• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
பையன்26

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து

Recommended Posts

வ‌ண‌க்க‌(ம்) உற‌வுக‌ளே 🙏 நாம் எல்லாம் த‌மிழீழ‌ ம‌ண்ணில் பிற‌ந்து புல‌ம் பெய‌ர் நாட்டில் வாழுகிறோம் , 

இப்ப‌டி ஒரு திரி யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் இத‌ற்கு முத‌ல் திற‌ந்தின‌ம்மோ தெரியாது , நேர‌ம் இருக்கும் போதெல்லாம் யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் எழுதும் ஆக்க‌ங்க‌ளை வாசிப்பேன் , 12வ‌ருட‌த்துக்கு முத‌ல் ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் எழுதின‌துக‌ளையும் வாசிப்பேன் 💪🙏

சின்ன‌னில் எம் முன்னோர்கள் எம‌க்கு சொல்லி த‌ந்த‌ ப‌ல‌ நூறு ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ளை ம‌ற்றும் எம் க‌ண்ணால் க‌ண்ட‌ ந‌ல்ல‌ நிக‌ழ்வுக‌ளை நாம் ஒரு போதும் ம‌ற‌க்க‌ப் போர‌தும்  இல்ல‌ ,

த‌மிழீழ‌த்தில் திரும‌ண‌ நிக‌ழ்வில் இருந்து சாம‌த்திய‌ வீடு பிற‌ந்த‌ நாள் நிக‌ழ்வுக‌ளில் நாம் க‌ல‌ந்து கொண்டு இருப்போம் ,

சிறு வ‌ய‌தில் நான் க‌ண்ட‌ திரும‌ண‌ நிக‌ழ்வு , தமிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌முறையில் நட‌ந்த‌ திருமண‌ங்க‌ள் , மாப்பிளைக்கு பால த‌லைக்கு வைத்து குளிப்பாட்டி ம‌ன‌வ‌ரையில்  உக்கார‌ வைத்து திரும‌ண‌ பெண்ண‌ அமைதியாய் கூட்டி வ‌ந்து மாப்பிளைக்கு ப‌க்க‌த்தில்  உக்கார‌ வைத்து ஆலாத்தி எடுத்து பிற‌க்கு கோயிலில் வைத்து தாலி க‌ட்டுவ‌து தான் ஊர் திரும‌ண‌ முறை ,

புல‌ம்பெயர் நாட்டு திரும‌ண‌ம் மாப்பிளை ம‌ன‌வ‌ரையில் இருப்பார் , திரும‌ண‌ பெண்ண‌ பார்த்தா அவாவின் தோழிக‌ளுட‌ன் ஆட்ட‌த்துட‌ன் வ‌ருவா மாப்பிளையிட‌ம் 😁

ஏன் இந்த திடிர் மாற்ற‌ங்க‌ள் குறுகிய‌ காலங்க‌ளில் 😉

என‌க்கு இப்ப‌டியான‌ கொண்டாட்ட‌ங்க‌ள் சுத்த‌மாய் பிடிக்காது , ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு அது பிடித்தா அதில் நாம் த‌லையிட‌ முடியாது அது அவ‌ர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ விருப்ப‌ம் என்று க‌ட‌ந்து செல்வ‌து தான் புத்திசாலித் த‌ன‌ம் 😉 ,

என‌து சொந்த‌ங்க‌ள் கொண்டாட்ட‌த்துக்கு என்னை அழைப்பின‌ம் , ஆவ‌த்துக்கு பாவ‌ம் இல்லை என்று ஏதாவ‌து பொய்யை சொல்லி கொண்டாட்ட‌த்தில் நான் க‌ல‌ந்து கொள்வ‌தில்லை , க‌ட‌சியில் உற‌வுக‌ளுக்கே தெரிந்து விட்ட‌து இவ‌ன் கூப்பிட்டா வ‌ர‌ மாட்டான் அழைப்பித‌ல் குடுப்ப‌த‌ விட‌ குடுக்காம‌ விட‌லாம் என்று , இப்ப‌ என்னை கொண்டாட்ட‌த்துக்கு அழைப்ப‌து இல்ல‌ 😁

என்ர‌ சொந்த‌மும் மேல‌ நான் எழுதின‌த‌ போல‌ ஊர் திரும‌ண‌ முறைய‌ ம‌ற‌ந்து அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளுக்கு ஆட்ட‌ம் பாட்ட‌முட‌ன் திரும‌ண‌த்த‌ செய்து வைக்கின‌ம் ,

கால‌ங்க‌ள் போக‌ போக‌ வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வை போல‌ த‌மிழ‌ர்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வுக‌ளும் புல‌ம்பெய‌ர் நாட்டில் ந‌ட‌க்கும் 😉

