Jump to content

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்

லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்

 

லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
பதிவு: ஜூன் 17,  2020 05:45 AM
புதுடெல்லி, 

இந்தியாவுடன் எல்லைகளை பகிரும் முக்கியமான நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன், இந்தியா எப்போதும் நட்பு பாராட்டவே விரும்புகிறது. ஆனால் இந்த நாடுகள் ஒருபோதும் இந்தியாவை நண்பனாக கருதியது இல்லை.


வடமேற்கு எல்லையை பகிரும் பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் தொடுத்து வெற்றி பெற முடியாததால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து அன்றாடம் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. அது சர்வதேச அளவில் அம்பலப்பட்டு அடிக்கடி மூக்குடைபட்டு போகிறது.

மறுபுறம் வடகிழக்கு எல்லையை பகிரும் சீனாவோ இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து தனது எல்லையை விரிவுபடுத்த கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருக்கிறது. அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என சொந்தம் கொண்டாடும் அந்த நாடு, இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு தக்க தருணத்தை தேடிக்கொண்டு இருக்கிறது.

இதனால் அருணாசல பிரதேசம், லடாக், சிக்கிம் என இருநாட்டு எல்லைப்பகுதிகளில் இந்திய-சீன வீரர்கள் அடிக்கடி கைகலப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையேயான 3,488 கி.மீ. எல்லைப்பகுதி எப்போதும் பதற்றம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.

டோக்லாம் பிரச்சினை

கடந்த 2017-ம் ஆண்டு கூட சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் இரு நாட்டு படைகள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அங்கு சீன ராணுவம் சட்ட விரோதமாக மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இரு நாட்டு படைகளும் மோதல், கைகலப்பில் ஈடுபட்டன.

சர்வதேச அளவில் கவனம் பெற்ற இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. டோக்லாம் பகுதியில் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்த பதற்றம் இதன் மூலம் முடிவுக்கு வந்ததுடன், இரு நாடுகளும் தங்கள் படைகளையும் அங்கிருந்து விலக்கிக்கொண்டன.

லடாக்கில் ஊடுருவல்

இந்த சம்பவத்துக்குப்பின் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சுமுக நிலைக்கு திரும்பிய நிலையில், சீன ராணுவம் மீண்டும் தனது வேலையை காட்டியுள்ளது. இந்த முறை அவர்களது கவனம் லடாக்கில் இருந்தது. லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் சட்ட விரோதமாக ஊடுருவினர்.

கடந்த மாத தொடக்கத்தில் நடந்த இந்த ஊடுருவலை கண்டறிந்த இந்திய வீரர்கள் சீன ராணுவத்தினரை திரும்பி செல்லுமாறு வலியுறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 5 மற்றும் 6-ந்தேதிகளில் நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பல வீரர்கள் காயமடைந்தனர். மேலும் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தவுலத் ஓல்டி போன்ற பகுதிகளிலும் இரு நாட்டு வீரர்களும் நேருக்குநேர் மோதும் சூழல் உருவானது.

படைகள் குவிப்பு

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சீனா ஆயுதங்களுடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்தது. இதனால் இந்தியாவும் கூடுதல் படைகளை லடாக்கில் களமிறக்கியது. மேலும் உத்தரகாண்ட், அருணாசல பிரதேசம், சிக்கிம் என இந்தியா-சீனா எல்லையில் இரு நாடுகளும் படைகள் குவித்தன. இதனால் இரு நாட்டு எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.

ஒருபுறம் படைகள் குவிக்கப்பட்டாலும், மறுபுறம் இந்த பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் தீவிரம் காட்டின. அதன்படி ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலும், மேஜர்கள் மட்டத்திலும் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

எனவே இரு தரப்பிலும் ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேசினர். இதில் இரு நாடுகளும் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டன. இதை அறிவித்த ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கல்வான் பள்ளத்தாக்குக்கு வடக்கில் இருந்து இந்தியா படைகளை விலக்கி வருவதாக தெரிவித்தார்.

கற்கள், கம்பிகளால் தாக்கினர்

இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு நாட்டு வீரர்களுக்கு இடையே திடீரென பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். சீன வீரர்கள் இந்திய படையினர் மீது கற்களை வீசி தாக்கினர்.

கற்களாலும், கம்பிகளாலும் தாக்கிக்கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. நேற்று காலைவரை பல மணி நேரம் நீடித்த இந்த மோதலில் இந்தியா தரப்பில் ராணுவ அதிகாரி (கர்னல்) ஒருவரும், 2 வீரர்களும் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

வீரமரணம் அடைந்த வீரர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி (வயது 40) என்பது குறிப்பிடத்தக்கது.

பலி எண்ணிக்கை உயர்வு

ஆனால் இந்த மோதலில் இந்திய வீரர்கள் மொத்தம் 20 பேர் பலியாகி விட்டதாக இரவில் தெரியவந்தது. கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் மீட்டர் உயரத்தில் பூஜ்ஜிய டிகிரி வெப்ப நிலையில் நடந்த இந்த இருதரப்பு மோதலில் பலத்த காயமடைந்த மேலும் 17 வீரர்கள் பலியாகி விட்டனர்.

இந்த மோதலில் சீனா தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டு உள்ளது. அங்கு 43 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கு இடையே பலத்த மோதல் நடந்திருப்பதும், அங்கு நிலைமை மோசமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

லடாக் எல்லையில் படைகள் வாபஸ் பெறப்பட்டு, பதற்றம் குறைப்பதற்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர் மோதல், அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது. எனவே அங்கு மீண்டும் இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இதற்காக முப்படை தலைவர் பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோருடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும் கலந்து கொண்டார். லடாக் எல்லையில் தற்போதைய நிலவரம் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பிரதமரிடம் விளக்கம்

பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது லடாக்கில் நேற்று முன்தினம் நடந்த மோதல் மற்றும் அங்கு தற்போது நிலவும் சூழல் உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். மேலும் எல்லையில் அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் இந்தியா தரப்பில் உயிர்ப்பலிகள் நிகழ்வது வாடிக்கையாகி வந்த நிலையில், சீனாவின் அத்துமீறலாலும் இந்திய வீரர்கள் பலியாகி இருக்கும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/17023804/China-in-the-Ladakh-region-Sudden-attack-Including.vpf

 

Link to comment
Share on other sites

  • Replies 131
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும், சீனாவும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்

ந்தியா, சீனா இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவும், சீனாவும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ்
 
ஜெனிவா:
 
இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
 
இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
சீனா தரப்பில்உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்த வீரர்களின் மொத்த எண்ணிக்கை 43 என எ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 
இந்த மோதலால் இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் நிலவி வருகிறது. 
 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் மிகுந்த கவலை தெரிவித்துள்ளார்.
 
