Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

யாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Knowthyself said:

இனி எது என்றாலும் இறக்குமதி செய்து சாப்பிட்டாலும், பாவித்தாலும் எங்களுக்கு தீங்குதான், தனிமனித (யாழ்ப்பாண மக்களுக்கு இது அதிகம்) சுயனலத்தை தமிழீழத்தின் சுயனலமாக மாத்துவோம்

உந்த பனியாரத்துக்கு பனங்கட்டியையும் அரிசிமாவையும் பாவிக்கலாம்

அப்படி செய்தால் சட்டி அப்பம் எண்டு சொல்வார்கள்.மீதமுள்ள அப்ப மாவுக்கு பனங்கட்டி சேர்த்து நல்லெண்ணெயை  சட்டியில் தடவி சுட்டு எடுப்பார்கள். தடிமனான அப்பம் போல இதுக்கும் அது. அதுதான் தமிழரின் பான்கேக். :)

 • Haha 1
Link to post
Share on other sites
 • Replies 146
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

https://youtu.be/MDgkcm6YtUw

உடையார் உங்களுக்கு இப்பதான் உண்மை விசயம் விளங்கிச்சோ!!!!!!! சிறித்தம்பி எனக்கெல்லாம் எப்பவோ விளங்கீட்டுது.😂 ஐயா ஒவ்வொரு மச்ச வீடியோக்களை வெட்டி ஒட்டேக்கை அவர் விடுற பெருமூச்சு எங்கடை காதுக்கு கேக்

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sanchu Suga said:

அப்படி செய்தால் சட்டி அப்பம் எண்டு சொல்வார்கள்.மீதமுள்ள அப்ப மாவுக்கு பனங்கட்டி சேர்த்து நல்லெண்ணெயை  சட்டியில் தடவி சுட்டு எடுப்பார்கள். தடிமனான அப்பம் போல இதுக்கும் அது. அதுதான் தமிழரின் பான்கேக். :)

உங்கள் வீடியோக்களின் நோக்கத்தை விளங்க எழுதப்பட்ட கருத்து, விளங்கிவிட்டது, அப்ப தலையங்கத்தை 75ம் ஆண்டுக்கு பின்னர் வந்த தமிழரின் பாரம்பரியமென்று மாத்தலாம்.

இல்லையென்றால் யாழ் அரியனுடைய இந்த கருத்துடன், 'தவறான ஒரு முன்னுதாரணம் தான்.' உடன்பட வேண்டியிருக்கு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Knowthyself said:

உங்கள் வீடியோக்களின் நோக்கத்தை விளங்க எழுதப்பட்ட கருத்து, விளங்கிவிட்டது, அப்ப தலையங்கத்தை 75ம் ஆண்டுக்கு பின்னர் வந்த தமிழரின் பாரம்பரியமென்று மாத்தலாம்.

இல்லையென்றால் யாழ் அரியனுடைய இந்த கருத்துடன், 'தவறான ஒரு முன்னுதாரணம் தான்.' உடன்பட வேண்டியிருக்கு

அரிசிமா தமிழரின் பாரம்பரிய உணவு என்று சங்ககால இலக்கியங்களின் கூறப்பட்டது எனக்கு தெரியாம போச்சே😳 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Sanchu Suga said:

இது "வளலாய்"

வளலாய் உம்  செம்மண் பூமிதான், சிறப்பாக உள்ளது தொடர்ந்து உங்கள் வீடியோகளை போடுங்கள்.  

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Sanchu Suga said:

இது "வளலாய்"

10 hours ago, Sanchu Suga said:

எங்கட ஊர் வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்ட ஒரு அத்திப்பட்டி மாதிரிதான்.யாழ்ப்பாணத்தில் இருக்கும் அரைவாசிப்பேருக்கு எங்கட ஊர்ட பெயரே தெரியாது.  எனது காணொளிகள் இரண்டும் படமாக்கப்பட்ட இடம் வளலாய்.

