Jump to content

போர்முலா-1 காரோட்டப் போட்டியில் ஸ்பெயினின் அலோன்சாவுக்கு வெற்றி


Recommended Posts

போர்முலா-1 கார் பந்தயத்தின் மொனாக்கோ போட்டியில் ஸ்பெயின் வீரர் அலோன்சா வெற்றி பெற்றார்.

இந்த ஆண்டுக்கான போர்முலா -1 கார்பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் இதுவரை 4 போட்டிகள் முடிந்து விட்டன. இந்த நிலையில் 5 ஆவது பந்தயமாக மொனாக்கோ கிராண்ட்பிரீக்ஸ் மாண்டி கார்லோவில் நேற்று முன்தினம் நடந்தது.

78 சுற்றுகள் கொண்ட இதன் பந்தய தூரம் 260.520 கிலோமீற்றர் ஆகும். இதில் மெக்லரன் அணி வீரர்கள் தற்போதைய சாம்பியன் ஸ்பெயினின் அலோன்சா, இங்கிலாந்தின் ஹமில்டன் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவியது. இரண்டு பேரும் முதலிடத்தை பிடிக்க தங்கள் காரை மின்னல் வேகத்தில் செலுத்தினார்கள்.

முடிவில் அலோன்சா வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 40 நிமிடம் 20.329 விநாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். வெற்றி பெற்ற அவருக்கு 10 புள்ளிகள் கிடைத்தன.

கடந்த முறையும் இங்கு அலோன்சா தான் வெற்றி பெற்றிருந்தார். மெக்லரன் அணிக்கு கிடைத்த 150 ஆவது வெற்றியாக இது பதிவாகியுள்ளது.

2 ஆவதாக வந்த ஹமில்டன், அலோன்சாவை விட 4.095 விநாடிகள் பின்தங்கினார். அவருக்கு 8 புள்ளிகள் கிடைத்தன. 3 ஆவது இடம் பெராரி அணியில் பிரேஸிலின் பிலிப் மாசாவுக்கு கிடைத்தது. அவர் 6 புள்ளிகள் பெற்றார்.

இதுவரை நடந்த 5 சுற்றுப் போட்டிகள் முடிவில் அலோன்சா, ஹமில்டன் ஆகியோர் தலா 38 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கின்றனர். பிலிப் மாசா 33 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் இருக்கிறார். 6 ஆவது பந்தயம் 10 ஆம் திகதி கனடாவில் நடக்கிறது.

-thinakkural.com-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.