Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

திருநங்கை வாழ்க்கை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

திருநம்பி

நீயும் நன்றாக வாழ்ந்திட்டு, மற்றவனையும் வாழவிட்டுவிட்டுபோ.

ஒவ்வொருவரும் அவர்களின் உணர்வுப்படி வாழ்கின்றார்கள்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் திருநங்கையாக மாறுவதற்கு தடை

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருநங்கை எனும் பதம் பொருத்தமானதா (நிகரானதா) Transgender எனும் ஆங்கில சொல்லிற்கு?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆனந்த்பாபு

15959589802952.jpg

நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். திருநங்கைகளின் சுயதொழில் முயற்சிகளுக்கு கை கொடுக்கும் காவல் ஆய்வாளர் ஜி.ஆனந்த்பாபு. இப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவருக்கு ‘காட்பரி டெய்ரி மில்க்’ நன்றி கூற விரும்புகிறது. அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்...

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற சொல்வதைச் செயலில் காட்டுவதுபோல் காவல்துறையில் பதவியேற்ற நாளிலிருந்து இன்றுவரை வாழ்ந்து வருகிறார் சூளைமேடு காவல்நிலையத்தின் ஆய்வாளர் ஜி.ஆனந்த்பாபு. கடலூரைச் சேர்ந்த ஆனந்த்பாபு, கல்லூரியில் ஹாக்கி விளையாட்டு வீரர். தாத்தா ராணுவம், அப்பா விமானப் படை, மாமா காவல்துறை என இவரது குடும்பத்தினர் மக்கள் சேவைப் பணியில் இருந்தவர்கள். பிறந்ததிலிருந்தே காவல்துறை வேலை ஒரு பெருமை என்ற சூழலில் வளர்ந்த ஆனந்த்பாபுவும், அதே துறைக்குள் நுழைந்தார்.

2000-ஆம் ஆண்டு காட்டுமன்னார் கோயில் பகுதியில் உதவி ஆய்வாளராகத் தன் பணியை ஆரம்பித்தார். காட்டுமன்னார் கோயிலில் பணி செய்த காலத்தில் அங்குள்ள இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு காவல்துறை, ராணுவ வேலையில் சேருவதற்கான பயிற்சியும் ஊக்கமும் அளித்துள்ளார். இதன்மூலம் கிட்டத்தட்ட 100 பேருக்கு காவல்துறையில் வேலை கிடைத்திருக்கிறது.

2010–ஆம் ஆண்டு சென்னை மதுரவாயில் காவல்நிலையத்துக்குப் பதவி உயர்வில் ஆய்வாளராக வந்த ஆனந்த்பாபு, சூளைமேடு பகுதியில் இருக்கும் திருநங்கைகளுக்கு ஆனந்த்பாபு ஒரு உற்ற தோழனாகவே இருக்கிறார். அவர்களின் மறுவாழ்வு, மாற்றுத்தொழில் ஏற்பாடு என உதவி செய்து வருகிறார்.

தோழி, சகோதரன் உள்ளிட்ட அமைப்புகளோடு சேர்ந்து இவரது முன்னெடுப்பால், இதுவரை 6 திருநங்கைகள் தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர். இன்னும் 6 பேருக்கு தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை அமைத்துக் கொடுத்திருக்கிறார், இன்னும் சிலருக்கு டாடா ஏஸ் வண்டி வாங்கிக் கொடுத்து, அதன்மூலம் குடிநீர் கேன் வியாபாரம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

“கடைகள்ல அஞ்சுக்கும் பத்துக்கும் கைநீட்டிக்கிட்டு அசிங்கப் பட்டுக்கிட்டு இருந்தேன். ‘கைகால் நல்லாத்தானே இருக்கு’னு கேலி செய்வாங்க. அவமானப் பட்டு அழுதிருக்கேன். ஆனந்த்பாபு அய்யாக்கிட்டே என்னோட பிரச்சினையை எழுதி கொடுத்தேன். அய்யாவோட முயற்சியிலதான் தள்ளுவண்டி, பாத்திரம், அடுப்பு, 2 சிலிண்டர்னு இன்னிக்கி மானத்தோட சாப்பாட்டுக்கடை நடத்துறேன். திருநங்கையோட பிரச்சினைய புரிஞ்சுக்கிட்ட அந்த மகாராசன் நூறு வருசம் வாழணுங்க…” என்று நெகிழ்கிறார் பட்டினப்பாக்கத்தில் சாப்பாட்டுக் கடை நடத்திவரும் திருநங்கை மோகனா.

காவல்துறையே மக்கள் பணி தான், அதையும் மீறி இதுபோன்ற சமூக சேவைகளைச் செய்வதற்கு நேரம் எங்கிருந்து கிடைக்கிறது என்று கேட்டால், “என்னோட வேலை நேரம் போக, ஓய்வு நேரத்துலதான் இது மாதிரியான சமூகப் பணிகளைச் செய்யிறேன். மேலும், பலரையும் ஒருங்கிணைச்சு, சில நேரங்கள்ல் போன் மூலமா இந்தப் பணிகளைச் செய்யிறதால பெரிய சுமையா தெரியலே, சந்தோஷம் தான்” என மிக எளிமையாகப் புன்னகைக்கிறார் ஆனந்த்பாபு.

https://www.hindutamil.in/news/brandhub/566975-thanks-police-inspector-anand-babu-dont-forget-goodness-noble-service-of-police-inspector-anand-babu.html

 

Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

திருநங்கை இல்லாத திருவிழாவிற்கு போக மாட்டோம்

 

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

இடைபாலினக் குழந்தைக்கு ஒரு மனிதநேயத் தாலாட்டு!

a-humane-lullaby-for-a-transgender-child

 

ஆங்கிலத்தில் இன்டர்செக்ஸ் என்று அழைக்கப்படும் இடைபாலினக் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கு இடையூறு செய்யக் கூடாது என கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்தது.

ஓர் இடைபாலினக் குழந்தைக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு கிடைப்பது அவசியம். அதேநேரம் அத்தகைய குழந்தைக்குச் சமூக அங்கீகாரம் கிடைப்பதற்கு முதலில் தேவைப்படுவது தாயின் அன்பும் நேசமும்தான். இதை வலியுறுத்தும் தாலாட்டுப் பாடலை திருநங்கைக் கவிஞரான விஜயராஜா மல்லிகா மலையாளத்தில் எழுதினார். அந்தப் பாடலை ஷினி அவந்திகா பாட, மோகினியாட்டக் கலைஞர் டாக்டர் சந்தியா இந்தப் பாடலுக்கான நடனத்தோடு கடந்த ஆகஸ்ட் 16 அன்று யூடியூபில் வெளியிட்டனர்.

இதற்குப் பெருத்த வரவேற்பு கிடைக்கவே இந்தப் பாடலின் தமிழாக்கத்தை பத்மகுமார் பரமேஸ்வரன் எழுத, பாடலுக்கு மெட்டமைத்துப் பாடியிருக்கிறார் கரும்புழா ராதா. நிலம்பூர் ஷாஜியின் வயலின் பாடலின் இடையே நிலவும் கனத்த மவுனத்தைத் தன் தந்திகளால் மொழிபெயர்க்கிறது.

இந்தப் பாடலைப் பாடியிருக்கும் பிரபல பின்னணிப் பாடகியான

15997222392484.jpg கரும்புழா ராதா

50 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். ஆகவே, அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரின் 76-வது பிறந்த நாளான செப்டம்பர் 6 அன்று இந்தப் பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டிருக்கிறது.

“ஆண் அல்ல பெண் அல்ல; பொன்மணி நீ எனக்கு..” என்னும் தொடக்க வரியே அன்பையும் பாசத்தையும் தாலாட்டி மகிழ்கிறது. “நீ சாபமோ, பாவமோ அல்ல; என் வானின் அதிர்ஷ்டத் தாரகை” என்று நம்பிக்கை மொழியைத் தாலாட்டின் வழியாகக் கேட்கும் குழந்தை தன்னம்பிக்கையோடுதானே வளரும்!

“ஒரு குடும்பத்தில் ஓர் இடைபாலினக் குழந்தை பிறந்தால் யார் முதலில் ஏற்றுக்கொள்வது என்பதில் பிரச்சினை இருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் தாய்தான் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். தாயின் அன்பு அந்தக் குழந்தைக்குக் கிடைக்கும்பட்சத்தில் அந்தக் குழந்தையால் உலகத்தில் எந்தவிதமான பிரச்சினையையும் சவால்களையும் சந்திக்க முடியும் என்பதைத்தான் என் பாட்டில் கூறியிருக்கிறேன்.
அந்த அன்பு மட்டும் கிடைத்துவிட்டால், ஆண், பெண், இனம், சாதி, மதம் போன்ற பிரிவினைச் சட்டகத்துக்குள் சிக்காமல் சுதந்திரமாக அந்தக் குழந்தையால் வாழ முடியும்” என்றார் திருநங்கை விஜயராஜா மல்லிகா.

 

https://www.hindutamil.in/news/blogs/576783-a-humane-lullaby-for-a-transgender-child-1.html

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆண் அல்ல, பெண் அல்ல
பொன்மணி நீ எனக்கு
தேனமுதம் தான் கண்ணே தேனமுதம்

என் துயரத்தின் கண்ணீர் கண்டு 
காலம் தந்த செல்வம் நீயே 
(ஆண் அல்ல .....)

