Jump to content

கரோனா நோயாளிகள் ஒருவாரத்தில் குணமடைகின்றனர்; சித்த மருத்துவர்களை ஆரம்பத்திலேயே களமிறக்கியிருக்க வேண்டும்; மருத்துவர் வீரபாபு சிறப்புப் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கரோனா நோயாளிகள் ஒருவாரத்தில் குணமடைகின்றனர்; சித்த மருத்துவர்களை ஆரம்பத்திலேயே களமிறக்கியிருக்க வேண்டும்; மருத்துவர் வீரபாபு சிறப்புப் பேட்டி

siddha-docotor-about-curing-corona-patients சித்த மருத்துவர் வீரபாபு

தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி நிலவரப்படி, 31 ஆயிரத்து 667 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 22 ஆயிரத்து 149 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த ஒருவார காலமாக தினந்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடக்கிறது. தினந்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையிலும் சென்னையே முதலிடத்தில் உள்ளது.

கரோனா தொற்றின் தாக்கம் வீரியமடைந்து வரும் நிலையில், தமிழக அரசின் சார்பாக, சென்னையில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கரோனா சிகிச்சைக்கென அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மையத்தில், சித்த மருத்துவம் மூலம் நோயாளிகள் ஒருவார காலத்தில் குணமடைவதாகக் கூறுகிறார் சித்த மருத்துவரும், கரோனா சிகிச்சைக்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவருமான வீரபாபு.

தற்போது வரை இங்கு 60 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 வயது முதல் 70 வயது வரையிலான கரோனா நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 3-ம் தேதிதான் இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டது. வரும் 10-ம் தேதி, அதாவது ஒருவார காலத்தில் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து கிட்டத்தட்ட 25 பேர் வீடு திரும்ப உள்ளனர்.

சித்த மருத்துவம் மூலம் நோயாளிகளுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம்.

கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் மூலம் என்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?

மத்திய அரசின் வழிகாட்டுதல்கள், சென்னை அண்ணா அரசு சித்த மருத்துவமனை, தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை ஆகியவை இணைந்து உருவாக்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படியே நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது. கரோனா நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. கபசுரக் குடிநீர் தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒருவேளை வழங்கப்படும். பின்னர் வாரம் இருமுறை அல்லது ஒருமுறை என அளவு குறைக்கப்படும்.

கபசுரக் குடிநீர் தவிர, நாங்கள் தயாரிக்கும் சிறப்பு மூலிகைத் தேநீரும் வழங்கப்படுகிறது. தேநீரில் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரட்டை, அதிமதுரம், மஞ்சள், ஓமம், கிராம்பு, கடுக்காய் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அளவில் கலந்து பொடியாக்கி, 400 மி.லி. தண்ணீரில் 10 கி. இந்தப் பொடியை கலந்து அந்த தண்ணீரை 100 மி.லி. அளவாக வற்றி இந்த சிறப்பு மூலிகைத் தேநீர் தயாரிக்கப்படுகிறது. இது நோயாளிகளுக்கு தினந்தோறும் இருமுறை வழங்கப்படுகிறது.

இதுதவிர, தாளிசாதி மாத்திரை காலை, இரவு என இருவேளைகள் வழங்கப்படுகின்றன.

இந்த சித்த மருத்துவ முறையால் கரோனா நோயாளிகளின் உடல்நிலையில் என்ன மாதிரியான மாற்றங்கள் தெரிகின்றன?

இந்த மருத்துவ முறை கரோனா தொற்றைத் தடுப்பதற்கு ஓரளவு பயனுள்ளதாக உள்ளது. சிகிச்சை முறையாக இதனைப் பயன்படுத்தும்போது நோயாளிகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. காய்ச்சல் அறிகுறிகளுடன் வந்தவர்கள் இப்போது காய்ச்சல் இல்லாமல் இருக்கின்றனர். கல்லீரலில் ஏற்கெனவே பிரச்சினை இருப்பவர்கள் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

இங்குள்ள கரோனா நோயாளிகளில் நீரிழிவு நோய் உள்ளவர்களும் இருக்கிறார்கள். நீரிழிவு உள்ளிட்ட மற்ற நோய்கள் உள்ளவர்களுக்கு அதன் தன்மைக்கேற்ப கொடுக்கப்படும் மருந்துகளின் அளவு மாறுபடும். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 55 வயதுள்ள நோயாளி ஒருவருக்கு 'ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டீஸ்' இருக்கிறது. இங்கு அவருக்கு அளித்த சிகிச்சையின் மூலம் கரோனா மட்டுமல்லாமல் 'ஆர்த்ரிட்டீஸ்' பிரச்சினையிலிருந்தும் மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறார்.

