Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து  வீடு

 

         சாய்வு நாற்காலியில்  சரிந்து உட்க்கார் ந்து கொண்டு இருந்தாள்  ராசம்மா டீச்சர்  , மாலை மங்குவதற்கு  சூரியன் தன  கதிர்களை  மெல்ல  இறக்கி கொண்டிருந்தான் . துணைக்கு இருந்த சிறுமியிடம்  கோழிகள் கூடு அடைந்துவி ட டால் , கதவை மூடி  விடாம்மா . இன்று மின்சாரம் தடைப்படடாலும் ,     உதவியாக இருக்கும்  .நான் விளக்கு வைக்க போகிறேன் என்றாள். அரிக்கன் லாந்தர்  விளக்கின் கண்ணடியை துடைத்து அளவாக எண்ணெய் விட்டு, தயார் படுத்தினாள்.  பின் மேசை  விள க்கினையும் . கண்ணடியை துடைத்து  மேசையின் ந டுப்பகுதியில்  வைத்தாள். துணைக்கு இருக்கும் சிறுமி குமுதா ...அப்பாவின் காரோட்டி தியாகு வின்  மகள்  எடடாம்     வகுப்பு படிக்கிறாள்  வீட்டுப் பாடம் செய்ய உதவி கேட்டு  படித்து இரவு துணையாக  இருந்து காலையில் செல்வாள்.  இவள் வீடு வாயில் படலையில்  நின்று கூப்பிடடால்  .கேட்க்கும்  தூரம் தான் .  தியாகு  மிகவும் விசுவாசமானவன்  அவன் . மனைவியும்  சமையல் முடித்து   பிள்ளைகள்  இருவரும் பாடசாலைக்கு சென்ற பின் ராசம்மா  டீச்சர் வீட்டில் வந்து  சமையல் பாத்திரம் தொட க்கம் , துணி துவைப்பது வரை   செய்து கொடுப்பாள் .

 

 ராசம்மா  டீச்சர் இளைப்பாறிய  பின்  . இரண்டு வருடங்களுக்கு முன் கணவன் இறந்து விட  படடனத்தில் இருக்கும் மகன் தன்னிடம் வரும்படி  எத்தனையோ முறை கேட்டுக் கொண்டாலும் ராசம்மா மறுத்து வி ட டாள் . வருடமொருமுறையாவது பிள்ளைகளையு ம்  கூட்டி வந்து என்னைப் பார்த்துக் கொண்டு போனால் காணும்  என்பாள் . கிராமத்து சூழ் நிலையிலே பிறந்து வளர்ந்து வாழ்க்கை படடவள். மகன் பிறந்த பின் சில வருடங்கள்  படிப்பிக்க போகாமல் விட்டு  அவன் வளர்த்தும் தன மாமியாரிடம் விட்டு   கல்வி ஒரு கொடை  அதை சிறார்களுக்கு கற்பிப்பது  பெரும் புண்ணியம்  எனும் கணவனின்  விருப்புக்கேற்ப  பாடசாலை  அருகாமையில் இருந்ததால்  சென்று படிப்பித்து  வந்தாள் . எல்லாம் கனவு போலாகியாது அவளுக்கு  அவளும் ஓய்வு பெற்று   பல வருடங்களாகி விட்ட்து வயதும்  ஆகி விட்ட்து .  சில தடவை மகனின் வீட்டுக்கு சென்ற போதும அங்கு மனம்  நிலை கொள்ள வில்லை .  வாகன இரைச்சலும்  காலையில்  எழுந்து  கணவன் மனைவி வேலைக்கு ஓடுவதும் , குழந்தைகளை ஆட்டொவில் பள்ளிக்கு அனுப்புவதும் ஒரு எந்திர த்தனமான  வாழ்க்கை . தனியாக இருக்க  மகனும் விரு ம்ப வில்லை .. அம்மாவின் விருப்பின் படியே இருக்கட்டும்  என  விட்டு விடடான் .

