Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாழ் நூலக திறப்பு விழாவை புலிகள் தடுத்தது ஏன்?

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இது யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை என்று நிறுவுகின்ற ஒரு கட்டுரை இல்லை. அங்கு சாதி ஒரு கோரமான பூதமாக இன்றைக்கும் கை பரப்பி நிற்கின்றது என்ற உண்மையை முதலிலேயே சொல்லிவிடுகின்றோம். அது யாழ்ப்பாணத்தையும் தாண்டி புலம்பெயர்ந்த தேசங்கள் வரை கால் பரப்பியுள்ளது. நிற்க
ஒவ்வொரு வருடமும் யாழ் நூல் நிலை எரிப்பு நினைவு நாளின்போது ஒரு தரப்பினர் அதைப் புலிகளின் ‘தலித் விரோத’ நாளாகவும் அனுஷ்டிக்கின்றனர். அதற்கு 2003.02.14ம் திகதி மீளத் திறக்கப்படவிருந்த யாழ் நூலக திறப்பு விழாவை புலிகள் தடுத்து நிறுத்தியதை அவர்கள் காரணமாக முன்வைக்கின்றனர். ஏனெனில் அன்றைய யாழ் மேயர் செல்லன் கந்தையன் அவர்களின் தலைமையில் நூலகம் திறக்கப்படவிருந்தது. செல்லன் கந்தையன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

நாங்கள் யாழ் நூலகத் திறப்பு விழா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு புலிகளுக்கு செல்லன் கந்தையன் அவர்களின் சாதி ஒரு காரணம் இல்லையென்றும் அன்றைக்கு அவர்களோடு முரண்படத்தொடங்கியிருந்த ஆனந்தசங்கரிதான் பிரதான காரணம் என்றும் தொடர்ச்சியாகச் சொல்லி வந்திருக்கிறோம். ஏனெனில் திறப்பு விழா செல்லன் கந்தையன் அவர்களின் தலைமையில் நடைபெற இருந்தாலும் நூலகத்தை ஆனந்தசங்கரியே திறந்து வைக்கத் திட்டமிட்டிருந்தார்.

புலிகளுக்கும் ஆனந்தசங்கரிக்கும் இடையில் தோன்றிய முறுகல் ஒரு தனியான அரசியல் விவாதம். அவர் புலிகளை மிகத் தீவிரமாகச் சீண்டினார். எரிச்சல் படுத்தினார். அவர்களுடைய கட்டளைகளுக்கு வெளியில் துணிச்சலாக வந்துநின்றார். புலிகள் இயக்கத்தை விமர்சித்து அதன் தலைவர் பிரபாகரனுக்கு மாதமொருமுறை கடிதம் எழுதினார். புலிகள் அவருடைய கேள்விகள், குற்றச்சாட்டுகள் எதற்கும் பதிலோ மறுப்போ சொன்னதில்லை. அது புலிகளுடைய உளவியல். ஆயினும் ஆனந்தசங்கரியின் ஒரு சாதனையைப்போல நிகழ இருந்த நூலகத்திறப்பை அவர்கள் தடுத்து நிறுத்துவதென்று தீர்மானித்தார்கள்.மறுபுறத்தில் எரிக்கப்பட்ட நூலகத்தை திறப்பு விழா செய்வதன் மூலம் வேறு அரசியலை செய்ய முனைந்த ஜானாதிபதி சந்திரிக்காவின் அரசியலையும் புலிகள் விரும்பவில்லை.

இந்த நடவடிக்கையில் அவர்கள் ஒரு அதிகாரபூர்வ குரலை வழங்க நினைக்கவில்லை. இதற்கு முன்னரும் பின்னரும் அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு 2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அதிகாரபூர்வ அறிவிப்பு புலிகளிடமிருந்து வெளியானதில்லை. மாறாக அதை சமூகத்தின் பல்வேறு அமைப்புக்களுக்கு ஊடாகவே நிகழ்த்திக் காட்டினார்கள். ஒரு அமைப்பின் நடவடிக்கையாக இல்லாமல் மக்கள் போராட்டமாக மற்றுவது புலிகள் மட்டுமல்ல உலகின் பல போராட்ட அமைப்புகளும் கைக்கொள்ளும் வழிமுறைதான்.

நூலக விவகாரத்திலும் பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், யாழ்ப்பாண வர்த்தக சங்கங்கள், மற்றும் ஒன்றியங்கள் முதலான மக்கள் அமைப்புகளுக்கு ஊடாகவே தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றினார்கள். வர்த்தக சங்கங்கள் ஹர்த்தாலுக்கு ஏற்பாடு செய்தன. கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிகழ இருந்தன. திறப்பு விழா ரத்துச் செய்யப்பட்டது. விழா விளம்பரங்கள் ஆர்ப்பாட்ட அரசியல் எதுவும் இன்றி இரண்டொரு வாரங்களில் நூலகம் இயங்கத்தொடங்கியது.

இந்த இடத்தில் புலி விரோத அரசியலின் ‘ஓட்டுமாட்டு’ ஆரம்பிக்கிறது. மக்களுடைய பக்கத்தில் நின்று புலிகளை விமர்சிப்பதற்கான சில நூறு காரணங்களை புலிகளே உருவாக்கி அளித்துள்ளார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆயினும் இப் புலி விரோத அரசியல்காரர்கள் வேறொரு வகைத் தினுசானவர்கள். அவர்களுடைய புலி விரோத நிலைப்பாடு பெருமளவுக்கு மக்கள் நலன் சார்ந்தது அல்ல. அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான பழைய பிணக்குச் சார்ந்தது. பழி தீர்த்தல் வகையானது. பாதிக்கப்பட்டவர் பழி தீர்க்க முடியாதா என்றால் நிச்சயமாகத் தீர்க்கலாம். ஆனால் அதற்கு மக்கள் நலன் என்று பள பளக்க மினுக்கக் கூடாது. 2009இற்கு முன்னர் புலம்பெயர் நாடுகளில் இயங்கிய புலி விரோத அரசியல் பழி தீர்க்கும் அரசியல்தான்.

அவர்கள் யாழ் நூலகத் திறப்புத் தடுக்கப்பட்டதை தலித் அரசியலாக்கினார்கள். அதைத் தங்களுடைய புலி விரோத அரசியலுக்கு “பாவிக்கத்தொடங்கினார்கள்” மேயர் செல்லன் கந்தையன் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவரது தலைமையில் நடக்கவிருந்த நிகழ்வை புலிகள் தடுத்தார்கள் என்றும், அவருடைய பெயர் கல்வெட்டில் வந்துவிடக் கூடாதென்று பதறிய யாழ்ப்பாணத்தார் (அவர்கள் பதறக்கூடியவர்கள்தான்) புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து - புலிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து நூலகத் திறப்பினைத் தடுத்துவிட்டார்கள் என்றும் உண்மைக்கு மாறாக அவர்கள் நிறுவ ஆரம்பித்தார்கள். தங்களுடைய புலி விரோத அரசியலுக்கு முட்டுக்கொடுப்பதற்காக தலித் அரசியலை “பாவிக்கத்தொடங்கினார்கள்” தலித் அரசியல் இன்னொருவரால் தன்னுடைய தேவைக்குப் “பாவிக்கின்ற” அரசியல் இல்லை.
இந்த விவகாரத்தை முன்வைத்து புலிகளை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விரோதிகளாக முன்வைத்தவர்களில் ஈழச் சூழலில் ஷோபாசக்தி முதன்மையானவர். 2007இல் அவர் எழுதிய வசந்தத்தின் இடிமுழக்கம் தொகுப்பில் நூலகத் தடுப்புப் பற்றி அவர் “கேள்விப்பட்ட” பல்வேறு தகவல்களை நிரப்பி நிரப்பி அதைப் படிப்பவர்களுக்கு “தலித் விரோதப் புலிகள்” என்ற சித்திரத்தை “வலு கிளியராக” ஏற்படுத்துகிறார்.
ஈழப்போர் பின்னணியில் ஒரு திடுக்கிடும் த்ரில்லரைத்தொடங்குவதைப்போல – வன்னியிலிருந்து வந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் சொலமனும், இன்னொரு விடுதலைப்புலி உறுப்பினரான சிறிலும் - கஜேந்திரனும் அலுவலகத்தில் நுழைந்து செல்லன் கந்தையனை மிரட்டுகிறார்கள் என்று காட்சியை விபரிக்கிறார். இங்கே , அதுநாள் வரை யாழ்ப்பாணத்தில் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவராயிருந்த சொலமன் சிறில் என்ற ஒருவரை - ஷோபா சொலமன் என்றும் சிறில் என்றும் இரண்டு பேராக்கி அவர்களை வன்னிக்கு அழைத்துச் சென்று புலிகள் இயக்கத்தில் இணைத்தும் விடுகிறார். அப்பொழுதுதான் புலிகள் தலித் விரோதிகளாயிருந்தார்கள் என்ற சித்திரம் உருவாகும்.

