Jump to content

நாட்டுக்காக மகன் உயிரை தியாகம் செய்ததை இட்டு பெருமை -லடாக் மோதலில் பலியான இராணுவ வீரரின் தாய் உருக்கம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்காக மகன் உயிரை தியாகம் செய்ததை இட்டு பெருமை -லடாக் மோதலில் பலியான இராணுவ வீரரின் தாய் உருக்கம்

எனது ஒரேயொரு மகனை பறிகொடுத்ததை இட்டு நான் மிகவும் துயர் அடைகின்றேன். எனினும் நாட்டுக்காக தனது உயிரை அவர் தியாகம் செய்ததை இட்டு நான் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு லடாக் மோதலில் உயிரிழந்த இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கேணல் சந்தோஷ் பாபுவின் தாயாரான மஞ்சுளா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று மகனுடன் கடைசியாக பேசியதாக தெரிவித்த அவர் அங்கிருந்து வரும் தகவல்கள் குறித்து விசாரித்தபோது,அதை நம்ப வேண்டாம் எனவும், உண்மையான நிலவரம் வேறு எனவும் அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மகன் இறந்த தகவலை முதலில் நம்ப மறுத்ததாக கூறும் தந்தை உபேந்தர், உண்மை அதுவென தங்களுக்கு பின்னர் தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ani_mic_logo_normal.jpg
 · 8h
 

At least 20 Indian soldiers killed in the violent face-off with China in Galwan valley in Eastern Ladakh. Casualty numbers could rise: Government Sources

View image on Twitter
 

Feeling sad that I lost my only "Son" and at the same time feeling proud that my son sacrificed his life for the nation says Manjula mother of Col.Santosh Babu who was martyred by #ChineseArmyinLadakh #warherosantoshbabu

Retweet 🙏🇮🇳pic.twitter.com/oyjVUUYjhq

 
Embedded video
 
 

you may like this

 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தியா- சீனா மோதலில் வீரமரணம் தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

இந்தியா- சீனா மோதலில் வீரமரணம் தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

 

இந்தியா-சீனா ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அளிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பதிவு: ஜூன் 17,  2020 05:45 AM
சென்னை,

இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்துவின் மகன் ராணுவ வீரர் கே.பழனி உயிரிழந்தார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது.

ரூ.20 லட்சம்

இரவு, பகல் பாராது, தன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்திய திருநாட்டின் பாதுகாப்புப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கும், பிற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய திருநாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

கலெக்டர் மரியாதை

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/17020803/Tamil-Nadu-war-heros-family-gets-relief-from-Rs-20.vpf

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மகனின் இழப்பை எங்களால் தாங்க முடியவில்லை: எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர் சந்தோஷ் பாபுவின் பெற்றோர் வேதனை

we-are-in-deep-shock-say-parents-of-col-santosh-babu-who-lost-his-life-in-violent-face-off-with-chinese-soldiers சீன ராணுவத்துடனான மோதலில் வீர மரணம் எய்திய சந்தோஷ் பாபுவின் பெற்றோர். | ஏஎன்ஐ

கல்வான் பள்ளாதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டையில் வீர மரணம் அடைந்த தெலங்கானாவைச் சேர்ந்த ராணுவ கமாண்டிங் அதிகாரி சந்தோஷ் பாபுவின் பெற்றோர் தங்களுக்கு ஆழ்ந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

16 பிஹார் ரெஜிமண்டில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கமாண்டிங் ஆபிசராகப் பணியாற்றி வந்தார் சந்தோஷ் பாபு. சீனாவுடன் ஏற்பட்ட சண்டையில் இவர் வீரமரணம் அடைந்தார். இவர் தெலங்கானா மாநிலம் சூரியாபேட் பகுதியைச் சேர்ந்தவர்.

எதிர்பாராத இந்த மரணத்தினால் சந்தோஷ் பாபுவின் பெற்றோரான உபேந்தர் மற்றும் மஞ்சுளா தங்களால் நம்ப முடியவில்லை என்றும் பிறகுதான் உயரதிகாரிகள் தகவல் தெரிவித்ததையடுத்தே அதிர்ச்சித் தகவல் எங்களை தீரா வேதனையில் ஆழ்த்தி விட்டது என்று தெரிவித்தனர்.

