Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

உலக அளவில் 100 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்குச் செல்வார்கள்; தெற்கு, கிழக்கு ஆசியாவில் வறுமை அதிகரிக்கும்: கரோனா குறித்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக அளவில் 100 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்குச் செல்வார்கள்; தெற்கு, கிழக்கு ஆசியாவில் வறுமை அதிகரிக்கும்: கரோனா குறித்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

extreme-poverty-could-rise-to-over-one-billion-people-globally-due-to-covid-19-crisis-report

கரோனா வைரஸ் ஏற்படுத்திய உடல்ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்பால் உலக அளவில் 100 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்குச் செல்வார்கள். தெற்காசியாவில் ஏற்கெனவே ஏழ்மையில் இருக்கும் மக்களில் 39.5 கோடி பேர் இன்னும் மோசமான நிலைக்குச் செல்வார்கள் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பு குறித்து லண்டன் கிங்ஸ் காலேஜ் மற்றும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் ஆகியவை யுஎன்யு-டபிள்யுஐடிஇஆர் (UNU-WIDER) எனும் அமைப்புடன் சேர்ந்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''உலக அளவில் பாதிப்பை ஏறப்டுத்திவரும் கரோனா வைரஸால் உலக மக்களில் 100 கோடி பேர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவார்கள். நாள்தோறும் உலக அளவில் ஏழை மக்கள் 50 கோடி டாலர் அளவுக்கு வருமான இழப்பைச் சந்திப்பார்கள், அடுக்கு வரும் காலங்களில் வறுமையின் தீவிரம், பாதிப்பு அதிகரிக்கக்கூடும்.

நடுத்தர வருமானம் ஈட்டும் வளரும் நாடுகளில் இந்த வறுமை கடுமையாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். உலக அளவில் பரவியிருக்கும் வறுமையிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றமும் ஏற்படும். தெற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளை நோக்கி உலக வறுமை திரும்பக்கூடும்.

1591960392756.jpg

தெற்காசிய நாடுகளில் ஏற்கெனவே வறுமையில் இருக்கும் மக்களில் 39.5 கோடி பேர் மேலும் மோசமான வறுமைக்குச் செல்வார்கள். உலக அளவில் தெற்காசியாதான் வறுமையில் மோசமாகப் பாதிக்கப்படும்.

உலக அளவில் வறுமையை அதிகரித்த நாடுகளில் இந்தியாவின் பங்கும் இருந்தது. இது தவிர தெற்காசியா, சஹாரா ஆப்பிரிக்காவில் நாடுகள், கிழக்கு ஆசியாவில் உள்ள குறைந்த, நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளும் வறுமையால் அதிகமாக பாதிக்கப்படும்.

நைஜிரியா, எத்தியோப்பியா, வங்கதேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் சேர்ந்து 19 சதவீத வறுமையையும், காங்கோ, தான்சானியா, பாகிஸ்தான், கென்யா, உகாண்டா, பிலிப்பைன்ஸ் ஆகியவை சேர்ந்து 12 சதவீத வறுமையையும் ஏற்படுத்தும்.

ஜி7 நாடுகள், ஜி20 நாடுகளின் தலைவர்கள் உடனடியாக ஒன்று சேர்ந்து, உலக அளவில் கரோனாவால் ஏற்படும் ஏழ்மையைக் களைய 3 கட்ட திட்டங்களை வகுக்க வேண்டும்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.hindutamil.in/news/world/559095-extreme-poverty-could-rise-to-over-one-billion-people-globally-due-to-covid-19-crisis-report-1.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசிக்கொடுமை லெபனானின் போராட்டம்.!

06mounzer1-mediumSquareAt3X.jpg 

லெபனான் நாடு அதன் நாணயமான பவுண்டின் சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில், லெபனான் முழுவதுமுள்ள நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே, பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க பிரதமர் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை அழைத்துள்ளார்.

போராட்டங்கள் ஆரம்பமான கடந்த ஆண்டு ஒக்டோபரிலிருந்து, லெபனான் பவுண்ட் அதன் மதிப்பில் 70 சதவீதம் சாதனை தாழ்வாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இரண்டு நாட்களில், நாணயம் அதன் மதிப்பில் 25 சதவீதத்தை இழந்ததைத் தொடர்ந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அழைப்பை ஹசன் டயபின் அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.

