Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பெரும் போரை நோக்கிய ஐரோப்பிய அரசியல் நகர்வுகள் – உலகப்போர் 2 - பகுதி 2


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பெரும் போரை நோக்கிய ஐரோப்பிய அரசியல் நகர்வுகள் – உலகப்போர் 2

large.B6759CA9-1C2B-4205-9067-FD7D742D85DD.jpeg.5e59c3e93a0ebf3bb0d497354e43e72d.jpeg

 

முதல் உலகப்போர் நடைபெற்ற வருடங்கள் என்றால் 1914 முதல் 1918 வரை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஆனால் இரண்டாம் உலகப் போரை இப்படி ஒரு காலகட்டத்திற்குள் அட‍க்கி விட முடியாது. வரலாற்று ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் போரின் காலகட்டம் குறித்து மாறுபடுகிறார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளபட்ட கணக்கு 1939 முதல் 1945 வரை என்றாலும், சிலருடைய கூற்றுப்படி, இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் 1939 அல்ல 1931. சீனா மீது ஜப்பான் தாக்குதல் தொடுத்த ஆண்டு அது.

1931 தொடங்கி 1939 வரை ஐரோப்பாவில் நடைபெற்ற உள்நாட்டு போர்கள், கலகங்கள், யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், அத்துமீறல்கள் அனைத்தும் இரண்டாம் உலகப்போருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருகின்றன. ஆகவே இந்த கொந்தளிப்பான காலகட்டம் சரித்திரத்த்தில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது, ஹிட்லர் ஜெர்மனியின் பலத்தைப் பெருக்கிக் கொண்டதும் இந்தக் காலகட்டத்தில் தான். ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்து விடலாம் என்னும் நம்பிக்கையை அவர் ஏற்படுத்திக் கொண்டதும் அப்போது தான்.

ஹிட்லரின் திட்டம் தெளிவானது. அகண்ட ஜேர்மனியை உருவாக்க வேண்டுமானல் ஐரோப்பாவுடன் போரிட்டு வெல்ல வேண்டும். ஐரோப்பாவின் பலம் பொருந்திய சக்திகளான பிரிட்டன்,பிரான்ஸ,சோவியத்யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் நேருக்கு நேர் நின்று மோதி விழுத்த வேண்டும். எப்போது வேண்டுமானாலும் தொடங்கி விடலாம். அதற்கு முன்பாக செய்ய வேண்டியது ஜேர்மனியின் ராணுவ பலதைப் பெருக்குவது. இன்னொரு தோல்வியை ஜேர்மனி சந்திக்க் கூடாது. இனி எப்போதும்.

முதல் கட்டமாக ஆஸ்திரியா, போலந்து, செக்கோஸ்லாவாக்கியா போன்ற அக்கம் பக்க நாடுகளை முதலில் தாக்கி கையகப்படுத்த வேண்டும். தெளிவாக திட்டமிட்டு வீழ்த்தவேண்டும். இபோதைக்கு பெரிய சக்திகளைப் பகைத்துக்கொள்ளக்கூடாது. பலம் கூடியதும் அவர்களைத் தாக்கலாம். ராணுவத்தை மட்டுமல்ல ராஜதந்திரத்தையும் பயன் படுத்தினால் தான் இது சாத்தியமாகும்.

சீனா மீதான ஜப்பானின் தாக்குதல்

ஐரோப்பாவில் ஹிட்லர் அதிகாரத்தை நோக்கிய தனது நகர்வினை மேற் கொண்டிருந்த வேளே ஆசியா கண்டத்தில் வேறு சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன. சீனாவின், ஸன் யாட் சென் (Sun Yat-Sen) மறைவிற்கு பிறகு, சியாங் கை ஷெக் (Chiang Kai-Shek) கோமிண்டாங் கட்சியின்(Kuomintang Party) (மன்னராட்சியை ஒழிப்பதை குறிக்கோளாக்க் கொண்டு தொடங்கப்பட்ட புரட்சிகரக் கட்சி)  தலைமைபீடத்தைக் கைப்பற்றியிருந்தார். ஒட்டுமொத்த சீனாவையும் சுவீகரித்துக் கொள்ளும் கனவு அவரிடம் இருந்த‍து. மன்னர்களாலும் பின்னர் பல்வேறு அந்நிய தேசங்களின் மேலாதிக்கதாலும் தொடர்ந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த சீனா, அரசியல் ரீதியிலும் ராணுவ ரீதியிலும் மிகவும் பின்தங்கியிருந்த‍து. இந்த நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் சியாங். இந்தக் கனவுக்கு அசுசுறுத்தலாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடிக்கொண்டிருந்தனர். எனவே சீனா முழுவதும் இருந்த்து கம்யூனிஸ்ட்டுக்கள் விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசி கம்யூனிஸ்ட் எஞ்சியிருக்கும்வரை இந்தப் போர் தொடரும் என்று சியாங் வெறுப்புடன் கறுவியிருந்தார். ஹிட்லருக்கு ஏற்பட்ட அதே வெறுப்பு. நான்கிங் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரதேசங்களை கோமிட்ணாங் கைப்பற்றியிருந்த‍து. மாவோ தலைமுயில் செம்படை தனது நெடும்பயணத்தை அக்ரோபர் 1935ல் நிறைவு செய்திருந்த‍து. கிட்டத்தட்ட ஆறாயிரம் மைல்களைக் கடந்து முன்னேறிய செம்படை, வழி நெடுகிலும் உள்ள நகரங்களையும் கிராமங்களையும் சியாங்கின் பிடியில் இருந்து விடுவித்துக்கொண்டே சென்றது.

 *சோவியத்தின் செம்படையின் வெற்றியால் உந்தப்பட்டு அதே பெயரில் உருவாக்கப்பட்டிருந்த‍து சீனாவின் செம்படை

large.27743210_ChiangKai-Shek.jpg.45d2bfc84ba2dce85471d4eb99783b7d.jpg

சியாங் ஒரு பக்கம். மற்றொருபக்கம் ஜப்பான். ஜப்பானின் முக்கிய அரசாங்க கடமைகளில் ஒன்று சீனாவைக் கண்காணிப்பது. ஒவ்வொரு சிறிய வியடத்தையும் கண்காணித்தார்கள். எந்ந பிரதேசத்தை யார் ஆள்கிறார்கள்? ராணுவம் என்ன செய்கிறது. அரசாங்கம் என்ன செய்கிறது? யார் புரட்சி செய்கிறார்கள்? சீனாவில் அரிசி கிலோ எவ்வளவு ? மக்காச்சோள மகசூல் இந்த மாதம் எவ்வளவு?