நன்மையும் தீமையும் 
வகையீடு செய்து நீ 
எல்லைகள் தாண்டி வளர்ந்திடவே 
பொருளின் எதிரொலியாகவே நீ 
நீயாகத்தான் நிறைந்திடு 
ராரி...ராரோ...ராராரோ... (2)

மகனல்ல மகளல்ல வானவில்லே (2)  
மார்போடு சேர்த்துவைத்தேன் நான் உன்னையே 
உச்சி மீது முத்தங்கள் பொழிந்திடுவேன்
என் வாழ்க்கை சாதனையின் முத்தங்கள் 

தளராது செழிக்கட்டும் உன் கனவுகள் 
பிறர்க்காதரவாய் மாறவேண்டும் உன் வாழ்வு 
(ஆண் அல்ல ....)

சாபம் அல்ல, பாவம் அல்ல அன்பே நீ 
என் வாழ்க்கை வானிலுதித்த அதிர்ஷ்ட தாரகை,
முதற்தாரகை, முதற்தாரகை நீ.
ராரி...ராரோ...ராராரோ...(2)

 

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

ஆண்களே உங்கள் வேட்டிகள் கவனம் இனிமேல் 🤣😂

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2020 at 14:31, நியாயத்தை கதைப்போம் said:

திருநங்கை எனும் பதம் பொருத்தமானதா (நிகரானதா) Transgender எனும் ஆங்கில சொல்லிற்கு?

ஆங்கிலம் பிறக்க முன்னரே 
பல சமூகங்கள் இதற்கு முகம் கொடுக்க தொடங்கிவிட்டன
ஆகவே ஆங்கில பதம் எல்லா இடத்திலும் அர்த்தம் கொடுக்காது. 

உதாரணத்துக்கு வெள்ளைக்காரர் முதன் முதலில் இந்தியா வந்த போதுதான் 
ஆட்கள் குளிப்பதை பார்த்து இருக்கிறார்கள். அத பின்புதான் ஐரோப்பிய மொழிகளில் 
குளித்ததலுக்கு உரிய சொல் உருவாகி இருக்கிறது.

"குளித்தல்" என்பதே பிழையானது சரியானது குளிர்த்தல் குளிர்வித்தல் அல்லது முழுக்கு.
அழுக்கை போக்குவதை   இரண்டாம் பட்ஷமாகத்தான் எமது முன்னோர்கள் 
பார்த்து இருக்கிறார்கள் உடல் வெப்பத்தை சீராக்குவதுக்குத்தான் நீர் நிலைகளில் மூழ்கி 
இருக்கிறார்கள். புறநானுற்று புரட்டுகளிலேயே குளிப்பது பற்றி இருக்கிறது 
எமது சமூகம் 3000 ஆண்டுகளாக நீராடி வருகிறது.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நாம் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்பதை 
தொலைப்பதால் மறப்பதால்தான் பல இரசாயனங்களால் எமது குளியலறையை சோடித்து 
வீணான வில்லங்கங்களை விளக்கு வாங்கி கொள்கிறோம்.    

விலைக்கு  வாங்கி கொள்கிறோம்.   

 • Like 2
Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கை தம்பதிகளின் India's 1st வல்லாரை Mojito | Transgender Food Shop | Tamil Food Review

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நர்த்தகி நடராஜ்: தடைகளைத் தகர்த்த நாட்டிய கலைஞர் - சாதித்த கதை

 • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
 • பிபிசி தமிழ்
24 அக்டோபர் 2020
நர்த்தகி நடராஜ்
 

(பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் அந்த உச்சத்தை தொடும் முன்பு, பல தடங்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள், தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்ளும் தொடரை பிபிசி தமிழ் வழங்குகிறது. அதில் நான்காவது கட்டுரை இது.)

பத்ம ஸ்ரீ விருதுபெற்ற, தேசத்தின் சிறந்த நடன கலைஞர்களில் ஒருவரான நர்த்தகி நடராஜ், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் அந்த உயரத்தை அடைந்தவர். சமூகம் விதித்த அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்தவர். வாழ்வின் தடைகளைத் தகர்க்க நினைப்பவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு உதாரணம்.

தமிழ்நாட்டில் பரத நாட்டியத்திற்காக பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரான நர்த்தகி நட்ராஜ், சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது தீராத காதல் கொண்டவர். தற்போது இந்தியாவின் முக்கியக் கலைஞர்களின் ஒருவரான நர்த்தகியின் கலைப் பயணம், யாருக்கும் உத்வேகமூட்டக் கூடியது.

"நடனத்தை நான் தேர்வுசெய்தேன் என்பதை விட, நடனம்தான் என்னைத் தேர்வுசெய்தது. ஆணாகப் பிறந்த நான், பெண்ணாக என்னை உணர்ந்த அந்தத் தருணத்தில், என் பெண்மையை வெளிப்படுத்த அது உகந்த கலையாக இருந்தது.

அந்தப் பருவத்தில் இருந்த இடர்களில் இருந்து சாய்ந்து கொள்ள ஒரு தோளாக அந்தக் கலை இருந்தது. ஒரு ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியதால் ஏற்பட்ட பிரச்சனைகளைக் கடக்க, இது வாகனமாக இருந்தது. நல்ல துணையாக இருந்தது. அப்படித்தான் நடனத்தின் மீது ஈர்ப்புக்கொள்ள ஆரம்பித்தேன்" என்கிறார் நர்த்தகி.

மதுரை அனுப்பானடி பகுதியில், வசதியும் அரசியல் செல்வாக்கும் மிகுந்த குடும்பத்தில், அவரது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர் நடராஜ். ஆனால், 5-6 வயதிலேயே தான் மற்றவர்களைப் போல அல்ல என்று உணர ஆரம்பித்தார். எதிர்பார்த்தபடியே அவரது வீட்டினருக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

நர்த்தகி நடராஜ்
 

அனுப்பானடியில் உள்ள தியாகராசர் முன்மாதிரிப் பள்ளியில் படித்த நடராஜ், மிகச் சிறந்த மாணவர். இருந்தபோதும், உடலில் இருந்த மாற்றங்கள் அவரைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தன.

வீட்டிலும் வெளியிலுமாக தங்கியிருந்தபடி, 12ஆம் வகுப்புவரை படித்த நடராஜ், அதற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் நடனம் என்ற கலை அவரை முழுமையாக ஆக்கிரமித்தது. அவரைப் போலவே உணர்ந்த பாஸ்கரும் (இப்போது சக்தி) நடராஜும் செவ்வியல் நடனத்தை நோக்கி வெகுவாக ஈர்க்கப்பட்டார்கள்.

திரைப்படங்கள்தான் அவரது முதல் நடன குருவாக இருந்தன. அதில் நாயகிகள் ஆடிய நடனங்களைப் பார்த்தே, நடனத்தையும் அவர்கள் பேசிய வசனங்களைக் கேட்டு மொழியையும் செழுமைப்படுத்திக் கொண்டார் நடராஜ். அதற்குப் பிறகு, கோவில் திருவிழாக்களில் தொடர்ந்து ஆடிவந்தார்.

ஆனால், முறைப்படி நடனம் கற்க வேண்டுமென்ற ஆசைமட்டும் தீரவில்லை. அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூர் பாணி பரதக்கலையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த பி. கிட்டப்பா பிள்ளையிடம் பரதம் கற்க முடிவுசெய்தார் நடராஜும் அவரது தோழியான பாஸ்கரும்.

நர்த்தகி நடராஜ்

பட மூலாதாரம்,NARTHAKI NATRAJ

 

"யாமினி கிருஷ்ணமூர்த்தி, சுதாராணி ரகுபதி போன்ற இந்தியாவின் மிகப் பெரிய பரதநாட்டியக் கலைஞர்களின் குரு அவர். தஞ்சாவூருக்குச் சென்று எங்களுக்கும் பரதம் கற்றுத்தரும்படி தொடர்ந்து வேண்டினோம். அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வோம். ஒரு வருடக் காத்திருத்தலுக்குப் பிறகு அவர் எங்களை ஏற்றுக்கொண்டார். அது ஒருபெரிய பல்கலைக்கழகத்தில் படிக்கக் கிடைத்த வாய்ப்பு போல இருந்தது," என்கிறார் நர்த்தகி.

பரத நாட்டியத்தில் புகழ்பெற்ற தஞ்சை நால்வரில் ஒருவரான சிவானந்தத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்தான் கிட்டப்பா பிள்ளை.

17வது வயதில் கிட்டப்பா பிள்ளையிடம் சேர்ந்த நடராஜும் பாஸ்கரும், அதற்கு அடுத்த 15 வருடங்கள் அவருடனேயே இருந்தனர். தொடர்ச்சியாக நட்ராஜுக்கும் பாஸ்கருக்கும் கற்பித்தார் கிட்டப்பா பிள்ளை. நட்ராஜிற்கு நர்த்தகி என்று பெயர் சூட்டியவரும் அவர்தான்.