ஓ மை காட் .......வளலாய் எனக்கு மிகவும் பரிட்சயமான இடம். வளலாய் பரியாரியார் எனக்கு மிகவும் பழக்கமானவர்.தமிழ் வாத்தியார் மாதிரி நஷனல் சட்டை அணிவார்.அவரது பாக்கட்டில் எப்போதும் எதாவது சூரணங்கள் மருந்துகள் இருக்கும்.அவரது மருமகன் எனது இனிய நண்பர்.isuzu லொறிகள் வைத்திருந்தவர்.அநேகமாக அங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் உறவினர்களாகத்தான் இருக்கும்.அந்த ஊர் செம்மண் கரும் செம்மண் போல கலந்து (டென்மார்க் மண் சிறிது கலந்து போல் )இருக்கும்.......தெரிந்தது சந்தோசம் சகோதரி.......!  😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sanchu Suga said:

அரிசிமா தமிழரின் பாரம்பரிய உணவு என்று சங்ககால இலக்கியங்களின் கூறப்பட்டது எனக்கு தெரியாம போச்சே😳 

சுயநலத்திலும் ஒரு பொதுநலம் இருக்கவேண்டும், நாலுபேருக்கு நல்லது நடக்கவேண்டும், இயற்கை தந்த கொடை வடக்கு கிழக்கு ஏன் இலங்கை உட்பட உணவுக்கு யாரிடமும் கையேந்ததேவையில்லை

நீங்க என்னடா என்றால் சங்ககாலம் சிலப்பதிகாரம் என்று சும்மா சும்மா முளைச்ச இலக்கியவாதி ஊடகவியளார்கள் மாதிரி கதைக்கிறீங்கள்.

அப்ப சிறுதாணியங்களில் செய்யுங்கோ. இப்பவே நாங்க யாரிடம் சிக்கிபோயிருக்கிறோமோ அவங்கள் இப்ப பாடம் எடுக்கதொடங்கிவிட்டாங்கள், தேங்காய்யெண்ணை, வரகு, குரக்கன், கீன்வா, அரிசி நல்லதென்று, இப்பயிஞ்ச பிரிட்டிஸ் கயானாவின் பிறவுன் சுகர் ஓடுது இனி பனங்கட்டி வரும், வாழையோடசேர்த்து நாலு பனைகளையும் நட்டுவையுங்கோ!

பொதுவெளியில் வந்தால், காலுக்கு போடுறது, செய்யிறது, குழைக்கிறது எல்லாத்தையும் கதைப்பமெல்ல, எல்லாம் நல்லதுக்குத்தான், நோக்கம் பிழையாகயிருந்தால் வெற்றி குறிகியகாலத்துக்குத்தான்.

(இந்த கொறுனாவுக்கு பிறகும்) மொத்தத்தில நாங்கள் ஏழேழுஜென்மத்துக்கும் வெளிநாட்டுகார்ர்களில் தங்கி வாழ்வதென்று முடிவுபண்ணீட்டோம், போடு நைக்கி சூஸ் ஓடு பிஎம்டவுள்யு ஒளடி காசாபணமா நாங்க உங்களுக்கு லைக்கும் சப்ஸ்கிறைப்பும் பண்ணிறம்.

மாப்பிளை உனக்கெவளவு 2.50, மாப்பிளை உனக்கெவளவு 2.50, மாப்பிளை உனக்கெவளவு 2.50, மாப்பிளை உனக்கெவளவு 2.50 .. ஆக மொத்ததில

Cheers

Edited by Knowthyself
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Knowthyself said:

என்னுடைய காணோளிகளுக்கு நேர்,எதிர்மறை கருத்துக்கள் வருமென்பது தெரியும். 

