Jump to content

மூத்த ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்

cinematographer-kannan-passed-away

 

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார். அவருக்கு வயது 69.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் 'நிழல்கள்' தொடங்கி 'பொம்மலாட்டம்' வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். பாரதிராஜாவுக்கு மிக நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது பலன் அளிக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் பிற்பகல் 2 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.


Powered by Ad.Plus
 
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 13) காலமானார். அவருக்கு வயது 69. இவர் இயக்குநர் பீம்சிங்கின் மகன், முன்னணி எடிட்டரான லெனினின் சகோதரர் ஆவார்.

தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே பாரதிராஜா - கண்ணனின் நட்பை அறிவார்கள். இவரை பலரும் 'பாரதிராஜாவின் கண்கள்' என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஏனென்றால் 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். அதில் சுமார் 40 படங்கள் பாரதிராஜா இயக்கியதாகும்.

'அலைகள் ஓய்வதில்லை', 'டிக் டிக் டிக்', 'காதல் ஓவியம்', 'மண் வாசனை', 'முதல் மரியாதை', 'கடலோரக் கவிதைகள்', 'வேதம் புதிது', 'கிழக்குச் சீமையிலே' என பாரதிராஜா இயக்கிய படங்களுக்கு தன் ஒளிப்பதிவால் மெருகூட்டியவர் கண்ணன்.

பாரதிராஜா அளித்த பேட்டியொன்றில், "நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனுடைய இரண்டு கண்களை மட்டும்தான் எடுத்துச் செல்வேன். அந்தக் கண்களுக்கு மட்டும்தான் ஆகாயத்தின் மறுபுறத்தையும் பார்க்கும் சக்தியுண்டு" என்று தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு இருவருமே மிக நெருங்கிய நண்பர்கள்.

தந்தை பீம்சிங் இயக்கிய 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' என்ற படத்துக்கும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரது மனைவி பெயர் காஞ்சனா. மதுமதி மற்றும் ஜனனி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணன், இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.

கண்ணனின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை (ஜூன் 14) அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு, திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல், தன் நெருங்கிய நண்பரை இழந்துள்ள பாரதிராஜாவுக்கும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/559238-cinematographer-kannan-passed-away-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘பாரதிராஜாவின் கண்கள்’: மூத்த ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்!

spacer.png

 

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று(ஜூன் 13) காலமானார். அவருக்கு வயது 69.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 50 திரைப்படங்களுக்கும் மேலாக ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் கண்ணன். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 40 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ திரைப்படம் தொடங்கி ‘பொம்மலாட்டம்’ வரையான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கண்ணன் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.

 

கண்ணனை ‘பாரதிராஜாவின் கண்கள்’ என்றே திரையுலகில் அழைத்து வந்தார்கள். பிரபல இயக்குநர் பீம்சிங்கின் மகனும், முன்னணி எடிட்டர் லெனினின் சகோதரருமான கண்ணன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(ஜூன் 13) பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் நண்பனை இழந்து தவிக்கும் பாரதிராஜாவுக்கும் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது நண்பனின் பிரிவு குறித்து இயக்குநர் பாரதிராஜா உருக்கமான இரங்கல் செய்தி ஒன்றை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். அதில், “என் வாழ்வின் பெரும்பகுதியை என்னுடன் கழித்த, என் துணைவியாரை விடவும் அதிகமாக நான் நேசித்து வளர்ந்த பெரிய ஒளிப்பதிவு கலைஞர் கண்ணன்.