ஒவ்வொன்றும் தெரிந்தாக வேண்டும். ஏன்? ஜப்பானைப் பொறுத்தவரை சீனா என்பது தனிபெரும் தேசம் அல்ல. ஜப்பானின் மற்றொறு மாநிலம். சீனாவி்ன் மூலை முடுக்குகளில் எல்லாம் ஜப்பானிய அதிகாரிகள் நின்று கொண்டிருப்பார்கள். கடை போட்டு உட்கார்ந்திருப்பார்கள். டாங்கிகளில் மீதேறி உட்கார்ந்து வேடிக்கை பார்பார்கள். சீனாவில் உள்ள ஆனால் ஜப்பானுக்கு உட்பட்ட பிரதேசம் என்று ஒரு பட்டியல் எடுத்தால் தலை சுற்றும்.

ஜப்பான் இயற்கை வளங்கள் அற்ற நாடு என்பதால் அது பெரும்பாலும் ஏற்றுமதியை நம்பியிருந்த‍து. குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து. சர்வ வளங்களும் பொருந்திய ஒரு காலனி இருந்தால் மட்டுமே பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப முடியும் என்னும் நிலையில் சீனா உறுஞ்சிக்கொள்ள முடிவு செய்த‍து ஜப்பான். ஜப்பானின் அந்நிய முதலீடுகளில் ஐந்தில் நான்கு பங்கு சீனாவுக்குப் போய் சேர்ந்த‍து. அமெரி்க்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளுடன் ஜப்பான் போட்டி போட்டது. அவர்களுக்கு சம‍மான நிலையை அடையவிரும்பியது. ஜப்பான், பிரிட்டன், ஜேர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி என்று ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் ராணுவத்தில் தன்னிறைவு அடைந்துவிட்டன. ஜப்பான் எப்போது வல்லரசாவது? பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்கவாவுயும் இப்போதைய அமெரிக்காவையும் ஒப்பிட முடியுமா? எப்படிச் சாத்தியமானது இந்த வளர்ச்சி? தீவிரமாகச் சிந்தித்துக்க கொண்டிருந்த‍து ஜப்பான்.

ஜப்பானின் அப்போதைய எரிச்சல் சீனாவின் செம்படை. இதென்ன புற்றீசல் போல் இப்படிக் கிளம்பியிருக்கிறதே. புற்று வளரும் வரையா விட்டு வைப்பார்கள்? இந்ந சியாங் கை ஷேக் தம் படை வீர்ர்களுடன் பல்லாங்குழியா ஆடிக்கொண்டிருகிறான்?  முதல் சிவப்பு கொடியை உயர்த்திப் பிடிப்பவனின் கையை, காலை உடைத்துப் போட்டிருந்தால் இந்த அளவுக்கு விஷம் பரவியிருக்குமா? நெடும் பயணம் போகிறார்களாம். வழியில் தென்படும் ராணுவப் பிராந்தியங்களை அழித்துக்  கொண்டே வருகிறார்களாம். கோமண்டாங்கை விட அதிக பலம்  பொருந்தியவர்களாம். இப்படியே போனால் ஒட்டுமொத்த சீனாவையும் செம்படை வளைத்துப் பிடித்துக்கொள்ளுமாம். இப்படியான சிந்தனையில் ஈடுபட்டது ஜப்பான்.

செப்ரெம்பர் 18 1931ம் ஆண்டு சீனா மீது படையெடுத்தது ஜப்பான். முதலில் மஞ்சூரியா, பிறகு ஷாங்காய். ஒரு சில மாதங்ககளில் இரண்டும் ஜப்பானால் கைப்பற்றப்பட்டன. அவர்ளுக்கு அங்கே அதிகம் வேலை இல்லை. கதவு திறந்தே கிடந்தது. ஒப்புக்கு சில சீனர்கள் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பம்மாத்து செய்து கொண்டிருந்தார்கள். இடது கை சுண்டுவிரலால் அவர்களை நசுக்கிப்போட்டது ஜப்பானியப் படை.

அதிர்ந்து நின்றார்கள் சீனர்கள். இதெல்லாம ஒரு தேசமா? அரசாங்கத்தின் யோக்கிதை இது தானா? தமக்கு ஒரு சம்பந்தமும் இல்லாத பக்கது நாடு நம் மீது படையெடுத்து வந்து நம்மையே கொன்று நம் பகுதிகளைக் கைப்பற்றிக் கொள்கிறது. ஒப்புக்கு நான்கு பேரை அனுப்பிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது அரசாங்கம். நம் நாடு, நம் மக்கள், நம் பகுதிகள் என்று கொஞ்சமாவது அக்கறை இருகிறதா? பஞ்சத்தால் அடிபட்ட ஒரு விவசாயி கூட என் தேசம் என்கிறானே.

கேட்டால் சர்வதேச சங்கங்களுக்கு மனு போட்டிருக்கிறோம் என்று ஒரு பதில். ஏன்? அவர்களை ஏன் அழைக்க வேண்டும்? ராணுவம் என்று எதற்கு வைத்திருக்கிறாய்? கவாத்து செய்வதற்கும் சல்யூட் அடிப்பதற்குமா? பளபளக்கும் தொப்பிகளும் துப்பாக்கிகளும் எதற்கு? இங்கே சியாங்கை ஷேக். அங்கே வேறு யாரோ? ஷாங்காய்க்கு என்ன வந்தால் என்ன என்று மஞ்சூரியா நினைக்கிறது. தெற்கில் ஜப்பான் வந்தால் என்ன என்று வடக்கு தூங்குகிறது. சீனர்கள் தெருவில் இறங்கினார்கள். தெருவில் இறங்கி நடந்தால் சீனா போல் இல்லை. எதிரே வரும் பத்து பேரில் இரண்டு ஜப்பானியர்கள். இப்படியே போனால் சீனர்களின் கலாச்சாரம், மொழி, வரலாறு அனைத்தும் அழிந்து போய்விடும். ஜப்பான் சீனாவை மொத்தமாக சாப்பிட்டுவிடும்.

