Jump to content

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அட விடுங்க தோழர்.. இங்க கல்யாண வீட்டுக்காரன் பாண்டியில் இருந்து சரக்கு கடத்தி வர தாவு தீர்ந்துடும்..😢

 

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எம்மை விட சமூக மாற்றம் என்பது ஐரோப்பிய சமூகங்களில் நாகரீக கலை கலாச்சார ரீதியாக தம் தேசியத்தையும் அடையாளத்தையும் இழக்காமல் அதோடு சேர்த்த மாற்ரத்தாயே காணக்கூடியதாக இருக்கிறது.புலம் பெயர் நம் சமூகமானது இரு தோணியில் பயணம் செய்வது தவிர்க்க முடியாத காரணமாக இருந்தாலும் மாற்றங்களோடு இவர்கள் பயணித்தாலும் தம் இனம் சார்ந்து அடையாளம் சார்ந்து எந்த வித அக்கறையும் இல்லாமல் பயணிப்பவர் போலவே தெரிகின்றது.இந்த மாற்றமானது எமது அடையாளத்துக்கு எதிர் காலத்தில் அச்சுறுத்தலாக அமையலாம்.இது நிலத்திலும் புலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஒரு சமூகத்தின் இயங்கியவில் விதியானதே அந்த சமுகக்கட்டமைப்பின் பல பாத்திரங்களை வகிப்பதனால் இது எல்லா வளர்ச்சிக்கும் முக்கியமானது.சமூக மாற்றத்தின் மத்தியிலும் அடையாளம் தொலைக்காத ஓர் மாற்றமே அந்த இனத்தின் பலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

அப்படி இல்லை சார். கண்டபடி எண்ணிலடங்கா கோபியரோடு கும்மாளம் கொட்ட நாம் ஒன்றும் கிருஷ்ன பரமாத்மா இல்லை.

இரண்டு பொண்டாட்டியை வருடாவருடம் கட்ட நாம் ஒன்றும் தமிழ்கடவுள் முருகன் இல்லை.

பட்டத்து ராணி என்று ஒன்றையும் அந்தப்பபுரத்தில் பல வைப்பாட்டிகளையும் வைத்திருக்க நாம் ஒன்றும்  பழைய தமிழ் மன்னர்கள் இல்லை. 

பெண்பிள்ளைகளை தேவதாசிகள் என்று கோவிலில் பொட்டுக்கட்டி விட்டு  பின் அவர்களை அவர்களை துஷப்பிரயோகம்  செய்யும் பார்பன இந்து கலாச்சாரத்தையும்  நாம் மாற்றி விட்டோம். 

எழு எட்டு வயதில் பிள்ளைகளுக்கு பால்ய விவாகத்தை நடத்திய, பின்னர் கணவன் இறந்த போது அவர்களை உடன்கட்டை ஏறச்சொல்லி  வற்புறுத்திய மறுத்தவர்களை வலுக்கட்டாயமாக தீயில் போட்டு படுகொலை செய்த காட்டுமிராண்டி பார்பன இந்துக்கலாசாரத்திலும் இப்போது நாம் இல்லை. 

ஆகவே காலம் மாற பழைய காட்டுமிராண்டித்தனம் மாறி புதிய நாகரீகம் இப்படிப் புறுப்புறுப்பவர்களைத் தாண்டி ஏற்படுவது  இயற்கை நியதி. என்ன மாற்றங்களை ஏற்றுகொள்ளாத சிலர் இவ்வாறு உங்களைப் போல் புறுபுறுப்பார்கள். அவர்கள் தமக்குள்  இவ்வாறு  புறுபுறுத்துவிட்டு  தமது காலம் வர போய்சேர வேண்டியது தான். மாற்றங்ளையும் புதுமைகளையும் சமுதாயம் உள்வாங்கியே தீரும்.

எங்கே மாற்றினீர்கள்? கிஷ்ணரும் முருகனும் செய்ததைத்தானே இன்று நீங்களும் செய்கின்றீர்கள்.
வேலை இடத்தில் ஒன்று. வீட்டில் ஒன்று என இன்றைய சமுதாயத்தில் கண் கூடாகவே பார்க்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

பத்துப்பேரோடை குடும்பம் நடத்தீட்டு பதினோராவது ஆளை கலியாணம் கட்டுவதுதான் பழையன கழிதலும் புதியன புகுதல் கலாச்சாரமா சார்? :cool:

தாத்தா புல‌ம்பெய‌ர் நாட்டில் ‌ஒரு சில‌  அசிங்க‌ங்க‌ள் ந‌ட‌க்குது  , 

ஒரு ஆட்க‌ளில் உண்மை நில‌வ‌ர‌ம் தெரிந்தா , அவ‌ர்க‌ளை த‌ள்ளி வைப்ப‌து ந‌ல்ல‌ம் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

தாத்தா புல‌ம்பெய‌ர் நாட்டில் ‌ஒரு சில‌  அசிங்க‌ங்க‌ள் ந‌ட‌க்குது  , 

ஒரு ஆட்க‌ளில் உண்மை நில‌வ‌ர‌ம் தெரிந்தா , அவ‌ர்க‌ளை த‌ள்ளி வைப்ப‌து ந‌ல்ல‌ம் ,

புதியன புகுதலும் பழையன கழிதலும் எண்டு எதை சொல்ல வருகினம் எண்டு எனக்கு விளங்கேல்லை.
வெள்ளைக்காரனே தங்கடை நாய்க்கலாச்சாரம் சரியில்லை எண்டுட்டு ஏசியா பக்கம் ஓடுறான். இவையள் என்னடாவெண்டால் ஆட்டுக்கை மாட்டைக்கொண்டு வந்து ஓட்டீனம்.