தொடர்ந்தும் புலிகள் செல்லையனை மிரட்டினார்கள், இரத்தக்களறி ஏற்படும் என்று வெருட்டினார்கள், இதற்கு முன்னரே புலிகளால் மாமனிதராகப் போற்றப்பட்ட ரவிராஜ் செல்லன் கந்தையனை பூட்டிய அறைக்குள் வைத்து சாதி ரீதியாக அடித்தார்.. என்று ஷோபா எழுதுகிறார். கவனியுங்கள். செல்லன் கந்தையனைச் சாதி சொல்லி அடித்த ரவிராஜ்ஜை புலிகள் மாமனிதர் ஆக்கினார்கள் என்பதற்கு ஊடாக புலிகளைப்பற்றி உருவாக்க விரும்புகிற சித்திரத்தை நன்றாகக் கவனியுங்கள். ரவிராஜ், செல்லனை சாதியால் திட்டி அடித்தாரா?. சற்றுப் பொறுங்கள்.

நாங்கள் தொடர்ச்சியாக நூலகத் திறப்பு விழா தடுக்கப்பட்டதற்குரிய  பிரதான காரணம் ஆனந்தசங்கரிதான் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டே வருகிறோம். அதாவது ஆனந்தசங்கரிக்கும் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடு என்று சொல்கிறோம். ஆனந்த சங்கரி திறக்கவிருந்த நிகழ்வினை அன்றைக்கு செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்த ஓர் ஏலியனே தலைமை தாங்க இருந்தால்கூட புலிகள் அதை நிறுத்துவதற்கான சூழலே அங்கு நிலவியது. இதை அண்மையில் குறிப்பிட்டபோது “ஊகங்களின் அடிப்படையில் பேசாதீர்கள், இவ்வாறு செல்லன் எங்காவது சொல்லியிருக்கிறாரா” என்று ஷோபா சக்தி கேட்டார். ஆம். செல்லன்தான் சொன்னார்.

இன்னோரு இடத்தில் ஒருவேளை செல்லன் கந்தையாவிற்குப் பதிலாக இன்னொரு வெள்ளாள மேயர் இருந்திருந்தால் ஆனந்தசங்கரி நூல் நிலையத்தைத் திறக்க புலிகள் அனுமதித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா என்று ஷோபாவிடம் கேட்டபோது அவர் “நிச்சயமாக, ஜோராக திறப்பு விழா நடந்திருக்கும்” என்றார். அதாவது புலிகளுக்கு ஆனந்தசங்கரி பொருட்டில்லை. ஒரு வெள்ளாளர் தலைமை தாங்கினால் போதும் என்கிறார். அது அப்படியல்ல ஷோபா. உங்களை விடவும் செல்லன் கந்தையாவிற்கு ‘க்ரவுன்ட் சிற்றுவேசன்’ நன்றாகப் புரிந்திருந்தது. அவர் சொல்வதைக் கேளுங்கள்.

இறுதியாக,எரிக்கப்பட்ட நூலகம் ஒரு நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளைப் புறம் தள்ளி, சந்திரிகாவின் ஒரு சாதனையாகப் போற்றப்பட்டு ஆனந்தசங்கரியால் கோலாகலமாகத் திறக்கப்பட இருந்த திறப்பு விழாவை புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையிலிருந்த ‘பிக்கல் பிடுங்கல்களினால்’ புலிகள் தடுத்து நிறுத்தியபோது - அதற்குத் தலைமை தாங்கவிருந்த செல்லன் கந்தையனின் பெயர் கல்வெட்டில் வரவில்லை என்பதனால் “அப்பாடி” என்று ஆறுதல்பட்டிருக்கக் கூடிய ஓர் உயர் சைவ வெள்ளாளக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்குமென்பதை நாம் அறிவோம். அவர்களைக் கருத்தியல் ரீதியாக மனமாற்றமடையச் செய்யும் தீவிரமான அறிவுச் செயற்பாடுகளை புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது முன்னெடுக்கவில்லை என்பதை நாமும் ஒரு கருத்தாகப் பதிவு செய்கிறோம்.

இதன் அர்த்தம் புலிகள் அவர்களுக்கு ஆதரவான ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள் என்பது அல்ல. அவர்கள் சட்டங்கள் மூலம் சாதிய அடக்குமுறையை ஒடுக்க முனைந்தார்கள். 
யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து அச் சமூக அமைப்பிற்கிடையில் போராடி அரசியலில் தன்னை இணைத்து சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒதுக்கல்களை எதிர்கொண்டு யாழ் மேயராகி சாதிய சனாதன சமூகத்தில் நிலைத்து நின்ற செல்லன் கந்தையனை புலிவிரோத அரசியலுக்கு பயன்படுத்துவதை சுட்டிக்காட்டுவதே எமது நோக்கம். புலிவிரோத அரசியலுக்கு தலித் அரசியலை பயன்படுத்துவதற்க்காக புனைவுகளை உருவாக்குவதை மட்டுமே நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
செல்லன் கந்தையன் குறித்த முழுமையான ஆவணப்படம் ஒன்று வெளிவருகிற போது யாழ்ப்பாணத்தில் ஒரு தலித்(பஞ்சமர்,அடக்கப்பட்டவர் ) மாநகரத்தின் தந்தையாக வந்த கதை முழுமையாகத் தெரிய வரும். யாழ் நூலகத் திறப்பு குறித்து அவரின் கருத்தும் கூட்டமைப்பு-புலிகள்- ஆனந்தசங்கரி என்ற மூன்று அரசியலும்  கிழே உள்ள காணொலியில் 

 -சயந்தன் - சோமிதரன்
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அந்த மூன்று நிமிடச் சாட்சியம்

ண்பர்கள் சயந்தனும், சோமிதரனும் இன்று வெளியிட்டிருக்கும், ஒரு மூன்று நிமிட நேரக் காணொளிகுறித்துப் பேசிவிட நினைக்கிறேன்.

இற்றைக்குப் பதினேழு வருடங்களுக்கு முன்னதாக, யாழ் பொதுநூலக நிலையத் திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டது நாம் அறிந்ததே. அது ஏன் தடுத்து நிறுத்தப்பட்டது, எப்படித் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதில் மாறுபட்ட கருத்துகள் சொல்லப்படுவதுண்டு. தடுத்து நிறுத்திய புலிகள் அதற்கான காரணத்தை எப்போதுமே சொன்னதில்லை.

அப்போதைய மேயர் செல்லன் கந்தையன் தலைமையில், வீ. ஆனந்தசங்கரி அந்த நூலகத்தைத் திறந்துவைப்பதாக இருந்தது. திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டதும், சம்மந்தப்பட்ட செல்லன் கந்தையனும் ஆனந்தசங்கரியும் அறிக்கைகளையும் நேர்காணல்களையும் வெளியிட்டார்கள். அவற்றில் சொல்லப்பட்ட காரணம் ‘செல்லன் கந்தையன் தலிச் சாதியொன்றைச் சேர்ந்தவர் என்பதாலேயே திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டது’.

இருவரதும் இந்தச் சாட்சியங்களை, அப்போது புலிகளோ, யாழ் மாநகரசபையின் மற்றைய உறுப்பினர்களோ மறுக்கவில்லை. புலிகள் திறப்புவிழாவைத் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து ஒட்டுமொத்த மாநகரசபை உறுப்பினர்களும் உடனடியாகவே பதவி விலகினார்கள்.