சாதித்தே ஆக வேண்டுமென்பதுதான் அவரது இலக்காக இருந்தது. "குடும்ப ஆதரவு, சமூக ஆதரவு போன்ற எதுவுமே இல்லை. ஆகவே நடனத்தை வெறித்தனமாகக் காதலிக்க ஆரம்பித்தேன். எதிர்ப்புகள், அவமானங்கள் ஆகியவை தொடரவே செய்தன. ஆனால், வெற்றியடைய வேண்டும் என்ற கொள்கை மட்டுமே என்னை நடத்திச் சென்றது" என நினைவுகூர்கிறார் நர்த்தகி.

நர்த்தகி நடராஜ்
 

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக சில காலம் பணிபுரிந்த நர்த்தகி, புத்தாயிரத்தின் துவக்கத்தில் சென்னையில் குடியேறினார்.

எந்தத் தருணத்திலும் நர்த்தகியும் சக்தியும், தாங்கள் திருநங்கைகள் என்பதைச் சொல்லி வாய்ப்புகளைப் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

"ஆகவே பேய்த் தனமாக உழைத்தோம். என் கலையை, கஷ்டங்களைக் காதலித்தோம். அடுத்தடுத்த வெற்றிகள் எனக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்தன. எனக்கு வெற்றிகள் மிகத் தாமதமாகக் கிடைத்தன, ஆனால், கிடைத்தன. நான் கடந்த வந்த பாதையைப் பார்த்தால், நான் மிக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறேன். ஆனால், என்னுடைய திறமைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை ஒரு திருநங்கை என்பதால் கிடைத்த அங்கீகாரமாகச் சொல்லும் போக்கு வலிக்கிறது. பத்ம ஸ்ரீ விருது எனக்குத் தரப்பட்டபோதுகூட, அது எனது கலைக்காகத் தரப்பட்டது என சொல்லப்பட்ட நிலையிலும் ஒரு திருநங்கைக்கு பத்ம ஸ்ரீ, ஒரு திருநங்கைக்கு பத்ம ஸ்ரீ என்றுதான் குறிப்பிட்டார்கள்" என்கிறார் நர்த்தகி.

நர்த்தகியின் அனைத்துப் பயணங்களிலும் துணையாக இருக்கிறார் சக்தி. "சக்தி என்னோடு இருப்பது என்பது, தெய்வம் என்னோடு இருப்பதைப் போல. தன்னலமற்றவர். அவரிடம் சிறிது நேரம் பேசினாலும் அந்தப் பேச்சு என்னைப் பற்றித்தான் இருக்கும். ஒரு நாணயத்தின் முன் பக்கம் நான். பின் பக்கம் அவள்," என்கிறார் நர்த்தகி.

நர்த்தகி நடராஜ்
 

வெள்ளியம்பலம் என்ற தன்னுடைய நடனப் பள்ளியை வெள்ளியம்பலம் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளையாக்கியிருக்கிறார். "எங்களுடைய வாழ்க்கை முறை வெற்றியடைந்த வாழ்க்கை முறை. நிறைய திருநங்கைகளுக்கு அதை நாங்கள் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது அவர்கள் வாழ்க்கையை மாற்றும் என நம்புகிறோம்" என்கிறார் அவர்.

 

https://www.bbc.com/tamil/india-54648023

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2020 at 12:09, Maruthankerny said:

ஆங்கிலம் பிறக்க முன்னரே 
பல சமூகங்கள் இதற்கு முகம் கொடுக்க தொடங்கிவிட்டன
ஆகவே ஆங்கில பதம் எல்லா இடத்திலும் அர்த்தம் கொடுக்காது. 

உதாரணத்துக்கு வெள்ளைக்காரர் முதன் முதலில் இந்தியா வந்த போதுதான் 
ஆட்கள் குளிப்பதை பார்த்து இருக்கிறார்கள். அத பின்புதான் ஐரோப்பிய மொழிகளில் 
குளித்ததலுக்கு உரிய சொல் உருவாகி இருக்கிறது.

"குளித்தல்" என்பதே பிழையானது சரியானது குளிர்த்தல் குளிர்வித்தல் அல்லது முழுக்கு.
அழுக்கை போக்குவதை   இரண்டாம் பட்ஷமாகத்தான் எமது முன்னோர்கள் 
பார்த்து இருக்கிறார்கள் உடல் வெப்பத்தை சீராக்குவதுக்குத்தான் நீர் நிலைகளில் மூழ்கி 
இருக்கிறார்கள். புறநானுற்று புரட்டுகளிலேயே குளிப்பது பற்றி இருக்கிறது 
எமது சமூகம் 3000 ஆண்டுகளாக நீராடி வருகிறது.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நாம் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்பதை 
தொலைப்பதால் மறப்பதால்தான் பல இரசாயனங்களால் எமது குளியலறையை சோடித்து 
வீணான வில்லங்கங்களை விளக்கு வாங்கி கொள்கிறோம்.    

விலைக்கு  வாங்கி கொள்கிறோம்.   