கோப்பு படம்
 
இது குறித்து அண்ட்டோனியாவின் துணைச்செய்தித்தொடர்பாளர் இர் ஹனிஹொ தெரிவித்ததாவது:-
 
இந்தியா-சீன எல்லையில் நடைபெற்ற வன்முறை மற்றும் உயிரிழப்புகள் மிகுந்த கவலை அளிக்கிறது. இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 
பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் ஆறுதல் தரும் நிகழ்வுகளாக எடுத்துக்கொள்கிறோம்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

அங்கையும் தமிழன் தான் பலி...:(

 

அடித்துக் கொன்று உள்ளார்கள்... என்று செய்திகள் கூறுகின்றது.

சென்ற ஜூன் 4’ம் திகதி பாகிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சூட்டிலும்.... இந்திய இராணுவத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கொல்லப் பட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன தரப்பின் ஒருதலைப்பட்சமான செயல்பாடே வன்முறைக்கு காரணம் - இந்திய வெளியுறவுத்துறை

சீன தரப்பின் ஒருதலைப்பட்சமான செயல்பாடே வன்முறைக்கு காரணம் - இந்திய வெளியுறவுத்துறை

 

ன தரப்பு ஒருதலைப்பட்சமாக அங்குள்ள நிலையை மாற்ற முயற்சித்ததன் விளைவாக ஒரு வன்முறை நேருக்கு நேர் ஏற்பட்டது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
பதிவு: ஜூன் 17,  2020 06:24 AM
புதுடெல்லி

இந்தியா - சீனா இடையே 1962ஆம் ஆண்டு போல மீண்டும் போர் மூளும் அபாயம் இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்நிலையில், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மத்திய அரசு ராஜ்ஜீய ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் சிறிய சம்பவங்களும் பிரச்னையாக உருவெடுத்து மிகப்பெரிய போரில் ஈடுபட வேண்டியிருக்கும் எனவும் பாதுகாப்பு நிபுணர்கள் தில்லான், டி.பி. சீனிவாசன் போன்றோர் எச்சரித்துள்ளனர்.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறும் போது:-

 "2020 ஜூன் 15 மாலை மற்றும் இரவு, சீன தரப்பு ஒருதலைப்பட்சமாக அங்குள்ள நிலையை மாற்ற முயற்சித்ததன் விளைவாக ஒரு வன்முறை நேருக்கு நேர் ஏற்பட்டது. இரு தரப்பினரும் உயிரிழப்புகளை சந்தித்தனர் உயர் மட்டத்தில் உடன்படிக்கை சீனத் தரப்பினரால் கடுமையாக பின்பற்றப்பட்டிருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கும் என கூறினார். 

வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சீன தரப்பு ஒருதலைப்பட்சமாக அங்குள்ள நிலையை மாற்ற முயற்சித்ததன் விளைவாக ஒரு வன்முறை நேருக்கு நேர் ஏற்பட்டது".

ஒரு ஒப்பந்தத்தின் படி சீன துருப்புக்கள் ஒரு இடத்திலிருந்து விலகிச் செல்லத் தயாராகி கொண்டிருந்தபோது நடந்த மோதல்களில் கொல்லப்பட்ட வீரர்களில் கர்னல் பி.சந்தோஷ் பாபு, ஹவில்தார் பழனி மற்றும் சிப்பாய் ஓஜா ஆகியோர் அடங்குவர்.

கர்னல் கற்களால் தாக்கப்பட்டதாகவும், இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது, இது பல மணி நேரம் நிராயுதபாணியான போரை  வழிவகுத்தது. வீரர்கள் நள்ளிரவுக்குப் பிறகு வெளியேற்றப்பட்டனர்.

"இது சுமூகமாக நடைபெறும் என்பது எங்கள் எதிர்பார்ப்பாக இருந்த போதிலும், கால்வான் பள்ளத்தாக்கிலுள்ள உண்மையான எல்லை கோட்டை மதிக்க சீனத் தரப்பு ஒருமித்த கருத்தில் இருந்து புறப்பட்டது

"எல்லை நிர்வாகத்திற்கான அதன் பொறுப்பான அணுகுமுறையைப் பொறுத்தவரை, இந்தியா அதன் அனைத்து நடவடிக்கைகளும் எப்போதும் எல்லை கோட்டின்  இந்தியப் பக்கத்திலேயே உள்ளன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. சீனப் பக்கத்தையும் அதுபோல் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  அமைதியைப் பேணுவதன் அவசியத்தை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எல்லைப் பகுதிகளிலும், உரையாடலின் மூலம் வேறுபாடுகளைத் தீர்ப்பதிலும். அதே நேரத்தில், இந்தியாவின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/17062405/FaceOff-Result-Of-Attempt-By-China-To-Unilaterally.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 இந்திய வீரர்கள் உயிரிழப்பு: இந்தியா சீனா எல்லை பிரச்சினையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்: அமெரிக்கா அறிவிப்பு

closely-monitoring-india-china-situation-says-us பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப், அதிபர் ஜிஜின்பிங் : கோப்புப்படம்

வாஷிங்டன்

இந்தியா, சீனா இடையிலான லடாக் எல்லைப் பிரச்சினையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம், இரு நாடுகளும் அமைதிப்பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, டெம்சேக், தவுலத் பெக் ஓல்டி ஆகிய எல்லைப் பகுதிகளில் கடந்த5வாரங்களாக இந்தியா, சீனா ராணுவத்தினரிடையே மோதல் நீடித்து வந்தது. இரு தரப்பிலும் படைகளைக் குவித்து வந்தனர்.

இந்த மோதலைத் தீர்க்க இரு நாட்டு ராணுவ மேஜர் அளவில் பேச்சு நடந்தாலும் பதற்றம் தணிந்ததேத் தவிர பிரச்சினை தீரவில்லை. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் மூலமும் பேச்சு நடத்தப்பட்டு, இரு நாட்டு படைகளும் அங்கிருந்து திரும்பப்பெறுவது என முடிவு ெசய்யப்பட்டது

இந்நிலையில் கல்வான் பள்ளாதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 43 பேர்வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறது. இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் பெரும்பதற்றம் நீடிக்கிறது

1592362216756.jpg

45 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா-சீனா ராணுவ மோதலில் முதல்முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றமான சூழலை தீவிரமாக கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாஷிங்டனில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ இந்தியா, சீனா ராணுவத்தினர் இடையே எல்லையில் ஏற்பட்ட பிரச்சினையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

இந்தியாவும், சீனாவும் மேலும் பதற்றத்தை அதிகரிக்காமல் இருந்து, பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில், பேச்சின் மூலம் தீர்வு காண அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது.