என்னுடைய நோக்கம் முடிந்தவரை நாம் உண்ணும் உணவுகளை அவற்றுக்கே உரிய தனித்துவத்துடன் வழங்குவது. நான் விசாரித்தவரை வாய்ப்பன் கூப்பன் மாவில்தான் செய்கிறார்கள். நான் அரிசிமாவில் வாய்ப்பன்  சுட்டிருந்தால், வாய்ப்பன் அரிசி மாவிலா சுடுவது? என்ற கேள்வி எழும்பவும் வாய்ப்புண்டு. 

என்னால் இயலுமானவரை பாரம்பரியத்தை வெளிப்படுத்துவேன். ஆரம்பகட்டத்தில் எல்லாவற்றையும் மிக நேர்த்தியாக உருவாக்குவது யாராலும் இயலாது. உங்கள் கருத்தை மனதில் வைத்துக்கொள்கிறேன். 

11 hours ago, suvy said:

ஓ மை காட் .......வளலாய் எனக்கு மிகவும் பரிட்சயமான இடம். வளலாய் பரியாரியார் எனக்கு மிகவும் பழக்கமானவர்.தமிழ் வாத்தியார் மாதிரி நஷனல் சட்டை அணிவார்.அவரது பாக்கட்டில் எப்போதும் எதாவது சூரணங்கள் மருந்துகள் இருக்கும்.அவரது மருமகன் எனது இனிய நண்பர்.isuzu லொறிகள் வைத்திருந்தவர்.அநேகமாக அங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் உறவினர்களாகத்தான் இருக்கும்.அந்த ஊர் செம்மண் கரும் செம்மண் போல கலந்து (டென்மார்க் மண் சிறிது கலந்து போல் )இருக்கும்.......தெரிந்தது சந்தோசம் சகோதரி.......!  😁

இங்கு பிள்ளையார் கோவிலை சுற்றியுள்ளவர்கள் பெரும்பாலும் உறவுக்காரர்கள்தான். என்னுடைய மாமனாருக்குத்தான் இந்த ஊர் ஆட்களை நன்றாக தெரியும்.  அவரிடம் விசாரித்துபார்க்கிறேன். 
 நன்றி 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Knowthyself said:

சுயநலத்திலும் ஒரு பொதுநலம் இருக்கவேண்டும், நாலுபேருக்கு நல்லது நடக்கவேண்டும், இயற்கை தந்த கொடை வடக்கு கிழக்கு ஏன் இலங்கை உட்பட உணவுக்கு யாரிடமும் கையேந்ததேவையில்லை

நீங்க என்னடா என்றால் சங்ககாலம் சிலப்பதிகாரம் என்று சும்மா சும்மா முளைச்ச இலக்கியவாதி ஊடகவியளார்கள் மாதிரி கதைக்கிறீங்கள்.

அப்ப சிறுதாணியங்களில் செய்யுங்கோ. இப்பவே நாங்க யாரிடம் சிக்கிபோயிருக்கிறோமோ அவங்கள் இப்ப பாடம் எடுக்கதொடங்கிவிட்டாங்கள், தேங்காய்யெண்ணை, வரகு, குரக்கன், கீன்வா, அரிசி நல்லதென்று, இப்பயிஞ்ச பிரிட்டிஸ் கயானாவின் பிறவுன் சுகர் ஓடுது இனி பனங்கட்டி வரும், வாழையோடசேர்த்து நாலு பனைகளையும் நட்டுவையுங்கோ!

பொதுவெளியில் வந்தால், காலுக்கு போடுறது, செய்யிறது, குழைக்கிறது எல்லாத்தையும் கதைப்பமெல்ல, எல்லாம் நல்லதுக்குத்தான், நோக்கம் பிழையாகயிருந்தால் வெற்றி குறிகியகாலத்துக்குத்தான்.

(இந்த கொறுனாவுக்கு பிறகும்) மொத்தத்தில நாங்கள் ஏழேழுஜென்மத்துக்கும் வெளிநாட்டுகார்ர்களில் தங்கி வாழ்வதென்று முடிவுபண்ணீட்டோம், போடு நைக்கி சூஸ் ஓடு பிஎம்டவுள்யு ஒளடி காசாபணமா நாங்க உங்களுக்கு லைக்கும் சப்ஸ்கிறைப்பும் பண்ணிறம்.