உண்மைதான்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • முதுகில் குத்துவதைப் பற்றிப் பேச திகாவுக்கு அருகதையில்லை http://static2.tamilmirror.lk/assets/uploads/image_1e8f620702.jpg எம்.செல்வராஜா 'நம்பிக்கை துரோகம்; முதுகில் குத்துவது போன்ற விடயங்களைப் பற்றிப் பேசுவதற்கு திகாம்பரத்துக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது. மத்திய மாகாண சபையினூடாக ஓர் அரசியல் முகவரியை ஏற்படுத்திக்கொடுத்த அமரர் பெ. சந்திரசேகரனின் முதுகில் குத்தியவர் தான் திகாம்பரம்.   அதன் பின்பு மஹிந்தவின் முதுகிலும்  பிறகு ரணிலின் முதுகிலும் குத்தியதோடு, தற்போது ஆளுந்தரப்போடு இணைவதற்கு முயற்சித்து வருகிறார்' என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் சாடியுள்ளார். இது தொடர்பில் அவர் தமிழ்மிரருக்கு வழங்கியுள்ள நேர்காணலின் முழுவடிவம் பின்வருமாறு,   கேள்வி:- அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக, உங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் தாங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்? பதில் :-  கடந்த தேர்தல் பிரசாரங்களின் போது, நான் எமது மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருக் கின்றேன். எனக்கு கிடைத்த வாக்குகளில் 10 சதவீதமான வாக்குகள் மட்டுமே ஐக்கிய மக்கள் சக்திக்கான வாக்குகளாகும். மிகுதி 90 வீதமான வாக்குகளும் அரவிந்தகுமார் என்ற பெயருக்குக் கிடைத்த வாக்குகளாகு மென்று உறுதியாக நம்புகின்றேன். ஆனால், நான் போட்டியிட்ட கட்சி வெற்றியடைவில்லை. இந்நிலையில் நான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு என்னாவது?. எனவே எமது மக்களுக்கு சேவையாற்றுவதற்காக, அரசாங்கத்துக்கு ஆதரவளித்தேன். 2015ஆம் ஆண்டு முதல் எமது ஆட்சி முடியும்வரை பாரிய அபிவிருத்தி வேலைகள், கல்வி மேம்பாட்டுக்கான எனது பங்களிப்பு, சமூக நலன் சார்பான ஏனைய விடயங்கள் போன்றவற்றில் அதிக செயல்பாடுகளை மேற்கொண்டவன் நான். இதனை தேர்தல் காலத்தில் ஆவண வடிவில் நிரூபித்து, மக்களுக்குக் காட்டியு ள்ளேன். எனது செயற்பாடுகள் காரணமாக மக்கள் மனதில்   பெரும் வரவேற்பை நான் பெற்றிருக்கின்றேன். அடுத்து வரும் 5 வருடங்களுக்கு எதிர்க் கட்சியில் அமர்ந்துகொண்டு, எனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. ஒருவருக்கேனும் அரச தொழில் வாய்ப்பைக்கூட  என்னால் பெற்றுக்கொடுக்க இயலாமல் போய்விடும். இதேவேளை, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நிலை, ஏனைய மாவட்டத்துடன் ஒப்பிடும்போது, மிகவும் பின் தங்கிய நிலைமையிலேயே உள்ளது. நான் சுயநலவாதியாக இருந்திருந்தால், கொள்கைகளைப் பேசிக்கொண்டும் அறிக்கை விட்டுக்கொண்டும் சுகபோகமாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால், என்னால் அப்படியிருக்க முடியாது. நாளாந்தம் இரவு 12.00 மணிவரை மக்கள் பணியாற்றி பழகியவன் நான். கடந்த 3 மாதங்களாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், எமது மக்களின் பிரச்சினை தொடர்பாக, அந்தந்த பொலிஸ் நிலையங்களோடும் அரச திணைக்களங்களோடும் தொடர்புகளை மேற்கொண்டபோது,  அவற்றிற்கு சரியான தீர்வு கிடைக்காத ஒரு தன்மையை   உணரக் கூடியதாகவிருந்தது. எமது மக்களின் பிரச்சினைகள் ஏராளம். இவற்றுக்குத் தீர்வு காண வேண்டுமாயின் ஆளும் அரசாங்கத்தின் ஆதரவு தேவை யென்பதையும் உணர்ந்தேன். பதுளை மாவட்டம் என்பது ஒரு பெரும்பான்மை சமூகத்தின் மாவட்டமாகும். இதில் சிறுபான்மை சமூகத்தின் விகிதாசாரம் மிக குறைவானதே. இவ்வாறான நிலையில்,  அரசாங்கத்துக்குள்  சிறுபான்மை மக்களின் பிரதிநிதியாக நான் இருக்க வேண்டும் என்ற விடயம் எனது மனதில் ஆழமாக பதிந்தது. இவை அனைத்தை யும் கருத்திற் கொண்டு, நான் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன். எனவே,  இந்த முடிவில் என்ன தவறு இருக்கின்றது. எனது அரசியல் எதிரிகளே, காழ்ப்புணர்ச்சிகளோடு என்னை விமர்சித்து வருகின்றனர். இன்று இவ்வாறு விமர்சிப்பவர்கள் எதிர்காலத்தில் தங்களின் தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்கு போட்டி போட்டுக்கொண்டு வந்து என் முன்னால் நிற்பர். அவ்வாறானவர்களுக்கும் எனது சேவை நிச்சயமாக தொடரும்.  அதேவேளை,  நான் ஒரு சாணக்கியமான முடிவை மேற்கொண்டு இருக்கின்றேனென்று பாராட்டுகளும்,  வாழ்த்துகளும் குவிந்த வண்ணமே உள்ளன. இதனை எனக்கு ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும். கேள்வி:-   அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில், மலையக மக்கள் முன்னணி, மலையகத் தொழிலாளர் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய அமைப்புகளில் எவருக்காயினும் அறிவித்தீர்களா? பதில் :- நான் மலையக மக்கள் முன்னணியைச் சார்ந்தவன். எமது முன்னணியின் மத்தியக் குழுவிலோ அல்லது அரசியல் உயர்பீடத்திலோ 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை எச்சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ளவில்லை. எனவே, எனது மனச்சாட்சியின்படி எமது மக்கள் நலன்கருதி நான் வாக்களித்தேன். எவரிடமும் ஆலோசனை கேட்கவேண்டிய  அவசியமும் ஏற்பட்டிருக்கவில்லை.   கேள்வி:- பேரம் பேசலுக்குப் பின்னால் பல கோடிகள் புரளுவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் உங்களது கருத்து என்ன?  பதில் :-  பேரம் பேசலுக்குப் பின்னால் பல கோடிகள் புரளுவதாகக்  கூறப்படுவது உண்மைதான். ஏனெனில், அரச உயர்மட்டத்தாராரோடு நான் பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது  பதுளை மாவட்டத்துக்கு மாத்திரமன்றி, நுவரெலிய மாவட்டம் உள்ளிட்ட எமது சமூகம் வாழும் அனைத்துப் பிரதேசங்களின் அபிவிருத்தி வேலைகளுக்கும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் கோடிக்கணக்கான நிதியொதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு பேரம் பேசினேன். நான் பணத்துக்கு அடிமையானவன் கிடையாது. கடந்த காலங்களில்  பெருமளவான அரச நியமனங்களை எமது இளைஞர், யுவதிகளுக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றே ன்.ஏனையவர்களைப் போல, அவற்றை நான் விலைக்கு விற்கவில்லை. கோடிக்கணக்கான நிதியொதுக்கீட்டின் ஊடாக, அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டேன்.  கேள்வி:-  தாங்கள் அரசுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் அமைச்சுப் பதவியாவது கிடைக்குமென்று எதிர்ப்பார்க்கின்றீர்களா? பதில் :-  நான் ஆளுந்தரப்போடு பேரம் பேசும்போது அமைச்சுப் பதவிகளையோ அல்லது வேறு சலுகைகளையோ எதிர்பார்க்கவில்லை. ஆனால்,  எமது மக்கள் நலன் சார்பான விடயங்களுக்கு, எனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு முன்னிலைப்படுத்தி வலியுறுத்தினேன். அதேவேளை, அமைச்சு பதவி ஒன்று கிடைக்குமாயின், அதனூடாக மக்களுக்கு அதிக சேவைகளை மேற்கொள்ள முடியும். எனவே அமைச்சுப் பதவி கிடைத்தால் அதை எனக்கு தேவையில்லையென்று நான் ஏன் சொல்ல வேண்டும். கேள்வி:- தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து நீக்கப்பட்டதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உங்களது கருத்து என்ன?    