Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

உங்களுக்கு தெரிந்த... நல்ல பண்புகளையும் கூறுங்களேன்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தெரிந்து, புரிந்து...நடப்போம். 👇👌👍✌️

1,தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் போனில் அழைக்காதீர்கள்.அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம்,அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2,திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம், மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்.இது திரும்ப வருமா வராதா என.இது உங்கள் கேரக்டரை அவர் உணரச் செய்யும். இதே போல் இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம்,லஞ்ச் பாக்ஸ்,குடை போன்றவைக்கும்.

3,ஹோட்டலில் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், மெனுகார்டில் காஸ்ட்லியாக உள்ள எதையும் ஆர்டர் செய்யாதீர்கள்.அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி ஆர்டர் சொல்லுங்கள் என வேண்டலாம்.

4,தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
"இன்னும் கல்யாணம் ஆகலயா?"
"குழந்தைகள் இல்லையா?"
"இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?"
"ஏன் இன்னும் கார் வாங்கவில்லை?"
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5,தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ,பெண்ணோ,சிறியவரோ,பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாகமாறச்செய்யும்!

6,நண்பருடன் டாக்ஸியில் சென்றால் பெண் தோழியாக இருந்தாலும்..இம்முறை  இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7,மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்.மோசமாக இருந்தாலும், சாய்ஸில் வைத்திருக்கலாம்.

8,அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்.அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9,நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால்,மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்.அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்,

10,யார்  உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்!

11,பொதுவில் புகழுங்கள்.
தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்.

12,உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.
"நீங்கள் பார்க்க  ஸ்மார்ட்டாக, கியூட்டாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13,யாராவது அவர்கள் போட்டோவைக் காட்ட போனைக் கொடுத்தால் காலரியில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்.அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14,யாரும் தனக்கு டாக்டர் அப்பாயின்ட்மென்ட் இருக்கிறது. போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்.அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம்,"விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறலாம்.

15,நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது போனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்.

16,கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.

17,நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால்,அவர்களின் சம்பளம்,வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்.அவர்களாகவே சொன்னால் தவிர.

18,தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால்,ஸ்டைலுக்காக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்,கண்பார்த்து  பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது!

19,யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.

Dinesh Thiruchelvan

 • Like 2
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அனேகமாக இதில் எல்லாம்  சொல்லப் பட்டுள்ளது.😁

Edited by யாயினி
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து சிலர் நீக்கம்!     by : Vithushagan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Parliament-of-Sri-Lanka-04-720x450.jpg 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை வழங்கியிருந்தனர். டயனா கமகே, அருணாசலம் அரவிந்த குமார்,இஷாக் ரஹ்மான்,பைசல் காசிம்,H.M.M.ஹாரிஸ், M.S.தௌபீக், நசீர் அஹமட்,A.A.S.M. ரஹீம்,M.M.M. முஷாரப் ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவளித்தனர். இந்த உறுப்பினர்களுக்கான   ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வரிசையிலிருந்து நீக்கி, ஆளும் கட்சியின் ஆசன வரிசையில் ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சியின் பிரதம கொறடா கோரிக்கை விடுத்துள்ளார். http://athavannews.com/ஐக்கிய-மக்கள்-சக்தியிலிர/
  • கொரோனா மரணம் தொடர்பான தகவல்கள் மறைக்கப்படுகின்றதா?   சமூகத்தில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கொரோனா மரணம் தொடர்பில் சரியான தகவல்கள் வௌியிடபடுவதில்லை எனவும் பரவும் செய்திகள் தொடர்பில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். இன்று காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர், இலங்கையில் உள்ள சிரேஷ்ட வைத்தியர்கள் குழுவே எம்முடன் உள்ளனர். எனக்கு வைத்தியர்கள் கூறுவதை தான் கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான அனைவருக்கும் நெருக்கிய தொடர்பில் இருந்தவர்களினால் தான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறுகின்றனர். அதனால் தான் சமூகத்தில் கொரோனா தொற்று இல்லை என அவர்கள் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்திருந்தனர். சாதாரண நோய் நிலமை காரணமாகவே அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. இருப்பினும் இப்போது உயிரிழக்கும் அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குறித்த இரு மரணங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=135805
  • பார்த்திபன் ஒத்த செருப்பு படம் விருது.. திமுக எம்பி செந்தில்குமாருக்காக வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்.! பார்த்திபன் நடித்து, இயக்கி, தயாரித்த ‘ஒத்த செருப்பு’படத்துக்கு கடந்த 2019ம் ஆண்டுக்கான மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து திமுக எம்.பி. எஸ்.செந்தில்குமார், “அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்” என்று டுவிட் போட்டிருந்தார். இந்த ட்வீட்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் திமுக இளைஞர் அணிச்செயலாளர் உதயநிதிஸ்டாலின். விருது கொடுத்துவிட்டதால் பார்த்திபன் பாஜகவுக்கு போய்விடுவார் என்ற கருத்திலும், பாஜக தயவால்தான் விருது கிடைத்தது என்ற கருத்திலும் அவர் டுவிட் போட்டிருந்தது ரசிகர்களை உசுப்பேத்திவிட்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட பார்த்திபனுக்கு கேட்கவா வேண்டும். அவரும் டுவிட்டரில் தக்க பதிலடி கொடுத்து வந்தார். உதயநிதி ஸ்டாலின் இடையில் புகுந்து வருத்தம் தெரிவித்ததால், பார்த்திபன் இந்த விவகாரத்தை அத்துடன் முடித்துக்கொண்டார். ‘இரவின் நிழல்’என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர,வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை! நாளையே மழை வரலாம், வரும் வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை!(மலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் தாமரையைக் கருப்பாக கற்பனை செய்ய வேண்டாம். பாரா’ளுமன்ற உறுப்பினர் திருமிகு செந்தில்குமார் அவர்கள் “அண்ணனுக்கு பாஜக-வுல ஒரு சீட் பார்சல்”என்று ட்வீட்'டிருக்கிறார். அண்ணனுக்கு நான் நன்றியை பார்சல் செய்வதற்குள் அவரது இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறது.  மக்கள் பணிகளில் ஆர்வம் உண்டு ஆனால் அதற்கு பெயர்தான் அரசியலா?என அறியாதவன் அடியேன்! உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான "ஒத்த செருப்பு"க்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப் படுத்தினால் மனம் வலிக்கும்! உரியது கிடைக்காத போது ஆனந்த’மாய் தூக்கி எறிந்து விட்டு மேடை இறங்குவேனேத் தவிர,அதைத் “தா”இதைத் “தா” வென மரை’முகமாக என் முகம் மலரமாட்டேன்!அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன். உசுப்’பேத்தாதீங்க பாஸ்!!! சூரியன் உதிக்குமுன் கண் விழித்த எனக்கு,திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமும், உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையுமான என் நண்பர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதை கேட்டேன். அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன். "வாய கொடுத்து வசமா வாங்கிட்டான்னு சொல்லுவாங்க அது இதுதான் போல"......!  https://tamil.asianetnews.com/politics/parthiban-similar-shoe-film-award-udayanithistalin-who-expressed-regret-for-dmk-mp-senthilkumar--qinvm0
  • சக்கரை தேவன் (1993) செந்தில் & சுந்தர்ராஜன் 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.