Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தேசத்திற்கு மகுடம் சூட்டிய, சுமந்திரனின் புதல்வன்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

sum%2Bf.jpg

- Abu Zainab -

ஜேர்மன் நாட்டின்  University of Cologne யினால் ஏற்பாடு செய்யப்பட்ட Tilbury House World Schools Debate Championship எனும் சர்வதேச பாடசாலை மட்ட விவாத மேடையில் இலங்கை அணி வெற்றி பெற்று உலகளாவிய Champion பட்டத்தை வசப்படுத்தியிருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற உழைத்த அந்த மாணவர் அணியினையும் பயிற்றுவித்த ஊக்கப்படுத்திய அக்கறைக் குழுக்கள் அனைவருக்கும் முதற்கண் வாழ்த்துக்கள். இவ்வெற்றி 1996 உலகக் கிண்ண வெற்றிக்கு சமாந்தரமான ஒரு வெற்றியகும்.

குறித்த விவாத அணிக்கு தலைவராக செயற்பட்டதோடு மட்டுமல்லாமல் குறித்த தொடரில் உலகளாவிய ரீதியில் சிறந்த விவாதப் பேச்சாளருக்கான முதலாம் நிலையையும் றோயல் கல்லூரியின் மாணவன் Shalem Sumanthiran (ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் புதல்வன்) பெற்று தேசத்திற்கு மகுடம் சூட்டியுள்ளார். இதில் தொடரில் உலகளாவிய ரீதியில் 8ஆம் நிலையை றோயல் கல்லூரியின் மாணவன் Janul De Silva பெற்று இம்மகுடத்திற்கு வலுச் சேர்த்துள்ளார்.

இந்த நிகழ்வு நமக்கும் தேச நல்லிணக்கத்திற்கும் ஏராளமான செய்திகளை முன்மொழிகிறது. ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் சிறுபான்மை இனத்தில் உதித்த ஒரு தேசத்தை நேசிக்கும் நல்ல பிரஜை ஆவார். அவரும் றோயல் கல்லூரியின் பழைய மாணவர். Physics பட்டப்படிப்பை பூர்த்தி செய்ததன் பின்னர் சட்டக் கற்கையைக் கற்றுக் கொண்டவர். Methodist Church in Sri Lanka வின் Vice-President. சட்ட நுணுக்கத்திலுள்ள வல்லமையினால் இலங்கையின் முன்னணி சட்டத்தரணிகளுள் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.

இலங்கை நாட்டை குழறுபடிக்குட்படுத்த முனைபவர் என்ற குற்றச்சாட்டு சுமந்திரன் ஐயாவுக்கு வேண்டுமென்றே பல தடவைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது மிகவும் தவறான எந்த அடிப்படையுமற்ற விமர்சனமுமாகும்.  ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் சட்ட ஆட்சியை (Rule of Law) நிறுவுவதில் எப்போதும் முன் நின்று பாடுபடுபவர். நாட்டை நேசிக்கும் எந்த ஒரு பிரஜையாக இருந்தாலும் சட்ட ஆட்சியை நிலைநாட்டுவதில் முன் நின்று உழைக்க வேண்டும். அதைத்தான் சுமந்திரன் ஐயா செய்கிறார். அவரது நேர்மையான அணுகுமுறைக்கு தவறான வியாக்கியானமும் விமர்சனமும் வழங்கப்படுவது அவர் சிறுபான்மை உரிமைக்காக பாடுபடுபவர் என்பதனாலோ என்னவோ.

எது எப்படி இருப்பினும், அவரது மகன் உலகளாவிய ரீதியில் சாம்பியனாகி பெருமை சேர்த்திருப்பது இலங்கை நாட்டிற்கேயாகும். ஏனைய சட்ட வல்லுனர்களைப் போல் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் சட்டத்துறைக்கான பங்களிப்பின் மூலமும் நாட்டின் சட்டவாட்சியில் ஏற்படும் மேம்பாடு சர்வதேச அரங்கில் இலங்கைக்கு நற்பெயரையே ஏற்படுத்தும். முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் அடிப்படை மனித உரிமைகள் வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் இலவசமாக உதவ முன் வந்திருப்பதும் அவரின் இன மத பேதமற்ற மனித மாண்பிற்கு சான்றாகும்.