பதில் :-   இதைப்பற்றி நான் இம்மியும் அலட்டிக்கொள்ளவில்லை. இவ்வாறான முடிவுகள் மேற்கொள்ளப்படுமென்று தெரிந்தேதான்  20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன். கேள்வி:-  முன்னாள் அமைச்சர் திகாம்பரம், நீங்கள் அரசுக்கு ஆதரவளித்ததைக் கொச்சைப்படுத்தி காட்டிக்கொடுத்தமை பற்றி விமர்சித்துள்ளாரே, அது குறித்து  என்ன கூற விரும்புகின்றீர்கள்? பதில் :-  நம்பிக்கைத் துரோகம், முதுகில் குத்துவது போன்ற விடயங்களைப் பற்றிப் பேசுவதற்கு திகாம்பரத்துக்கு எந்த அருகதையும் கிடையாது. மத்திய மாகாண சபையினூடாக ஓர் அரசியல் முகவரியை ஏற்படுத்திக்கொடுத்த அமரர் பெ. சந்திரசேகரனின் முதுகில் குத்தியவர்தான் திகாம்பரம். முதலில் அவரது முதுகில் குத்திய திகாம்பரம், அதன் பின்பு மஹிந்தவின் முதுகிலும் பின்பு ரணிலின் முதுகிலும் குத்தியதோடு தற்போது  ஆளுந்தரப்போடு இணைவதற்கு முயற்சித்து வருகிறார். தற்போது ஆளுந்தரப்போடு இணைவதற்கு இவரால் மேற்கொள்ளப்பட்ட பேரம் பேசலில் ஒரு பிசகல் ஏற்பட்டது. இவர் எதிர்பார்த்தது நடந்திருந்தால் இவரால் முதுகில் குத்தியவர்களின் பட்டியிலில் சஜித் பிரேமதாஸவும் உள்வாங்கப்பட்டிருப்பார்.  டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அனைவரும் ஆளுந்தரப்புடன் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.  இதற்கு நான் மட்டும் விதிவிலக்க. மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு அடுத்ததாக, மலையக மக்கள் முன்னணியே இரண்டாம் சக்தியாகவிருந்தது. ஆனால், கூட்டணி கூட்டணி என்று கூறிக்கொண்டு மிகவும் கபடத்தனமாக புற்றுநோயைப் போல் எமது பலத்தை சிறிது சிறிதாக குறைத்த பெருமை அவரையே சாரும். மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களையும்  அபிமானிகளையும்   எமது தொழிற்சங்கத்தின் அங்கத்தவர்களையும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தனது அமைப்போடு இணைத்துகொண்ட செயற்பாட்டை மேற்கொண்டவர் அவர். கூட்டணியோடு இணையாமல் இருந்திருந்தால், மலையக மக்கள் முன்னணி தனது பலத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கும். இவ்விடயம் இன்றும்கூட மலையக மக்கள் முன்னணியினரால் மிகுந்த ஆதங்கத்தோடும்  விசனத்தோடும் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஒருவருக்கு எதிராக மற்றவரை மூட்டிவிடும் குள்ளநரித்தனமான செயற்பாடுகளை, கடந்த காலத்தில் நான் பார்த்தேன். மலையக மக்கள் முன்னணி இன்று பகடைக்காயாக மாறியிருக்கியிருக்கின்றது. இதிலிருந்து, இக்காலம் தாழ்த்திய நிலையிலாவது நாம் விடுபட வேண்டும் என்பதே, எனது நிலைப்பாடாகும்.  ஒவ்வொரு வேட்பாளரையும் தத்தமது செயற்பாட்டின் ஊடாகவே மக்கள் அங்கிகரிக்கின்றனர். இதற்கு கண்டியில் வேலுகுமார் எம்.பியின் வெற்றியும் இரத்தினபுரியில் வெற்றி பெறாவிட்டாலும் 37,000 வாக்குகளைப் பெற்ற சந்திரகுமாரும் சிறந்த முன்னுதாரணங்களாவர். கேள்வி:- கட்சியின் தீர்மானத்தையும் மீறி அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்தமைக்கு எதிராக, மலையக மக்கள் முன்னணி உங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து உங்களது கருத்து என்ன? பதில் :-  முறையாக இயங்கும் ஒவ்வொரு ஸ்தாபனமும் இவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது முறையாகும். அந்த வகையில், சிறந்த நிர்வாகக் கட்டமைப்பைக்கொண்ட மலையக மக்கள் முன்னணி, இவ்வாறான முடிவை மேற்கொண்டதை நான் பிழையாகக் கருதவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில், எமது தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணனின் மகனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் போது அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப் பட்டார்.  அதன் பின்பு அவர் அளித்த விளக்கத்தைக் கட்சி ஏற்றுக் கொண்டது. அவ்வாறான முடிவை எனது விளக்கத்தின் பின்பும் எமது அமைப்பும் எடுக்கும் என்று நான் கருதுகின்றேன். கேள்வி:- மலையக மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்ட அனுஷா சந்திரசேகரனோடு இணைந்து புதிய அமைப்பொன்றை  உருவாக்கும் யோசனைகள்  உண்டா?   பதில் :- நிச்சயமாக இல்லை. இக்கூற்றில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது. ஆனால், அவ்வாறான ஒரு முடிவு மேற்கொள்ள நான் நிர்ப்பந்திக்கப்பட்டால், அப்போது இதனை பற்றியும் யோசிக்கலாம். கேள்வி:- மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்படல் வேண்டுமென்ற ஜனாதிபதிக்கு அனுப்பபட்டுள்ள மனுவொன்றில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டது பெரும் தவறு என மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளதே இதனைப் பற்றி கூறுவீர்களா? பதில் :- 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்தவன் என்ற வகையில், ஆளும்தரப்பு உறுப்பினராக நான் முத்திரை குத்தப்பட்டுள்ளேன். அவ்வகையில், விரும்பியோ விரும்பாமலோ இதில் ஒப்பமிட வேண்டும் என நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் கையொப்பம் இட்டனர் என்பதை நீங்கள் அவர்களிடமே கேட்க வேண்டும். எமது தமிழ் இளைஞர்கள் பல தசாப்தங்களாக பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். கொள்கை, வீரம், தன்மானம் போன்ற உணர்ச்சிமிக்க வீர வசனங்களை பேசுபவர்கள் எமது  இளைஞர்களின் விடுதலைக்காக துமிந்த சில்வாவின் விடயத்தை ஒரு பேரம் பேசும் துரும்பாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.        http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முதுகில்-குத்துவதைப்-பற்றிப்-பேச-திகாவுக்கு-அருகதையில்லை/91-257728  
  • உயிரீந்தோர் நினைவோடு இலக்கிற்காய் ஒன்றிணைவோம்- அ. தனசீலன்    135 Views முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 11 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஈழத்தமிழினம் இன்னமும் அதன் தாக்கத்திலிருந்து மீளுவதாக இல்லை. விடுதலையின் வாசலில் வந்து நிற்பதாக நம்பிய எங்களது மக்களுக்கு 2009இல் முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்தேறிய சம்பவங்கள் மனங்களை விட்டு அகலாத ரணங்களாக இன்னமும் இருந்து கொண்டே இருக்கின்றது. அடுத்த ஆண்டிற்கான ஒரு வருடப் பயண வழிகாட்டலை, நெறிப்படுத்தலை ஒவ்வொரு ஆண்டு மாவீரர்நாளின் போதும் தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்து பெற்று வந்த எங்களது மக்கள் இன்னமும் சரியான தலைமைத்துவ வழிகாட்டலுக்காக காத்திருக்கின்றார்கள். இந்தக் காத்திருப்பு நியாயமானதே. இன்னொரு வகையில் நோக்கின் முள்ளிவாய்க்காலின் பின்னர் இதுவரை அந்த நம்பிக்கையை யாரும் கொடுக்கவில்லை என்பதே யதார்த்தமான உண்மை. தலைமைத்துவ ஏற்பு என்பது திணிப்புக்குரியது அல்ல. அல்லது பேச்சின் பால் ஏற்படுவதும் அல்ல. அது தீர்க்கமான தொடர் செயற்பாடுகளால் ஏற்படுத்தப்படுவது. அந்தச் செயற்பாடுகளால் மனங்கள் வெல்லப்படுவது. இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான இனவழிப்பை மேற்கொண்டவர்கள் தங்களுக்குள் இருக்கும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து எங்கள் விடயத்தில் ஒருமித்த நிலைப்பாடுகளுடனேயே உள்ளார்கள். ஆனால் அந்தக் கொடிய இனவழிப்புக்கு உள்ளானவர்கள், எங்களுக்குள் கலந்து பேசி இனத்திற்காக ஒருமித்த நிலைப்பாடுகளுடன் நிற்க வேண்டியவர்கள், ஆயிரம் காரணங்களோடு கூறுபட்டுக் கிடக்கின்றோம். தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசங்களெங்கும் இதே நிலமைகளே தொடர்கின்றன. எமது மக்களின் உரிமைகள் வெல்லப்பட வேண்டுமென்பது மட்டுமே எங்களது இலக்காக இருக்க வேண்டும். இந்த ஒற்றைக் காரணத்துக்காகவே ஆயிரமாயிரம் மாவீரர்களும் பல்லாயிரக்கணக்கான எங்களது அன்பு மக்களும் உயிரீந்து போனார்கள். எங்களோடு நெஞ்சு நிமிர்த்திப் போராடிய