தம்பி! யூ நோ பழையன கழிதலும் புதியன புகுதலும்????? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

இங்கு இப்படி கலியாண வீடுகள் நடப்பதில்லை, அத்துடன் நான் இருக்குமிடத்தில் இதுவரை இரண்டு கல்யாணத்திற்குதான் போயுள்ளேன், அதனால் பார்க்காமல் கருத்து கூறவிரும்பவில்லை.

எனக்கும் மூன்று பிள்ளைகள், இன்னும் 7-8 வருடத்தில் செய்து வைக்கனும். தமிழரை செய்து வைக்கனும் என்பதுதான் ஆசை. ஆனா தன் பாலினத்தை கூட்டிவராதவரை யாரென்றாலும் சரி. மகன்களுக்கு ஊரில் உள்ள பெண்களைதான் பார்த்து செய்து வைக்கனும், பார்ப்போம்.

 

ஊரில் உள்ள‌ ஏழைப்பிள்ளைக‌ளை பார்த்து உங்க‌ள் பிள்ளைக‌ளுக்கு திரும‌ண‌ம் செய்து வையுங்கோ உடையார் ஜ‌யா , நூற்றுக்கு நூறு உறுதியாய் சொல்லுவேன் உங்க‌ட‌ பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் ந‌ல்ல‌ ப‌டியா அமையும் அதோடு வீட்டில் பிர‌ச்ச‌னை இருக்காது ,  உங்க‌ட‌ பிள்ளைக‌ளின் சொல்லுக்கு அதுங்க‌ள் க‌ட்டுப் ப‌ட்டு ந‌ட‌ப்பின‌ம் 🙏 ,  

இத‌ சொன்ன‌ ப‌டியால் என்ன  சாத்திரி என்று நினைக்க‌ கூடாது ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் மாறும்போது எல்லாம் மாறுகின்றது

இந்த விடயத்தில் சிங்களவனை பாராட்ட‌ வேண்டும். அவன் கண்டியன் உடுப்பு உடுத்து கலச்சாரத்தை விடாமல் எப்படியும் ஒரு ஒரு படம் எடுத்து விடுவான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கற்பகதரு said:

உங்களுடைய தமிழ் இனிமையானது. அதை நான் விரும்பி வாசிக்கிறேன். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் “பஸ்சங்க” என்ற சொல் மட்டும் நாம் வாழ்ந்த பிரதேசத்தில் பயன்படுத்தப்படாத சொல்.

கலாச்சாரம் பற்றிய உங்கள் விருப்பமே எனதும். ஸகொட்லண்ட் முதல் ஆபிரிக்கா வரை திருமணங்கள் பாரம்பரிய உடை, உணவு. பண்பாட்டின்படியே தான் இடம்பெறுகின்றன. இவை பழைமையானவை. காலம் மாறி போக, பாரம்பரியத்தை நினைவிற்கொள்ள இந்த சடங்குகள் என்றும் மாறாத பாரம்பரிய முறைப்படி செய்யப்படுகின்றன. நாமும் இந்த பாரம்பரியத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

வ‌ண‌க்க‌ம் யூட் ஜ‌யா ,
தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி

பஸ்ச‌ங்க‌ள் த‌மிழ் சொல் இல்லையா , என்ர‌ வ‌ய‌து ப‌ஸ்ச‌ங்க‌ள் கூட‌ அப்ப‌ விளையாடினேன் என்று சொல்லுவ‌தா அல்ல‌து சின்ன‌ பிள்ளைக‌ள் எல்லாரும் ஒன்னா ம‌கிழ்வாய் விளையாடினோம் என்று சொல்லுவ‌தா / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கலாச்சார மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது அப்படியான  மாற்றங்கள் வந்தாலும்  ஈழத்தமிழர்களின் கலாச்சாரம் இரண்டாம் மூன்றாம் தலைமுறை தாண்டியும்
காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது
விருந்தோம்பல் என்பது தமிழர்களின் பண்பாடு
பணி நிமிர்த்தம் அதன் பழுக்கள் நேரக்குறைவு
என்ற காரணங்களையும் தாண்டி புலம்பெயர்ந்த தமிழர்கள் விருந்தோம்பலை விரும்புகின்றனர்

திருமணங்கள் சடங்குகள் என்பன எப்படியும் மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டிருக்கும்
என்றாலும் இது தமிழர்கள் சடங்குகள் என்ற அடையாளம் எப்போதும் அங்கு
நிலைகொண்டிருக்கும் .அதை மட்டும் எப்படியும் மாற்றமுடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் ஒன்றே மாறாதது தம்பி

நீங்கள் குறிப்பிடும் தேவையற்ற ஆடம்பரங்கள் ஆர்ப்பாட்டங்கள் அநாவசிய பாடல்கள்  கூத்துக்கள் தவிர்க்கப்படணும் கண்டிக்கப்படணும்

இது  பெற்றோர்களின் தவறும் கவனிப்பின்மையும்  தான்.

