Jump to content

கொரோனா வைரஸ் பாதிப்பு; உலக அளவில் 4வது இடம் நோக்கி பயணிக்கும் இந்தியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 671 பேர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 671 பேர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியது

 

புதுடெல்லி,

சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரசான கொரோனா, இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொரோனா தனது வலையில் விழ வைத்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், மராட்டிய மாநிலத்தில் 8,308 பேரும், தமிழகத்தில் 4,538 பேரும், கர்நாடகாவில் 3,693 பேரும், ஆந்திராவில் 2,602 பேரும், மேற்குவங்காளத்தில் 1,894 பேரும், பீகாரில் 1,825 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,722 பேரும், தெலுங்கானாவில் 1,478 பேரும், டெல்லியில் 1,462 பேரும், குஜராத்தில் 949 பேரும் என நாடு முழுவதும் மொத்தம் 34 ஆயிரத்து 884 பேர் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 லட்சத்து 53 ஆயிரத்து 751 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 3 லட்சத்து 58 ஆயிரத்து 692 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மராட்டியத்தில் 258 பேரும், கர்நாடகாவில் 115 பேரும், தமிழகத்தில் 79 பேரும், ஆந்திராவில் 42 பேரும், உத்தரபிரதேசத்தில் 38 பேரும், மேற்குவங்காளம் மற்றும் டெல்லியில் தலா 26 பேரும், குஜராத்தில் 17 பேரும், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 9 பேரும், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 8 பேரும், தெலுங்கானாவில் 7 பேரும், அரியானாவில் 5 பேரும், ஜார்கண்ட், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 4 பேரும், அசாம் மற்றும் புதுச்சேரியில் தலா 3 பேரும், சத்தீஸ்கார் மற்றும் கோவாவில் தலா 2 பேரும், கேரளா மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவரும் என மொத்தம் 671 பேரின் உயிரை கொரோனா ஒரே நாளில் பறித்துள்ளது. இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 273 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், மராட்டிய மாநிலத்தில் மட்டும் 2 லட்சத்து 92 ஆயிரத்து 589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இந்த நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 452 ஆகும். பாதிப்பில் 2-வது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுடன் சேர்த்து 1 லட்சத்து 65 ஆயிரத்து 714 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பலி எண்ணிக்கை 2,403 ஆக உயர்ந்து இருக்கிறது. மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-

டெல்லியில் பாதிப்பு 1,20,107 (உயிரிழப்பு 3,571), கர்நாடகா 55,115 (1,147), குஜராத் 46,430 (2,106), உத்தரபிரதேசம் 45,163 (1,084), தெலுங்கானா 42,496 (403), ஆந்திரா 40,646 (534), மேற்குவங்காளம் 38,011 (1,049), ராஜஸ்தான் 27,789 (546), அரியானா 24,797 (327), பீகார் 23,589 (201), மத்தியபிரதேசம் 21,081 (697), அசாம் 20,646 (51), ஒடிசா 16,110 (83), ஜம்மு காஷ்மீர் 12,757 (231), கேரளா 11,066 (38), பஞ்சாப் 9,442 (239), சத்தீஸ்கார் 4,964 (23), ஜார்கண்ட் 4,921 (46), உத்தரகாண்ட் 4,102 (51), கோவா 3,304 (21), திரிபுரா 2,366 (3), புதுச்சேரி 1,832 (25), மணிப்பூர் 1,800, இமாசலபிரதேசம் 1,417 (11), லடாக் 1,151 (1), நாகாலாந்து 956, சண்டிகார் 660 (11), அருணாசலபிரதேசம் 609 (3), தாதர்நகர் ஹவேலி 585 (2), மேகாலயா 403 (2), மிசோரம் 282, சிக்கிம் 266, அந்தமான் நிகோபார் தீவு 194.

நாட்டில் கொரோனா வேகமாக பரவி வரும் அதே வேளையில், அதனை கட்டுப்படுத்த பரிசோதனையை அதிகப்படுத்துவதுடன், நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி நாடு முழுவதும் தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று முன்தினம் வரை 1 கோடியே 34 லட்சத்து 33 ஆயிரத்து 742 பேரின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தெரிவித்துள்ளது

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/19041007/In-India-the-corona-killed-671-people-in-a-per-day.vpf

 

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதிபாதிப்பு 11 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதிபாதிப்பு 11 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்துள்ளது.
பதிவு: ஜூலை 21,  2020 05:00 AM
புதுடெல்லி,

இந்தியாவில் முதன் முதலில் கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்த மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சில நாட்களிலேயே அந்த மாணவி நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், தொடர்ந்து இந்தியாவில் மெல்ல மெல்ல கொரோனா பரவ தொடங்கியது. அதன்படி அடுத்த 110 நாட்களில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை எட்டியது.

ஆனால் அதன்பின்னர் கொரோனா பரவும் வேகம் அதிகரிக்க தொடங்கியது. முதல் ஒரு லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்க 110 நாட்கள் எடுத்துக் கொண்ட கொரோனா, இப்போது 3 நாட்களில் 1 லட்சம் பேரை பாதிக்கச் செய்து வருகிறது. ஏற்கனவே 9 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு அடுத்த 3 நாட்களில் 10 லட்சமாக உயர்ந்த நிலையில், இப்போது அதற்கடுத்த 3 நாட்களில் 11 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 40 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக 9,518 பேர் இந்த வைரசின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இதேபோல ஆந்திராவில் 5,041, தமிழகத்தில் 4,979, கர்நாடகாவில் 4,120, மேற்குவங்காளத்தில் 2,278, உத்தரபிரதேசத்தில் 2,211, பீகாரில் 1,433, தெலுங்கானாவில் 1,296, டெல்லியில் 1,211, அசாமில் 1,081, குஜராத்தில் 965, ராஜஸ்தானில் 934, மத்தியபிரதேசத்தில் 837, கேரளாவில் 821, ஒடிசாவில் 736, ஜம்மு காஷ்மீரில் 701, அரியானாவில் 617, பஞ்சாபில் 308, உத்தரகாண்டில் 239, திரிபுராவில் 224, ஜார்கண்டில் 193, சத்தீஸ்காரில் 174, கோவாவில் 173, புதுச்சேரியில் 105, அருணாசலபிரதேசத்தில் 90, மேகாலயாவில் 32, இமாசலபிரதேசத்தில் 26, மணிப்பூரில் 20, லடாக்கில் 19, சண்டிகாரில் 17, நாகாலாந்தில் 10, சிக்கிமில் 8, அந்தமான் நிகோபார் தீவில் 5, தாதர்நகர் ஹவேலியில் 3 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 18 ஆயிரத்து 43 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் புதிதாக 681 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு ஒருபுறம் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அந்த நோயில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் பாதிப்பு 11 லட்சத்தை கடந்திருக்கும் நிலையில், அதில் 7 லட்சம் பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இன்னும் 3 லட்சத்து 90 ஆயிரத்து 459 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 மாநிலங்களாக மராட்டியம், தமிழகம், டெல்லி, கார்நாடகா, ஆந்திரா உள்ளது. இதில் மராட்டியத்தில் பாதிப்பு 3 லட்சத்தை கடந்துவிட்டது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1¾ லட்சத்தை தாண்டியுள்ளது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 793 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கர்நாடகாவில் பாதிப்பு 64 ஆயிரத்தையும், ஆந்திராவில் 50 ஆயிரத்தையும் நெருங்கி இருக்கிறது.

