-
Tell a friend
-
Topics
-
0
By ஏராளன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
சீனா தங்களுடைய பலூன் இல்லை என தெரிவித்துள்ளது. 3 பஸ்ஸின் அளவில் உள்ளதால் அந்த பலூனை சுட்டு விழுத்துவது பற்றி அமெரிக்கா சிந்திக்கிறது. மற்றுமொரு பலூன் கனடாவின் மேல் பறப்பதாகவும் கூறப்படுகிறது.
-
பெரியண்ணை இனி 24 மணி நேரமும் கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டுதான் திரியோணும் போல கிடக்கு... வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு 😎
-
வணக்கம் வாத்தியார்.........! பெண் : செந்தாழம் பூவை கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு செந்தூர பொட்டும் வைத்து சேலாடும் கரையில் நின்றேன் பாராட்ட வா… சீராட்ட வா நீ நீந்த வா என்னோடு மோகம் தீருமோ…. தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்…. பெண் : தழுவாத தேகம் ஒன்று தனியாத மோகம் கொண்டு, தாலாட்ட தென்றல் உண்டு தாளாத ஆசை உண்டு பூமஞ்சமும் ….தேன்கின்னமும் நீ தேடி வா ஒரே ராகம் பாடி ஆடுவோம் வா…..! --- தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்---
-
அமெரிக்காவுக்கு மேலாக பறக்கும் சீனாவின் உளவு பலூன் : பின் தொடர்கிறது பெண்டகன் By SETHU 03 FEB, 2023 | 09:41 AM அமெரிக்காவுக்கு மேலாக பறக்கும் உளவு பலூன் ஒன்றை தான் பின்தொடர்வதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. இது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர். ஜனாதிபதி ஜோ பைடனின் கோரிக்கையின் பேரில், இந்த பலூனை சுட்டுவீழ்த்துவது குறித்து அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஆஸ்டின் மற்றும் பாதுகாப்புத் தரப்பு உயர் அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர். ஆனால், இவ்வாறு செய்தால் தரையிலுள்ள பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அவர்கள் கருதுகின்றனர் என அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பல படைத்தளங்கள் மற்றும் அணுவாயுத ஏவுகணைகள் உள்ள அமெரிக்காவின் வடமேற்குப் பிராந்தியத்தில் இந்த பலூன் பறந்துள்ளது. https://www.virakesari.lk/article/147306
-
By ஏராளன் · பதியப்பட்டது
தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2 வருட சிறைத்தண்டனை By SETHU 03 FEB, 2023 | 02:45 PM தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. தனது பிள்ளைகளுக்காக மோசடியான கல்வித் தகைமைகள் தொடர்பில் மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்தமைக்காக முன்னாள் நீதியமைச்சர் சோ குக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்துறை விரிவுரையாளராக பணியாற்றிய சோ குக், 2019 செப்டெம்பர் முதல் 2019 ஒக்டோபர் வரை நீதியமைச்சராக பதவி வகித்தார். எதிர்காலத்தில், தென் கொரியாவின் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்படுவார் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இந்நிலையில், தனது மகனும், மகளும் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவதற்காக போலியான ஆவணங்களை தயாரித்தமை தொடர்பில் சோ குக் குற்றவாளியாக காணப்பட்டார். இதனால் அவருக்கு 2 வருட சிறைத்தண்டனையும், 60 லட்சம் வொன் (5000 டொலர்) அபராதமும் விதித்து சோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. https://www.virakesari.lk/article/147364
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.