Jump to content

கொரோனா வைரஸ் பாதிப்பு; உலக அளவில் 4வது இடம் நோக்கி பயணிக்கும் இந்தியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு; உலக அளவில் 4வது இடம் நோக்கி பயணிக்கும் இந்தியா
கொரோனா வைரஸ் பாதிப்பு; உலக அளவில் 4வது இடம் நோக்கி பயணிக்கும் இந்தியா
 

உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசுக்கு அமெரிக்கா அதிக இலக்காகி உள்ளது.  அந்நாட்டில் இதுவரை 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  20.6 லட்சத்துக்கும் கூடுதலானோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.


இதனை தொடர்ந்து அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 7.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  பலி எண்ணிக்கை 39 ஆயிரத்து 700க்கும் கூடுதலாக உள்ளது.  3வது இடத்தில் ரஷ்யா (பாதிப்பு எண்ணிக்கை 5.02 லட்சம்), 4வது இடத்தில் இங்கிலாந்து (பாதிப்பு எண்ணிக்கை 2.90 லட்சம்) மற்றும் 5வது இடத்தில் ஸ்பெயின் (பாதிப்பு எண்ணிக்கை 2.89 லட்சம்) ஆகிய நாடுகள் இருக்கின்றன.

இந்த வரிசையில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.  நாட்டில் 2 லட்சத்து 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளனர்.

கடந்த 1ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 10 ஆயிரம் என்ற பாதிப்பு எண்ணிக்கையை இந்தியா சந்தித்து வருகிறது.  இதுவரை பாதிக்கப்பட்டோரில் 3ல் ஒரு பங்கு எண்ணிக்கை இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில் பதிவாகி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.

தொடர்ந்து இந்த எண்ணிக்கை பதிவானால், இந்த வார இறுதிக்குள் 3 லட்சம் என்ற எண்ணிக்கையை அடைந்து இங்கிலாந்து நாட்டை பின்னுக்கு தள்ளி உலக அளவில் 4வது இடம் பிடிக்க கூடிய மோசநிலையை அடையும் சூழல் காணப்படுகிறது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/11151131/Coronavirus-infection-India-is-moving-towards-4th.vpf

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
கொரோனா பாதித்த உலக நாடுகள் வரிசையில் 4-வது இடத்தில் இந்தியா
 
கொரோனா பாதித்த உலக நாடுகள் வரிசையில் 4-வது இடத்தில் இந்தியா
 

புதுடெல்லி

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 2,93,754 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் இங்கிலாந்து 2,91,588 தொற்று நோயாளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்தியா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்த நிலையில் உள்ளது.


மே 24  அன்று  இந்தியா பட்டியலில் 10  இடத்தில் இருந்தது கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நான்காவது இடத்தை அடைய 18 நாட்கள் மட்டுமே ஆகி உள்ளது.

ஜூன் 1 முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.கடந்த 10 நாட்களும் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

ரஷ்யாவில் தற்போது 4.93 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இந்த எண்ணிக்கையானது 7.72 லட்சமாக உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/12062108/India-Crosses-UK-To-Become-Fourth-Worst-Hit-By-Coronavirus.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டிவிட்டது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்த நோயில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1½ லட்சமாக உயர்ந்துள்ளது.
பதிவு: ஜூன் 14,  2020 05:00 AM
புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பல லட்சக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று முதன்முதலில் கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி சீனாவில் இருந்து திரும்பிய கேரள மாணவிக்கு இருப்பது உறுதியானது.

இதையடுத்து இந்தியாவில் காலூன்ற தொடங்கிய கொரோனா, ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் மெதுவாக பரவியது. பின்னர் மெல்ல மெல்ல வேகமெடுக்க தொடங்கி இப்போது காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்துக்கு சென்றுள்ளது.

1½ லட்சம் பேர் ‘டிஸ்சார்ஜ்’

கடந்த மாதம் முழுவதும் தினந்தோறும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 4 இலக்க எண்களில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு 5 இலக்கத்தை எட்டியுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரையிலானா 24 மணி நேரத்தில் மட்டும் 11,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,08,993 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் இதில் 1,54,329 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் தொற்றால் புதிதாக 386 பேர் இறந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,884 அதிகரித்துள்ளது.

3-ல் ஒரு பங்கு பாதிப்பு

நாடு முழுவதும் உள்ள கொரோனா பாதிப்பில் 3-ல் ஒரு பங்கு மராட்டிய மாநிலத்தில்தான் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு மட்டும் இந்த வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,01,141 ஆக உள்ளது. இதில் 47,796 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 3,717 பேரின் உயிரை அங்கு கொரோனா பறித்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,687 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23,409 ஆகவும், பலி எண்ணிக்கை 397 ஆகவும் இருக்கிறது. தேசிய தலைநகர் டெல்லியில் 36,824 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 13,398 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 1,214 ஆக உள்ளது.

குஜராத்தில் 1,415 பேரை கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது. மேற்குவங்காளத்தில் 476 பேரும், மத்தியபிரதேசத்தில் 440 பேரும், உத்தரபிரதேசத்தில் 365 பேரும், ராஜஸ்தானில் 272 பேரும், தெலுங்கானாவில் 174 பேரும், ஆந்திராவில் 80 பேரும், கர்நாடகாவில் 79 பேரும், அரியானாவில் 70 பேரும், பஞ்சாபில் 63 பேரும், ஜம்மு காஷ்மீரில் 53 பேரும், பீகாரில் 36 பேரும், உத்தரகாண்டில் 21 பேரும், கேரளாவில் 19 பேரும், ஒடிசாவில் 10 பேரும், அசாம் மற்றும் ஜார்கண்டில் தலா 8 பேரும், சத்தீஸ்கார் மற்றும் இமாசலபிரதேசத்தில் தலா 6 பேரும், சண்டிகாரில் 5 பேரும், புதுச்சேரியில் 2 பேரும், திரிபுரா, லடாக் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மக்களுக்கு ஆறுதல் தரும் விஷயம்

கொரோனா அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கும் நிலையில், அவர்களுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயம் அந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கைதான். அந்த வகையில், மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதில் இருந்து குணமடைந்தவர்களின் (அடைப்புக்குறிக்குள்) எண்ணிக்கை வருமாறு:-

குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்கள்- 22,527 (குணமடைந்தவர்கள்-15,493), உத்தரபிரதேசம் 12,616 (7,609), ராஜஸ்தான் 12,068 (8,898), மத்தியபிரதேசம் 10,443 (7,201), மேற்குவங்காளம் 10,244 (4,206), கர்நாடகா 6,516 (3,440), அரியானா 6,334 (2,475), பீகார் 6,103 (3,587), ஆந்திரா 5,680 (3,105), ஜம்மு காஷ்மீர் 4,730 (2,086), தெலுங்கானா 4,484 (2,278), அசாம் 3,498 (1,537), ஒடிசா 3,498 (2,474), பஞ்சாப் 2,986 (2,282), கேரளா 2,322 (1,000), உத்தரகாண்ட் 1,724 (947), ஜார்கண்ட் 1,617 (672), சத்தீஸ்கார் 1,429 (550), திரிபுரா 961 (278), இமாசலபிரதேசம் 486 (297), கோவா 463 (69), மணிப்பூர் 385 (77), சண்டிகார் 334 (286), லடாக் 239 (62), புதுச்சேரி 157 (67), நாகாலாந்து 156 (49), மிசோரம் 104 (1), அருணாசலபிரதேசம் 67 (4), சிக்கிம் 63 (2), மேகாலயா 44 (22), அந்தமான் நிகோபர் தீவு 38 (33), தாதர்நகர் ஹவேலி 30 (2).

