Jump to content

பணத்திற்காக 2011 உலகக் கிண்ணத்தை இந்தியாவுக்கு விற்றோம் – மஹிந்தானந்த


Recommended Posts

பணத்திற்காக 2011 உலகக் கிண்ணத்தை இந்தியாவுக்கு விற்றோம் – மஹிந்தானந்த

 

 

by : Vithushagan

sachin-tendulkar-2011-world-cup-720x450.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக முன்னாள்   அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் கிண்ணத்தை  வெற்றிகொள்வதற்கான தகுதி இலங்கை அணியிடம் காணப்பட்ட போதிலும், பணத்திற்கான அது தாரைவார்க்கப்பட்டதை தாம் பொறுப்புடன் கூறுவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விவாதத்தில் ஈடுபடுவும் தாம் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் வீரர்களை இணைத்துக் கொள்ளவில்லை எனவும் ஒருசில தரப்பினரால் இந்த விடயம் மேற்கொள்ளப்பட்டதாகவும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது  குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகேவின் கருத்துக்கு   இலங்கை அணியின் முன்னாள் தலைவர்  மஹேல ஜெயவர்த்தன தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

http://athavannews.com/பணத்திற்காக-2011-உலகக்-கிண்ண/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் உலகக் கோப்பையை பணத்திற்காக இந்தியாவுக்கு தாரைவார்த்தது இலங்கை அணி' - மஹிந்தானந்த அளுத்கமகே

2011 world cup final bbcபடத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES / GETTY IMAGES

2011ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியில் பணத்திற்காக கோப்பையை இந்தியாவிற்கு தாரைவார்த்ததாக அப்போதைய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மஹிந்தானந்த அளுத்கமகே தன்னிடம் உள்ள அனைத்து சாட்சியங்களையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஊழல் மற்றும் பாதுகாப்பு பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அப்போதைய இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்காரா கூறியுள்ளார்.

இந்தியாவின் மும்பை நகரில் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின.

இறுதிப் போட்டியில் கோப்பையை தன்வசப்படுத்துவதற்கு இலங்கை அணிக்கு இயலுமை காணப்பட்ட போதிலும், பணத்திற்காக கோப்பை இந்தியாவிற்கு தாரைவார்க்கப்பட்டமையை தான் பொறுப்புடன் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எவ்வாறான விவாதம் நடத்தப்பட்டாலும், தான் அந்த விவாதங்களில் கலந்துகொண்டு விடயங்களை தெளிவூட்ட தயார் என அவர் கூறியுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகே

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இருந்த போதிலும், போட்டியை சிலர் காட்டிகொடுத்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நடவடிக்கைகளுக்கு விளையாட்டு வீரர்களை தொடர்புப்படுத்தாது, சில தரப்பினரே தொடர்புப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் இறுதிப் போட்டியில் பங்குப்பற்றும் வீரர்களின் பட்டியலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு பட்டியலிட்டு, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு வழங்கி அதற்கான அனுமதியை பெற்றிருந்ததாக முன்னாள் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

எனினும், இறுதிப் போட்டிக்காக தாம் இந்தியாவிற்கு சென்று பார்க்கும் போது 4 வீரர்கள் புதிதாக அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டமையை அவதானிக்க முடிந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் அனுமதி வழங்கப்பட்ட அணி போட்டியில் விளையாடாது, புதிய நான்கு வீரர்களுடன் போட்டி நடைபெற்றதாக அவர் தெரிவிக்கின்றார்.

இறுதித் தருணத்தில் இலங்கையிலிருந்து புதிதாக இரண்டு வீரர்கள் அணியில் இணைத்துகொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

குறித்த இரண்டு வீரர்களை அணியில் இணைத்துகொள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரின் அனுமதி கோரப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

ஷாமர சில்வா, ரங்கன ஹேரத், அஜந்த மென்டீஸ், எஞ்ஜலோ மெத்திவ்ஸ் ஆகியோருக்கு பதிலாக, ஷாமர கபுகெதர, திஸர பெரேரா, சுராஜ் ரன்தீவ், நுவன் குலசேகர ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

2011 cricket world cup final bbc newsபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இறுதியில் விளையாட்டு வீரர்கள் மாற்றப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற விதத்தில் தனக்கு அப்போது பல முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த ஆட்ட நிர்ணயம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இலங்கையில் ஆட்ட நிர்ணய சட்டம் காணப்படவில்லை எனவும், உலகக் கோப்பை போட்டிகள் நிறைவடைந்தவுடன் ஆட்ட நிர்ணய சட்டத்தை தான் கொண்டு வர நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரர்கள் தமது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமைத்துவம் வழங்கிய குமார் சங்கக்கார தனது ஃபேஸ்புக் தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

''முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தன்னிடம் உள்ள அனைத்து சாட்சியங்களையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஊழல் மற்றும் பாதுகாப்பு பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனூடாகவே விசாரணைகளை முழுமையாக விசாரணை செய்ய முடியும்," என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தனவும் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

''தேர்தல் காலம் என்பதனால் அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ளனர். பெயர்கள் மற்றும் சாட்சியங்களை வெளிப்படுத்துங்கள்" என மஹேல ஜயவர்தன தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sport-53099969

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ உல‌க‌ கோப்பை க‌ட‌சி போட்டியில் ப‌ல‌ குழ‌ப்ப‌ங்க‌ள் ந‌ட‌ந்த‌து , இவ‌ர் சொல்லுவ‌த‌ ஏற்க்க‌ முடியாது ,

Tossரில் டோனி வெல்ல‌ , இல‌ங்கை அணி த‌லைவ‌ர் ச‌ங்க‌க்காரா‌ நான‌ய‌த்தில் த‌வ‌று இருப்பாத‌ ந‌டுவ‌ர்க‌ளுட‌ன் விவாத‌த்தில் ஈடு ப‌ட்டார் , பிற‌க்கு இர‌ண்டாம் த‌ரம் Toss ‌போட்டு இல‌ங்கை அணி துடுப்பெடுத்தாடியாது ,  இல‌ங்கை தோல்வி அடைய‌  முத‌ல் கார‌ம் இர‌வு நேர‌ பனிப்பொழிவு , மைதான‌ம் ஈர‌ம் , சுழ‌ல் ப‌ந்தில் இருந்து வேக‌ ப‌ந்து வ‌ர‌ ஒன்றும் எடுப‌ட‌ வில்லை , இல‌ங்கை கூடுத‌லா 30 ஓட்ட‌ம் எடுத்து இருந்தா வெற்றி  வாய்ப்பு இருந்து இருக்கும்  இல‌ங்கை அணிக்கு ,

க‌வுத‌ம் க‌ம்பிர் தான் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த‌வ‌ர் , அவ‌ரையும் அவுட் ஆக்கி இருந்தா இந்தியா திண‌றி இருப்பின‌ம் ,

அந்த‌ கோப்பையை இல‌ங்கை வென்று இருந்தா ச‌ங்க‌க்காராவை ப‌ற்றி ப‌டு கேவ‌ல‌மாய் இந்தியா ஊட‌க‌ங்க‌ள் எழுதி இருப்பாங்க‌ள் , நாண‌ய‌த்தில் முத‌ல் டோனி வென்ற‌தாய் தான் ந‌டுவ‌ர் அறிவிச்ச‌வ‌ர் , ச‌ங்க‌க் காரா தானும் அதை தான் சொன்னேன் என்று முர‌ன் ப‌ட‌ நாண‌ய‌ம் மீண்டும் போட‌ ப‌ட்ட‌து 😁😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 உலகக் கிண்ண சர்ச்சை; சங்கா,மஹெல கடும் எதிர்ப்பு!

“2011ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் பணத்திற்காக கிண்ணம் தாரைவார்க்கப்பட்டது”

இவ்வாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதனையடுத்து இந்த குற்றச்சாட்டுக்கு சங்கக்கார மற்றும் மஹெல ஜெயவர்த்தன தமது டுவிட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக மஹெல தனது டுவிட்டரில், “இது உண்மையெனில், இதில் சம்பந்தப்பட்டோரின் பெயர் மற்றும் ஆதாரங்களை காட்டுமாறும் மேலும் தேர்தல் நேரமென்பதால் சர்க்கஸ் ஒன்றை ஆரம்பித்து வைத்திருப்பது போல் உள்ளது” எனவும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

Screenshot_20200618-195142-1.jpg?189db0&

 

 

https://newuthayan.com/2011-உலகக்-கிண்ண-சர்ச்சை-சங்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎18‎-‎06‎-‎2020 at 17:57, பையன்26 said:

இந்த‌ உல‌க‌ கோப்பை க‌ட‌சி போட்டியில் ப‌ல‌ குழ‌ப்ப‌ங்க‌ள் ந‌ட‌ந்த‌து , இவ‌ர் சொல்லுவ‌த‌ ஏற்க்க‌ முடியாது ,