தோழர்களதும் தோழிகளதும் குடும்பங்கள் நிர்க்கதியாய் தூக்கி நிமிர்த்த உரிய ஆதரவின்றி துவண்டு கிடக்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் வரை மரியாதையோடும் அக்கறையோடும் கவனிக்கப்பட்டு வந்த முள்ளந்தண்டுக்கு கீழ் இயங்க முடியாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் மனமுடைந்து கிடக்கின்றார்கள். எமது விடுதலை அமைப்பால் கவனிக்கப்பட்டு வந்த அனைத்துத் தேவைக்குரியவர்களும் இன்று உரிய கவனிப்பற்று இருக்கின்றார்கள். ஆயுதப் போராட்டத்துக்கு பின்னான தனது பணியென்பது இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது தான் எனத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கூறியிருந்தார். மூச்சுக்கு முந்நூறு முறை அவரது பெயரை உச்சரிக்கும் நாம் இதனை எந்தளவுக்கு நெஞ்சிலேற்றிச் செயலாற்றி இருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சமாதானம் என்று சொல்லப்பட்ட காலப்பகுதியில் நான் வன்னி சென்ற போது, எமது விடுதலை அமைப்பின் பணியகம் ஒன்றில், எமது மக்களின் நாளாந்த தேவைகளைக் கண்டறிந்து அதனை திட்டமிட்டு உரிய முறையில் தீர்த்து வைப்பதே அரசியலென்ற கருத்துப்பட தமிழீழத் தேசியத் தலைவரின் கூற்றொன்று என் சிந்தையை நிறைத்தது. அப்போது தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஏன் அரசியல் பிரிவின் கீழ் செயற்படுகின்றதென்ற தெளிவையும் நான் பெற்றுக் கொண்டேன். இந்த நோக்கிலிருந்து அண்மையில் வெளிப்பட்ட தாயக தேர்தல் முடிவுகளையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எங்களது மக்களை திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் தூக்கி நிறுத்த ஒட்டுமொத்தப் பார்வையில் நாம் தவறி விட்டோம். எப்போதுமே பரந்துபட்ட மக்களின் ஆதரவும் பங்கெடுப்புமின்றி போராட்டங்கள் வெற்றி பெறுவதில்லை. புலனாய்வாளர்களின் கழுகுப் பார்வைக்குள் எமது தாயக தேசம் சிக்குண்டு சுயமாகவும் சுதந்திரமாகவும் எதனையுமே செய்ய முடியாத இந்தக் காலகட்டத்தில், சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்கக் கூடிய தளமாக புலம்பெயர் நிலங்கள் மட்டுமே காணப்படுகின்றன. இந்தப் புலம்பெயர் நிலங்களில் எங்கள் தாயகமும் தாயகத்து மாந்தர்களும் தந்த வாழ்க்கையையே பெரும்பாலான நாம் வாழ்ந்து வருகின்றோம். இப்போதிருக்கின்ற சூழமைவில் புலம்பெயர் நிலங்களில் வாழ்கின்ற நாங்கள் தான் இலக்கு நோக்கிய எங்களது இலட்சியப் பயணத்தை காத்திரமாக முன்னகர்த்த முடியும். அதற்கு புரிந்துணர்வு, பரஸ்பர நம்பிக்கை, கலந்தாய்வு, கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயற்பாடு, எங்களைப் பின்வைத்து இலக்கை முன்வைக்கின்ற மனப்பான்மை மிகவும் இன்றியமையாதது. இதற்கெல்லாம் அடிப்படையாக மாறிமாறிச் சேறடிக்கும் அணுகுமுறையை நாம் அடியோடு களைதல் வேண்டும். “நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள்” என்ற தமிழீழத் தேசியத் தலைவரது சிந்தனையை உச்சரிப்பதோடு மட்டும் நின்று விடாது, அதனை உளமார ஏற்று செயலாற்ற வேண்டும். களத்தில் நின்று களப்பணியாற்றியவர்களுக்கும் புலம்பெயர் தேசங்களில் தாயகப்பணி ஆற்றியவர்களுக்கும் வெவ்வேறான ஆற்றல்களும், ஆழுமைகளும், அனுபவங்களும் உண்டு. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான கவனங்களோடு நாம் அனைவரும், தங்களது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களையும், உயிரீந்த மக்களையும் நெஞ்சிருத்தி எமக்கிடையில் இருக்கின்ற அனைத்து வேறுபாடுகளையும் கடந்து இலக்கிற்கான பயணத்தில் நாம் ஓன்றிணைய வேண்டும். எதிரி வேகமாகவும், விவேகமாகவும் எமது தாய்நிலத்தை அபகரித்து எமது பண்பாடுகளை, தொல்லியல் சின்னங்களை அழித்து எமது கல்வி, பொருளாதாரம், வாழ்வியல் அனைத்தையும் நிர்மூலமாக்கி வருகிறான். இதனை முடிந்தவரை தடுத்து நிறுத்தி இலக்கு நோக்கிய எங்கள் பயணத்தை வேகப்படுத்த வேண்டுமாயின் நாம் செயற்பாட்டில் ஒன்றிணைய வேண்டும். நாம் ஒரு தொன்மையான தனித்த தேசிய இனமென்பதையும், எமக்கான தேசம் உண்டு என்பதையும் நாம் உளமார நம்ப வேண்டும். அப்போது தான் தன்னாட்சிக்கான எங்களது பயணத்தை நாம் நம்பிக்கையோடு தொடர முடியும். மக்களுக்கான உண்மை அரசியலை தங்களது சுயநலன்களைக் கடந்து எங்களது அரசியல் செய்வோர் முன்னெடுக்க வேண்டும். ஈழத் தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்க உலகத் தமிழர்களின் பேராதரவை நாம் பெற்றாக வேண்டும். புலம்பெயர் நிலங்களிலுள்ள மிகப்பலம் பொருந்திய எங்களது இளையவர்களை அவர்களுக்குரிய வகையில் நாம் உள்வாங்கி, இலக்கை நோக்கிய இலட்சியப் பயணத்தில் அவர்களையும் பங்குபெறச் செய்ய வேண்டும். இவற்றை எல்லாம் காலந்தாழ்த்தாது நாம் முன்னெடுக்க வேண்டுமானால், எங்களுக்கிடையிலான பிணக்குகளில் கிடைத்தற்கரிய நேரங்களை செலவிடுவதை விடுத்து பயனுள்ள வகையில் தேசப்பணியாற்ற முன் வருவோம். எமக்கான பலங்களை நாம் இனங்கண்டு ஒன்றிணைத்து அறிவை ஆயுதமாகக் கொண்டு எமது இலட்சியப் பயணத்தை உறுதியோடு நாம் தொடர வேண்டும்.   https://www.ilakku.org/உயிரீந்தோர்-நினைவோடு-இலக/
  • உன்னை நீயுணர் உயர்வினைக் காணுவாய்     முள்ளி வாய்க்காலெம் முடிவல்ல அறிந்திடு பள்ளிகொள்ள இது படியல்ல புரிந்திடு எள்ளி நகைப்போரை புறந்தள்ளி நடந்திடு துள்ளி எழுந்துமே தடைகளைக் கடந்திடு   வெண்ணை திரண்டுமே தாழியில் வரும்கணம் கண்ணை மூடியே கரமதை விடுவதோ? மண்ணை காத்திட மடிந்தவர் சந்ததி திண்ணை குந்தியே தினங்களைப் போக்குமோ?   விழுந்து எழுந்திடா மழலையும் உள்ளதோ? உயர்வு தாழ்விலா சாலையும் செல்லுமோ? அலைகள் ஓய்ந்ததோர் ஆழியும் உள்ளதோ? விலைகள் இன்றியே விடுதலை வெல்லுமோ?   எந்தக் கையது உடைந்திடும் போதிலும் நம்பிக் கையது வாழ்வினைத் தாங்கிடும் தும்பிக் கை-பலம் பேறுறு யானையும் நம்பிக்கை கெடில் அடிமையே ஆகிடும்   பொன்னை புடமிடின் மின்னிடும் மேலுமாய் மூங்கில் சுடப்படின் இசைத்திடும் கானமாய் மண்ணுள் புதைந்தபின் முளைவிடும் வித்தென உன்னை நீயுணர் உயர்வினைக் காணுவாய்   இலக்கு மாறிடா தியங்கிட வேண்டுமே கலக்கம் இன்றியே நடையிடு நீண்டுமே பலத்தை வளர்த்துமே பறந்திடு மீண்டுமே நிலத்தை வாழவை நீயதை ஆண்டுமே! -மது நோமன்   https://www.ilakku.org/உன்னை-நீயுணர்-உயர்வினைக்/
  • லெப். கேணல் ஞானி அக்டோபர் 31, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து வெல்வோமெனச் சென்று வென்றவள்: கப்டன் அன்பரசி படையணி துணைத் தளபதி லெப். கேணல் ஞானி சகல ஆயத்தங்களோடும் தயாராவிட்ட ஒரு போர்ப்பயணத்திற்கு இறுதிக்கணங்கள் அவை, கூட்டங்கூட்டமாக கூடிநின்று ஆடியும், பாடியும், பேசிக்களித்துக் கொண்டும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள் போராளிகள். ஒரு திசையிலிருந்து பல குரல்கள் ராகத்தோடு எழுகின்றன. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றே நீ கூறு வேங்கைகள் ஆனவர் நாங்கள் எந்த வேளையும் சாகலாம் போங்கள்” என்று ஒலித்த அந்தக் குரல்களையும் மீறி, “வேங்கைகள் ஆனவர் நாங்கள் எந்த வேளையும் வெல்லுவோம் போங்கள்” என ஓங்கி ஒலித்தது ஒரு குரல், அந்த இனிமையானதும் உறுதியானதுமான, நம்பிக்கையோடு எல்லோரையும் மீண்டும் சேர்ந்து பாடவைத்ததுமான குரலுக்குரியவள் தான் லெப்.