இதற்கு வெளியிலும் பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. பல்வேறு சிறிய அமைப்புகள் நூலகத் திறப்புவிழாவை எதிர்த்தன. ஆனால் எதிர்த்தற்கு அவை சொல்லிய காரணங்கள் நம்பத் தகுந்தவையாக இருக்கவில்லை. ‘நூலகத் திருத்த வேலைகள் முற்றுப்பெற முன்பு திறப்புவிழாவை நடத்தக்கூடாது’ என்பதே அவர்கள் முன்வைத்த சப்பைக் காரணம். தேசிய நாளிதளான ‘தினக்குரல்’ செல்லன் கந்தையனை உள்ளாடை தெரிய, சாதிய இழிவு தொனிக்கக்கூடிய ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டது. 

செல்லன் கந்தையன் இந்தச் சந்தர்ப்பத்தில் தனது தரப்பைத் தெளிவாகவே பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தினார். டெய்லிமிரர் – தினமுரசு போன்ற பத்திரிகைகளில் தனது கண்டனத்தை வெளிப்படையாகப் பதிவு செய்திருந்தார். புலிகளுக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்யப் பல ஊடகங்கள் மறுத்திருக்கும் என்பதும் நாம் அறிந்ததே. பத்திரிகைச் சுதந்திரம் பாதாளத்தில் கிடந்த காலமது. புலிகள் கடுமையாகப் பத்திரிகைகளைக் கண்காணித்தார்கள். ஆனால் தினக்குரலில் வெளியான சாதிவெறிக் கேலிச் சித்திரத்தை அவர்கள் கவனித்து ஏதும் நடவடிக்கை எடுத்ததாகத் தகவல்களில்லை.

01.03.2003ல் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு செல்லன் கந்தையன் வழங்கிய செவ்வியில் “இந்த நூலகம் திறக்கப்படுவதால் புலிகளுக்கு எதுவித பிரச்சினையுமில்லை. அவர்கள் நூலகம் திறப்பதைத் தடுத்ததிற்குப் பின்னால் வேறோரு காரணமுள்ளது என்றே நான் கருதுகிறேன். நான் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகத்துள் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவன். யாழ் பொதுநூலகத் திறப்புவிழாக் கல்வெட்டில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனின் பெயர் பொறிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆம் புலிகள் முற்று முழுதாகச் சாதிய அடிப்படையிலேயே இப் பிரச்சினைகளை அணுகினார்கள் என்றே நான் நினைக்கிறேன்” என்றார்.

‘தினமுரசு’ பத்திரிகைக்கு 23.02.2003-ல் வழஙகிய நேர்காணலில் “ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த என்னுடைய பெயர் நூலகத் திறப்புவிழாக் கல்வெட்டில் இடம்பெற்று விடக்கூடாது என்பதற்காகவே திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டது” என்றார் செல்லன் கந்தையைன்.

பின்னொரு நாளில் இந்தியத் தூதுவரகத்தால் யாழ் நூலகத்துக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்ட வைபவத்தில் செல்லன் கந்தையன் கலந்துகொண்டார். அப்போது அவர் உணர்சிபொங்கக் கண்ணீர் மல்கி இவ்வாறு பேசினார் என்பதை Sunday Times பதிவு செய்து வைத்திருக்கிறது:

“சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக போராடுபவர்கள் என சொல்லிக்கொள்ளும் விடுதலைப்புலிகள், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் நூலகத்தை திறந்து வைக்கும் வரலாற்றுப் பெருமையை தடுத்து நிறுத்தியுள்ளனர்” (The controversy over the opening of the Jaffna library which was postponed has drawn in the issue of caste. The former Mayor of Jaffna, Sellan Kandaiyan is on record saying that though the LTTE was supposed to be carrying its struggle for the oppressed low caste, now they have deprived him of opening the library and going down in history as a member of the low caste who had the privilege of opening the building. In a moving speech at the ceremony of the Indian High Commission handing over a donation of books to the Jaffna Library last Monday at the Indian Cultural Centre, Mr. Kandaiyan broke down in tears and recounted the story of the attempts he made to get the library opened.) 

இந்தப் பின்னணியினதும் சாட்சியங்களினதும் அடிப்படையில்தான் தலித் அரசியலாளர்களும் இடதுசாரிகளும் எழுத்தாளர்களும் நிகழ்ந்த சாதிவெறியைக் கண்டித்தும், செல்லன் கந்தையனுக்கு நியாயம் கோரியும் எழுதினார்கள். அப்போது நாங்கள் சிலபேர் இயங்கிய ‘NON’ என்ற குழு வெளியிட்ட ‘ஒரு வரலாற்றுக் குற்றம்’ என்ற சிறுநூலே முதலில் இதை விரிவாக ஆவணப்படுத்தியது என நினைக்கிறேன். இந்தச் சிறுநூலை சாதி எதிர்ப்புப் போராளியான தாயார் காசிநாதர் மணிமேகலைஅவர்களின் நினைவாக மறுபிரசுரமாக்கி, சுவிஸ் யோகா மாஸ்டர் நூற்றுக்கணக்கான பிரதிகள் விநியோகித்தார். பல்வேறு எழுத்தாளர்களும் நிகழ்ந்த சாதிவெறியைக் கண்டித்து எழுதினார்கள். ‘இலங்கையில் சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும்’ என்ற ஆவண நூலில் வெகுஜனன் – இராவணாவால் இந்தச் சாதிவெறிச் செயல் கண்டிக்கப்பட்டு ஆவணமாக்கப்பட்டது.

சோமிதரனும் சயந்தனும் நீண்ட காலமாகவே, செல்லன் கந்தையன் சொன்னதை மறுத்துவந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்கள் தங்களுடைய மறுப்புக்கு ஆதாரங்கள் எதையுமே நேற்றுவரை வைத்திருக்கவில்லை. இன்று அவர்கள் ஓர் ஆதாரத்தை உருவாக்கிவிட்டார்கள். அவர்கள் செல்லன் கந்தையைனை நேர்கண்டு ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்கள்.

இவ்வாறான ஒரு வரலாற்று நிகழ்வை வெறும் மூன்றே நிமிடக் காணொளியின் மூலம் தெளிவுபடுத்த நினைக்கும் அவர்களது முயற்சி வியக்கத்தக்கது. அதனிலும் வியக்கத்தக்கது செல்லன் கந்தையனிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகள்.

செல்லன் கந்தையன் நூலகத் திறப்புவிழா குறித்து, அவர் இதுவரை கூறிவந்த எல்லாச் செய்திகளையும் மறுப்பதுபோன்ற தொனியில் இக்காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நூலகத் திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டதற்குக் காரணம் சாதியம் அல்ல.

இது உண்மையாகவே இருந்தால், இது மகிழ்ச்சிக்குரிய செய்தியே. நூலகத்திலிருந்து செல்லன் கந்தையனின் பெயர் பதிக்கப்பட்ட கற்பலகை சென்ற ஆண்டு பெயர்த்தெடுக்கப்பட்டதை நாம் மறந்துவிடலாம். தினக்குரல் வரைந்த கேலிச் சித்திரத்தில் உள்ளவர் செல்லன் கந்தையனே இல்லை என்றுகூட நாம் ஆறுதல் அடையலாம். ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை உள்நோக்கமுடையது என நாம் முடிவு செய்துவிடலாம். ஆனால் முன்னாள் மேயர் செல்லன் கந்தையன் தினமுரசுவுக்கும் டெய்லிமிரருக்கும் தனது வாயால் சொன்ன செய்தியை நாம் எப்படி மறக்க முடியும்? இந்தியத் தூதரக வைபவத்தில் அவர் கண்ணீர் மல்க நின்று “எனக்குக் கிடைத்திருக்கவேண்டிய வரலாற்றுப் பெருமை என் சாதி காரணமாகவே எனக்கு மறுக்கப்பட்டது” எனச் சொன்னதை நாம் எப்படி மறக்க முடியும்?