Tossரில் டோனி வெல்ல‌ , இல‌ங்கை அணி த‌லைவ‌ர் ச‌ங்க‌க்காரா‌ நான‌ய‌த்தில் த‌வ‌று இருப்பாத‌ ந‌டுவ‌ர்க‌ளுட‌ன் விவாத‌த்தில் ஈடு ப‌ட்டார் , பிற‌க்கு இர‌ண்டாம் த‌ரம் Toss ‌போட்டு இல‌ங்கை அணி துடுப்பெடுத்தாடியாது ,  இல‌ங்கை தோல்வி அடைய‌  முத‌ல் கார‌ம் இர‌வு நேர‌ பனிப்பொழிவு , மைதான‌ம் ஈர‌ம் , சுழ‌ல் ப‌ந்தில் இருந்து வேக‌ ப‌ந்து வ‌ர‌ ஒன்றும் எடுப‌ட‌ வில்லை , இல‌ங்கை கூடுத‌லா 30 ஓட்ட‌ம் எடுத்து இருந்தா வெற்றி  வாய்ப்பு இருந்து இருக்கும்  இல‌ங்கை அணிக்கு ,

க‌வுத‌ம் க‌ம்பிர் தான் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த‌வ‌ர் , அவ‌ரையும் அவுட் ஆக்கி இருந்தா இந்தியா திண‌றி இருப்பின‌ம் ,

அந்த‌ கோப்பையை இல‌ங்கை வென்று இருந்தா ச‌ங்க‌க்காராவை ப‌ற்றி ப‌டு கேவ‌ல‌மாய் இந்தியா ஊட‌க‌ங்க‌ள் எழுதி இருப்பாங்க‌ள் , நாண‌ய‌த்தில் முத‌ல் டோனி வென்ற‌தாய் தான் ந‌டுவ‌ர் அறிவிச்ச‌வ‌ர் , ச‌ங்க‌க் காரா தானும் அதை தான் சொன்னேன் என்று முர‌ன் ப‌ட‌ நாண‌ய‌ம் மீண்டும் போட‌ ப‌ட்ட‌து 😁😉

 

பையா நீங்கள் இந்திய அணிக்கு ஆதரவு என்று எனக்கு எப்பவோ தெரியும்😀 ...சங்கவிற்கோ  மஹிலவிற்கோ அல்லது தனிப்பட்ட ரீதியில் சம்மந்தம் இருக்காது...வேறு வீரர்களுக்கு இருக்குமோ தெரியாது ...ஆனால் விளையாட்டு துறை அமைச்சுற்க்கு இதனோடு சம்மந்தம் இருக்க கூடும் ...அந்த நேரம் நல்ல விளையாட கூடிய நல்ல போமில் இருந்த மெண்டிஸ் நீக்கப்பட்டார். சாமர சில்வா தூக்கப்பட்டார். கேரத் அணியில் இருக்க ரண்டீவிற்கு வாய்ப்பு….இந்திய ஆடுகளமொன்றில் பகல்-இரவுப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது என எல்லாம் சந்தேகமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தானந்தவின் கருத்து தொடர்பில் விசாரணக்கு உத்தரவு

June 19, 2020

Mahindananda.jpg

கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியின் போது ஆட்ட நிர்ணய மோசடி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். குறித்த போட்டியில், இலங்கை அணி பணத்துக்காக விற்கப்பட்டதாக மகிந்தானந்த அலுத்கமகே குற்றம் சுமத்தியிருந்தார்

அதேவேளை , முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரின் அறிவிப்பிற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜயவர்தன ஆகியோர் தமது ருவிட்டர் கணக்குகளில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல் அண்மித்துள்ள நிலையில் சர்க்கஸ் ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள மகேல ஜயவர்தன போட்டி காட்டிக கொடுக்கப்பட்டமைக்கான சாட்சியங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் அமைச்சர் அவரது சாட்சியங்களை சர்வதேச கிரிக்கட் பேரவை மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு சமர்ப்பித்து விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #மகிந்தானந்த #விசாரணை #குமார்சங்கக்கார  #மகேலஜயவர்தன #ஆட்டநிர்ணயமோசடி

 

http://globaltamilnews.net/2020/145225/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விசேட விசாரணை பிரிவில் அரவிந்த முன்னிலை!

Aravinda-De-Silva-commision.jpg?189db0&189db0

2011ம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா விளையாட்டத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணை பிரிவில் இன்று (30) சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக ஜூன் 18 அன்று முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பிலேயே அவர் வாக்குமூலம் வழங்கச் சென்றுள்ளார்.

