Jump to content

நினைவுகளின் அலைதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் அ.ராமசாமி அவர்களுக்கு நன்றி

 

நிவேதா உதயன்: நினைவுகளில் அலைதல்
 
 

 

 
16195309_10206911710264852_6490929716618693780_n.jpg
ஒருவரின் கவிதைகளை அவ்வப்போது வரும் பருவ இதழ்களிலோ,இணைய இதழ்களிலோ வாசித்து நினைத்துக்கொள்ளும் அனுபவமும்,மொத்தமாக அவரின் கவிதைகளைத் தொகுப்பாக வாசிக்கும் அனுபவமும் ஒன்றாக இருக்க முடியாதுஅவ்வப்போது வாசிக்கும்போது வாசிக்கப்பட்ட சூழலிலிருந்து கவிதைதரும்   அர்த்தம் சுவாரசியமானதுஅந்த அர்த்தம் மொத்தமாக வாசிக்கும்போது  கிடைக்காமல்கூடப் போகலாம்காரணம் சூழல்இலக்கியப்பிரதிகள் சூழலில் தனக்கான அர்த்தங்களை உருவாக்குகின்றன  சூழல் என்பது கவிதை உருவான சூழலாகவும் வாசிப்பவரின் சூழலாகவும் இருக்கிறது.
 
வாசிக்கப்படும் கவிதைக்குள் செயல்படும் மொழிப்பயன்பாடு,உண்டாக்கப்படும் உருவகம் அல்லது படிமம் போன்றன அந்தக் கவிதையை நின்று நிதானமாக வாசிக்கவும் யோசிக்கவும் தூண்டும்.அப்படித் தூண்டக்கூடிய கவியின் கவிதைகள் கண்ணில் பட்டால்போதும் உடனடியாக வாசிக்க நினைப்பதே வாசக மனம்.  திரும்பத்திரும்ப வாசிக்க நேரும்போதுஏற்கெனவே வாசித்த அதே கவியின் கவிதைகள் நினைவுக்கு வந்துவிட்டால்அந்தக் கவியின் பெயர் வாசிப்பவரின் மனதில் தங்கும் பெயராக ஆகிவிடும்அதன் மூலம் ஒருகவி வாசகர்களிடம் தனது பாணியைக் கடத்தியவராக ஆகிவிடுவார்தொடர்ந்து அவரை வாசிக்கும்போது வாசகர்களுக்குப் பிடித்த கவியாக அவர் மாறிவிடுவார்அப்போது அந்த வாசகரால்நமது மொழியின் முக்கிய கவிகளில் இவரும் ஒருவர் என்று நம்பப்படுவார்;சொல்லப்படுவார்தொடர்ச்சியான வாசிப்புகளைக் கருத்தாக முன்வைக்கும் திறனாய்வாளராக இருந்தால் கவிக்கு ஒரு பிம்பம் உருவாகிவிடும்நிவேதா உதயனின் இந்தக் கவிதைகளுக்குள் ஒருவர் திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்ளத்தூண்டும் தன்மைகளும்மனதில் தங்கிவிடத்துடிக்கும் நிகழ்வுகளும் இருக்கின்றனஅந்தக் கூறுகள் எவையெனத் தேடிப்பார்க்கலாம்.

