Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Sanchu Suga said:

தமிழ் சிறி 

இது எனது கணவனாரால்  எடுக்கப்பட்ட காணொளி. அவருக்கு குறும்படங்கள் தயாரிப்பதில் பலகாலமாக அனுபவம் உண்டு. 

விவசாய குடும்பத்தில்  பிறந்ததாலோ என்னவோ இயல்பாகவே பாரங்களை தூக்க பழகி கொண்டேன்.இதைவிட பாரமான வெங்காய மூட்டையை கூட தூக்கி இருக்கிறேன். அதனால் வாழைக்குலையின்  பாரம் பெரிதாக தெரியவில்லை.

போன மாதம் வீசிய கடும் காற்றில் முறிக்கப்பட்ட  பிஞ்சு வாழைக்குலைகளெல்லாம் இப்போது சந்தைக்கு வந்திருக்கும். இப்போது யாழ்ப்பாணத்தி இரசாயனக்கலவை முறையிலும் பழுக்க வைக்கிறார்கள். 

சஞ்சு சுகா.... 
நீங்கள், யாழ். களத்தில்   இணைத்த சமையல் குறிப்பு... 
முதல் நாளிலேயே... 550 வாசகர்களுக்கு மேல் பார்வையிடப் பட்டு,
14 விருப்பப் புள்ளிகளையும்... பெற்றுள்ளமை  ஒரு சாதனை. 👍

அதற்கு... உங்கள் கணவர் எடுத்த, இயற்கையுடன் ஒன்றிய...  
அழகிய  காணொளிப் பதிவும்... முக்கிய காரணம் என நினைக்கின்றேன்.
உங்கள் இருவருக்கும், சுட்டிக் குழந்தைகளுக்கும் பாராட்டுக்கள். :)

Link to post
Share on other sites
 • Replies 146
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sanchu Suga said:

என்னோட புகுந்தவீட்டு மண்தான் செம்மண்கலர். போன புதுசில இப்பிடி ஒரு சிவப்பு மண்ணா எண்டு ஆச்சரியமாத்தான்  இருந்தது. ஆனால் நல்ல வளமான மண். என்ன நட்டாலும் நல்ல செழிப்பா வளரும்.

தோட்டம் செய்வதற்கு செம்பாட்டுமண் முதன்மையானது.எந்தப்பயிரும் ஒரு பிரச்சனையுமில்லாமல் வளரும்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

சகல ஆதரவும் கொடுத்திருக்கு.மேலும் உங்கள் உழைப்பைக் காட்டுங்கள்.

எமது காலத்தில் தோட்டத்துக்குள் செருப்புடன் போனால் மீண்டும் செருப்பு போட காலே இருக்காது.இப்போ காலம் மாறிப் போச்சு.
தங்கச்சி பிள்ளைகள் செருப்போடு உலாவுகிறார்கள்.

உங்கள் காணொளியை ஆங்கிலத்தில் பதிந்துள்ளீர்கள்.
வெளிநாட்டிலிருந்து போயிருக்கிறீர்கள் போல.முதலில் அதற்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் சொல்லுகிற மாதிரி  30 வருசத்துக்கு முன் இருந்திருக்கலாம்.இப்ப இளம் பெடியள் அடிடாஸ் தொப்பியும் நைக்கி சூவும் போட்டு கொண்டு தான் உழவுக்கு வருகிறார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Sanchu Suga said:

நீங்கள் சொல்லுகிற மாதிரி  30 வருசத்துக்கு முன் இருந்திருக்கலாம்.இப்ப இளம் பெடியள் அடிடாஸ் தொப்பியும் நைக்கி சூவும் போட்டு கொண்டு தான் உழவுக்கு வருகிறார்கள்.

அதுதானே. பையங்கள் எல்லாம் “கெத்து”😁

நானும் வாராவாரம் வாழைப்பழ பணியாரம் சாப்பிடுவதுண்டு. சாப்பிடாமல் கனிந்து இருக்கும் பழங்களை எறியாமல் செய்வது. ஆனால் சீனி போடுவதில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, கிருபன் said:

அதுதானே. பையங்கள் எல்லாம் “கெத்து”😁

நானும் வாராவாரம் வாழைப்பழ பணியாரம் சாப்பிடுவதுண்டு. சாப்பிடாமல் கனிந்து இருக்கும் பழங்களை எறியாமல் செய்வது. ஆனால் சீனி போடுவதில்லை.

வாழைப்பழத்தில் இருக்கும் இனிப்பே காணும், எனக்கும் இனிப்பு பிடிக்காது; 

Very ripe and Overripe  நிலையில் உள்ள பழுங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல எந்த முறையில் என்றாலும்

Ripe vs Unripe Fruit Nutrition: Do Nutrients Level Change As Fruit ...