சீனாவில் நடக்கும் மாற்றங்களை பிரிட்டனும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது. வேறெந்த தேசங்களை விட சீனா மீது அக்கறை செலுத்துவதில் தனக்கே முன்னுரிமை அதிகம் இருப்பதாக பிரிட்டன் நம்பியது. காரணம் அமெரிக்காவைக் காட்டிலும் பிரிட்டன் சீனாவில் அதிக பணத்தைக் கொட்டியிருந்தது. பிரிட்டனும் ஜப்பானும் 72 சதசவீத முதலீட்டைச் சீனாவில் செய்திருந்தன. அமெரிக்கா ஜப்பானை விட அதிக அறவி்ல் முதலீடு செய்திருந்தது.

சீனாவை அபகரித்துக் கொள்வதில் ஜப்பான் காட்டிய அவசரத்துக்கு காரணம் மேற்படி போட்டியாளர்கள் தான். நான் தான் அதிகம் முதலீடு செய்துள்ளேன். சீனா எனக்கு தான் சொந்தம் என்று ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு போர் தொடுக்க ஆரம்பித்தால் விவகாரம் சிக்கலாகி விடும். ஆகவே உடனுக்குடன் சீனப்பிராந்தியத்தைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஜப்பான் துடித்தது. ஜனவரி 1932ல் ஜப்பான் ஷாங்காய் மீது போர் தொடுத்த போது, ஐரோப்பா நிமிர்ந்து உட்கார்ந்தது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி என்று ஒவ்வொரு நாடும் இந்தப்போரை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தன. ஐரோப்பிய மக்களையும் இந்த போர் உலுக்கியது. எதிர்ப்புக்கள் அதிகம் காட்டமுடியாத சீனாவை ஜப்பானிய விமானங்கள் பறந்து பறந்து தாக்கியதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதற்காக இந்த போர்? சீனா ஜப்பானை என்ன செய்தது? அப்பாவி சீனர்கள் எதற்காக குண்டடிபட்டு சாகவேண்டும்? இது அநியாயம் இல்லையா? சீனா மீது அக்கறையும் கரிசனமும் குவிய ஆரம்பித்த அதே சமயம் ஜப்பானை மேலாதிக்கம் செலுத்தும் ஒரு தீய சக்தியாகவும் ஐரோப்பா பார்க்க ஆரம்பித்தது.

மஞ்சூரியா மீது ஜப்பான் அடுத்த தாக்குதலை நிகழ்த்திய போது சீனா லீக் ஒஃப் நேஷன்ஸிடம் (League of Nations) முறையிட்டது. சரி, இவர்கள் தலையிட்டு ஏதாவது செய்வார்கள் என்று மக்கள் காத்திருந்தனர். ஆனால், லீக் அலட்டிக்கொள்ளவில்லை. ஜப்பானின் பெரும் படையை எதிர்த்து நிற்கும் அளவுக்கு சக்தி தன்னிடம் இல்லை என்று புலம்பியது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிற நாடுகள் எதுவும் இதில் தலையிடவில்லை. லீக் மட்டுமல்ல எந்த சர்வதேச அமைப்பாலும் போரைத் தடுத்து நிறுத்த முடியாது என்னும் உண்மை இந்த போரினால் அம்பலமானது. அமெரிக்கா இந்தப் போரைக் கண்டித்தது. பிரிட்டன் நிலை கொள்ள முடியாமல் தவித்தது. சீனாவுக்கு ஆதரவாகப் போரில் குதித்தால் ஜப்பானைப் போலவே தானும் எதிர்க்கப்படுவோம் என்று அதற்குத் தெரிந்து போனது.

தவிரவும், கோம்ண்டாங் படைமீது மேற்கு நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. கோமிண்டாங்குக்கு உதவுவதன் மூலம் சீனாவைக் காப்பாற்றிவிட முடியாது என்று அவர்கள் நம்பினார்கள். கூடுதலாக, தேவையில்லாமல் ஜப்பானை பகைத்துக்கொள்ள நேரிடும். எதற்கு அநாவசிய வம்பு.?

சமகாலத்தில் ஐரோப்பாவில் ஜேர்மனியின் பலப்படுத்தல்

இவ்வாறாக ஆசியாக் கண்டத்தில் சீனா மீதான ஜப்பானின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது ஐரோப்பாவில் ஹிட்லர் மையின் காம்ஃப் நூலில் தான் எழுதிய தனது கனவான தூயஜேர்மனியை உருவாக்கும் திட்டங்களின் முன்னெடுப்புகளை நனவாக்கும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த தொடங்கி இருந்தார்.

ஹிட்லரை பிரிட்டன் அறிந்திருந்தது.. பெருகிக்கொண்டிருக்கும் நாசி இராணுவபலம், யூத வதை முகாம்கள், யூத இன அழிப்பு. ஜேர்மனியில் இருந்து தப்பி ஓடி வந்த யூத அகதிகள் ஜேர்மனியில் நடந்து வரும் கொலைபாதகச் செயல்களை ஊர்ஜிதப்படுத்தினர். என்றாலும் பிரிட்டன் கண்டு கொள்ளாமல் இருந்தது. பிரிட்டனை விட பிரான்ஸ் ஜேர்மனியை நன்கறிந்திருந்தது. இது அபாயகரமான போக்கு என்று அதற்கு நன்கு தெரிந்திருந்தது. அன்றைய ஃபிரஞ்சு ராணுவம், ஜேர்மன் ராணுவத்தை விட வலுவாகத்தான் அன்று இருந்தது. ஆனால் யுத்தம் என்று வந்துவிட்டால் ஜேர்மனியை எதிர்கொள்ள முடியுமா என்னும் தயக்கம் பிரான்ஸிடம் இருந்தது. இந்த தயக்கம், பிரான்ஸை வெறும் பார்வையாளராக மாற்றியது. நவம்பர் 1933ல் பிரிட்டிஷ் அம்பாஸிடர் எரிக் பைப்ஸ் (Sir Eric Phipps) என்பவரை ஹிட்லர் சந்தித்து பேசினார். உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஆங்கிலேயருக்கும் ஜேர்மனியர்களுக்கும் இடையில் இணைப்பு ஏற்படவேண்டும் என்பது தான் என் விருப்பம். எங்கள் தேச நலனிற்காக நீங்கள் ஓர் உபகாரம் செய்ய வேண்டும். எங்கள் ராணுவத்தின் பலம் பெருகவேண்டும். மூன்று லட்சம் பேராவது இருந்தால் தான் நல்லது. உங்கள் ஆதரவு கிடைக்குமா? பொறுத்திருங்கள் ஹிட்லர் குறைந்தது பத்து ஆண்டுகளாவது நீங்கள் காத்திருக்கத் தான் வேண்டும்.

