Jump to content

கலாச்சாரம் என்ற பெயரில் அடி முட்டாள்தனம்


Recommended Posts

On 27/6/2020 at 11:22, கிருபன் said:

தமிழ் சிந்தனையாளர் பேரவை என்ற யூரியூப் தளத்தைப் பார்த்தேன். இந்தத் திரியில் அகத்தான் இணைத்த வீடியோ அங்கிருந்துதான் வந்தது. கிருஷ்ணன் பச்சைத் தமிழன் என்று உள்ளது. அட்லாண்டிஸ் கண்டம் (கடலுக்கடியில் உள்ளது)  லெமூரியா என்று இன்னொன்று. கூடவே நடப்பில் சூடான சாத்தாங்குளம் மரணங்கள் பற்றியும் ஒன்று. பலர் உலகமெல்லாம் சதிக்கோட்பாடு, சூழ்ச்சிக்கோட்பாடுகளைக் கொண்டுவருகின்றார்கள். அப்படியான ஒரு குழுவினர் என்பதை இந்த யூரியூப் தளம் என்று தெரிகின்றது. 

இப்படியான யூரியூப் பதிவுகள் யாழில் வருவது போலி பிரச்சாரத்திற்கு யாழ் களமும் தப்பாது என்றுதான் காட்டுகின்றது.

 

தமிழ் சிந்தனையாளர் பேரவை சாதிக்கோட்பாட் டுக்கு, பிராமணியத்துக்கு எதிரானவர். அரைகுறையாகப்பார்த் துவிட் டு கருத்து சொல்வது தவறில்லையா.

Hunter, Miller, Woods, Carpenter, Smith, Thatcher, etc. எல்லாம் குலத் தொழிற்பெயர்களே. அங்கு சாதிப்பாகுபாடு  இல்லை.

இங்கு குலத் தொழில் சாதியாக மாற்றப்பட் டது வந்தேறிப்பிராமணிகளால்.

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அகத்தான் said:

தமிழ் சிந்தனையாளர் பேரவை சாதிக்கோட்பாட் டுக்கு, பிராமணியத்துக்கு எதிரானவர். அரைகுறையாகப்பார்த் துவிட் டு கருத்து சொல்வது தவறில்லையா.

 அவர்களின் யூரியூப் தளத்தில் உள்ள காணொளிகளின் பட்டியலே நம்பகத்தன்மையில்லாத சதிக்கோட்பாளர்கள் என்பதை காட்டுகின்றது. இப்படி நம்பகத்தன்மையில்லாத காணொளிகள், புனைவுச் செய்திகள், போலியான விளக்கங்கள் இணையமெல்லாம் பல்கிப்பெருகியுள்ளன.

கதவில் வந்து உங்கள் துன்பத்தையும், துயரத்தையும் போக்குகின்றேன் என்று சுவிஷேசப் பிரச்சாரத்திற்கு வரும் அல்லுலோயா சபையினரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். சக மனிதர்களில் அக்கறை உள்ளவர்கள். ஆனால் அவர்களின் நோக்கம் மதம் மாற்றுவதுதான். அப்படித்தான் இந்த சிந்தனையாளர்கள் என்று சொல்வோரும், தாம் “சிந்தனையாளர்” என்பதைக் காட்ட சாதிக்கோட்பாட்டுக்கும் பிராமணியத்திற்கும் எதிரானவர்கள் என்று காட்டுகின்றார்கள்.

இனம் மீதான பற்றை பிற இனங்களின் மீதான வெறுப்பாக  வளர்ப்பதுதான் பாசிசம். அப்படித்தான் இவர்களின் இனப்பற்றைப் பார்க்கமுடிகின்றது. இப்படியான சதிக்கோட்பாளர்களுடன் உரையாடுவது வெறும் நேரவிரயம். ஆதலால் இத்துடன் முடிக்கின்றேன்.

பி.கு. சாதியத்தையும், பார்ப்பனியத்தையும் எதிர்க்கும் மனநிலை பதின்ம வயதுகளில் இருந்தே எனக்கும் உள்ளது. 

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

 அப்படித்தான் இவர்களின் இனப்பற்றைப் பார்க்கமுடிகின்றது.

உங்களின் இந்த பார்வை, அதாவது view, கோணம், just ஒரு கோணம் மட்டுமே. எல்லாக்கோணங்களிலும் ஒரேமாதிரித்தான் தெரியும் என முடிவு செய்வது தவறில்லையா?

There are 360 degrees in just one plane. In three dimension, there are millions of views for the “samething”.

wow, பாவம் அந்த மூன்று தெய்வங்கள்!

Link to comment
Share on other sites

On 29/6/2020 at 02:51, கிருபன் said:

.

