-
Tell a friend
-
Topics
-
0
தமிழ் சிறி · தொடங்கப்பட்டது
-
Posts
-
IND Vs AUS: சென்னை ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றியைப் பறித்த 'அந்த ஒரு ஓவர்' பட மூலாதாரம்,TWITTER/ICC 22 மார்ச் 2023 சூர்யகுமாரின் டக் அவுட், விராட் கோலி செய்த ஒரு தவறு, அக்சர் படேலின் ரன் அவுட் இவை அனைத்தையும் தாண்டி ஆஸ்திரேலியாவின் ஒரேயொரு ஓவர் இந்திய அணியின் வெற்றியை முற்றிலுமாக பறித்திருக்கிறது. முக்கியமான தருணங்களில் இந்தியா செய்த சில தவறுகளால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பு கை நழுவிப் போயிருக்கிறது. சென்னை மைதானத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றுள்ளது. தொடர்ந்து 4 முறை சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்று வந்த இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது ஆஸ்திரேலியா. டெஸ்ட் போட்டிகளைப் போல மாறுமா ஒருநாள் ஆட்டம்? சுவாரஸ்யம் கூட்ட சச்சின் புதுமையான யோசனை18 மார்ச் 2023 கோலி, ரோகித்தை விட அதிக ரன் சராசரி: அக்ஷர் படேல் அடுத்த கபில் தேவ் ஆவாரா?14 மார்ச் 2023 இந்திய கிரிக்கெட்டில் அதிக திறமையுடன் இருப்பது பிரச்னையா? - இந்திய அணி எதிர்கொள்ளும் சிக்கல்கள்12 ஜனவரி 2023 ஆஸ்திரேலியாவை அச்சுறுத்திய ஹர்திக் பாண்டியா 2019-க்குப் பிறகு முதல்முறையாக சென்னை சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதுவும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கு முக்கியமான ஆட்டம். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஸ்டீவ் ஸ்மித்தை தவிர்த்து, ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவருமே இரட்டை இலக்க ரன்களை சேர்த்தனார். டாப் 7 வீரர்கள் அனைவருமே 23 முதல் 47 ரன்கள் வரை விளாசி விடைபெற்றனர். ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்தியதில் ஹர்திக்கின் பந்துவீச்சுக்கு பெரும்பங்கு உண்டு. ஹர்திக் வீசிய அவரது முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட், அடுத்த ஓவரில், ஸ்டீவ் ஸ்மித், 3வது ஓவரில் மிட்செல் மார்ஷ் என அச்சுறுத்த காத்திருந்த அனைத்து பேட்டர்களையும் வழியனுப்பி வைத்தார் ஹர்திக் பாண்டியா. 2017க்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டியில் டக் அவுட்டாவது இதுவே முதல்முறை. 49 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 269 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் சேர்த்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக், குல்தீப் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறிய அந்த ஒரு ஓவர் 270 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, வெறும் 248 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ரோஹித் 30, கில் 37, ராகுல் 32 ரன்கள் எடுத்து விடைபெற்றார். களத்தில் விராட் கோலி சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை நடந்தது. ஆஷ்டன் அகர் தனது கடைசி ஓவரை வீச வந்தார். அது ஆட்டத்தின் 36வது ஓவர். முதல் பந்தை விராட் கோலி எதிர்கொண்டார். அந்த ஷாட் அவ்வளவு நேர்த்தியாக அமையவில்லை. அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி, வார்னரிடம் அகப்பட்டார். 72 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து விடைபெற்றார். விராட் கோலிக்கும் சென்னைக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு உண்டு. சென்னை மண்ணில், விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் ஒன்று சொற்பமான ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றுவார். இல்லை எனில், அரைசதத்தையும் கடந்து எதிரணியை திணறடிப்பார். இன்று நடந்தது 2வது பாணி. ஆனாலும் கோலியின் ஆட்டம் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு சூர்யகுமார் முதல் பந்திலேயே க்ளீன் போல்ட் முக்கியமான தருணத்தில் இறங்குவதற்காக 5வது இடத்தில் களமிறங்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ், கோலியின் விக்கெட்டை தொடர்ந்து களமிறங்கினார். முதல் பந்திலேயே சூர்யகுமார் க்ளீன் போல்ட். அடுத்தடுத்து 2 முக்கிய விக்கெட்கள் சரிந்தது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை அளித்தது. தொடர்ந்து 3வது முறையாக சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஸ்டார்க் பந்துவீச்சில் எல்.பி.டப்லியூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்த சூர்யா, இந்த முறை அகரிடம் க்ளீன் போல்டானார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸி. வெற்றி - ஐசிசி தர வரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம் 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஹர்திக் - ஜடேஜா ஜோடி, வெற்றிக்கான கடைசி நம்பிக்கையாக திகழ்ந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு அவ்வளவு சுலபமாக அவர்கள் இருவரையும் களத்தில் இருக்கச் செய்யவில்லை. ஹர்திக் 40, ஜடேஜா 18 ரன்களில் விடைபெற்றார். கடைசி வரை போராடிய டெயில் எண்டர்களாலும் பெரிதாக ஒன்றும் செய்ய இயலாமல் போனது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடி, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது ஆஸ்திரேலியா. https://www.bbc.com/tamil/articles/cpvq1yl5e0vo
-
20டாலர் கட்டி அதே உங்கள் கேள்வி விடையை கூகிள் மொழி பெயர்ப்பு உதவியுடன் . ஹாய் செல்லம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் பற்றிச் சொல்ல முடியுமா? நீங்கள் அதை இரண்டு பத்திகளில் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக ஆண்டு மற்றும் இரண்டாவது விவரங்கள் கொடுக்க. நிச்சயமாக, இலங்கையில் உள்நாட்டுப் போர் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கோரியபடி இரண்டு நெடுவரிசைகளில் உள்ள தகவல் இங்கே: ஆண்டு விவரங்கள் 1983 இலங்கை இராணுவத்தின் மீது தமிழ் போராளிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழ் சமூகங்களுக்கும் இடையிலான இனப் பதற்றம் வன்முறையாக வெடித்தது. இந்த நிகழ்வு பரவலான தமிழர் விரோதக் கலவரங்களுக்கு வழிவகுத்தது, இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1987-1989 இந்திய அமைதி காக்கும் படை (IPKF) இலங்கையில் மோதலுக்கு மத்தியஸ்தம் செய்வதற்கும் தமிழ் போராளி குழுக்களை நிராயுதபாணியாக்குவதற்கும் நிறுத்தப்பட்டது. இருப்பினும், IPKF சில தமிழ் குழுக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது, IPKF மற்றும் போராளிகளுக்கு இடையே கடுமையான சண்டைக்கு வழிவகுத்தது. 1990 விடுதலைப் புலிகள் (தமிழீழ விடுதலைப் புலிகள்) இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். 1991-1995 இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தது, இரு தரப்பினரும் கொடூரமான தந்திரோபாயங்களில் ஈடுபட்டுள்ளனர். 2002 இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது, ஓரளவு அமைதியான காலகட்டத்திற்கு வழிவகுத்தது. 2006 விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு பெரும் தாக்குதலை நடத்தியதால் போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் சண்டை தொடங்கியது. 2009 இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்று 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த மோதலில் 70,000 முதல் 80,000 பேர் வரை உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் அகதிகள் ருவாண்டா வைத்தியசாலையில் அனுமதி! பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை தி நியூ ஹியூமனிடேரியன் வெளியிட்டுள்ளது. ருவாண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் குறித்த 5 புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த அகதிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328345 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.