 
  large.815285226_Saarlandkarte1935.jpg.b7d961c2e81e99c733f6d91d508ca82c.jpglarge.1935-Saarland-Germany-postcard.jpg.a0c9b5c710ecb74bab5320e0e8e146e3.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

சரி அது ஒரு பக்கம் கிடைக்கட்டும் என்று போலந்து பக்கம் திரும்பினார் ஹிட்லர். ரகசிய பேச்சுவார்த்தைகள்  நடந்தன. ஜனவரி 1934ல் ஒப்பந்தம் ஒன்றையும் போட்டுக்கொண்டார் ஹிட்லர். எக்காரணத்தைக் கொண்டும் ஜேர்மனி போலந்தைத் தாக்காது என்பது தான் அந்த ஒப்பந்ததின் ஷரத்து.

ஹிட்லர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறிக்கொண்டிருந்தார். 1935 தொடக்கத்தில் ஜேர்மனியின் ஒரு மாகாணமான சார்லாண்ட்(Saarland) சட்டபூர்வமாக அதனுடன் ஒன்றிணைக்கப்ட்ட போது பிரான்ஸும் பிரிட்டனும் அதிர்ந்து போயின. காரணம், வெர்ஸைல்ஸ் ஒப்பந்தப்படி இந்த பிரதேசம் ஜேர்மனியின் கைவிட்டு போய்விட்டது. பிரிட்டனும் பிரான்ஸும் மட்டுமே இந்த பிரதேசத்துக்கு சொந்தம் கொண்டாட முடியும். நிர்வகிக்கும் உரிமை பிரானஸிடம் இருந்தது. 1933 ல் நாசிகளுக்கு எதிரானவர்கள் பலர் சார்லாண்டுக்கு ஓடிப்போனார்கள். ஜேர்மனியின் ஆட்சிக்கு உட்படாத பிரதேசமாக சார்லாண்ட் இருந்ததால் அங்கே பாதுகாப்பு கிடைக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. சார்லாண்ட் எக்காலத்திலும் ஜேர்மனிக்கு போய்விடக்கூடாது, அது பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். நாசிகளுக்கு எதிரான ஒரு ஜேர்மனிய குழு அங்கே உருப்பெற்றது.

அதே சமயம், சார்லாண்டில் இருந்த ஜேர்மனியப் பிரஜைகள் பிரான்ஸின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். நாசி ஜேர்மனியில் ஆயிரம் குற்றம், குறைகள் இருந்தாலும் நாங்கள் ஜேர்மனியோடு தான் இணைவோம் என்றனர். நாசி எதிர்ப்புக் குழுவினரால் இவர்களை ஈர்க்க முடியவில்லை. சார்லாண்ட் ஜேர்மனியர்கள் பேர்லினுடன் இணையும் நாளை எதி்ர்நோக்கியிருந்தனர். 1920 ம் ஆண்டு லீக் ஓஃப்் நேஷன்ஆஇன் தீர்மானத்தின்படி, பிரான்ஸ் பதினைந்து ஆண்டுகள் மட்டுமே மேலாதிக்கம் செலுத்த முடியும். அதற்குப் பிறகு அங்கே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஜனவரி 15, 1935 ல் வாக்கெடுப்பு நடந்த போது 90.30 சதவீத மக்கள் ஜேர்மனிக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆகவே சட்டப்படி சார்லாண்ட ஜேர்மனியுடன் சேர்ந்து கொண்டது.

large.1816903379_DeutschlandVersaillerVertrag.jpg.7b2787ac7bbbec2609f423f59acf6e34.jpg

 

 

 

 

 

சந்தேகமில்லாமல் ஜேர்மனியின் பலம் பெருகிக் கொண்டிருந்தது. ராணுவத்தைக் கட்டமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார் ஹிட்லர். ஜேர்மனியால் நேரக்கூடிய ஆபத்தை பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மூன்றும் உடனே புரிந்து கொண்டு விட்டன. இனி எழுந்திருக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே முந்தைய போரை முடிவுக்குக் கொண்டுவந்தோம். ஆனால், இன்று ஜேர்மனி தட்டிவிட்டு கொண்டு எழுந்து நிற்கிறது. அதோடு நில்லாமல், ஆயுதங்களையும் குவித்து வைத்து கொண்டு மல்லுக்கட்டி நிற்கிறது. இது சரியல்ல. ஜேர்மனியால் இன்னொரு போர் மூளக்கூடிய அபாயத்தை மறுக்க முடியாது. மேலும் மேலும் ஹிட்லர் ஆயுதங்களைக் குவித்துக் கொண்டே போகிறார். முந்தைய போரில் நாம் இழந்த பிரதேசங்களை மீண்டும் பிடிப்போம் என்று உணர்ச்சி பொங்க உரையாற்றுகிறார். உளவுத்தகவல்கள் ஜேர்மனியின் போர் விருப்பத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன.

முந்தைய யுத்தத்தில் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தைத் தொடர்வது என்று இந்த நாடுகள் முடிவு செய்தன. நாம் நேச நாடுகளாகவே நீடிப்போம். இந்த அணி அப்படியே தொடரட்டும். நமக்குள்ளே எந்தப் பிரச்சனையும் இருக்கக்கூடாது. ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம். ஆபத்து என்றால் ஓரணியில் திரள்வோம்.

 பிரான்ஸ் இத்தாலி உடன்படிக்கை Franco- Italian Agreement

ஜனவரி 1935 ல் பிரான்ஸும் இத்தாலியும் கைகுலுக்கிக் கொண்டன.Franco-Italian Agreement) ஜனவரி 5, 1935 ல் ரோமுக்கு சென்று முஸோலினியைச் சந்தித்தார் பிரான்ஸின் அயல்துறை அமைச்சர் பியரெ லவால்(Pierre Laval). பிரான்ஸுக்கு சொந்தமான சோமாலிலாந்தில் இருந்து  (தற்போது Djibouti) சில பகுதிகளை உங்களுக்குத் தந்து விடுகிறோம். எதியோப்பியாவில் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளலாம். பதிலுக்கு நீங்கள் எங்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளவேண்டும். ஜேர்மன் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தால் நீங்கள் கைகொடுக்க வேண்டும்.