இந்த‌ திரி எம் இன‌த்த‌ கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ திற‌க்க‌ வில்லை , சிறு வ‌ய‌தில் நான் க‌ண்ட‌ திரும‌ண‌மும் புல‌ம்பெய‌ர் நாட்டு திரும‌ண‌மும் ப‌ற்றிய‌து ,நான் என்ன‌ சொல்ல‌ வ‌ந்தேன் என்ற‌த‌ புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் 

யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் உங்க‌ள் ப‌தில‌ தாரால‌மாய் எழுத‌லாம் , இத‌ ப‌ற்றி கொஞ்ச‌ம் விவாதிப்போம் உற‌வுக‌ளே 

பைய‌ன்26 

 • Like 9
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

கால‌ங்க‌ள் போக‌ போக‌ சிறு மாற்ற‌ங்க‌ள்  நிக‌ழும் த‌ம்பி ; என‌க்கும் ஒரு சில‌ கொண்டாட்ட‌ங்ளை பார்க்கும் போது இது கொஞ்ச‌ம் ஓவ‌ர் மாதிரி தெரியும் ; உற‌வுக‌ளின் கொண்டாட்ட‌ம் ப‌ழ‌கி விட்டோம் அழைத்தால் போய் தான் ஆக‌னும் ;

த‌ம்பி க‌ட‌வுள் உன‌க்கு த‌ந்த‌ பெரிய‌ ப‌ரிசு சொந்த‌ம்  அவ‌ர்க‌ள் அன்போடு அழைக்கும் போது அவ‌ர்க‌ளுக்கு  பொய் சொல்லி கொண்டாட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்ளாம‌ல் வில‌கி இருப்ப‌து த‌ம்பி சொந்த‌ங்க‌ளுக்கு ம‌ரியாதை கொடுப்ப‌து இல்லை  போல் ஆகிவிடும் 

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் த‌ம்பிக்கு திரும‌ண‌ம் ந‌ட‌க்கும் போது சொந்த‌ம் என்று யார் வ‌ருவார்க‌ள் த‌ம்பியின் திரும‌ண‌த்தை யார் முன் நின்று ந‌ட‌த்தி வைப்பின‌ம் ; கொஞ்ச‌ம் யோசிச்சு பார்

வாழ்வ‌து ஒருமுறை தான் அந்த‌ வாழ்க்கையை அன்போடு வாழ‌ ப‌ழ‌கு  , கொண்டாட்ட‌ம் பிடிக்காட்டியும் கொஞ்ச‌ நேர‌ம் உற‌வுக‌ளுட‌ன் ம‌ன‌ம் விட்டு க‌தைத்து திரும‌ண‌ த‌ம்ப‌திக‌ளை வாழ்த்தி விட்டு வ‌ருவ‌து தான் ம‌னித‌ மாண்பு

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் பையன் ...நாம் வாழ்ந்த காலம் வேறு இப்போதைய காலம் வேறு .மாற்றங்களை ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும் . தற்போது மணமக் கள்   கலியாணம் தங்கள் கொண்டடமாக் தான் பார்க்கிறார்கள் .

திருமணத்துக்கு  பின் இதுவரை வாழ்ந்த கொண்டாடட வாழ்வு வேறுபாடும் . எனவே பையனோ / பெண்ணோ  நடப்புகளுடன் கொண்டாடும் இறுதி கொண்டாடடமாய்  கருதி அந்த நாளை அதி உச்ச மகிழ்வோடு கொண்டாடுகின்றனர்.  ஆடலும் பாடலும் அவர்களுக்கு பிடித்தமானது எனவே ஆடியும் பாடியும் கொண்டாடுகின் றனர் . முன்பு  ஊர் புகழ கொண்டாடினர் இப்பொது தாம் மகிழ கொண்டாடுகிறார்கள் .

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
55 minutes ago, anuja said:

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் 
ந‌ன்றி அக்கா & அத்தான்

ஒரு சொந்த‌ங்க‌ளின் கொண்டாட்ட‌த்துக்கு போயிட்டு ம‌ற்ற‌ சொந்த‌ங்க‌ளின் கொண்டாட்ட‌த்துக்கு போகாட்டி குறை சொல்லி க‌தைப்பின‌ம் , நேரா சொன்னா உங்க‌ட‌ கொண்டாட்ட‌த்துக்கு வ‌ர‌ மாட்டேன் என்றால் அது அத்தை மாமா மாரின் ம‌ன‌சை பாதிக்கும் , அது தான் ஆவ‌த்துக்கு பாவ‌ம் இல்ல‌ என்று லையிட்ட‌ சின்ன‌ பொய் ,

Share this post

Link to post
Share on other sites
29 minutes ago, நிலாமதி said:

வணக்கம் பையன் ...நாம் வாழ்ந்த காலம் வேறு இப்போதைய காலம் வேறு .மாற்றங்களை ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும் . தற்போது மணமக் கள்   கலியாணம் தங்கள் கொண்டடமாக் தான் பார்க்கிறார்கள் .