பாதிப்பை போலவே பலி எண்ணிக்கையில் மராட்டியமே முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு 11 ஆயிரத்து 854 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. 2-வது இடத்தில் உள்ள டெல்லியில் 3,628 பேரையும், 3-வது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் 2,551 பேரையும், 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 2,142 பேரையும், 5-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் 1,331 பேரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/21021529/Corona-spreading-fast-in-India.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நான் கவலைப்பட ஏதுமில்லை. 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனாவுக்கு 28 ஆயிரம் பேர் உயிரிழப்பு மராட்டியத்தில் மட்டும் 12 ஆயிரம் பேர் பலி

இந்தியாவில் கொரோனாவுக்கு 28 ஆயிரம் பேர் உயிரிழப்பு மராட்டியத்தில் மட்டும் 12 ஆயிரம் பேர் பலி

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்துக்குள் புதிதாக 37 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. முந்தைய நாளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நேற்று பாதிப்பு சற்று குறைந்தது. ஆனாலும் கடந்த 6 நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 55 ஆயிரத்து 191 ஆக உயர்ந்துள்ளது. இதில் 62.72 சதவீதம் பேர், அதாவது 7 லட்சத்து 24 ஆயிரத்து 578 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் 4 லட்சத்து 2 ஆயிரத்து 529 பேர் ஆஸ்பத்திரியிலும், வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் மராட்டிய மாநிலத்தில் 176 பேரும், கர்நாடகாவில் 72 பேரும், தமிழகத்தில் 70 பேரும், ஆந்திராவில் 54 பேரும், உத்தரபிரதேசத்தில் 46 பேரும், மேற்குவங்காளம் மற்றும் டெல்லியில் தலா 35 பேரும், குஜராத்தில் 20 பேரும், மத்தியபிரதேசத்தில் 17 பேரும், ஜம்மு காஷ்மீரில் 10 பேரும், ராஜஸ்தானில் 9 பேரும், பஞ்சாபில் 8 பேரும், தெலுங்கானாவில் 7 பேரும், அரியானா மற்றும் ஒடிசாவில் தலா 6 பேரும், ஜார்கண்டில் 4 பேரும், உத்தரகாண்டில் 3 பேரும், திரிபுரா மற்றும் மேகாலயாவில் தலா 2 பேரும், அசாம், கோவா, சத்தீஸ்கார், கேரளா மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவரும் என 24 மணி நேரத்தில் மொத்தம் 587 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு புதிதாக 8,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 18 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக உயிரிழந்தவர்களுடன் சேர்த்து அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளது.

பாதிப்பில் 2-வது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் நேற்று புதிதாக 4,965 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதுடன், 75 பேரின் உயிரையும் கொரோனா காவு வாங்கி இருக்கிறது. இதனால் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆகவும், பலி எண்ணிக்கை 2,626 ஆகவும் உயர்ந்துள்ளது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் கொரோனாவால் 1 லட்சத்து 23 ஆயிரத்து 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 3,663 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், குஜராத், தெலுங்கானா, மேற்குவங்காளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதில் 4-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் 67 ஆயிரம் பேருக்கும், 10-வது இடத்தில் உள்ள ராஜஸ்தானில் 30 ஆயிரம் பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

உயிரிழப்பை பொறுத்தவரையில் கர்நாடகாவில் 1,403 பேரும், ஆந்திராவில் 696 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,192 பேரும், குஜராத்தில் 2,162 பேரும், தெலுங்கானாவில் 422 பேரும், மேற்குவங்காளத்தில் 1,147 பேரும், ராஜஸ்தானில் 568 பேரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/22011828/Covid-death-toll-crosses-28000-mark-biggest-spurt.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Country,
Other
Total
Cases
New
Cases
Total
Deaths
New
Deaths
Total
Recovered
Active
Cases
Serious,
Critical
Tot Cases/
1M pop
Deaths/
1M pop
Total
Tests
Tests/
1M pop
Population
  World 15,084,038 +238,188 618,470 +5,654 9,103,868 5,361,700 63,800 1,935 79.3      
1 USA 4,028,031 +66,602 144,937  +1,103 1,885,421 1,997,673 16,721 12,165 438 49,897,983 150,698 331,113,437
2 Brazil 2,166,532 +44,887 81,597  +1,346 1,465,970 618,965 8,318 10,189 384 4,911,063 23,095 212,644,740
3 India 1,194,085 +39,168 28,771  +672 752,393 412,921 8,944 865 21 14,381,303 10,416 1,380,752,352
4 Russia 783,328 +5,842 12,580  +153 562,384 208,364 2,300 5,368 86 25,449,167 174,383 145,938,197
5 South Africa 381,798 +8,170 5,368  +195 208,144 168,286 539 6,433 90 2,536,921 42,746 59,348,880
6 Peru 362,087 +4,406 13,579  +195 248,746 99,762 1,342 10,974 412 2,109,202 63,923 32,996,235
7 Mexico 349,396 +5,172 39,485  +301 222,068 87,843 3,909 2,708 306 827,951

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16 நாட்களில்...8 பேருக்கு கொரோனா...ஒரே குடும்பத்தில் தாய் - 5 மகன்கள் பலி

16 நாட்களில்...8 பேருக்கு கொரோனா...ஒரே குடும்பத்தில் தாய் - 5 மகன்கள் பலி

 

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலம் டன்பெட் மாவட்டம் கட்ரஸ் பகுதியை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 88 வயது நிரம்பிய இவருக்கு மொத்தம் 6 மகன்கள் உள்ளனர். அதில் 5 பேர் ஜார்க்கண்டிலும்,ஒருவர் டெல்லியிலும் வசித்து வந்தனர். அவர்கள் அனைவரும் 60 முதல் 70 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருந்தனர். 


இதற்கிடையில், இம்மாத தொடக்கத்தில் டெல்லியில் நடந்த தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் தனது சொந்த  ஊரான கட்ரசுக்கு  ராணி திரும்பினார்.

சொந்த ஊர் திரும்பிய ஒரிரு நாளிலேயே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ராணி போக்ரோவ் பகுதியில் உள்ள மருத்துவ காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

ஆனால் கடந்த ஜூலை 4 ஆம் தேதி மருத்துவமனையில் ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த சமயத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவரவில்லை.

இதையடுத்து, உயிரிழந்த தனது தாயின் உடலை அவரது 5 மகன்கள் சேர்ந்து அடக்கம் செய்தனர். அதற்கு அடுத்த நாள் ராணிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது. 

அதில் உயிரிழந்த ராணிக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் ராணியின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

அதில் உயிரிழந்த ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 5 மகன்கள் உள்பட குடும்பத்தினர் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அந்த குடும்பத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 (உயிரிழந்த ராணி உள்பட) ஆனது.   

இதையடுத்து, கொரோனா உறுதி செய்யப்பட்ட 5 சகோதரர்கள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சகோதரர்கள் அனைவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கடைசியாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) 5-வது சகோதரரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதாவது ஜூலை 4 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரையினால 16 நாட்கள் இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக தாய் ராணி மற்றும் அவரது 5 மகன்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

வைரசால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் 2 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் தாய் ராணி மற்றும் அவரது 5 மகன்கள் உயிரிழந்துள்ளனர்.

ராணியின் 6 மகன்களில் டெல்லியில் வசித்து ஒரே ஒரு மகன் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ராணி குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், ராணி வீடு உள்ள கட்ரஸ் பகுதி முழுவதையும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து அப்பகுதியை முற்றிலும் அடைத்துள்ளனர்.

கொரோனா காலத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று தாய் மற்றும் அவரது 5 மகன்கள் வைரஸ் தாக்குதலுக்கு 16 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் ஜார்க்கண்டில் அதிர்ச்சியை மட்டுமல்லாமல் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/22102941/Jharkhand-shocker-COVID19-claims-lives-of-6-members.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் 7.50 லட்சத்தைக் கடந்தனர்: 12 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு; 7-வது நாளாக 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று

india-s-covid-19-tally-climbs-to-11-92-915 கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் 37 ஆயிரத்து 724 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், 648 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7.50 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 லட்சத்து 92 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 53 ஆயிரத்து 49 ஆக உயர்ந்து, மீள்வோர் சதவீதம் 63.13 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 133 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 7-வது நாளாக நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 648 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது.