நீரிழிவு நோயாளிகள், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் என ஏற்கெனவே நாள்பட்ட நோயுள்ளவர்கள், முதியவர்கள் ஆகிய அதிக பாதிப்புள்ளவர்களை ஒரு வாரத்திலேயே குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்ப இருக்கிறோம்.

ஏற்கெனவே வேறுவித நோய்கள் இருப்பவர்களுக்கு கரோனா ஏற்படும்போது அவர்கள் உயிரிழப்பதற்கான சதவீதம் அதிகமாக இருக்கிறது என்பதையே புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. இந்த சமயத்தில் திடீரென கரோனா நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படின் இங்கு அதற்கான வசதிகள் உண்டா? அவசர சமயத்தில் எப்படி சமாளிக்கிறீர்கள்?

இங்கு அனைத்து வித வசதிகளும் இருக்கின்றன. சித்த மருத்துவத்திற்கான அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டு இருக்கின்றன. அவசரத் தேவை ஏற்படும்போது கவனித்துக்கொள்வதற்கான அனைத்து மருத்துவத் தேவைகளும் நம்மிடம் கைவசம் இருக்கிறது. இந்த சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து யாரும் தீவிர நிலைமைக்குச் செல்லவில்லை. அவசர சிகிச்சைகளும் தேவைப்படவில்லை. நன்றாகவே குணமடைந்து வருகின்றனர்.

1591617334751.jpg

மற்ற மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை முறைக்கும் சித்த மருத்துவ முறைக்கும் இடையிலான வித்தியாசங்கள் என்ன?

மற்ற மருத்துவமனைகளில் "நாம் மருத்துவமனைக்கு வந்திருக்கிறோம். நமக்கு நோய் இருக்கிறது" என்றுதான் நோயாளிகள் உணர்வார்கள். ஆனால், இங்கு ஆரோக்கியத்தைப் பெருக்கிக்கொள்ள வருவதுபோன்று மனதளவில் உணருகின்றனர். அப்படியான சூழ்நிலை இங்கு இருக்கிறது.

அவர்களுக்குள் பயம், பதற்றம், இறுக்கம் என எதுவும் இருக்காது. இவை மற்ற மருத்துவமனைகளில் நோயாளிகளிடையே இருக்கும். இங்கு காலையில் நடைப்பயிற்சி செய்யலாம். அரச மரத்தடியில் அமர்ந்து காற்று வாங்கலாம். சூரிய ஒளி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். பதற்றம் இல்லாமல் நல்ல நிலையில் வைத்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் அதிகரிக்கும். மூலிகை ஆவி பிடிக்கலாம்.

மூலிகை சார்ந்த நல்ல உணவுகள் இங்கு வழங்கப்படுகின்றன. சத்தான உனவுகளுடன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மூலிகை சேர்க்கப்படுகிறது. உதாரணமாக, தூதுவளை தோசை, கறிவேப்பிலை இட்லி, வேப்பம்பூ ரசம், கற்பூரவல்லி ரசம், தூதுவளை சூப், நவதானிய சுண்டல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

பெரும்பாலான மக்கள் அலோபதி மருத்துவத்தையே நம்புகின்றனர். சித்த மருத்துவம் குறித்து பல சமயங்களில் விமர்சனங்கள் எழுந்ததுண்டு. அப்படியிருக்கையை கரோனா போன்ற பெருந்தொற்றை இந்த சிகிச்சை முறையால் வெல்ல முடியும் என நினைக்கிறீர்களா?