ஆக, சுமந்திரன் எனப்படும் ஆளுமை இலங்கை தேசிய அரங்கில் முக்கிய வகிபாகமுள்ள தேசப்பற்றுள்ள கற்ற சிறந்த ஆளுமையாகும். அவரை, இன மத பேதங்கள் அற்ற, நாட்டை நேசிக்கின்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் புத்திரனை உருவாக்கிய ஒரு நாட்டுப்பற்றாளனாகப் பார்ப்பதே பொருத்தமானதாகும்

http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_204.html

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 54
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இத்தனை அழிவுகளையும் ஏற்படுத்தியவர்கள் யார்? ஆயுதம் தூக்குவதற்கு முன் இனக்கலவரங்களை ஏற்படுத்தி, தமிழரை அகதிகளாக்கி, கப்பல்களில் ஏற்றி அனுப்பி வைத்து ஆயுதம் தூக்க நிர்பந்தித்தவர்கள் யார்?  இவர்கள் சரியா

ஒரு சக தமிழனாக சாலேம் சுமந்திரனுக்கு வாழ்த்துக்கள். ஆனாலும் இந்த திறமை அவரது தகப்பனாரின் செயல்கள்போல ஆளும்வர்க்கத்தை தூக்கிநிறுத்தவும் பாதுகாக்கவுமே பயன்படப்போகிறது என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. நான

முப்பது வருடம் எத்தனை அழிவு? எத்தனை ஆயிரம் பிள்ளைகளையும் எத்தனை கோடி சொத்துக்களையும் அழித்து முடித்தீர்கள் ? இவ்வளவும் அழித்து நீங்கள் சாதித்தது என்ன? ஆயுதம் இன்றி தனக்கு தெரிந்த சட்டத்தை பயன்படுத்தி

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ...இன்னொரு வாரிசு ரெடி😄 ...ஏன் மகனுக்கு முஸ்லீம் பேர் வைத்தவர் ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

வாழ்த்துக்கள் ...இன்னொரு வாரிசு ரெடி😄 ...ஏன் மகனுக்கு முஸ்லீம் பேர் வைத்தவர் ?

ஷாலெம் ஒரு முஸ்லிம் பேரல்ல,இது ஒரு ஹீப்ரு பெயர் இதன் அர்த்தம் சமதானம், வாழ்த்துக்கள், செல்வ  செழிப்பு,பூரணத்துவம் போன்ற அர்த்தங்களை கொடுக்கும். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, colomban said:

ஷாலெம் ஒரு முஸ்லிம் பேரல்ல,இது ஒரு ஹீப்ரு பெயர் இதன் அர்த்தம் சமதானம், வாழ்த்துக்கள், செல்வ  செழிப்பு,பூரணத்துவம் போன்ற அர்த்தங்களை கொடுக்கும். 

நன்றி விளக்கத்திற்கு ...அதோட சேர்த்து இன்னொரு தமிழ்ப் பெயரும் வைத்திருக்கலாம் 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்பன் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாய்வான் என்று சும்மாவா சொன்னார்கள்.