1595396034756.PNG

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் நேற்று 246 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 75 பேர், ஆந்திராவில் 62 பேர், கர்நாடகாவில் 61 பேர், உத்தரப் பிரதேசத்தில் 37 பேர், மேற்கு வங்கத்தில் 35 பேர், குஜராத்தில் 34 பேர், டெல்லியில் 27 பேர் உயிரிழந்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் 18 பேர், ஹரியாணா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தானில் தலா 9 பேர், தெலங்கானாவில் 7 பேர், ஒடிசாவில் 6 பேர், சத்தீஸ்கரில் 4 பேர், கோவாவில் 3 பேர், ஜார்க்கண்டில் 2 பேர், கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், திரிபுராவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 12,276 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,690 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2,626 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,196 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 1,182 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 756 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 1,229 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 577 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 429 ஆகவும், ஹரியாணாவில் 364 ஆகவும், ஆந்திராவில் 758 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 1,464 பேரும், பஞ்சாப்பில் 263 பேரும் பலியாகியுள்ளனர்.

1595396045756.PNG

ஜம்மு காஷ்மீரில் 263 பேரும், பிஹாரில் 217 பேரும், ஒடிசாவில் 103 பேரும், கேரளாவில் 44 பேரும், உத்தரகாண்டில் 55 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 55 பேரும், அசாமில் 58 பேரும், திரிபுராவில் 8 பேரும், மேகாலயாவில் 4 பேரும், அருணாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், தாதர் நகர் ஹவேலி, டையூ டாமனில் தலா இருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 30 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 27 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,82,217 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,670 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,25,096 பேராக அதிகரித்துள்ளது. 1,06,118 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 50,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 36,423 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 31,373 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 24,095 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 53,288 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 47,030 பேரும், ஆந்திராவில் 58,668 பேரும், பஞ்சாப்பில் 10,899 பேரும், தெலங்கானாவில் 47,705 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 15,258 பேர், கர்நாடகாவில் 71,069 பேர், ஹரியாணாவில் 27,462 பேர், பிஹாரில் 28,952 பேர், கேரளாவில் 13,994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,890 பேர் குணமடைந்துள்ளனர்.

1595396057756.PNG

ஒடிசாவில் 18,757 பேர், சண்டிகரில் 751 பேர், ஜார்க்கண்டில் 6,159 பேர், திரிபுராவில் 3,331 பேர், அசாமில் 25,382 பேர், உத்தரகாண்டில் 4,849 பேர், சத்தீஸ்கரில் 5,729 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,664 பேர், லடாக்கில் 1,198 பேர், நாகாலாந்தில் 1,030 பேர், மேகாலயாவில் 490 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹவேலியில் 705 பேர், புதுச்சேரியில் 2,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 1,318 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 317 பேர், சிக்கிமில் 330 பேர், மணிப்பூரில் 2,015 பேர், கோவாவில் 4,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

https://www.hindutamil.in/news/india/565779-india-s-covid-19-tally-climbs-to-11-92-915-4.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் 12 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 12 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் தொடர்ந்து அதிரிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த 7 நாட்களாக கொரோனா தினந்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 92 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 49 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், இன்னும் 4 லட்சத்து 11 ஆயிரத்து 133 பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இதே 24 மணி நேரத்துக்குள் கொரோனா புதிதாக 648 பேரின் உயிரையும் பறித்துள்ளது. இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 732 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மராட்டியம் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அங்கு 3 லட்சத்து 27 ஆயிரத்து 31 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 492 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 96 பேர் இந்த வைரசின் பிடியில் சிக்கியுள்ளனர்.

கர்நாடகாவில் 71,069 பேரும், ஆந்திராவில் 58,668 பேரும், உத்தரபிரதேசத்தில் 53,288 பேரும், குஜராத்தில் 50,379 பேரும், தெலுங்கானாவில் 47,705 பேரும், மேற்குவங்காளத்தில் 47,030 பேரும், ராஜஸ்தானில் 31,373 பேரும், பீகாரில் 28,952 பேரும், அரியானாவில் 27,462 பேரும், அசாமில் 25,382 பேரும், மத்தியபிரதேசத்தில் 24,095 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிப்பு 20 ஆயிரத்து கீழே உள்ளது.

கொரோனா பாதிப்பை போலவே பலி எண்ணிக்கையிலும் மராட்டியமே முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு 12,276 பேரின் உயிரை கொரோனா காவு வாங்கி இருக்கிறது. டெல்லியில் 3,690 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இந்த நோய்க்கு புதிதாக 74 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2,700 ஆக அதிகரித்துள்ளது. இதுபோக சில காரணங்களாக விடுபட்டு இருந்த 444 கொரோனா மரணங்களும் நேற்றைய பலி எண்ணிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்தில் 2,196 பேரும், கர்நாடகாவில் 1,464 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,229 பேரும், மேற்குவங்காளத்தில் 1,182 பேரும் இந்த வைரசின் பிடியில் சிக்கி தங்கள் உயிரை இழந்துள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/23025951/Corona-impact-close-to-12-lakh-in-India.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
World 15,363,730 +278,512 625,412 +6,895 9,340,895 5,397,423 66,177 1,971 80.2      
1 USA 4,099,805 +71,236 146,136  +1,183 1,939,705 2,013,964 19,179 12,382 441 50,723,237 153,187 331,118,730
2 Brazil 2,231,871 +65,339 82,890  +1,293 1,532,138 616,843 8,318 10,496 390 4,911,063 23,095 212,648,862
3 India 1,239,684 +45,599

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனா பதிப்பு 12 லட்சத்தை தாண்டியது.கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரம் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பதிப்பு 12 லட்சத்தை தாண்டியது.கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரம் பாதிப்பு

புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பாதிப்புகள்  மற்றும் 1,129 இறப்புகள் அதிகரித்துள்ளன, இதனால் ஒட்டுமொத்த பாதிப்புகள் 12 லட்சத்தை தாண்டியுள்ளது.


"நாட்டில் இதுவரை 12,38,635 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இதில் 4,26,167 சிகிச்சையில் உள்ளனர்,  7,82,607 பேர் குணமாகி உள்லனர் 29,557 பேர் உயிரிழந்து உள்ளனர்.என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/23102105/Biggest-spike-in-Covid-cases-takes-Indias-tally-past.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 45,720 பேருக்கு தொற்று உறுதிபுதிதாக 1,129 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 45,720 பேருக்கு தொற்று உறுதிபுதிதாக 1,129 பேர் உயிரிழப்பு

 

சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரசான கொரோனா, உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரப் பட்டியலில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 45 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மராட்டிய மாநிலத்தில் 10,576 பேரும், தமிழகத்தில் 5,849 பேரும், கர்நாடகாவில் 4,764 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,300 பேரும், மேற்குவங்காளத்தில் 2,291 பேரும், தெலுங்கானாவில் 1,554 பேரும், பீகாரில் 1,417 பேரும், அசாமில் 1,390 பேரும், டெல்லியில் 1,227 பேரும், ஒடிசாவில் 1,078 பேரும், கேரளாவில் 1,038 பேரும், குஜராத்தில் 1,020 பேரும் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் உறுதியான மொத்த பாதிப்பில், 75 சதவீத பாதிப்பு மேற்கண்ட 12 மாநிலங்களில்தான் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து, நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 38 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளது. இதில் 63.18 சதவீதம் பேர், அதாவது 7 லட்சத்து 82 ஆயிரத்து 607 பேர் சிகிச்சையின் மூலம் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இன்னும் 4 லட்சத்து 26 ஆயிரத்து 167 பேர் ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் அந்த புள்ளிவிவரப் பட்டியலில், தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் புதிதாக 518 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. விடுபட்டு இருந்த 444 கொரோனா மரணங்களை பலி எண்ணிக்கையுடன் இணைத்ததாலேயே தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் 280 பேரும், ஆந்திராவில் 65 பேரும், கர்நாடகாவில் 55 பேரும், மேற்குவங்காளத்தில் 39 பேரும், உத்தரபிரதேசத்தில் 34 பேரும், டெல்லியில் 29 பேரும், குஜராத்தில் 28 பேரும், மத்தியபிரதேசத்தில் 14 பேரும், ஜம்மு காஷ்மீரில் 10 பேரும், தெலுங்கானா மற்றும் ஜார்கண்டில் தலா 9 பேரும், அரியானாவில் 8 பேரும், அசாம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபில் தலா 6 பேரும், ஒடிசாவில் 5 பேரும், கோவா மற்றும் உத்தரகாண்டில் 2 பேரும், கேரளா, புதுச்சேரி, திரிபுரா மற்றும் சண்டிகாரில் தலா ஒருவரும் என மொத்தம் புதிதாக 1,129 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 29,861 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் மட்டும் 12 ஆயிரத்து 556 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கு கீழே உள்ளது.