நிச்சயமாக, மக்கள் இதனை நம்ப ஆரம்பித்திருக்கின்றனர். ஆரம்பத்தில் 5 நோயாளிகள் மட்டும்தான் அரசின் மூலமாக இந்த மையத்திற்கு வந்தனர். இப்போது 60 நோயாளிகள் உள்ளனர். கரோனா பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதழுடன் வந்தால் அவர்களை இங்கு அனுமதித்துக்கொள்கிறோம். அவர்கள் குறித்த தகவல்களை தினந்தோறும் மாநகராட்சிக்குத் தெரியப்படுத்துகிறோம்.

வரும் 10-ம் தேதி, 70 வயதுள்ளவர்கள் வரை குணமடைந்து வீடு திரும்பும்போது மக்களுக்கு சித்த மருத்துவம் மீதிருந்த தவறான எண்ணங்கள் படிப்படியாக மாறும். சிறுநீரகம், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள், நீரிழிவு நோயுள்ளவர்கள் ஒருவாரத்தில் குணமடைந்து செல்லவிருக்கின்றனர். அவர்கள் குணமடைந்து வீடு திரும்புவதைப் பார்க்கும்போது அரசின் கவனம் எங்கள் பக்கம் திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதுவரை எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சித்த மருத்துவத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்பு இப்போதுதான் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. பல பிரச்சினைகளுடன் வந்தவர்கள் குணமாகிச் செல்லும்போது இதனைப் பின்பற்றுவதில் தவறில்லையே.

ஏற்கெனவே புழல் சிறையில் 25 பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவருக்கும் நேரடியாக சென்று சித்த மருத்துவத்தைத்தான் வழங்கினோம். அவர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர். நன்றாக குணமடைந்து வருகின்றனர். சித்த மருத்துவத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.

சென்னையில் கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை சித்த மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறீர்களா?

மார்ச் மாதம் முதல் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலானபோதே சித்த மருத்துவர்களைக் களத்தில் இறக்கியிருந்தால் இந்த அளவுக்கு அதிகமாகியிருக்காது. அரசு அதனைச் செய்திருக்க வேண்டும். சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்ட பின்புதான் சித்த மருத்துவத்திற்கு இந்த முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. அதுவரை அரசு, சித்த மருத்துவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.

கோயம்பேடு 127-வது வார்டில் சித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு அனுமதி வழங்கியது. அப்பகுதியை ஒரு வாரம் கவனித்துக்கொண்டதற்கு பின்னர் கடந்த 15 நாட்களாக புதிய தொற்றுகள் இல்லை. ஏதாவது வெளியில் இருந்து 1-2 புதிய தொற்றாளர்கள்தான் உள்ளனர். அங்கு கபசுரக் குடிநீர், சிறப்பு மூலிகைத் தேநீரை மக்களுக்கு அதிகப்படியாக வழங்கினோம்.

சித்த மருத்துவம் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என இப்படி படிப்படியாக நிரூபிக்கும்போது அரசு எங்களை நம்பும்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் முதன்மையாக என்னென்ன கடைப்டிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

கரோனா அல்லாதவர்களும் வீடுகளிலேயே 5 கிராம் கபசுரப் பொடியை 250 மி.லி. கலந்து அதனை 50-60 மி.லி.யாக வற்றியவுடன் வடிகட்டிக் குடிக்கலாம். முதல் வாரம் தினந்தோறும் ஒரு வேளை அருந்தலாம். அதன்பின்னர் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை என அருந்தலாம். 5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே வழங்க வேண்டும்.

ஓரளவு கல்வியறிவு உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு சென்று சேர்ந்திருக்கிறது. குடிசைப் பகுதிகளில் மக்களுக்கு அரசு இன்னும் விளக்கி சொல்ல வேண்டும். கரோனா நோயாளி உள்ளவர்களின் வீடுகளில் இருப்பவர்கள் ஏற்கெனவே கைகளை அடிக்கடி கழுவுதல், இருவேளை குளித்தல் உள்ளிட்ட சுய சுத்தத்தைக் கடைப்பிடித்திருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு கரோனா பரவாது. அதற்கான உதாரணங்களும் உள்ளன. குடிசைப் பகுதிகளில் இதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. தண்ணீர் பிரச்சினை இருக்கும், அவர்களின் சுற்றுப்புறங்களும் தூய்மையாக இருப்பதில்லை. எனவே இந்தப் பகுதிகளில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

https://www.hindutamil.in/news/tamilnadu/558451-siddha-docotor-about-curing-corona-patients-7.html