பாயும்போது தமிழ் மக்களையும் கொஞ்சம் மனதிலிறுத்துமாறு வேண்டி வாழ்த்துகிறேன். 👍👍👍

25 minutes ago, ரதி said:

நன்றி விளக்கத்திற்கு ...அதோட சேர்த்து இன்னொரு தமிழ்ப் பெயரும் வைத்திருக்கலாம் 
 
உங்களுடன் எவ்வளவு புடுங்குப்பட்டாலும் சிலவற்றைக் கேட்கும்போது மாகிழ்வாக உள்ளது. 😀👍

(எனது பிள்ளைகளில் ஒருவரைத் தவிர மிகுதி மூவருக்கும் தூய தமிழ்ப் பெயர்கள்தான்.😎 )

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ்முஸ்லிம் செய்தியை விட்டு  நல்லா புனுகு பூசுகினம் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் மகனின் இந்த  சிறந்த விவாதப் பேச்சால் தமிழினத்துக்கு என்ன விடிவு வந்து விட்டது? இப்போது முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு யாவராலும் புகழ்ந்து பேசப்படடாலும், இலங்கைக்கு வெற்றிகளை குவித்திருந்தாலும், அணியின் தலைவராக முடியவில்லை திறமை இருந்தும். கதிர்காமர் கூவி கூவி சிங்களத்துக்கு முண்டு கொடுத்திருந்தாலும், ஜனாதிபதியாக முடியவில்லை. சேர் பொன் இராமநாதன் முண்டு கொடுத்து  சிங்களத்தை காப்பாற்றியிருந்தாலும், தமிழருக்கு ஒரு சமநிலையை பேண முடியவில்லை இலங்கையில். தூக்கி வீசப்படும்போது,  நான் தமிழன் என புலம்பும்போது, இவர்களால் நலிந்த  சக  தமிழன் தான் கொதித்தெழுவான். 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஷாலெம் சுமந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

4 minutes ago, satan said:

சுமந்திரன் மகனின் இந்த  சிறந்த விவாதப் பேச்சால் தமிழினத்துக்கு என்ன விடிவு வந்து விட்டது?

யாழ்பாணத்தில் ஒருவர் பரீட்சையில் சித்தி அடைந்தால் வாழ்த்துகிறீர்களே அவர் பரீட்சையில் சித்தி அடைந்ததால் தமிழினத்துக்கு என்ன விடிவு வந்து விட்டது?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அடிவருடிகள் திறமைகள் சித்திகள் எஜமானருக்குத்தான் உதவும் என்பது அனுபவம் தந்த பாடம். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஷாலெம் சுமந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

யாழ்பாணத்தில் ஒருவர் பரீட்சையில் சித்தி அடைந்தால் வாழ்த்துகிறீர்களே அவர் பரீட்சையில் சித்தி அடைந்ததால் தமிழினத்துக்கு என்ன விடிவு வந்து விட்டது?

இப்ப உங்கள் பிரச்சனை என்ன ? சுமந்திரனுடைய மகனை வாழ்த்தவில்லை என்பதா ? 😂

இதோ வாழ்த்தினால் போயிற்று..

வாழ்த்துக்கள் Shalom 

இப்ப ஓகேயா விளங்க நினைப்பவன் 👍

 • Haha 1
Link to post
Share on other sites
46 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஷாலெம் சுமந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

யாழ்பாணத்தில் ஒருவர் பரீட்சையில் சித்தி அடைந்தால் வாழ்த்துகிறீர்களே அவர் பரீட்சையில் சித்தி அடைந்ததால் தமிழினத்துக்கு என்ன விடிவு வந்து விட்டது?

மரியாதை கேட்டு பெறுவதல்ல அப்படி பெற்றால் பிச்சை .

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மரியாதையாக கொடுப்பதை, சிங்களத்திடம் கொடுத்து பிச்சை தானே எடுக்கினம். அதுக்கு ராஜ தந்திர விளக்கம் வேறை. ஆனால் ஒன்றும் சாதித்ததாக தெரியவில்லை. மூப்பு மட்டுமே மிச்சம். காலம் தன் கடமையைச் செய்யுது. இவர்கள் மக்களை  ஏமாற்றி காலத்தை வீணடிக்கிறார்கள். இடத்தையும் காலத்தையும் வீணாக்குபவர்கள் அகற்றப்பட வேண்டியவர்களே. 