மாப்பிளை உனக்கெவளவு 2.50, மாப்பிளை உனக்கெவளவு 2.50, மாப்பிளை உனக்கெவளவு 2.50, மாப்பிளை உனக்கெவளவு 2.50 .. ஆக மொத்ததில

Cheers

அந்தப் பிள்ளை இப்ப தான் வீட்டுக்கை வரவா என்று காலடியெடுத்து வைக்குது

வழியெல்லாம் எண்ணெயை ஊற்றிப் போட்டு நிற்கிறீர்கள்.

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

அந்தப் பிள்ளை இப்ப தான் வீட்டுக்கை வரவா என்று காலடியெடுத்து வைக்குது

வழியெல்லாம் எண்ணெயை ஊற்றிப் போட்டு நிற்கிறீர்கள்.

அண்ணா அவவின்ர ** கதைய கவனிச்சனீங்களோ, யூற்றீப் லிங்குடுத்த விதத்தை கவனிச்சனீங்களோ, அதாவது எங்களுடைய லைக்குகளை யூற்றீப் சனலில போடவேண்டுமாம், யாழில் உள்ளவைய ஏமாத்திறாவாம்

இஞ்சையுள்ள இராச்சிய அக்காமார்கள் மாதிரியில்லை, ஏற்றுக்கொள்ளும் மனமிருக்கு, சகோதரியின் முயற்சிகள் நிச்சயமாக பாராட்டபடவேண்டியவை!  

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Knowthyself said:

அண்ணா அவவின்ர ** கதைய கவனிச்சனீங்களோ, யூற்றீப் லிங்குடுத்த விதத்தை கவனிச்சனீங்களோ, அதாவது எங்களுடைய லைக்குகளை யூற்றீப் சனலில போடவேண்டுமாம், யாழில் உள்ளவைய ஏமாத்திறாவாம்

இஞ்சையுள்ள இராச்சிய அக்காமார்கள் மாதிரியில்லை, ஏற்றுக்கொள்ளும் மனமிருக்கு, சகோதரியின் முயற்சிகள் நிச்சயமாக பாராட்டபடவேண்டியவை!  

"என்னுடைய லைக்கை யூடியூப் சனலில் போடவேண்டுமாம். என்னை ஏமாற்றவா முயல்கிறீர்கள்?"  என்று கோபப்பட்டிருந்தால் அதில் நியாயம் இருக்கிறது. "எங்களுடைய" என்று ஒட்டுமொத்த யாழ் உறுப்பினர்களையும் உங்கள் பின்னால் இழுக்க வேண்டிய அவசியம் இல்லையே. 😜

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சமையல்,  இப்பதான்... "சூடு" பிடிச்சிருக்கு. :grin:

Edited by தமிழ் சிறி
 • Haha 1
Link to post
Share on other sites

இப்ப தான் கண்ணில பட்டுது!

மிக மிக அருமையான முயற்சி!

அற்புதமான படைப்பு!

நடப்புகளை இயல்பாக படமாக்கியது சிறப்பு!

தமிழர்களின் விதம் விதமான பாரம்பரிய சமையல்களை வீடியோ காட்சிகளாக்கி வெளிவிடுவது பாராட்டுகளுக்கு உரியது.

தொடர்ந்து 100க் கணக்கான காணொளிகளை நீங்க படைக்க வேணும்.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2020 at 10:45, உடையார் said:

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

டாக்குமென்டரி நல்லாவே இருக்கு

இன்னும் நிறைய தயாரிச்சு வெளிவிடுங்கோ

குறிப்பா பனங்காய் பணியாரம், பனாட்டு, பனங்கட்டி, இராசவள்ளி கிழங்கு களி ..... இப்பிடி நிறைய இருக்கு. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் முயற்சி தொடரட்டும். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kali said:

இதில் குழந்தை மாங்காய் பறிக்கும் முறை தவறு. மாங்காய் பறிக்கும் போது முகத்துக்கு அப்பால் எதிர் திசையில் திருப்பி பறிக்க வேண்டும்.

