Jump to content

'உணர்வுகள் கொன்றுவிடு '' சிறுகதைத்தொகுதி -ஒரு விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலாபூஷணம் .திருமதி கோகிலா மகேந்திரன்

No photo description available.

 

நிவேதா உதயராயனின் ,''உணர்வுகள் கொன்றுவிடு '' சிறுகதைத்தொகுதி -ஒரு விமர்சனம்

 

 

சிறுகதை எழுதுவது ஒரு கலை .ஒரு உணர்வினை அல்லது பெறுமானத்தினை வெளிப்படுத்துவதிலும் ,தொடர்புறுத்துவதிலும் மனிதத்திறன் வெளிப்படும் ஒரு முறை என்று கூறலாம் .சிறு கதை வாழ்வின் ஒரு வெட்டுமுகமாக அமைய வேண்டும் என்பது அன்டன் செக்கோவின் கருத்து .

         நிவேதா உதயராயன் ''உணர்வுகள் கொன்றுவிடு ''என்ற தனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியை புலம்பெயர் எழுத்தாளர் என்ற வகையில் பிரித்தானியாவில் இருந்து தந்துள்ளார் ''.உணர்வுகள் ''உடன் வந்திருக்க வேண்டிய ,'' ''வேற்றுமை உருபை த் தவிர்த்து வித்தியாசமாய் ஒரு தலைப்புடன் வந்திருக்கும் இந்த நூல் ,புலம்பெயர் வாழ்வுக்கும் தாயக வாழ்வுக்கும் இடையே பல வேறு தளங்களில் தத்தளிக்கும் வாழ்வின் ஒரு வெட்டுமுகம் என்பதில் ஐயமில்லை .

      எழுத்தாளர் ஒருவர் தனது படைப்பை மக்கள் முன் வைக்கும் நோக்கம் என்ன ?இப்போது வாழும் மனித குலம் இன்னும் சிறிதளவு சிறந்ததாக இன்னும் கொஞ்சம் மனிதப் பண்பு மிக்கதாக மேலும் சற்றுக் கூரப்படைந்ததாக மாற அந்தப் படைப்பு உதவுமாக இருந்தால் அது படைப்பாளியின் வெற்றிப்படி என்று கருதலாம் .கதையின் உள்ளடக்கம் தருகின்ற செய்தி வாசகர் ஒருவரிடமாவது இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

உருவம் கலைநயம் மிக்கதாக அமைந்து ரசிகரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் .உதாரணமாக இந்நூலில் 'ஆசை மனதளவு 'என்ற கதையின் நாயகி விழுமியமும் அறமும் மாறுபட விரும்பாதவளாய் உயர்ந்து நின்று உள்ளடக்க நோக்கத்தை நிறைவு செய்கிறாள் .

Rocco Fumento என்ற ஆய்வாளர் சிறுகதை நாலுவகை என்பார் .

1.நிகழ்ச்சியால் சிறப்பெய்தும் கதை

2.சூழலால் சிறப்பெய்தும் கதை

3.கதை மாந்தரின் பண்பால் சிறப்பெய்தும் கதை

4.உரிப்பொருளால் சிறப்பெய்தும் கதை

'பணத்துக்காக எதுவும் செய்யலாம் 'என்ற கலாசாரம் தமிழர் மத்தியில் மிக வேகமாகப் பரவுகிறது .இனியாளின் அக்கா அதற்கான ஒரு வகை மாதிரி .அதனால் அது கதைமாந்தரின் பண்பால் சிறப்புப்பெறுகிறது .என்ஜினியர் கதை கலாசார அதிர்ச்சியை அழகாகச் சொல்லுகிற அதே நேரம் தாயகத்தில் வளர்ந்த ஆண் ,வெளிநாட்டில் வளர்ந்த பெண் ஆகியோரின் பாத்திரப் படைப்பை மிக இயல்பாகத்தந்து அத்தகைய திருமணத்தில் வரக்கூடிய நெருக்கீட்டை கதை மாந்தர் சித்திரிப்பால் சிறப்புறச் சொல்கிறது

பெண்மனது கதை முதுமையில் வரும் இயலாமை ,வன்முறை ஆகியவற்றைக் காட்டினாலும் தேவகி என்ற பாத்திரத்தினால் சிறப்புறுகிறது .தேவகியை வகைமாதிரிப் பாத்திரம் எனப்பார்க்கலாம் .

வேப்பங்காய்கள் அழகான தலைப்பு .நீளமான கதை.சிறுகதைக்கட்டமைப்பு ப் பேணப்படுகிறதா உடைந்துவிடுகிறதா என்ற ஐயம் ஏற்பட்டாலும் சிந்தியா பாத்திரத்தால் உயர்வடைகிறது .

விடுதலை தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று .நந்தா என்கிற அருமையாக வார்க்கப்பட்ட பாத்திரம் அதற்கான காரணம் .சம்பவங்கள் இதனை இயற்பண்பு கொண்ட கதை ஆக்கி விடுகின்றன .