 

காலம் தன் வழியே  பயணித்துக்  கொண்டு இருந்தது .சிறுமி  குமுதாவும்  உயர்கல்வி  கற்று  பல்கலைக்கு சென்றுவிடடாள் . ராசம்மா பல வாறு யோசிக்க தொடங்கினாள் . மீண்டும்  தனக்கு உதவியாக  சிறு குழந்தையுடன்  கைவிடட  தனித்து நின்ற  தேவகியை   வேலைக்கு அமர்த்தி பொருட்கள் களஞ்சிய படுத்தும்   அறையை சகல வசதிகளுடன் ஒதுக்கி கொடுத்து  வீட்டொடு வைத்துக் கொண்டாள் .  மீண்டும் மகன் தன்னிடம் வரும் படி அவற்புறுத்தவே ,   காலையில் குயிலின்  கூவ லோடு எழும் இன்ப மும்   சுற்றிவர மாமரங்களும் தோடை பலா    என பயன் தரும்  மரங்களும் காலப்போக்கில் கவனிப்பாரற்று அழிந்து விடும்  .  காலையில் தரிசிக்கும் முருகன் கோவில்  ,  செவ்வாய் வெள்ளி விரதநாட்களில் காக்கைக்கு உணவளித்து  உண்ணும் மன நிறைவு   இவற்றை அவள் இழந்து மகனுடன் செல்ல தயாரில்லை .   என மறுத்து விடடாள்.  

 தற்போது  அவளுக்கு  சற்று  எதிர்காலத்தின்  முதுமையை   நோக்கிய ஒரு பய உணர்வு ....அன்று  வழக்கம் போல்   எழுந்து   காலை க்    கடன் முடித்து  உணவுண்டு  முடித்தவள் , தேவகியை  கடைத்தெருவுக்கு  மீன் வகை  வாங்கி  வர  அனுப்பினாள்.  பின்  மணிச் சத்தம் கேட்டு வாயிற் கதவை  நோக்கியவள்  .தபாற்காரன்  வந்திருந்தான்.  அவளது கணவனின் அக்காவின் கடைசி  மகளுக்கு ..பெண் குழந்தை பிறந்த சேதி யோடு  .கூடிய கடித மொன்றுடன்  . மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் .  மதிய உணவு முடித்து ...சற்று ஓய்வெடுக்க எண்ணிய  அவள் மேசை மீது  கடிதமெழுதும் நோட்டுப் புத்தகத்தை  எடுத்துக் கொண்டு  மகனுக்கு ஒரு மடல் வரைந்தாள் .

 

அன்புள்ள  மாதவன் , ஜீவிதா மற்றும் பேரப்பிள்ளைகள் அறிவது ...

     முருகன் துணையால்  நான் நலமே உள்ளேன்  நீங்களும் அவ்வாறே இருக்க எல்லாம் வல்ல முருகன் துணை புரிவார் . . தேவகி வீட்டு வேளைகளில் ஒத்தா சையாக இருப்பதால்  நிம்மதியாய் இருக்கிறேன்   பெரிய மாமியின் மகள்   கெளசல்யாவுக்கு   பெண் குழந்தை  பிறந்துள்ளதாக மாமி கடி தம் போட்டிருந்தார் . என்  பேரப்பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்களா ?  அங்கு வெயில்  எப்படி  இங்கு மரங்கள் சூழ இருப்பதால் நல்ல குளிர்ச்சியாக இருக்கிறது .  இம்முறை  பள்ளி விடுமுறைக்கு  என்னைப்பார்க்க வருவீர்களா ?  வெள்ளைச்சியும்,கொம்பாளும் ஒரே  நேரத்தில் கன்று  போட்டிருக் கு . இரண்டு  நாகு கன் றுகளும்  வீட்டு முற்றத்தில்துள்ளித் திரிந்து ...விளையாடுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்  வீட்டில் தாராளமாக பால்  கிடைக்கிறது . என் பேரப்பிள்ளைகளைத்  தான் நினைப்பேன் . வீட்டுத்தேவைக்கு எடுத்து போக மீதியை   வறிய பள்ளிப்பிள்ளைகள்  மூவர் வந்து  மாலை வேளைகளில் எடுத்து செல்வார்கள். அயலில் எல்லோரிடமும்  பால் மாடுகள் இருக்கின்றன . அதனால்  ஒருவருக்கும் கொடுக்க முடியவில்லை . வறிய  பிள்ளைகள்  பசியாறட்டும் போகும் வழிக்கு புண்ணியமாகும் என எண்ணிக் கொள்வேன்.