இந்தக் கேள்விகளையல்லவா செல்லன் கந்தையனை நேர்கண்டவர் கேட்டிருக்க வேண்டும். செல்லன் கந்தையன் வழங்கிய பத்திரிகை நேர்காணல்கள் திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டனவா? இந்தியத் தூதரக வைபவத்தில், “ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்தவர் ஒருவர் நூலகத்தை திறந்து வைக்கும் வரலாற்றுப் பெருமையைப் புலிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்” எனப் பேசுமாறு அவர் வற்புறுத்தப்பட்டாரா? என்றெல்லாவா கேட்டிருக்கவேண்டும். இந்தக் கேள்விகள் ஏன் தவிர்க்கப்பட்டன. இதுதானே இந்நேர்காணலின் மையக் கேள்வியாக இருக்க முடியும்! இப்போதுகூட ஒன்றும் கெட்டுவிடவில்லை, இந்தக் கேள்வியையும் அவர்கள் செல்லன் கந்தையனிடம் கேட்டுப் பதிலைப் பெற்று வெளியிட்டுவிட்டால் நமக்குப் பூரணமான தெளிவு கிடைத்துவிடும். யாழ் நூலகத்தின் மீதும் புலிகளின் மீதும் விழுந்த வரலாற்றுக் கறை முழுவதுமாகவே துடைக்கப்பட்டுவிடும். அது எனக்கும் மகிழ்ச்சியே. 

அதேவேளையில் யாழ் நகரத்தின் முதலாவது தலித் மேயரும், மூத்த அரசியல்வாதியுமான செல்லன் கந்தையன் ஒரு வடிகட்டின பொய்யரே என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். செல்லன் கந்தையன் பொய்யரே என நிறுவும் முயற்சியில் முதல் கட்டமாக மூன்று நிமிட வெற்றி சயந்தனாலும் சோமிதரனாலும் சாதிக்கப்பட்டுவிட்டது.

பார்க்கலாம், வரலாறு நமக்கு என்ன பதிலை வைத்திருக்கிறது என்று…

நிகழ்ந்த உண்மைகளைத் தெட்டத் தெளிவாக அறிந்தவர்களும், அந்த உண்மைகளை ஆவணப்படுத்தக் கூடியவர்களும் நம்மிடையே ஏராளமாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது கனத்த மவுனமே பலவேளைகளில் ஒடுக்குபவர்களுக்குச் சாதகமாகவும் வாய்ப்பாகவும் மூடுதிரையாகவும் அமைந்துவிடுகிறது. ‘ஓர் இன ஒடுக்குமுறையின் போது மவுனம் சாதிப்பவர்களும் யுத்தக் குற்றவாளிகளே’ என்பார்கள். அது சாதி ஒடுக்குமுறைக்கும் நிச்சயமாகவே பொருந்தும்.

http://www.shobasakthi.com/shobasakthi/2020/06/11/அந்த-மூன்று-நிமிடச்-சாட்/

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்த விடயம்தான் வழக்கம்போல் சோபா எதிர்வினை என்று விழுந்தாலும் மீசையில் மன்படா  கதைதான் .கொஞ்சநாள் சமய சண்டை அது முடிய இப்ப இது தொடங்கியுள்ளது நடத்துங்கோ மேள கச்சேரியை .😀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாதிய அமைப்பில் கீழ் நிலையில் இருந்த ஒருவர் யாழ் நூலகத்தைத் திறப்பதை புலிகள் விரும்பவில்லை என நிறுவ முற்படும் எல்லோருமே புலிகள் எந்தெந்தச் சாதியினைச் சார்ந்தவர்களை திறக்க அனுமதித்திருப்பர் என்கின்ற விடயத்தையும் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதைத்தவிர, அந்தச் சாதிகளுக்குள் எனது சாதியும் வருகிறதா என்று பார்த்து சற்று ஆறுதலடைந்திருப்பேன். 😂😂😂😂😂😂

என்னே உலகமையா இது 😂😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, உடையார் said:

நன்றி உடையார்.

கடைசியில் பேட்டி கண்டவர் சிரிப்பார் பாருங்கோ ஒரு சிரிப்பு. அந்தச் சிரிப்பின் அர்த்தம் ஆயிரம்..பேட்டி கண்டவர் மிகவும் முக்கியமான வேலை ஒன்றைச் செய்திருக்கிறார். அவருக்கு நாம் நன்றி கூற கடமைப் பட்டவர்கள். 👍👍👍👍👍👍👍

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதன் வேர்களைப் புரிந்துகொள்ளாமல் இந்த பிரச்னையை அணுகமுடியாது.

1) சந்திரிக்கா முதலில் தானே நூலகத்தை திறக்க விரும்பியிருந்தார். அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்டு ஐ.தே கட்சியை பழிவேண்டும் அரசியல் அதற்கு ஆனந்தசங்கரி துணைபோனார். (அனந்தசங்கரிக்கு சமாதான தூதுவர் விருதெல்லாம் வெளிநாட்டில் வழங்கப்பட்டது. பிரான்ஸ் அரசு சந்திரிகா பிரான்சில் கல்வி கற்றவர் )

2) அக்காலப்பகுதி சமாதான உடன்படிக்கை உருவாகி ஒருவருடம் நிறைவு பெறவில்லை. புலிகள் சர்வதேசத்தால் கண்கொத்திப் பாம்பு போல கண்காணிக்கப்பட்டார்கள்.

3) புலிகள் சாதி தொடர்பில் தம்மால் இயன்றவற்றை செய்தார்கள். தண்டனைகள் கூட வழங்கி இருக்கிறார்கள். சட்டங்கள்  கூட  இயற்றி இருக்கிறார்கள். அதில் அவர்கள் பூரணமாக தொழிற்படவில்லை என்பவர்கள், அவர்கள் ஒரு போராளிகள் குழு என்பதை மறந்துவிடுகிறார்கள். இவர்கள் என்ன சாதி ரீதியாக தொடுக்குபவரை சுட வேண்டும் என்று சொல்கிறார்களா ?அப்படி சுடடால்  அதற்கு மனிதஉரிமை என்று வருவார்கள்.  புலிகளைபபொறுத்தவரை அவர்கள் 18 வயதுகளில் ஆயுதம் ஏந்துகிறார்கள். அமைப்புக்குள் சாதி இல்லை. அவர்கள் அந்த அமைப்பின் வளர்ச்சியுடன் உருவாகுகிறார்கள்.தீண்டாமை பற்றிய எதுவுமே அவர்களிடம் இல்லை. மக்களும் அவர்களிடம் காட்டவில்லை. அன்கொன்றும் இன்கொன்றுமாக .. இருந்ததை அவர்கள் தமிழீழத்தில பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்கள்.  பின் காலத்தில் தான் சமூகநீதி பற்றிய கல்விகள் நடைமுறைப்படுத்தகிறது. போராளிகள் குழுவாக இருந்து அரசாக மாறும்போது  அது இயல்பாகவே உள்வாங்கப்படுகிறது 

4) இலங்கை அரசு கூட 57 களில் சாதி ஒடுக்குமுறைக்கு சட்டம்  கொண்டுவந்திருக்கிறது. நீதிமன்றங்களில் வழக்கு தானே செய்ய முடிந்தது. 

5)சாதி ரீதியாக புலிகளை தீண்டாதவர்களாக்கும் ஒரு பொறிமுறை புலம்பெயர்ந்த புலி எதிர்ப்பாளர்களால் உருவாக்கப்பட்டது.  அது புலிவிரோத அரசியல்.  தமிழ் நாட்டின் சில அறிவுஜீவிகள் உடன்போனர்கள்.   2009 புலிகள் அழிவின் பின் அவர்கள் தங்களுக்குள் சண்டை பிடித்து பலவேறுகுழுக்களாகி விட்டார்கள். இலக்கிய இருப்புக்காக சிலர் இன்னும் புலி எதிர்ப்பை பேசுகிறார்கள். 