நான் படப்பிடிப்புக்கு என் கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனை ‘இரண்டு கண்களைத்’ தான் எடுத்துச் செல்கிறேன். அவருக்குத்தான் ஆகாயத்தின் மறுபக்கத்தையும் பார்க்க தெரியும் என்று சொல்லியிருக்கிறேன். 40 ஆண்டுகாலம் என்னுடன் இணைந்து பணியாற்றிய அவரது மறைவை இன்றளவும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

இந்த கொரோனாவின் இடுக்குப் பிடியில் சிக்கி அவரது உடலை நேரில் கூட தரிசிக்க முடியாத ஒரு சோகத்தில் இருக்கிறேன். ஒரு அற்புதமான கலைஞனை நான் மட்டுமல்ல, இந்த கலை உலகமே இழந்துவிட்டது. அவரது ஒளிப்பதிவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ‘என்னுயிர் தோழன்’ ஒரு ஸ்லம் பேக்ரவுண்ட். அதற்கு என்ன ஒளிப்பதிவு செய்ய வேண்டும், ‘நாடோடி தென்றல்’ அதற்கு எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும், ‘காதல் ஓவியம்’ அது ஒரு காவியம் அதற்கு எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும் இந்த வித்தைகளை எல்லாம் தெளிவாகத் தெரிந்து வைத்த மிகப்பெரிய கலைஞர்.

spacer.png

என்னோடு அவர் இன்று இல்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை. எனக்குக் கிடைத்த புகழ், இந்த மண், மண் வாசனை, இந்த மக்களுடைய கலாச்சாரம் இவையெல்லாம் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தியது. அதில் எனக்குக் கிடைத்த புகழுக்கு பெரும் பங்கு என் கண்ணனுக்கு சேர வேண்டும். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று ஒப்புக்காக என்னால் சொல்ல முடியவில்லை. இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று நான் நினைக்கவே இல்லை.

உலகத்தமிழர்கள் அத்தனை பேரும் இந்த கலாச்சாரத்தை, பண்பாட்டை ஒளிப்பதிவின் மூலமாக உணர்ந்து கொண்டார்கள் என்றால் அதற்கு உதவிய அற்புதமான ஒளிப்பதிவு கலைஞனுக்கு, பாரம்பரியமிக்க பீம்சிங்கின் பையன் கண்ணனுக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

https://minnambalam.com/entertainment/2020/06/13/66/latest-tamil-cinema-news-cinematographer-kannan-passes-away