When to eat a banana : coolguides

Edited by உடையார்
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, உடையார் said:

Very ripe and Overripe  நிலையில் உள்ள பழுங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல எந்த முறையில் என்றாலும்

அதற்காக வீணாக்கமுடியுமா?

ஊரில் என்றால் ஆட்டுக்குக் கொடுக்கலாம். இங்கே நாமதான் ஆடு😜

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

அதுதானே. பையங்கள் எல்லாம் “கெத்து”😁

நானும் வாராவாரம் வாழைப்பழ பணியாரம் சாப்பிடுவதுண்டு. சாப்பிடாமல் கனிந்து இருக்கும் பழங்களை எறியாமல் செய்வது. ஆனால் சீனி போடுவதில்லை.

சீனி போடாமல் செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.  இந்த வாழைப்பழங்கள் அந்த அளவுக்கு இனிப்பு சுவையாகவும் இருக்கவில்லை. அதுதான். 

2 hours ago, தமிழ் சிறி said:

சஞ்சு சுகா.... 
நீங்கள், யாழ். களத்தில்   இணைத்த சமையல் குறிப்பு... 
முதல் நாளிலேயே... 550 வாசகர்களுக்கு மேல் பார்வையிடப் பட்டு,
14 விருப்பப் புள்ளிகளையும்... பெற்றுள்ளமை  ஒரு சாதனை. 👍

அதற்கு... உங்கள் கணவர் எடுத்த, இயற்கையுடன் ஒன்றிய...  
அழகிய  காணொளிப் பதிவும்... முக்கிய காரணம் என நினைக்கின்றேன்.
உங்கள் இருவருக்கும், சுட்டிக் குழந்தைகளுக்கும் பாராட்டுக்கள். :)

நானும் கணவனும் யாழ்தளத்தின்  நீண்டகால வாசகர்கள். என்னுடைய முதல்பதிவுக்கு கிடைத்த வரவேற்பு என்னை திக்கு  முக்காட வைத்துவிட்டது. அடுத்த காணொளியை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பும் இணைந்து விட்டது.

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

நானும் யோசித்தனான், Sanchu Suga துக்கிட்டு ஓடிப்போய் வெட்டிதாக்கும் போது😁

வாய்ப்பில்லை . எங்கட ஊரில இருந்து நீர்வேலி நிறைய தூரம் :)

5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள் சகோதரி..💐

maxresdefault.jpg பழம் பழுக்கல என்டாலும்  புகை போட்டு பழுக்க வைப்பம் - பகிடி தலைவர்.! 

டிஸ்கி

28155477455_6df1696457_o.jpg

பின் விளைவுகள் வாறாத வரைக்கும் மகிழ்ச்சி.☺️..😊

வைக்கோல் புகைதானே? ஏன்ன பெரிய பின் விளைவு வந்துவிடப்போகிறது? :)

On 13/6/2020 at 15:59, Paanch said:

பாரம்பரிய உணவுகள் மட்டுமல்ல, அந்த உணவுகளின் பெயர்களையே இன்றைய தலைமுறை மறந்துவிட்ட நிலையில், மீண்டும் அவைகளை ஞாபகப்படுத்தி, வருங்காலச் சந்ததிகள் கொடிய நோய்கள் பீடிக்காமல் ஆரோக்கியமான உணவுகளை உண்டு வாழ்வதற்கு வழிகாட்டும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. தொடருங்கள்.  

உங்கள் பராட்டுக்களுக்கு மிக்க நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Sanchu Suga said:

நானும் கணவனும் யாழ்தளத்தின்  நீண்டகால வாசகர்கள். என்னுடைய முதல்பதிவுக்கு கிடைத்த வரவேற்பு என்னை திக்கு  முக்காட வைத்துவிட்டது. அடுத்த காணொளியை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பும் இணைந்து விட்டது.

அதுதன் யாழ்கள உறவுகள், என்னதான் கருத்துக்களால் மோதினாலும் ஒரே குடும்பம், ஒரே எண்ணம் & நோக்கு எம் மக்களின் விடுதலை

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நீர்வேலியான் said:

இவரது வாழை தோட்டதையும், செம்பாட்டு மண்ணையும் பார்க்க ஊர் ஞாபகம் வருகிறது, இவர் எந்த ஊர் என்று தெரியவில்லை 

இது "வளலாய்"

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதனைப் படமாக்கிப் பாடமாக்குவது நல்ல முயற்சி சகோதரி, வாழ்த்துக்கள் !