அடுத்து மகனே  உனக்கு நான் உங்களுடன் வந்து தங்கவில்லை என குறையாக இருக்கலாம்  யோசித்து பார் பரபரப்பான இந்த  காலத்தில்  குழந்தைகளின் படிப்பு உன் வேலை வீடு செலவு என்று உனக்கே நேரம் இல்லாத போது என்னை கவனிக்க கஷ்டமாய் இருக்கும் .  நான் நடமாடித்திரியும் வரை என சுய தேவைகளை நிறைவேற்றக் கூடிய நிலையில் இருக்கும் வரை நீ பிறந்து வாழ்ந்த இந்த வீட்டிலிருக்கவே விரும்புகிறேன் . நான் உயிருடன் இருக்கும் வரை இதை விற்கவோ ..வேறு தேவைக்கோ  எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம்.   என் சுயம் இழந்து ... மறதி கண்டு ...என்னை இன்னொருவர் துணையோடு தான் வாழ வேண்டிய நிலைமை வந்தால் ...எனது இளைப்பாற்றுச் சம்பள பணம்  சேமிப்பில் இருக்கிறது . அது உனதும்   எனதுமான   இணைந்த வைப்புக் கணக்கில் இருக்கிறது அதை எடுத்து உன்  தேவைகளை செய் . என்னை ஒரு கண்ணியமாக நடத்தும்  முதியோர் இல்லத்தில் சேர்த்து விடு ...இதை என் கடைசி ஆசையாக நிறை வேற்றுவாய் என்பதில் நம்பிக்கை உண்டு .

 ஒன்று சொல்ல மறந்து விடடேன் . கார் கார தியாகுவின்  பெண்ணுக்கு  நகரத்தில் ஒரு வேலை கிடைக்க  உதவி செய்வாயா?  நன்றாக படித்து இரண்டு டிகிரி ..வாங்கி உள்ளாள் .அதுகள் உன்னை குழந்தையாக  வீட்டுக்கு கொண்டு வந்த காலத்தில் இருந்து    கைக்குள்ள இருந்து  சேவை செய்ததுகள்  அந்த பெண் தலை  நிமிர்ந்தால் அதுகளின்  சீவியம்   மேம் படும் ...மீண்டும்   குடும்பத்தையும் உன்னையும் பாது காக்க .முருக கடவுளை வேண்டி நிற்கிறேன் 

.இப்படிக்கு ..  பாசமுள்ள அம்மா ...கண்கள் பனித்தன 

 

வாரங்கள் மாதங்களாகி  பள்ளிக்கு கூட விடுமுறையும் வந்தது . ஒரு ஞாயிறு காலை வாயிலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்ட்து ...மகன் மருமகள் பேர ப் பிள்ளைகளோடு வந்திருந்தான் .ராசம்மாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி .. பேத்தி நன்றாக வளர்ந்து  ரடடை ஜ டை  போட்டு இருந்தாள். பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது . பேரன்  தேவகி பையனோடு  கிளி பார்க்க மாமரத் தடிக்கு  சென்று விடடான் .  .அவர்கள் குளித்து முடிந்ததும்  காலை ஆகாரத்தை நிறைவு செய்தார்கள் . ராசம்மா மதிய  உணவுக்கு என்ன செய்வது என்று  ..எண்ணிக் கொண்டு  இருக்கையில் .". மாமி   எங்களுக்கு  கடையில் வாங்கும் கோழி  சலித்து விட்ட்து . ஊர் கோழி  சமைப்போமா  என மருமகள் ஜீவிதா ..கேட்டுக் கொண்டே குசினிக்குள் நுழைத்தாள். அவளும் கூட மாட உதவி செய்து   சமையலை ஒப்பேற்றறினார்கள்.   பல கதைகளும் கதைத்த பின் ..... மத்திய உணவு  சுடச் சுட கோழிக் கறியும்   தோடடத்து   பிஞ்சு வெள்ளைக்கத்தரிக் கறியும்  மற்றும் பல உணவுகளுடன்  நிறைந்தது .  நாட்கள் ஓடி  வாரங்களானது  ராசம்மா மிகவும் யோசனையுடன் காணப்படடாள் . ..மறு நாள் பயணம் .  இரவு உணவு முடித்துக் கொண்டு ...படுக்கைக்கு சென்றார்கள். எல்லோரும் ஆழ்ந்த நித்திரை   அதிகாலை மூன்று மணி யளவில் அம்மாவின் அறையில் ...விளக்கு எரிந்து கொண்டிருந்ததை பார்த்த மகன் ..  உள் சென்று   பார்த்த போது ஒரு வகை விக்கல் ..எடுத்துக் கொண்டிருந்தார் ராசம்மா ...அருகில் சென்று  கையை பற்றியவர் ....கை துவண்டு போவதைக் கண்டு ...அதிர்ச்சி அடைந்தார் . தேவகி ஓடிச்சென்று ....கார் கார தியாகுவை அழைத்து வந்து ..வைத்திய சாலை சென்ற போது அவர் ஏற்கனவே மாரடைப்பில் இறந்து விடடார் . தன்  கடைசிக் கால  ஆசைகளை  விருப்பங்களை  நிறைவேற்றிக் கொண்ட திருப்தியில் ராசம்மா ஆழ்ந்த நித்திரையில் ....