நான்  கையை  கட்டியபடி மண்டபத்தில்  நின்றால் எனது  வீட்டு  எந்த  நிகழ்வும் எல்லை  தாண்டாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nilmini said:

இவைதான் எனது கருத்துக்கள் தம்பி 

புலம் பெயர்ந்து செல்வதென்பது சொந்த இடங்களை விட்டு போவது மட்டும் அல்லாமல் எமது கலாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள், மற்றும் பலவற்றையும் விட்டு செல்ல வேண்டியுள்ளது. பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகமுதல் வீட்டில் இருக்கும்வரை எம்மைப்போலவே எல்லாவற்றயும் செய்து, சாப்பிட்டு, தமிழும் கதைத்துக்கொண்டு இருப்பார்கள். பள்ளிக்கூடம் போக துடங்க நிலைமை மாறத்துடங்கும் . அதற்கு நடுவில் நாங்கள் வேலையில் பிஸியாகிவிட நிலைமை இன்னும் மாறும். தாய் வீட்டில் இருந்து மற்றும் தாத்தா பாட்டி யாரும் இருந்து , தமிழ், சமயம் என்று சொல்லிக்குடுத்தால் ஓரளவு பலன் கிடைக்கும். ஆனால் இது நிறைய பேருக்கு சரிவராது.

வெளிநாட்டில் பிறந்து வளரும் பிள்ளைகளை ஊரில் நாங்கள்  வளர்வது போல் வளர நினைப்பது பிழை. அத்துடன் இப்ப ஊர் பிள்ளைகள் எம்மை மாதிரி இல்லை.அங்கும் நிறைய மாற்றங்கள். நாங்கள் இரண்டு மகன்மாரையும் அடிக்கடி இலங்கை, இந்தியா என்று கூட்டிப்போய் சொந்தம், கோயில் என்று காட்டி வந்தோம். சரஸ்வதி பூசை என்றால் , மச்சம் சாப்பிடாமல், பின்னேரம்தேவாரம் பாடி  சாமி கும்பிட வேண்டும். முடிந்த நேரங்களில் எல்லாம் கோயிலுக்கு போவது. சிறு வயதில் நாங்கள் இருக்கும் இடத்தில பகவத் கீதை வகுப்புகளுக்கு போய் பஜனைகளும் படித்ததனால்  இப்பவும்  கிழமையில் இரு நாட்கள் பகவத் கீதை , பஜனை படிப்பார்கள். அடிக்கடி இருவருடனும் எமது கலாச்சாரம், சமயம் பற்றி கதைப்பேன். இருவரும் மிகவும் ஆர்வமாக கேட்பார்கள். சில தமிழ் படங்களும் பாப்போம். இப்படி ஒவ்வொரு குடும்பமும் தமக்கு முடிந்ததை பிள்ளைகளுக்கு செய்து காட்டி வந்தால் அவர்கள் பெரியவர்களாகி நாம் இல்லாத காலத்தில் அதனை பெரிதாக எண்ணி  மதிப்பார்கள்.

நாம் அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டால் ஒரு காலத்தில் தமக்கென்று ஒரு அடையாளம் இல்லாமல் தடுமாறுவார்கள்.  எனது சகோதரர்களும், மற்ற உறவினர்களும்  தமது பிள்ளைகளுக்கு அப்படிதான் செய்கிறார்கள். அத்துடன் அவர்களுக்கு எமது சமையல் முறைகளையும் சொல்லிகொடுக்கிறேன் . மிகவும் ஆர்வமாக சமைக்கிறார்கள். நாங்கள் எல்லா அம்மாமாரும் சேர்ந்து இப்போது Google document இல் ரெசிபிக்களை  எழுதிவருகிறோம். அந்த google document எமது பிள்ளைகள் எல்லோரும் பார்த்து தமக்கு விருப்பமான ரெசிபிக்களை ஒருகாலத்தில் சமைக்கலாம். எமது உணவை அவர்கள் உண்ணுவது மட்டும் அன்றி அவர்களுக்கு சமைக்க தெரிவதும் கலாச்சாரத்தை பேணுவத்துக்கு மிகவும் முக்கியம். இதை விட அதிகமாக செய்ய எம்மால் முடியவில்லை. எனக்கு அவர்கள் எம்மை மாதிரி வாழவேண்டும் என்று தேவை இல்லை. எமது மொழி, கலாச்சாரம், சமயம் எல்லாவற்றையும் அவர்கள் வேற்று மொழிகளை காட்டிலும் பெரிதாக மதிக்க வேண்டும் என்பதில் தான் எனக்கு ஆர்வம். அது அவர்களுக்கும் தெரியும்.