இந்திய ராணுவம்தரப்பில் 20 வீரர்கள் பலியாகியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளதை அறிந்தோம். இந்த தாக்குதலில் பலியான இந்திய வீரர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவிக்கிறோம்.

கடந்த 2-ம் தேதி இந்தியப்பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் இடையே நடந்த தொலைப்பேசி உரையாடலில் இந்தியா, சீனா எல்லைப்பிரச்சினை குறித்தும் பேசப்பட்டது” எனத் தெரிவித்தார்

 

https://www.hindutamil.in/news/world/559794-closely-monitoring-india-china-situation-says-us-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

சீனாவுடனான எல்லைப்பகுதியில், லடாக் பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாக தனது ராணுவ பலத்தை அதிகரித்துவந்த இந்தியா, எதிர்பாராத விதமாக திங்கட்கிழமை அடிவாங்கியிருக்கிறது. 

தனது ராணுவ பலத்தைக் கண்டு சீனா பின்வாங்கிவிடும் என்று நம்பிய இந்திய ராணுவம், எல்லையில் பிலிம் காட்டா, சீனா செல்லமாக தலையில் தட்டி இந்தியர்களுக்கு கள யதார்த்தத்தை உணரவைத்திருக்கிறது. 

விளைவு, 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு இன்னும் பலர் காயமடந்திருக்கின்றனர்.

அடவாங்கியபின், வாலைநன்றாகச் சுருட்டி, பின்னங்கால்களுக்கு நடுவே மறைத்து வைத்திருக்கும் இந்தியா சமாதானம் பேசலாம் என்று முனகியவாறு பம்முகிறது.

இந்தியா... வாலை சுருட்டிக் கொண்டு வரவில்லை.
இந்திய இராணுவத்தினர் 20 பேர் இறந்தமைக்காக,
43 சீன  இராணுவத்தினரை..... போட்டுத் தள்ளிப் போட்டு,
நெஞ்சை... நிமிர்த்திக் கொண்டு
  "கெத்தாக" வந்திருக்கிறார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பந்தத்தை இந்திய வீரர்கள் மீறிவிட்டார்கள்; கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு இறையான்மை இருக்கிறது: சீன அரசு ஊடகம் குற்றச்சாட்டு

indian-troops-violated-agreements-china-has-sovereignty-over-galwan-valley-china-s-official-media பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜின் பிங்

பெய்ஜிங்


கிழக்கு லடாக் அருகே அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கு மீது சீனாவுக்கு எப்போதும் இறையாண்மை இருக்கிறது அதில் மாற்றமில்லை. இந்திய வீரர்கள் அத்துமீறி வந்து தாக்குதல் நடத்தியதால்தான் இருதரப்பும் மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளதாக சீனாவின் அதிகாரபூர்வ ஊடகமான தி குளோபல் டைம்ஸ் குற்றம்சாட்டியுள்ளது

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளாதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 43 பேர்வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறது. இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் பெரும்பதற்றம் நீடிக்கிறது

5 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா-சீனா ராணுவ மோதலில் முதல்முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, டெம்சேக், தவுலத் பெக் ஓல்டி ஆகிய எல்லைப் பகுதிகளில் கடந்த5வாரங்களாக இந்தியா, சீனா ராணுவத்தினரிடையே மோதல் நீடித்து வந்தது. இரு தரப்பிலும் படைகளைக் குவித்து வந்தனர்.

1592365965756.jpg

இந்த மோதலைத் தீர்க்க இரு நாட்டு ராணுவ மேஜர் அளவில் பேச்சு நடந்தாலும் பதற்றம் தணிந்ததே தவிர பிரச்சினை தீரவில்லை. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் மூலமும் பேச்சு நடத்தப்பட்டு, இரு நாட்டு படைகளும் அங்கிருந்து திரும்பப்பெறுவது என முடிவு ெசய்யப்பட்டு படைகள் வாபஸ் பெற்று வந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது

இந்தியத் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டவுடனே சீனாவின் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி(பிஎல்ஏ) மேற்கு பகுதி கமாண்டர் செய்தித்தொடர்பாளர் ஹாங் ஷூலி முதல்முறையாக எதிர்வினையாற்றினார்.

அவர் தி குளோபல் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் “ கிழக்கு லடாக் அருகே இருக்கும் கல்வான் பள்ளதாக்குப் பகுதியில் சீனாவுக்கு எப்போதும் இறையாண்மை இருக்கிறது இதில் மாற்றமில்லை. இந்திய ராணுவத்தினர் ஆத்திரமூட்டும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தி வந்தனர், இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தையும் மீறினார்கள். ராணுவ கமாண்டர் அளவில் நடந்த பேச்சும், ராணுவ ரீதியான நட்பும், இரு நாட்டு மக்களின் உணர்வுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தினர் தாங்கள் அளித்த வாக்குறுதியை மீறிவிட்டு மீண்டும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் அத்து மீறி எல்லை கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்து, திட்டமிட்டே எங்கள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.இதுதான் இருதரப்புக்கும் இடையே தாக்குதல் தீவிரமடையவும், உயிரிழப்பு ஏற்படவும் காரணமாக அமைந்தது.

இந்திய ராணுவம் அனைத்து விதமான ஆத்திரமூட்டும் செயல்களையும் நிறுத்த வேண்டும். அனைத்து விவகாரங்களையும் பேச்சுமூலம் தீர்வு காண வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

1592365980756.jpeg

ஆனால் சீனா ராணுவம் தரப்பில் இதுவரை எத்தனை பேர் காயமடைந்துள்ளார்கள், உயிரிழந்துள்ளார்கள் என்பது குறித்து சீன ராணுவம் தெரிவிக்கவில்லை, தி குளோபல் டைம்ஸ் நாளேடும் வெளியிடாமல் மவுனம் காக்கிறது. ஆனால், உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று மட்டும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது

தி குளோபல் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர் வூ ஜிஜின் கூறுகையில் “ கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்தினர் தீவிரமான மோதலில் ஈடுபட்டார்கள். இதில் இந்தியத் தரப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள், எங்கள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

அதன்பின் தி குளோபல் டைம்ஸ் நாளேடு ட்விட்டரில் பதிவி்ட்ட கருத்தில் “ சீன ராணுவம் தரப்பில் எத்தனை வீரர்கள் உயிரிழந்தார்கள் என்பதை குளோபல் டைம்ஸ் ஒரு போதும் கூறவில்லை. எத்தனை வீரர்கள் உயிரிழந்தார்கள் என்பதையும் உறுதி செய்ய முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது

பின்னர் தி குளோபல் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர் வூ ஜிஜின் மற்றொரு ட்விட்டர் பதிவில் “ எனது புரிதல் என்னவென்றால், இரு தரப்பு ராணுவத்திலும் உயிரிழப்பு எண்ணிக்கையை ஒப்பிடுவதை சீன தரப்பு விரும்பவில்லை, இதனால் இரு தரப்பு மக்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றத்தைத் தவிர்க்க முடியும். இது சீனாவின் நல்லெண்ணமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்

https://www.hindutamil.in/news/world/559801-indian-troops-violated-agreements-china-has-sovereignty-over-galwan-valley-china-s-official-media-3.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன எல்லையில் மோதல்- 4 இந்திய வீரர்கள் கவலைக்கிடம்

சீன எல்லையில் மோதல்- 4 இந்திய வீரர்கள் கவலைக்கிடம்

 

புதுடெல்லி:

இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

 
இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், காயமடைந்த இந்திய வீரர்களில் 4 வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேபோல் சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/17100516/1618147/IndiaChina-border-tensions-4-indian-soldiers-in-critical.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா - சீனா எல்லைப் பதற்றம் பெரிய போராக மாறுமா? மூத்த பத்திரிகையாளர் கருத்து

இந்தியா - சீனா எல்லைப் பதற்றம் பெரிய போராக மாறுமா?  மூத்த பத்திரிகையாளர் கருத்து
 

இந்தியா - சீனா எல்லைப் பதற்றம் பெரிய போராக மாறுமா? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தகவல் தெரிவித்து உள்ளார்.
பதிவு: ஜூன் 17,  2020 11:04 AM
புதுடெல்லி

இந்தியா சீனா இடையிலான எல்லையான லடாக் பகுதியில் நேற்று சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனா தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஜூன் 6 ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையை ஒட்டி இரு நாட்டு ராணுவங்களும் மோதல் ஏற்படும் பகுதிகளில் இருந்து பின்வாங்கியதாக இந்திய ராணுவத் தளபதி கூறியிருந்த நிலையில் இப்போது திடீரென உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மோதல் நடந்திருக்கிறது. சூழ்நிலை மேலும் மோசமாகுமோ, பெரிய மோதல் வெடிக்குமோ என்ற ஐயம் பலருக்கும் நிலவுகிறது.எனவே இது குறித்து மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கூறியதாவது:-

இது பெரிய மோதலாக மாறாது. உயர் மட்டத்தில், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் மட்டத்தில் புரிதல் இருக்கிறது. இரு தரப்பிலும் ராணுவத்தினர் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும்.

இந்தியா - சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டு எல்லை (லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்) வரையறுக்கப்படவில்லை. அதனால், ராணுவங்கள் முன்னேறுவதும், பின் வாங்குவதுமாகத் தொடர்கிறது. இதனால் அவ்வப்போது பதற்றம் ஏற்படுகிறது.

ஆனால், பல விஷயங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. பொய்யான கணிப்புகள் வெளியாகி இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வரும் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

ராஜீவ் காந்தி - டெங் ஜியாவோ பிங் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்திய சீன உறவில் தொடர்ந்து பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. "1988-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்காக சீனா சென்றார். அந்தப் பயணத்தில் நானும் சென்றிருந்தேன்.

அங்கு ராஜீவ் காந்தி - சீனத் தலைவர் டெங் ஜியாவோ பிங் இடையிலான பேச்சுவார்த்தையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுவரை நிலவி வந்த தேக்க நிலையை உடைப்பதாக அந்த முடிவுகள் அமைந்தன.

அதாவது எல்லைப் பிரசசினையில் தீர்வு எட்டும் வரை உறவில் மேம்பாடு இல்லை என்று இருந்த நிலையை மாற்றி, எல்லைப் பிரச்சினை முடியும் வரை காத்திருக்காமல் உறவுகளை மேம்படுத்தவேண்டும் என்பது அந்த சந்திப்பில் எட்டிய முடிவுகளில் ஒன்று.

இரு நாடுகளும் எல்லையில் படை பலத்தை பிரயோகிப்பதில்லை என்பதும், எல்லையில் இருக்கும் நிலையை மாற்றுவதில்லை என்பதும் அப்போது எடுத்த முடிவுகள்தான்.

இந்தியாவில் அப்போது முதல் நரேந்திர மோடி வரையிலான எல்லாப் பிரதமர்களும் அந்தப் பேச்சுவார்த்தை உருவாக்கிய கட்டமைப்புக்கு உட்பட்டே செயல்பட்டும், உறவை வளர்த்தும் வந்திருக்கிறார்கள்.

அவ்வப்போது சிறிய விஷயங்கள், கேந்திர விவகாரத் துறை வட்டாரங்களால் மிகைப்படுத்தப்பட்டு சித்தரிக்கப்படுகின்றன.

சிறிய நாடுகள் பல கொரோனா சிக்கலை சமாளிக்கும் விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. ஆனால், பெரிய நாடுகள் என்று எடுத்துக்கொண்டால் இந்தப் பிரச்சினையை சிறப்பாக சமாளித்த நாடு சீனா என்பது உண்மைதான்.ஆனால், இதனால் ஏற்பட்ட சாதக நிலையை, இந்திய எல்லை விவகாரத்தில் பயன்படுத்திக்கொள்ள சீனா முயலாது. அதற்கு வாய்ப்பில்லை. இப்போது ஏற்பட்டுள்ள பதற்றம், இழுபறியாக இருக்கும் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான அழுத்தத்தைத் தராது. நம் வாழ்நாளில் இந்த எல்லைப் பிரச்சினை தீர்வதை நாம் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே என கூறினார்

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/17110422/Will-IndiaChina-border-tension-turn-into-a-major-war.vpf

 

Link to comment
Share on other sites

6 hours ago, உடையார் said:

ஆனால் இந்த நாடுகள் ஒருபோதும் இந்தியாவை நண்பனாக கருதியது இல்லை.

தனது சொந்தநாட்டு மக்களையே கூறுபோட்டு வைத்துவரும் இந்தியாவை எந்த நாடு நண்பனாக ஏற்கும்...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் பொறுமையை, பயம் என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் - சீன ஊடகம் மிரட்டல்

சீனாவின் பொறுமையை, பயம் என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் - சீன ஊடகம் மிரட்டல்

சீனாவின் பொறுமையை, பயம் என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் சீன ஊடகம் குளோபல் டைம்ஸ் கூறி உள்ளது.
பதிவு: ஜூன் 17,  2020 12:27 PM
பீஜிங்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோங், தவுலத் பெக் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக இந்திய சீன ராணுவத்தினரிடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. மே மாதம் முதல் வாரத்தில் இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்ததால் எல்லையில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் இருநாடுகளும் எல்லையில் தங்களது படைகளை குவித்து வந்தன.


