Jump to content

சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட 97 வயது முதியவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட 97 வயது முதியவர்

சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட 97 வயது முதியவர்

 

சென்னை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து மக்களை தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் தொற்று எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்,  முதியவர்களுக்கு இந்த நோய் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 

இந்நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 97 வயது முதியவர் கிருஷ்ணமூர்த்தி, பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். இது அனைவரிடமும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணமூர்த்திக்கு கடந்த மாதம் 30ம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவருக்கு மூச்சுத்திணறல் இருந்துள்ளது. ஏற்கனவே உயர்  ரத்த அழுத்தம், இதய பாதிப்புகளும் இருந்ததால் அவருக்கு உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதன் பயனாக அவருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்பு குறைந்து, செயற்கை சுவாசம் நீக்கப்பட்டது. அவரது உடல் இயல்பு நிலைக்கு திரும்பியதும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நெகட்டிவ் என பரிசோதனை முடிவு வந்ததையடுத்து, நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமான மிக வயதான நபர் இவர் எனவும், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த வயதான நபர்களில் இவரும் ஒருவர் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/13111114/1607419/97-year-old-corona-patient-discharged-from-Chennai.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

97´வது  வயதில்...கொரோனாவில் இருந்து தப்பி வந்தது, ஒரு மருத்துவ அதிசயம்.
கருணாநிதி 😎 குடும்பத்தினரால் நடத்தப் படுவது தான்..... காவேரி மருத்துவமனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு வந்தது கொறோனா இல்லை. சாதாரண சளிக் காச்சல். கொறோனா லிஸ்றில உள்ளே தூக்கிப் போட்டுவிட்டார்கள். 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இவருக்கு வந்தது கொறோனா இல்லை. சாதாரண சளிக் காச்சல். கொறோனா லிஸ்றில உள்ளே தூக்கிப் போட்டுவிட்டார்கள். 😂😂

ஆஸ்பத்திரிக்கு, “இலவச விளம்பரம்” தேட.... செய்திருப்பார்கள். 😁😂

ஆஸ்பத்திரியை... நடத்துற ஆட்கள், “ஊரை அடித்து, உலையிலை” போடுற ஆக்கள் எல்லோ.😎

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.