இப்படியான சதிக்கோட்பாளர்களுடன் உரையாடுவது வெறும் நேரவிரயம். ஆதலால் இத்துடன் முடிக்கின்றேன்.

 

 

யாழ்கள உறவுகளே, நான் இஙுகு வந்து கிட்டத் தட்ட ஒரு மாதமே ஆகிறது. எனது ஏதாவது ஒரு பதிவில் சாதியக் கோட்பாட்டை ஆதரித்து எழுதியிருக்கிறேனா? 

தமிழ் சிந்தனையாளர் பேரவை என்று Dr pandian (Physics), இவைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் சொல்வதன் அடிப்படையான விடயங்கள் சரியானதே, எல்லாம் சரியென்று எடுக்கத் தேவையில்லை. அதுபற்றி விவாதியுங்கள்” - இதுதான் நான் எழுதுயது. 

ஒருவர் வருவதும் எழுதுவதும், நிறுத்துவதும் அவரவர் சொந்த விருப்பம். மற்றவருக்கு ஏன் முத்திரை குத்தவெண்டும். 

As Tulpen said : “வளர்ந்து வரும் புதிய அறிவியல் காலத்தின் நிஜத்தை ஏற்றுக்கொள்வதால் நாம் ஒன்றும் தாழ்ந்து போய்விடப்போவதில்லை.” - இதில் ஜனநாயகம், நீதி, நியாயம், பக்கச்சார்பின்மை, தாக்குவதற்கு கூட்டுச்சேராமலிருத்தல்,  தனிப்பட்ட ஒருவரைத் தாக்காமல் விடயத்தைத்  தாக்குதல் என்பனவும் அடங்கும். 

இன்றைய அறிவியல் வளர்ச்சியடைந்த காலத்தில்” இவைகளை மறுப்பதுதானய்யா மூடப்பழக்கம்.

Link to comment
Share on other sites

On 26/6/2020 at 12:05, Justin said:

Astrology ஐயும் Astronomy ஐயும் கலந்து கூழாக்கி தீத்திவிடும் பல பதிவுகள் ஏதோ நாங்கள் எல்லாவற்றையும் கண்டு பிடிக்க ஐரோப்பியன் வந்து திருடிச் சென்றது மாதிரி ஒரு தோற்றம் தருவது உண்மையே! 

யாரும் யாரிடமும் இருந்து எதையும் திருடவும் இல்லை அழிக்கவும் இல்லை! அந்தந்த காலத்து தேவைகளுக்கேற்ப சில நம்பிக்கைகளும் நடைமுறைகளும் உருவாகின. ஆனால், காலாகாலமாக இருந்த இந்த நடைமுறைகளை இடையிடையே வந்த மனிதர்கள் கேள்விக்குள்ளாக்கியதில், எது பயன் தருவது, எது நிரூபிக்கக் கூடியது என்ற தெளிவினால் அர்த்தமற்ற நடைமுறைகள் சில சமூகங்களால் கை விடப்பட்டன. இது தான் மனித சமூகத்தை முன்னோக்கி நகர்த்தியது. அர்த்தமற்ற நடைமுறைகளை இன்னும் முன்னேற்றகரமான விடயங்கள் என எங்கள் முதுகை நாங்களே  தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒட்டு மொத்த மனித வளர்ச்சி என்ற அளவீட்டில் இப்படி இருக்கும் சமூகங்கள் எங்கே நிற்கின்றன இன்று என்று பார்த்தால், இப்படி எங்கள் முதுகை நாமே சொறிந்து கொண்டிருப்பதன் விளைவு தெரியும்!    

"எதையும் திருடவும் இல்லை அழிக்கவும் இல்ல"

பல நாடுகளின் (Egypt, Sumerian, Indus Valley) தொல்பொருட்கள், பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், ஆதிச்ச்நல்லூர் தொல்பொருட்கள், பழைய சமஸ்கிர்த ஓலைச் சுவடிகள் என்பன  Berlin, London Museum களுக்கு எப்படி வந்தது?

முக்கியமாக மதுரை மீனாட்சியமன் மூக்குத்தி, Kohinoor வைரம்  எங்கே இருக்குது?

யாழ்ப்பாண நூலகம் தானாக எரிந்ததா?

பாரசீக கலாச்சாரம், நூலகம் எப்படி அழிந்தது?

சிந்து வெளி எப்படி அழிந்தது?

இந்தியவில் நாலந்தா எப்படி அழிந்தது?

திருகோணமலையில் கோட்டையில் ஒரு சிலையின் உடைந்த துண்டு தலைகீழாக கல்லாக, தானாகவே வந்து ஒட்டிக் கொண்டதா?