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்வாசனை பரப்பும் சகோதரியை வாழ்த்துவதோடு ஒரு இயல்பான ஒளிப்பதிவை செய்திருக்கும் துணைவருக்கும் வாழ்த்து. அழகான திருக்கொன்றைமரப்பூக்களோடு காட்சி விரிந்து செல்வதும் ஒரு அழகு. எங்கள் பெண்கள் ஒரு காலத்திற் கடின உழைப்பாளிகள். அருவிவெட்டும்போது  ஒரு குனி
குனிந்தால் ஒரு குறிப்பட தூரம்வரை நிமிராமல் வெட்டுவார்கள்.  ஆனால்  இன்று  குனிந்தால் நிமிரவோ சப்பாணிகட்டி இருக்கவோ முடியாத நிலை. அவளவும் இலகு வாழ்வு தந்த இலவசம்.  இயல்பான சமையற் காட்சி. 

நன்று.

நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நானும் வாராவாரம் வாழைப்பழ பணியாரம் சாப்பிடுவதுண்டு. சாப்பிடாமல் கனிந்து இருக்கும் பழங்களை எறியாமல் செய்வது. ஆனால் சீனி போடுவதில்லை

கிருபன் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் கொண்டவர் 😃

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:
5 hours ago, கிருபன் said:

நானும் வாராவாரம் வாழைப்பழ பணியாரம் சாப்பிடுவதுண்டு. சாப்பிடாமல் கனிந்து இருக்கும் பழங்களை எறியாமல் செய்வது. ஆனால் சீனி போடுவதில்லை

கிருபன் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் கொண்டவர் 😃

அப்படி சொல்ல முடியாது.
வாழைப்பழம்
கோதுமை மா
எண்ணெய் 
இதில் என்ன தான் உடம்புக்கு நல்லது.

8 hours ago, நீர்வேலியான் said:

இவரது வாழை தோட்டதையும், செம்பாட்டு மண்ணையும் பார்க்க ஊர் ஞாபகம் வருகிறது, இவர் எந்த ஊர் என்று தெரியவில்லை 

வாழைத்தோட்டம் என்றால் முதலில் வாற ஊர் நீர்வேலி தான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சஞ்சு சகோதரி 
உங்கள் இரண்டு காணொளிகளும் பார்த்தாயிற்று. 
இயல்பாக, அழகாக உங்கள் சூழலையும் உங்கள் நேர்த்தியான தோட்ட வேலைகளையும் படமாக்கிய உங்கள் கணவருக்கு வாழ்த்துக்கள். செம்பாட்டு மண் , சருகுகள், கூவும் குயில், வக்கு தொட்டி தண்ணீர் இப்படி நாங்கள் இங்கே மிஸ் பண்ணும் விடயங்கள் நிறைய உங்கள் காணொளியில் இருக்கின்றன. 
"மிஸ் பண்ணும்" இதற்கான சரியான தமிழ் சொல் தெரியவில்லை. :)
அதையும் தவிர நீங்கள் இங்கே எழுதுகின்ற பதில்கள் உங்கள் தமிழ் எழுத்து லாவகத்தையும் எடுத்துக்காட்டுகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.  🙏
நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இனி எது என்றாலும் இறக்குமதி செய்து சாப்பிட்டாலும், பாவித்தாலும் எங்களுக்கு தீங்குதான், தனிமனித (யாழ்ப்பாண மக்களுக்கு இது அதிகம்) சுயனலத்தை தமிழீழத்தின் சுயனலமாக மாத்துவோம்

உந்த பனியாரத்துக்கு பனங்கட்டியையும் அரிசிமாவையும் பாவிக்கலாம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

கிருபன் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் கொண்டவர் 😃

உண்மைதான். சிலரைப் போல எனக்கு சாரைக்குடல் இல்லை. ஒரு இரண்டு நாள் கண்டபடி சாப்பிட்டால் உடனே மாற்றம் தெரிந்துவிடும்😃. அதனால் சீனி, red meat (முக்கியமாக ஆட்டிறைச்சி), pizza , white bread எல்லாம் சாப்பிடுவதில்லை. ஆனால் இறுக்கமான கட்டுப்பாடும் இல்லை. இடையிடையே, எங்காவது பார்டிகளுக்குப் போனால், இதையெல்லாம் கடைப்பிடிப்பது கிடையாது.

27 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்படி சொல்ல முடியாது.
வாழைப்பழம்
கோதுமை மா
எண்ணெய் 
இதில் என்ன தான் உடம்புக்கு நல்லது.