இதனை அடுத்து, ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன.

இதையடுத்து கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இருநாடுகளும் படைகளை விலக்கிக் கொள்ளத் தொடங்கின.

இந்த சூழலில் நேற்று முன்தினம் பாயிண்ட் 14 எனும் இடத்தில் இரவு திடீரென இரண்டு நாட்டு வீரர்களிடையே மோதல் வெடித்தது. இந்த பகுதியில் சீன படைகள் கூடாரம் அடித்து தங்கியுள்ளனர். இந்த கூடாரங்களை அகற்றக் கூறி இந்திய படையினர் கூறியுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது.

இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீன தரப்பில் 43 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன,

இந்த நிலையில், சீனா அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர், இந்தியாவைக் கண்டு தாங்கள் அச்சப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், சீனா அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர், இந்தியாவைக் கண்டு தாங்கள் அச்சப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டுவீட் செய்துள்ள குளோபல் டைம்ஸ் நாளேட்டின் தலைமை செய்தி ஆசிரியர் ஹு சிஜின் கூறி இருப்பதாவது:-

எனக்குத் தெரிந்தவற்றின் அடிப்படையில், கல்வான் பள்ளத்தாக்கு  மோதலில் சீனத் தரப்பினரும் உயிரிழந்தனர். நான் இந்திய தரப்பிடம் சொல்ல விரும்புகிறேன், திமிர்பிடித்து நடந்து கொள்ளாதீர்கள், பலவீனமானவர் என்று சீனாவின் பொறுமையை தவறாகப் நினைக்க வேண்டாம். இந்தியாவுடன் மோதலை சீனா விரும்பவில்லை, ஆனால் நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம் என கூறி உள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/17122747/I-want-to-tell-the-Indian-side-dont-be-arrogant-and.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

104418109_3602359473159568_1250716157280

கோரோனோ ஒரு பக்கம் ; சீனன் ஒரு பக்கம் ; பாக்கன் ஒரு பக்கம் ; சுத்தி கிந்தியனை போட்டு தாக்குகிறார்கள். என்னை கேட்டால் படாரென காலில் விழுவதே நல்லது ..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, உடையார் said:

.எனவே இது குறித்து மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கூறியதாவது:-

இது பெரிய மோதலாக மாறாது. உயர் மட்டத்தில், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் மட்டத்தில் புரிதல் இருக்கிறது. இரு தரப்பிலும் ராணுவத்தினர் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும்.

 

46 minutes ago, உடையார் said:

ஆனால், பல விஷயங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. பொய்யான கணிப்புகள் வெளியாகி இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வரும் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

ராம், கேரளா மாபியாக்கலில் முக்கியமாக நாராயணன், சிவா சங்கர் மேனன், அந்தோனி, நம்பியார், மற்றும் பத்திரிகையாளர் போர்வைலயில் உள்ள உளவாளி பி.கே. பாலச்சந்திரன், பிரணாப் முகர்ஜி மற்றும் பல பார்சி -நேருவின் சந்ததிகள், சோனியா போன்றோர் இப்படி அடக்கியே வாசிக்க வேண்டும்.


இவர்களுளுக்கு சீன வே;வெளிப்படையாகவே நிதி வழங்கியது, சிங்கள மற்றும் பக்சேக்களின் ஊடாக, கிந்தியாவை வாய்மூடி வைத்திருப்பதற்கு, புலிகளுடன் யுத்தம் என்ற போர்வைலயில், சீன இலங்கைத்தீவில் அம்பாந்தோட்டை துறைமுகம், மற்றும் துறைமுக நகரம் என்று பெருமளவில் கால் ஊன்றும் பொது.


அழிவது புலிகளும், தமிழர்களும் என்ற கிந்திய, மல்லுகளின் வெறியில், தமக்கு சிங்களம் ஊடக வந்த சீனாவின் பணம் bonus என்று சொல்லி, அந்த நேரத்தில் (2008 - 2009) இல் நாராயணன் சீன-கிந்திய எல்லை பேச்சுவார்த்தையில் பலத்தை உத்தியோகப்பொர்வகமாக வீட்டுக் கொடுத்ததும், பலத்தை சூசமாக சீனா அழுத்தம் கொடுக்க கண்டும் காணாமல் விட்டும், சீனாவின் பார்வையில் அந்த இடங்கள்  தமது என்ற எண்ணம் வந்து விட்டது.

சிவசங்கர் மேனனும், பிபிசி இல் அடக்கியே வாசித்துள்ளார், சீனா ஆஸ்திரேலியாவுடனும், தைவானுடனும், தென்சீன கடலில் முறுகுப்பபடுவதையும் மேற்கோள் காட்டி, சீனவின் கோரனாவால் வந்த உள்ளழுத்ததால், இவற்றை சீன செய்வதாக.

ஆனால், சீன இவற்றை, தென்சீன கடலில் செய்ததை போல, சாலமியை மெலிதாக சீவுவது போல, நீண்ட காலா திட்டத்தின் அடிப்படையில் செய்கிறது. இவர்களால் இதை வெளியில் சொல்ல முடியாது.


corana பெரிதான தொற்றுநோயாக வருவதத்திற்கு முதல், கோத்த சிங்களளத்தின் அதிபராக வந்து சிறிது காலத்தில், சொறி சிங்களத்தின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன்,  பி. கே.பாலச்சந்திரன் சீனாவின் பண வழங்குதலை இந்த கூட்டதிற்கு ஆரம்பிப்பதற்காக கொத்தவுடன் கதைத்து, மார்ச் 28 ( கொன்றன வருவதத்திற்கு முதல் குறித்த தேர்தல் திகதி என்று நினைக்கிறேன்) இற்கு பின் எல்லா ஏற்றப்பாடுகளும் நடைபெறும் என்ற கோத்தாவின் வாக்குறுதி உடன் திரும்பி இருந்தார். கொரன குழப்பி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, உடையார் said:

சீனாவின் பொறுமையை, பயம் என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் - சீன ஊடகம் மிரட்டல்

சீனாவின் பொறுமையை, பயம் என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் - சீன ஊடகம் மிரட்டல்

சீனாவின் பொறுமையை, பயம் என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் சீன ஊடகம் குளோபல் டைம்ஸ் கூறி உள்ளது.
பதிவு: ஜூன் 17,  2020 12:27 PM
பீஜிங்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோங், தவுலத் பெக் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக இந்திய சீன ராணுவத்தினரிடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. மே மாதம் முதல் வாரத்தில் இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்ததால் எல்லையில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் இருநாடுகளும் எல்லையில் தங்களது படைகளை குவித்து வந்தன.


இதனை அடுத்து, ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன.