கேணல் ஞானி. தென்தமிழீழத்தில் சிறீலங்கா அரச படைகளினதும் காட்டுமிராண்டித்தனமான அட்டூழியங்களும், கோரத்தாண்டவங்களும் தலைவிரித்தாடிய காலப்பகுதி அது. சுற்றிவளைப்புக்களும், இளைஞர், யுவதிகள் கைதாவதும், காணாமல் போவதும், கண்டகண்ட இடங்களில் எல்லாம் சுட்டு வீசப்படுவதும், வீதிகளில் இரத்த ஆறு பாய்வதும் வழமையான செயற்பாடுகளில் ஒன்றாகிப்போனது. இவைகளுடன் அயற் கிராமமான கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் சேர்ந்து அன்றைய ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த சூரியாவும் (பேரின்பநாயகம் சூரியகுமாரி) இன்றைய எமது லெப். கேணல் ஞானியுமான இவளுக்கு விடுதலைப் போராட்டத்திற்கான அத்திவாரக் கற்களாக அமைந்தது. தொண்ணூறின் (1990) இறுதிப் பகுதியில் மட்டு – 02 பயிற்சிப் பாசறையுள் நுழைந்து, பல சிரமங்களுக்கு மத்தியில் கஸ்ரப்பட்டு சூழ்நிலைக்கேற்ப தன்னை புடம்போட்டுக்கொண்டு பயிற்சியெடுத்தவளைப்பற்றி இன்றும் அவளுடன் பயிற்சியெடுத்த போராளிகள் கதை கதையாய் கூறுகின்றனர். அவர்களுள் ஒருத்தி ஞானியுடனான தன் பயிற்சிக்கால நினைவுகளை மீட்டுப்பார்க்கின்றாள். ‘அங்க கொட்டில் அடிக்கிறதில இருந்து கிணறு வெட்டுறதுவரை நாங்கள் தான், ஞானி நல்லா மாஞ்சு வேலை செய்யும், என்ன வேலை செய்தாலும் நல்லாத்தான் இருக்கும், எங்கட பயிற்சி நேரம், எங்கடமுகாம் இருந்த பகுதிகள் எல்லாம் இராணுவம் சுற்றி வளைச்சு, காடு காடா ஓடித்திரிஞ்சு தான் பயிற்சியெடுத்தம், ஒரு முறை எங்கட பழைய இடத்தில் இருந்து இராணுவம் பின்வாங்கிப் போய்விட்டது எண்டாப்போல, நாங்கள் திரும்பி எங்கட இடத்திற்கு போவம் எண்டு போனம். ஒருத்தருக்கும் இருபது நாளா சாப்பாடே இல்லை. காட்டில் உள்ள மிருகங்களை அடிச்சு, உரிச்சு உப்புப்போட்டு அவிச்சுத்தான் சாப்பிட்டது. எத்தனை நாளைக்குத்தான் சாப்பிடுறது. அந்தப்பகுதியிலே மிருகங்களும் இல்லாமப்போச்சு, பின்னே இருபது நாளா பட்டினிதான். எல்லோருக்குமே சரியான களை. போய் ஒரு இடத்தில் எல்லோரும் படுத்திட்டம். இரவோட இரவா இராணுவம் எங்களைச் சுற்றிவளைச்சிட்டுது. எங்களுக்குத் தெரியாது. விடியவும் தான் தெரிஞ்சு அந்த இடத்தில நல்ல சண்டை. அப்ப நாங்கள் புது ஆக்கள் தானே. காயக்காரரையும் தூக்கிக்கொண்டு திரும்பி நின்ற இடத்திற்கு ஓடினோம். காயக்காரரை கட்டுவதற்கோ, தூக்கிப் போடுவதற்கோ ஒரு வசதியுமே இல்லை. ஞானிதான் உடனேயும் கிடந்த உடுப்புக்களைக் கிழித்து காயத்திற்கு கட்டுகள் போட்டு, தன்ர கையாலேயே காட்டுத்தடி முறித்து சாரத்தை அதனுள் புகுத்தி காயக்காரரை தூக்கிச் செல்வதற்கு வசதியாக வழி செய்து அனுப்பினாள். வேறொரு சமயமும் இப்படித்தான், எமது முகாமிற்கு உணவுப்பொருட்கள் வரவேண்டுமானால் ஒரு அருவி கடந்து தான் வரவேண்டும். உணவுக்காகவே அந்த அருவியிடம் நாம் பல போராளிகளைப் பறிகொடுத்துள்ளோம். அப்படியான பெரிய அருவி அது. ஞானியுடன் நாங்கள் ஜந்து பேர் மரக்கறி எடுக்கச்சென்றோம். பத்துமைல் நடந்து அருவியைக் கடக்கவேண்டும். ஒருநாள் வேலை, அன்று முழுதும் எங்களுக்கு காட்டுக்காய்கள் தான் சாப்பாடு. கட்டி நீந்துவதற்கு கயிறு இல்லை. எம்மைக் கரையில் விட்டுவிட்டு ஞானி தனிய நீந்தி அக்கரைக்கு சென்றாள். மறுகரையிலுள்ள போராளிகளுக்கெல்லாம் பெரிய அதிசயம் எப்படி இவர் கயிறில்லாமல் நீந்தி வந்தார் என்று, ‘என்னென்று இதால வந்தனீங்கள்’ என்று கேட்டவர்களுக்கு ‘நான் ரெயினில் வந்தனான்’ சிரிக்காமலேயே பதில் செல்லிவிட்டு, அங்கே கயிறு வாங்கி மரக்கறியை கட்டிவிட்டு தானும் நீந்திவந்து எங்களுடன் சேர்ந்து கொண்டாள். அப்படி சொல்லிக் கொண்டு போனால் நிறையவே சொல்லலாம். அங்கே நடந்த ஒவ்வொரு செயற்பாட்டின் முடிவிலும் ஞானிக்கும் பங்கிருக்கும். என்று கூறினாள் அந்தப் போராளி. பயிற்சிப் பாசறையில் இவளின் இந்தச் செயற்பாடுகள் தான் பயிற்சிகளின் முடிவில் ஒரு பயிற்சி ஆசிரியராக இவளை இனம்காட்டியதுபோலும், பயிற்சி முடிந்ததும் பயிற்சி ஆசிரியராகச் செயல்பட்ட இவள், தான் சண்டைக்குப் போகவேண்டும் என்று பொறுப்பாளருடன் சண்டையிட்டு வெற்றியும் பெற்றாள். இவளின் முதற்சண்டை அருந்தலாவை சிங்களப் பகுதியில் நடந்த சண்டை. ரோந்துவரும் இராணுவத்தை தாக்கவேண்டும். எல்லோரும் நிலையெடுத்திருந்தனர். நேரம் காலை 10.45 மணி, பதினொன்று, பன்னிரெண்டு, பன்னிரெண்டரை என நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர, இராணுவம் வருவதாக காணவில்லை. என்னடா இவங்களை காணவில்லை என்று கூறிய ஞானி தனது நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு செல்லவென பிறணைத்தூக்கித் தோளில் அடித்துக் கொண்டு நடந்தவேளை திடீரென அதே இடத்தில் நிலைஎடுத்தாள். முன்னால் பார்த்தாள் இராணுவம் வந்து கொண்டிருந்தது. ஞானியின் முதல்சண்டையை ஞானியே தொடக்கிவைத்தாள். நல்ல உக்கிரச் சண்டை. இவளின் முன்னாலேயே நான்கு இராணுவத்தினரின் உடல்கள் வீழ்ந்து கிடந்தன. முதல் சண்டையே வெற்றிகரமாக முடிந்ததையிட்டு ஞானிக்கு மனதில் அடங்காத பெருமை. கொஞ்சம்கூட ஞானி அந்த இடத்தில் அலட்சியமாக இருந்திருந்தாலும் சண்டை தோல்வியில் முடிந்திருக்கும். தானாகவே முடிவெடுத்து செயல்பட்டதால்தான் எமக்கு அது வெற்றியைப் பெற்றுத்தந்தது. இதில் ஞானியின் பிறணுக்கு சின்னக்காயம். இவள் மயிரிழையில்தான் தப்பியிருந்தாள். அதன் பின்னர் இவளுக்கு சண்டையோகம்தான். எங்கு போனாலும் ஒரே பதுங்கித்தாக்குதல்கள். அடுத்தது பள்ளித்திடல் மினிமுகாம் மீதான தாக்குதல் இதுவும் ஒரு மக்கள் குடியிருப்போடு சேர்ந்த மினிமுகாம். சண்டை ஆரம்பமாகிவிட்டது ஞானியின் மறுபக்கத்துக்கு பிறண் தேவையாக இருந்தது. அழைப்புக் கிடைத்ததும் விரைந்தோடிய ஞானியின் முன்னால் வீரிட்டு அழுதபடியிருந்த சிறு குழந்தை ஒன்று. வாரியணைத்து குழந்தையை ஒரு கையிலும், பிறணை மறுகையிலும் பிடித்துக்கொண்டு வந்து அந்தக் குழந்தையை காவும் குழு மூலம் பின்னால் அனுப்பிவைத்து பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைக்கக் கூறிவிட்டுத்தான் தொடர்ந்து சண்டையிட்டாள். இச்சண்டையிலும் இராணுவத்தின் பல உடல்கள் கைப்பற்றப்பட்டு, கொண்டுவரமுடியாத காரணத்தால் தகனம் செய்துவிட்டு வந்தனர். ஞானி செல்லும் சண்டைகளில் எல்லாம் ஒரு அதிஷ்ரம் தான், எதிரியின் உடல்கள் எடுக்காமல் விடமாட்டார்கள். அடுத்ததாக சிங்கபுரவில் ரோந்து அணிமீதான தாக்குதல். வெலிகந்தையில் கொழும்பு வீதியில் நடந்த பதுங்கித்தாக்குதல், கள்ளிச்சை – வடமுனையில் நடந்த தாக்குதல் எனக்கூறிக்கொண்டே போகலாம். கள்ளிச்சை வடமுனைத் தாக்குதல், இது மட்டக்களப்பில் முதல் பெண்போராளி களத்தில் வீரச்சாவடைந்த தாக்குதல், ஞானியும், நிலாவும் பக்கத்து பக்கத்து நிலையில் நின்று சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். இந்த சண்டையணிக்குத் தலைமை தாங்கிச் சென்ற நிலா இச்சண்டையில் வீரச்சாவடைய, அவரின் வோக்கியை எடுத்து மற்றவர்களுக்கு நிலைமையை அறிவித்து தொடர்ந்தும் சண்டையிட்டாள். சண்டைமுடிந்து திரும்பும்போது அவளின் கையில் தனது பிறணும், தோளில் நிலாவின் உடலும் சுமந்துவந்தாள். தொடர்ச்சியாக சண்டைகளும், பதுங்கித் தாக்குதல்களும் என்று பயிற்சி எடுத்த காலம் முதல் தொண்ணூற்றி மூன்று (1993) வரையும் இருபது சண்டைகளுக்கு மேல் ஞானி சென்றுவந்திருந்தாள். இந்தக் காலப்பகுதியில் தான் தேசியத்தலைவர் அவர்களின் பணிப்பின் பேரில் தென்தமிழீழத்தில் இருந்து பல அணிகள் வடதமிழீழம் நோக்கி அழைக்கப்பட்டன. அதில் பெண்கள் படையணியும் அடங்கும். அதில் ஞானியும் தெரிவு செய்யப்பட்டாள். புறப்படும் வரை அவளின் கால் நிலத்தில் நிலையாக நிற்கவில்லை. நாங்கள் யாழ்ப்பாணம் போகப்போகிறோம். அண்ணையைப் பார்க்கப்போறம். அண்ணைக்கு முன்னாலும் நிறைய சண்டைகள் பிடிச்சுக் காட்டுவம் என்று துள்ளித்திரிந்தாள். பயணநாளும் ஆரம்பமானது. பெண்போரளிகள் வண்டி