மாங்காய் பால் கண் பார்வையை சேதப்படுத்தலாம்.

பெற்றோர்கள் இதனை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மேலும் எலுமிச்சம் பழ சாறை சில்வர்.. அலுமியப் பாத்திரங்களில் இட்டு கரைப்பது தவறு. கண்ணாடிக் குளவையில் (கிளாஸில்) கரைப்பதே உடல் நலனுக்கு சிறந்தது. மெல்லிய அமிலமாக இருந்தாலும்.. உலோகங்களோடு மெதுவாத தாக்கமடைந்து பாதகமான விளைவுகளை உண்டு பண்ணும்.

அதேபோல் தான் தோசை.. அப்பம் மாவை புளிக்க வைக்க போதும் கண்ணாடிப் பாத்திரத்தில் புளிக்க வைப்பது நல்லம். பிளாஸ்டிக்கும் பாதகமே. 

அதேபோல்.. புளி விட்டு சமைக்கும் கறிகளை மண் சட்டியில் சமைப்பது மிக்க ஆரோக்கியமாகும். எம் முன்னோர்கள்.. இவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டதால் தான்.. பல வகை நோய்களை அவர்களால் இயற்கையாகத் தடுக்க முடிந்தது. குறிப்பாக உணவுக்கால்வாய் சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

நானும் இதை கவனித்திருந்தேன். மாங்காய்பால் முகம் உதடுகளில் பட்டால் அவிந்து புண்ணாக்கி விடும்.

மாங்காயை பிடுங்கி கெட்டு பகுதியை மரத்தில் உரஞ்சி விட்டு கடிப்பதும் பழைய நினைவுகளை கிளறி விட்டது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

மேலும் எலுமிச்சம் பழ சாறை சில்வர்.. அலுமியப் பாத்திரங்களில் இட்டு கரைப்பது தவறு. கண்ணாடிக் குளவையில் (கிளாஸில்) கரைப்பதே உடல் நலனுக்கு சிறந்தது. மெல்லிய அமிலமாக இருந்தாலும்.. உலோகங்களோடு மெதுவாத தாக்கமடைந்து பாதகமான விளைவுகளை உண்டு பண்ணும்.

அதேபோல் தான் தோசை.. அப்பம் மாவை புளிக்க வைக்க போதும் கண்ணாடிப் பாத்திரத்தில் புளிக்க வைப்பது நல்லம். பிளாஸ்டிக்கும் பாதகமே. 

அதேபோல்.. புளி விட்டு சமைக்கும் கறிகளை மண் சட்டியில் சமைப்பது மிக்க ஆரோக்கியமாகும். எம் முன்னோர்கள்.. இவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டதால் தான்.. பல வகை நோய்களை அவர்களால் இயற்கையாகத் தடுக்க முடிந்தது. குறிப்பாக உணவுக்கால்வாய் சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள். 

1 minute ago, குமாரசாமி said:

நானும் இதை கவனித்திருந்தேன். மாங்காய்பால் முகம் உதடுகளில் பட்டால் அவிந்து புண்ணாக்கி விடும்.

மாங்காய்ப் பால்.  கண்ணில் பட்டால்.... பார்வைக் குறைபாடு ஏற்படும் என்றும் சொல்வார்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2020 at 06:25, தமிழ் சிறி said:

சமையல்,  இப்பதான்... "சூடு" பிடிச்சிருக்கு. :grin:

என்ன சிறியர் சமையல் ஒரேயடியா அடிப்பிடிச்சுட்டுது போல.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 10:18, Kali said:

டாக்குமென்டரி நல்லாவே இருக்கு

இன்னும் நிறைய தயாரிச்சு வெளிவிடுங்கோ

குறிப்பா பனங்காய் பணியாரம், பனாட்டு, பனங்கட்டி, இராசவள்ளி கிழங்கு களி ..... இப்பிடி நிறைய இருக்கு. 