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, spyder12uk said:

மரியாதை கேட்டு பெறுவதல்ல அப்படி பெற்றால் பிச்சை .

மரியாதை கேட்டதா 🤣

கேட்டது ஒரு கேள்வி மட்டுமே 😇

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்பாணத்தில் ஒருவர் பரீட்சையில் சித்தி அடைந்தால் வாழ்த்துகிறீர்களே அவர் பரீட்சையில் சித்தி அடைந்ததால் தமிழினத்துக்கு என்ன விடிவு வந்து விட்டது?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

ஆக, சுமந்திரன் எனப்படும் ஆளுமை இலங்கை தேசிய அரங்கில் முக்கிய வகிபாகமுள்ள தேசப்பற்றுள்ள கற்ற சிறந்த ஆளுமையாகும். அவரை, இன மத பேதங்கள் அற்ற, நாட்டை நேசிக்கின்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் புத்திரனை உருவாக்கிய ஒரு நாட்டுப்பற்றாளனாகப் பார்ப்பதே பொருத்தமானதாகும்

மொத்தத்தில், சுமந்திரன் ஐயாவிடம் உதவி பெறும் ஒருவரால் சுமந்திரனுக்கும், புதல்வருக்கும்    மணி மகுடம் சூட்டும் இந்தக் கட்டுரையாளரின் நோக்கம்.  இதைப் பார்த்து சுமந்திரன் புளகாங்கிதம் அடையலாம்.  இவரது செயற்பாட்டால் நொந்து போன  தமிழினம் அல்ல. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

ஆக, சுமந்திரன் எனப்படும் ஆளுமை இலங்கை தேசிய அரங்கில் முக்கிய வகிபாகமுள்ள தேசப்பற்றுள்ள கற்ற சிறந்த ஆளுமையாகும். அவரை, இன மத பேதங்கள் அற்ற, நாட்டை நேசிக்கின்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் புத்திரனை உருவாக்கிய ஒரு நாட்டுப்பற்றாளனாகப் பார்ப்பதே பொருத்தமானதாகும்

இதை ஒரு சிங்களவன் சொல்லியிருந்தால் கூட சகித்துக் கொள்ளலாம். கூறுவதோ முசிலிம்கள். 🤔

எங்கோ இடிக்கிறதே 🤥

😂😂😂😂😂😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் மகன் என்பதற்காக ஒரு தமிழ்ப்பிள்ளையின் சாதனையை வாழ்த்தாமல் இருக்க முடியமா? வாழ்த்துக்கள் ஷேலம்! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

நாட்டை நேசிக்கும் எந்த ஒரு பிரஜையாக இருந்தாலும் சட்ட ஆட்சியை நிலைநாட்டுவதில் முன் நின்று உழைக்க வேண்டும். அதைத்தான் சுமந்திரன் ஐயா செய்கிறார். அவரது நேர்மையான அணுகுமுறைக்கு தவறான வியாக்கியானமும் விமர்சனமும் வழங்கப்படுவது அவர் சிறுபான்மை உரிமைக்காக பாடுபடுபவர் என்பதனாலோ என்னவோ.

நன்றாக வாழ்த்துங்கள் ஆனால் இந்த விளக்கம் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாட்டை நேசிக்கும் பிரஜையாக இருந்தால் எந்தப்பிரச்சனையும் இல்லை. தமிழ் மக்கள் பிரதிநிதி என்று கூறிக்கொண்டு, அவர்களது நீதி நிஞாயத்தை கேள்விக்குள்ளாக்குவதே இவரை வெறுப்பதற்கான காரணம்.   