6) மேயர் செல்லன் கந்தையா அவர்கள் ஒரு துணைமேயர். ரவிராஜ் mp ஆகியபின் மேயர் ஆக்கப்பட்டார். அவர் கூடடணிக்குள் எவ்வாறான  ஒடுக்குதலுக்கு எல்லாம் ஆளாக்கப்பட்டார் என்று பேசுவரில்லை. இன்றுவரை சாதியாக இயங்கும் கூட்டமைபை  இன்னும் ஆதரிக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் செய்யும் புலி நீக்க அரசியல். (புலிகளின் காலத்தில் தாழ்த்தப்பட்ட  இந்த வார்த்தைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.  இனத்தவர் சிலர் பாராளுமன்றம் போயிருந்தனர். அதையும் பேசுவாரில்லை )  

7)ஆனந்தசங்கரி புலிகளை விரோதிக்கிறார் சந்திரிக்கா ஏற்படுத்திய சாணக்கியம் அது. பேச்சு மேடையில் தானும் இருக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். அதன் மூலம் புலிகளை பலவீனமான ஒரு தரப்பாக்க சந்திரிக்கா விரும்புகிறார். (ரணிலும் அதைத்தான் செய்தர். சந்திரிக்காவை விட ரணில் எவ்வளவு புத்திசாலி பாருங்கள்)

8 ) பல்கலைக்கழ மாணவர் தலைவர்  அழைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படுகிறார்.  (அவர் தங்களை ஒரு ஹீரோ நிலையில் வைத்துதான் அன்று இருந்தனர். 40 ஆயிரம் சவப்பெட்டிகள் கதைக்கு அப்பாடியோரு கிழி வேண்டியிருந்தார் தலைமையிடம் )  பல்கலைக்கழ மாணவர்கள் ஒன்றியம் சங்கரியுடன் பேச்சு நடத்துகிறது, சங்கரியார் உடன்படவில்லை. மாவை சம்மந்தன் உற்பட்ட முக்கிய தமிழரசுக் கடசியினர் நூலகத்தை நினைவுச் சின்னமாக வைத்திருக்கவே விரும்பினார். ஏனென்றால் அது அவர்கள் கால அடையாளம். 

9 ) ஆனந்த சங்கரி செல்லன் கந்தையாவை பயன்படுத்துகிறார். ஆனந்தசனகிரியின் வலதுகை வடமராட்சி உறுப்பினர் மேயரை தாக்குகிறார். அதற்க்கு வேறு காரணம் சொல்லபப்டுகிறது. 

10 ) புலிகள் வெளியில் நின்று ஆலோசனை சொல்கிறார்கள். அவர்களுக்கு நூலகம் பொருட்டாக இல்லை. ஆனால் சமாதானகாலத்தில் நடைபெறும் புனரமைப்புகளின் நிகழும் அரசியலுக்கு தலையீடு கடுமையாக செய்கிறார்கள். தமிழீழம் என்ற கோரிக்கையில் நூலகம் ஒரு துரும்பு. ஆனால் அன்றைய புனரமைப்பை புலிகள் விரும்பவில்லை என்பதும் உண்மைதான். காரணம் சர்வதேச தூதுவர்களை அதனை ஒரு அடையாள சின்னமாக வைத்திருக்க விரும்பினார்கள். (உண்மையும் தானே ) 

11) இப்ப புலி எதிர்பாளர்கள் தங்கள் இருப்புக்காக தமக்கு ஏற்றவாறு வளைத்து பேசுகின்றனர்.   அவர்களின் சந்தர்ப்பாவாத உரைகளை கேளுங்கள். தமிழ் நாட்டிலிருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு தலித் தான் என்பார்கள். வெளிநாட்டு செய்திகளில் புலிகளை போற்றியே பேசுவதாக சொல்வார்கள். நேர் எதிராக இங்கு பேசுவார்கள். புலிகளின் அதனை கொலை கொள்ளைகளுக்கு ஆதரவாக ஆரம்பகாலத்தில் இருந்துவிட்டு இப்ப அதற்கு வியாக்கியானம் கூறுவார்கள்.  இதுதான் அசல் வெள்ளாள ஆதிக்க புத்தி.  

 • Like 6
 • Thanks 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, யாழ் அரியன் said:

யாழ் அரியன் நல்லா ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்

தொடர்ந்து பகிருங்கள் உங்கள் கருத்துக்களை, சிலர் வந்து சில காலங்களில் காணாமல் போய்விடுவார்கள், கற்கள் பல விழும் 👍👏

Link to post
Share on other sites

ஷோபா தன்னை ஒரு தலித் / ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்தவர் என்று சொல்லி ஆதிக்க சாதிகளுக்கு எதிரானவர் என்று பேய்க்காட்டப் போய் ஈற்றில் அவர் தலித் இல்லை என்று பலரால் நிரூபிக்கப்பட்டு மூக்குடைப்பட்டவர். இலக்கிய இருப்பிற்காகவும் அவரின் புலி எதிர்ப்பு அரசியல்/ இலக்கியத்துக்காகவும் செல்வன் கந்தையனை பயன்படுத்திக் கொள்கின்றார். 

ஒவ்வொரு வருடமும் யாழ் நூலக எரிப்பினை நினைவு கூர்ந்து இலங்கை அரசின் இனவாத கோர முகத்தை மீண்டும் மீண்டும் உலகிற்கு எடுத்துச் சொல்லப்படும் அதே நாட்களில் செல்வன் கந்தையாவை இழுத்து புலிகளை சாதி வெறியர்கள் என்று நிறுவி போராட்டத்தினை கொச்சைப்படுத்தி யாழ் நூலக எரிப்பு நினைவு நிகழ்வுகளை நீர்த்து போக ஷோபாவும் அவரது தொண்டரடிப் பேடிகளும் முயன்று வருகின்றனர். இதன் மூலம் இலங்கை அரசின் யாழ் நூலக எரிப்பு தொடர்பான மக்களின் உணர்வுகளையும் குழப்ப எத்தனிக்கின்றனர்.

சோமி தரனும் சயந்தனும் இணைந்து உண்மைகளை வெளிக் கொண்டு வர எடுத்து இருக்கும் முயற்சி காலத்துக்கு மிக தேவையானது. இருவருக்கும் நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

ஷோபா தன்னை ஒரு தலித் / ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்தவர் என்று சொல்லி ஆதிக்க சாதிகளுக்கு எதிரானவர் என்று பேய்க்காட்டப் போய் ஈற்றில் அவர் தலித் இல்லை என்று பலரால் நிரூபிக்கப்பட்டு மூக்குடைப்பட்டவர். இலக்கிய இருப்பிற்காகவும் அவரின் புலி எதிர்ப்பு அரசியல்/ இலக்கியத்துக்காகவும் செல்வன் கந்தையாவை பயன்படுத்திக் கொள்கின்றார்

ஒவ்வொரு வருடமும் யாழ் நூலக எரிப்பினை நினைவு கூர்ந்து இலங்கை அரசின் இனவாத கோர முகத்தை மீண்டும் மீண்டும் உலகிற்கு எடுத்துச் சொல்லப்படும் அதே நாட்களில் செல்வன் கந்தையாவை இழுத்து புலிகளை சாதி வெறியர்கள் என்று நிறுவி போராட்டத்தினை கொச்சைப்படுத்தி யாழ் நூலக எரிப்பு நினைவு நிகழ்வுகளை நீர்த்து போக ஷோபாவும் அவரது தொண்டரடிப் பேடிகளும் முயன்று வருகின்றனர். இதன் மூலம் இலங்கை அரசின் யாழ் நூலக எரிப்பு தொடர்பான மக்களின் உணர்வுகளையும் குழப்ப எத்தனிக்கின்றனர்.

சோமி தரனும் சயந்தனும் இணைந்து உண்மைகளை வெளிக் கொண்டு வர எடுத்து இருக்கும் முயற்சி காலத்துக்கு மிக தேவையானது. இருவருக்கும் நன்றி.

இப்பொழுது ஐயோ குய்யோ  என்று  அழுது  என்ன  பயன்???????

யாழிலும் சரி

எனது பொது  வாழ்விலும் சரி

எழுத்தாளர்களை

கதை  கட்டுரை  கவிதை  எழுதுபவர்களை

வளர்த்து  விடுவதில்  மிக மிக  அவதானமாக  இருப்பதுண்டு (பல அனுபவங்களினால்)

இந்த ஷோபா சக்தி ஒரு ------

நாய்க்கு கூட   நான் மதிப்புக்கொடுப்பதுண்டு......

 • Like 1
 • Haha 2
Link to post
Share on other sites

இதில ஆகச் சிறந்த பகிடி என்னவென்றால், வெள்ளையடிக்கப்பட்ட யாழ் நூலகத்தினை உத்தியோகப் பூர்வமாக திறந்து வைக்க இருந்தவர் ஆனந்த சங்கரி, செல்வன் கந்தையன் அல்ல. ஆனால் புலிகள் அதை விரும்பாமல் தடுத்தமையால் அதை அப்படியே மாற்றி புலிகள் செல்வன் கந்தையனை திறக்க விடவில்லை என்று பூச்சுத்துகின்றார்கள் ஷோபா சக்தியும் அவரது போலித் தலித் போராளிகளும். 