எல்லாம் அளவோடுதான். எல்லா வாரமும் வாழைப்பழ பணியாரம் செய்தால்தானே பிரச்சினை!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

அதுதன் யாழ்கள உறவுகள், என்னதான் கருத்துக்களால் மோதினாலும் ஒரே குடும்பம், ஒரே எண்ணம் & நோக்கு எம் மக்களின் விடுதலை

அந்த ஒரு நம்பிக்கையில்தான் இந்த படைப்புக்களை தொடங்கியிருக்கிறோம். 

9 hours ago, சுப.சோமசுந்தரம் said:

இதனைப் படமாக்கிப் பாடமாக்குவது நல்ல முயற்சி சகோதரி, வாழ்த்துக்கள் !

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nochchi said:

மண்வாசனை பரப்பும் சகோதரியை வாழ்த்துவதோடு ஒரு இயல்பான ஒளிப்பதிவை செய்திருக்கும் துணைவருக்கும் வாழ்த்து. அழகான திருக்கொன்றைமரப்பூக்களோடு காட்சி விரிந்து செல்வதும் ஒரு அழகு. எங்கள் பெண்கள் ஒரு காலத்திற் கடின உழைப்பாளிகள். அருவிவெட்டும்போது  ஒரு குனி
குனிந்தால் ஒரு குறிப்பட தூரம்வரை நிமிராமல் வெட்டுவார்கள்.  ஆனால்  இன்று  குனிந்தால் நிமிரவோ சப்பாணிகட்டி இருக்கவோ முடியாத நிலை. அவளவும் இலகு வாழ்வு தந்த இலவசம்.  இயல்பான சமையற் காட்சி. 

நன்று.

நன்றி.

இப்போதும் தோட்டவேலை செய்யும் நிறைய பெண்களை பார்த்திருக்கிறேன். நவீனமயமாக்கலை சுவைத்துக்கொண்டிருக்கும் நாங்கள்தான் நடந்தா கால் வலி, இருந்தா முதுகுவலியென  வருத்தங்களையும் நாகரீகத்தின்  அடையாளங்களாக்கி  கொண்டிருக்கிறோம். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Sanchu Suga said:

சீனி போடாமல் செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.  இந்த வாழைப்பழங்கள் அந்த அளவுக்கு இனிப்பு சுவையாகவும் இருக்கவில்லை. அதுதான். 

நானும் கணவனும் யாழ்தளத்தின்  நீண்டகால வாசகர்கள். என்னுடைய முதல்பதிவுக்கு கிடைத்த வரவேற்பு என்னை திக்கு  முக்காட வைத்துவிட்டது. அடுத்த காணொளியை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பும் இணைந்து விட்டது.

உங்கடை எழுத்துக்களை பாக்கேக்கை நீங்கள் யாழ்தள வாசகர் மாதிரி தெரியேல்லையே....!!!
பெரிய கருத்துக்கள பிலாப்பழங்கள் மாதிரியெல்லே தெரியுது.:grin:
எங்கை உங்கடை அவரை ஒருக்கால் இந்த திரியிலை எழுதச்சொல்லுங்கோ பாப்பம்...:cool:

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

அப்படி சொல்ல முடியாது.
வாழைப்பழம்
கோதுமை மா
எண்ணெய் 
இதில் என்ன தான் உடம்புக்கு நல்லது.

வாழைத்தோட்டம் என்றால் முதலில் வாற ஊர் நீர்வேலி தான்.

எங்கட ஊர் வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்ட ஒரு அத்திப்பட்டி மாதிரிதான்.யாழ்ப்பாணத்தில் இருக்கும் அரைவாசிப்பேருக்கு எங்கட ஊர்ட பெயரே தெரியாது.  எனது காணொளிகள் இரண்டும் படமாக்கப்பட்ட இடம் வளலாய்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, குமாரசாமி said:

உங்கடை எழுத்துக்களை பாக்கேக்கை நீங்கள் யாழ்தள வாசகர் மாதிரி தெரியேல்லையே....!!!
பெரிய கருத்துக்கள பிலாப்பழங்கள் மாதிரியெல்லே தெரியுது.:grin:
எங்கை உங்கடை அவரை ஒருக்கால் இந்த திரியிலை எழுதச்சொல்லுங்கோ பாப்பம்...:cool:

நாங்கள் கருத்துக்கள வாசகர்களே தவிர இதுவரை எழுதியதில்லை.

Edited by Sanchu Suga
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Sanchu Suga said:

எங்கட ஊர் வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்ட ஒரு அத்திப்பட்டி மாதிரிதான்.யாழ்ப்பாணத்தில் இருக்கும் அரைவாசிப்பேருக்கு எங்கட ஊர்ட பெயரே தெரியாது.  எனது காணொளிகள் இரண்டும் படமாக்கப்பட்ட இடம் வளலாய்.