சந்தோஷ் பாபுவின் தாய் மஞ்சுளா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்குக் கூறும்போது, “நேற்று மதியம் 2 மணியளவில் எங்களுக்குச் செய்தி வந்தது. எங்கள் மகன் வீர மரணம் அடைந்தான் என்ற செய்தியை எங்களால் நம்ப முடியவில்லை” என்றார்.

கலோனல் சந்தோஷ் பாபுவின் தந்தை உபேந்தர் கூறும்போது, “நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தோம், எங்கள் மகன் மரணமடைந்த செய்தியை எங்களால் நம்ப முடியவில்லை. ஏனெனில் சந்தோஷ் மிகவும் தைரியமானவன். கடந்த 15 ஆண்டுகளாக அவன் வெற்றியடைந்து வந்திருக்கிறான்.

நான் உடனே ஒரு அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். பிறகு ராணுவத்தின் பல அதிகாரிகளும் எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த போதுதான் எங்கள் மகன் உயிர்த்தியாகம் தெரியவந்தது. இந்த ராணுவ அதிகாரிகள்தான் சந்தோஷ் உடலை சூரியாபேட் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இன்று மாலை எங்கள் மகன் சந்தோஷ் உடல் சூரியாபேட் வந்து சேரும். அதிகாரிகளும், தலைவர்களும் முழு ஆதரவு அளிப்பதாக உறுதியும் தைரியமும் அளித்துள்ளனர்” என்றார்.

https://www.hindutamil.in/news/india/559811-we-are-in-deep-shock-say-parents-of-col-santosh-babu-who-lost-his-life-in-violent-face-off-with-chinese-soldiers-1.html