இதையடுத்து கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இருநாடுகளும் படைகளை விலக்கிக் கொள்ளத் தொடங்கின.

இந்த சூழலில் நேற்று முன்தினம் பாயிண்ட் 14 எனும் இடத்தில் இரவு திடீரென இரண்டு நாட்டு வீரர்களிடையே மோதல் வெடித்தது. இந்த பகுதியில் சீன படைகள் கூடாரம் அடித்து தங்கியுள்ளனர். இந்த கூடாரங்களை அகற்றக் கூறி இந்திய படையினர் கூறியுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது.

இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீன தரப்பில் 43 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன,

இந்த நிலையில், சீனா அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர், இந்தியாவைக் கண்டு தாங்கள் அச்சப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், சீனா அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர், இந்தியாவைக் கண்டு தாங்கள் அச்சப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டுவீட் செய்துள்ள குளோபல் டைம்ஸ் நாளேட்டின் தலைமை செய்தி ஆசிரியர் ஹு சிஜின் கூறி இருப்பதாவது:-

எனக்குத் தெரிந்தவற்றின் அடிப்படையில், கல்வான் பள்ளத்தாக்கு  மோதலில் சீனத் தரப்பினரும் உயிரிழந்தனர். நான் இந்திய தரப்பிடம் சொல்ல விரும்புகிறேன், திமிர்பிடித்து நடந்து கொள்ளாதீர்கள், பலவீனமானவர் என்று சீனாவின் பொறுமையை தவறாகப் நினைக்க வேண்டாம். இந்தியாவுடன் மோதலை சீனா விரும்பவில்லை, ஆனால் நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம் என கூறி உள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/17122747/I-want-to-tell-the-Indian-side-dont-be-arrogant-and.vpf

 

எல்லோருக்கும் தெரியும், சீனாவே அடிக்கத்தொடங்கியது என்று. 

சீனாவின் smart move, கிந்தியாவுக்கு உண்மையில் சவால், குத்தை வாங்கிக்கொண்டு அமுங்கி கொண்டு இருக்குமாறு சீன கட்டளை இடிக்கிறது கிடந்தியாவிற்கு. 

 ஹிந்திய மற்றும்  பிராமணிகளின்,  எல்லா சாத்திரமும் சூத்திரமும்,  சீனாவிடம் பலிக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லடாக் விவகாரம் : பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு

லடாக் விவகாரம் : பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு

லடாக் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
பதிவு: ஜூன் 17,  2020 13:34 PM
பீஜிங்

கடந்த 2017-ம் ஆண்டு கூட சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் இரு நாட்டு படைகள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அங்கு சீன ராணுவம் சட்ட விரோதமாக மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இரு நாட்டு படைகளும் மோதல், கைகலப்பில் ஈடுபட்டன.


சர்வதேச அளவில் கவனம் பெற்ற இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. டோக்லாம் பகுதியில் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்த பதற்றம் இதன் மூலம் முடிவுக்கு வந்ததுடன், இரு நாடுகளும் தங்கள் படைகளையும் அங்கிருந்து விலக்கிக்கொண்டன.

இந்த சம்பவத்துக்குப்பின் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சுமுக நிலைக்கு திரும்பிய நிலையில், சீன ராணுவம் மீண்டும் தனது வேலையை காட்டியுள்ளது. இந்த முறை அவர்களது கவனம் லடாக்கில் இருந்தது. லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் சட்ட விரோதமாக ஊடுருவினர்.

கடந்த மாத தொடக்கத்தில் நடந்த இந்த ஊடுருவலை கண்டறிந்த இந்திய வீரர்கள் சீன ராணுவத்தினரை திரும்பி செல்லுமாறு வலியுறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 5 மற்றும் 6-ந்தேதிகளில் நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பல வீரர்கள் காயமடைந்தனர். மேலும் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தவுலத் ஓல்டி போன்ற பகுதிகளிலும் இரு நாட்டு வீரர்களும் நேருக்குநேர் மோதும் சூழல் உருவானது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சீனா ஆயுதங்களுடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்தது. இதனால் இந்தியாவும் கூடுதல் படைகளை லடாக்கில் களமிறக்கியது. மேலும் உத்தரகாண்ட், அருணாசல பிரதேசம், சிக்கிம் என இந்தியா-சீனா எல்லையில் இரு நாடுகளும் படைகள் குவித்தன. இதனால் இரு நாட்டு எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.

ஒருபுறம் படைகள் குவிக்கப்பட்டாலும், மறுபுறம் இந்த பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் தீவிரம் காட்டின. அதன்படி ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலும், மேஜர்கள் மட்டத்திலும் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

எனவே இரு தரப்பிலும் ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேசினர். இதில் இரு நாடுகளும் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டன. 

இந்த சூழலில் நேற்று முன்தினம் பாயிண்ட் 14 எனும் இடத்தில் இரவு திடீரென இரண்டு நாட்டு வீரர்களிடையே மோதல் வெடித்தது. இந்த பகுதியில் சீன படைகள் கூடாரம் அடித்து தங்கியுள்ளனர். இந்த கூடாரங்களை அகற்றக் கூறி இந்திய படையினர் கூறியுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது.

இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீன தரப்பில் 43 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் லடாக் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறி இருப்பதாவது:-

லடாக் எல்லை தொடர்பான விவகாரங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா முன் வர வேண்டும். இந்தியாவுடன் தூதரக அதிகாரிகள் மூலமாகவும் ராணுவ அதிகாரிகள் மூலமாகவும் சீனா தொடர்பு கொண்டுள்ளது. லடாக் எல்லையில் மேலும் மோதல்கள் ஏற்படுவதை விரும்பவில்லை.

இந்தியா தனது முன்னணி ராணுவத்தை கண்டிப்பாக ஒழுங்குபடுத்தவும், மீறல் மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களை நிறுத்தவும், சீனாவுடன் இணைந்து செயல்படவும், உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான சரியான பாதையில் திரும்பி வரவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். என கூறி உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/17133429/IndiaChina-border-dispute-live-updates-Overall-situation.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா-சீனா எல்லை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியா-சீனா எல்லை விவகாரம்:  அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளின் நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பதிவு: ஜூன் 17,  2020 14:09 PM
புதுடெல்லி
 
ஆசிய கண்டத்தின் வல்லரசுகளான இந்தியாவும் சீனாவும் தங்கள் நீண்ட எல்லையில் அடிக்கடி மோதலின் நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன.  மேலும்  இரு ராணுவ வீரர்களுக்கு இடையிலான ஒரு பயங்கர மோதலில் கடந்த சில நாட்களாக பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
 
லடாக் பகுதியில் நேற்று சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த நிலையில் லடாக் விவகாரம் தொடர்பாக பிரதமர் அமைதி காப்பது ஏன். ஓடி ஒளிவது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.
 