திருமணத்துக்கு  பின் இதுவரை வாழ்ந்த கொண்டாடட வாழ்வு வேறுபாடும் . எனவே பையனோ / பெண்ணோ  நடப்புகளுடன் கொண்டாடும் இறுதி கொண்டாடடமாய்  கருதி அந்த நாளை அதி உச்ச மகிழ்வோடு கொண்டாடுகின்றனர்.  ஆடலும் பாடலும் அவர்களுக்கு பிடித்தமானது எனவே ஆடியும் பாடியும் கொண்டாடுகின் றனர் . முன்பு  ஊர் புகழ கொண்டாடினர் இப்பொது தாம் மகிழ கொண்டாடுகிறார்கள் .

வ‌ண‌க்க‌ம் நிலா ( அக்கா )

நீங்க‌ள் சொல்லுவ‌தும் ச‌ரி தான் ,
ஊரில் வாழ்ப‌வ‌ர்க‌ள் ப‌ழைய‌கால‌ திரும‌ண‌ விதிமுறைய‌ இப்ப‌வும் க‌டை பிடிக்கின‌ம் , ஆனால் புல‌ம்பெய‌ர் நாட்டில் அப்ப‌டி இல்ல‌ அக்கா ,  
இங்கை பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் அவையின் விருப்ப‌த்துக்கு ஏற்ற‌ போல் திரும‌ண‌ நிக‌ழ்வை செய்யின‌ம் , அது சில‌ரின் பார்வையில் வெறுப்பு க‌ச‌ப்புபாக‌ கூட‌ இருக்க‌லாம் ,

இவ‌ர்க‌ளே இப்ப‌டி என்றால் இவ‌ர்க‌ளுக்கு பிற‌க்க‌ போர‌ பிள்ளைக‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வுக‌ள் 20வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தா வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளின்  திரும‌ண‌ நிக‌ழ்வுக்கு நிக‌ரா எம்ம‌வ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வு அமையும்  😉 

த‌மிழ‌ர்க‌ளின் மொழி காலாச்சார‌ம் எல்லாம் மெது மெதுவாய் அழிந்துடும் கால‌ போக்கில் புல‌ம்பெய‌ர் நாட்டில்   , 

Share this post

Link to post
Share on other sites

இப்ப நடக்கிறதெல்லாம்  திருமண நிகழ்வு இல்லை அப்பன்!  பாக்கவே எரிச்சலாய் இருக்கும்.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
18 minutes ago, குமாரசாமி said:

இப்ப நடக்கிறதெல்லாம்  திருமண நிகழ்வு இல்லை அப்பன்!  பாக்கவே எரிச்சலாய் இருக்கும்.

உண்மை தான் தாத்தா பார்க்க‌ அ‌ருவ‌ருப்பாக‌ இருக்கும் /

Edited by பையன்26
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

புலப்பெயரிகளில் தங்கள் பிள்ளை அந்நியமொழியில் கதைப்பதை பார்த்து கிளுகிளுப்பு ஆனந்தம்  அடைவதில் எம்மினத்தை போல் வேறு ஒருவரும் இல்லை இதுதான் அடிப்படை கலாசார உடைவுக்கு  காரணம் .

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, குமாரசாமி said:

இப்ப நடக்கிறதெல்லாம்  திருமண நிகழ்வு இல்லை அப்பன்!  பாக்கவே எரிச்சலாய் இருக்கும்.

6 hours ago, பையன்26 said:

உண்மை தான் தாத்தா பார்க்க‌ அ‌ருவ‌ருப்பாக‌ இருக்கும் /

சில திருமணங்கள்... அவர்களின் வருமானத்துக்கு மிஞ்சிய செலவுகளுடன்...
மற்றவர்களுக்கு... "பவர்" காட்டுவதற்காக செய்வதைப் பார்க்கும் போது...
அவர்கள்... மற்றவர்களின் பார்வையில், தாழ்ந்து விடுகின்றார்கள் என்பதை, அவர்கள் சிந்திப்பது இல்லை. 

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, spyder12uk said:

புலப்பெயரிகளில் தங்கள் பிள்ளை அந்நியமொழியில் கதைப்பதை பார்த்து கிளுகிளுப்பு ஆனந்தம்  அடைவதில் எம்மினத்தை போல் வேறு ஒருவரும் இல்லை இதுதான் அடிப்படை கலாசார உடைவுக்கு  காரணம் .

