Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சார்ள்ஸின் கடுமையான எதிர்ப்பால் சுமந்திரன் கலந்துக் கொள்ளவிருந்த கூட்டம் இரத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றையதினம் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை சந்திப்பதற்காக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா செல்லவிருந்தார்.

இந்த நிலையில் அவர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செல்லவிருந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் எதிர்ப்பால் குறித்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சுமந்திரன் இந்த கூட்டத்தில் பங்குப்பற்றினால் தான் பங்குப்பற்ற மாட்டேன் என கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டதை அடுத்து குறித்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பகுதிக்கான தமிழரசுக் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சுமந்திரன் முரணான கருத்தை கூறி தென்னிலங்கையில் ஒரு கருத்தையும், அதை நியாயப்படுத்துவதற்காக யாழில் ஒரு கருத்தையும் கூறுவதால் மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.

இதனால் தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் மக்களின் கருத்துக்களையும் விசாரித்து சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://www.tamilwin.com/politics/01/248692?ref=imp-news

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்களால் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் எனக்கு என்றும் உடன்பாடு இல்லை எண்டவர். தமிழ் சனத்திட்டை போகேக்கையே சுத்திவர ஆயுத பாதுகாப்போடை திரியுறார்.

Bild

Bild

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஊரை ஏமாத்தி திரிகிற சுமந்திரனுக்கும் பின்னால ஒரு குழு இருக்கு என்றா அது எவ்வளவு மோசமான குழுவா இருக்குமென்று சொல்லியா தெரியணும் 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

கடந்த காலங்களில் சுமந்திரன் முரணான கருத்தை கூறி தென்னிலங்கையில் ஒரு கருத்தையும், அதை நியாயப்படுத்துவதற்காக யாழில் ஒரு கருத்தையும் கூறுவதால் மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.

கூட்டமைப்பில் உள்ள உருப்படியான ஒருவர் சார்ள்ஸ் தான்.

மாவை சேனாதிராசா இம்முறையும் விருப்பு வாக்குகளில் குளறுபடிகள் செய்து வெல்ல சுமந்திரனின் உதவி தேவை என்பதால் அவரோடு அட்டையாக ஒட்டி வாழ்கிறார்.

 

சார்ள்ஸினால் மூக்குடைபட்ட சுமந்திரன் வவுனியாவிலும் மூக்குடைபடாமல் இருக்க இரகசிய கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, போல் said:

இரகசிய கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இது ஒன்றும் அவருக்கு புதிதில்லையே. பெட்டி வாங்கவும் அப்பிடித்தானே போறவர். பிறகு வந்து கூவுவார். அதன் பின் சுருட்டிக்கொண்டு பின்னால போவார். 

Link to post
Share on other sites
On 16/6/2020 at 15:18, பெருமாள் said:

இந்த நிலையில் அவர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செல்லவிருந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் எதிர்ப்பால் குறித்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் செருப்படி வாங்கின சுமந்திரன் விரைவில வடக்கிலும் வாங்கிக்கட்டுவார்!

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.