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Country,
Other
Total
Cases
New
Cases
Total
Deaths
New
Deaths
Total
Recovered
Active
Cases
Serious,
Critical
Tot Cases/
1M pop
Deaths/
1M pop
Total
Tests
Tests/
1M pop
Population
  World 7,597,426 +13,518 423,846 +760 3,841,943 3,331,637 53,906 975 54.4      
1 USA 2,089,701   116,034    816,086 1,157,581 16,827 6,315 351 23,073,470 69,729 330,901,704
2 Brazil 805,649   41,058    396,692 367,899 8,318 3,792 193 1,364,423 6,421 212,479,860
3 Russia 502,436   6,532    261,150 234,754 2,300 3,443 45 13,875,097 95,080 145,931,382
4 India 298,283   8,501    146,972 142,810 8,944 216 6 5,363,445 3,889 1,379,270,740
5 UK 291,409   41,279    N/A N/A 516 4,294 608 6,240,801 91,956 67,867,577
6 Spain 289,787   27,136    N/A N/A 617 6,198 580 4,465,338 95,507 46,753,887
7 Italy 236,142   34,167    171,338 30,637 236 3,905 565 4,443,821 73,493 60,466,117
8 Peru 214,788   6,109    102,429 106,250 1,065 6,519 185 1,282,478 38,927 32,946,025
9 Germany 186,795   8,851    171,600 6,344 462 2,230 106 4,694,147 56,036

 

நான்காவது இடத்தில் இந்தியா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மார்கழிமாதத்தில் பரவத்தொடங்கிய கொரோணா பரவல் உலகநாடுகள் அனைத்துக்கும் பரவி இப்போது இந்தியாவைப் பதம் பார்க்க வெளிக்கிட்டிருக்கு.

மேற்குலக நாடுகள் உட்பட ஏனைய நாடுகளுக்குப் பரவும்போதே இந்தியாவின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் அடி வீழ்ந்துவிட்டது, அப்போதே இந்தியா தலையெடுக்க முடியாத நிலையிலேயே இருந்தாலும் அதிகாரவர்க்கமும்  அரசியல்வாதிகளும் இதெல்லாம் சும்ம எனப் பீலா விட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அதோடு விடவில்லை சட்டிபானையைத் தட்டுவதும் கொரோணாத் தீபாவழி கொண்டாடியும் கொண்டிருந்தார்கள்

ஆனால் இப்போதுதான் உண்மையான ஆட்டம் ஆரம்பம். போதாக்குறைக்கு சீனாக்காரனும் வேணாம் அழுதிடுவன் என இந்தியா சொல்லுமளவுக்கு அலப்பறை செய்கிறான். 

அடுத வல்லரசுக் கனவு இப்போது முற்றிலுமாகத் தகர்ந்துபோய்விட்டது. 

ஒரு விடையத்தைக் கவனித்தீர்களா முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஒவ்வொரு மே மாதத்திலும்  சிறீலங்காவில்  சிங்களம் கையக் கசக்கிக்கொண்டு நிற்கும்படியாக ஏதாவது நடப்பதை. 

அது இப்போது தமிழர் விரோத தேசம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை

இது முள்ளிவாய்க்கால் மாதத்திலிருந்து ஆரம்பித்து எதிர்வரும் மாவீரர் நாள் வரைக்கும் தொடர்ந்தால் நல்லம் என்பது எனது கணிப்பு.