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதானி கிரீன் எனர்ஜிக்கு மன்னார் மற்றும் பூநகரியில் காற்றாலை மின் திட்டங்களுக்கு அனுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெறுமதியான இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.(15)     http://www.samakalam.com/அதானி-கிரீன்-எனர்ஜிக்கு/
    • சீன கப்பல் இலங்கை வருகை – இந்திய கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம் சீனாவிற்கு சொந்தமான விண்வெளி ஆய்வு கப்பலான யுவான் வாங் – 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நடவடிக்கை, தற்போது சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது.இந்நிலையில்தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன.இதேவேளை இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கைக்குள் சீனா நுழைந்துள்ளதாகவும் அதன் அங்கமாகவே தனது கப்பலை அந்நாடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த நிலையிலேயே, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பதுடன் இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் சர்வதேச கடல் எல்லையில் அந்நிய ஊடுருவல், சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் மற்றும் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் நுழையும் அகதிகளின் நடமாட்டம் உள்ளிட்டவற்றை முழுமையாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரம் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தென் இந்தியாவில் உள்ள ராணுவ நிலையங்களையும், அணுமின் நிலையங்களையும் அது கண்காணிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்தியா பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது. முக்கியமாக தமிழக கடலோர பகுதிகளை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் பாதுகாப்பு படை போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்ஜல சந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ளதால் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் கப்பல் உள்பட 8 கப்பல்களும், 2 விமானம், 3 ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பு படை வீரர்கள் இடைவிடாத ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி இலங்கை கடல் பகுதியில் இருந்து ஏதேனும் சந்தேகப்படும்படியான படகுகள் வருகிறதா? அகதியாக யாரும் ஊடுருவி விடக்கூடாது? என்பதற்காக, கீழக்கரை கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து அதிநவீன ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ரேடார் கருவி உளவு கப்பலில் செயல்பாடுகளை தொடர்ந்து கவனிக்கும். சீனகப்பல் 750 கி.மீ. சுற்றளவில் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது. இதில் 40 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.அம்பாந்தோட்டை அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமாக 6 படைதளங்கள் உள்ளன. அங்குள்ள தொழில்நுட்பங்கள், போர் விமானங்கள், ரேடார்கள் உள்ளிட்ட தகவல்களை சீனகப்பல் சேகரிக்கும் அபாயம் உள்ளதால் சீன உளவு கப்பல் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராமேசுவரம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க செல்வதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனகப்பல் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னரே மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க செல்லும் சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.(15)     http://www.samakalam.com/சீன-கப்பல்-இலங்கை-வருகை-இ/
    • வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணப் பொதி! எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் போது மக்களுக்கு நிவாரண பொதியொன்று வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு போன்ற இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்கு, ரூபாவிற்கு ஈடாக டொலரின் மதிப்பு அதிகரிப்புடன் வாழ்க்கைச் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 203 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி இன்று 365 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அந்நியச் செலாவணி அதிகரித்ததன் காரணமாக பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் இதன் மூலம் பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், விலைவாசி உயர்வைத் தடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறினார். திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வெளிநாட்டு உதவிகளின் ஊடாக உதவ திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.     http://www.samakalam.com/வரவு-செலவுத்-திட்டத்தில/