.முதியவர்களை அவர்கள் விருப்ப படி ...ஓய்வாக அமைதியான  சூழலில் வாழ விடுங்கள் . பணத்தைக் கட்டி முதியோர் இல்லங்களில் தள்ளி விட்டு  கடமை முடித்தேன்  என  வாழாதீ ர்கள் .மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்  ஆடு மாடு தோட்ட்ம்  வயல்  வெளி  என ...வாழ்ந்த வாழ்க்கை ஒரு நாலு  சுவர் கொண்ட கூட்டுக்குள் வாழ்வது வீட்டுச் சிறை போல  தனித்து விடப்பட்டது போல உணர்வார்கள்.  தனிமையம் ஏக்கமும் அவ்ர்களைக் கொல்லாமல்  கொள்ளும் . யார் வருவார்கள் தன்னைப் பார்க்க என்று மனம் எங்கும். முடிந்த வரை முதியோர் இல்லம் தவிர்த்து  எஞ்சிய காலத்தை வாழ வையுங்கள். 

 

தாய் /தந்தை மனசு தங்கம் 

நான் அறிந்த சொந்தம்

நன்றி சொல்ல போதாதையா 

 ஏழேழு ஜென்மம் 

 

 

 

 

 

  • Like 7
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான சிறுகதை அக்கா. மனதில் எம்மைப் பற்றிய யோசனை ஓடுவதை தடுக்க முடியவில்லை.

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான சிறுகதை. எனது கிராமத்து வீடும் என்னை வா வா என்று அழைத்தபடிதான் உள்ளது. ஆனாலும் நெருங்கிய உறவென்று சொல்ல யாருமற்ற ஏகாந்தமான என் கிராமத்தில் எப்படி ? அங்கு சென்ற வாழலாம் என்ற நப்பாசையில்தான் குட்டிச் சுவராக உருக்குலைந்து போயிருந்த வீட்டை மீண்டும் கட்டி முடித்து போய் பாா்த்தேன். ஒரு வாரத்திலேயே ஏக்கம்தான் மிஞ்சியது. ஒரே நாட்டில் பிள்ளைகள் இருந்தால் ஓடிவந்தாவது பாா்க்கலாம். இப்போ அதுவுமில்லை. நிராசையுடன் எம் எதிர்காலம் கிராமத்துக் கனவுகளுடன்தான் முடியப்போகிறது என்ற கசப்பான உண்மையை ஜீரணிக்க முயற்சி செய்கிறேன். பாராட்டுக்கள் நிலாமதி.

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மெஸோப்பத்தோமியா சுமேரியர் , கண்மணி அக்கா உங்கள் வரவுக்கும் , கருத்துக் பகிர்வுக்கும்  .மற்றும் விருப்பு வாக்கு இடடவர்களுக்கும் நன்றி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி நல்லதொரு எண்ணக்கருவைத் தொட்டு எழுதி இருக்கிறீர்கள்.வாசிக்கும் போது ஏதோ உண்மையான சம்பவம் மாதிரியே இருந்தது.
பாராட்டுக்கள்.

  • Like 1
Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா! உங்கள் "கிராமத்து வீடு"  என்னை அழவைத்து விட்டது.  வெளிநாடுகளிலும் நாலு சுவருக்குள்ளும் அடைபட்டு ஊர் நினைவோடு வாழும் பெற்றோர்கள் சிலபேரை பார்த்திருக்கிறேன்.கவலைதான்  நானும் இதுபற்றி ஒரு கவிதை எழுதி இருக்கிறேன்.

அவர்கள் வாழ்க வளமுடன்.

