• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆதரவு யாருக்கு? வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவிப்பு

Recommended Posts

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆதரவு யாருக்கு? வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவிப்பு

Post Views: 55
June 20, 2020

jaffna-uni-1024x596.jpgஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்று அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றுக்காலை முதல் பல்கலைக்கழக வளாகத்தினுள் காணப்பட்டவை எனக்கூறப்படும் சில அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் தொடர்பில், மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புபடுத்தி சமூக வலைத் தளங்களில் பரவிய செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எம். பாலேந்திரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

பொது மக்களுக்குத் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கைவெளியிடுமாயின், அது ஒன்றியத்தின் கடிதத் தலைப்பில், தலைவர், செயலாளரின் கையயாப்பங்களுடனேயே வெளியிடப்படும் என்றும், வதந்திகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/48054

Share this post


Link to post
Share on other sites

வெளிநாடுகளில் இருந்து ஒரு மொட்டை கடிதத்தை எழுதி யாழ்பாணத்தில் வேலை வெட்டி இல்லாமல் உள்ள ஒருவரிடம் பல்கலைக்கழக சுவரில் ஒட்டிவிடுமாறு சொல்லி அவருக்கு சில ஆயிரங்களை உண்டியலில் அனுப்பிவிட்டால் அடுத்தநாள் ஐ.பி.சிக்கும் தமிழ்வின்னுக்கும் சுடச்சுட ஒரு  செய்தி ரெடி.

அறிக்கையின் முடிவில் எப்படியான பெயரிலும் உரிமை கோரலாம். புத்திசீவிகள், ஆவா குழு, எல்லாளன் படை, மாணவர் முன்னணி, மற்றும் விருப்பமான பெயர்களில்.

அதை யாழ் இணையத்தில் ஒருவர் சாதனை செய்வதுபோல் இணைப்பார். பலரும் நாடி, நரம்பு புடைக்க ஆவேசமாய் கருத்து சொல்வார்கள். இப்படியே காலம் கழிகின்றது நமக்கு.

ஆக மொத்தத்தில் மக்களை மொக்குகூட்டம் என நினைத்துக்கொண்டு வெளிநாடுகளில் வாழும் அதி மேதாவிகள் பலர்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

வெளிநாடுகளில் இருந்து ஒரு மொட்டை கடிதத்தை எழுதி யாழ்பாணத்தில் வேலை வெட்டி இல்லாமல் உள்ள ஒருவரிடம் பல்கலைக்கழக சுவரில் ஒட்டிவிடுமாறு சொல்லி அவருக்கு சில ஆயிரங்களை உண்டியலில் அனுப்பிவிட்டால் அடுத்தநாள் ஐ.பி.சிக்கும் தமிழ்வின்னுக்கும் சுடச்சுட ஒரு  செய்தி ரெடி.

அறிக்கையின் முடிவில் எப்படியான பெயரிலும் உரிமை கோரலாம். புத்திசீவிகள், ஆவா குழு, எல்லாளன் படை, மாணவர் முன்னணி, மற்றும் விருப்பமான பெயர்களில்.

அதை யாழ் இணையத்தில் ஒருவர் சாதனை செய்வதுபோல் இணைப்பார். பலரும் நாடி, நரம்பு புடைக்க ஆவேசமாய் கருத்து சொல்வார்கள். இப்படியே காலம் கழிகின்றது நமக்கு.

ஆக மொத்தத்தில் மக்களை மொக்குகூட்டம் என நினைத்துக்கொண்டு வெளிநாடுகளில் வாழும் அதி மேதாவிகள் பலர்.

 

நீங்க புதியவர் 

புலத்தைப்பற்றி

தாயகத்தைப்பற்றி தெரியாது விட்டாலும்

யாழில்  எழுதமுதல் யாழின் கனதிகளையும் அதன்  கருத்தாளர்களின் வலிமைகளையமாவது தெரிந்து கொண்டு எழுதத்தொடங்குங்கள்

Share this post


Link to post
Share on other sites
36 minutes ago, விசுகு said:

யாழில்  எழுதமுதல் யாழின் கனதிகளையும் அதன்  கருத்தாளர்களின் வலிமைகளையமாவது தெரிந்து கொண்டு

இப்போது போலியான செய்திகளும், புனைவுச் செய்திகளும், யூரியூப் காணொளிகளும் வருகின்றன. அவற்றின் உண்மைத்தன்மைகளை ஆராயாமலேயே கருத்தாடல்களும் நடக்கின்றன. 

இடைக்கிடை சுட்டிக்காட்டினாலும் மாயைகளில் இருந்து சிலர் வெளிவரமாட்டார்கள். 

ஆகஸ்டில் நடக்கவுள்ள தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வெல்லும்போதும், கூட்டமைப்பு அதிக ஆசனங்களை எடுக்கும்போது திட்டுவதற்கு இப்போதே தயார் செய்யவேண்டும்!

மக்கள் மடையர்கள் இலகுவாகத் தாண்டிப்போகவும் கூடிய வலிய கருத்தாளர்கள் இருக்கின்றார்கள்🤪

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • உண்மைதான். என் கணவருக்கு பச்சையாய் எது இருந்தாலும் பிடிக்கும். இது வெங்காயப் பூ வறை. வெங்காயத்தாளை வட வெங்காயப்பூ இன்னும் சுவையாய் இருக்கும்.
    • தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்குக் கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்வு: சென்னையில் 1,044 பேருக்குத் தொற்று தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய நிலவரம். சென்னை தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 4 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய (ஆக.5) நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்: "தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 3,033 பேர் ஆண்கள், 2,142 பேர் பெண்கள். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1 லட்சத்து 65 ஆயிரத்து 509 பேர் ஆண்கள், 1 லட்சத்து 7 ஆயிரத்து 924 பேர் பெண்கள், 27 பேர் மாற்றுப் பாலினத்தவர்கள். இதுவரை பாதிக்கப்பட்டுள்ளவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 13 ஆயிரத்து 520 பேர். 13-60 வயதுடையவர்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 606 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 34 ஆயிரத்து 334 பேர். தமிழகத்தில் இன்று மட்டும் 61 ஆயிரத்து 166 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக, 29 லட்சத்து 53 ஆயிரத்து 561 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் 59 ஆயிரத்து 156 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 28 லட்சத்து 45 ஆயிரத்து 406 தனிநபர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று தனியார் மருத்துவமனையில் 28 பேர், அரசு மருத்துவமனையில் 84 பேர் என, மொத்தம் 112 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 8 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 104 பேர். தமிழகத்தில் இன்று மட்டும் 6,031 பேர் குணமாகி மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2 லட்சத்து 14 ஆயிரத்து 815 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 184 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர். இன்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 4 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 997 பேர் வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 90 ஆயிரத்து 966 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக, 2,227 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11 ஆயிரத்து 811 பேர் (வீட்டுத் தனிமை உட்பட) சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் அரசு சார்பாக 60 மற்றும் தனியார் சார்பாக 65 என, 125 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன''. இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. https://www.hindutamil.in/news/tamilnadu/568357-5-175-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu-2.html