    • 'களைக்கொல்லிக்கு' இலங்கையில் மீண்டும் அனுமதி - முன்பு தடை, இப்போது ஒப்புதல் ஏன்? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 16 ஆகஸ்ட் 2022   பட மூலாதாரம்,GETTY IMAGES சிறுநீரக நோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்குக்குக் காரணமானது எனக்கூறி - தடை செய்யப்பட்டிருந்த 'கிளைபொசேட்' (Glyphosate) எனும் களை நாசியை இறக்குமதி செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் இலங்கை அரசு மீளவும் அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன் வெளியான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க, இம்மாதம் 05ஆம் தேதியிலிருந்து மேற்படி களை நாசினிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிளைபொசேட் இறக்குமதிக்கு - பூச்சிக்கொல்லி பதிவாளரின் பரிந்துரையின் கீழ், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம், இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமத்தை வழங்குவார் எனவும் மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், சில மாவட்டங்களில் கிளைபொசேட் பயன்பாட்டுக்கும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது.   இதன்படி அனுராதபுரம், பொலன்நறுவை, குருணாகல், மொனராகலை மற்றும் பதுளை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் கிளைபொசேட் (Glyphosate) தடைசெய்யப்பட்டது. 2015ஆம் ஆண்டு இந்தத் தடையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. கிளைபொசேட் நாசினிக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் தேயிலை மற்றும் ரப்பர் செய்கையின்போது இதைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டது. பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளுமாறு அரசு அறிவித்ததைத் அடுத்து, கிளைபொசேட் உள்ளிட்ட ரசாயன நாசினிகள் மற்றும் யூரியா உரம் போன்றவற்றுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டது. சிறுநீரக நோய் உள்ளிட்ட பல வியாதிகளுக்கு கிளைபொசேட் (Glyphosate) காரணமாக அமைகிறது என்று அதைத் தடை செய்தபோது அரசு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எறும்புகளால் கால்நடைகளை இழக்கும் திண்டுக்கல் கிராமம்: அச்சத்தில் பொதுமக்கள் - கள நிலவரம் தாவரங்கள் உண்மையில் மனிதர்களிடம் பேசுமா? அறிவியல் கூறுவது என்ன? கமத்(விவசாயம்) தொழில் அமைச்சு 2015ஆம் ஆண்டு வெளியிட்ட எழுத்து மூல செயலாற்றுகை அறிக்கைக்கு அப்போதைய கமத்தொழில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க வழங்கிய செய்தியில், "விவசாய செய்கை பிரதேசங்களில், பரவலாகப் பரவி வரும் சிறுநீரக நோய் தொடர்பில் பலதரப்பட்ட தரப்பினர்கள் மீது குற்றஞ் சுமத்தப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில், இவ்விடயம் தொடர்பில் இந்த வருடத்தில் மிக முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டது. அதாவது, விவசாயச் செய்கையின் போது பரவலாகப் பாவிக்கும் கிளைபொசெட் களை நாசினி இறக்குமதி முற்றாகத் தடைசெய்யப்பட்டதே அத்தீர்மானமாகும். எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி, எடுக்கப்பட்ட மிக முக்கியமானதும் உறுதியானதுமான இந்தத் தீர்மானம் மக்களின் வரவேற்புக்கு உட்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த களைக்கொல்லிக்கான தடையையே - தற்போது ரணில் அரசாங்கம் நீக்கியுள்ளது. கிளைபொசேட் (Glyphosate) உள்ளடங்கிய மேற்படி நாசினி, 'தெரிந்தழியா' அல்லது 'சர்வ' களை கொல்லி வகையைச் சேர்ந்ததாகும். 'ரவுண்டப்' எனும் வர்த்தகப் பெயரில் இலங்கையில் அறியப்பட்ட இந்தக் களைக்கொல்லி, நெற்செய்கையின் போது - உழவுக்கு முன்னர் நிலத்துக்கு விசிறப்படுகிறது. இதனால் அனைத்து வகை களைகளும் இறந்து போகும். விவசாயிகள் சொல்வது என்ன?   பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நிலையில், கிளைபொசேட் (Glyphosate) களை நாசினிக்கான தடை நீக்கப்பட்டமை மகிழ்ச்சியான விடயம் என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சரிபுடீன். கிளைபொசேட் தடைசெய்யப்பட்ட பின்னர், நெல் வயல்களில் பண்டிச் சம்பா (நெற் பயிர் போன்றது) கிலுகிலுப்பான் மற்றும் முட்டைச் சல்லு போன்ற களைகளின் பெருக்கம் அதிகரித்து விட்டதாகவும் இதனால் நெல் விளைச்சல் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.     