மே 2 1935 ல் சோவியத்தும் பிரான்ஸும் ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டன. (Franco- Soviet Treaty of Mutual Assistance) சோவியத்துடன் சேர்வதற்கு முதல் நிறைய சிந்தித்தது பிரான்ஸ். ஆனாலும், அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. சோவியத்தின் கம்யூனிச சித்தாந்தத்தை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் ஹிட்லரின் ராணுவ விரிவாக்கத்துக்கு ஈடு கொடுக்க வேண்டுமானால் சோவியத்தின் உதவி அவசியம் என்பதை உணர்ந்திருந்தது.

பிரிட்டன் - ஜேர்மனி ஒப்பந்தம்     -     Anglo- German Naval Agreement

ஜுன்19, 1935 ல்  பேரதிசயமாக, பிரிட்டனும் ஜேர்மனியும் ஒர் உடன்படிக்கையை உருவாக்கி கையெழுத்திட்டன. (Anglo- German Naval Agreement) 1919 வெர்ஸைல்ஸ் ஒப்பந்தத்தின்படி, ஜேர்மனி தன் கடற்படையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றை ஜேர்மனி வாங்க முடியாது. பயன்படுத்த முடியாது. ஆறு கனமான க்ரூஸர்கள், ஆறு மிதமான க்ரூசர்கள்,12 டெஸ்ட்ராயர் போர்க்கப்பல்கள், 12 டார்பிடோ படகுகள் இவை மட்டுமே தற்பாதுகாப்பக்காக அனுமதிக்கப்பட்டிருந்தன.

ஜேர்மனி பல்வேறு சமயங்களில் தன் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. இதென்ன அநியாயம்? தோற்றுப்போன ஒரே காரணத்திற்காக எங்கள் பலத்தை நாங்கள் குறைத்துக் கொள்ளவேண்டுமா? ஒன்று ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தங்கள் பலத்தை எங்களோடு சேர்ந்து குறைத்துக்கொள்ள வேண்டும். அல்லது எங்களையும் உங்களுக்கு சமமாக வளர அனுமதிக்கவேண்டும்.

1919ம் ஆண்டுக்கு பிறகு, பிரிட்டனில் ஜேர்மனிக்கு ஆதரவான அலை அங்குமிங்குமாக வீச ஆரம்பித்தது. ஆயிரம் சொன்னாலும் ஜேர்மனியை இப்படி அழுத்திப்பிடிப்பது சரியல்ல என்று விமர்சனங்கள் எழுந்தன. எப்போதோ போட்ட ஒப்பந்தத்தை எதற்கு உடும்பு போல் பிடித்துக் கொள்ளவேண்டும். கொஞ்சம் தளர்த்தலாமே என்று வெளிப்படையாக பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஐரோப்பாவின் சக்திவாய்ந்த தேசம், ஜேர்மனி. அங்கே அமைதி நிலவவேண்டுமானால், அவர்களால் ஐரோப்பாவில் அமைதி நிலவ வேண்டுமானால் நாம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

ஹிட்லரின் வருகைக்குப் பிறகு பிரிட்டன் அரசாங்கத்திடம் இந்த தடுமாற்றம் இருக்கவே செய்தது. என்ன செய்வது ஜேர்மனியை? கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் என்ன ஆகும்? என்ன செய்வார் ஹிட்லர்? மீண்டும் ஒரு போர் மூளுமா? அல்லது தன்னிறைவு பெற்ற ஜேர்மனியில் அமைதி நிலவுமா? 

ஆகஸ்ட் 1933ல் பாதுகாப்புதுறையைச் சேர்ந்த ஜெனரல் சர் மௌரிஸ் ஹாங்கே என்பவர் ஜேர்மனிக்கு சென்று வந்தார். தான் தரிசித்த நவ ஜேர்மனியைப்பற்றி அக்ரோபர் மாதம் அவர் ஒரு குறிப்பு எழுதினார். என்ன செய்யப்போகிறது பிரிட்டன்? மைய்ன் காம்ஃப் எழுதிய ஹிட்லரோடு உறவு வைத்துக்கொள்ள போகிறோமா? தான் சொன்னது போல் அவர் போலந்தை அபகரித்துக் கொள்வார் என்று நம்பப்போகிறோமா? அல்லது, ஜேர்மனியின் சங்கடங்களை, சவால்களை, தேவைகளை உணர்ந்த புதிய தலைவராக ஹிட்லரை அங்கீகரிகப்போகிறோமா? இந்த புதிருக்கு உடனே நாம் விடை கண்டு பிடித்தாக வேண்டும்.

large.562048530_JoachimvonRibbentrop.jpg.9bce90eceb8ccbe5bd2314f545cfc842.jpgஹிட்லரோடு கைகோர்த்துக் கொள்ள முடிவு செய்தது பிரிட்டன். மார்ச் 1935 ல் ஹிட்லர், ஜோவாசிம் ஃவொன் ரிப்பன்ட்ராப் (Joachim von Ribbentrop) என்பவரை ஜேர்மனியின் அயல்துறை அமைச்சராக நியமனம் செய்தார். ஜுன் 2, 1935 ல் ரிப்பன்ராப் லண்டன் சென்றார். தன் வாதத்தை அவர் அழுத்தமாக எடுத்து வைத்தார். எங்கள் கோரிக்கையை ஏற்று ஜேர்மன் கடற்படையை பிரிட்டன் பலப்படுத்தவேண்டும். நூற்றுக்கு முப்பதைந்து என்ற விகிதத்தில் பலத்தை கூட்டிலாலே போதுமானது. இதை நீங்கள் மறுப்பதாக இருந்தால் பாதகமில்லை, எங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல்  எங்கள் பலத்தை நாங்களே அதிகப்படுத்திக் கொள்வோம். ரிப்பன்ராபின் குரலில் தொனித்த உறுதியையும் அலட்சியத்தையும் ஆணவத்தையும் கண்டு திகைத்தது பிரிட்டன்.  நிச்சயம் இது போன்ற ஒரு தொனியில் பேபசி எந்ந உடன்படிக்கையையும் நிறைவு செய்ய முடியாது. அதிலும் ஜேர்மனி வந்திருப்பது   பிரிட்டனிடம் உதவி வேண்டி. இப்படியா உதவி கேட்பார்கள்?     