ஒருவர் தன்முன்னால் பரப்பப்படும் கவிதைகளை எப்படி வாசிப்பது என்ற கேள்வியைக் கேட்கும் ஒருவர்,  ஒரு கவியைச் சந்தித்தால்உங்களிடம் கவிதைகள் எவ்வாறு பிறக்கின்றன அல்லது உருவாகின்றனஎன்று கேட்கக்கூடும்தான் எழுதி முடித்த ஒவ்வொரு கவிதையும் எப்படி உருவானது என்று சொல்லமுடியாமல் ஒரு கவி திணறவும்கூடும் ஆனால் கவிதையைத் தொடர்ந்து வாசித்து அர்த்தப்படுத்தும் கவிதை வாசகர் தன்னிடம் வைக்கப்பட்ட கேள்விக்கு விரிவான பதிலைத் தரவே செய்வார்வாசிக்கும் கவிதைக்குள் இருக்கும் பாத்திரத்தை/கவிதைசொல்லியைத் தேடிக் கண்டுபிடிப்பது வாசிப்பவரின் முதல்வேலைஅந்தத் தேடலில் கவிதைக்குள் அலைவது ஆண் தன்னிலையாஅல்லது பெண் தன்னிலையாஇரண்டுமற்ற பொதுத்தன்னிலையாஎன்பதை  முதலில் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.  அதன்பிறகு அந்தச் சொல்லிகள் யாரோடு உரையாடுகிறார்கள் என்பதும்எவை பற்றிப் பேசுகிறார்கள் என்பதும் வாசகர்களுக்குப் பிடிபடத் தொடங்கிவிடும்ஆணென்றாலும் பெண்ணென்றாலும் முதலில் உடல்சமூக அடையாளங்களால் அர்த்தப்படுத்திக் கொள்வது நடக்கும்.அவ்விரண்டும் சேர்ந்து எழுதும் கவியின் தன்னிலைகளின் உளவியலைக் கட்டமைத்துக் கொடுக்கும்நிகழ்காலக் கவிதைகளை வாசிக்க விரும்புபவர்கள் இந்த எளிய சூத்திரத்தைப் பின்பற்றினால் போதும் எந்தவிதமான கவிதைகளையும் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம்

17350020_1328202143883074_7630200362623513370_o.jpgகவி நிவேதா உதயனின் மொத்தக் கவிதைகள் என் முன்னால் பரப்பிக் கிடக்கின்றன.இப்போதுதான் அக்கவிதைகளை வாசிக்கிறேனா என்றால் நிச்சயம் இல்லைஅவரை,அவரது சில கவிதைகளை அவ்வப்போது முகநூலில் வாசித்திருக்கிறேன்அதற்கு முன்பு அவரது பதிவுகளை வாசித்திருக்கிறேன்அவர் விவரிக்கும் ஐரோப்பிய நிலவெளியில் நானும் இருந்தவன் என்பதால் அந்தப் பதிவுகள் என்னை ஈர்ப்பனவாக இருந்தனஅந்த பதிவுகள் வழியாக  அவரைப் பற்றிய சித்திரம் எனக்குள் உருவாகி இருக்கிறதுஅந்தச் சித்திரத்தோடு இப்போது அவரது மொத்தக் கவிதையின் மொழிதல் முறையையும் அதற்குள் இருக்கும் கவியின் / கவிதை சொல்லியின் இருப்பையும் வாசிக்க முடிகிறது.அதன்வழியாக இந்தக் கவிதைத்தொகுப்பைப் பற்றிப் பேசமுடிகிறது.

நிவேதாவின் கவிதைமொழிதல் எளிமையான வடிவம் கொண்டதுதொடங்கும்போது சொல்பவர் யாரெனக் காட்டிக்கொள்ளக்கூடாது என நினைப்பது எளிய கவிதையின் எதிர்நிலைஆனால் நிவேதா அப்படி நினைக்கவில்லைஇவர்தான் இதைச் சொல்கிறார் அல்லது முன்வைக்கிறார் என்பதை வெளிப்படையாகக் காட்டியபடியே தொடங்கும் எளிமைஅந்த எளிமைகவிதையை இசையின் ரூபமாக நினைக்கிறது.மொழியின் அடுக்குகள் வழியாக உருவாக்கப்படும் தாளலயத்துக்குள் கவிதை இருப்பதாக நம்பும் கவிமனம் அது.அந்த மனத்திற்குத் தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சில எளிமையான கேள்விகளும்ஆச்சரியங்களும்குழப்பங்களும் இருக்கின்றனஅவற்றிற்கு விடைகளைத் தேடும் முயற்சியும் இருக்கிறதுஇவ்விரண்டின் விளைவுகளால் உருவாகும் எண்ண ஓட்டங்களே அவரது கவிதைகள்எளிமையான கேள்விகளுக்குக் கிடைக்கும் எளிமையான பதில்கள் போதாது என்று நினைக்கும்போது எளிய கேள்விகள் கேள்விகளாகவே நிற்கின்றன கவிதைகளில்இத்தொகுப்பில் பாதிக்கும் மேலான கவிதைகள் அத்தகைய கேள்விகளை எழுப்பிப் பதில் சொல்லும் மொழிதல் முறையையே கொண்டிருக்கின்றனஎடுத்துக்காட்டுக்கு ‘எல்லை அற்ற மனம்’  என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையை வாசித்துப் பார்க்கலாம்