சில குடும்பங்கள் தமது ஊர் ஒன்றுகூடல்கள் வைக்கிறார்கள். எமது அம்மாவின் அப்பாவின் ( ஐயா) ஊர் எழுதுமட்டுவாள் என்றபடியால் நாமும் போவதுண்டு. ஆனால் அங்கு பெரியவர்களே ஜீன்ஸை போட்டுகொண்டு ஆங்கிலம் கதைப்பார்கள். சாப்பாடு மட்டும் ஊர் சாப்பாடு. எனது தங்கையின் மகள் (14 வயது) மிகவும் தமிழ் ஆர்வம் மிக்கவர்.  போனகிழமை சந்தித்தபோது இந்த ஒன்றுகூடல் பற்றி என்னிடம் கதைத்தா . சின்னப்பிள்ளைகளுக்கு விளையாட்டுப்போட்டி வைக்கும்போது எமது பாரம்பரிய விளையாட்டுகளை தமக்கு சொல்லித்தந்து அவற்றை விளையாட வைக்கலாமே என்று அவ சொன்னது எனக்கு மிகவும் பிடித்தது. அம்மா, சித்திமார், மாமி எல்லோரிடமும் கேட்டு  பழைய விளையாட்டுகளை அவவுக்கு விளங்கப்படுத்தினேன். மிகவும் ஆர்வமாக கேட்டா. 

எமது பரந்து  வாழும் பெரிய குடும்பத்தில் (extended  family) எவரும் இப்படி கூத்து மாதிரி சாமத்திய வீடோ, கல்யாண வீடோ வைக்கவில்லை. நாம் எல்லோரும் குடும்பகொண்டாட்டங்களில் சந்திக்கும் போது பொழுது போக்குக்கு இந்தமாதிரி விசித்திரமான கலியாண , சாமர்த்தியவீடு விடீயோக்களை YouTube இல் பார்த்து சிரிப்போம். பிள்ளைகளும் சேர்ந்து பார்த்துவிட்டு தமது அதிருப்தியை சொல்வார்கள்.அக்காவின் மகள் பஞ்சாபி/ராஜஸ்தான் ஆனால் கனடாவில் பிறந்து வளர்ந்த பெடியனை இரு வருடங்களுக்கு முன் கலியாணம் முடித்தபோது. எமது யாழ் முறையிலும், பஞ்சாபி முறையிலும் தான் வைத்தது. ஆனால் மணமக்களின் விருப்பப்படி மணவறை மற்றும் அலங்காரங்களை வித்தியாசமாக தான் செய்தது. மற்றம்படி கூத்துக்கள் ஒன்றும் இல்லை. Reception வெள்ளைக்காரர் மாதிரி வைத்தார்கள். அதற்கு மட்டும் எல்லோரும் ஆடிப்பாடினார்கள்.

சில எனக்கு தெரிந்த அமைதியான பெற்றோரே தமது பிள்ளைகளின் கலியாணத்துக்கு அளவுக்கு அதிகமாக ஆடுவது, பாடுவது ஒருவரை ஒருவர் தூக்குவது என்று பார்க்கும் போது  நம்ப முடியாமல் இருக்கும். எனவே கலாசார சீரழிவுக்கு தனிப்பட்ட மனிதர்கள், குடும்பங்களின் பிழையான தெரிவுகளே காரணம்.

வ‌ண‌க்க‌ம் அக்கா , உங்க‌ பெரிய‌ அன்பான‌ விள‌க்க‌த்துக்கு ந‌ன்றி 🙏

உங்க‌ளின் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌டுகிறேன் , உங்க‌ள் பிள்ளைக‌ளுக்கு எங்க‌ள் க‌லாச்சார‌த்த‌ ப‌ற்றி சொல்லி கொடுத்தத‌ நினைக்க‌ ம‌கிழ்ச்சியாய் இருக்கு 🙏 ,

டென்மார்க்கில் சின்ன‌னில் என்னோட‌ ஒன்னா விளையாடின‌ பிள்ளைக‌ள் த‌ம‌க்கை ம‌ற்றும் த‌ங்கைச்சி  , இங்க‌த்த‌ வெள்ளை இன‌த்த‌வ‌ர‌ திரும‌ண‌ம்  செய்து இருக்கின‌ம் , 
அந்த‌ பிள்ளைக‌ளின் பெற்றோர் அவையை ந‌ல்ல‌ மாதிரி தான் வ‌ள‌த்து விட்ட‌வை ,  அவையின் மூத்த‌ ம‌க‌ள் த‌மிழ் பெடிய‌ன‌ விரும்ப‌ உன‌க்கு இந்த‌ வ‌ய‌திலே காத‌ல் தேவையா என்று த‌க‌ப்ப‌ன் அடிக்க‌ அந்த‌ பிள்ளை வீட்டை விட்டு போய் இப்போ இங்க‌த்த‌ வெள்ளைக் கார‌ன் கூட வாழுகிறா ‌  , அழ‌கான‌ குன‌மான‌ பிள்ளைக‌ளை பெத்து அதுங்க‌ளின் எதிர் கால‌த்த‌ பெற்றோர்  ப‌ழுதாக்கிட்டின‌ம் , அந்த‌ பிள்ளை விரும்பின‌ த‌மிழ் பெடிய‌னையே செய்து வைத்து இருந்தா ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ந்து இருக்காது ,  அக்காவை பார்த்து த‌ங்கைச்சியும் நேர்வே நாட்டு வெள்ளைக் கார‌னை திரும‌ண‌ம் செய்து இருக்கிறா 🤔☺ ,  


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுப.சோமசுந்தரம் said:

தம் மரபு, பழக்க வழக்கங்கள், (மூட நம்பிக்கைகள் தவிர்த்து) நல்ல நம்பிக்கைகளின் வழியில் தம் அடையாளங்களை வேர் பிடிக்க வைக்கும் முனைப்பு எந்த மானிட சமூகத்திலும் இருக்கும், இருக்க வேண்டும். மாற்றங்கள் ஒன்றே மாறாதவை என்பது ஏற்புடைய கருத்துதான். ஆனால் எந்த மாற்றத்தையும் கேள்வி கேட்காமல் கடந்து போவதும், வேறு வழியில்லை என்று கையறு நிலையில் ஏற்றுக் கொள்வதும் அந்த இனத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் கேட்டினை விளைவிக்கும் என்பது என் கருத்து. பையன் அவர்கள் சமூகத்தைக் கேள்வி கேட்கிறார். நல்ல கேள்வி. பையனாய் இருக்கும் போதே கேட்பது கூடுதல் சிறப்பு ! ('பையனாய்' என்று அவர் குறித்த பெயரை வைத்துச் சொன்னேன். அவ்வளவே 😀

நீங்க‌ள் சொல்லுவ‌து முற்றிலும் ச‌ரி , மாற்ற‌ம் ஒன்றே மாறாத‌வை  ,

மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா சொன்ன‌ மாதிரி என‌க்கு பெரிய‌ வ‌ய‌சு இல்ல‌ , யாழில் இணையும் போது சின்ன‌ பெடிய‌னாய் இணைந்தேன் , ஏன் பெய‌ரை மாத்துவான் என்று பைய‌ன் என்ற‌ பெய‌ரில் எழுதுகிறேன் தொட‌ர்ந்து , 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பையன்26 said:

ஊரில் உள்ள‌ ஏழைப்பிள்ளைக‌ளை பார்த்து உங்க‌ள் பிள்ளைக‌ளுக்கு திரும‌ண‌ம் செய்து வையுங்கோ உடையார் ஜ‌யா , நூற்றுக்கு நூறு உறுதியாய் சொல்லுவேன் உங்க‌ட‌ பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் ந‌ல்ல‌ ப‌டியா அமையும் அதோடு வீட்டில் பிர‌ச்ச‌னை இருக்காது ,  உங்க‌ட‌ பிள்ளைக‌ளின் சொல்லுக்கு அதுங்க‌ள் க‌ட்டுப் ப‌ட்டு ந‌ட‌ப்பின‌ம் 🙏 ,  

இத‌ சொன்ன‌ ப‌டியால் என்ன  சாத்திரி என்று நினைக்க‌ கூடாது ,

அதுதான் என் கனவு பையா, மனதில் நினைத்து தினம் தினம் பிரார்த்திப்பதும் அதுவே. மகளுக்கு இங்குதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, உடையார் said:

அதுதான் என் கனவு பையா, மனதில் நினைத்து தினம் தினம் பிரார்த்திப்பதும் அதுவே. மகளுக்கு இங்குதான்

க‌ன‌டாவில் வ‌சிக்கும் என‌து அத்தை த‌ன‌து மூத்த‌ ம‌க‌னுக்கு அதாவ‌து என்ர‌ ம‌ச்சானுக்கு , ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் க‌ஸ்ர‌ப்ப‌ட்ட‌ குடும்ப‌த்தில் இருந்து பெண் எடுத்து திரும‌ண‌ம் செய்து வைச்ச‌வா , 

அதுங்க‌டை ஒற்றுமையை பார்த்து நானே வியந்து போனேன் , நாம் ம‌ன‌ம் வைச்சா எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியா ந‌ட‌க்கும் உடையார் ஜ‌யா , 

நாங்க‌ள் யாழ்ப்பாண‌ம் அந்த‌ பிள்ளை ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு , இர‌ண்டு குடும்ப‌த்துக்கும் பிள்ளைக‌ளின் திரும‌ண‌த்தில் ம‌ன‌தார‌ விருப்ப‌ம் ,  எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியாய் அமைந்த‌து , சீத‌ன‌ பிர‌ச்ச‌னையும் இல்ல‌ ஆட‌ம்ப‌ர‌மாய் க‌லியாண‌ வீட்டை செய்ய‌மா பெண்ணின் உற‌வின‌ர்க‌ள் எங்க‌ள‌து உற‌வின‌ர்க‌ள் என்று சின்ன‌னாய் செய்த‌வை ,  ஊரில் ந‌ட‌ந்த‌ அவ‌ர்களின் ‌ திரும‌ண‌ நிக‌ழ்வு மிக‌ அழ‌கு 🙏 ,

புல‌ம்பெய‌ர் நாட்டில் ஒருசில‌ என்ர‌ சொந்த‌ங்க‌ளின் நிக‌ழ்வை பார்த்தா காரி துப்ப‌ தான் தோனும் 😡

40 minutes ago, விசுகு said:

மாற்றம் ஒன்றே மாறாதது தம்பி

நீங்கள் குறிப்பிடும் தேவையற்ற ஆடம்பரங்கள் ஆர்ப்பாட்டங்கள் அநாவசிய பாடல்கள்  கூத்துக்கள் தவிர்க்கப்படணும் கண்டிக்கப்படணும்

இது  பெற்றோர்களின் தவறும் கவனிப்பின்மையும்  தான்.