இதை தொடர்ந்து இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளின் நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
 

எல்லையில் மோதல்: உயிரிழப்பைப் பற்றிக் கூற மறுப்பு; மீண்டும் இந்தியாவுடன் மோதலை விரும்பவில்லை - சீனா அறிவிப்பு  

china-claims-sovereignty-over-galwan-valley-refuses-to-comment-on-chinese-casualties

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு இறையாண்மை இருக்கிறது. அது சீனாவைச் சார்ந்ததுதான். எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே விரும்புகிறோம். மேலும், மோதலை நாங்கள் விரும்பவில்லை என்று சீனா அறிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது.

 

ஆனால், இதுவரை சீனா எந்தவிதமான அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் கிழக்கு லடாக்கில் நிலவும் சூழல், பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள், ராணுவ தலைமை அதிகாரி பிபின் ராவத் ஆகியோருடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

இந்தத் தாக்குதலுக்குப் பின் சீன அரசு சார்பில் எந்தவிதமான அதிகாரபூர்வமான செய்தியும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது

இந்நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா லிஜான், பெய்ஜிங்கில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்குச் சொந்தமானது. சீனாவுக்கே அதில் இறையாண்மையுள்ளது. ஆனால் எல்லை ஒப்பந்தத்தை மீறி இந்திய வீரர்கள் ஆத்திரமூட்டும் வகையில் செயல்படுகிறார்கள். இந்த எல்லைப் பிரச்சினையை இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேசித் தீர்க்க வேண்டும்.

எல்லையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை இந்திய ராணுவம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்கிறோம். சீன ராணுவத்தினரைச் சீண்டுவது, ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, சரியான பாதையில் வந்து எல்லையில் ஏற்பட்ட சிக்கல்களை அமைதிப்பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கவே விரும்புகிறோம்.

அதேசமயம் நிர்வாகரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை தொடரும். சரியோ, தவறோ இதைத் தெளிவாகக் கூறுகிறோம். இந்தத் தாக்குதல் சம்பவம் சீனாவின் எல்லைக்குள் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்ததால் சீனா மீது பழிபோட முடியாது. இப்போது கல்வான் பள்ளதாக்கு பகுதி நிலையாகவும் கட்டுக்கோப்பாகவும் அமைதியாக இருக்கிறது. சீனத் தரப்பில் இருந்து கூறுவது என்னவென்றால், இந்தியாவுடன் அதிகமான மோதல் போக்கை விரும்பவில்லை”.

இவ்வாறு ஹூவா லிஜான் தெரிவித்தார்.

1592384388756.jpg

ஆனால், சீனத் தரப்பில் எத்தனை பேர் பலியாகியுள்ளார்கள், காயமடைந்துள்ளார்கள் என்ற கேள்விக்கு சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

ஆனால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “சீனாதான் அத்துமீறி எல்லை கடந்து வந்து தாக்கிவிட்டு தற்போது நிலைப்பாட்டை மாற்றுகிறது. அனைத்துவிதமான நடவடிக்கைகளும் இந்திய எல்லைக்குள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்குள் இருக்கிறது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. அதேபோல சீனா தரப்பிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

https://www.hindutamil.in/news/world/559848-china-claims-sovereignty-over-galwan-valley-refuses-to-comment-on-chinese-casualties-3.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, உடையார் said:

'கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்குச் சொந்தமானது. சீனாவுக்கே அதில் இறையாண்மையுள்ளது. ஆனால் எல்லை ஒப்பந்தத்தை மீறி இந்திய வீரர்கள் ஆத்திரமூட்டும் வகையில் செயல்படுகிறார்கள்.

இதெல்லாம் எழுத்தில் இல்லாவிட்டாலும், இந்த வலிமையான உணர்வையும், பிடியையும் கொடுத்தது நாராயணன், சிவசங்கர் மேனன் போன்ற கேரள மாவியாக்களின் குழாமும், பார்சி நேருவின் சந்ததிகளும் அதனுடன் இணைந்த இத்தாலி மாபியாக்களின் இன்மைப்பான சோனியாவும், மற்றும் இங்கே தேர்ட்கில் இருக்கும் ஆரிய பிரமணிகளான ராம், பி.கே. பாலச்சந்திரன், மற்றும் ஹிந்தியை, பார்ப்பன, பிரமாண RAW உம்.

 

சீன சொல்வது சரியாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், கிந்திய ராணுவ (உண்மையிலா என்பது வேறு விடயம்) அதிகாரிகள் சொல்வது PLA death squads தாக்கியதாக. எப்படி அந்த   PLA death squads ஆயுதங்களுடன்கிந்திய ராணுவதை மீறி வந்து இருக்க முடியும?

 PLA death squads ஓ அல்லது வேறு எந்த சீன படையோ தனது எல்லைக்குள் சுத்தத்துடன் இருக்க, ஹிந்தியை ராணுவம் அது தனது பகுதி என்ற புரிதலில் (அல்லது வேண்டும் என்றே) கவமனமில்லாமல் சென்று இருக்க வேண்டும். 

       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லடாக் மோதலில் சீன தரப்பில் 35 பேர் உயிரிழப்பு- அமெரிக்க உளவுத்துறை தகவல்

லடாக் மோதலில் சீன தரப்பில் 35 பேர் உயிரிழப்பு- அமெரிக்க உளவுத்துறை தகவல்

 

லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இந்தியா-சீன படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

 
இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இதேபோல் சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், லடாக்கில் நடந்த மோதலில் சீன தரப்பில், ராணுவத்தின் மூத்த அதிகாரி உள்பட 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை வட்டார தகவலை மேற்கோள் காட்டி, அமெரிக்க செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன அரசாங்கம் தங்கள் வீரர்கள் உயிரிழந்ததை அவமானமாக கருதுவதாகவும், எதிரிகளுக்கு தைரியமூட்டும் என்ற அச்சத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/17113747/1618161/IndiaChina-border-tension-35-Chinese-Troops-Dead-says.vpf

சீன எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்கள் பட்டியல் வெளியீடு

சீன எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்கள் பட்டியல் வெளியீடு

 

புதுடெல்லி:

லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இந்தியா-சீன படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் தமிழக வீரர் பழனி உள்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தாக ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளன.