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அரசாங்கத்தால் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்து வெளியிட்ட பதில் அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. இலங்கையின் முழுமையான பதிலை, இணையத்தில் வெளியிடக்கோரி இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதியிருந்தது. இதன்படி, ஐ.நா. வெளியிட்டுள்ள பதிலில், “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைபு குறித்த ஏற்பாடுகள் தொடரப்படவில்லை என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டது. நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறை மேற்பார்வைக் குழு, மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் பொது அமைப்புகள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களின் அடிப்படையில் இந்த நேரத்தில் அத்தகைய சட்டம் தேவையற்றது. எவ்வாறாயினும், அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தின் முன்னேற்றத்திற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசாங்கம் கூறியது. இந்தச் செயற்பாட்டின் மூலம், பிற அதிகார வரம்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேசத்தின் சிறந்த நடைமுறைகளுக்கு உதவுவதாக அரசாங்கம் கூறியது. அத்துடன், உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சட்டமா அதிபர் மறுஆய்வு செய்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைவாக முடிப்பது குறித்தும் அரசாங்கம் தனது பதிலில் கூறியது. இதேவேளை, ஒட்டுமொத்தமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தவறான அல்லது ஆதாரமற்ற அல்லது புறம்பான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என இலங்கை கூறியது. அத்துடன், பொதுச்சபைத் தீர்மானம் (GA) 60/251இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, உலகளாவிய பக்கச்சார்பற்ற தன்மை, புறநிலை மற்றும் தெரிவு செய்யப்படாத கொள்கைகளை மனித உரிமைகள் பேரவை மீறுவதாகவும் இலங்கை கூறுகிறது. மேலும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான முன்மொழிவு உட்பட, சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூறல் விடயங்களை முன்னெடுப்பதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் முன்மொழிவை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது. இலங்கைக்கு எதிராக இத்தகைய ஏற்றத்தாழ்வான மற்றும் தேவையற்ற நடவடிக்கைகளைத் தூண்டுவதற்கு சில காரணிகள் இடைவிடாமல் தொடர்ந்து முயற்சிக்கின்றன. இந்நிலையில், அரசியல் மயமாக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு மனித உரிமைகள் பேரவை தன்னை ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை வருத்தம் தெரிவிக்கிறது. மேலும், சர்வதேச மட்டத்திலான எந்தவொரு விருப்பமும், இறையாண்மை கொண்ட நாட்டின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீட்டிற்கு ஒப்பாகும் என்று இலங்கை எச்சரிக்கிறது. அத்துடன், தனிநபர்கள் அல்லது அதிகாரிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் பயணத் தடைகளுக்கு அழைப்பு விடுப்பதானது, நீதிமன்றம் அல்லது அமைப்பு ரீதியான ஆதாரம் இல்லாத நிலையிலான முன்மொழிவாகும். இது அவர்களின் உரிமைகளை மீறுதல் மற்றும் இயற்கை நீதிக்கான கொள்கைகளை மீறுதலாகும். இதேபோல், ஐ.நா. அமைதி காக்கும் படையில், இலங்கை இராணுவத்தின் ஈடுபாட்டை மறுஆய்வு செய்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைாளரின் பரிந்துரையையும் இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (Daily Mirror) தமிழில்- சுரேந்திரன் லிதர்சன் http://athavannews.com/பயங்கரவாதத்-தடைச்-சட்டம்/
  • இந்திய படையினர் தயாராக இருக்க வேண்டும் – பிபின் ராவத் அறிவுறுத்தல்! சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள  நம் படையினர் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அறிவுறுத்தியுள்ளார். எல்லைப் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவத்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாடு சுதந்திரம் பெற்ற பின் அளவான போர் திறன்களை உடைய சிறிய படையாக இருந்த நம் இராணுவம் இன்றைக்கு நவீன போர் கருவிகளை உடைய மிக வலுவான படையாக மாறியுள்ளது. போர்களின் தன்மைகளில் 20ம் நுாற்றாண்டில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளோம். பாதுகாப்பு விவகாரங்களில் பல சவால்களை சந்தித்து வருகிறோம். உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த இராணுவம் சந்தித்து வரும் சவால்களை விட  நம் இராணுவம் அதிக சவால்களை சந்தித்து வருகிறது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள  நம் இராணுவம் தயாராக இருக்க வேண்டும். மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில்  எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்த  சீனா கடுமையான முயற்சிகளில் ஈடுபடும். போர் திறன்களின் மாற்றத்தை உள்வாங்கி அதை திறமையாகச் செயல்படுத்திய மற்ற நாடுகளின் படிப்பினைகளை  நாம் தெளிவாக கற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/இந்திய-படையினர்-தயாராக-இ/
  • ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவுதி அரசாங்கம்! புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என சவுதி அரேபியா அரசாங்கம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், ‘புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அவ்வாறு சான்றளிக்காதவர்களுக்கு கட்டாயத் தடுப்பூசி போடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சவுதியில் உள்ளவர்கள் மட்டுமே ஹஜ் சென்று வரும் நிலையில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பது குறித்து அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ‘தடுப்பூசி என்பது எதிர்வரும் ஹஜ் புனித பயண அனுமதி பெறுவதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும்’ என சவுதி பத்திரிகை ஒகாஸ் தெரிவித்துள்ளது. http://athavannews.com/ஹஜ்-யாத்திரை-வருபவர்களுக/
  • நிகே....  பூசனிக்காய் கறி எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் இந்த முறையில்... ஒருநாளும் செய்து பார்க்கவில்லை. ஒருநாள்.. செய்து பார்க்க வேண்டும். ஜேர்மனியில் பூசனிக்காயை... புரட்டாதி  மாதத்தில் இருந்து,  மாசி மாதம் வரை தான் கடைகளில் வாங்கலாம். விலை மலிவாக போடும் நேரமாக பார்த்து... 2 கிலோ உள்ள பூசனிக்காகளை வாங்கி, நில அறையில் வைத்து விடுவேன். அந்த நேரம் ஒரு  பூசனிக்காய், ஒரு ஐரோ அளவில் வரும். அதனால்... வருடம் முழுக்க அதனை பாவிக்கக் கூடியதாக இருக்கும். 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.