புலன்களின் புரிதலற்ற பதுங்குதல்களில்
பிடிவாதமாய் பின்னி நிற்கும் படிநிலைகளின் பக்குவமற்ற பதங்கள்
பாகுபாடற்று என்றும்
பாழ்மனதைப் பலமிழக்கச் செய்து பரிகாரம் தேடித் தேடியே பரிவறுக்கச் செய்கின்றன நிதம்

என்பதான வரிகளை வாசிக்கும்போதும், ஊமைக் காயங்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள

மனத்தின் அடங்கா மாயைகள்

வாழ்வின் நாட்கள் எங்கும்

மர்மங்கள் புரிந்திட முடியாது

மயக்கம் தந்தபடி இருக்கின்றன

 
உறவின் உயிர் நாடியை

உலுப்பிப் பார்ப்பினும்

உண்மை உணரமுடியாதபடி

ஊமைக் காயங்களை

காலம் முழுவதும் விதைப்பினும்

உணர்தலுக்கான வலுவை

மழுங்கச் செய்கின்றது மனது

என்பதான வரிகளை வாசிக்கும்போதும் உருவாகும் சித்திரம், தனது அகத்தைத் தேடும் ஒருவரின் சித்திரமே. தனது அகநிலையைத் தேடும் இத்தகைய கவிதைகளில் இருக்கும் அதே மனம்தான்

நான் மரமாக நீ காற்றாகி மனதின்வழி

நாதங்கள் கேட்க வைத்தாய்

நான் நிலமாக நீ நீராகி நிதம் எனை

நெக்குருகியே நெகிழவைத்தாய்

காற்றின் ஒலியாகி கார்கால மழையாகி

காணும் இடமெங்கும் என்மனவீட்டில்

எங்கும் உன் ஒளியாக ஒளிரவைத்தாய்

என இன்னொரு தன்னிலையோடு உறவாடுவதையும் வாசிக்க முடிகிறது. அத்தகைய இன்னொரு மனம், இன்னொரு தன்னிலை, இன்னொரு ஆளுமை என்பன நட்பாக, காதலாக, உறவாக, பகையாக என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் கவியின் மனம் இன்னொரு உயிரியோடு உறவாடும் மனமாகவே இருக்கிறது. மனிதர்கள் தவிர இயற்கையோ, வாழிடமோ, பிரபஞ்சத்தின் சிக்கல்களோ எல்லாம் நிவேதாவின் கவிதைப் பரப்பிற்குள் வரவில்லை. மனிதர்களை நேசித்தும், கேள்விகேட்டும், கோபித்தும், விளக்கம் சொல்லியும், அரவணைத்தும் செல்லும் அவரது கவி மனத்திற்கு  இன்னொரு வெளி ஒன்றும் இருக்கிறது. கவிதைக்குள் அலையும் அந்த மனம், தனது பால்ய நினைவுகளின் அலையும் மனம்.

பால்ய வயது நிலப்பரப்பையும், தோட்டவெளிகளையும் வீட்டையும் விட்டுப் பிரிந்து விலகிநிற்கும் மனம்திரும்பவும் தேடுகிறது. அந்த விலகலுக்கான காரணத்தை நேரடியாக அனுபவித்தறியாத அந்த மனத்திற்குக் காரணங்கள் தெரிந்திருந்தாலும் கவிதையாகச் சொல்லத்தெரியவில்லை தனது சின்ன வயது நினைவாக இருக்கும் அந்த நிலப்பரப்பு எப்படி இருக்கும்? என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்கிற ஒரு மனதைப் பல கவிதைகளில் வாசிக்க முடிகிறது.

கால்கள் புதையும் கனவுகளோடு
கண்விழித்த காட்சிகள் இன்னும்
பசுமை குலையாத பச்சை வயலாய்

பள்ளிகொள்ளும் போதில் வந்து போகின்றன

என்கிறது ஓரிடத்தில். இன்னோரிடத்தில்

காரணங்கள் அற்று நானும்
காணவே முடியாதனவற்றை
காண்பதான மாயை சுமந்து
மீண்டுவரா நாட்களின் தகிப்பில்
மனதின் மகிழ்வு தொலைய
எந்நேரமும் விடுபட எண்ணிடும்
நூலிழை பற்றியே நிதமும்
எழுந்துவர எத்தணித்தபடியே
எதுவும் முடியாது காத்திருக்கிறேன்