உப்ப‌டியா ஆட்க‌ளுக்கு ,
இப்ப‌டி சொன்னாத் தான் ரோச‌ம் வ‌ரும் ,

அன்னைத் த‌மிழ் வாயால் அம்மாவை ம‌ம்மி என்று அழைத்தாய் வெள்ளைக் கார‌ன் தான் உன‌க்கு அப்ப‌னா , 

நானும் என‌து ந‌ண்ப‌ர்க‌ளும் த‌மிழில் தான் க‌தைப்போம்  ,

எங்க‌ளை பார்த்து இங்க‌ பிற‌ந்த‌ பிள்ளைக‌ளும் ஒழுங்கா த‌மிழில் க‌தைத்தா அது எங்க‌ளுக்கு பெரும் ம‌கிழ்ச்சி ,

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

இன்றைய திருமண நிகழ்வுகள் பற்றிய உங்கள் ஆதங்கத்தில் உள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. உங்கள் தரப்பு நியாயத்தைப் பிரதிபலிக்கும் வகையில், எனது மகள் சோம.அழகு வேறு இணையத்தில் எப்போதோ அங்கத நடையில் (sarcastic) வரைந்த கட்டுரையின் இணைப்பு

http://puthu.thinnai.com/?p=34480

அந்த இணையத்தில் இன்னும் (வேண்டுமென்றே) பழைய எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள். மன்னிக்கவும். 

Edited by சுப.சோமசுந்தரம்
 • Like 1
 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites

பையன்,

திருமணம் என்றாலே சந்தோசமான நிகழ்வு தானே. பாட்டு, ஆட்டம் கொண்டாட்டம் இருந்தால் தான் அது சோபிக்கும். மனத்துக்கு இதமாகவும் இருக்கும். 

எனக்கு இப்போது இளைய சமுதாயத்தினர் நடத்தும் திருமண நிகழ்வுகள் தான் மிகவும் சந்தோசத்தைக்  கொடுக்கின்றது. முன்பெல்லாம் திருமண வீடு என்றால் எல்லோரும் ஏதோ சீரியசாக  முகங்களில் இறுக்கத்துடன் பாரம்பரிய சடங்குகள் முடிந்தவுடன் சாப்பாடு,  பின்னர் சாப்பிட்ட கைகழுவி ஈரம் காய்வதற்குள் எழுந்து  பஸ்ஸுக்கு நிற பது  போல்  கியுவில் நின்று  மொய் குடுத்து குறுப் போட்டோ எடுத்துவிட்டு அவசரம் அவசமாக கிளம்பிவிடுவார்கள். இலங்கையிலும் அதையே அவதானித்தேன் ஏனோ தானோ என்று வந்துவிட்டு  ஓடிவிடுவார்கள். போட்டோக்களை, வீடியோவைப்  பார்ததால் எல்லோரும் உம்மென்று முகத்தை  வைத்திருப்பார்கள். 

ஆனால் புலம் பெயர் நாடுகளில்  இபோதைய இளைய தலைமுறையினர் சந்தோசமாக ஆடல் பாடல்களுடன் நிகழ்வுகளை செய்யும் போது அதைப் பார்கக  மிக மகிழ்வாக உள்ளது. வந்த விருந்தினரும் மண மக்களுடன் ஆடிப்பாடி மகிழ்வாக உள்ளார்கள்     வாழ்வது ஒரு முறை தானே. அதை ஜாலியாக வாழ்ந்துவிட்டு போவது தப்பு இல்லையே.

ஆனால் திருமணத்தை நடத்துபவர்கள் தமது தனிப்பட்ட  பொருளாதார நிலையைக் கணக்கிட்டு, அதற்கேற்ற முறையில் திட்டமிட்டு சிறப்பாக அதை நடத்த வேண்டும் என்பது மிக முக்கியம். 

மக்களின் கலாச்சாரம் என்பது ஒரு இடத்தில் தேங்கி நிற்கும்  குட்டை அல்ல. தெளிவான நீரோடையாக ஒடிசெல்வது.  காலத்துக்கு காலம் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை. அது எமது சக்திக்கு அப்பாற்பட்டது.  அதையிட்டு கவலைப்பட்டு நடப்பு வாழ்ககையை உங்கள் இளமையைத தொலைத்தால் அது திரும்ப வராது பையன். ஆகவே நடப்பு வாழ்ககையை மகிழ்வாக வாழுங்கள். 