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து வீடு என்னையும் அங்கு கூட்டிப்போனது.அன்பு ,அழகு ,பாசம் இப்படியே ஞாபகங்கள் தொலைவதில்லை.அருமையான கவிதை அக்கா 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாக்ரடீஸ் நாடகம் முதல் காட்சி சாக்ரடீஸ்: உன்னையே நீ அறிவாய்!! உன்னையே நீ அறிவாய்!! கிரேக்கத்தின் கீர்த்தி புவனம் அறியாததல்ல அதற்காக இங்கே விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயலுவது புண்ணுக்கு புனுகு தடவு வேலையை போன்றது அதனால் தான் தோழர்களே சிந்திக்க கற்றுகொள்ளுங்கள் என்று சிரம் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன் அறிவு! அறிவு! அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அதை தேடி பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன் உன்னையே நீ அறிவாய்!! இந்த உபதேசத்தின் உண்மைகளை உணர்வதர்க்காகத்தான் என் உயிரினும் இனியவர்களே உங்களையெல்லாம் அழைக்கிறேன் ஏற்றமிகு ஏதன்சு நகர எழில்மிக்க வாலிபர்களே! நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமிழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன் ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்! வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால் தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மட்டும் போதாது தீரர்களே இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்து கொள்ளுங்கள் அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தின் அணையாத ஜோதி மெலிடஸ்: ஹஹ ஹஹ.. அறிவாயுதமாம் அனைத்துலகும் அடிபணியும் அஸ்திரமாம் குமுறும் எரிமலை கொந்தளிக்கும் கடல் இவைகளை விட பயங்கரமானவன் சாக்ரடீஸ் அவன் தரும் அறிவாயுதம் கிரேக்கத்திலே தயாரகுமானால் நாமெல்லாம் தலை தூக்கவே முடியாது அணிடஸ் என்ன சொல்கிறீர் அணிடஸ்: மெலிடஸ் நாம் கீறிய கோட்டை தாண்டாத இந்த கிரேக்க மக்களுக்கு அந்த கிழவன் அறிவுக்கண் வழங்குவதற்குள் அவனை நாம் அழித்துவிட வேண்டும் மெலிடஸ்: ஆமாம் அது தான் சரி சாக்ரடீஸ் நீ கைது செய்யப்படுகிறாய் ம்.. இரண்டாம் காட்சி மெலிடஸ்: சாக்ரடீஸ் அணிடஸ்: நாட்டிலே நடமாடக்குடாத ஒரு ஆத்மா ஜனநாயக அரசாங்கத்தை குறைகூறும் அந்த ஜந்து உடல் முழுதும் விஷம் கொண்டது கேட்டார் பிணிக்கும் சொற்களால் கேளாரும் வேட்பமொழி வார்த்தைகளால் கேடு விளையும் கருத்துக்களை அள்ளி வழங்கி அரசாங்கத்துக்கு விரோதமாக ஆண்டவனுக்கு விரோதமாக சட்டத்துக்கு விரோதமாக இளைஞர்களை தூண்டிவிடும் இழிகுண கிழவன் சாக்ரடீஸ்: ம்ம்ம்ம்.... நீதிபதி: என்ன சிரிப்பு!! என்ன காரணம்!! சாக்ரடீஸ்: ஒன்றுமில்லை தலைவா ஒன்றுமில்லை ஆத்திரத்திலே அணிடஸ் தன்னை மறந்து என்னை பார்த்து கிழவன் என்று கேலி செய்கிறான் ம்ம்ம்ம் கேலி செய்கிறான் ம்ம்ம் அதை நினைத்தேன் சிரித்தேன் கடல் நுரை போல் நரைத்துவிட்ட தலை எனக்கும் அணிடசுக்கும் இல்லையா சகோதரர்களே? என்ன அணிடஸ் உண்மை தானே? மெலிடஸ்: சாக்ரடீஸ் வழக்கும் விசாரணையும் உங்கள் இருவரின் தலையை பற்றியதல்ல அதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன் ம்ம்ம்ம் மிகவும் நன்றி மெலிடஸ் மிகவும் நன்றி ஆனால் ஒன்று எண்சான் உடம்புக்கு தலையே பிரதானம் போல் இந்த வழக்கிற்கும் தலை தான் பிரதானம் என் தலையிலே இருந்து சுடர்விட்டு கிளம்பும் அறிவு அதை அழிக்க கவிஞனாகிய