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
On 30/6/2020 at 08:01, அகத்தான் said:

"எதையும் திருடவும் இல்லை அழிக்கவும் இல்ல"

பல நாடுகளின் (Egypt, Sumerian, Indus Valley) தொல்பொருட்கள், பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், ஆதிச்ச்நல்லூர் தொல்பொருட்கள், பழைய சமஸ்கிர்த ஓலைச் சுவடிகள் என்பன  Berlin, London Museum களுக்கு எப்படி வந்தது?

முக்கியமாக மதுரை மீனாட்சியமன் மூக்குத்தி, Kohinoor வைரம்  எங்கே இருக்குது?

யாழ்ப்பாண நூலகம் தானாக எரிந்ததா?

பாரசீக கலாச்சாரம், நூலகம் எப்படி அழிந்தது?

சிந்து வெளி எப்படி அழிந்தது?

இந்தியவில் நாலந்தா எப்படி அழிந்தது?

திருகோணமலையில் கோட்டையில் ஒரு சிலையின் உடைந்த துண்டு தலைகீழாக கல்லாக, தானாகவே வந்து ஒட்டிக் கொண்டதா?

 

 

பதிலில்ல என்ன.

ஆனால் வேறு எங்கேயோ ஒன்றுமே தெரியாதாள் மாதிரி கருத் தாடுவோம்

On 27/6/2020 at 16:18, அகத்தான் said:

பொதுவாக:

High School Physics:

ஒரு சதுரத்தின் நான்கு மூலைகள் A,B,C,D க்கு ஒவ்வொன்றாக நான்கு electrostaic charge கள் நிலைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சதுரத்தின் மையம் O வில் இன்னொரு electrostatic charge வைக்கப்பட்டுள்ளது.

சதுரத்தின் பக்கங்கள் மீட்டரோ, கிலோமீட்டரோ பரவாயில்லை.

electrostatic charge இன் அளவு சிறியதோ, பெரியதோ, சமனானதோ, இல்லையோ பரவாயில்லை.

இந்த அமைப்பினால், மையத்திலுள்ள electrostatic charge ஒரு விசைய அனுபவிக்கும், zeroவோ, இல்லை வேறெதுவோ. அது போல மற்ற electrostatic charge களும் ஒரு விசையை அனுபவிக்கும்.

இந்த விசையினால் O வில் உள்ள charge அசைந்து வேறொரு இடத்தில் நிலை கொள்ளும். அசையும் தூரம் பெரிசோ சிறிசோ என்பது பொருட்டல்ல, அது அசையும்.

இப்புதிய இடத்தை X என்போம்.

இப்போது, மூலைகளிலுள்ள ஏதாவதொரு charge ஐ சிறிதளவு நகர்த்தினால் X ல் உள்ள charge, தொடர்ந்து X இல் இருக்குமா அல்லது வேறொரு புதிய இடத் துக்கு நகருமா?

நகரும்!

இது charge க்கு மட்டுமல் ல,  mass - திணிவுக்கும் பொருந்தும்.

 

இப்போது charge களை, mass உள்ளதாகப் பார்த்தால், விளைவு, கூட்டு விளைவாக இருக்கும்.

அதாவது, X இல் உள்ள mass இன் gravitational field உம், electromagnetic field உம் மாறுபடும், பெரிசோ, சிறிசோ. 

இது அறிவியல்!

 

கிரகத்துக்கு gravitational field உம் இருக்கு, சொந்தமாக  electromagnetic field உம் இருக்கு.

ஒவ்வொரு உயிரினத்துக்கும் gravitational field உம் இருக்கு, சொந்தமாக  electromagnetic field உம் இருக்கு.

ஒரு கிரகம் அசைந்தால் அது மற்றக் கிரகங்களைப் பாதிக்கும், பெரிசோ, சிறிசோ, உயிரினமோ, கல்லோ.

இது அறிவியல் இல்லையா?

 

கிரகக் கொள்கையின் படி, சூரியன், சந்திரன் எல்லாம் கிரகமே, வெகு தூரத்திலிருக்கும் star உம் ஒரு வகையில் கிரகமே.

 

மூளை, computer என்பன இயங்குவது மின்னோட்டத்தினால் (இது புது விடயமல்ல!)  

 

Computer இலுள்ள chip கணிப்பைச் செய்வது electric pulse ஐப் பாவித்து (இது புது விடயமல்ல!)

மின்காந்த அதிர்வினால் computerஐ செயலிழக்கச் செய்யமுடியும்.

அணுவெடிப்பு, சூரியனில் ஏற்படும் coronal mass ejection (CME) என்பன பெரிய மின்காந்த அதிர்வை ஏற்படுத்தும். இவை அந்த ஏரியாவிலுள்ள சகல electronic chip களையும் செயலிழக்க வைத்துவிடும்.