அறம் நின்று கொல்லும் 
அது வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் தனிமனிதன் செய்த தவத்தின் பயனான அறம். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ அதிசயம்; 5 நாட்களில் நலமடையும் கரோனா நோயாளிகள்; சித்த மருத்துவத்தை அனுமதிக்க வேண்டும்; அன்புமணி

anbumani-urges-to-give-siddha-treatment-to-corona-patients அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

நோயாளிகள் 5 நாட்களில் குணமடைவதால், கரோனா மையங்களில் சித்த மருத்துவத்தை அனுமதிக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 18) வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸ் நோயை சித்த மருத்துவத்தின் மூலம் 5 நாட்களில் நலமாக்கி சாதனை படைத்து இருப்பதாகவும், கரோனா மையங்களைத் தங்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தால் குறுகிய காலத்தில் நோயாளிகளைக் குணப்படுத்திக் காட்டுவதாகவும் சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது அரசு பரிசீலிக்கப்பட வேண்டிய யோசனையாகவே தோன்றுகிறது.

தாம்பரத்தில் செயல்பட்டு வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சித்த மருத்துவத்தில் ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 160 பேரை 5 நாட்களில் நலமாக்கி இருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் மீனாகுமாரி தெரிவித்திருக்கிறார்.

சித்த மருத்துவ நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் மொத்தம் 3 வகையான சித்த மருந்துக் கலவைகளை உருவாக்கி இருப்பதாகவும், அவற்றை கரோனா தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தலாம்; கரோனாவைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அம்மருந்துகளைப் பயன்படுத்தியதில் இரு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்த 160 பேரும், புழல் சிறையில் பாதிக்கப்பட்டிருந்த 23 கைதிகளும் இதுவரை இல்லாத வகையில் 5 நாட்களில் குணமடைந்துள்ளனர். இது ஒரு மருத்துவ அதிசயம் என்றால் மிகையில்லை.

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் பாமகவின் முயற்சியால் தமிழகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்தபோதுதான் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

2009-ம் ஆண்டில் தமிழகத்தில் பரவிய பன்றிக் காய்ச்சலை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தயாரித்து வழங்கிய கபசுரக் குடிநீர் தான் பெருமளவில் கட்டுப்படுத்தியது. 2012-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் பரவியபோது, அதைக் குணப்படுத்த தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தயாரித்த நிலவேம்புக் குடிநீரை காய்ச்சிக் குடிக்கும்படி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். அந்த வகையில் பார்க்கும்போது தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசு கண்டுகொள்ளாமல் கடந்து போகக்கூடிய ஒன்றல்ல. மாறாகக் கவனத்தில் கொண்டு பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி 35 ஆயிரத்து 556 பேர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குணமடைந்தவர்கள் தவிர 16 ஆயிரத்து 67 பேர் இன்னும் மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் கரோனா மையங்களில் நவீன மருத்துவத்துடன் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகளையும் இணைத்துதான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், இந்த முறையில் ஒருவர் குணமடைய சராசரியாக 14 நாட்கள் ஆகின்றன. ஆனால், சித்த மருத்துவ முறையில் 5 நாட்களில் நோயாளிகள் குணமடைவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த முறையை கடைப்பிடிப்பதன் மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயர்களை விரைவாகக் குணப்படுத்தி, சென்னையை கரோனா வைரஸ் நோய் இல்லாத நகரமாக மாற்ற முடியும்.

சீனா கரோனா வைரஸ் நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து விரைவாக மீண்டு வருவதற்கு துணை நின்றது பாரம்பரிய சீன மருத்துவ முறைதான். சென்னையில் இப்போதும் சில கரோனா மையங்களில் சித்த மருத்துவம் வழங்கப்படுகிறது. அந்த மையங்களில் உள்ளவர்கள் மற்ற மையங்களில் உள்ளவர்களை விட விரைவாக குணமடைந்து வீடு திரும்புகின்றனர். கரோனா மையங்களில் சித்த மருத்துவம் எடுத்துக் கொள்ள விருப்பமா? என்று பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மருத்துவர்கள் கேட்டபோது, பெரும்பான்மையினர் அதற்கு ஆர்வத்துடன் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா நோய்க்கு தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனம் கண்டுபிடித்துள்ள சிகிச்சை முறை நிரூபிக்கப்பட்டது என்பதால் அதைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான மக்களை விரைவாகக் குணப்படுத்த வேண்டும். இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்றால் உலக அளவில் தமிழர்களின் மருத்துவ முறைக்கு பெரும் புகழும், அங்கீகாரமும் கிடைக்கும்.