Share this post

Link to post
Share on other sites
26 minutes ago, tulpen said:

துல்ப‌ன் , உங்க‌ளின் விருப்ப‌த்த‌ சொல்லிய‌மைக்கு ந‌ன்றி ,

இங்கை இவ‌ர்க‌ள் ஆட்ட‌ம் பாட்ட‌ம் போட்டு ஆட‌ம்ப‌ர‌மாய் செய்தாலும் , த‌மிழீழ‌ திரும‌ண‌ நிக‌ழ்வை போல் வ‌ராது , த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌த்தை எல்லாம் ம‌ற‌ந்து இவ‌ர்க‌ள் செய்வ‌து திரும‌ண‌ கொண்டாட்ட‌ம் இல்ல‌ கேலி கூத்து , பொண்ணுக்கு அழ‌கு பொறுமைய‌ம்மா , திரும‌ண‌ பொண்ணு திரும‌ண‌த்தின் போது அமைதியாய் இருந்து புருஷ‌ன் தாலி க‌ட்டும் போது கையெடுத்து கும்பிட‌னும் , 

திரும‌ண‌ பெண்ணே ம‌ன‌வ‌ரைக்கு வ‌ரும் போது ஆட்ட‌ம் போட்டு கொண்டு வ‌ருகிறா , பார்க்கிற‌வைக்கு எரிச்ச‌ல‌ வ‌ர‌ வைக்கும் , இப்ப‌வே இந்த‌ ஆட்ட‌ம் என்றால் கொஞ்ச‌க் கால‌ம் க‌ழித்து  எப்ப‌டி எல்லாம் ஆட்ட‌ம் போடுவா என்று க‌ற்ப‌னை ப‌ண்ணி பாருங்கோ    , ஊரில் இப்ப‌டி  க‌ரும‌ம் பிடிச்ச‌ திரும‌ண‌ நிக‌ழ்வை நான் பார்த்த‌து இல்லை 😁 ,

உற‌வின‌ர்க‌ள் ஆலாத்தி எடுத்து 
கோயிலுக்கு எல்லாரும் ந‌ட‌ந்து போய் கோயிலில் வைத்து தாலி க‌ட்டி விட்டு , திரும‌ண‌ வீட்டில் வாய்க்கு ருசியாய் சாப்பிட்டு புகைப் ப‌ட‌ம் எடுத்து , சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌ள் நாங்க‌ள் எங்க‌ளுக்கு பிடிச்ச‌ விளையாட்டு விளையாடி அந்த‌ நாள் அத‌ற்கு அடுத்த‌ நாள் என்று ச‌ந்தோச‌த்துக்கு குறையே இருக்காது  ஊர் திரும‌ண‌ நிக‌ழ்வில்   , 

விஸ்கி விராண்டி எல்லாம் ஊர் திரும‌ண‌ங்க‌ளில் அப்ப ‌ இல்ல‌  , இப்ப‌ புல‌ம்பெய‌ர் நாட்டில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஊரில் போய் திரும‌ண‌ம் செய்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு விஸ்கி பாட்டி வைக்கின‌ம்  , 

புல‌ம்பெய‌ர் வாழ் த‌மிழ‌ர்க‌ள் தான் எல்லாத்தையும் கெடுத்த‌து , பிள்ளைக‌ளுக்கு த‌மிழ‌ர்க‌ளின் கலாச்சார‌த்த‌ சொல்லி குடுக்காம‌ அவ‌ர்க‌ளின் இஸ்ர‌த்துக்கு இட‌ம் குடுத்த‌தால் தான் க‌லியாண‌ நிக‌ழ்வு கேலி கூத்து நிக‌ழ்வு மாதிரி  போய் கிட்டு இருக்கு ,அதோடு ஊரில் இருப்ப‌வ‌ர்க‌ளையும் ப‌ழுதாக்கி போட்டின‌ம் புல‌ம்பெய‌ர் வாழ் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள்   ,   

நான் திரும‌ண‌ம் செய்யும் பிள்ளையை நான் ம‌ட்டும் தான் தொட‌லாம் , என‌து திரும‌ண‌த்துக்கு வ‌ந்த‌ என‌து ந‌ண்ப‌ர்க‌ள் என்  ம‌னைவியை தொட்டு தூக்கி ‌பிடிப்ப‌த‌ நான் ஒரு போதும் அனும‌தியேன் , எம் திரும‌ண‌ க‌லாச்சார‌த்தில் இப்ப‌டியான‌ அருவ‌ருப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கு இட‌ம் இல்லை துல்ப‌ன் 😁 

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , எழுதுங்கோ விவாதிப்போம் துல்ப‌ன் 😉

Share this post

Link to post
Share on other sites
36 minutes ago, பையன்26 said:

பையன் அண்ணா உங்களை நிநைக்க பாவமாக இருக்குது.நீங்கள் ஊருக்கும் போக மாட்டீங்கள் அங்கை சிங்களவன் இருக்கிறான்.இங்கை கலாச்சாரப் பிரச்சனை.😄

Share this post

Link to post
Share on other sites

பையா நாங்கள் இரண்டு தோணியில் பயணம் செய்கிறோம்.பிள்ளைகளையும் இதே மாதிரி பயணி என்று கட்டாயப்படுத்துகிறோம்.அதற்கு அடுத்த தலைமுறை ஒரு தோணியில் பயணிக்கும்.
அப்போது இந்தக் கேள்வியே இராது.