என்று புலம்புகிறதுஅலைவதாகவும் காத்திருப்பதாகவும் சொல்லும் அந்த மனத்திற்குரிய நபர் இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரால் புலம்பெயர்ந்தவரா? என்று தேடினால் அதற்கான ஆழமான பதிவுகள் எதையும் கவிதைக்குள் காணமுடியவில்லை. அதைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் எப்படிப்பதிவு செய்வது என்ற குழப்பம் இருக்கிறது. அந்த மனத்திற்குத் தனது சொந்த பூமியில் நடக்கும் போரும், போரினால் ஏற்படும் அழிவுகளும், மனிதர்கள் படும் துயரங்களும் தொடர்ச்சியான தகவல்களாய்க் கேட்டுக்கொண்டே இருக்கின்றனஆனால் அவையெல்லாம் கேள்விப்படும் சங்கதிகள் மட்டுமே. அவரது அனுபவங்களல்ல.

கேள்விப்படும் சங்கதிகளும் தகவல்களும் உருவாக்கும் மனக்கொதிப்பு கவியின் தவிப்பாக ஆகாமல்இரக்கமாக மாறித் தன்னிரக்க வெளிப்பாடுகளாக மாறியுள்ளன இந்தக் கவிதைக்குள் வெளிப்படும் அந்த மனத்தை நீங்கள் வாசிக்கும்போது எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

ஏனோ எம் மண்ணின் நினைவு
எப்போதும் எம்முடனே இருக்கின்றது
ஆனாலும் எந்தையர் எமக்காய் வாழ
ஏதுமற்று ஏதிலியாய் இருக்கின்றது
காய்ந்து போன காட்சிகள் மட்டும்
கனவுகளின் மீட்டல்களோடு
கந்தலாகிப் போன சுற்றங்களுடன்
காற்றில் மட்டுமே கேட்கும் கானமாய்
கைவிட்டுப் போன எம் கனவுகள் போல
எப்போதாவது வரும் ஏக்கங்கள் தாங்கி
நிலையான நினைவாகி நிலைத்துப் போனது

(நினைவுகளாய் வீடும் அயலும் )

தனது அகத்தை நோக்கிய கேள்விகளே ஆயினும், புறத்தை - சூழலை நோக்கிய கேள்விகளே ஆயினும், எல்லாமே எளிமையான கேள்விகள் தான். ஆழப்பதிந்து கிடக்கும் சொந்தத் தேசத்து நிலப்பரப்பு பற்றிய நினைவலைகளும்கூட நேரடியனுபவமற்ற எளிய ஞாபகங்கள் தான்.  நிவேதாவைப் போன்ற கவிகள் ஒவ்வொரு மொழியிலும் இருக்கவே செய்கின்றனர். எப்போதும் எளிய வாழ்க்கையை, எளிமையான மொழியால் சொல்லிவிடும் திறமைகொண்ட கவிகளுக்கும் ஒரு மொழிப் பரப்பில் இடம் இருக்கவே செய்கின்ற. எளிமையின் அழகை  ரசிக்க முடிந்தால், நிவேதா உதயனின் கவிதைகளை ரசிக்க முடியும். எளிமையான கேள்விகளுக்கான விடையை நீங்களே உருவாக்கிக்கொள்ள முடிந்தால் நிவேதாவின் கவிதைகள் உங்களுக்குக் கவிதையனுபவத்தையும் ருசியையும் உண்டாக்கும். ருசியை உருவாக்கிக் கடத்த அவர் பெரிதும் நம்பியிருப்பது ஒருவிதச் சந்தலயத்தைஆற்றிலிருந்து பிரிந்து வாய்க்கால் வழியாக ஓடும் நீரோட்டம் எழுப்பும் ஒலியலைகளைப்போல இந்தக் கவிதைக்குள் இருக்கும் சந்தலயம்மென்மையாக ஓடிக் கொண்டிருக்கிறதுலயத்தோடுகூடிய எளிய ஓட்டத்தை ரசிக்கும் விருப்பம் உள்ளவர்களுக்குத் தேவையான உத்தரவாதமான கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

கவி நிவேதா உதயனுக்கு வாழ்த்துக்கள்
மார்ச்,2017

மூலம்  -  ramasamywritings.blogspot.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.