பொருளாதார நிலைத்தன்மையின்மை, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற காரணங்களால் லெபனானின் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, விதிக்கப்பட்டுள்ள முடக்கநிலை காரணமாக குறித்த அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் ஓய்ந்திருந்தன. தற்போது முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) பொதுமக்கள் மீண்டும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல் சில மாதங்களுக்கு எதிர்ப்புக்கள் அரசியல் மாற்றத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும், இப்போது அவை பசி குறித்த விரக்தியால் உந்தப்படுகின்றன.

நகர மையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு கூடியிருந்த போராட்டக்காரர்கள், வீதிகளில் டயர்களை எரித்தும், வீதிகளை தடுத்தும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

டக்கு அக்கார் மற்றும் திரிப்போலியில் இருந்து மத்திய ஜூக், கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கு, பெய்ரூட் மற்றும் தெற்கு டயர் மற்றும் நபாதீஹ் வரையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு நகரமான திரிப்போலியில், அமைதியை மீட்டெடுக்க முயன்ற படையினர், எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டனர். வங்கிகளிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன, அவை லெபனானின் நிதி சிக்கல்களுக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேபோல, போராட்டக்காரர்கள் மத்திய வங்கியின் ஒரு கிளைக்கு தீ வைத்தனர். பல தனியார் வங்கிகளை சூறையாடினர் மற்றும் பல பகுதிகளில் பாதுகாப்பு படையினருடன் மோதினர். இதன்போது, திரிப்போலியில் மட்டும் 41 பேர் காயமடைந்ததாக லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

லெபனான் பவுண்டின் தேய்மானம் பல தசாப்தங்களாக நாட்டை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. கடினமான நாணய சேமிப்பை நம்பியுள்ள பல லெபனான் குடிமக்கள், வறுமையில் விழுந்துள்ளனர். அவர்களின் நிலை தொற்றுநோயால் மோசமடைந்துள்ளது.

வேலையின்மை அதிகமாக உள்ளது மற்றும் வேலை செய்யும் பெரும்பாலான லெபனானியர்களுக்கு உள்ளூர் நாணயத்தில் ஊதியம் வழங்கப்படுகிறது. இது அதன் மதிப்பை இழந்து, உணவு மற்றும் பிற அடிப்படை பொருட்களை பல குடும்பங்களுக்கு கட்டுப்படுத்த முடியாததாக ஆக்குகிறது.

ஆனால், பலர் 5 மில்லியன் மக்கள் வாழும் இந்த சிறிய நாட்டில் 1975ஆம் ஆண்டில் லெபனான் உள்நாட்டுப் போரில் ஈடுபடுவதற்கு முந்தைய காலத்தை நினைவூட்டுவதாகவும், பதற்றங்கள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய கவலை எழுந்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.

https://www.vanakkamlondon.com/பசிக்கொடுமை-லெபனானின்-போ/

Link to comment
Share on other sites

சீனாவின் 700 மில்லியன் வேலையாட்கள் முன்பு $0.10 மணிக்கு என்று வேலை செய்தவர்கள்.  30 வருடங்களின் பின் அவர்கள் மணிக்கு $5-10 சம்பளம் எதிர்பார்க்கிறார்கள்.  

இது மேற்கத்தைய நுகர்வோரின் விலைகளை கூட்டி வெளிநாட்டு முதலாளிகளின் இலாபத்தை குறைத்தது.  சீனாவும் நேராக நுகர்வோரை இணைய கடைகள் தொடங்கியது.  

கோரோனோவைரஸ் தொடங்குமுன்பே சென்ற வருடம் சில பொருளாதார அறிவாளிகள் 30 விகிதமான வேலைகள் 3 மாதத்தில் மறையும் மக்கள் கடன் வெள்ளத்தில் தத்தளிப்பார்கள் என்று எதிர்வு கூறியிருந்தார்கள்.  

இப்போது தென் கொரியா, தைவான், மேற்கு சேர்ந்து சீனா வேலைகளை பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளுக்கு பஞ்சம் அடிபட்டு இருக்கும் வேலையாட்களுக்கு கொடுக்கிறார்கள்.

சம்பளம் $0.10/hr 

2000 ஆண்டும் ஒன்டாரியோவில்  ப்ளூ பண்டமிக் நடந்து 3000 மக்கள் இறந்தார்கள்.  எனது தந்தையும் 49 வயதில் இறந்தார்.

பகடி என்னவெண்டால் இன்னும் இங்க 3000 சாவை தொடவில்லை.  ஆனா பயந்து சாக்கிறம்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.