 

மறுத்துவிட தான் முடிவு செய்ய நினைத்தது பிரிட்டன். ஆனால் யோசித்துப் பார்த்த போது, உடன்படிக்கை போட்டுக்கொள்வது தான் சரி என்று தோன்றியது.. ஹிட்லர் சொன்னதை செய்து முடிக்கக்கூடியவர், செய்து முடிக்க முடியும் என்னும் நம்பிக்கை இருப்பதால் தான் இந்த வித மிரட்டல் தொனியுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடிகிறது. உடன்படிக்கை போடாவிட்டால், ஜேர்மனி தன் கப்பற்படை பலத்தை கணக்கிலடங்கா விதத்தில் கூட்டிவிடும். ஜேர்மனியின் தொட்ழ்நுட்ப திறனையும் கட்டுமான திறனையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. விவேகத்துடன் நடந்து கொள்வது தான் சிறந்த வழி.

தன் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்ககளில் இதுவும் ஒன்று என்று ஹிட்லர் இந்தச் சம்பவத்தை பின்னர் கொண்டாடிக் கொண்டார்.

எதியோப்பிய ஆக்கிரமிப்பு Italien Occupation in Ethiopia

அக்ரோபர் 1935 ல் இத்தாலி எதியோப்பியாவை(அபிசீனியா என்றும் அழைப்பார்கள்) ஆக்கிரமித்தது. இத்தாலியப் படைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு எதியோப்பியாவிடம் படை வலிமை கிடையாது. ஆகவே எதியோப்பியா இத்தாலியின் ராணுவப்பலத்தில் சுருண்டு ஒடுங்கிபோனது. இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்னும் பெயரில் தனக்கான காலனிகளை இத்தாலி உருவாக்கிக் கொண்டது. ஜப்பானின் சீன ஆக்கிரமிப்பை எப்படி லீக் ஒஃப் நேஷன்ஸால் தடுத்து நிறுத்த முடியவில்லையோ அப்படியே இத்தாலிய ஆக்கிரமிப்பையும் லீக்கால் தடுத்து நிறுத்த முடியவில்லை. வேடிக்கை மட்டுமே பாத்துக்கொண்டிருந்தது. இத்தாலி, எதியோப்பியா இரண்டுமே லீக்னி உறுப்பு நாடுகள் என்ற போதிலும்.

இந்த ஆக்கிரமிப்பு முசோலினியை பிரபலப்படுத்தியது. ஐரோப்பிய நாடுகள் இந்த ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜேர்மனி இத்தாலிக்கு கைகொடுக்க முன்வந்தது. எதியோப்பியாவை இத்தாலி ஆக்கிரமித்ததில் தவறேதுமில்லை. இத்தாலியை நாம் ஆதரிக்கிறோம் என்று அறிவித்தது ஜேர்மனி.

அடுத்ததாக ரைன்லாந்து பக்கம் பார்வையை திருப்பினர் ஹிட்லர். வெர்சைலஸ் ஒப்பந்தத்தால் நிராயுதபாணியாக மாற்றப்ட்ட மற்றொரு பிரதேசம். ராணுவ சீருடைகளை இங்கு பார்க்க முடியாது. ஜேர்மனி ஒரு பக்கம் பலம் பெற்றுக்கொண்டிருக்கும் போது, ஜேர்மனியின் ஒரு பாகமான ரைன்லாந்து  பலவீனமாக இருப்பது தேச அவமானம் அல்லவா? மார்ச் 1936 ல் ஹிட்லர் உத்தரவு பிறப்பித்தார். பொட்டல் காடாக ரைன்லாந்து இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. நாசிகள் இங்கே சென்று தழைத்துப் பரவட்டும். வெர்சைல்ஸ் வாத்தியார் காலாவதியாகிவிட்டார். நாம் அவருக்கு கீழ் படிய வேண்டிய அவசியம் இல்லை.

உத்தரவின் படி 32000 ராணுவ வீர்ர்களும் ஆயுதம் தரித்த காவல்வீரர்களும் ரைன்லாந்துக்குள் புகுந்தனர். ஹிட்லர் எதிர்பார்த்தபடியே எந்த எதிர்ப்பும் யாரிடம் இருந்தும் கிளம்பவில்லை. அப்படியே கேட்டாலும் பதில் தயாராகவே இருந்தது. ரைன்லாந்து என் நாட்டின் ஒரு பகுதி. தேவைக்கேற்ப ராணுவத்தை அங்கே கொஞ்சம் நகர்த்திக் கொண்டதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை?

பிரிட்டனிடம் ஹிட்லருக்கு எந்ந பயமும் இல்லை. ஆனால் பிரான்ஸிடம் கொஞ்சம் பயம் இருந்தது. ராணுவத்திடமும் அவர் சொல்லியிருந்தார். ஒருவேளை பிரான் தரப்பில் ஏதாவது எதிர்ப்பு வந்தால் சட்டென்று பின்வாங்கி விடுங்கள். ஆனால் பிரான்ஸ் அமைதியாகவே இருந்தது. ஹிட்லர் இதை ஒரு வெற்றியாக கருதினார். இனி பிரான்ஸ் குறித்து அச்சப்படதேவையில்லை.

 

ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் – Spanish civil war – Spanicher Bürgerkrieg

ஜுலை 17, 1936 தொடங்கி ஏப்ரல் 1 1939 வரை நீடித்த ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தம் ஸ்பெயினை கிழித்து கந்தலாக்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதும் ஸ்பெயின் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்திருகிறது. கன்சர்வேடிவ், ரிஃபோர்மிஸ்ட் இரு குழுக்களும் மாற்றி மாற்றி போரிட்டு ஆட்சியைக் கைப்பற்றின. இந்த உள்நாட்டு யுத்தத்தைத் தொடங்கிவைத்தவர்கள் சில ராணுவ ஜெனரல்கள். இவர்களுக்கு கன்சர்வேடிவ் குழு (Conferderation de Derechas Autonomas – CEDA), கார்லிஸ்ட் குழுக்கள் மற்றும் Falange Espanola delas JONS என்னும் பாசிஸ குழுக்ககளுக்கு ஆதரவு தந்தன. ரிபப்ளிக்கன் கட்சி அதிபராக இருந்த Manuel Azana என்பவருக்கு எதிராக இவர்கள் கலகத்தில் இறங்கினார்கள். போரின் முடிவில் அதிபர் தூக்கியடிக்கபட்டார். ஜெனரல் ஃபிரான்சிகோ ஃப்பிராங்கோ  பதவியைக் கைப்பறினார்.