 

https://newuthayan.com/விசேட-விசாரணை-பிரிவில்-அ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உபுல் தரங்கவுக்கு விசேட பொலிஸ் பிரிவால் அழைப்பாணை!

b311ab58cfb1db8e5c403d85d405a650_XL-960x559.jpg?189db0&189db0

 

2011ம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயச் சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக விளையாட்டத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணை பிரிவில் நாளை (01) ஆஜராகுமாறு இலங்கை அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக ஜூன் 18 அன்று முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/உபுல்-தரங்கவுக்கு-விசேட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கா உள்ளிட்டோர் மீதான விசாரணை; எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

 

IMG_20200702_164521-960x720.jpg?189db0&189db0

2011ம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயச் சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விளையாட்டத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணை பிரிவினால் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்ட வீரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதற்கு எதிராக இன்று (02) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் உள்ள இலங்கை கிரிக்கெட் சபை தலைமையத்தக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன்போது ஐமச வேட்பாளர்களான ஹர்ஷ டி சில்வா, ஜனகன் போன்றோரும் கலந்து கொண்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணைகளின் முடிவில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைகள் வெளிவரும் – குமார் சங்கக்கார

விசாரணைகளின் முடிவில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைகள் வெளிவரும் – குமார் சங்கக்கார

2011 உலகக்கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதென முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் பகிரங்கமான குற்றஞ்சாட்டினையடுத்து விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு தொடர் வாக்குமூலங்களை முன்னெடுத்து வருகின்றது.விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு நேற்று அழைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, சுமார் 09 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே, அவர் மேறகுறிப்பிட்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், விசாரணைகள் முடிவடைந்ததும் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமேயின் குற்றச்சாட்டுகள் மீதான உண்மைகளை அனைவரும் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.இதன்போது ஐ.சி.சி தலைவர் பதவிக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சங்கக்கார, இல்லை, அப்பதவிக்கு அவ்வாறு அழைப்பு விடுக்கப்படுவதில்லை, அதற்கு வேறு விதமான நடைமுறைகள் உள்ளன, எனினும் தற்போது நான் ஐ.சி.சி தலைவர்பதவி குறித்து சிந்திக்கவில்லை அதனைவிட முக்கியமான வேறு ஒரு விடயம் எனக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.உங்களுக்கு ஐ.சி.சி தலைவர்பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இல்லை, எதனையும் செய்வதற்கு எனக்கு அதிக காலம் இல்லை. முதலில் எனக்கு இருக்கும் முக்கிய பொறுப்புகளை நான் சரியாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/விசாரணைகளின்-முடிவில்-மு/

Link to comment
Share on other sites

’மஹேல, சங்காவை விசாரணைக்கு அழைத்தது ஏன்?’

 

 

 

(எஸ்.கணேசன்)  

ஆட்டநிர்ணய சதியுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் தொடர்புபடவில்லை. அவர்களின் பெயரையும் தான் குறிப்பிடவில்லை. எனவே, எந்த அடிப்படையில் பொலிஸார் அவர்களை விசாரணைக்கு அழைத்தனர் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.

நாவலப்பிட்டி நகரில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், 
“2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவின் பிரதானியால் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு கடிதமொன்று அனுப்பட்டிருந்தது. உலகில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் 10 அணிகளில் இலங்கை அணிக்கு எதிராகவே அதிக குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பில் விசாரணை நடைபெறுகின்றது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் அண்மையில் ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டிருந்தேன். அதனை அடிப்படையாக வைத்து விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் என்னிடம் வாக்குமூலமும் பதிவுசெய்யப்பட்டது. என்னிடம் இருந்த தகவல்களையெல்லாம் வழங்கினேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை நான் குறிப்பிடவில்லை. 

எனவே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த சங்கக்காரவையும், மஹேல ஜயவர்தனவையும் விசேட பொலிஸ் விசாரணைப்பிரிவினர் எந்த அடிப்படையில் விசாரணைக்கு அழைத்தனர் என தெரியவில்லை. ஏனெனில் இதனுடன் கிரிக்கெட் வீரர்கள் தொடர்புபடவில்லை என நான் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

அத்துடன்,  தகவல்கள் இன்மையால் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் என்னிடம் வாக்குமூலம் பதிவுசெய்த அதிகாரிகளிடம் வினவினேன். ஆட்ட நிர்ணய சதி சட்டமூலத்தின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என அவர்கள் என்னிடம் கூறினர். 

2017 இல்தான் சட்டம் நிறைவேறியுள்ளது. சம்பவம் இடம்பெற்றது 2011. எனவே, விசாரணைகள் முன்னெடுக்க முடியாது. சங்கக்காரவின் சட்டத்தரணிகளும் இதனை, குறிப்பிட்டுள்ளனர். தவறான முறையில் விசாரணையை ஆரம்பித்து பின்னர், விசாரணை முடிவடைந்துவிட்டது என கூறமுடியாது. ஓரிருவரிடம் வாக்குமூலம் பெற்று விசாரணையை முடிவுக்கு கொண்டுவரமுடியுமா? எனவே, பொலிஸ் ஊடகப்பேச்சாளரிடன் அறிவிப்பு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கேட்டுள்ளேன்.” என்றார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மஹேல-சங்காவை-விசாரணைக்கு-அழைத்தது-ஏன்/150-252755

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.