உன் தலையிலே இருந்து புறப்படும் அர்த்தமற்ற கற்பனைகள் அரசியல்வாதி அணிடஸின் தலையிலே இருந்து பீறிட்டெழும் அதிகார ஆணவம் இந்த மூன்றுக்கும் இடையே நடக்கும் மும்முனை போராட்டம் அதன் விளைவு தான் மெலிடஸ் இந்த வழக்கு மெலிடஸ்: பார்த்தீர்களா!! சட்டத்தையும் சபையையும் அவமதிக்கிறான் இப்படித்தான் இளைஞர்களையெல்லாம் கெடுத்தான் சாக்ரடீஸ்: ஒரு கிழவன் எப்படியப்பா இளைஞர்களை கெடுக்க முடியும் நான் என்ன வாலிபருக்கு வலைவீசும் விலைமாதா பருவ விருதளிக்கும் பாவையா மெலிடஸ்: ம் மாதரிடமில்லாத மயக்குமொழி வாலிபருக்கு வலைவீசும் வனிதையரும் பெற்றிடாத வசீகர சொல்லலங்காரம் வார்த்தை ஜாலம் அடுக்கு தொடர் இப்படி பல மாயங்கள் கற்றவர் நீர் சாக்ரடீஸ்: மந்திரவாதி என்றுகூட சொல்வாய் அன்புள்ள இளைஞனே ஏதன்சு நகரிலே நான் ஒருவன் மட்டும் தான் இளைஞர்களை கெடுக்கிறேன் அப்படித்தானே மெலிடஸ்: ஆமாம் சாக்ரடீஸ்: நீ கெடுக்கவில்லை மெலிடஸ்: இல்லை சாக்ரடீஸ்: அணிடஸ் மெலிடஸ்: இல்லை சாக்ரடீஸ்: டித்திலைகன் மெலிடஸ்: இல்லை சாக்ரடீஸ்: இந்த நீதிபதி மெலிடஸ்: இல்லை சாக்ரடீஸ்: யாருமே இளைஞர்களை கெடுக்கவில்லை எல்லோருமே இளைஞர்களுக்கு நன்மையே செய்கிறார்கள் என்னை தவிரஅப்படித்தானே மெலிடஸ்: ஆமாம் ஆமாம் சாக்ரடீஸ்: ஹஹஹா அத்தனை பேரும் ஏன் ஏதன்சு நகரமே அவர்களை திருத்தும்போது நான் ஒருவன் எப்படியப்பா அவர்களுடைய பாதையை திருப்ப முடியும்? அணிடஸ்: ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் சாக்ரடீஸ்: ஏன் இப்படியும் சொல்லலாமே இருண்ட வீட்டிற்க்கு ஒரு விளக்கு என்ன மெலிடஸ் திகைக்கிறாய் சபையோர்களே! வாலிபர்கள் என்னை சுற்றி வானம்பாடிகள் போல் வட்டமிட காரணம் என்னுடைய வார்த்தை அலங்காரமல்ல வளம் குறையா கருத்துக்கள் தரம் குறையா கொள்கைகள் இந்த தரணிக்கு தேவையான தங்கம்நிகர் எண்ணங்கள் ம்ம்ம்ம்... அழகுமொழியால் அலங்கார அடுக்குகளால் அரும்பு உள்ளங்களை மயக்குகிறேன் என்று சொல்கிறார்களே அவர்களை நான் கேட்கிறேன்! அந்த மொழி எனக்குமட்டும் சொந்தமல்லவே அவர்கள் அதை பேசக்கூடாது என்று நான் தடை போட்டது கிடையாதே பேசிப்பார்க்கட்டுமே அவர்களும் ஆம் பேசித் தோற்றவர்கள் ம் பேசி தோற்றவர்கள் நீதிபதி: சாக்ரடீஸ் பேச்சை நிறுத்தும் விளக்கம் தேவையில்லை இந்த நீதிமன்றத்தின் அதிகப்படியான உறுப்பினர்களின் வாக்களிப்பின்படி நீர் விஷம் சாப்பிட்டு மரணதண்டனைக்கு ஆளாக வேண்டுமென்று தீர்ப்பளிக்கிறேன் மூன்றாம் காட்சி சாக்ரடீஸ்: பார்த்தாயா பயனற்ற தத்துவ விசாரணையில் காலத்தை கழிக்கிறேன் வீண் வாதம் புரிந்து தொல்லை படுகிறேன் என்றெல்லாம் கோபித்து கொண்டாயே இப்போது பார் உனது கணவன் அகிலம் புகழும் வீரனாக தேசம் புகழும் தியாகியாக மாறிவிட்டான் அன்புள்ள எக்ஸ்சேந்துபி நீ மிகவும் பாக்கியசாலி பணபலம் படைபலம் அத்தனை பலத்தையும் எதிர்த்து நின்று யாருக்குமே பணியாத பெருமையோடு கடைசியாக விழிகளை மூடப்போகும் இந்த கர்ம வீரனுக்கு நீ மனைவி ஹஹஹா... குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துகொள் அவர்கள் பெரியவர்களாக மாறியதும் நேர்மை தவறி நடப்பார்களேயானால் நான் உங்களை திருத்த முயன்றதுபோலவே நீங்களும் அவர்களை திருத்த முயலுங்கள் நேரமாகிறது காவலர்கள் கோபிப்பார்கள் நீ போய் வா கிரீடோ இவர்களை அனுப்பி வை கிரீடோ உனக்கு தெரியுமல்லவா இன்றோடு முப்பதுநாள் சிறைவாசம் முடிந்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விஷம் சாப்பிட்டு