Coronal Mass Ejections | NOAA / NWS Space Weather ...

Coronal Mass Ejections (CMEs) are large expulsions of plasma and magnetic field from the Sun's corona. They can eject billions of tons of coronal material and carry an embedded magnetic field (frozen in flux) that is stronger than the background solar wind interplanetary magnetic field (IMF) strength.

 

 மூளை இயங்குவது மின்னோட்டத்தினால். 

Queensland Brain Institute:

https://qbi.uq.edu.au/brain-basics/brain/brain-physiology/how-do-neurons-work#:~:text=Nerve impulses are the basic,other neurons (Fig 1). 

The key difference between neurons and glia is that neurons are ‘excitable’. This means that they produce electrical events called action potentials, which are also known as nerve impulses, or spikes. Nerve impulses are the basic currency of the brain. They allow neurons to communicate with each other, computations to be performed, and information to be processed. 

////////////

TMS therapy : மூளையில் உள்ள (nerve cells) நரம்பு செல்களைத் தூண்டுவதற்கு மின்காந்தம் பாவிக்கப்படுகிறது.

Transcranial Magnetic Stimulation (TMS) | How Does TMS Work 

TMS therapy involves the use of very short pulses of magnetic energy to stimulate nerve cells in the brain. First used in 1985, TMS therapy has been used by researchers around the world to help understand the function of different parts of the brain.

 

மின்காந்த அதிர்வில் ஏற்படும் மாறுதல்  மூளையின் செயற்பாட்டைப் பாதிக்கும்!

பாதிப்பு பெரிசோ சிறிசோ என்பது பொருட்டல்ல.

 

மன்னிக்கவும், இது வேறு எங்கேயோ போய் நின்று மறைமுகமாகத் தாக்குவது பற்றிய கருத்து.

பகுத்தறிவு:

பகுத்தறிவு என்பது: இன்னது இது, இன்னது இது என்று வேறு வேறாகப் பகுத்து அறியும் தன்மை.

கருத்து எழுதுபவரையும், கருத்தையும் வேறு வேறாகப் பிரித்து அறியத் தெரியாமல் இருப்பது பகுத்தறிவில்லை. இதைப் பகுத்தறிவென்பது அறிவீனம். இது தான் pseudo பகுத்தறிவு என்பது.

இங்கு, கிரகம் என்றால் என்ன, தோசம் என்றால் என்ன என்றே விளக்கினேன். ஒரு விடயத்தை விளக்குவது அவற்றை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ என்றாகிவிடாது. “களவு என்றால் ஒருவரிடமிருந்து பொருளைத் திருடுவது” என்று விளக்கினால் களவை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ ஆகிவிடாது. இதை விளங்கிக்கொள்வதுதான் பகுத்தறிவு.

பகுத்தறிவாளர் என்று மற்றவருக்கு லேபல் ஒட்டுபவரும், ஒட்டப்பட்டவரும் பகுத்தறிவு என்றால் என்னவென்று முதலில் தெரிந்து கொள்ளவும்.

இங்கு, கிரகம் என்றால் என்ன, தோசம் என்றால் என்ன என்று விஞ்ஞான ரீதியாக விளக்கிய பின்னர் ஒரு மூச்சையும் காணவில்லை. இங்கு கருத்தாடப் பயந்து வேறு எங்கேயோ போய் நின்று மறைமுகமாகத் தாக்குவதும், பகுத்தறிவுவாதியாகக் காட்டிக் கொள்ள முயற்சிப்பதும், கதையளப்பதும் நாகரிகமான செயல் அல்ல. இது பகுத்தறிவுமில்லை.

கருத்தில்  “வேறுபடுவதை” தங்களைத் தாக்குவதாக நினைத்து (psychological problem), கோபப்படுவது, அனாகரிகமான “stupidness  போன்ற வார்த்தைகளை சபையில் பாவிப்பதுதான் முட்டாள் தனம்.

கருத்து வேறுபாடு காரணமாக மற்றவரைத் தாக்குவதில் இன்பம் காண்பது, கருத்தாடலின் ஒரு பகுதியில்லை என்பதை தயவு செய்து அறிக.

இங்கு, ஒருவரும், இன்னொருவருக்கும் எதிரியில்லை. 15, 20 வருடமாக கருத்தாடலில் வளர்ச்சியே அடையவில்லையா. இவ்வளவு காலமாக இப்படித்தான் இங்கு குப்பை கொட்டியதா?

முதலில், கிரகம், தோசம் பற்றி கருத்தாடுவோம்.

“தில்” இருந்தால் இங்கு பதில் சொல்லவும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

I am waiting.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.