சகோதரி 
வளலாய் பிரதேசம் எப்போது விடுவிக்கப்பட்டது?
இது செம்மண் பூமியா?
கடற்கரைப் பிரதேசங்கள் அனேகமானவை மணலாக இருக்க கண்டுள்ளேன்.
இப்போ நிலமை எப்படி உள்ளது.
ஏற்கனவே ராணுவம் வாழ்ந்த இடமென்றபடியால் அவர்களே தோட்டங்களை நன்றாக பராமரித்திருப்பார்கள்.

1 minute ago, Sanchu Suga said:

நாங்கள் கருத்துக்கள வாசகர்களே தவிர இதுவரை எழுதியதில்லை 😀

அம்மா சஞ்சு
நீங்க என்ன தான் சொன்னாலும் எம்மால் நம்ப முடியாமல் உள்ளது.
எவ்வளவோ காலமாக எழுதியும் பிழை விடாமல் எழுத முடியாமல் இருக்கிறது.
இதுவரை நீங்கள் எழுதியவற்றில் பிழையே கண்டு பிடிக்க முடியவில்லை.
கோட் பண்ணி எழுதுவதைப் பார்த்தாலே முதிர்ச்சி தெரிகிறது.
வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

வணக்கம் சஞ்சு சகோதரி 
உங்கள் இரண்டு காணொளிகளும் பார்த்தாயிற்று. 
இயல்பாக, அழகாக உங்கள் சூழலையும் உங்கள் நேர்த்தியான தோட்ட வேலைகளையும் படமாக்கிய உங்கள் கணவருக்கு வாழ்த்துக்கள். செம்பாட்டு மண் , சருகுகள், கூவும் குயில், வக்கு தொட்டி தண்ணீர் இப்படி நாங்கள் இங்கே மிஸ் பண்ணும் விடயங்கள் நிறைய உங்கள் காணொளியில் இருக்கின்றன. 
"மிஸ் பண்ணும்" இதற்கான சரியான தமிழ் சொல் தெரியவில்லை. :)
அதையும் தவிர நீங்கள் இங்கே எழுதுகின்ற பதில்கள் உங்கள் தமிழ் எழுத்து லாவகத்தையும் எடுத்துக்காட்டுகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.  🙏
நன்றி.

முடியுமானவரை இயற்கையோடு  இணைந்து படமாக்க இருக்கிறோம். உங்கள் கருத்துக்கு நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

சகோதரி 
வளலாய் பிரதேசம் எப்போது விடுவிக்கப்பட்டது?
இது செம்மண் பூமியா?
கடற்கரைப் பிரதேசங்கள் அனேகமானவை மணலாக இருக்க கண்டுள்ளேன்.
இப்போ நிலமை எப்படி உள்ளது.
ஏற்கனவே ராணுவம் வாழ்ந்த இடமென்றபடியால் அவர்களே தோட்டங்களை நன்றாக பராமரித்திருப்பார்கள்.

அம்மா சஞ்சு
நீங்க என்ன தான் சொன்னாலும் எம்மால் நம்ப முடியாமல் உள்ளது.
எவ்வளவோ காலமாக எழுதியும் பிழை விடாமல் எழுத முடியாமல் இருக்கிறது.
இதுவரை நீங்கள் எழுதியவற்றில் பிழையே கண்டு பிடிக்க முடியவில்லை.
கோட் பண்ணி எழுதுவதைப் பார்த்தாலே முதிர்ச்சி தெரிகிறது.
வாழ்த்துக்கள்.

2015 ஆம் ஆண்டுதான் மக்களிடம் காணிகள் கையளிக்கப்பட்டது. வளலாயில் கடற்கரை பூமியும், செம்மண் விவசாய பூமியும் இருக்கு. பல ஆண்டுகளாக இராணுவத்தின் பிடியில் இருந்ததால் கையளிக்கும்போது  ஏறத்தாள காடுகள் போல இருந்ததாம்.

நான் பதில்களை பதிவிட முதல் எழுத்துப்பிழைகளை சரிபார்ப்பதுண்டு. அதனால்தான் பிழைகள் மிகக்குறைவாக இருக்கிறது. சிறுவயதில் தமிழில் ஆர்வமான பெண்தான். மென்பொறியியல் துறைக்கு போனதால் தமிழை உச்சரிக்கவோ, எழுதவோ வாய்ப்பே கிடைக்கவில்லை. முகப்புத்தக கருத்துரைகளில் தமிழ் வளர்த்த சராசரிப்பெண்தான். 

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.