மிக்க நன்றி.
தொடர்ந்து வெளியிடவுள்ளோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 13:10, nedukkalapoovan said:

இதில் குழந்தை மாங்காய் பறிக்கும் முறை தவறு. மாங்காய் பறிக்கும் போது முகத்துக்கு அப்பால் எதிர் திசையில் திருப்பி பறிக்க வேண்டும்.

மாங்காய் பால் கண் பார்வையை சேதப்படுத்தலாம்.

பெற்றோர்கள் இதனை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். 

வீட்டிலுள்ள பெரியவர்களும் திட்டிவிட்டார்கள். இனிமேல் கவனமாக பார்த்துக்கொள்கிறேன். அறிவுரைக்கு நன்றி.

On 21/6/2020 at 13:20, nedukkalapoovan said:

மேலும் எலுமிச்சம் பழ சாறை சில்வர்.. அலுமியப் பாத்திரங்களில் இட்டு கரைப்பது தவறு. கண்ணாடிக் குளவையில் (கிளாஸில்) கரைப்பதே உடல் நலனுக்கு சிறந்தது. மெல்லிய அமிலமாக இருந்தாலும்.. உலோகங்களோடு மெதுவாத தாக்கமடைந்து பாதகமான விளைவுகளை உண்டு பண்ணும்.

அதேபோல் தான் தோசை.. அப்பம் மாவை புளிக்க வைக்க போதும் கண்ணாடிப் பாத்திரத்தில் புளிக்க வைப்பது நல்லம். பிளாஸ்டிக்கும் பாதகமே. 

அதேபோல்.. புளி விட்டு சமைக்கும் கறிகளை மண் சட்டியில் சமைப்பது மிக்க ஆரோக்கியமாகும். எம் முன்னோர்கள்.. இவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டதால் தான்.. பல வகை நோய்களை அவர்களால் இயற்கையாகத் தடுக்க முடிந்தது. குறிப்பாக உணவுக்கால்வாய் சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள். 

பிள்ளைகளோடு சமைப்பதால் உடையக்கூடிய பொருட்களை பாவிப்பது மிகக்குறைவு. அதனால்தான் வழமையாக பாவிக்கும் பாத்திரங்களை பாவித்தேன். உங்களுடைய கருத்து சரியானது. இனிமேல் அவைகளை கருத்தில் கொள்கிறேன். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sanchu Suga said:

வீட்டிலுள்ள பெரியவர்களும் திட்டிவிட்டார்கள். இனிமேல் கவனமாக பார்த்துக்கொள்கிறேன். அறிவுரைக்கு நன்றி.

பிள்ளைகளோடு சமைப்பதால் உடையக்கூடிய பொருட்களை பாவிப்பது மிகக்குறைவு. அதனால்தான் வழமையாக பாவிக்கும் பாத்திரங்களை பாவித்தேன். உங்களுடைய கருத்து சரியானது. இனிமேல் அவைகளை கருத்தில் கொள்கிறேன். 

இன்றைக்கு   கள்ளு வாங்கி அடிச்ச மாதிரி இருக்கு, இன்னும் முறியவில்லை போல் உள்ளது😀. பார்ப்பம் எப்ப வருகின்றா என்று. 

Edited by உடையார்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, சுவைப்பிரியன் said:

என்ன சிறியர் சமையல் ஒரேயடியா அடிப்பிடிச்சுட்டுது போல.

சுவைப்பிரியன்... சமையல் அடிப் பிடிக்கவில்லை.
அடுத்து, என்ன சமைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவ, இப்ப வந்திட்டா..
அநேகமாக... இரண்டு நாட்களுக்குள் புதிய சமையல் வரும் என்று, நினைக்கின்றேன். :)

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.