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் இந்த தகவல்கள் வெளியாகி இருக் கிறது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1½ லட்சமாக உயர்வு.

https://www.dailythanthi.com/News/India/2020/06/14015410/Corona-damage-in-India-has-exceeded-3-lakhs.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியது - கொரோனா பாதிப்பு 3,43,091 ஆக உயர்வு

இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியது - கொரோனா பாதிப்பு 3,43,091 ஆக உயர்வு

 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,43,091 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதில் 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் மட்டும் 10,215 பேர் ஆஸ்பத்திரிகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி இருக்கிறார்கள்.
பதிவு: ஜூன் 17,  2020 04:30 AM
புதுடெல்லி,

கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பல லட்சக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி வருகிறது.


அந்த வகையில் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளான 10,661 பேருடன் சேர்த்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 10,215 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆனதை தொடர்ந்து, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையும் 1,80,013 உயர்ந்து இருக்கிறது.

இந்த வைரசின் பிடியில் சிக்கி மராட்டியத்தில் 178 பேரும், டெல்லியில் 73 பேரும், தமிழகத்தில் 44 பேரும், குஜராத்தில் 28 பேரும், அரியானாவில் 12 பேரும், மேற்குவங்காளத்தில் 10 பேரும், ராஜஸ்தானில் 9 பேரும், மத்தியபிரதேசத்தில் 6 பேரும், ஆந்திரா மற்றும் பஞ்சாபில் தலா 4 பேரும், ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடகாவில் தலா 3 பேரும், தெலுங்கானாவில் 2 பேரும், பீகார், சண்டிகார், இமாசலபிரதேசம் மற்றும் கேரளாவில் தலா ஒருவரும் என மொத்தம் 380 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9,900 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் மராட்டியம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. அங்கு மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 744 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக இருக்கிறது. 42 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி 3-வது இடம் வகிக்கிறது. குஜராத்தில் 24 ஆயிரத்து 55 பேரும், உத்தரபிரதேசத்தில் 13 ஆயிரத்து 615 பேரும், ராஜஸ்தானில் 12 ஆயிரத்து 981 பேரும், மேற்குவங்காளத்தில் 11 ஆயிரத்து 494 பேரும், மத்தியபிரதேசத்தில் 10 ஆயிரத்து 935 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அரியானாவில் 7,722, கர்நாடகாவில் 7,213, பீகாரில் 6,650, ஆந்திராவில் 6,456, ஜம்மு காஷ்மீரில் 5,220, தெலுங்கானாவில் 5,193, அசாமில் 4,158, ஒடிசாவில் 4,055, பஞ்சாபில் 3,267, கேரளாவில் 2,543, உத்தரகாண்டில் 1,845, ஜார்கண்டில் 1,763, சத்தீஸ்காரில் 1,756, திரிபுராவில் 1,086, கோவாவில் 592, இமாசலபிரதேசத்தில் 556, லடாக்கில் 555, மணிப்பூரில் 490, சண்டிகாரில் 354, புதுச்சேரியில் 202, நாகாலாந்தில் 177, மிசோரத்தில் 117, அருணாசலபிரதேசத்தில் 91, சிக்கிமில் 68, மேகாலயாவில் 44, அந்தமான் நிகோபர் தீவில் 41, தாதர்நகர் ஹவேலியில் 36 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

கொரோனா பாதிப்பை போலவே பலி எண்ணிக்கையிலும் மராட்டிய மாநிலமே முதல் இடத்தில் உள்ளது. இந்த வைரசின் கோரப்பிடியில் சிக்கி அங்கு மட்டும் 4,128 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 1,505 பேரும், டெல்லியில் 1,400 பேரும், தமிழகத்தில் 528 பேரும், மேற்குவங்காளத்தில் 485 பேரும், மத்தியபிரதேசத்தில் 465 பேரும், உத்தரபிரதேசத்தில் 399 பேரும், ராஜஸ்தானில் 301 பேரும், தெலுங்கானாவில் 187 பேரும், அரியானாவில் 100 பேரும் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

கர்நாடகாவில் 89, ஆந்திராவில் 88, பஞ்சாபில் 71, ஜம்மு காஷ்மீரில் 62, பீகாரில் 40, உத்தரகாண்டில் 24, கேரளாவில் 20, ஒடிசாவில் 11, அசாம், ஜார்கண்ட், சத்தீஸ்கார் மற்றும் இமாசலபிரதேசத்தில் தலா 8, சண்டிகாரில் 6, புதுச்சேரியில் 5, திரிபுரா, லடாக் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.

மேற்கண்ட தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலையில் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/17015216/In-India-the-number-of-healed--1-lakh-exceeded-80.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு: ஏறக்குறைய 11 ஆயிரம் பேர் பாதிப்பு: மகாராஷ்டிராவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி

covid-19-india-registers-highest-ever-spike-of-2003-deaths-number-of-cases-rise-to-3-54-065 கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 2 ஆயிரத்து 3 பேர் உயிரிழந்துள்ளனர், 10 ஆயிரத்து 974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவிக்கிறது

கரோனா வைரஸால் இதுவரை நாட்டில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 65 ஆக அதிகரி்த்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 935 பேர் குணமடைந்துள்ளனர், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 237 பேர் சிகிச்சையில் உள்ளனர்

கரோனாவுக்கு கடந்த 24மணிநேரத்தில் 2,003 பலியாகியதையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,903 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து மீள்வோர் சதவீதம் 52.79 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,409 பேரும், டெல்லியில் 437 பேரும், தமிழகத்தில் 49 பேரும் பலியாகியுள்ளனர்.