எனவே, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தையும் தமிழக அரசு இணைத்துக் கொள்ள வேண்டும். அந்த நிறுவனம் கோருவதைப் போல அனைத்து கரோனா மையங்களையும் சித்த மருத்துவத்திற்காக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை. மாறாக, முதலில் சில ஆயிரம் படுக்கைகளை ஒப்படைக்கலாம்; அதன்பின் மருத்துவம் அளிப்பதில் ஏற்படும் முன்னேற்றம், நோயாளிகளின் விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்து இந்த எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

கரோனாவை நலமாக்குவதில் சித்த மருத்துவம் குறிப்பிடத்தக்க பங்காற்றும் நிலையில் அதைப் பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும்"

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/559963-anbumani-urges-to-give-siddha-treatment-to-corona-patients-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

மருத்துவ அதிசயம்; 5 நாட்களில் நலமடையும் கரோனா நோயாளிகள்; சித்த மருத்துவத்தை அனுமதிக்க வேண்டும்; அன்புமணி

அதிரடி கெமிக்கல் மருந்துகளாலையே கொரோனாவை கட்டுப்படுத்த முடியேல்லையாம். ஆமை வேக சித்தமருத்துவம் வேலை செய்ய வெளிக்கிட உலகம் அழிஞ்சு போயிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்த மருத்துவத்தால் 5 நாட்களில் குணமடையும் கரோனா நோயாளிகள்: அனைத்து மையங்களுக்கும் சிகிச்சையை விரிவுபடுத்த அரசு முடிவு

siddha-medicine-for-coronavirus  

சென்னை

சித்த மருத்துவ சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள் 5 நாட்களில் குணமடைந்து விடுகின்றனர். அதனால் அனைத்து கரோனா சிகிச்சைமையங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை முறையை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 17-ம் தேதி நிலவரப்படி சென்னையில் மொத்தம் 35 ஆயிரத்து 565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட 50 ஆயிரத்து 193 பேரில், சென்னையில் மட்டும் 71 சதவீதம் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 19 ஆயிரத்து 27 பேர் குணமடைந்துள்ளனர். 461 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 16 ஆயிரத்து 67 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் பாதிப்பு அதிகமாக உள்ளவர்கள் 3 அரசு மருத்துவமனைகள் மற்றும் அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான அறிகுறி மற்றும் அறிகுறி இல்லாத, ஆனால் கரோனா தொற்று உள்ளவர்கள், மாநகராட்சி சார்பில் 18 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அலோபதி மருத்துவ கிசிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மாநகராட்சி சார்பில் வளசரவாக்கத்தில் இயங்கி வரும் சிகிச்சை மையம் மற்றும் புழல் சிறையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில்சித்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் 7 நாட்களுக்குள்ளாகவே அனைவரும் குணமடைந்துள்ளனர். அவ்வாறு இதுவரை 183 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் இயங்கிவரும் அனைத்து கரோனா சிகிச்சை மையங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கலாம் என தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் ஆர்.மீனாகுமாரி கூறியதாவது:

கரோனாவுக்கு வழங்கப்படும் சித்த மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் அனைத்தும் உள்ளூரிலேயே கிடைக்கக்கூடியது என்பதால், தட்டுப்பாடின்றி மலிவாக கிடைக்கும். இந்த சிகிச்சை மூலம்கரோனா நோயாளிகள் 5 முதல்7 நாட்களுக்குள் குணமாகிவிடுகின்றனர். அதனால் சென்னையில் உள்ள அனைத்து கரோனா சிகிச்சை மையங்களிலும் ஏற்கெனவே சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வந்தாலும், கூடுதலாக சில சித்த மருந்துகளை வழங்கி சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க அரசுக்கு தெரிவித்திருக்கிறோம்.

அது தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. அதில் கரோனா நோயாளிகள் அனைவருக்கும் சித்த மருத்துவ கிசிச்சை அளிப்பது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது எத்தகைய சித்த மருந்துகளை வழங்கலாம் எனவும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/560094-siddha-medicine-for-coronavirus-1.html

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.