ஆனந்த சங்கரி ஏன் செல்வன் கந்தையனை திறக்க விடாது தான் திறக்க முனைந்தவர் என்ற கேள்வி எல்லாம் இந்த போலிப் போரளிகளுக்கு எழாது, ஏனென்றால் ஆனந்த சங்கரி புலி எதிர்ப்பாளர் என்பதால் அவர் இவர்களுக்கெல்லாம் செல்லம்.

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, உடையார் said:

யாழ் அரியன் நல்லா ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்

தொடர்ந்து பகிருங்கள் உங்கள் கருத்துக்களை, சிலர் வந்து சில காலங்களில் காணாமல் போய்விடுவார்கள், கற்கள் பல விழும் 👍👏

நன்றி உடையார்,

நிறைய எழுத்துப்பிழைகள் மன்னிக்கவேண்டும்.  கைப்பேசியில் எழுதியதால் திருத்த இயலவில்லை. இனி இத் தவறு நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாழ் அரியன் said:

இதன் வேர்களைப் புரிந்துகொள்ளாமல் இந்த பிரச்னையை அணுகமுடியாது.

1) சந்திரிக்கா முதலில் தானே நூலகத்தை திறக்க விரும்பியிருந்தார். அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்டு ஐ.தே கட்சியை பழிவேண்டும் அரசியல் அதற்கு ஆனந்தசங்கரி துணைபோனார். (அனந்தசங்கரிக்கு சமாதான தூதுவர் விருதெல்லாம் வெளிநாட்டில் வழங்கப்பட்டது. பிரான்ஸ் அரசு சந்திரிகா பிரான்சில் கல்வி கற்றவர் )

2) அக்காலப்பகுதி சமாதான உடன்படிக்கை உருவாகி ஒருவருடம் நிறைவு பெறவில்லை. புலிகள் சர்வதேசத்தால் கண்கொத்திப் பாம்பு போல கண்காணிக்கப்பட்டார்கள்.

3) புலிகள் சாதி தொடர்பில் தம்மால் இயன்றவற்றை செய்தார்கள். தண்டனைகள் கூட வழங்கி இருக்கிறார்கள். சட்டங்கள்  கூட  இயற்றி இருக்கிறார்கள். அதில் அவர்கள் பூரணமாக தொழிற்படவில்லை என்பவர்கள், அவர்கள் ஒரு போராளிகள் குழு என்பதை மறந்துவிடுகிறார்கள். இவர்கள் என்ன சாதி ரீதியாக தொடுக்குபவரை சுட வேண்டும் என்று சொல்கிறார்களா ?அப்படி சுடடால்  அதற்கு மனிதஉரிமை என்று வருவார்கள்.  புலிகளைபபொறுத்தவரை அவர்கள் 18 வயதுகளில் ஆயுதம் ஏந்துகிறார்கள். அமைப்புக்குள் சாதி இல்லை. அவர்கள் அந்த அமைப்பின் வளர்ச்சியுடன் உருவாகுகிறார்கள்.தீண்டாமை பற்றிய எதுவுமே அவர்களிடம் இல்லை. மக்களும் அவர்களிடம் காட்டவில்லை. அன்கொன்றும் இன்கொன்றுமாக .. இருந்ததை அவர்கள் தமிழீழத்தில பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்கள்.  பின் காலத்தில் தான் சமூகநீதி பற்றிய கல்விகள் நடைமுறைப்படுத்தகிறது. போராளிகள் குழுவாக இருந்து அரசாக மாறும்போது  அது இயல்பாகவே உள்வாங்கப்படுகிறது 

4) இலங்கை அரசு கூட 57 களில் சாதி ஒடுக்குமுறைக்கு சட்டம்  கொண்டுவந்திருக்கிறது. நீதிமன்றங்களில் வழக்கு தானே செய்ய முடிந்தது. 

5)சாதி ரீதியாக புலிகளை தீண்டாதவர்களாக்கும் ஒரு பொறிமுறை புலம்பெயர்ந்த புலி எதிர்ப்பாளர்களால் உருவாக்கப்பட்டது.  அது புலிவிரோத அரசியல்.  தமிழ் நாட்டின் சில அறிவுஜீவிகள் உடன்போனர்கள்.   2009 புலிகள் அழிவின் பின் அவர்கள் தங்களுக்குள் சண்டை பிடித்து பலவேறுகுழுக்களாகி விட்டார்கள். இலக்கிய இருப்புக்காக சிலர் இன்னும் புலி எதிர்ப்பை பேசுகிறார்கள். 

6) மேயர் செல்லன் கந்தையா அவர்கள் ஒரு துணைமேயர். ரவிராஜ் mp ஆகியபின் மேயர் ஆக்கப்பட்டார். அவர் கூடடணிக்குள் எவ்வாறான  ஒடுக்குதலுக்கு எல்லாம் ஆளாக்கப்பட்டார் என்று பேசுவரில்லை. இன்றுவரை சாதியாக இயங்கும் கூட்டமைபை  இன்னும் ஆதரிக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் செய்யும் புலி நீக்க அரசியல். (புலிகளின் காலத்தில் தாழ்த்தப்பட்ட  இந்த வார்த்தைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.  இனத்தவர் சிலர் பாராளுமன்றம் போயிருந்தனர். அதையும் பேசுவாரில்லை )  

7)ஆனந்தசங்கரி புலிகளை விரோதிக்கிறார் சந்திரிக்கா ஏற்படுத்திய சாணக்கியம் அது. பேச்சு மேடையில் தானும் இருக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். அதன் மூலம் புலிகளை பலவீனமான ஒரு தரப்பாக்க சந்திரிக்கா விரும்புகிறார். (ரணிலும் அதைத்தான் செய்தர். சந்திரிக்காவை விட ரணில் எவ்வளவு புத்திசாலி பாருங்கள்)

8 ) பல்கலைக்கழ மாணவர் தலைவர்  அழைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படுகிறார்.  (அவர் தங்களை ஒரு ஹீரோ நிலையில் வைத்துதான் அன்று இருந்தனர். 40 ஆயிரம் சவப்பெட்டிகள் கதைக்கு அப்பாடியோரு கிழி வேண்டியிருந்தார் தலைமையிடம் )  பல்கலைக்கழ மாணவர்கள் ஒன்றியம் சங்கரியுடன் பேச்சு நடத்துகிறது, சங்கரியார் உடன்படவில்லை. மாவை சம்மந்தன் உற்பட்ட முக்கிய தமிழரசுக் கடசியினர் நூலகத்தை நினைவுச் சின்னமாக வைத்திருக்கவே விரும்பினார். ஏனென்றால் அது அவர்கள் கால அடையாளம். 

9 ) ஆனந்த சங்கரி செல்லன் கந்தையாவை பயன்படுத்துகிறார். ஆனந்தசனகிரியின் வலதுகை வடமராட்சி உறுப்பினர் மேயரை தாக்குகிறார். அதற்க்கு வேறு காரணம் சொல்லபப்டுகிறது. 

10 ) புலிகள் வெளியில் நின்று ஆலோசனை சொல்கிறார்கள். அவர்களுக்கு நூலகம் பொருட்டாக இல்லை. ஆனால் சமாதானகாலத்தில் நடைபெறும் புனரமைப்புகளின் நிகழும் அரசியலுக்கு தலையீடு கடுமையாக செய்கிறார்கள். தமிழீழம் என்ற கோரிக்கையில் நூலகம் ஒரு துரும்பு. ஆனால் அன்றைய புனரமைப்பை புலிகள் விரும்பவில்லை என்பதும் உண்மைதான். காரணம் சர்வதேச தூதுவர்களை அதனை ஒரு அடையாள சின்னமாக வைத்திருக்க விரும்பினார்கள். (உண்மையும் தானே ) 

11) இப்ப புலி எதிர்பாளர்கள் தங்கள் இருப்புக்காக தமக்கு ஏற்றவாறு வளைத்து பேசுகின்றனர்.   அவர்களின் சந்தர்ப்பாவாத உரைகளை கேளுங்கள். தமிழ் நாட்டிலிருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு தலித் தான் என்பார்கள். வெளிநாட்டு செய்திகளில் புலிகளை போற்றியே பேசுவதாக சொல்வார்கள். நேர் எதிராக இங்கு பேசுவார்கள். புலிகளின் அதனை கொலை கொள்ளைகளுக்கு ஆதரவாக ஆரம்பகாலத்தில் இருந்துவிட்டு இப்ப அதற்கு வியாக்கியானம் கூறுவார்கள்.  இதுதான் அசல் வெள்ளாள ஆதிக்க புத்தி.  