1592370659756.PNG

குஜராத்தில் 28 பேர், உத்தரப்பிரதேசம், ஹரியாணாவில் தலா 18 பேர், மேற்கு வங்கத்தில் 10 பேர், ராஜஸ்தானில் 7 பேர், மத்தியப்பிரதேசத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 5 பேர், தெலங்கானாவில் 4 பேர், சத்தீஸ்கர், பிஹார், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், பஞ்சாப், புதுச்சேரி, உத்தரகாண்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 5,537 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 1,837 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,533 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 476 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 495 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 308 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 528ஆக அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 191 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 417 ஆகவும், ஆந்திராவில் 88 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 94 பேரும், பஞ்சாப்பில் 72 பேரும் பலியாகியுள்ளனர்.

1592370675756.PNG

ஜம்மு காஷ்மீரில் 63 பேரும், ஹரியாணாவில் 118 பேரும், பிஹாரில் 41 பேரும், ஒடிசாவில் 11 பேரும், கேரளாவில் 20 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேரும், ஜார்க்கண்டில் 8 பேரும், உத்தரகாண்டில் 25 பேரும், அசாமில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் 3 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை 57,851 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 019 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 26,782 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 44,688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,500 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 24,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,082 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 13,216 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 11,083 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 14,091 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 11,909 பேரும், ஆந்திராவில் 6,841 பேரும், பஞ்சாப்பில் 3,371 பேரும், தெலங்கானாவில் 5,406 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 5,298 பேர், கர்நாடகாவில் 7,530 பேர், ஹரியாணாவில் 8,272 பேர், பிஹாரில் 6,778 பேர், கேரளாவில் 2,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,236 பேர் குணமடைந்துள்ளனர்.

1592370690756.PNG

ஒடிசாவில் 4,163பேர், சண்டிகரில் 358 பேர் , ஜார்க்கண்டில் 1,839 பேர், திரிபுராவில் 1,092 பேர், அசாமில் 4,319 பேர், உத்தரகாண்டில் 1,942 பேர், சத்தீஸ்கரில் 1,781 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 560 பேர், லடாக்கில் 649 பேர், நாகாலாந்தில் 179 பேர், மேகாலயாவில் 44 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 99 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 121 பேர், சிக்கிமில் 70 பேர், மணிப்பூரில் 500 பேர், கோவாவில் 629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/india/559809-covid-19-india-registers-highest-ever-spike-of-2003-deaths-number-of-cases-rise-to-3-54-065-4.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிசோதனையில் பாதிப்பு விகிதம் அதிகரிப்பு; இந்தியாவில் கொரோனா வேகமாகபரவுவதை காட்டுகிறது

பரிசோதனையில் பாதிப்பு விகிதம் அதிகரிப்பு; இந்தியாவில் கொரோனா வேகமாகபரவுவதை காட்டுகிறது

 

கொரோனா பரிசோதனையில் பாதிப்பு விகிதம் அதிகரித்து வருவது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்பதை காட்டுகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
பதிவு: ஜூன் 19,  2020 10:29 AM
புதுடெல்லி 

நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையில் கொரோனா பாதிப்பு சராசரி வீதம் மே 17 ஆம் தேதியில் இருந்து ஜூன் 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 4.6 சதவீதத்திலிருந்து 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது, ஆனால் இந்த உயர்வு டெல்லி மற்றும் அரியானா போன்ற மாநிலங்களில் ஆபத்தை உணர்த்துகிறது.

டெல்லியில், பரிசோதனையில் நேர்மறை விகிதம் மே 17 அன்று 7 சதவீதத்தில் இருந்து ஜூன் 17 அன்று 31.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு 100 பரிசோதனைகளுக்கும் ஏழு நபர் கொரோனாவால் பாதிக்கபட்டது கண்டறியப்பட்டது. இது இப்போது 100 இல் 31 ஆக உயர்ந்துள்ளது.

ஜூன் 18 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவுக்கு 6426627  மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன, நேற்று ஒரே நாளில் 1,76,959 மாதிரிகள் பரிசோதிக்கபட்டு உள்ளது. மொத்த பரிசோத்னைகளில் 3.70 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக ஜனவரி மாதத்தில் சோதனை தொடங்கியதிலிருந்து ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 5.9 சதவீதம் ஆகும்.

கொரோனா பாதிப்பு விகிதத்தின் அதிகரிப்பு சமூகத்தில் வைரஸ் பரவுகிறது என்பதை காட்டுகிறது என்று  நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

“பரிசோதனையில் நேர்மறை விகிதத்தம் அதிகரிப்பு என்பது சமூகத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் பிரதிபலிப்பாகும்”என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் வைராலஜி மேம்பட்ட ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் டி. ஜேக்கப் ஜான் கூறினார், 

மோசமான பாதிப்புக்குள்ளான 10 மாநிலங்களில், டெல்லி நேர்மறை விகிதத்தில் மிகப்பெரிய மாற்றத்தை காட்டுகிறது. (மே 17 அன்று 7 சதவீதம்  முதல் ஜூன் 17 வரை 31 சதவீதம் வரை), அரியானா (1 சதவீதம் முதல் 10.1 சத்வீதம் வரை) மற்றும் தமிழகம் (4.2 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை)

நேர்மறை விகிதம் மராட்டியத்தில் மே 17 அன்று 16.4 சதவீதத்திலிருந்து ஜூன் 17 அன்று 21.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எவ்வாறாயினும், மோசமான பாதிப்புக்குள்ளான 10 மாநிலங்களில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் மட்டுமே குறைவான நேர்மறை விகிதத்தை அறிவித்தன - ஓரளவு என்றாலும். குஜராத்தில் இது 11.3 சதவீதத்திலிருந்து 10.1 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 2.2 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகவும், மத்திய பிரதேசத்தில் 4.3 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகவும் உள்ளது

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/19102958/Positivity-rate-rises-nationwide-pointing-to-faster.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 14,516 புதிய தொற்றுகளுடன் இந்தியா மிகப்பெரிய உயர்வு

கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 14,516 புதிய தொற்றுகளுடன் இந்தியா மிகப்பெரிய உயர்வு

 

கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 14,516 புதிய தொற்றுகளுடன் இந்தியா மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.
பதிவு: ஜூன் 20,  2020 09:56 AM
புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கடந்த  24 மணி நேரத்தில்  புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 14 516 ஆக உள்ளது.இதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,95,048ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 375 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள்மொத்த  எண்ணிக்கை 12,948ஆக உயர்ந்து உள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,13,831 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மாநிலம் வாரியாக கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை

மராட்டியம் - 1,24,331
தமிழ்நாடு - 54,449 
டெல்லி - 53,116
குஜராத் - 26,141
ராஜஸ்தான் - 14,156
உத்தர பிரதேசம் - 15,785 
மத்திய பிரதேசம் - 11,582
மேற்குவங்காளம் - 13,090
தெலங்கானா - 6,526 
கர்நாடகா - 8,281 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/20095604/14516-Coronavirus-Cases-In-India-In-24-hours-In-Steepest.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஒரே நாளில் 15,400 பேருக்கு தொற்று!

coronajihad-india-coronavirus-islamophobia-960x632.jpg?189db0&189db0

கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 400 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவின் நாளாந்த கொரோனா தொற்று நிலைகளில் அதிகூடிய தொற்று பதிவாகிய நாளாக கடந்த 24 மணிநேரம் அமைந்துள்ளது.