நீங்கள் ஊரைப்பற்றி கனவு காணும் போது அங்கு நடக்கும் நிஜங்களையும் கேட்டறியுங்கள்.
ஊரில் திருமணம் போன்ற கொண்டாட்டங்கள் திருமண மண்டபத்தோடு முடிவடைகிறது.இப்படியே ஒவ்வொரு கொண்டாட்டமும்.
    நாங்கள் ஊருக்கு விடுமுறையில் போகும் போது இங்கேயுள்ள கலாச்சாரங்களையும் அங்கே கொண்டு போய் பரப்புகிறோம்.அவர்களும் இறுக பற்றிக் கொண்டு பரப்புகிறார்கள்.
   மனதுக்கு சங்கடமாக இருந்தாலும் நடப்பதை ஒத்துக் கொள்ளத் தானே வேண்டும்.
            கொரோனாவோடு பழகுற மாதிரி இதையும் பழகிக் கொள்ளுங்கள்.

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, சுவைப்பிரியன் said:

பையன் அண்ணா உங்களை நிநைக்க பாவமாக இருக்குது.நீங்கள் ஊருக்கும் போக மாட்டீங்கள் அங்கை சிங்களவன் இருக்கிறான்.இங்கை கலாச்சாரப் பிரச்சனை.😄

யார் சொன்ன‌து நான் ஊருக்கு போக‌ மாட்டேன் என்று , சிங்க‌ள‌வ‌னுக்கு ப‌ய‌ந்தா எம‌து இல‌க்கை எப்ப‌டி அடைவ‌து முதிய‌வ‌ரே , புலிப்பால் குடித்து வ‌ள‌ந்த‌ என‌க்கு 💪 க‌ழுதை பால் தேவை இல்லை 😉

என‌க்கு க‌லாச்சார‌ம் முக்கிய‌ம் , ம‌ற்ற‌ உற‌வுக‌ளுக்கு கலாச்ச‌ர‌ம் முக்கிய‌ம் இல்லாட்டி ஒன்னும் செய்ய‌ ஏலாது , 

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, சுவைப்பிரியன் said:
49 minutes ago, பையன்26 said:

நான் திரும‌ண‌ம் செய்யும் பிள்ளையை நான் ம‌ட்டும் தான் தொட‌லாம் , என‌து திரும‌ண‌த்துக்கு வ‌ந்த‌ என‌து ந‌ண்ப‌ர்க‌ள் என்  ம‌னைவியை தொட்டு தூக்கி ‌பிடிப்ப‌த‌ நான் ஒரு போதும் அனும‌தியேன் , எம் திரும‌ண‌ க‌லாச்சார‌த்தில் இப்ப‌டியான‌ அருவ‌ருப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கு இட‌ம் இல்லை துல்ப‌ன் 😁 

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , எழுதுங்கோ விவாதிப்போம் துல்ப‌ன் 😉

பையன் அண்ணா உங்களை நிநைக்க பாவமாக இருக்குது.நீங்கள் ஊருக்கும் போக மாட்டீங்கள் அங்கை சிங்களவன் இருக்கிறான்.இங்கை கலாச்சாரப் பிரச்சனை.😄

பையா 2015 இல் ஊருக்கு போனபோது பழைய நினைப்பிலேயே போனேன்.வீட்டுக்கு வீடு ஆண் பெண் வயது வித்தியாசமின்றி கட்டிப் பிடித்து கக் பண்ணுகிறார்கள்.
இங்கேயிருந்து போன எனக்கு ஆச்சரியமாகவும் கூச்சமாகவும் இருந்தது.

சுவை தம்பிக்கு கலியாணம் இல்லைப் போல இருக்கு.

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா 2015 இல் ஊருக்கு போனபோது பழைய நினைப்பிலேயே போனேன்.வீட்டுக்கு வீடு ஆண் பெண் வயது வித்தியாசமின்றி கட்டிப் பிடித்து கக் பண்ணுகிறார்கள்.
இங்கேயிருந்து போன எனக்கு ஆச்சரியமாகவும் கூச்சமாகவும் இருந்தது.

சுவை தம்பிக்கு கலியாணம் இல்லைப் போல இருக்கு.

ஈழப்பிரியன் தாத்தா உங்களுக்கு விழங்குது. ஆனால் எங்கடை பையன் அண்ணாவுக்கு விழங்குதில்லையே..அது சரி கலியானம் என்டால் என்ன.😄

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
53 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா நாங்கள் இரண்டு தோணியில் பயணம் செய்கிறோம்.பிள்ளைகளையும் இதே மாதிரி பயணி என்று கட்டாயப்படுத்துகிறோம்.அதற்கு அடுத்த தலைமுறை ஒரு தோணியில் பயணிக்கும்.
அப்போது இந்தக் கேள்வியே இராது.