படக்குறிப்பு, சரிபுடீன், விவசாயி கிளைபொசேட் தடைசெய்யப்பட்ட காலத்தில், தமது நெல் வயல்களில் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகக் கூறும் சரிபுடீன், "நிலத்தில் அதிக தடவை உழவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதோடு, கூலியாட்களைக் கொண்டு களையெடுக்க வேண்டியிருந்தது" எனவும் குறிப்பிட்டார். இதனால், தமக்கு அதிக செலவு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார். கிளைபொசேட் தடைசெய்யப்பட்டதை அடுத்து, அதற்குப் பதிலீடாக விவசாயிகள் 'சர்ஃப் எக்செல்' (Surf excel) சலவைத் தூளுடன் யூரியாவை கலந்து பயன்படுத்தியதாக சரிபுடீன் கூறினார். அதேபோன்று 'அஜினோமோட்டோ'வுடன் (Ajinomoto) எம்சிபிஏ எனும் களை நாசினியைக் கலந்து பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டார். "வயலை அண்டியும் வாய்க்காலிலும் அதிகளவு புற்கள் வளரும் போது, அங்கு பாம்புகள் மற்றும் அபாயகரமான பூச்சி வகைகள் காணப்படும். அதனால் பெரும் ஆபத்து ஏற்பட்டது. கிளைபொசேட் தெளிக்கும் போது மேற்சொன்ன இடங்களிலுள்ள புற்கள் முற்றாக அழிந்து விடும். பாம்பு, பூச்சிகளின் தொல்லையும் இருக்காது" எனவும் சரிபுடீன் தெரிவித்தார். கடுமையான விளைச்சல் வீழ்ச்சி     படக்குறிப்பு, ஃபிர்தெளஸ், விவசாயி இதேபோன்று, களைகளின் பெருக்கத்தால் தனது வயலில் நெல் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக, அம்பாறை மாவட்டம் - அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ. பிர்தௌஸ் கூறுகின்றார். "பண்டிச் சம்பாவை கட்டுப்படுத்துவதற்கு கிளைபொசேட் சிறந்த களை நாசினி. இது தடைசெய்யப்பட்டதை அடுத்து, பண்டிச் சம்பாவின் பெருக்கம் அதிகரித்தது. இதனால் சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு 40 தொடக்கம் 45 மூடைகள் விளையும் எங்கள் வயலில், இம்முறை 21 மூடைகளே கிடைத்தன" என்கிறார். 56 வயதுடைய பிர்தௌஸ் - அவரின் 12ஆவது வயதிலிருந்து விவசாயத்தில் ஈடுபடுவதாகவும் 13 வருடங்கள் 'வட்டானை'யாக (நெற் காணிகளை கண்காணிப்பவர்) கடமையாற்றி வருவதாகவும் கூறுகின்றார். மறுபுறமாக, கிளைபொசேட் (Glyphosate) பயன்படுத்தும் போது சில பாதகங்கள் ஏற்படுவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கிளைபொசேட் பிரயோகிக்கும் போது அனைத்து விதமான களைகளும் புற்பூண்டுகளும் அழிவடைவதால், விலங்குகளுக்குத் தேவையான புற்கள் கூட அழிந்து போகும் நிலை ஏற்படும் என்று இப்பகுதியிலுள்ள விவசாயி ஏ.எம். நளீம் குறிப்பிடுகின்றார். அனைத்து களைகளுக்கும் பயன்படுத்துவது உசிதமல்ல கிளைபொசேட் களைக்கொல்லிக்கான தடை நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் - பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிடுகையில், தடை நீக்கப்பட்ட போதிலும் அதை மட்டுப்பாட்டுடன் பயன்படுத்துமாறு கூறினார்.     படக்குறிப்பு, கலீஸ், மாவட்ட விவசாய பணிப்பாளர் "கிளைபொசேட் களைக்கொல்லியில் காட்மியம், ஆர்சனிக் போன்ற பார உலோகங்கள் உள்ளன. இவை நிலத்தடி நீருடன் சேரும். மண்ணின் கட்டமைப்பையும் இவை மாற்றக் கூடியவை. இதனால்தான் இது தடைசெய்யப்பட்டது" என அவர் விவரித்தார். "பார உலோகங்கள் சிறுநீரக நோயை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. ஆனால், கிளைபொசேட் இல்லாமல் பயிர் செய்கையில் - புல்லைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இதைப் பயன்படுத்த வேண்டும்," எனவும் அவர் குறிப்பிட்டார். களைகளை இலகுவாகக் கட்டுப்படுத்துவதற்கு கிளைபொசேட் பயன்படுவதால் விவசாயிகள் இதை வரவேற்கின்றனர் எனக் கூறும் அவர், இந்த களைக்கொல்லியை அபரிமிதமாகப் பயன்படுத்தாமல் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது சிபாரிசு செய்யப்பட்ட அளவில், தேவையான போது மட்டும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார். இல்லாவிட்டால் சிறுநீரக நோய் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் எனவும் எச்சரித்தார். "கிழங்கு வகைக் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு கிளைபொசேட் களைக்கொல்லியைப் பயன்படுத்தலாம். மாறாக சிறிய வகைக் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இதைப் பயன்படுத்துவது உசிதமானதல்ல," எனவும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கலீஸ் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/sri-lanka-62567723
    • UNP VS SLPP – பனிப்போர் தொடர்கிறது! August 17, 2022 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், பனிப்போர் இடம்பெறுவதாக அறியமுடிகின்றது. மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கும் விடயத்திலேயே இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஆளுநர்களாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலரை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார். எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் சிலரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, ஜோன் அமரதுங்க, நவீன் திஸாநாயக்க உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனினும், கடந்த ஆட்சியின் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர்களை மாற்றவேண்டாம் என்று பெரமுன வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்தே இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் தோற்றியுள்ளன என அறியமுடிகின்றது. https://globaltamilnews.net/2022/179756/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.