இன்று (21) காலை 8.00 மணி வரையான நிலவரங்களின் அடிப்படையில் இந்திய மத்திய சுகாதார அமைச்சால் வெளியிட்ப்பட் கொரோனா நிலவர அறிக்கையின் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 400 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 10 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 306 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இரண்டு இலட்சத்து 27 ஆயிரத்து 756 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/இந்தியாவில்-ஒரே-நாளில்-15400-ப/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,933 பேர் பாதிப்பு; 312 பேர் உயிரிழப்பு

கொரோனா : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,933 பேர் பாதிப்பு;  312 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,40,215 ஆக உயர்ந்து உள்ளது; 312 பேர் உயிரிழந்து உள்ளனர்.
பதிவு: ஜூன் 23,  2020 10:26 AM
புதுடெல்லி

உலகம் முழுவதும் 91 லட்சத்து 85 ஆயிரத்து 974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 74ஆயிரத்து 257 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 49 லட்சத்து 21 ஆயிரத்து 380 பேர் குணமாகியுள்ளனர்.


இந்தியாவில் 24 மணி நேரத்தில் 14,933 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு மொத்தம்  440,215 ஆக உயர்ந்து உள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 312 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் இதுவரை 14,011 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். .இதுவரை 2,48,190 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்

கடந்த நான்கு வாரங்களாக இந்தியாவின் நேர்மறை விகிதம் (கொரோனா பரிசோதனை  நடத்தும் நபர்களின் எண்ணிக்கை) அதிகரித்து வருகிறது. இது மே 24 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 5.37 சதவீதத்திலிருந்து ஜூன் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 7.74 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/23102618/Covid19-tally-in-India-tops-44-lakh-death-toll-mounts.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Country,
Other
Total
Cases
New
Cases
Total
Deaths
New
Deaths
Total
Recovered
Active
Cases
Serious,
Critical
Tot Cases/
1M pop
Deaths/
1M pop
Total
Tests
Tests/
1M pop
Population
  World 9,192,751 +11,876 474,445 +961 4,939,422 3,778,884 57,902 1,179 60.9      
1 USA 2,388,153   122,610    1,002,929 1,262,614 16,510 7,216 370 29,013,182 87,664 330,959,930
2 Brazil 1,111,348   51,407    594,104 465,837 8,318 5,229 242 2,510,717 11,814 212,525,202
3 Russia 592,280   8,206    344,416 239,658 2,300 4,059 56 17,289,691 118,477 145,933,256
4 India 440,685 +235 14,015    248,190 178,480 8,944 319 10 7,137,716 5,173 1,379,678,183
5 UK 305,289   42,647    N/A N/A 330 4,498 628 8,029,757 118,296 67,878,273
6 Spain 293,584   28,324    N/A N/A 617 6,279 606

 

இன்னும் இரண்டு நாளில் 3வது இடத்துக்கு வந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 15,968 ஆக உயர்வு

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 15,968  ஆக உயர்வு

 

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஒரு நாள் பாதிப்பு 15,968 ஆக உயர்ந்து உள்ளது.
பதிவு: ஜூன் 24,  2020 10:38 AM
புதுடெல்லி
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,968 புதிய கொரோனா பாதிப்புகள்  மற்றும் 465 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது அதிகபட்ச ஒருநாள் கொரோனா பாதிப்பாகும்.  கொரோனா தொற்றுநோய் 456,183 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
ஒரு மாதத்திற்குள் கொரோனா பாதிப்பு 265,648 ஆக உயர்ந்து உள்ளது ஜூன் 1 அன்று இந்த எண்ணிக்கை 190,536 ஆக இருந்தது. அன்று உயிரிழப்பு எண்ணிக்கை  5,394 ஆக இருந்தது. இது இன்று எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கொரோனா பாதிப்புக்கு 183,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,495 பேர் இதுவரை குணமாகியுள்ளனர். இந்தியாவின் மீட்பு விகிதம் இப்போது 56.70% ஆகும்.
 
இந்தியாவின் கொரோனா பாதிப்புகளில்  பெரும்பாலானவை மராட்டியம், டெல்லி, தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் இருந்து வந்தவை, அவை தொற்றுநோய்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான உயர்வைக் காட்டுகின்றன.
 
உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையை மேற்கோள் காட்டி, உலகில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு மிகக் குறைந்த இறப்புகளில் இந்தியா ஒன்று இருப்பதாக சுகாதார அமைச்சகம்  தெரிவித்துள்ளது.
 
ஒரு லட்சம் மக்கள்தொகையில் இந்தியாவின் இறப்பு  1 அதன் 1 ஆக உள்ளது. உலக சராசரி 6.04 ஆகவும் உள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

corona-3.jpg

ஒரே நாளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று – ஆசிய நாடுகளில் முதலிடத்தில் இந்தியா

ஆசியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், ஆசிய நாடுகளிலும் பெரும் மனித அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆசிய நாடுகளைப் பொறுத்தமட்டில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதேநேரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை அண்மிக்கிறது.

ஆசிய நாடுகளில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது.

அதனையடுத்து ஈரான், துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளன என்பதுடன், இலங்கை 31ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக நேற்று ஒரேநாளில் 16 ஆயிரத்து 870இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து 72 ஆயிரத்து 985இற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

அதேநேரம் அங்கு இந்த வைரஸ் தொற்றினால் நேற்று 424 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 907 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையில், 2 இலட்சத்து 71 ஆயிரத்து 688 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகராஷ்டிரா, டெல்லி, தமிழகம் ஆகியன விளங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஒரே-நாளில்-16-ஆயிரத்து-மேற்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இதுவரைஇல்லாத வகையில் 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 17 ஆயிரம் பேர் கரோனாவில் பாதிப்பு: 15 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

highest-ever-daily-jump-in-covid-19-cases-death-toll-rises-by-418 படம்: ஐஏஎன்எஸ்

புதுடெல்லி


இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 17 ஆயிரம் பேர் அதாவது 16 ஆயிரத்து 922 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 418 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 6-வது நாளாக 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கரோனாவிலிருந்து மீண்டு, வீடுதிரும்பியோர் எண்ணிக்கை 2 லட்சத்து71 ஆயிரத்து 696 ஆக உயர்ந்துள்ளது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைவது 57.43 சதவீதமாக உயர்ந்துள்ளது