பாதிப்பை பொறுத்தவரையில், கொரோனா கோர தாண்டவம் ஆடி வரும் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 3 லட்சத்து 37 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தேசிய தலைநகர் டெல்லியில் பாதிப்பு 1¼ லட்சத்தை தாண்டிவிட்டது. மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள் வருமாறு:-

கர்நாடகா (75,833), ஆந்திரா (64,713), உத்தர பிரதேசம் (55,588), குஜராத் (51,399), மேற்குவங்காளம் (49,321), தெலுங்கானா (49,259), ராஜஸ்தான் (32,334), பீகார் (30,369), அரியானா (28,186), அசாம் (26,772), மத்தியபிரதேசம் (24,842), ஒடிசா (19,835), ஜம்மு காஷ்மீர் (15,711), கேரளா (15,032), பஞ்சாப் (11,301), ஜார்கண்ட் (6,485), சத்தீஸ்கார் (5,968), உத்தரகாண்ட் (5,300), கோவா (4,176), திரிபுரா (3,449), புதுச்சேரி (2,300), மணிப்பூர் (2,060), இமாசலபிரதேசம் (1,725), லடாக் (1,206), நாகாலாந்து (1,084), அருணாசலபிரதேசம் (949), சண்டிகார் (793), தாதர்நகர் ஹவேலி (733), மேகாலயா (514), சிக்கிம் (438), மிசோரம் (317), அந்தமான் நிகோபார் தீவு (221).

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/24025849/Corona-infection-confirmed-45720-infections-in-a-single.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் புதிய உச்சம்: ஒரே நாளில் 49,310 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் புதிய உச்சம்: ஒரே நாளில் 49,310 பேருக்கு தொற்று உறுதி

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரே நாளில் 49,310 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதிவு: ஜூலை 25,  2020 05:00 AM
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரே நாளில் 49,310 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து இருக்கிறது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் டாமன் டையூ மற்றும் லட்சத்தீவை தவிர, மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்திலும் பலர் கொரோனாவால் புதிதாக பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக 9,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருகிறது. இதேபோல ஆந்திராவில் சுமார் 8 ஆயிரம் பேரும், தமிழகத்தில் 6,472 பேரும், கர்நாடகாவில் 5,030 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,516 பேரும், மேற்குவங்காளத்தில் 2,436 பேரும், அசாமில் 2,019 பேரும், பீகாரில் 1,611 பேரும், தெலுங்கானாவில் 1,567 பேரும், ஒடிசாவில் 1,264 பேரும், குஜராத் மற்றும் கேரளாவில் தலா 1,078 பேரும், டெல்லியில் 1,041 பேரும், ராஜஸ்தானில் 866 பேரும், அரியானாவில் 789 பேரும், ஜம்மு காஷ்மீரில் 718 பேரும், மத்தியபிரதேசத்தில் 632 பேரும், ஜார்கண்டில் 490 பேரும், பஞ்சாபில் 438 பேரும், சத்தீஸ்காரில் 286 பேரும், திரிபுராவில் 207 பேரும், கோவாவில் 174 பேரும், உத்தரகாண்டில் 145 பேரும், புதுச்சேரியில் 120 பேரும், இமாசலபிரதேசத்தில் 109 பேரும், நாகாலாந்தில் 90 பேரும், மணிப்பூரில் 55 பேரும், அருணாசலபிரதேசத்தில் 42 பேரும், தாதர்நகர் ஹவேலியில் 37 பேரும், சிக்கிமில் 22 பேரும், மேகாலயாவில் 20 பேரும், அந்தமான் நிகோபார் தீவில் 19 பேரும், மிசோரத்தில் 15 பேரும், சண்டிகாரில் 7 பேரும், லடாக்கில் 4 பேரும் என ஒரே நாளில் 49 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 87 ஆயிரத்து 945 ஆக அதிகரித்துள்ளது. இதில் 63.45 சதவீதம் பேர், அதாவது 8 லட்சத்து 17 ஆயிரத்து 209 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இன்னும் 4 லட்சத்து 40 ஆயிரத்து 135 பேர் ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் 2 இடங்களில் மராட்டியம் மற்றும் தமிழகம் இருக்கின்றன. இதில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 3½ லட்சத்தையும், தமிழகத்தில் 2 லட்சத்தையும் நெருங்கி உள்ளது. 3-வது இடத்தில் தொடரும் டெல்லியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இந்த பட்டியலில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா 4-வது இடத்திலும், ஆந்திரா 5-வது இடத்திலும், கேரளா 17-வது இடத்திலும் உள்ளன. இதில் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தையும், ஆந்திராவில் 70 ஆயிரத்தையும், கேரளாவில் 16 ஆயிரத்தையும் கடந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,420 ஆக உள்ளது.

மேலும் ஆட்கொல்லி வைரசான கொரோனா புதிதாக 740 பேரின் உயிரையும் பறித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக 298 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 97, தமிழகத்தில் 88, ஆந்திராவில் 61, மேற்குவங்காளத்தில் 34, குஜராத்தில் 28, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் தலா 26, ராஜஸ்தானில் 11, மத்தியபிரதேசத்தில் 10, ஜம்மு காஷ்மீர் மற்றும் தெலுங்கானாவில் தலா 9, பஞ்சாபில் 8, அசாம், ஒடிசா மற்றும் அரியானாவில் தலா 6, கேரளாவில் 5, உத்தரகாண்ட், ஜார்கண்ட் மற்றும் புதுச்சேரில் தலா 3, சத்தீஸ்கார், திரிபுரா மற்றும் கோவாவில் தலா ஒருவரையும் கொரோனா ஒரே நாளில் பலிவாங்கி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது.

ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டால், மராட்டிய மாநிலத்தில் மட்டும் 12,854 பேரின் உயிரை கொரோனா காவு வாங்கி இருக்கிறது. டெல்லியில் 3,745 பேரும், தமிழகத்தில் 3,320 பேரும், குஜராத்தில் 2,252 பேரும், கர்நாடகாவில் 1,616 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,289 பேரும் மேற்குவங்காளத்தில் 1,255 பேரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தங்கள் உயிரை இழந்துள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பலி எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

மேற்கண்ட தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.

 

https://www.dailythanthi.com/News/India/2020/07/25035402/New-peak-of-corona-infection-in-India-49310-people.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 நாளில் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தை கடந்தது

2 நாளில் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தை கடந்தது

புதுடெல்லி, 

இந்தியாவில் முதன் முதலாக சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து மெல்ல மெல்ல பரவ தொடங்கிய கொரோனா, இந்தியாவில் முதல் 1 லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்க 110 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஆனால் அதன்பின்னர் கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மாத தொடக்கத்தில் தினந்தோறும் சுமார் 20 ஆயிரம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி வந்த கொரோனா, கடந்த 2 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி இருக்கிறது. இதனால் கடந்த 23-ந் தேதி 12 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 13 லட்சத்தை கடந்தது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், புதிதாக 48 ஆயிரத்து 916 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 36 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது. இதில் சுமார் 8½ லட்சம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், இன்னும் 4 லட்சத்து 56 ஆயிரத்து 71 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


நாட்டில் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு மட்டும் 3 லட்சத்து 57 ஆயிரத்து 117 பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 737 பேருக்கும், 3-வது இடம் வகிக்கும் டெல்லியில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 389 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள கர்நாடகாவில் 85,870 பேருக்கும், ஆந்திராவில் 80,858 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 60,771 பேருக்கும், மேற்குவங்காளத்தில் 53,973 பேருக்கும், குஜராத்தில் 53,545 பேருக்கும், தெலுங்கானாவில் 52,466 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