நீங்கள் ஊரைப்பற்றி கனவு காணும் போது அங்கு நடக்கும் நிஜங்களையும் கேட்டறியுங்கள்.
ஊரில் திருமணம் போன்ற கொண்டாட்டங்கள் திருமண மண்டபத்தோடு முடிவடைகிறது.இப்படியே ஒவ்வொரு கொண்டாட்டமும்.
    நாங்கள் ஊருக்கு விடுமுறையில் போகும் போது இங்கேயுள்ள கலாச்சாரங்களையும் அங்கே கொண்டு போய் பரப்புகிறோம்.அவர்களும் இறுக பற்றிக் கொண்டு பரப்புகிறார்கள்.
   மனதுக்கு சங்கடமாக இருந்தாலும் நடப்பதை ஒத்துக் கொள்ளத் தானே வேண்டும்.
            கொரோனாவோடு பழகுற மாதிரி இதையும் பழகிக் கொள்ளுங்கள்.

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , கொரோனாவுக்கு முத‌ல் என‌து சித்தியின் ம‌க‌னுக்கு திரும‌ண‌ம் ந‌ட‌ந்திச்சு பார்க்க‌வே எவ‌ள‌வு ஆசையா இருந்திச்சு , சின்ன‌னில் நான் பார்த்த‌ அதே நிக‌ழ்வுக‌ளை போல் இருந்திச்சு ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌ ,

எம் க‌லாச்சார‌ம் அழிய‌ சிங்க‌ள‌வ‌னும் புல‌ம்பெய‌ர் நாட்டு ஈழ‌ உற‌வுக‌ளும் தான் கார‌ண‌ம் , 2009ம் ஆண்டுக்கு முத‌ல் யாழ்ப்பாண‌ம் ப‌ழைய‌ யாழ்ப்பாண‌ம் மாதிரியே இருந்த‌து  , இப்ப‌ அங்கையும் ஒரு சில‌ அசிங்க‌ங்க‌ள் ந‌ட‌க்குது அத‌ நான் ம‌றுக்க‌ வில்லை ,  

 த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் வேற்று மொழியில்  க‌தைப்ப‌த‌ பெருமையா சொல்ல‌க் கூடிய‌வ‌ர்க‌ளும் எங்க‌ட‌ இன‌த்தில் இருக்கின‌ம் , 

நான் எழுதும் த‌மிழை பார்த்து ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கேலியும் கிண்ட‌லும் செய்தாலும் என் தாய் மொழி த‌மிழில் எழுதுவ‌தையே அதிக‌ம் விரும்புவேன்  

35 minutes ago, சுவைப்பிரியன் said:

ஈழப்பிரியன் தாத்தா உங்களுக்கு விழங்குது. ஆனால் எங்கடை பையன் அண்ணாவுக்கு விழங்குதில்லையே..அது சரி கலியானம் என்டால் என்ன.😄

இங்கை பாருங்கோ இந்த‌ அச்சா பிள்ளை எப்ப‌டி எல்லாம் ந‌க்க‌ல் நையாண்டி செய்கிறார் 😁,

Edited by பையன்26

Share this post

Link to post
Share on other sites

நான் திரும‌ண‌ம் செய்யும் பிள்ளையை நான் ம‌ட்டும் தான் தொட‌லாம் , என‌து திரும‌ண‌த்துக்கு வ‌ந்த‌ என‌து ந‌ண்ப‌ர்க‌ள் என்  ம‌னைவியை தொட்டு தூக்கி ‌பிடிப்ப‌த‌ நான் ஒரு போதும் அனும‌தியேன் , எம் திரும‌ண‌ க‌லாச்சார‌த்தில் இப்ப‌டியான‌ அருவ‌ருப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கு இட‌ம் இல்லை துல்ப‌ன் 😁 

பையா நீங்கள் இன்னும் எண்பது தொன்னூறுகளில் வாழ்கிறீர்கள் போல . தயவு செய்து கலியாணம் வெளிநாடுகளில் கட்டீராதேயுங்கோ. (இன்னும் கட்டியிருக்காவிட்டால்)

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, சுவைப்பிரியன் said:

பையன் அண்ணா உங்களை நிநைக்க பாவமாக இருக்குது.நீங்கள் ஊருக்கும் போக மாட்டீங்கள் அங்கை சிங்களவன் இருக்கிறான்.இங்கை கலாச்சாரப் பிரச்சனை.😄