1593062655756.PNG

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 418 பேர் உயிரிழந்துள்ளனர், இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 14ஆயிரத்து 894 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 208 பேர், டெல்லியில் 64 பேர், தமிழகத்தில் 33 பேர், குஜராதத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் 14 பேர், மேற்கு வங்கத்தி்ல் 11 பேர், ராஜஸ்தான், ஹரியாணாவில் 10 பேர், மத்தியப்பிரதேசத்தில் 9 பேர், உத்தரப்பிரதேசம், பஞ்சாபில் தலா 8 பேர், ஆந்திரா, தெலங்கானா, உத்தரகாண்டில் தலா 5 பேர், பிஹார், கோவா, ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவர் உயிரிழந்தனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 6,739 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 2,365 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,735 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 866 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 591 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 534 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 596 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 375 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 225 ஆகவும், ஹரியாணாவில் 188 ஆகவும், ஆந்திராவில் 124 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 164 பேரும், பஞ்சாப்பில் 113 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 88 பேரும், பிஹாரில் 57 பேரும், ஒடிசாவில் 17 பேரும், கேரளாவில் 22 பேரும், உத்தரகாண்டில் 35 பேரும் , இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேரும், ஜார்க்கண்டில் 11 பேரும், அசாமில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.

1593062667756.PNG

மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் 9 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 73,792 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,390 பேராக அதிகரித்துள்ளது. 41,437 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 468 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 37,763 ஆகவும் அதிகரித்துள்ளது.

4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 28,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,088 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 16,009 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 12,448 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 19,557 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 15,173 பேரும், ஆந்திராவில் 10,331 பேரும், பஞ்சாப்பில் 4,627 பேரும், தெலங்கானாவில் 10,444 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 6,422 பேர், கர்நாடகாவில் 10,118 பேர், ஹரியாணாவில் 12,010 பேர், பிஹாரில் 8209 பேர், கேரளாவில் 3,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,888 பேர் குணமடைந்துள்ளனர்.

1593062680756.PNG

ஒடிசாவில் 5,752 பேர், சண்டிகரில் 420 பேர், ஜார்க்கண்டில் 2,207 பேர், திரிபுராவில் 1,259 பேர், அசாமில் 6,198 பேர், உத்தரகாண்டில் 2,623 பேர், சத்தீஸ்கரில் 2,419 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 806 பேர், லடாக்கில் 941 பேர், நாகாலாந்தில் 347 பேர், மேகாலயாவில் 46 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹாவேலியில் 120 பேர், புதுச்சேரியில் 461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 166 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 142 பேர், சிக்கிமில் 79 பேர், மணிப்பூரில் 970 பேர், கோவாவில் 951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/india/561059-highest-ever-daily-jump-in-covid-19-cases-death-toll-rises-by-418-5.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது; இறப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது; இறப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 508953 ஆக உயர்ந்துள்ளது; இறப்பு எண்ணிக்கை 15685 ஆக உயர்ந்து உள்ளது.
பதிவு: ஜூன் 27,  2020 10:36 AM
 
 
புதுடெல்லி
 
மத்திய சுகாதாரத்துறை தகவல்படி  இந்தியாவில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை சனிக்கிழமையன்று 5 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  இது வரை இல்லாத வகையில் ஒரு நாள் பாதிபாக 18552 பாதிப்புகள் பதிவாகி உள்ளது. மேலும் 384 இறப்புகள் பதிவு செய்துள்ளது
 
 
மொத்தம் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் 508953 ஆகும், இதில் 197387 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 295881 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மொத்த இறப்புகள் 15685 ஆகும்.இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீட்பு விகிதம் 58.13 சதவீதமாக உள்ளது என தெரிவித்து உள்ளது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதிகபட்சமாக மராட்டி மாநிலத்தில் ஒரே நாளில் 5024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு  ஆளானோரின் எண்ணிக்கை 1,52,765 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 175 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
 
டெல்லியில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 3 ,460 ஆக இருந்தது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 77, 240 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரே நாளில் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை டெல்லியில் மொத்த உயிரிழப்பு 2,492 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டு உள்ள தகவலில் ஜூன் 26 வரை கொரோனா இருக்கிறதா என பரிசோதனை  நடத்திய மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 79,96,707; ஆக உள்ளது. நேற்று ஒருநாள் மட்டும் 2,20,479 மாதிரிகள் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது என கூறி உள்ளது.
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 5.28 லட்சமாக உயர்வு

இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 5.28 லட்சமாக உயர்வு

இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த பாதிப்பு 5.28 லட்சமாக உயர்ந்துள்ளது. பலி 16 ஆயிரத்தை கடந்தது.
பதிவு: ஜூன் 29,  2020 04:45 AM
புதுடெல்லி,

இந்தியாவில் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தொடர் ஊரடங்குக்கு பின்னர் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் ‘அன்லாக்-1’ என்ற பெயரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அவை இந்த மாத தொடக்கம் முதல் அமலுக்கு வந்தன. சரிந்து வந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கிய பின்னர் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும், சொல்லி வைத்தாற்போல தொற்று புதிய உச்சம் தொட்டு வருகிறது. நேற்று தொடர்ந்து 5-வது நாளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஒரே நாளில் மொத்தம் 19 ஆயிரத்து 906 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் நாடு முழுவதும் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 859 ஆனது.தொற்று பாதிப்பில் மராட்டியம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 133 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ள டெல்லியில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 188 ஆகவும், மூன்றாம் இடம் வகிக்கிற தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆகவும் இருக்கிறது. தமிழகத்தை தொடர்ந்து குஜராத்தில் 30 ஆயிரத்து 709 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 21 ஆயிரத்து 549 பேருக்கும், ராஜஸ்தானில் 19 ஆயிரத்து 944 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 16 ஆயிரத்து 711 பேருக்கும் தொற்று இருக்கிறது.

மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உள்ள மாநிலங்களின் பட்டியலில் தெலுங்கானா (13,436). அரியானா (13,427), மத்திய பிரதேசம் (12,965), ஆந்திரா (12,285), கர்நாடகம் (11,923) ஆகியவை உள்ளன. கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 410 ஆகும். இதில் மராட்டியத்தில் அதிகபட்சமாக 167 பேரும், தமிழகத்தில் 68 பேரும், டெல்லியில் 66 பேரும் இறந்துள்ளனர்.