இதேபோல ராஜஸ்தானில் 34,178, பீகாரில் 33,926, அசாமில் 29,921, அரியனாவில் 29,755, மத்தியபிரதேசத்தில் 26,210, ஒடிசாவில் 22,693, கேரளாவில் 16,995, ஜம்மு காஷ்மீரில் 16,782, பஞ்சாபில் 12,216, ஜார்கண்டில் 7,493, சத்தீஸ்காரில் 6,731, உத்தரகாண்டில் 5,445, கோவாவில் 4,540, திரிபுராவில் 3,759, புதுச்சேரியில் 2,515, மணிப்பூரில் 2,146, இமாசலபிரதேசத்தில் 1,954, லடாக்கில் 1,246, நாகாலாந்தில் 1,239, அருணாசலபிரதேசத்தில் 1,056, சண்டிகாரில் 823, தாதர்நகர் ஹவேலியில் 815, மேகாலயாவில் 588, சிக்கிமில் 477, மிசோரத்தில் 361, அந்தமான் நிகோபார் தீவில் 259 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆட்கொல்லி வைரசின் பிடியில் சிக்கி ஒரே நாளில் 757 பேர் பலியாகி இருக்கின்றனர். இதனால் நாட்டில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 358 ஆக உயர்ந்துள்ளது.

இதில் மராட்டிய மாநிலத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டும் 13 ஆயிரத்து 132 ஆகும்.

டெல்லியில் 3,777 பேரும், தமிழகத்தில் 3,409 பேரும், குஜராத்தில் 2,278 பேரும், கர்நாடகாவில் 1,724 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,348 பேரும், மேற்குவங்காளத்தில் 1,290 பேரும், ஆந்திராவில் 933 பேரும், மத்தியபிரதேசத்தில் 791 பேரும், ராஜஸ்தானில் 602 பேரும், தெலுங்கானாவில் 455 பேரும், அரியானாவில் 382 பேரும், ஜம்மு காஷ்மீரில் 296 பேரும், பஞ்சாபில் 282 பேரும், பீகாரில் 220 பேரும், ஒடிசாவில் 120 பேரும், அசாமில் 76 பேரும், ஜார்கண்டில் 70 பேரும், உத்தரகாண்டில் 60 பேரும், கேரளாவில் 54 பேரும், சத்தீஸ்காரில் 36 பேரும், புதுச்சேரியில் 35 பேரும், கோவாவில் 29 பேரும், சண்டிகாரில் 13 பேரும், இமாசலபிரதேசம் மற்றும் திரிபுராவில் தலா 11 பேரும், மேகாலயாவில் 5 பேரும், அருணாசலபிரதேசத்தில் 3 பேரும், லடாக் மற்றும் தாதர்நகர் ஹவேலியில் தலா 2 பேரும், நாகாலாந்தில் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/26040602/1-lakh-infected-in-2-days-Corona-infection-in-India.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா முழுவதும் மாநிலங்களில் கொரோனா தரவு அறிக்கையில் குளறுபடி -ஆய்வில் தகவல்

இந்தியா முழுவதும் மாநிலங்களில் கொரோனா தரவு அறிக்கையில் குளறுபடி -ஆய்வில் தகவல்

புதுடெல்லி: 

இந்தியாவில் நேற்றுவரை மொத்தம்  13 லட்சத்து 85 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. 

3 லட்சத்து 66 ஆயிரத்து 368 பேருக்கு பாதிப்பை கொண்டுள்ள மராட்டிய மாநிலம், தொடர்ந்து தொற்றில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்கிறது.


மூன்றாம் இடத்தில், 1 லட்சத்து 29 ஆயிரத்து 531 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ள டெல்லி நீடிக்கிறது.

4-ம் இடத்தில் கர்நாடகம் (90 ஆயிரத்து 942), 5-ம் இடத்தில் ஆந்திரா (88 ஆயிரத்து 671), 6-ம் இடத்தில் உத்தரபிரதேசம் (63 ஆயிரத்து 742), 7-ம் இடத்தில் மேற்கு வங்காளம் (56 ஆயிரத்து 377), 8-ம் இடத்தில் குஜராத் (54 ஆயிரத்து 626), 9-ம் இடத்தில் தெலுங்கானா (52 ஆயிரத்து 466), 10-ம் இடத்தில் ராஜஸ்தான் (35 ஆயிரத்து 298) உள்ளது.

பீகாரில் 36 ஆயிரத்து 604, அசாமில் 31 ஆயிரத்து 86, அரியானாவில் 30 ஆயிரத்து 538, மத்திய பிரதேசத்தில் 26 ஆயிரத்து 926, ஒடிசாவில் 24 ஆயிரத்து 13, கேரளாவில் 18 ஆயிரத்து 98, ஜம்மு காஷ்மீரில் 17 ஆயிரத்து 305, பஞ்சாப்பில் 12 ஆயிரத்து 684 பேருக்கு தொற்று உள்ளது.

ஜார்கண்டில் 7,836 பேருக்கும், சத்தீஷ்காரில் 7,087 பேருக்கும், உத்தரகாண்டில் 5,445 பேருக்கும், கோவாவில் 4,686 பேருக்கும், திரிபுராவில் 3,862 பேருக்கும், புதுச்சேரியில் 2,654 பேருக்கும், மணிப்பூரில் 2,176 பேருக்கும், இமாசலபிரதேசத்தில் 2,049 பேருக்கும், நாகலாந்தில் 1,289 பேருக்கும், லடாக்கில் 1,276 பேருக்கும், அருணாசலபிரதேசத்தில் 1,126 பேருக்கும், சண்டிகாரில் 852 பேருக்கும், தத்ராநகர் ஹவேலி, தாமன், தையுவில் 860 பேருக்கும் , மேகாலயாவில் 646 பேருக்கும், சிக்கிமில் 499 பேருக்கும், மிசோரமில் 361 பேருக்கும், அந்தமான் நிகோபாரில் 290 பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தொற்று குறித்து அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி உள்ளனர்.

ப்ரீ பிரிண்ட் களஞ்சியமான ‘மெட்ராக்ஸிவ்’ இல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், இந்தியா முழுவதும் கொரோனா புள்ளிவிவர அறிக்கையில் ஏற்றத்தாழ்வு உள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கொரோனா தொற்றின்  வெளிப்படையான மற்றும் அணுகக்கூடிய புள்ளிவிவர அறிக்கைகள் பொது சுகாதார முயற்சிகளுக்கு முக்கியமானது.

அதில் கர்நாடக மாநிலம் நல்ல கொரோனா தரவு அறிக்கையை கொண்டுள்ளது பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் மோசமான புள்ளிவிவரங்களை கொண்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த தரவு கட்டமைப்பானது பொது சுகாதார தரவு அறிக்கையின் நான்கு முக்கிய அம்சங்களைக் குறிக்கிறது. ஆராய்ச்சி குழு இந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி 29 மாநிலங்களுக்கு 'கொரோனா தரவு அறிக்கையிடல் மதிப்பெண் அளித்துள்ளது (சி.டி.ஆர்.எஸ்., 0 முதல் 1 வரை) இரண்டு வார காலப்பகுதியில் மே 19 முதல் ஜூன் 1 வரை. அவர்கள் செய்த கொரோனா தரவு அறிக்கையின் தரத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. 

இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:-

இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்ட கொரோனா தரவு அறிக்கையின் தரம் குறித்த விரிவான மதிப்பீட்டை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

இந்த மதிப்பீடு இந்தியாவில் பொது சுகாதார நடவடிக்கை முயற்சிகளைத் தெரிவிக்கிறது மற்றும் பிற அரசாங்கங்களால் தொற்றுநோய் தரவு அறிக்கை தயாரிப்பு  வழிகாட்டியாக செயல்படுகிறது.