சாக வேண்டிய நாள் இதுதான் கிரீடோ: அருமை நண்பா  சாக்ரடீஸ்: அழாதே அதோ வந்துவிட்டது அமுதம் சிறைக்காவலா இதை என்ன செய்யவேண்டும் முறைகளை சொல் சிறைக்காவலன்: பெரியவரே விஷத்தை முழுவதும் குடிக்க வேண்டும் பிறகு இங்குமங்கும் நடந்துகொண்டே இருக்க வேண்டும் கால்கள் மறத்து போகும் வரையிலே அப்படியே நடக்க வேண்டும் பிறகு உட்காரலாம் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு ஜில்லிட்டு கொண்டே வரும் பிறகு படுத்துவிட்டால்  சாக்ரடீஸ்: ஆனந்தமான நித்திரை கனவுமங்கையாலும் கலைக்க முடியாத நித்திரை சிறைக்காவலா கொடு இப்படி கிரீடோ: நண்பா சிறிது நேரம் பொறுத்துக்கூட சாப்பிடலாம் சிறைச்சாலையிலே அதற்க்கு அனுமதி உண்டு சாக்ரடீஸ்: ம்ம்ம்... ஹ ஹ.. கிரீடோ கிரீடோ உனக்கு மிகமிக அற்ப ஆசை மிகமிக அற்ப ஆசை இந்த விஷத்தை நான் இரண்டு நாழிகை கழித்து சாப்பிடுவதாக வைத்து கொள் அதற்குள் என் இருதயம் வெடித்து நான் இறந்தது விட்டால் பிறகு கிரேக்க நாட்டு நீதிமன்றத்தின் தண்டனையை யார் நிறைவேற்றது? புதிய சாக்ரடீஸ்ஆ பிறந்து வரப்போகிறான் கூடாது கூடாது இப்போதே சாப்பிட்டு விடுகிறேன் கிரீடோ இந்த விஷம் அழிக்கப்போவது என்னையல்ல இந்த உடலைத்தான் கிரீடோ: ஏதன்சின் எழுச்சிமிக்க சிங்கமே எங்கள் தங்கமே கிரேக்க பெரியாரே உம்மையும் எம்மையும் இந்த விஷம் பிரிக்கபோகிறதா ஐயகோ நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறதே நண்பா எனக்கு கடைசியாக ஏதாவது சொல்லு சாக்ரடீஸ்: புதிதாக என்ன சொல்லப்போகிறேன் உன்னையே நீ எண்ணி பார்! எதையும் எதற்க்காக? ஏன்? எப்படி? என்று கேள் அப்படி கேட்டால்தான் இந்த சிலைவடிக்கும் இந்த சிற்பி சிந்த்தனை சிற்பியாக மாறினேன் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம் எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப்பார்பாய் அதைத்தான் உனக்கும் இந்த நாட்டுக்கும் நான் சொல்ல விரும்புவது விஷம் அழைக்கிறது என்னை இந்தக்கிழவன் கிரேக்க நாட்டு இளைஞர்களை கெடுத்ததாக யாராவது உண்மையாக உளமாக நம்பினால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும் அவர்கள் என்னை மன்னிக்கட்டும் வருகிறேன் வணக்கம்! ஏ ஜகமே! சிந்திக்க தவறாதே! உன்னையே நீ அறிவாய்! உன்னையே நீ அறிவாய்! வருகிறேன்     http://sudhakar-janardhanan.blogspot.com/2015/10/socrates-sivaji-ganesan-plan.html  
    • உயிரின் உயிரே…உயிரின் உயிரே நதியின் மடியில் காத்து கிடைகின்றேன் ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன் நகரும் நெருப்பாய் கொழுந்து வெட்டெறிந்தேன்… அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன் காலைபனியாக என்னை வாரிகொண்டாய் நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம் மாறிவிட… அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய் உயிரின் உயிரே…உயிரின் உயிரே நதியின் மடியில் காத்து கிடைகின்றேன் ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன் முழுதும் வேர்கின்றேன் முழுதும் வேர்கின்றேன் சுவாசமின்றி தவிக்கிறேனே உனது மூச்சில் பிழைக்கிறேனே இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே நினைவு எங்கோ நீந்தி செல்ல கனவு வந்து கண்ணை கிள்ள நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே காற்றில் எந்தன் கைகள் ரெண்டும் உன்னை