பிற மாநிலங்களை பொறுத்தவரையில் உத்தரபிரதேசத்தில் 19 பேரும், குஜராத்தில் 18 பேரும், மேற்கு வங்காளத்தில் 13 பேரும், ராஜஸ்தான், கர்நாடகத்தில் தலா 11 பேரும், ஆந்திராவில் 9 பேரும், அரியானாவில் 7 பேரும், பஞ்சாப், தெலுங்கானாவில் தலா 6 பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும், ஜம்மு காஷ்மீரில் 2 பேரும், பீகார், ஒடிசா மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 95 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு பக்கம் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், குணம் அடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்கிறது. அந்த வகையில் தொற்று பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்து 51 ஆக இருக்கிறபோது, குணம் அடைந்தோரின் எண்ணிக்கை அதை விட 1 லட்சம் அதிகரித்து 3 லட்சத்து 9 ஆயிரத்து 712 ஆக உள்ளது. சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைவோரின் அளவு 58.56 சதவீதமாக உள்ளது. இது மாநிலங்களுடன் சேர்ந்து மத்திய அரசு எடுத்துள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் விளைவாக நடந்திருப்பதாகவும், இது ஊக்கம் அளிக்கத்தக்க விதத்தில் அமைந்திருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த டெல்லி, கோவா, ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தப்படுகிறது. அந்த வரிசையில் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களும் சேரப்போவதாக அறிவித்துள்ளன.

மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து தொற்று பரவல் அசுரவேகம் எடுத்துள்ள நிலையில், மும்பை மாநகர மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு அப்பால் நடை பயிற்சிக்கோ, கடைகளுக்கோ, சலூன் கடைகளுக்கோ செல்ல தடை விதித்துள்ளது. 2 கி.மீ. தொலைவை கடந்து அலுவலகம் அல்லது மருத்துவ காரணங்களுக்காக செல்ல முன் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் கொரோனா நெருக்கடி முடிவுக்கு வராததால் கட்டுப்பாடுகள் வரும் 30-ந் தேதிக்கு பின்னரும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தொடர்ந்து காட்டுத்தீ போல கொரோனா பரவும்நிலையில், கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 218-ல் இருந்து 417 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி, 2,45 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில், பெங்களூருவில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/29025425/Corona-hits-20-thousand-people-in-a-single-day-in.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகளவில் 3-வது இடம்: இந்தியாவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தை நெருங்குகிறது;4-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாஸிட்டிவ்

single-day-jump-of-24-248-covid-19-cases-pushes-india-s-tally-close-to-7-lakh-mark கோப்புப்படம்

புதுடெல்லி


கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-வது இடத்துக்கு சென்றது மட்டுமல்லாமல் கரோனாாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்குகிறது.

இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 24 ஆயிரத்து 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 425 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 4-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதி்க்கப்பட்டு வருகின்றனர்

கரோவானால் இதுவரை ஒட்டுமொத்தமாக 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 432 பேர் குணமடைந்துள்ளனர், 2 லட்சத்து 53 ஆயிரத்து 287 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோர் சதவீதம் 60.85 ஆக அதிகரித்துள்ளது

1594012618756.PNG

கரோனாவால் மோசமாக பாதி்கப்பட்ட நாடுகளில் அமெரி்க்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் தற்போது இந்தியா இடம் பெற்றுள்ளது. ரஷ்யா 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது


இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 8,822 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,067 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,943 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,510 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 757 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 608 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 785 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 456 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 295 ஆகவும், ஹரியாணாவில் 265 ஆகவும், ஆந்திராவில் 232 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 372 பேரும், பஞ்சாப்பில் 164 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 132 பேரும், பிஹாரில் 95 பேரும், ஒடிசாவில் 36 பேரும், கேரளாவில் 25 பேரும், உத்தரகாண்டில் 42 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 19 பேரும், அசாமில் 14 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 12 பேர் உயிரிழந்தனர்.

1594012628756.PNG

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,11.740 ஆக உயர்ந்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 62,778 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99,444 பேராக அதிகரித்துள்ளது. 71,359 பேர் குணமடைந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 36,037 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,892 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 18,662 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 14,930 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 27,707 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 22,126 பேரும், ஆந்திராவில் 18,697 பேரும், பஞ்சாப்பில் 6,283 பேரும், தெலங்கானாவில் 23,952 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 8,429 பேர், கர்நாடகாவில் 23,479 பேர், ஹரியாணாவில் 17,005 பேர், பிஹாரில் 11,876 பேர், கேரளாவில் 5,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,174 பேர் குணமடைந்துள்ளனர்.

1594012639756.PNG

ஒடிசாவில் 9,070 பேர், சண்டிகரில் 450 பேர், ஜார்க்கண்டில் 2,584 பேர், திரிபுராவில் 1,568 பேர், அசாமில் 11,388 பேர், உத்தரகாண்டில் 3,124 பேர், சத்தீஸ்கரில் 3,207 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,063 பேர், லடாக்கில் 1,005 பேர், நாகாலாந்தில் 590 பேர், மேகாலயாவில் 62 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹாவேலியில் 271 பேர், புதுச்சேரியில் 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 331 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 186 பேர், சிக்கிமில் 123 பேர், மணிப்பூரில் 1,366 பேர், கோவாவில் 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/india/562930-single-day-jump-of-24-248-covid-19-cases-pushes-india-s-tally-close-to-7-lakh-mark-4.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது.
பதிவு: ஜூலை 07,  2020 09:44 AM
புதுடெல்லி,

இந்தியாவில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி பாதிப்பு சராசரியாக 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 22,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 467 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,19,665- ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,160 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,39, 948 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்புடன் நாடு முழுவதும் 2,59, 557 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜூலை 6 ஆம் தேதி வரை 1 கோடியே 2 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/07094452/India-covid-19-tally-crosses-7-laks.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் 7½ லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 7½ லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7½ லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், அதில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4½ லட்சத்தை தாண்டி இருக்கிறது.
பதிவு: ஜூலை 09,  2020 04:15 AM
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்துக்குள் 22 ஆயிரத்து 752 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 42 ஆயிரத்து 417 ஆக உயர்ந்துள்ளது.


இதே 24 மணி நேரத்துக்குள் 16 ஆயிரத்து 883 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 831 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் புதிதாக 482 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 642 ஆக உயர்ந்து இருக்கிறது.

பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கும் மராட்டியத்தில் 9,250 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 121 ஆக இருக்கும் நிலையில், இதில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 558 பேர் குணமடைந்துவிட்டனர்.

தமிழகத்தில் புதிதாக பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் சேர்த்து 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதில் 74 ஆயிரத்து 167 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். 3-வது இடத்தில் இருக்கும் டெல்லியில் பாதிப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 831 ஆகவும், பலி எண்ணிக்கை 3,165 ஆகவும் உள்ளது. அங்கு நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் 26,815 பேரும், ஆந்திராவில் 21,197 பேரும், கேரளாவில் 5,894 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அதே நேரத்தில் கர்நாடகாவில் 416 பேரையும், ஆந்திராவில் 252 பேரையும், கேரளாவில் 27 பேரையும் கொரோனா காவு வாங்கி இருக்கிறது. புதுச்சேரியில் 930 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருக்கும் வேளையில், அங்கு 14 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தங்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர்.

இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09031338/Corona-damage-affecting-7-lakhs-in-India.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது

 

இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதிவு: ஜூலை 10,  2020 09:37 AM
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.  இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  7,93,802-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26,506-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒருநாளில்  பதிவாகும் உச்சபட்ச எண்ணிக்கை இதுவாகும்.  அதேபோல், கடந்த ஒரு 24 மணி நேரத்தில் 475 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21,604- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  4,95,513- ஆக உள்ளது. அதேபோல், நாடு முழுவதும் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை  2,76,685 - ஆக உள்ளது. 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10093707/India-reports-475-deaths-and-the-highest-singleday.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் புதிய உச்சம்: கடந்த 24 மணி நேரத்தில் 27,114 -பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் புதிய உச்சம்: கடந்த 24 மணி நேரத்தில் 27,114 -பேருக்கு கொரோனா தொற்று

 

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
பதிவு: ஜூலை 11,  2020 09:59 AM
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.  இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  8,20,916-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,114 -பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒருநாளில்  பதிவாகும் உச்சபட்ச எண்ணிக்கை இதுவாகும்.  அதேபோல், கடந்த ஒரு 24 மணி நேரத்தில் 519 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,123- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5,15,386     - ஆக உள்ளது. அதேபோல், நாடு முழுவதும் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,83,407  - ஆக உள்ளது.    

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/11095936/India-reports-the-highest-single-day-spike-of-27114.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மராட்டியத்தில் கவர்னர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டியத்தில் கவர்னர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

 

மராட்டியத்தில் கவர்னர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பதிவு: ஜூலை 12,  2020 16:04 PM
புனே,

மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  மராட்டிய கவர்னராக பகத் சிங் கோஷ்யாரி இருந்து வருகிறார்.  நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்திலும், மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களில் அதிக அளவிலான பாதிப்புகளும் உள்ளன.


மராட்டிய காவல் துறையில் கொரோனா பாதிப்புகளால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.  6 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.  மராட்டியத்தின் புனே மாவட்டத்துக்கு உட்பட்ட 22 கிராமங்கள், பிம்ப்ரி சின்ச்வாட் பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாளை (13ந்தேதி) முதல் 23ந்தேதி வரை 2 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

தொடர்ந்து மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், கவர்னர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  எனினும், கவர்னருக்கு பாதிப்பு இல்லை என தகவல் தெரிவிக்கின்றது.

இதுபற்றி கவர்னர் கோஷ்யாரி கூறும்பொழுது, நான் நலமுடனே இருக்கிறேன்.  அதனால், சுய தனிமப்படுத்துதலில் இல்லை.  கொரோனா பரிசோதனைகள் நடந்ததில் எனக்கு பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.  அதற்கான அறிகுறிகளும் இல்லை.  நான் தனிமைப்படுத்தி கொண்டேன் என வெளியான தகவலில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/12160454/Coronation-affects-16-in-Maharashtra-governors-palace.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை தாண்டியது

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை தாண்டியுள்ளது.
பதிவு: ஜூலை 15,  2020 05:00 AM
புதுடெல்லி, 
 
இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக தினமும் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதியாகி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் இந்த 28 ஆயிரத்து 498 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன், புதிதாக 553 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 6 ஆயிரத்து 752 ஆகவும், பலி எண்ணிக்கை 23 ஆயிரத்து 727 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.
 
இந்தியாவில் 1 லட்சம் பேரை பாதிப்புக்குள்ளாக்க முதலில் கொரோனா 110 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஆனால் அதில் பாதி நாட்களில், அதாவது 56 நாட்களிலேயே மேலும் 8 லட்சம் பேரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி இருக்கிறது இந்த ஆட்கொல்லி வைரஸ். நாட்டில் கடந்த 11-ந் தேதி கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது. இந்த நிலையில் 3 நாளில் அந்த எண்ணிக்கை 9 லட்சத்தை தொட்டுவிட்டது.
 
ஒட்டுமொத்த மக்களும் கொரோனாவால் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயமாக இந்த நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கைதான் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த நோய்க்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 460 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3 லட்சத்து 11 ஆயிரத்து 565 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருந்து வரும் மராட்டிய மாநிலத்தில், தினந்தோறும் வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே நாளில் சுமார் 6,500 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 193 பேர் தங்கள் இன்னுயிரை பறிகொடுத்துள்ளனர். இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 482 பேர் அங்கு கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
 
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆகவும், பலி 2,099 ஆகவும் இருந்து வருகிறது. 3-வது இடத்தில் இருக்கும் டெல்லியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3,411 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
 
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா 5-வது இடத்துக்கும், ஆந்திரா 9-வது இடத்துக்கும் சென்றுள்ளது. கேரளாவில் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த நிலையில், தற்போது அங்கும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,531 ஆக உள்ளது.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு; 3 நாட்களில் 8 லட்சத்தில் இருந்து 9 லட்சம் ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு; 3 நாட்களில் 8 லட்சத்தில் இருந்து 9 லட்சம் ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 நாட்களில் 8 லட்சத்தில் இருந்து 9 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பதிவு: ஜூலை 15,  2020 17:26 PM
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்பு பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 20,572 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருநாள் பாதிப்பு 29,429 ஆக உயர்ந்து 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது.


இதனால், பாதிப்பு எண்ணிக்கை 9,06,752ல் இருந்து 9,36,181 ஆக அதிகரித்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் மராட்டியம் மற்றும் தமிழகம் கொரோனா பாதிப்புகளுக்கு அதிக இலக்காகி உள்ளன.  மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதம் இந்த மாநிலங்களில் உள்ளன.  நாட்டின் மொத்த சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையான 3,11,565 பேரில் 1,54,134 பேர் இந்த இரு மாநிலங்களிலும் உள்ளனர்.

இதுதவிர கர்நாடகா, டெல்லி, ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் அதிகம் சிகிச்சை பெறுவோரை கொண்ட பிற மாநிலங்கள் ஆகும்.  இவை 1,11,068 என்ற எண்ணிக்கையுடன் 36 சதவீதம் அளவுக்கு உள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 9 லட்சத்து 6 ஆயிரத்து 752 ஆக உயர்ந்தது.  இது, 8 லட்சம் என்ற எண்ணிக்கையை தொட்டு 3 நாட்களில் 9 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதனால், பல மாநிலங்கள் ஊரடங்கை மீண்டும் அறிவித்து உள்ளன.  கர்நாடகா, தமிழகம், கேரளா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், மராட்டியம், அசாம், மேற்கு வங்காளம், அருணாசல பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பல்வேறு கால கட்டங்களில் பகுதிவாரியாக ஊரடங்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/15172602/Corona-vulnerability-in-India-Increase-from-8-lakhs.vpf

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு: ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா உறுதி - பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு: ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா உறுதி - பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியது

 