எங்கள் முடிவுகள் இந்தியாவில் மாநில அரசுகளால் செய்துள்ள கொரோனா  தரவு அறிக்கையின் தரத்தில் வலுவான ஏற்றத்தாழ்வு இருப்பதை காட்டுகின்றன.

ஆய்வுகள் கொரோனா தரவு அறிக்கையிடல் மதிப்பெண் கர்நாடகாவில் 0.61 (நன்று) முதல் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் 0.0 (மோசம்) வரை வேறுபடுகின்றன, இதன் சராசரி மதிப்பு 0.26 ஆகும்.

கூடுதலாக, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகியவை தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வெளியிடுவதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் தனியுரிமையை சமரசம் செய்துள்ளன.

கொரோனா தரவுகளின் போக்கின் காட்சி பிரதிநிதித்துவத்தை பத்து மாநிலங்கள் மட்டுமே வழங்குகின்றன. பத்து மாநிலங்கள் வயது, பாலினம், நாள்பட்ட நோய் உள்ளவர்கள் அல்லது மாவட்டங்களால் வகைப்படுத்தப்பட்ட எந்த தரவையும் தெரிவிக்கவில்லை. 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/27102111/Uttar-Pradesh-Bihar-worst-in-COVID19-reporting-across.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-720x450.jpg

கொரோனா வைரஸ் : உலகிலேயே ஒரேநாளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகிய நாடாக இந்தியா தெரிவு!

உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரேநாளில் மாத்திரம் உயிரிழப்புகள் அதிகம் பதிவாகிய நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரேநாளில் புதிதாக 46 ஆயிரத்து 484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இந்தியாவில் மொத்தமாக 14  இலட்சத்து 52 ஆயிரத்து 503 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

அத்துடன் புதிதாக 636 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 33  ஆயிரத்து 448  ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை 9  இலட்சத்து 53  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள அதேவேளை 4 இலட்சத்து 95  ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைத்திய கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

https://athavannews.com/கொரோனா-வைரஸ்-உலகிலேயே-ஒர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் 15 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: 3 மாதங்களுக்கு பிறகு மும்பையில் தொற்று குறைந்தது

இந்தியாவில் 15 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: 3 மாதங்களுக்கு பிறகு மும்பையில் தொற்று குறைந்தது

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில், மும்பையில் 3 மாதங்களுக்கு பிறகு குறைந்த எண்ணிக்கையில் கொரோனா தொற்று பதிவாகி இருக்கிறது.
பதிவு: ஜூலை 29,  2020 05:00 AM
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. லட்சத்தீவை தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா பலரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக 7,924 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தில் 6,993, ஆந்திராவில் 6,051, கர்நாடகாவில் 5,324, உத்தரபிரதேசத்தில் 3,505, தெலுங்கானாவில் 3,083, மேற்குவங்காளத்தில் 2,112, பீகாரில் 2,068, ஒடிசாவில் 1,503, அசாமில் 1,348, குஜராத்தில் 1,052, ராஜஸ்தானில் 969, அரியானாவில் 795, மத்தியபிரதேசத்தில் 789, கேரளாவில் 702, டெல்லியில் 613, பஞ்சாபில் 551, ஜம்மு காஷ்மீரில் 470, ஜார்கண்டில் 408, சத்தீஸ்காரில் 295, கோவாவில் 258, உத்தரகாண்டில் 224, திரிபுராவில் 149, இமாசலபிரதேசத்தில் 94, புதுச்சேரியில் 86, அருணாசலபிரதேசத்தில் 81, மணிப்பூரில் 51, நாகாலாந்தில் 46, மேகாலயாவில் 36, தாதர்நகர் ஹவேலியில் 32, சண்டிகாரில் 23, மிசோரத்தில் 23, லடாக்கில் 21, அந்தமான் நிகோபார் தீவில் 14, சிக்கிமில் 10 என ஒரே நாளில் மொத்தம் 47 ஆயிரத்து 703 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 83 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது. இதில் 64.24 சதவீதம் பேர், அதாவது 9 லட்சத்து 52 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 4 லட்சத்து 96 ஆயிரத்து 988 பேர் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மராட்டியத்தில் 227 பேரும், தமிழகத்தில் 77 பேரும், கர்நாடகாவில் 75 பேரும், ஆந்திராவில் 49 பேரும் பேரும், மேற்குவங்காளத்தில் 39 பேரும், உத்தரபிரதேசத்தில் 30 பேரும், டெல்லியில் 26 பேரும், குஜராத்தில் 22 பேரும், தெலுங்கானாவில் 17 பேரும், பஞ்சாபில் 12 பேரும், ராஜஸ்தானில் 10 பேரும், பீகார் மத்தியபிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 9 பேரும், அசாம் மற்றும் ஒடிசாவில் தலா 7 பேரும், அரியானாவில் 5 பேரும், திரிபுரா மற்றும் ஜார்கண்டில் 4 பேரும், புதுச்சேரி மற்றும் உத்தரகாண்டில் தலா 3 பேரும், இமாசலபிரதேசம் மற்றும் கேரளாவில் தலா 2 பேரும், அந்தமான் நிகோபார் தீவு, சண்டிகார், சத்தீஸ்கார், கோவா, நாகாலாந்து மற்றும் சிக்கிமில் தலா ஒருவரும் என ஒரே நாளில் 654 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.

இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு கொரோனாவால் 3 லட்சத்து 83 ஆயிரத்து 723 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 ஆயிரத்து 883 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் உயிரை கொரோனா காவு வாங்கி இருக்கிறது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மும்பையில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வந்தது. இந்த நிலையில் நேற்று அங்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஒரு நாளில் 8,776 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 700 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி இருக்கிறது.

இது தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஒரு நல்ல செய்தி, மும்பையில் ஒரே நாளில் அதிகபட்ச பரிசோதனை(8,776) மேற்கொண்ட போதிலும், 700 பேருக்கே தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு ஒரு ஆறுதல் கிடைத்துள்ளது. எனினும், மக்கள் பாதுகாப்பு விதிகளை கைவிட்டு விடக்கூடாது. முககவசம் அணிவதை தொடருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அங்கு கொரோனாவால் 3,659 பேர் உயிரிழந்துள்ளனர். 3-வது இடத்தில் இருக்கும் தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 31 ஆயிரத்து 219 ஆகவும், பலி எண்ணிக்கை 3,853 ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா 5 மற்றும் 6-வது இடங்களில் உள்ளன. 2 மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரையில் கர்நாடகாவில் 1,953, ஆந்திராவில் 1,090 பேரும் பலியாகி உள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. அங்கு 63 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/29032401/Corona-outbreak-approaches-15-lakh-in-India-Infection.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சமாக உயர்வு: பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சமாக உயர்வு: பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது.
பதிவு: ஜூலை 30,  2020 05:13 AM
புதுடெல்லி, 

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை தொடர்ந்து, 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவில் அதிகம் பாதிப்பு உள்ள மாநிலமாக மராட்டியம் இருக்கிறது. அங்கு கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகம், டெல்லி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் பாதிப்பு 2 லட்சத்து 34 ஆயிரத்தை தாண்டிவிட்ட நிலையில், மற்ற 3 மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 74 ஆயிரத்தையும், மேற்குவங்காளத்தில் 64 ஆயிரத்தையும், குஜராத்தில் 58 ஆயிரத்தையும் நெருங்கிவிட்டது.