சுவைப்பிரிய‌ன் அண்ணா என‌க்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் போல் ஊருக்கு போய் வ‌ந்தா  காட்ட‌ பிடிக்காது , 
சிங்க‌த்தின் கோட்டையை தாண்டி போய் , சிறுவ‌ய‌தில் நான் பார்த்த‌  யாழ்ப்பாண‌மும் இப்ப‌ இருக்கிற‌ யாழ்ப்பாண‌த்த‌ ப‌ற்றி  எழுதி இருக்கிறேன் வாசித்து பாருங்கோ ,

ஜ‌முனாவை உங்க‌ளுக்கு ந‌ல்லா தெரியும் தானே , ஜ‌முனாவும் நானும் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் துணிந்து ப‌ல‌த‌ செய்த‌ நாங்க‌ள் ,

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, spyder12uk said:

புலப்பெயரிகளில் தங்கள் பிள்ளை அந்நியமொழியில் கதைப்பதை பார்த்து கிளுகிளுப்பு ஆனந்தம்  அடைவதில் எம்மினத்தை போல் வேறு ஒருவரும் இல்லை இதுதான் அடிப்படை கலாசார உடைவுக்கு  காரணம் .

 எங்கடையளுக்கு சந்தோச கொண்டாட்டம் எண்டுட்டு  மற்றவன் பொண்டாட்டியை இழுத்துப்புடிச்சு ஆடுறதிலையும் ஒரு சொகம்.கேட்டால் சோசல் மூவிங்காம்.

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
24 minutes ago, ராஜ் said:

நான் திரும‌ண‌ம் செய்யும் பிள்ளையை நான் ம‌ட்டும் தான் தொட‌லாம் , என‌து திரும‌ண‌த்துக்கு வ‌ந்த‌ என‌து ந‌ண்ப‌ர்க‌ள் என்  ம‌னைவியை தொட்டு தூக்கி ‌பிடிப்ப‌த‌ நான் ஒரு போதும் அனும‌தியேன் , எம் திரும‌ண‌ க‌லாச்சார‌த்தில் இப்ப‌டியான‌ அருவ‌ருப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கு இட‌ம் இல்லை துல்ப‌ன் 😁 

பையா நீங்கள் இன்னும் எண்பது தொன்னூறுகளில் வாழ்கிறீர்கள் போல . தயவு செய்து கலியாணம் வெளிநாடுகளில் கட்டீராதேயுங்கோ. (இன்னும் கட்டியிருக்காவிட்டால்)

என்ன‌ இப்ப‌ தான் யாழில் இணைந்தீங்க‌ள் , இணைந்த‌தும் இந்த‌ திரிக்கே வ‌ந்து எழுதுறீங்க‌ள் ச‌ரி வாங்கோ உங்க‌ள் வ‌ர‌வும் ந‌ல் வ‌ர‌வாக‌ட்டும்  , 

நீங்க‌ள் முத‌ல் சொன்ன‌ ஆண்டில் நான் பிற‌க்க‌ வில்லை 1993 அந்த‌க் கால‌ப் ப‌குதியில் ந‌ட‌ந்த‌ திரும‌ண‌ நிக‌ழ்வை ப‌ற்றி எழுதி இருக்கிறேன் , 

என‌து ம‌ன‌தில் ந‌ல்ல‌ பிள்ளை இட‌ம் பிடித்து இருக்கும் போது , என‌து எதிர் கால‌ம்  நான் நினைப்ப‌து போல் ந‌ல்ல‌ மாதிரியா அமையும் , 
 
உங்க‌ளின் இல‌வ‌ச‌ அறிவுரைக்கு ந‌ன்றி 😁

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, tulpen said:

மக்களின் கலாச்சாரம் என்பது ஒரு இடத்தில் தேங்கி நிற்கும்  குட்டை அல்ல. தெளிவான நீரோடையாக ஒடிசெல்வது.  காலத்துக்கு காலம் பழையன கழிதலும் புதியன புகுதலும்

பத்துப்பேரோடை குடும்பம் நடத்தீட்டு பதினோராவது ஆளை கலியாணம் கட்டுவதுதான் பழையன கழிதலும் புதியன புகுதல் கலாச்சாரமா சார்? :cool:

Share this post

Link to post
Share on other sites

இங்கு இப்படி கலியாண வீடுகள் நடப்பதில்லை, அத்துடன் நான் இருக்குமிடத்தில் இதுவரை இரண்டு கல்யாணத்திற்குதான் போயுள்ளேன், அதனால் பார்க்காமல் கருத்து கூறவிரும்பவில்லை.

எனக்கும் மூன்று பிள்ளைகள், இன்னும் 7-8 வருடத்தில் செய்து வைக்கனும். தமிழரை செய்து வைக்கனும் என்பதுதான் ஆசை. ஆனா தன் பாலினத்தை கூட்டிவராதவரை யாரென்றாலும் சரி. மகன்களுக்கு ஊரில் உள்ள பெண்களைதான் பார்த்து செய்து வைக்கனும், பார்ப்போம்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.