இந்த உள்நாட்டு யுத்தத்தில் ஸ்பெயினுக்கு சோவியத்யூனியன் ஆதரித்தது. எர்னெஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ச் ஆர்வெல் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் இந்ந போரின் நிகழ்வுகளை எழுதி உலக மக்களின் கவனத்தை, குறிப்பாக ஐரோப்பாவின் கவனத்தை ஈர்த்தனர். இந்த போரின் ஆரம்பக்கட்டத்திலேயே, சுமார் 50000 பொதுமக்கள் துப்பாக்கிச்சூட்டில் மாட்டிக்கொண்டும், கைதிகளாகப் பிடிபட்டும் உயிரிழந்தனர். நவம்பர் 1936ல் ஜேர்மனியும் இத்தாலியும் ஃபிராங்கோவின் கைப்பற்றபட்ட ஆட்சியை ஆதரித்தனர். டிசம்பரில் இத்தாலி தன் ராணுவத்தை ஸ்பெயினுக்கு அனுப்பிவைத்தது. ஃபிராங்கோவோடு சேர்ந்து ஸ்பெயினை முறியடிப்பதற்காக.

இரண்டாம் உலகப்போரின் முன்னோட்டமாக இதைக் கொள்ள முடியும். ஒரு பக்கம், ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் கூட்டணி, மற்றொரு பக்கம் பிரிட்டன், பிரான்ஸ் கூட்டணி. பிறகு சோவியத் யூனியன்.

நவம்பர் 1936ல் ஜேர்மனியும் ஜப்பானும் கைகுலுக்கிக் கொண்டன. இரண்டையும் அருகருகே கொண்டுவந்த சக்தி., சோவியத் எதிர்ப்பு. கம்யூனிஸ்ட் இண்டரநஷனல் (மொஸ்கோவில் தொடங்கப்பட்ட சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு. Communist International என்பதன் முன்னெழுத்து சுருக்கமாக Comintern- கோமிண்டர்ன் என்றழைக்கப்பட்டது) பிற நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது. கலகம் செய்ய தூண்டுகிறது. ஜார் மன்னரை மக்கள் தூக்கியெறிந்ததைப் போல் ஏகாதிபத்திய நாடுகளின் அரசாங்கத்தை அந்தந்த தேசத்து மக்கள் தூக்கியெறிய வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. இது ஆபத்து. சோவியத்யூனியன் என்னும் தீயசக்தியிடம் இருந்து நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ளவேண்டியது அவசியம். சோவியத் முதலில் என்னை தாக்கினால் நீ கைகொடு. உன்னைத்தாக்கினால் நான் உன் பக்கம் நிற்பேன். நாம் சோவித்தின் பக்கம் தலைவைத்தும் படுக்க வேண்டாம். இது தான் ஒப்பந்தத்தின் சாரம்.

Ant-Comintern Pact என்று இந்ந ஒப்பந்தம் அழைக்கப்பட்டது.

இத்தாலியும் ஜேர்மனியுடன் - Germany and Fascist Italy

நவம்பர் 1937 ல் இத்தாலி இந்த ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டது. ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி  மூன்றும் ஒன்றிணைந்து அச்சு நாடுகளாக (Axis Powers) மாறின.

·        இத்தாலி இந்த கூட்டணியி்ல் இணைந்ததற்கு என்ன காரணம்?

·        ஏற்கனவே பிரிட்டனோடும் பிரான்ஸோடும் இத்தாலி தனித்தனியே போட்டுக்கொண்ட ஒப்பந்தகள் என்ன ஆயிற்று?

·        ஜேர்மனிக்கு எதிராக ஒன்று சேர்வோம் என்று சொன்ன இத்தாலி அதே ஜேர்மனியிடம் அடைக்கலம் பகுந்தது ஏன்?

காரணம் ஏமாற்றம். ஏப்ரல் 14, 1935 ல் இத்தாலியில் உள்ள Stressa என்னும் பகுதியில் பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி மூன்றும் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக்கொண்டன. ஒஸ்ரியாவின் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும், ஜேர்மனியின் எதிர்கால அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்னும் கோரிக்கைகளை இந்த மூன்று நாடுகளும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இந்த ஒப்பந்தத்தால் பயன் ஏதும் இல்லை என்பதை முசோலினி விரைவில் உணர்ந்து கொண்டார். ஜேர்மனியின் ராணுவமயலாக்கலை பிரிட்டனோ பிரான்ஸோ எதிர்பதாக தெரியவில்லை. ஒப்புக்கு கூட ஜேர்மனியை மிரட்ட அவர்கள் தயாராக இல்லை.

ஆக, பிரிட்டன், பிரான்ஸ் இரண்டையும் நம்ப முடியாது என்று முஸோலினியின் உள்மனம் எச்சரித்தது. இந்த இரு தேசங்களாலும் ஜேர்மனியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியவில்லை. பலம் பொருந்திய சக்தியாக ஹிட்லர் மாறிக்கொண்டிருக்கிறார். அபிசீனியாவை அள்ளிக்கொண்ட போது ஜேர்மனி தான் என்னை ஆதரித்தது. என்ன செய்தன பிரான்ஸும் பிரிட்டனும்?

முசோலினியின் மனமுறிவுக்கு மற்றொரு காரணம், Hoare-Laval ஒப்பந்தப்படி, மூன்றில் ஒரு பகுதி அபினீசியவை இத்தாலிக்கு அளிப்பதாக பிரிட்டனும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. மிகவும் ரகசியமக இத்தாலியுடன் இரு நாடுகளும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இது. எப்படியோ இந்த ஒப்பந்தம் பற்றிய விவரம் வெளியே கசிந்துவிட்டது. பிரிட்டன், பிரான்ஸ் இரு நாடுகளிலும் குழப்பம் ஆரம்பித்து விட்டது. அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள். பிரிட்டன் அயலுறவுத்துறை அமைச்சர்(Samuel Hoare) ராஜிநாமா செய்தார். ஒப்பந்தம் முறிவுக்கு வந்தது.