நீங்கள் ஒரு நிகழ்கால சாட்சி. நிறைய எழுதுங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

ஒவ்வொரு வருடமும் யாழ் நூல் நிலை எரிப்பு நினைவு நாளின்போது ஒரு தரப்பினர் அதைப் புலிகளின் ‘தலித் விரோத’ நாளாகவும் அனுஷ்டிக்கின்றனர்.

தலித் என்ற சொல் எப்போதிருந்து இலங்கையில் நடைமுறைக்கு வந்தது?
எனக்குத் தெரிய தலித் இந்தியாவிலைதான் கேள்விப்பட்டுருக்கிறன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தலித் என்ற சொல் எப்போதிருந்து இலங்கையில் நடைமுறைக்கு வந்தது?
எனக்குத் தெரிய தலித் இந்தியாவிலைதான் கேள்விப்பட்டுருக்கிறன்.

கல்யாண வீட்டில் நான்தான் மாப்பிள்ளை. செத்த வீட்டில் நான்தான் பிணம். 😏

இந்தக் கூட்டம் எப்போதும் இப்படித்தான். 🤥

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

தலித் என்ற சொல் எப்போதிருந்து இலங்கையில் நடைமுறைக்கு வந்தது?
எனக்குத் தெரிய தலித் இந்தியாவிலைதான் கேள்விப்பட்டுருக்கிறன்.

எல்லாம் இந்தியாவில் இருந்து தொடர்ச்சியாக அங்கே போய்க்கொண்டே இருக்கின்றன. எங்கள் அம்மாக்கள் சேலை கட்டினார்கள். மாமிகள் மினி ஸ்கேட் போட்டு எங்களை மற்றப்பக்கம் பார்க்க வைத்தார்கள். இப்ப பேத்திகள் பஞ்சாபி உடுப்பில் வட இந்தியராகி விட்டார்கள். மாப்பிள்ளை வேட்டி கட்டுவதை விட்டு வட இந்திய உடுப்பு போட ஆரம்பித்து கனகாலம். முதல் சாயி பாபா வந்தார், பின்னாலே ஆஞ்சநேயரும் வந்தார். இப்பதான் தலித்துகள் வந்திருக்கிறார்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தலித் என்ற சொல் எப்போதிருந்து இலங்கையில் நடைமுறைக்கு வந்தது?
எனக்குத் தெரிய தலித் இந்தியாவிலைதான் கேள்விப்பட்டுருக்கிறன்.

உண்மை கொஞ்சம் சுடும்

நான் பிரான்சிலே  கண்ட பார்த்த ஒரேயொரு தலித் (அவரே தன்னை அவ்வாறு சொல்லியபடியால்)

ஷோபா சக்தி தான்

அதை  அவர்  நிரூபிப்பதற்காக சில விடயங்களை பின்  பற்றுவார்  அல்லது அறிமுகம்  செய்வார்

குளிப்பதில்லை

அழுக்காக  உடையணிதல்

அரச சலுகைகளில்  மட்டும்  வாழ்தல்

ரிக்கற் இன்றி  பயணித்தல்

வீதியில்  நின்று மதுபானம் அருந்துதல்............

அவர் ஒரு  இனத்தின் அல்லது ஒரு அமைப்பின் தூய்மை பற்றி பேச முன்னர்?????

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விசுகு said:

இது  ஒரு வித மன நோய். உளவியற் சிக்கல்.

இவர் மீது பரிதாபப்படலாமே தவிர கோபப்பட  முடியாது.🤥

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, கற்பகதரு said:

எல்லாம் இந்தியாவில் இருந்து தொடர்ச்சியாக அங்கே போய்க்கொண்டே இருக்கின்றன.

எங்கள் அம்மாக்கள் சேலை கட்டினார்கள்.

மாமிகள் மினி ஸ்கேட் போட்டு எங்களை மற்றப்பக்கம் பார்க்க வைத்தார்கள்.

இப்ப பேத்திகள் பஞ்சாபி உடுப்பில் வட இந்தியராகி விட்டார்கள்.

மாப்பிள்ளை வேட்டி கட்டுவதை விட்டு வட இந்திய உடுப்பு போட ஆரம்பித்து கனகாலம்.

முதல் சாயி பாபா வந்தார்,

பின்னாலே ஆஞ்சநேயரும் வந்தார்.

இப்பதான் தலித்துகள் வந்திருக்கிறார்கள். 

 கற்பகம் ஏன் பாட்டை 
இடையில் நிறுத்தி விட்டாய் 
உன் கருத்துக் கடலில் 
நீந்துவதற்கு ஓடோடி வந்த 
என்னை ஏமாற்றாதே கற்பகம்
பாடு கற்பகம் பாடு  
மார்வாடி கடைகளும் திறந்து
எமது கோமணத்தையும் 
உருவுவார்கள் என 
பாடு கற்பகம் பாடு......😎

Edited by குமாரசாமி
திறந்து
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, கற்பகதரு said:

எல்லாம் இந்தியாவில் இருந்து தொடர்ச்சியாக அங்கே போய்க்கொண்டே இருக்கின்றன. எங்கள் அம்மாக்கள் சேலை கட்டினார்கள். மாமிகள் மினி ஸ்கேட் போட்டு எங்களை மற்றப்பக்கம் பார்க்க வைத்தார்கள். இப்ப பேத்திகள் பஞ்சாபி உடுப்பில் வட இந்தியராகி விட்டார்கள். மாப்பிள்ளை வேட்டி கட்டுவதை விட்டு வட இந்திய உடுப்பு போட ஆரம்பித்து கனகாலம். முதல் சாயி பாபா வந்தார், பின்னாலே ஆஞ்சநேயரும் வந்தார். இப்பதான் தலித்துகள் வந்திருக்கிறார்கள். 

11 hours ago, குமாரசாமி said:

தலித் என்ற சொல் எப்போதிருந்து இலங்கையில் நடைமுறைக்கு வந்தது?
எனக்குத் தெரிய தலித் இந்தியாவிலைதான் கேள்விப்பட்டுருக்கிறன்.

இலங்கையில் சாதி ரீதியான ஒடுக்குதல்கள், தீண்டாமை என்பன இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கின்றன. அதிலும் யாழ்ப்பாணத்தில் இன்னும் அதிகமாகவே இருக்கிறது.இவ்வளவும்  ஏன்  "யாழ்" என்ற சொல்லுக்கூட ஒருவித மேட்டிமைத்தனம் தான்.  

தலித் ஒரு இந்திய சொல்தான். ஒடுக்கப்படும் மக்களின் அடையாளமாக அந்தச்சொல்லை பாவிக்கிறார்கள். பஞ்சமர் என்ற சொல்லை பலரும் பாவிப்பதும் உண்டு. சொல்லில் என்ன இருக்கிறது ஆயிரம் தமிழ் சொல் இப்படி வந்திருக்கிறது. 

அப்படிப்  பார்த்தால் சேலைக்கூட எங்கள்  அடையாளம் இல்லையே. தாலி தமிழர் மரபில் இல்லை. இன்று பலரும் புலி உருவ தாலி போடுவதை ஏற்றுக்கொள்கிறோம் தானே. அப்படி இந்த சொல்லை குறியீடாக பாவிப்பதில் என்ன குறைந்துவிடப்போகிறது.  மாற்றங்களை உள்வாங்காதவரை எதுவும் சாத்தியமில்லை.  பிழையானவர்கள் கையில் சாதிய முரண்பாடுகள் போய் விடாமல் தடுக்கவேண்டியது மிக முக்கியம். பிழையானவர்கள் பிழையாகவே வழிநடத்துவர். சரியானவர்கள் அதனை எடுத்து சரி செய்துவிடவேண்டும். விலகிப்போக கூடாது. 

