Sign in to follow this  
பிழம்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள்- என்ன சிக்கல்?

Recommended Posts

அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ்

கொரோனா வைரஸ் பாதிப்பால், பல கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். மாதாந்திர செக் அப், ஸ்கேன், உள்ளிட்ட பல விஷயங்களுக்கு அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கொரோனா தொற்று அதற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, கொரோனா காலகலலத்தில் வெளியே சென்றால், அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் உள்ளது.

சென்னை அரசு மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 191 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருவதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. அந்த வகையில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் 70 பேரும், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 68 பேரும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் 29 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 பேரும் என மொத்தம் 191 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பலர் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதனை தனிப்பட்ட வகையில் பிபிசி தமிழால் உறுதி செய்ய முடியவில்லை.

எனினும் மாநில அரசின் தரவுகள்படி, கர்ப்பிணி பெண்கள் ஒருசிலர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்,

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக கர்ப்பிணி பெண்கள் இருக்கிறார்களா? அரசு இதுகுறித்து என்ன செய்ய வேண்டும்? கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அத்தொற்று நிச்சயம் இருக்குமா ஆகியவை குறித்து மகப்பேறு மருத்துவர் ஷாந்தி ரவீந்திரநாத் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் இருந்து.

கேள்வி: முதியவர்கள், நாள்பட்ட வியாதி உடையவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கர்ப்பிணிப் பெண்களும் அதிகம் பாதிக்கக்கூடிய விளிம்பில் இருக்கிறார்களா?

பதில்: நம் சமூகம் பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சமூகம், ஏனெனில் தாய், சேய், என இரு உயிர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில், சொல்லப்போனால் ஏப்ரல் மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) ஓர் அறிவிப்பானையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தை பிறக்கும் 5ல் இருந்து 10 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அப்போது அதிகம் கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால், மே 18ஆம் தேதி ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட அறிவிப்பானையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு நீக்கப்பட்டது.

கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற உத்தரவு இருந்தபோதே பல கர்ப்பிணிப் பெண்கள் அதனை மேற்கொள்ள தயக்கம் காட்டினார்கள். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், நீண்ட நேரம் காத்திருப்பு, பரிசோதனை செய்யப்போய் தங்களுக்கு கொரோனா தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தார்கள்.

https://www.bbc.com/tamil/science-53021112

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • மக்கள் மன்ற நிகழ்வில் மஸ்தானுடன் முறுகல் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் குழப்பகரமான நிலை ஏற்பட்டது. வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளின் வேட்பாளர்கள் சிவில் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஆரம்பத்தில் நெறியாள்கை செய்த வி.எஸ்.சிவகரன் சிவில் பிரதிநிதிகளாக கலந்துகொண்டுள்ள சின்மயா மிசன் சுவாமி தவத்திரு வேலன் சுவாமி, பல்கலைக்கழக மாணவன் வி.சாரங்கன், சமூக ஆர்வலர் செ.சுதாகரன் ஆகியோரும் வேட்பாளர்களாக கலந்துகொண்ட காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், ப.உதயராசா, சிவ.கஜேந்திரகுமார் ஆகியோர் மாத்திரமே கருத்துக்களை முன்வைப்பார்கள் என தெரிவித்திருந்தார். இதன்போது கருத்துக்களை முன்வைக்க அனுமதியளிக்கப்பட்டவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தபோது சிவகரனால் இடையிடையே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து தரப்பினரும் உரையாற்றி இறுதியில் காதர் மஸ்தான் உரையாற்றி முடிந்தபோது சிவகரனால் கேள்விகள் கேட்கப்பட்ட பின்னர் பார்வையாளர்களாக இருந்தவர்கள் மத்தியில் இருந்து தமிழ் மக்கள் கூட்டணியின் முன்னாள் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மஸ்தானை நோக்கி கேள்விகளை கேட்டார். மக்கள் கேள்வி கேட்பதற்கு அனுமதி இல்லை என தெரிவித்திருந்த நெறியாளர் இதன்போது அமைதியாக இருந்து அவருக்கு அனுமதி அளித்திருந்தார். குறித்த நபர் மஸ்தானை நோக்கி காணாமல் போனோர் விடயம் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக கேள்விகளை கேட்டபோது மஸ்தான் அதற்கு பதிலளித்திருந்தார். அடுத்து ஒரு முஸ்லிமாவது தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் இனவாதம் பற்றி பேச்சே வராது என தெரிவித்து தனது கேள்வியை தொடர முட்பட்டபோது காதர் மஸ்தானுடன் வந்தவர்கள் இனவாத கருத்தை முன்வைக்கின்றனர் என நெறியாளரிடம் தமது முறைப்பாட்டை முன்வைத்தார்கள். இதன்போது மேலும் சிலர் மஸ்தானை நோக்கி கேள்வி எழுப்பியபோது நெறியாளர் அனைவரையும் அமைதி காக்குமாறு தெரிவித்தாலும் குழப்பம் அதிகரித்து எவரையும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன்போது காதர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கும் சிறி டெலோ கட்சியின் ஆதரவாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்படும் நிலை உருவாகியதுடன் சிறி டெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் மஸ்தானின் ஆதரவாளர்களை நோக்கி கைகளை உயர்த்தியவாறு சென்றிருந்ததுடன் அங்கிருந்த மேலும் இருவருக்கிடையிலும் முரண்பாடு ஏற்பட்டபோது நெறியாளராக செயற்பட்ட சிவகரன் இருவரையும் கைகலப்பில் ஈடுபடாதவகையில் செயற்பட்டு பிரச்சனையை சுமூகமாக்கியிருந்தார்.   https://newuthayan.com/மக்கள்-மன்ற-நிகழ்வில்-மஸ/  
    • பிரம்ம ஒகடே பர பிரம்மம் ஒகடே  
    • வில்லாதி வில்லன்(1995) சத்தியராஜ் & பகிடி தலைவர் ..👍
    • உண்மைதான் தமிழ் சிறி அண்ணா.   நாங்கள் இந்த கடலையை அவித்து, அதை வெங்காயம், செத்தல்மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை எல்லாம் போட்டு தாளித்து சாப்பிடுவோம். எனது Fiji நண்பி, பச்சைமிளகாய், வெங்காயம், ஒரு உள்ளி பல், கரம் மசாலா போட்டு செய்வதாக கூறுவா.  நான் இந்த 3 முறைகளிலும் செய்வது வழமை. உங்கள் எல்லோரது கருத்துக்களுக்கும் நன்றிகள்