தெலுங்கானாவில் 57 ஆயிரத்து 142, பீகாரில் 43 ஆயிரத்து 843, ராஜஸ்தானில் 38 ஆயிரத்து 514, அசாமில் 34 ஆயிரத்து 947, அரியானாவில் 32 ஆயிரத்து 876, மத்தியபிரதேசத்தில் 29 ஆயிரத்து 217, ஒடிசாவில் 28 ஆயிரத்து 107, கேரளாவில் 20 ஆயிரத்து 894, ஜம்மு காஷ்மீரில் 18 ஆயிரத்து 879, பஞ்சாபில் 14 ஆயிரத்து 378, ஜார்கண்டில் 9 ஆயிரத்து 78, சத்தீஸ்காரில் 8 ஆயிரத்து 257, உத்தரகாண்டில் 6 ஆயிரத்து 587, கோவாவில் 5 ஆயிரத்து 287, திரிபுராவில் 4 ஆயிரத்து 269, புதுச்சேரியில் 3 ஆயிரத்து 11, இமாசலபிரதேசத்தில் 2 ஆயிரத்து 330, மணிப்பூரில் 2 ஆயிரத்து 317, நாகாலாந்தில் 1,460, அருணாசலபிரதேசத்தில் 1,330, லடாக்கில் 1,327, தாதர்நகர் ஹவேலியில் 982, சண்டிகாரில் 934, மேகாலயாவில் 779, சிக்கிமில் 579, மிசோரத்தில் 384, அந்தமான் நிகோபார் தீவில் 363 பேர் என நாடு முழுவதும் மொத்தம் 15 லட்சத்து 31 ஆயிரத்து 669 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 48 ஆயிரத்து 513 ஆகும்.

24 மணி நேரத்துக்குள் ஏற்படும் கொரோனா பாதிப்பில் எப்போதுமே மராட்டிய மாநிலமே முதல் இடத்தில் இருக்கும். ஆனால் நேற்று அந்த இடத்தை ஆந்திர மாநிலம் பிடித்தது. அங்கு புதிதாக 7,948 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மராட்டியத்தில் 7,717 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கி றது.

கொரோனா பாதிப்பை போலவே பலி எண்ணிக்கையிலும் மராட்டியமே முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு இந்த வைரசின் பிடியில் சிக்கி 14 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் உள்ள டெல்லியில் 3,881 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். 3-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3,741 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள குஜராத்தில் 2,372 பேரும், கர்நாடகாவில் 2,055 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,497 பேரும், மேற்குவங்காளத்தில் 1,449 பேரும், ஆந்திராவில் 1,148 பேரும், மத்தியபிரதேசத்தில் 830 பேரும், ராஜஸ்தானில் 644 பேரும், தெலுங்கானாவில் 480 பேரும், அரியானாவில் 406 பேரும், பஞ்சாபில் 336 பேரும், ஜம்மு காஷ்மீரில் 333 பேரும், பீகாரில் 269 பேரும், ஒடிசாவில் 154 பேரும், ஜார்கண்டில் 89 பேரும், அசாமில் 88 பேரும், உத்தர்காண்டில் 70 பேரும், கேரளாவில் 67 பேரும், புதுச்சேரியில் 47 பேரும், சத்தீஸ்காரில் 46 பேரும், கோவாவில் 36 பேரும், திரிபுராவில் 21 பேரும், சண்டிகார் மற்றும் இமாசலபிரதேசத்தில் தலா 14 பேரும், லடாக்கில் 6 பேரும், மேகாலயா மற்றும் நாகாலாந்தில் தலா 5 பேரும், அருணாசலபிரதேசத்தில் 3 பேரும், தாதர்நகர் ஹவேலியில் 2 பேரும், அந்தமான் நிகோபார் தீவு மற்றும் சிக்கிமில் தலா ஒருவரும் என நாட்டில் மொத்தம் 34 ஆயிரத்து 193 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பலியாகி உள்ளனர். இதில் 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 768 ஆகும்.

கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், அதில் 9 லட்சத்து 88 ஆயிரத்து 30 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. இன்னும் 5 லட்சத்து 9 ஆயிரத்து 447 பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கண்ட இந்த தகவல்களை வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாததால் முந்தைய நாள் எண்ணிக்கையையே குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/India/2020/07/30051310/Corona-infection-in-India-rises-to-15-lakh-Death-toll.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் புதிய உச்சம்: கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் புதிய உச்சம்: கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று

 

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
பதிவு: ஆகஸ்ட் 06,  2020 09:41 AM
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.64  லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில்  904-பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  40,699- ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,64,537-  ஆக உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புடன் இன்றைய நிலவரப்படி 5,95,501-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13,28,337-பேர் தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளனர்.   

இந்தியாவில் 2,21,49,351-  பேருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும்  6,64,949   மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக  இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/06094127/India-reports-singleday-spike-of-56282-new-COVID19.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதையும் தன் பிடிக்குள் வைத்திருக்கும் கொரோனா தொற்றிடம் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. இங்கும் தொற்றில் சிக்குவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த 3 நாட்களில் தொற்றில் சிக்கியோரின் எண்ணிக்கை தினமும் புதிய உச்சமாக அமைந்தது.
 
 
ஆனால் இந்த எண்ணிக்கை நேற்று சற்று குறைந்திருந்தது. அந்தவகையில் நேற்று முன்தினம் 64 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 64 ஆக குறைந்திருந்தது. அதேநேரம் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி மலைக்க வைத்துள்ளது.
 
இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 22 லட்சத்து 15 ஆயிரத்து 74 ஆக உயர்ந்தது.
 
இதைப்போல கொடிய கொரோனாவிடம் சிக்கியவர்களில் மேலும் 1,007 பேர் பலியாகி விட்டனர். இது கடந்த 2 நாட்களை விட அதிகமாகும். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா, பலி வாங்கிய உயிர்களின் எண்ணிக்கை 44,386 ஆக அதிகரித்து சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 
பலியான 1,007 பேரில் வழக்கம் போல மராட்டியத்தில் அதிகபட்சமாக 390 பேர், தமிழகத்தில் 119 பேர், கர்நாடகாவில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக ஆந்திராவில் 97, மேற்கு வங்காளத்தில் 54, உத்தரபிரதேசத்தில் 41, குஜராத், பஞ்சாபில் தலா 24, ஜார்கண்டில் 22, மத்திய பிரதேசத்தில் 19, டெல்லி, ஒடிசா, காஷ்மீரில் தலா 13 பேர் இறந்துள்ளனர்.
 
இந்த பட்டியலில் ராஜஸ்தான் 11, தெலுங்கானா 10, அரியானா 9, உத்தரகாண்ட் 8, சத்தீஷ்கார், புதுச்சேரி தலா 7, பீகார், அசாமில் தலா 5, கோவாவில் 3, கேரளாவில் 2, திரிபுரா, இமாசல பிரதேசம், சண்டிகர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தலா 1 என இறப்பு பதிவாகி உள்ளது.
 
இதைப்போல மொத்த சாவு எண்ணிக்கையிலும் மராட்டியமே முதலிடம் வகிக்கிறது. அங்கு 17,757 பேர் இதுவரை கொரோனாவுக்கு தங்கள் இன்னுயிரை பறிகொடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து தமிழகம் 4,927 பலி எண்ணிக்கையுடன் 2-ம் இடத்தில் உள்ளது. முறையே 4,111 மற்றும் 3,198 என்ற சாவு எண்ணிக்கையை கொண்ட டெல்லியும், கர்நாடகமும் 3 மற்றும் 4-ம் இடங்களை பெற்றுள்ளன.
 
இவற்றை தவிர குஜராத் (2,652), உத்தரபிரதேசம் (2,069), மேற்கு வங்காளம் (2,059), ஆந்திரா (2,036), மத்திய பிரதேசம் (996), ராஜஸ்தான் (789), தெலுங்கானா (637), பஞ்சாப் (586) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
 
இவ்வாறு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் இந்த கொடிய தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று பகலுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 54,859 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
 
இது இதுவரையிலும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். இதன் மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கையும் 15 லட்சத்து 35 ஆயிரத்து 743 ஆக உயர்ந்து உள்ளது. குணமடைந்தோர் விகிதமும் ஏறக்குறையை 70 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
 
மேலும் சிகிச்சையில் இருப்போர் விகிதம் 28.66 ஆக குறைந்திருக்கிறது. தற்போதைய நிலையில் 6 லட்சத்து 34 ஆயிரத்து 945 பேர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர். அத்துடன் சாவு விகிதமும் 2 சதவீதமாக குறைந்திருப்பதுடன், தொடர்ந்து சரிவடைந்தும் வருகிறது.
 