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

ஜேர்மன் நாட்டின்  University of Cologne யினால் ஏற்பாடு செய்யப்பட்ட Tilbury House World Schools Debate Championship எனும் சர்வதேச பாடசாலை மட்ட விவாத மேடையில் இலங்கை அணி வெற்றி பெற்று உலகளாவிய Champion பட்டத்தை வசப்படுத்தியிருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற உழைத்த அந்த மாணவர் அணியினையும் பயிற்றுவித்த ஊக்கப்படுத்திய அக்கறைக் குழுக்கள் அனைவருக்கும் முதற்கண் வாழ்த்துக்கள். இவ்வெற்றி 1996 உலகக் கிண்ண வெற்றிக்கு சமாந்தரமான ஒரு வெற்றியகும்.

http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_204.html

மூன்று பிள்ளைகளுமே படிப்பிலும் பண்பிலும் மிகச்சிறந்தவர்கள். மகளும் ஐரோப்பிய நாடொன்றில் பரிசு பெற்றவ . சுமந்திரனும் றோயல் கல்லூரி தமிழ் சங்க தலைவராக இருந்து விவாதம் மற்றும் பேச்சு போட்டிகளில் நிறய பரிசு பெற்றுள்ளார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, nilmini said:

மூன்று பிள்ளைகளுமே படிப்பிலும் பண்பிலும் மிகச்சிறந்தவர்கள். மகளும் ஐரோப்பிய நாடொன்றில் பரிசு பெற்றவ . சுமந்திரனும் றோயல் கல்லூரி தமிழ் சங்க தலைவராக இருந்து விவாதம் மற்றும் பேச்சு போட்டிகளில் நிறய பரிசு பெற்றுள்ளார்.

இப்பவும் நிறைய பரிசு பெறுகிறார்...பணமாக...செலம் இல்லை சலிம்...இந்த தொடர்புதான்..இப்ப இந்த ஜனாசா  வழக்கிலை ஆஜாராகின்றார்..அதுசரி இப்ப ஜப்னா முசுலிமுக்கு...தன்கடை தலைவர்மாரின் செய்தியள்  இல்லையோ..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இப்பவும் நிறைய பரிசு பெறுகிறார்...பணமாக...செலம் இல்லை சலிம்...இந்த தொடர்புதான்..இப்ப இந்த ஜனாசா  வழக்கிலை ஆஜாராகின்றார்..அதுசரி இப்ப ஜப்னா முசுலிமுக்கு...தன்கடை தலைவர்மாரின் செய்தியள்  இல்லையோ..

காற்றுள்ள போதே தூற்றுகினம். (போற்றுகினம்)  இதற்கு பின்னால் அவதூறு காத்திருக்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான்.. நீங்கள் என்ன முஸ்லீமா..?!

இப்ப முஸ்லீம்கள் தான் சுமந்திரனை தலையில் தூக்கி வைச்சு ஆடுகிறார்கள். காரணம்.. அவர்கள் பக்கம் அவ்வளவு சட்டாம்பிகளுக்கு பிரச்சனை.

இவற்ற மகன் மட்டுமா.. ஆண்டு தோறும்.. எங்கள் யாழ் இந்து மாணவர்கள் சர்வதேச போட்டிகளில்.. தங்கம்.. வெள்ளி.. வெண்கலம் என்று குவிப்பதை எல்லாம்.. நீங்கள் செல்லும் தளங்கள் செய்தி ஆக்குவதில்லைப் போலும். 

இதெல்லாம்.. பெரிய சாதனை கிடையாது. நல்ல முயற்சி அவ்வளவே. முயற்சிக்கு பாரட்டலாம். 

அண்மையில் கூட கூகிள் நிறுவனத்தில் சர்வதேச விருதொன்றை யாழ் இந்து மாணவன் பெற்றிருந்தார் அவரின் கண்டுபிடிப்புக்காக. அதை எல்லாம்.. இப்படி தேசத்தின் கீர்த்தி.. மண்ணாங்கட்டின்னு ஒரு முஸ்லீம் தளமும் இணைக்கவில்லையே. எதுக்கு இந்த காக்கா புத்தி. 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாலெம் சுமந்திரன்!