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
பதிவு: ஜூலை 17,  2020 04:30 AM
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவால் தினந்தோறும் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை வெளியிடப்பட்ட புள்ளிவிவர பட்டியலில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 32 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதம் பேர், மராட்டியம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், டெல்லி, தெலுங்கானா, மேற்குவங்காளம், மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


புதிதாக நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களுடன் சேர்த்து, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 லட்சத்து 12 ஆயிரத்து 815 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். நாடு முழுவதும் இன்னும் 3 லட்சத்து 31 ஆயிரத்து 146 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதிதாக 606 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன், புதிதாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் (அடைப்புக்குறிக்குள்) காணலாம்

மராட்டியம் பாதிப்பு 7,975 (உயிரிழப்பு 233), தமிழ்நாடு 4,496 (68), கர்நாடகா 3,176 (41), ஆந்திரா 2,432 (86), உத்தரபிரதேசம் 1,659 (10), டெல்லி 1,647 (29), தெலுங்கானா 1,597 (11), மேற்குவங்காளம் 1,589 (44), பீகார் 1,328 (20), குஜராத் 915 (5), ராஜஸ்தான் 866 (7), அசாம் 859 (6), அரியானா 678 (6), மத்தியபிரதேசம் 638 (9), கேரளா 623 (1), ஒடிசா 618 (3), ஜம்மு காஷ்மீர் 493 (11), பஞ்சாப் 288 (8), ஜார்கண்ட் 229 (2), கோவா 198, சத்தீஸ்கார் 160, உத்தரகாண்ட் 99, திரிபுரா 98 (1), புதுச்சேரி 65 (3), லடாக் 49, இமாசலபிரதேசம் 32, மணிப்பூர் 28, மேகாலயா 28, சண்டிகார் 25 (1), தாதர்நகர் ஹவேலி 19 (1), சிக்கிம் 11, அந்தமான் நிகோபார் தீவு 10, நாகாலாந்து 6.

ஒட்டுமொத்தமாக நாட்டில் கொரோனா பாதிப்பு 9¾ லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், அதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 2¾ லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிப்பு 1½ லட்சத்தை தாண்டிவிட்டது. 3-வது இடத்தில் இருக்கும் டெல்லியில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் கொரோனா தாக்கம் வேகமெடுத்துள்ளது. இதனால் அந்த இரு மாநிலங்களும் ஏற்கனவே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துவிட்டது. இதில் 4-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் 47 ஆயிரத்து 253 பேரும், 8-வது இடத் தில் உள்ள ஆந்திராவில் 35 ஆயிரத்து 451 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா இந்த பட்டியலில் 17-வது இடத்தில் இருக்கிறது. அங்கு 9,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. புதுச்சேரியில் இந்த எண்ணிக்கை 1,600-ஐ நெருங்கியுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/17013037/Never-before-in-India-Corona-confirmed-32695-people.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை புத்த மத துறவிகள் வேஷதாரிகள், புத்த மத த்திற்கே இழுக்கு, நல்ல கவிதை, இந்த வலியென்று ம் போகாது

இந்தியாவில் ஒரே நாளில் 34,956 பேருக்கு தொற்று உறுதி: கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரு நாளில் மட்டும் 34 ஆயிரத்து 956 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சாவு எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது.
பதிவு: ஜூலை 18,  2020 05:45 AM
புதுடெல்லி,

கொரோனா தொற்றால் எல்லா நாடுகளுமே பாதிக்கப்பட்டு உள்ளன.

உலகப் போர்கள் நடந்த போதுகூட, நாடுகள் இந்த அளவுக்கு கலங்கியது இல்லை. கொரோனாவின் பிடியில் இருந்து தங்கள் மக்களை காப்பாற்ற ஒவ்வொரு நாடும் போராடிக்கொண்டு இருக்கிறது. என்னதான் முக கவசம், தனிமனித இடைவெளி, ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் கொரோனா அடங்க மறுக்கிறது. இதேநிலை நீடித்தால் என்ன ஆகுமோ? என்ற அச்சம் எல்லா நாடுகளுக்குமே எழுந்து உள்ளது.


நோய்த்தொற்று பரவலின் வேகமும், பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதனால் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான இந்த நோய்த்தொற்று அந்த நாட்டிலும், அதன்பிறகு இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, இந்தியாவில் சற்று தாமதமாகத்ததான் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியது.

கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதிதான் நம் நாட்டில் கொரோனா பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்ட நோய்த் தொற்று சில நாட்களில் அசுர வேகத்தில் பரவ தொடங்கியது. இப்போது உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 20 நாட்களில் கொரோனா பாதிப்பு இருமடங்கு அதிகரித்து உள்ளது. அதாவது கடந்த மாதம் (ஜூன்) 27-ந் தேதி வரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சம் ஆகும். இந்த எண்ணிக்கை நேற்று 10 லட்சத்தை தாண்டிவிட்டது. அதாவது, 20 நாட்களில் கொரோனா பாதிப்பு இருமடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து முதலில் 110 நாட்களில் 1 லட்சம் பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த 59 நாட்களில் 9 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று பரவிவிட்டது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர பட்டியலின்படி, நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 34 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆக அதிகரித்து இருக்கிறது.

இதே 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 942 பேர் இந்த நோய் பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 757 ஆக உயர்ந்து உள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்து 42 ஆயிரத்து 473 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும், இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 687 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 602 ஆக உயர்ந்து இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மராட்டிய மாநிலம் முதல் இடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும், டெல்லி 3-வது இடத்திலும், கர்நாடகம் 4-வது இடத்திலும், குஜராத் 5-வது இடத்திலும் உள்ளன.

மராட்டியத்தில் நேற்று மட்டும் புதிதாக 8,641 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 84 ஆயிரத்து 281 ஆக அதிகரித்தது. அங்கு நேற்று 266 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து சாவு எண்ணிக்கை 11 ஆயிரத்து 194 ஆக உயர்ந்து இருக்கிறது.

தமிழ்நாடு

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று புதிதாக 4,538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 907 ஆக அதிகரித்தது. மேலும் நேற்று 79 பேர் உயிரிழந்ததால் சாவு எண்ணிக்கை 2,315 ஆக உயர்ந்தது.

டெல்லியில் புதிதாக 1,652 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 645 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று 58 பேர் மரணம் அடைந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,545 ஆக அதிகரித்தது.

கர்நாடகத்தில் புதிதாக 4,169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 422 ஆகவும், புதிதாக 104 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து சாவு எண்ணிக்கை 1,032 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

குஜராத்தில் நேற்று 929 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 481 ஆகவும், புதிதாக 10 பேர் இறந்ததால் மொத்த சாவு எண்ணிக்கை 2,089 ஆகவும் உயர்ந்து உள்ளது.

இதேபோல் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மற்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் இருந்தாலும் அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/18030844/In-India-34956-people-were-confirmed-infected-in-a.vpf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.