நிகழ்வுகளால் சிறப்பெய்தும் கதைகளில் உறவுகள் ஒன்று.ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வு முறையின் மாற்றம் பற்றி அது பேசுகிறது .மகனுடைய நடத்தை நிறையவே சிந்திக்க வைக்கிறது .அவன் உணர்வு பூர்வமாகச் சந்தோஷிக்கிறானா ?தனது எதிர்ப்பைக் கோபமாக வெளிப்படுத்தாவிட்டாலும் உறுதியாகவேனும் புலப்படுத்தா காரணம் என்ன ?பயமா ?அசௌகரியமான சூழலை எதிர்கொள்ளும் தயக்கமா ?எதிர் காலத்தில் தனக்கான முன்மாதிரி என்று நினைக்கிறானோ ?விவாதிக்கத் தூண்டும் பாத்திரம் .

எப்போதும் இரவு நல்ல தலைப்பு .நிகழ்வுகளால் உயரும் மற்றோர் கதை .பெண்கள் மீதான வன்முறை கலை நயத்துடன் வெளிப்படுகிறது .ஆயினும் வாசகர் திருப்திப்பட முடியவில்லை .

தொகுதியின் தரமான கதைகள் வரிசையில் வரக்கூடிய மற்றொன்று வரம் வேண்டினேன் .நிகழ்வுகளால் மேலேவருவது .மருத்துவருக்கு இந்த மாற்றம் சாதாரணமாக இருக்கலாம் .ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்ட பெற்றோரின் உணர்வு ?எமது மரபணு குழந்தைக்கு வராவிட்டால் உயிரியல் தொடர்ச்சி என்ற திருப்திக்கு என்ன ஆவது ?இதுதான் நியதி என்றால் குழந்தை ஒன்றைத் தத்து எடுத்திருக்கலாமே ?இவ்வளவு செலவும் துன்பமும் ஏன் ?விடை இல்லாத வினாக்கள் .

உணர்வுகள் கொன்றுவிடு என்ற தலைப்புக் கதை உரிப்பொருளால் சிறப்புப் பெறுவது .நேரில் பார்க்காத ,பழகாத ,முகப் புத்தக உறவுகளின் கொடுமை பற்றி அழகாகப் பேசுவது இக்கதை .அண்மையில் தாயகத்தில் இருந்து ஒரு பெண் ,நிஜத்தில் இத்தகு உறவைத்தேடி இந்தியா சென்று தற்கொலையில் தன் வாழ்வை நிறைவு செய்திருப்பது பத்திரிகைச் செய்தி .முடிவாகிப்போனது என்ற கதையும் தற்கொலையில் முடிகிறது .நல்ல அன்பு என்றால் உயிர் ஒன்றாகப் போகுமா ?அல்லது முறையற்ற உறவு அகால மரணத்தில் தான் முடியுமா ?எழுத்தாளரின் தொனி காதலரின் முடிவுக்குச் சாதகம் போலத் தெரிகிறது .

அநீதியை எதிர்ப்பது கனவில் தான் முடியும் என்கிறதா ரயில் பயணம் ?வாழ்வு வதையாகி என்ற கதை Euthanasia கருப்பொருளைக் கொண்டது .உலக சரித்திரத்தில் இது புது விடயம் .தமிழ்ச் சிறுகதை ஒன்றில் இக்கருப்பொருளைக் கலைத்துவமாகக் கையாண்டமை எழுத்தாளரின் பலம் .ஆனாலும் இனிமேல் மாற்றவே முடியாத கடும் வேதனையைத் தருகிற நோய்களுக்குத்தான் Euthanasia சாத்தியப்படும் .பாரிசவாதம் மெல்ல மெல்லக் குணமடைவதும் உண்டு .கடும் வேதனை தராத அந்த நோயுடன் பத்து வருடத்துக்கு மேல் வாழ் பவர்களும் உண்டு .கதையின் யதார்த்தப் பண்பு கேள்வியாகிறது .

மனம் எனும் மாயம் என்ற கதையில் பலவீனமான மனம் ஒன்று அழகாகக் காட்டப்பட்டாலும் முடிவு நம்பும்படி இல்லை .

ஆசிரியரின் சில இடங்களில் இவர் எழுத்தாளர் தான் என்பதை உறுதி செய்கிறது .உதாரணமாக ,'வானமும் நிலமும் வெயில் குடித்துக் கிடந்தது '(கிடந்தன ?)ஆயினும் மொழி இன்னும் சிறக்கலாம் .

படைப்பு வட்டம் என்பது தயாராதல் ,அடைகாத்தல் ,உந்தல் ,சரிபார்த்தல் ,என நாலு நிலைகளைக் கொண்டது .சரிபார்த்தல் என்ற நிலையில் எழுத்துப் பிழைகள் ,இலக்கண வழு ஆகியனவும் கவனிக்கப் படவேண்டும் .நின்மதியா ?நிம்மதியா ?ஏஜென்சியா ?ஏயென்சியா?

கதையோடு கதையாகச் சொல்லிச் செல்லும் சில விடயங்கள் மனதில் நிற்கின்றன .காசுக்காகப்  புருஷனைவிவகாரத்துச் செய்துவிட்டு ஒன்றாக வாழும் மேல்நாட்டுக் கலாசாரம் ஒரு வகைமாதிரி .

மனதுக்கு நிறைவு தரும் தொகுப்பு .

கலாபூஷணம் .திருமதி கோகிலா மகேந்திரன்

இலங்கை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.