நான்  கையை  கட்டியபடி மண்டபத்தில்  நின்றால் எனது  வீட்டு  எந்த  நிகழ்வும் எல்லை  தாண்டாது

வ‌ண‌க்க‌ம் அண்ண
உங்க‌ளை மாதிரி ஒவ்வொரு சொந்த‌த்திலும் ஒருத‌ர் இருந்தாலே போதும் எம் க‌லாச்சார‌ம் தொட்டு எல்லாம் ந‌ல்ல‌ நிலையில் இருக்கும் ,

வாழ்த்துக்க‌ள் அண்ணா 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலையில் கொஞ்ச‌ம் விசியாய் இருக்கிறேன் , இந்த‌ திரியில் எழுதின‌ உற‌வுக‌ளுக்கு கொஞ்ச‌த்தால் ப‌தில் அளிக்கிறேன்  , 

நீங்க‌ள் தொட‌ர்ந்து எழுதுங்ங்கோ , ந‌ல்ல‌த‌ எழுதுவோம் தீய‌த‌ த‌விர்ப்போம் ,

Link to comment
Share on other sites

1 hour ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் யூட் ஜ‌யா ,
தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி

பஸ்ச‌ங்க‌ள் த‌மிழ் சொல் இல்லையா , என்ர‌ வ‌ய‌து ப‌ஸ்ச‌ங்க‌ள் கூட‌ அப்ப‌ விளையாடினேன் என்று சொல்லுவ‌தா அல்ல‌து சின்ன‌ பிள்ளைக‌ள் எல்லாரும் ஒன்னா ம‌கிழ்வாய் விளையாடினோம் என்று சொல்லுவ‌தா / 

“பசங்க” என்ற பேச்சுத்தமிழ் சொல் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது தமிழ் சொல்லாக தெரியவில்லை. இதற்கு பதிலாக இலங்கை தமிழர் பயன்படுத்துவது “பொடியன்கள்” அல்லது “பெடியள்”, ஆனால் இவையும் தமிழ் சொற்களல்ல. இவை சிங்களத்தில் இருந்து மருவிய சொற்களாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இவை பாவனையில் இல்லை. விடுதலை போராட்ட காலத்தில் போராளிகளை மக்கள் வாஞ்சையுடன் குறிப்பிட பயன்படுத்திய சொல் “எங்கட பெடியள்”. இதற்கு பொருத்தமன சரியான தமிழ் பதம் “பிள்ளைகள்”. இதுவும் இலங்கையில் வழக்கில் இருந்த பதம். ஆனால், பேச்சுவழக்கில், “பிள்ளை” என்ற சொல் சிறுவரையும், பெண்களையும் சுட்டும் சொல்லாகவே இருக்கிறது. இளைஞனை “பெடியன்” என்றே சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சாமானியன் said:

நமது மொழியும் இனமும் மிக மிக பழைமையானவற்றுள் ஒன்று . நீங்கள் எமது பாரம்பரிய முறைமை என்று சொல்லும் விடயங்கள் நடைமுறைக்கு வரமுதல் ( என்ன ஒரு 1000  அல்லது 2000 ஆண்டுகாலம் முன்னர் ) இருந்த நடை முறைகளும் எமது பாரம்பரியமாக இருந்து தான் போயின . சமகாலங்களில் எம்மவரிடையேயே நடந்தேறிய புலம்பெயர்வு கனதி மிக்கது .. மாற்றங்களை தன்னகத்தே கொண்டு வந்து சேர்க்கும் தன்மையது ..
அண்மையில் எமது மூத்த புதல்வியின் திருமணத்தின் போது, கன்னிகாதானம் எனும் நடைமுறையை செய்வதில் எமது இளைய புதல்விக்கு உடன்பாடில்லை . அப்படி எனின்   மணமகனை தானம் செய்வதாகவும் ஒரு சடங்கு தேவையில்லையா என்பது அவளின் வாதம் ; புது தலை முறை - புதிய சிந்தனைகள் - வளர்ச்சியின் படிகள் .. நல்லவை எடுப்போம் , அல்லவை தவிர்ப்போம் , வளர்ச்சி காண்போம் ...   

கன்னிகாதானம் தமிழர் பரம்பரியங்களுக்குள் வராது அல்லவா?
தமிழ் முறைப்படி நடக்கும் திருமண நிகழ்வுகள் எல்லாவற்றையும் விட மிகுந்த சந்தோசத்தையும் இன்பத்தையும் தரும்.

உங்கள் கருத்தில் குறுக்கீடு செய்தமைக்கு மன்னிக்கவும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

“பசங்க” என்ற பேச்சுத்தமிழ் சொல் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது தமிழ் சொல்லாக தெரியவில்லை. இதற்கு பதிலாக இலங்கை தமிழர் பயன்படுத்துவது “பொடியன்கள்” அல்லது “பெடியள்”, ஆனால் இவையும் தமிழ் சொற்களல்ல. இவை சிங்களத்தில் இருந்து மருவிய சொற்களாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இவை பாவனையில் இல்லை. விடுதலை போராட்ட காலத்தில் போராளிகளை மக்கள் வாஞ்சையுடன் குறிப்பிட பயன்படுத்திய சொல் “எங்கட பெடியள்”. இதற்கு பொருத்தமன சரியான தமிழ் பதம் “பிள்ளைகள்”. இதுவும் இலங்கையில் வழக்கில் இருந்த பதம். ஆனால், பேச்சுவழக்கில், “பிள்ளை” என்ற சொல் சிறுவரையும், பெண்களையும் சுட்டும் சொல்லாகவே இருக்கிறது. இளைஞனை “பெடியன்” என்றே சொல்வார்கள்.