அன்றி யாரை தேடும் விலகி போகாதே தொலைந்து போவேனே நான்…நான்…நான் உயிரின் உயிரே…உயிரின் உயிரே நதியின் மடியில் காத்து கிடைகின்றேன் ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன் இரவின் போர்வை என்னை சுழ்ந்து… மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து விடியலை தேடினேன் உன்னிடம் வா பெண்ணே பாதமெங்கும் சாவின் ரணங்கள் நரகமாகும் காதல் கணங்கள் ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தவணை முறையில் மரணம் நிகழும் அருகில் வாரயோ விரல்கள் தாரயோ உயிரின் உயிரே…உயிரின் உயிரே நதியின் மடியில் காத்து கிடைகின்றேன் ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன் நகரும் நெருப்பாய் கொழுந்து வெட்டெறிந்தேன்… அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன் காலைபனியாக என்னை வாரிகொண்டாய் நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம் மாறிவிட… அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய் உயிரின் உயிரே…உயிரின் உயிரே நதியின் மடியில் காத்து கிடைகின்றேன் ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன் முழுதும் வேர்கின்றேன் முழுதும் வேர்கின்றேன்  
    • பெண் : { நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா } (2) ஆண் : விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது பெண் : பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது ஆண் : ஹே நீயே சொல் என் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் என் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா பெண் : போர்வைக்குள் பூ பூக்க வைக்க வா வா வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா வா ஆண் : மஞ்சத்தை பரிமாற வேண்டும் வா வா மரியாதை தெரியாத முத்தம் தா தா பெண் : கட்டில் மேல என்ன பண்பாடு காதலால் காதல் வேர்கள் தொடு தொடு ஆண் : நூறு முறை தொட்டு வைக்கிறேன் நுனிநாக்கில் பொட்டு வைக்கிறேன் உயிர் மட்டும் விட்டு வைக்கிறேன் கண் தூங்காமல் விடிய வைக்கிறேன் பெண் : அச்சத்தை விலக வைக்கிறாய் வெட்கத்தை கரைய வைக்கிறாய் ஆடைகளை நெகிழ வைக்கிறாய் இனிமேல் எனை என் செய்குவாய் ஆண் : { நீயே சொல் என் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் என் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா } (2) ஆண் : உடலைப் போல் அழகான பண்டம் இல்லை உதவாத பாகங்கள் இங்கு இல்லை பெண் : வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை ஆண் : மூங்கினில் பரவும் புயல் போல உனதுடல் மீது உதடும் பரவுது பெண் : இப்படியே உயிரும் இனிக்குமா இவ்விதமே சொர்க்கம் கிடைக்குமா இக்கணமே செத்து விடட்டுமா உன் ஜீவன் அவள் வலி பொறுக்குமா ஆண் : இது போலே சமயம் வாய்க்குமா என் மடியில் இமயம் சரியுமா என் உயிரில் மலைகள் உருகுமா பூமி கடந்தெங்கும் போவோமா பெண் : { ஹே நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா } (2) ஆண் : விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது பெண் : பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது பெண் : ரத்தர என் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் என் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா  
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.