கொழும்பான் அவர்களின் இந்தத் திரியில் உங்களைப் பாராட்டவோ, வாழ்த்தவோ மனம்வரவில்லை காரணம், உங்கள் திறமையை சிறீலங்காவின் கேடுகெட்ட அரசியலோடு சம்பந்தப்படுத்தி, தமிழரோடு இருந்துகொண்டே தமிழினத்தை அழிக்க ஒரு கருவியாக சிங்களத்துக்குத் துணைபோகும் சில முசுலீம்களால் நடாத்தப்படும் பத்திரிகையின் செய்தியைக் கொண்டு இந்தத்திரியை அவர் உருவாக்கியிருப்பதால்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் கூட கூகிள் நிறுவனத்தில் சர்வதேச விருதொன்றை யாழ் இந்து மாணவன் பெற்றிருந்தார் அவரின் கண்டுபிடிப்புக்காக. அதை எல்லாம்.. இப்படி தேசத்தின் கீர்த்தி.. மண்ணாங்கட்டின்னு ஒரு முஸ்லீம் தளமும் இணைக்கவில்லையே. எதுக்கு இந்த காக்கா புத்தி. 

அப்படிப் போடு அரிவாளை.....இது முசு ..நானாக்களின் தந்திரம்..தைந்த உசுப்பேத்தலில் சுமந்துவின் கொடிபறக்க..எல்லஐடமும் எதிர்ப்பு வர வோட்டுக்கள்  சிதறும்.....அப்ப இந்த நானாக்கள்..உள்ள சொற்ப வோட்டிலேயே 5 சீற்றெடுப்பினம்.....இந்த வாலுகள்...சும்மா ஆடாது..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திரு சுமந்திரனின் அரசியல் அனுகுமுறைகளில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அவரது மகன்  சாலெம் சுமந்திரனை வாழ்த்துவதற்கு  அது ஒரு தடை அல்ல. வாழ்த்துக்கள். 👍 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

தமிழ் மக்கள் மரியாதையாக கொடுப்பதை, சிங்களத்திடம் கொடுத்து பிச்சை தானே எடுக்கினம். அதுக்கு ராஜ தந்திர விளக்கம் வேறை. ஆனால் ஒன்றும் சாதித்ததாக தெரியவில்லை. மூப்பு மட்டுமே மிச்சம். காலம் தன் கடமையைச் செய்யுது. இவர்கள் மக்களை  ஏமாற்றி காலத்தை வீணடிக்கிறார்கள். இடத்தையும் காலத்தையும் வீணாக்குபவர்கள் அகற்றப்பட வேண்டியவர்களே. 

முப்பது வருடம் எத்தனை அழிவு? எத்தனை ஆயிரம் பிள்ளைகளையும் எத்தனை கோடி சொத்துக்களையும் அழித்து முடித்தீர்கள் ? இவ்வளவும் அழித்து நீங்கள் சாதித்தது என்ன? ஆயுதம் இன்றி தனக்கு தெரிந்த சட்டத்தை பயன்படுத்தி மக்களை நிம்மதியாக வாழ வழி தேடும் சுமந்திரனை பற்றி மட்டும் இவ்வளவு விஷம் கக்க முடிகிறது. உங்களை போன்றவர்கள் தான் எம் மக்களை அபலைகளாக்கியவர்கள், சுமந்திரன் அரசியலுக்கு வந்ததே நீங்கள் இத்தனை ஆயிரம் மக்களை அபலைகளாக்கியதை பார்த்து மனம் பொறுக்காமல் தான். அழித்தது காணும் - ஒதுங்கி போங்கள். சுமந்திரன் போன்றவர்களாவது மக்களுக்கு உதவ வழி விடுங்கள். உங்களுக்கு முப்பது வருடங்களும் பல ஆயிரம் உயிர்ப்பலிகளும், பல கோடி சொத்துகளும் தந்து நீங்கள் சாதித்ததை அபலை மக்கள் அனுபவிப்பது காணும். இனி நீங்கள் வேண்டாம்.

 • Like 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.