ந‌ன்றி யூட் ஜ‌யா , உங்கை மாதிரி பெரிய‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து த‌மிழ் தெரிந்து கொள்ள‌ நிறைய‌ இருக்கு , 
மீண்டும் ந‌ன்றிக‌ள் ப‌ல‌ ஜ‌யா 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் அக்கா , உங்க‌ பெரிய‌ அன்பான‌ விள‌க்க‌த்துக்கு ந‌ன்றி 🙏

உங்க‌ளின் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌டுகிறேன் , உங்க‌ள் பிள்ளைக‌ளுக்கு எங்க‌ள் க‌லாச்சார‌த்த‌ ப‌ற்றி சொல்லி கொடுத்தத‌ நினைக்க‌ ம‌கிழ்ச்சியாய் இருக்கு 🙏 ,

டென்மார்க்கில் சின்ன‌னில் என்னோட‌ ஒன்னா விளையாடின‌ பிள்ளைக‌ள் த‌ம‌க்கை ம‌ற்றும் த‌ங்கைச்சி  , இங்க‌த்த‌ வெள்ளை இன‌த்த‌வ‌ர‌ திரும‌ண‌ம்  செய்து இருக்கின‌ம் , 
அந்த‌ பிள்ளைக‌ளின் பெற்றோர் அவையை ந‌ல்ல‌ மாதிரி தான் வ‌ள‌த்து விட்ட‌வை ,  அவையின் மூத்த‌ ம‌க‌ள் த‌மிழ் பெடிய‌ன‌ விரும்ப‌ உன‌க்கு இந்த‌ வ‌ய‌திலே காத‌ல் தேவையா என்று த‌க‌ப்ப‌ன் அடிக்க‌ அந்த‌ பிள்ளை வீட்டை விட்டு போய் இப்போ இங்க‌த்த‌ வெள்ளைக் கார‌ன் கூட வாழுகிறா ‌  , அழ‌கான‌ குன‌மான‌ பிள்ளைக‌ளை பெத்து அதுங்க‌ளின் எதிர் கால‌த்த‌ பெற்றோர்  ப‌ழுதாக்கிட்டின‌ம் , அந்த‌ பிள்ளை விரும்பின‌ த‌மிழ் பெடிய‌னையே செய்து வைத்து இருந்தா ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ந்து இருக்காது ,  அக்காவை பார்த்து த‌ங்கைச்சியும் நேர்வே நாட்டு வெள்ளைக் கார‌னை திரும‌ண‌ம் செய்து இருக்கிறா 🤔☺ ,  


 

தான் செய்தது பிழை என்று தகப்பனுக்கு இப்பதான் விளங்கி இருக்கும். சில தாய் தகப்பன்மார் தாங்கள் செய்தவற்றை பிள்ளைகள் செய்ய விடமாட்டார்கள். சிலர் தமக்கு கிடைக்காதவை நடக்காதவை எல்லாவற்றையும் பிள்ளைகள் மீது திணிப்பார்கள். இது மிகவும் தவறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

தான் செய்தது பிழை என்று தகப்பனுக்கு இப்பதான் விளங்கி இருக்கும். சில தாய் தகப்பன்மார் தாங்கள் செய்தவற்றை பிள்ளைகள் செய்ய விடமாட்டார்கள். சிலர் தமக்கு கிடைக்காதவை நடக்காதவை எல்லாவற்றையும் பிள்ளைகள் மீது திணிப்பார்கள். இது மிகவும் தவறு. 

எல்லாம் த‌க‌ப்ப‌ன்  செய்த‌ த‌ப்பு , பிள்ளையின் காத‌ல் பிடிக்காட்டி அத‌ அவ‌ர் வேறு வித‌மாய் கையாண்டு இருக்க‌லாம் , அத‌ விட்டுட்டு பெத்த‌ பிள்ளைக்கு முர‌ட்டு த‌ன‌மாய் அடிச்சா அதுங்க‌ள் ம‌ன‌ம் குழ‌ம்பி போயிடுங்க‌ள் அக்கா ,

என‌க்கு க‌வ‌லை என்ன‌ என்றால் அந்த‌ பிள்ளைக‌ள் இப்ப‌ ம‌து அருந்தின‌ம் , வெள்ளைக் கார‌னை திரும‌ண‌ம் செய்தா அவ‌ன் அவ‌னின் க‌லாச்சார‌த்த‌ தான் ம‌னைவி பிள்ளைக‌ளுக்கு சொல்லி குடுப்பான் ,

த‌ப்பு த‌வ‌றி உங்க‌ட‌ பிள்ளைக‌ளை வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ள் கூட‌ அதிக‌ம் ப‌ழ‌க‌ விட‌ வேண்டாம் அக்கா , முடிந்த‌வ‌ரை உங்க‌ளின் க‌ட்டு பாட்டுக்குள் அன்பை காட்டி வைத்து இருந்து விட்டு பிள்ளைக‌ளுக்கு க‌லியாண‌ வ‌ய‌து வ‌ர‌ ந‌ல்ல‌ த‌மிழ் பிள்ளைக‌ளை ஊரில் அல்ல‌து அவுஸ்ரேலியாவில் பார்த்து செய்து வையுங்கோ , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

