயன்படுகிறது.

மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோஅன்  சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன் சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலையில்  பெரியமாற்றம் ஏதும் இல்லாமல்  விற்பனை செய்யப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்பதே உண்மை.

100 கிராம் நிலக்கடலையில் நிறைந்துள்ள சத்துக்கள்:

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்த நாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச் சத்து – 6.50 கிராம்.

எனவே நமது மரபு சார்ந்த நிலக்கடலை உணவு  உண்பதை வழக்கத்திற்குக் கொண்டு வரலாமே!!

- தேவராஜன்

https://www.vikatan.com/government-and-politics/politics/33904-

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் தாய் என்று உன்னைத் தான் - 2 பிள்ளைக்குக் காட்டினேன் மாதா   மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே - 2 மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா - மாதா   காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே - 2 கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ - மாதா பிள்ளை பெறாத பெண்மை தாயானது - 2 அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா    
    • கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழணும் நூறு ஆண்டு எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்... கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு ஓ ஓ ஓஓஒ..... பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ.. எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அது வரை நாமும் சென்றுவிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம் ஓஓஒ ஓஒ பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே (கடவுள் தந்த) நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது கோடையில் இன்று இலையுதிரும் வசந்தங்கள் நாளை திரும்பி வரும் வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் குயில்களின் பாட்டு காற்றில் வரும் முடிவதும் பின்பு தொடர்வதும் இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி...  
    • நினைத்தாலே அருள் கதவு திறந்துவிடும்  
    • கருணா ஆண் மகனாக இருந்தால் நிரூபித்து காட்டட்டும் – செல்வம்   போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணாவால் என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர் ஓர் ஆண் மகனாக இருந்தால் அதை உடனடியாக நிரூபிக்க வேண்டும் என முன்னாள் எம்பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், “கருணா மிகவும் மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார். அவருடைய கருத்துக்கு நான் சவால் விடுகிறேன். அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன். போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாகவும், மதுபானசாலைகள் இருப்பதாகவும் கருணா அம்மான் மிக மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார். உண்மையிலேயே அவர் ஓர் ஆண் மகனாக இருந்தால் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும். அப்படி ஆதாரத்தோடு அவர்கள் நிரூபித்தால் இந்த நிமிடமே நான் இந்த தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன். அரசியலில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ள தயாராக இருக்கின்றேன்.” – என்றார். https://newuthayan.com/கருணா-ஆண்-மகனாக-இருந்தால/