1. சந்தோஷ் பாபு
2. சுனில் குமார்
3. நந்துராம்
4. சி.கே.பிரதான்
5. ராஜேஷ் ஓரான்
6. கே.கே.ஓஜா
7. கணேஷ் ராம்
8. கணேஷ் ஹஸ்தா
9. சந்தன் குமார்
10. தீபக் சிங்
11. அமான் குமார்
12. குந்தன்  குமார்
13. சத்னம் சிங்
14. மன்தீப் சிங்
15. ஜெய் கிஷோர் சிங்
16. பிபுல்  ராய்
17. குர்தேஜ் சிங்
18. அங்குஷ்
19. குர்வீந்தர் சிங்
20. கே.பழனி (தமிழ்நாடு)

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/17151454/1618239/IndiaChina-Conflict-full-list-of-the-20-Brave-Soldiers.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த சூழ்நிலையிலும் பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது - பிரதமர் நரேந்திர மோடி

எந்த சூழ்நிலையிலும் பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது - பிரதமர் நரேந்திர மோடி

 

இந்தியா அமைதியை விரும்பும் நாடு, ஆனால் சீண்டினால் பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பதிவு: ஜூன் 17,  2020 15:51 PM
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிகப்பட்ட 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்தாலோசனை நடத்தி வருகிறார். நேற்றைய தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இன்றைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கலந்து கொண்டுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில், லடாக்கில் உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்று கூறினார்.

மேலும் அவர் பேசிய போது, “பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம். இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது சரித்திரத்திலும் நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

“இந்தியா அமைதியை விரும்பும் நாடு ஆனால் சீண்டினால் எந்த சூழ்நிலையிலும் நாம் பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/17155150/India-will-not-hesitate-to-retaliate-under-any-circumstances.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

எல்லோருக்கும் தெரியும், சீனாவே அடிக்கத்தொடங்கியது என்று. 

சீனாவின் smart move, கிந்தியாவுக்கு உண்மையில் சவால், குத்தை வாங்கிக்கொண்டு அமுங்கி கொண்டு இருக்குமாறு சீன கட்டளை இடிக்கிறது கிடந்தியாவிற்கு. 

 ஹிந்திய மற்றும்  பிராமணிகளின்,  எல்லா சாத்திரமும் சூத்திரமும்,  சீனாவிடம் பலிக்காது.

சரியாகச் சொன்னீர்கள்.... கடஞ்சா.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா, சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை
 
இந்தியா, சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை

புதுடெல்லி,

லடாக் பகுதியில் நேற்று சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதல் குறித்து சீன வெளியுறவுத்துறை சார்பாக நேற்று வெளியான அறிவிப்பில், இந்திய ராணுவம் இரண்டு முறை எல்லை தாண்டி அத்துமீறியதாகவும், இதன் காரணமாகவே இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தியா தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தான் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாக தெரிவித்தது. மேலும் சீனா எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுடனான தனது உடன்படிக்கையை மீறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியது.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி, “இந்தியா அமைதியை விரும்பும் நாடு, ஆனால் சீண்டினால் பதிலடி கொடுக்க தயங்காது” என்று சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ள ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து எல்லையில் நடந்த போதல் தொடர்பாக தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஆகிய இருவரும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது லடாக் பகுதியில் நடந்த மோதல் தொடர்பாகவும், தற்போது அங்கு நிலவும் சூழல் குறித்தும் வெளிப்படைத் தன்மையுடன் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/17171503/Foreign-Ministers-of-India-and-China-negotiate-by.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 ராணுவ வீரர்கள் வீரமரணம் குறித்த மோசமான ட்வீட்: அணி மருத்துவரை சஸ்பெண்ட் செய்து சிஎஸ்கே அதிரடி

chennai-super-kings-suspends-team-doctor-over-tweet-on-ladakh-clash  

சென்னை

கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் எய்தியதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் மருத்துவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினால் அவரை நீக்கி உத்தரவிட்டது சிஎஸ்கே நிர்வாகம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினெண்ட் ஆவார். இந்நிலையில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் எய்தியதை தனது ‘மோசமான ரசனையை’ வெளிப்படுத்தும் விதமாக கருத்து பதிவிட்ட சிஎஸ்கே அணியின் டாக்டர் மது தோட்டப்பிலில் என்பவரை நீக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் சிஎஸ்கே கூறும்போது, “டாக்டர் மது தோட்டப்பிலிலின் தனிப்பட்ட ட்வீட் பற்றி சிஎஸ்கேவுக்கு தெரியவில்லை. பிறகு தெரியவந்ததையடுத்து அணி டாக்டர் என்ற பொறுப்பிலிருந்து அவரை நீக்குகிறோம்” என்று பதிவிட்டுள்ளது.

மேலும், “சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் கவனத்துக்கு அவரது ட்வீட் வரவில்லை. அது மட்டமான ரசனையின்பாற்பட்டது” என்று வருத்தம் தெரிவித்துள்ளது.

டாக்டர் தோட்டப்பிலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். ஸ்போர்ட்ஸ் மருத்துவத்தில் அவர் நிபுணர் என்று கருதப்படுகிறது.

20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததையடுத்து மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கிண்டல் செய்யும் விதமாக அவர் சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்திருந்தார் ஆனால் பிற்பாடு அதனை நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.hindutamil.in/news/sports/559881-chennai-super-kings-suspends-team-doctor-over-tweet-on-ladakh-clash-1.html

Link to comment
Share on other sites

வெளியில் ஒரு இராணுவ போராக சிக்கலாக இது இருந்தாலும், உண்மையில் பொருளாதார வல்லரசாக இந்தியா வளராமல் இருக்க சீனா செய்யும் நடவடிக்கைளில் ஒரு அங்கமே. 

இந்த முறுகலை இதுவரை மேற்குலகம் மற்றும் உலக பொருளாதாரம் பொருட்படுத்தவில்லை. காரணம், இவர்கள் பெரியளவில் சண்டை செய்யும் சாத்தியம் இல்லை.   

இந்தியாவை சுற்றி உள்ள 'நட்பு' நாடுகள் அனைத்தும் இந்தியாவின் காலை வாரும் நாடுகளாக இன்று உள்ளன. அதற்கான காரணத்தை இந்தியா தனக்குள் தேட வேண்டும். அதன் வெளிவிவகார கொள்கையை மீள் ஆய்வு செய்யவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக  சனத்தொகையில் அரைவாசியை  வைத்துக்கொண்டு

என்ன  இது குழந்தைப்பிள்ளை விளையாட்டு??

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
    • நன்றி - யாழ்பாணப் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்கிறது என எழுதிய போது சிலர் நகைத்தார்கள். இது அந்த பாய்ச்சலின் ஆரம்ப நிலைதான். எவ்வளவு இளமை, எவ்வளவு துணிச்சல், எவ்வளவு தன்னம்பிக்கை இந்த பிள்ளைகளிடம். இவர்கள்தான் இந்த இனத்தின் எதிர்காலம். @அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு.
    • 300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது. வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற…  சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.