அவுஸ்ரேலியாவில் பார்த்து செய்து வையுங்கோ , 

தாங்கள் அவுஸ்ரேலியாவை தேர்ந்தெடுத்ததிற்கு காரணங்கள் ஏதாவது இருக்கின்றதா? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

தாங்கள் அவுஸ்ரேலியாவை தேர்ந்தெடுத்ததிற்கு காரணங்கள் ஏதாவது இருக்கின்றதா? 😁

நிமினி அக்கா வ‌சிக்கும் நாடு அவுஸ் தானே தாத்தா அது தான் ஊரையும் எழுதி அவுஸ்ரேலியாவையும் எழுதினேன் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

நிமினி அக்கா வ‌சிக்கும் நாடு அவுஸ் தானே தாத்தா அது தான் ஊரையும் எழுதி அவுஸ்ரேலியாவையும் எழுதினேன் , 

Prabhudeva Tamil GIF - Prabhudeva Tamil Surprised - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கலாச்சார மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது அப்படியான  மாற்றங்கள் வந்தாலும்  ஈழத்தமிழர்களின் கலாச்சாரம் இரண்டாம் மூன்றாம் தலைமுறை தாண்டியும்
காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது
விருந்தோம்பல் என்பது தமிழர்களின் பண்பாடு
பணி நிமிர்த்தம் அதன் பழுக்கள் நேரக்குறைவு
என்ற காரணங்களையும் தாண்டி புலம்பெயர்ந்த தமிழர்கள் விருந்தோம்பலை விரும்புகின்றனர்

திருமணங்கள் சடங்குகள் என்பன எப்படியும் மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டிருக்கும்
என்றாலும் இது தமிழர்கள் சடங்குகள் என்ற அடையாளம் எப்போதும் அங்கு
நிலைகொண்டிருக்கும் .அதை மட்டும் எப்படியும் மாற்றமுடியாது

உண்மை தான் வாத்தியார் அண்ணா ,

எம்ம‌வ‌ர் வேலைக‌ள் ,   வேலை முடிந்த‌தும் வீட்டை வ‌ந்து ச‌மைத்து சாப்பிட்டு தூங்க‌ போயிடுவின‌ம் , 
விடுமுறை நாட்க‌ளில் தான் பிள்ளைக‌ளுட‌ன் அதிக‌ நேர‌ம் ஒதுக்குவின‌ம் ,

உந்த‌ நாச‌மாய் போன‌ பிர‌ச்ச‌னை வ‌ராட்டி எம் க‌லாச்சார‌ம் 100வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌த‌ போல‌ இருந்து இருக்கும் , 

புல‌ம்பெய‌ர் நாட்டில்  இன்னும் 20வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தா த‌மிழ் மொழி அர‌வாசி அழிந்திடும் , இங்கை பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் , அவ‌ர்க‌ள் வ‌சிக்கும் நாட்டு மொழியில் தான் க‌தைப்பின‌ம் எழுதுவின‌ம் ,


எப்ப‌டி தான் யோசிச்சாலும் இதில் இருந்து அடுத்த‌ இளையத‌லைமுறை பிள்ளைக‌ளை மீட் எடுப்ப‌து சிர‌ம‌ம் , 
கால‌ங்க‌ள் போக‌ இங்கை பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் சொல்லுவின‌ம் என்ர‌ அம்மாட‌ அம்மா சிறில‌ங்கா ஆனால் நாங்க‌ள் பிற‌ந்த‌து இங்கை , இந்த‌ நிலையில் தான் பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் இருக்கும் , 

ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு இந்த‌க் கால‌ க‌ட்ட‌ம் மிக‌வும் இக்க‌ட்டான‌ கால‌ க‌ட்ட‌ம் , ஊரில் எம்ம‌வ‌ர்க‌ள் இருந்த‌ போது எல்லாத்தையும் பார்த்தார்க‌ள் , 2009ம் ஆண்டு பிடிச்ச‌ ச‌ணிய‌ன் இன்னும் விட்ட‌ பாடு இல்ல‌ ,  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் அவர்களோடு பழக வேண்டாம், இவர்களோடு பழக வேண்டாம் என்று சொல்வது கடினம் பையன்.பள்ளிக் கூடங்கள்.மற்றும் தொழில் சார்ந்த இடங்களில் பல இனத்த வருடனும் ஒத்துழைத்து போக வேண்டிய சூழ்நிலை. அப்படியான தருணங்களில் தான் மிக கூடுதலாக தவறு நடக்கிறது.. 

 

இங்கு எல்லாம் பார்த்தால் தந்தைமார் ஒரு பக்கம் தண்ணீரில் மிதப்பார்கள் , மறு பக்கம் பார்த்தால் சில அம்மாக்கள் போத்தலோடு இல்லை என்றால் கிளாசோடு பார்ட்டிகளில் போடும் பாட்டுகளுக்கு  வேப்பிலை இல்லாத குறையாகத் தான் நிப்பார்கள்..இது ஒன்றும் பொய் புரட்டு இல்ல இப்படி தான் இப்போ.என் கண்டால் காட்சிகள்.

இவர்களேபிள்ளைகள் தவறாக போவதற்கு உதாரணமாக இருக்கும் போது பிள்ளைகளையோ மற்றும் யாரையும் தவறாக எண்ண முடியாத நிலை.நன்றி பையா..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.