நாடு முழுவதும் நேற்று முன்தினம் மட்டும் சுமார் 4 லட்சத்து 77 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கையும் 2,45,83,558 ஆக அதிகரித்து உள்ளது.
 
இவ்வாறு பரிசோதனைகளை அதிகரித்து விரைவிலேயே தொற்று உறுதி செய்யப்படுவது, தொடர்பில் இருப்பவர்களை தனிமைப்படுத்துவது, உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பது போன்ற நடவடிக்கைகளால் 15 லட்சத்துக்கு மேற்பட்டோரை குணப்படுத்த முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தாக்கிய பிரணாப் முகர்ஜி ஆபத்தான கட்டத்தில்!

Pranabmukherjee-ians_0.jpg?189db0&189db0

 

கொரோனா தொற்றுக்கு உள்ளான இந்திய முன்னாள் பிரதமர் பிரணாப் முகர்ஜியின் (84-வயது) உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மூளை அறுவைச்சிகிச்சை ஒன்று இடம்பெற்ற மறுநாள் முகர்ஜிக்கு கொரோனா தொற்றும் உறுதியாகியிருந்தது.

இந்நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை என்றும் அவர் தொடர்ந்தும் வென்டிலேட்டரின் உதவியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/கொரோனா-தாக்கிய-பிரணாப்-ம/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

skynews-coronavirus-vaccine_5052383-720x450.jpg

கொரோனா வைரஸ் : உலகளவில் இந்தியாவிற்கு முதலிடம்!

கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் நாள்தோறும் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவர்களின் பட்டியலில்  இந்தியா முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஒரேநாளில் 61 ஆயிரித்து 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 835 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 23 இலட்சத்து 28 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 16 இலட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 64 இலட்சத்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவர்களில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தொற்றினால்-5/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பலி எண்ணிக்கை; பிரிட்டனை பின்னுக்கு தள்ளி 4வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா

கொரோனா பலி எண்ணிக்கை; பிரிட்டனை பின்னுக்கு தள்ளி 4வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா

 

புதுடெல்லி,

உலக நாடுகளில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கு, செல்வ வளம் நிறைந்த நாடுகளை அடுத்து வளர்ந்து வரும் நாடுகளிலும் கடுமையாக மக்கள் பாதிப்படைந்து உள்ளனர்.  உலகம் முழுவதும் 2 கோடி பேருக்கு மேல் கொரேனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன், 7.5 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

இவற்றில் வல்லரசாக கூறப்படும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இதனை தொடர்ந்து பிரேசில் நாடு உள்ளது.  அமெரிக்காவில் 50 லட்சம் பேர் வைரசின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதேபோன்று பலி எண்ணிக்கையிலும் அந்நாடு முதல் இடத்தில் உள்ளது.  இதனை தொடர்ந்து, மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன.  4வது இடத்தில் இங்கிலாந்து நாடு இருந்து வந்தது.

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 942 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 47 ஆயிரத்து 33 ஆக உயர்ந்து உள்ளது.

இதனை அடுத்து, பலி எண்ணிக்கையில் இங்கிலாந்து நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையும் ஒரே நாளில் 66 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இது அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விட எண்ணிக்கையில் அதிகம் ஆகும்.

இதேபோன்று மொத்த பாதிப்பு ஏறக்குறைய 24 லட்சம் என்ற எண்ணிக்கையை இந்தியா தொட்டுள்ள நிலையில், உலக அளவில் அதிக பாதிப்புகளை கொண்ட 3வது நாடாகவும் உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/13150601/Number-of-corona-victims-India-overtakes-Britain-to.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை: பிரணாப் முகர்ஜி ‘கோமா’ நிலையை அடைந்தார்
 
டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை: பிரணாப் முகர்ஜி ‘கோமா’ நிலையை அடைந்தார்
 

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84) கடந்த 9-ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்தார். இதனால் அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டதோடு, இடது கை உணர்ச்சியற்றதாகவும் இருந்ததால் ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்ததால், டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அந்த ரத்த கட்டியை அகற்றினர். ஆபரேஷனுக்கு பிறகு பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமானதால் அவருக்கு வென்டிலேட்டர் கருவி உதவியுடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

அவரது உடல்நிலை நேற்று முன்தினம் மிகவும் மோசம் அடைந்தது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆஸ்பத்திரிக்கு சென்று, பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்தார்.

பிரணாப் முகர்ஜி நேற்று காலை நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையை அடைந்தார்.

இதுகுறித்து ஆஸ்பத்திரியின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுள்ளார். அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக உள்ளன. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து நேற்று வதந்தி பரவியது. இதைத்தொடர்ந்து அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், தனது தந்தை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான தகவல் பொய் என்றும், அவர் உயிருடன் இருப்பதாகவும், இதயத்தின் செயல்பாடு நிலையாக இருப்பதாகவும் கூறி உள்ளார்.

இதேபோல் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியும், தனது தந்தையின் உடல்நிலை குறித்து வெளியான வதந்திகள் தவறானவை என்று டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/14015622/Treatment-at-Delhi-Hospital-Pranab-Mukherjee-reaches.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-720x450.jpg

கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதன்படி நேற்று ஒரேநாளில்  புதிதாக  65 ஆயிரத்து  22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 இலட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது.

அத்துடன் புதிதாக 1089 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் குறித்த தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20 இலட்சத்து 36 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் 6 இலட்சத்து 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-இந்தியாவில-8/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனா புதிய உச்சம் தொட்டது: ஒரே நாளில் 70 ஆயிரம் பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனா புதிய உச்சம் தொட்டது: ஒரே நாளில் 70 ஆயிரம் பேருக்கு தொற்று

உலகையே நடுங்க வைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. நேற்றுமுன்தினம் இந்தியாவில் 64 ஆயிரத்து 531 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 69 ஆயிரத்து 652 பேருக்கு தொற்று உறுதியானது. இது முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சம் ஆகும். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 28 லட்சத்து 36 ஆயிரத்து 925 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் இந்தியாவில் 9 லட்சத்து 18 ஆயிரத்து 470 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதின் விளைவாகத்தான் தொற்று பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 977 பேர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் (1,092) நேற்று பலி எண்ணிக்கை சற்றே குறைந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 346 பேர் இறந்திருக்கிறார்கள். அதற்கு அடுத்து நிலையில் கர்நாடகத்தில் 126 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகத்துக்கு அடுத்து தமிழகத்தில் கூடுதல் உயிர்ப்பலி நேர்ந்துள்ளது.

ஆந்திராவில் 86 பேரும், உத்தரபிரதேசத்திலும், மேற்கு வங்காளத்திலும் தலா 53 பேரும் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப்பில் 23, மத்திய பிரதேசத்தில் 18, குஜராத்தில் 17, ஜார்கண்டில் 15, உத்தரகாண்டில் 14, ராஜஸ்தானில் 12, பீகாரிலும், ஜம்மு காஷ்மீரிலும் தலா 11, அசாமிலும், ஒடிசாவிலும், தெலுங்கானாவிலும், அரியானாவிலும் தலா 10, டெல்லியில் 9, கோவாவில் 8, கேரளாவில் 7, புதுச்சேரியில் 6, சத்தீஷ்காரில் 3, சண்டிகாரிலும், லடாக்கிலும், சிக்கிமிலும் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது. இதில் மராட்டியம் முதல் இடத்தில் தொடர்கிறது. இந்த மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 33 ஆக உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகம் (6,123) உள்ளது. 3-வது இடத்தில் கர்நாடகம் (4,327) இருக்கிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம் (4,327), டெல்லி (4,235), ஆந்திரா (2,906), குஜராத் (2,837), உத்தரபிரதேசம் (2,638), மேற்கு வங்காளம் (2,581), மத்திய பிரதேசம் (1,159) உள்ளன. இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/21044239/Corona-reaches-new-peak-in-India-70000-people-infected.vpf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.