அதற்கு பிறகு, பிரிட்டனும் பிரான்ஸும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. எப்படி நம்ப முடியும் இவர்களை? ஹிட்லர் எவ்வளவோ மேல். அவர் செய்வது அக்கிரமம் என்றால், நான் செய்ய விரும்புவதும் அதையே தான். ஜேர்மனியை போலவே இத்தாலிக்கும் கொலனிகள் தேவைப்படுகின்றன. ஆக்கிரமிப்புகள் தேவைப்படுகின்றன. அள்ள அள்ள குறையாத செல்வம் தேவைப்படுகிறது. ஒத்த சிந்தனை உள்ள ஹிட்லருடன் கைகுலுக்கிக் கொள்வது தான் உகந்தது. தவிரவும், இவர்களுடன் இணைந்தால் சோவியத்யூனியனுடன் இருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும்.

சோவியத்யூனியனுக்கு எதிரான அணியில் சேர போலந்துக்கும் அழைப்பு விடுத்தார் ஹிட்லர். ஆனால், போலந்து அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஹிட்லரிடம் சிக்கிக் கொண்டால், அவர் உள்ளங்கைக்குள்  வைத்து நொறுக்கி விடுவார் என்று போலந்து அஞ்சியது.

ஹிட்லரோடு இணைவதில் ஜப்பானுக்கும் ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. சோவியத்துக்கு எதிரான அணியை ஹிட்லர் அமைப்பது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். ஆனால், சோவியத்தின் கூட்டாளியான  பிரிட்டனுடன் ஏன் ஜேர்மனி ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும்? இது முரண்பாடு அல்லவா? நாளை பிரச்சனை என்று வந்தால் பிரிட்டன் ஹிட்லருக்கா கைகொடுக்கும்? இது ஏன் இந்த ஹிட்லருக்கு புரியவில்லை? ஜப்பான் ராணுவத்துக்குப் பிறகு தான் விஷயம் தெரிந்தது. ஹிட்லர் செய்து கொண்டது ஒப்பந்தம் அல்ல. அது ஒரு சூழ்ச்சி. பிரிட்டனின் கடற்படைக்குச் சமானமாக தன் கடற்படையை வளர்த்துக் கொள்வதற்காக வாங்கப்பட்ட அவகாசம்.

ஐரோப்பாவை ஆட்டிப் படைக்கப் போகும் கூட்டணி உருவானது ஹிட்லர் தலைமையில்.

(தொடரும்)

நூல் இரண்டாம் உலகப்போர்.

எழுதியவர் மருதன். 

வெளியீடு கிழக்கு பதிப்பகம்.

பதிப்பு 2009 மே  

 

 • Like 5
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி இந்த நேரம் உழைப்பு மிக்க முயற்சிக்கு! தொடருங்கள் நேரம் கிடைக்கும் போது! 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • Partheepan Pasi (Poem) | பார்த்தீபன் பசி 33 (கவியோசை) Filmed by OsaiFilms  
  • திலீபனை விமர்சிக்க டக்கிக்கு என்ன அறுகதை இருக்கின்றது? – போராளிகள் கட்சி கேள்வி   எமது மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை நீத்த ஒரு தியாகிக்கு டக்ளஸ் போன்ற அரசின் அடிவருடிகள் விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மக்களுக்காகப் போராடிய ஒரு அமைப்பினையும் அதன் தலைவரையும் அவதூறு கதைப்பதென்பது தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார். நாடாளுன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் விடுதலைப் புலிகள் தொடர்பிலும், திலீபன் தொடர்பிலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரையும் அதன் போராளிகளையும் பற்றிக் கதைப்பதற்கு டக்ளஸ் தேவானந்தாவிற்கு என்ன அருகதை இருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்களுக்காகப் போராடிய ஒரு அமைப்பினையும் அதன் தலைவரையும் அவதூறு கதைப்பதென்பது தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும். டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்க்கை வராலாறுகள் தற்போது மக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படவில்லை என்பதால் இவரால் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் அனைத்தையும் மக்கள் மறந்து விட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இவ்வாறு கதைத்தாரோ தெரியவில்லை. அவ்வாறு அவர் நினைப்பாராயின் அது அவரின் வரலாற்றுத் தவறாகும். இனத்திற்கான துரோகிகளை மக்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள. டக்ளஸ் தேவானந்தாவால் சொல்லப்பட்ட விடயங்கள் ஒரு சிங்களப் நாடாளுமன்ற உறுப்பினரால் சொல்லப்பட்டிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் எம்மினத்தில் இருந்து வந்து எம்மினத்தை பெரும்பான்மைக்கு அடிபணிய வைக்கின்ற அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கின்ற டக்ளஸ் போன்ற புல்லுருவிகள் சொல்வதென்பது. அவருக்கு வாக்களித்த மக்களின் வாக்கினை கேள்விக்குட்படுத்துவனாக அமையும். இதற்காகவா மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள். போரினால் பாதிப்புற்ற எமது இனம் இவர்கள் காட்டிய அபிவிருத்தி மாயையை நம்பி ஏமாந்து சற்று அதிகப்படியான வாக்குகளை வழங்கி விட்டது. அதனை வைத்து வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைத்து விடலாம் என்று நினைக்கின்றார்கள் போல. எமது மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை நீத்த ஒரு தியாகிக்கு டக்ளஸ் போன்ற அரசின் அடிவருடிகள் விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மக்களும் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறானவர்களை தேர்ந்தெடுத்த எமது மக்கள் தான் இது குறித்து வருத்தப்பட வேண்டும்” – என்று தெரிவித்தார். (150) https://newuthayan.com/திலீபனை-விமர்சிக்க-டக்கி/
  • திலீபனுக்கான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!         https://newuthayan.com/உண்ணாவிரதப/
  • கம்மாக்கோ... சிக்காக்கோ.... என்று, முன்பு.... பகிடியாக சொல்வார்கள். ஹ்ம்ம்... நடக்கட்டும்.   🤣 😎
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.