புதுவை, சேரன்  எப்படி  முக்கியமான கவிஞரோ,  நிலாந்தன் எப்படி முக்கியமான கருத்துருவாக்கியோ , ஜெயபாலன் எப்படி  ஒரு முக்கியமான நடிகர் கவிஞர் சமூக செயற்பாட்டாளரோ  அதேபோல சோபா சக்தியும் ஒரு  எழுத்தாளர்தான்.  சும்மா குடிகாரன் என்றோ அழுக்கான ஆடை அணிபவர் என்றோ ஒருமனிததை அடையாளப்படுத்துவதை வெறுக்கிறேன். உங்கள் உறவுகள் கூட இப்படி நிறையபேர் இருக்கக்கூடும். அவர்களையெல்லாமா வெறுப்பீர்கள். நீங்கள் பிரான்சில் இருப்பதாக பதிவு செய்திருக்கிறீர்கள். எத்தனை தமிழர்கள் அங்கு தெருவில் இருப்பதாக வீடியோ எல்லாம் போட்டார்கள். அவர்களையெல்லாம் ஒதுக்குவீர்களா என்ன  

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, யாழ் அரியன் said:

தலித் என்றவுடன் இந்தியாவில் நடக்கும் கொடுமைகள் தான் எமக்கும் ஏன் இந்த உலகிற்கும் நினைவிற்கு வரும். 
ஆனால் இலங்கையில் அப்படியான கொடுமைகள் 5 வீதம் கூட இல்லை.
அதனால் தான் தலித் என்ற சொல் இலங்கைக்கு வேண்டாம் என்கிறேன்.

போலீசில் நியாயம் கேட்டுப்போன தாழ்த்தப்பட்ட மக்களை நிர்வாணப்படுத்தி கொடுமை....! | importmirror.com

மொட்டை அடித்து.. செருப்பு மாலை போட்டு ஊர்வலம்.. தலித் இளைஞர்களுக்கு நடந்த கொடுமை | Malaimurasu Tv

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, யாழ் அரியன் said:

உங்களது கருத்தோடு எனக்கு  முரண்பாடில்லை

அதேபோல் எனக்கிருக்கும் நிலைப்பாட்டில் நான் தெளிவாக  இருக்கின்றேன்

உன்னை  திருத்து  சமூகம்  தானாக  திருந்தும்

தன்னில் மாற்றத்தை  கொண்டு வரமுடியாதவனால் மற்றவர்களில்  மாற்றத்தை  கொண்டு வர முடியாது கூடாது

Edited by விசுகு
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கற்பகதரு said:

எல்லாம் இந்தியாவில் இருந்து தொடர்ச்சியாக அங்கே போய்க்கொண்டே இருக்கின்றன. எங்கள் அம்மாக்கள் சேலை கட்டினார்கள். மாமிகள் மினி ஸ்கேட் போட்டு எங்களை மற்றப்பக்கம் பார்க்க வைத்தார்கள். இப்ப பேத்திகள் பஞ்சாபி உடுப்பில் வட இந்தியராகி விட்டார்கள். மாப்பிள்ளை வேட்டி கட்டுவதை விட்டு வட இந்திய உடுப்பு போட ஆரம்பித்து கனகாலம். முதல் சாயி பாபா வந்தார், பின்னாலே ஆஞ்சநேயரும் வந்தார். இப்பதான் தலித்துகள் வந்திருக்கிறார்கள். 

🤣

வெளிநாடுகளிலும் ஈழத்தமிழர்கள் திருமணங்களில் பெண்கள் ஆண்கள் வடஇந்தியாவின் ஹிந்தி உடைதான் சாயி பாபா வழிபாடு ஆஞ்சநேயர் கோவிலும் வந்துவிட்டது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2020 at 15:57, நிழலி said:

இதில ஆகச் சிறந்த பகிடி என்னவென்றால், வெள்ளையடிக்கப்பட்ட யாழ் நூலகத்தினை உத்தியோகப் பூர்வமாக திறந்து வைக்க இருந்தவர் ஆனந்த சங்கரி, செல்வன் கந்தையன் அல்ல. ஆனால் புலிகள் அதை விரும்பாமல் தடுத்தமையால் அதை அப்படியே மாற்றி புலிகள் செல்வன் கந்தையனை திறக்க விடவில்லை என்று பூச்சுத்துகின்றார்கள் ஷோபா சக்தியும் அவரது போலித் தலித் போராளிகளும். 

ஆனந்த சங்கரி ஏன் செல்வன் கந்தையனை திறக்க விடாது தான் திறக்க முனைந்தவர் என்ற கேள்வி எல்லாம் இந்த போலிப் போரளிகளுக்கு எழாது, ஏனென்றால் ஆனந்த சங்கரி புலி எதிர்ப்பாளர் என்பதால் அவர் இவர்களுக்கெல்லாம் செல்லம்.

பிரபல எழுத்தாளராக அறியப் பட்ட...  ஷோபா சக்தி, 
மௌனித்த புலிகள் புலிகள் மீது... தவறான கற்பிதத்தை  கொடுப்பது,
தனக்கு... மலிவான விளம்பரம் தேடும், உத்தியை கையாளுகின்றார் போலுள்ளது.
இது, மிகவும் கண்டனத்துக்கும், வருத்தத்துக்கும் உரிய செயல்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

தலித் என்றவுடன் இந்தியாவில் நடக்கும் கொடுமைகள் தான் எமக்கும் ஏன் இந்த உலகிற்கும் நினைவிற்கு வரும். 
ஆனால் இலங்கையில் அப்படியான கொடுமைகள் 5 வீதம் கூட இல்லை.
அதனால் தான் தலித் என்ற சொல் இலங்கைக்கு வேண்டாம் என்கிறேன்.

போலீசில் நியாயம் கேட்டுப்போன தாழ்த்தப்பட்ட மக்களை நிர்வாணப்படுத்தி கொடுமை....! | importmirror.com

மொட்டை அடித்து.. செருப்பு மாலை போட்டு ஊர்வலம்.. தலித் இளைஞர்களுக்கு நடந்த கொடுமை | Malaimurasu Tv

தலித் என்ற சொல் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட  தீண்டத் தகாதவர்கள் என இநதியாவில் அடயாளப்படுத்தப்படுகின்றவர்களை அழைக்கும் சொல. 

28a.jpg

caste.jpg?w=1108&h=720&crop=1

இந்தியாவின் சாதீய கட்டமைப்புக்குள்ளும் வராதவர்கள் தலித் எனப்படுவார்கள். பிரம்மாவின் தலை தோழ் தொடை பாதத்தில் இருந்து பிறக்காமல் புறம்பாக பிறந்தவர்கள். பிராமணர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பின்  அவர்கள் இந்திய அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியதும்  சாதிச் சான்றிதழ்களாக FC forward cast , OBC  other backward cast SC ST Scheduled Castes and Scheduled Tribes என்று அடுத்த நிலைக்கு கொண்டுவந்தார்கள். 

ஈழத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் பாகுபாடுகள் இருப்பது எல்லோரும் அறிந்தது ஆனால் இவ்வாறான இந்திய கட்டமைப்பு போல் அவை வரையறுக்கப்பட்டவை அல்ல. 

இந்திய மத்திய அதிகாரம் ஒரு போதும் சாதிய ஒழிப்பை நடமுறைப்படுத்தாது. இந்தியா பல நாடுகளை இணைத்து பார்பனர்களும் பானியாக்களும் ஆழும் ஒரு தேசம். தேசீய இனங்களை சாதிவாரியாக பிரித்து சிதைத்து தான் இந்த அதிகாரம் சாத்தியமாகின்றது. ஒரு கால கட்டத்தில் புலிகள் இயக்கம் சாதியத்தை கடந்து இனமாக எழுச்சிபெற்றிருந்தது. அக்காலத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான் தலித் என்ற புதிய வடிவம். இதற்கு தலித் அல்லாதவர்கள் தலமை தாங்கி அதாவது யாரால் ஒடுக்கப்ட்ட சாதிகள் பாதிக்கப் படுகின்றார்களோ அவர்களே ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக சத்தம் போட முற்பட்டார்கள். புலிகளுக்குள் சாதியப் பிரிவினைகள் என புரளிகளை கிழப்பினார்கள்.  எல்லாம் நவீன எலக்கியங்கள். 

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.