மூலமும், ஆண்போராளிகள் கால்நடையாகப் போவதும் எனத் திட்டம். ஆனால் இவள் விடவில்லை. ஏன் நாங்கள் மட்டும் வண்டியில் போகவேணும், எங்களுக்கு நடக்கத்தெரியாதோ, நாங்களும் நடப்போம் என அடம்பிடித்து, ஆண் போராளிகளுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினர். சேறுகளும், தண்ணீர்களும், அருவிகளும் தாண்டி ஏழுநாட்கள் தொடர்ந்து நடை. பதினாறு அருவிகள் நீந்திக்கடக்க வேண்டும். கடந்தனர், ஆனால் இவர்கள் கொண்டுவந்த உலர் உணவு எல்லாம் அருவியோடு போய்விட்டது. பசியோடு நடந்து திருமலையை அடைந்தனர். அங்கு உணவுப்பொருட்கள் சேகரித்து ஆற்றங்கரையோரத்தில் சமைத்துவிட்டு, குளித்துவிட்டு வந்து பார்த்தால் சமைத்துவைத்த இடத்தில் சாப்பாட்டுப் பாத்திரங்கள்கூட இல்லை எல்லாவற்றையும் ஆறு அள்ளிக்கொண்டு போய்விட்டது. எல்லோருக்கும் பெருத்த ஏமாற்றம். அங்கு நின்ற போராளிகளின் தயவால் சிறிது வயிறுகளை நிரப்பிக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்து பன்னிரண்டாம் நாள் வடதமிழீழத்தில் கால் பதித்தது ஞானியுடனான படையணிகள். அங்கிருந்து வந்த பெண்கள் அணி இங்கே செயல்ப்பட்டுக் கொண்டிருந்த பெண்கள் படையணியுடன் இணைக்கப்பட்டது. பரந்துபட்ட சிந்தனையும் தமிழீழம் எங்கள் நாடு, நாம் ஒரு தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட கிளைகள் எமது உழைப்பு, இந்த நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தேவை என்பவற்றை தெளிவாக உணர்ந்து கொண்ட ஞானியால் இங்கேயே நீண்டகாலங்களுக்கு நின்று செயற்பட முடிந்தது. தனது ஆளுமையாலும், அயராத கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும், மாலதி படையணியிலும் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டாள். இங்கு இவளது முதல்களம், ஒப்பரேசன் தவளை இதில் காலில் விழுப்புண்ணேந்தினாள். அதன்பின் புலிப்பாய்ச்சல், சூரியக்கதிர், ஓயாத அலைகள் – 01, என பல களங்களில் இவள் பதிவானாள். சூரியக்கதிர் – 01 நடவடிக்கை புன்னாலைக்கட்டுவன் பகுதியூடாக எதிரிப்படைகள் தமது வேகமான ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வந்துகொண்டிருந்தார்கள். எமது அணிகளை பின்னால் நகர்த்தி நிலைப்படுத்தினால் தான் எம் தரப்பு இழப்புக்களை கொஞ்சமேனும் குறைக்கலாம். நகர்துவதற்கான அவகாசமோ மிகமிகக் குறைவு. அந்தளவுக்கு எதிரிப்படைகளின் நகர்வு வேகமாக இருந்தது. அந்த இடத்தில் ஞானியும் அவளின் 50 கலிபரும்தான் எமக்குக் கைகொடுத்தது. நாம் பாதுகாப்பாக நிலை எடுக்கும் வரைக்கும் காப்புச்சூடு கொடுத்தது. குறுகிய நேரத்திற்கு எதிரிகளின் நகர்வைத் தடுத்து தாக்குதல் தொடுத்தாள். ஓயாதஅலைகள் – 01, சமருக்குச் சென்று வந்தவள் தென்தமிழீழம் சென்று தன் போராளித் தங்கையையும் அழைத்துக்கொண்டு விடுமுறையில் வீட்டுக்குச் சென்று திரும்பிய அந்த மூன்று மாதங்களிலும் கூட அங்கே இரண்டு பதுங்கித்தாக்குதல்களில் பங்குபற்றி அங்கேயே புதிதாக பயிற்சி முடித்த போராளிகளுடன் மீண்டும் வந்துசேர்ந்தாள். இவளது திறமைகளையும் செயற்பாடுகளையும் கண்ட பொறுப்பாளர்களும், தளபதிகளும் இவள் அழைத்துவந்த பிள்ளைகளையே இவளிடம் ஒப்படைத்து ஜெயசிக்குறுய் களத்திற்கு அனுப்பினர். பல வழிகளில் அன்பரசி படையணியின் வளர்ச்சிக்காக உழைத்து, ஜெயசிக்குறுய்க் களத்திலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து அணியொன்றுக்கு பொறுப்பாக செயற்பட்டு, ஓயாதஅலைகள் – 02 தாக்குதல் சம்பவம் வரை ஓயாதிருந்து ஓய்ந்து போன லெப். கேணல் ஞானிபற்றி அன்பரசி படையணியின் சிறப்புத் தளபதி அவர்கள் கூறுகையில்… “இவரைப் பற்றிக் கூறுவதானால் நான் கூறிக்கொண்டே போகலாம். இவரைக் கண்டாலே மற்றவர்களுக்கு தானாகவே ஒரு வீரம் வரும். அப்படியான ஒரு நிமிர்ந்த தோற்றமும், உறுதியும் கொண்டவர். தொண்ணூற்று ஆறாம் (1996) ஆண்டுதான் திரும்பி அன்பரசி படையணிக்கு வந்தவர். மட்டக்களப்பில் இருந்து இவர் புதிய போராளிகளைக் கூட்டிவரும் போது கடவான வீதி என்று ஒரு வீதி அது கடந்து தான் வரவேண்டும். வரும்போது இராணுவத்தினர் பதுங்கியிருந்து தாக்கத்தொடங்கிவிட்டனர். அப்போ அதில நல்ல சண்டை. அதில் திறமையாகச் செயல்பட்டு ஒரு போராளிகள் கூட விடுபடாமல், காயப்படாமல், வீரச்சாவடையாமல் கூட்டிவந்தார். இவர்கள் வரும்போது நிறையவே கஸ்ரங்கள், புதிய போராளிகள், தண்ணீர் இல்லை, சாப்பாடு இல்லை. ஏழுநாட்கள் தொடர்ந்து நடை, இடைஇடையில் பதுங்கித்தாக்குதல்களுக்கும் முகங்கொடுத்து பன்னிரண்டாம் நாள் வந்துசேர்ந்தனர். அவர் கூட்டிவந்த அந்த அணியையே அவரிடம் கொடுத்து, இந்த அணி உங்களுக்குரியது என்று கூறிய மறுவினாடியே நாங்கள் கூறாமலே அணிக்குரிய வேலைகளைத் தொடங்கிவிட்டார். அணியிலுள்ள பொறுப்பாளர்களுடன் கதைத்து, மேலதிக பயிற்சிகளுக்கு ஒழுங்குசெய்து, தானே நேரே நின்று சூட்டுப் பயிற்சி எல்லாம் கொடுத்து இரணைமடுப் பகுதியில் காவலரண் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் வந்த மூன்றாம்நாளே அவர்களுக்குச் சண்டை கிடைத்தது. நல்ல மழை எல்லா இடமுமே தண்ணீரும் சேறும், காப்பரண்களும் எதுவுமில்லை. அதில் நின்று சண்டையிட்டு, இரண்டு ஏ.கே.எல்.எம்.ஜி. எடுத்தனர். இதில் ஞானிக்கு காலில் காயம். அவர் அப்படியேதான் நின்று சண்டைபிடித்தவர். நான் நேரே போய்த்தான் அவரை மருத்துவமனைக்கு அனுப்பியது. அங்கே கூட சும்மா இருக்கமாட்டார். நான் போகும் போதெல்லாம் தன் போராளிகளைப் பற்றித்தான் கேட்பார். காயம் மாறும் முன்னே அவர் சண்டைக்கு வந்துவிட்டார். அவரிடம் எந்த அலட்சியப் போக்கையுமே காணமுடியாது. அதில் இருந்து மாங்குளம் மூன்றுமுறிப்பு பகுதிக்கு சென்ற அணி பல துன்பங்களுக்கு முகம் கொடுக்கவேண்டியிருந்தது. அதேபோன்றுதான் ஒலுமடுப் பகுதியிலும், இந்த கஸ்ரங்களின் மத்தியிலும் போராளிகளின் மனம் சோராது வழிநடத்திய பெருமை ஞானிக்குரியதே. அவரிடம் ஒருவேலையைக் கொடுத்தால் நான் திரும்பிப்போய்ப் பார்க்கவேண்டி அவசியமே இராது. அந்த வேலை சரியாகத்தான் செய்து முடிக்கப்பட்டிருக்கும். அதனால் அவரின் அணியென்றால் எல்லோருக்குமே விருப்பம், அப்படி மென்மையான, ஆளுமையான போராளி. ஒருநாள் நான் காவலரண்கள் பார்த்துக்கொண்டு வரும்போது, தோளில் கட்டையுடன் வந்தார். முன்னால் இரண்டு பிள்ளைகள் பின்னால் ஞானி, ஏனென்றால் கட்டை தூக்கிறதில கஸ்ரம் தனக்கும் தெரிய வேண்டுமாம். பொதுவாகக் கூறப்போனால் இவர் தாக்குதலுக்கு ஒரு திறமையான தளபதி. இவருடைய இந்தத் திறமைகள் தான் இவரை அன்பரசி படையணியின் மூன்றாவது தளபதியாக உயர்த்தியது. இவர் பொறுப்பெடுத்தது ஆறுமாதங்கள் தான் அந்த ஆறுமாதத்துக்குள்ளும் படையணிக்குள் பல பொறுப்பாளர்களை எமக்கு இனம்காட்டினார். இன்னும் இருந்திருந்தால் நிறையவே செய்திருப்பார். இவரின் இழப்பு எமது படையணிக்கே பெரிய இழப்பு. ஓயாதஅலைகள் – 02 சமரில் ஒரு பகுதி வெற்றிக்குக் காரணமானவர்களுள் ஞானியும் ஒருவர். படையணியின் துணைத்தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் அவரின் முதல்களம் இது. இந்தக்களத்திலேயே பல வெற்றிகளுக்குக் காரணமாயிருந்த ஞானியை நாம் இழந்துவிட்டோம்” எனக் குறிப்பிட்டார் அன்பரசி படையணியின் சிறப்புத்தளபதி அவர்கள். எமக்குப் பல புதிய போராளிகளையும், பொறுப்பாளர்களையும், தளபதிகளையும் புடம்போட்டு வளர்த்துத்தந்த பெருமை ஜெயசிக்குறுய் சமருக்கேயுரியது. எமது போராட்ட வளர்ச்சிக்கு பல வழிகளில் கை கொடுத்ததும், இந்தக் களம் தான். அந்த வகையில் ஞானியின் களமுனைச் செயல்பாடுகள் பற்றி மட்டு – அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி அவர்கள் கூறுகையில், “ஞானியைப் பொறுத்தவரையில் அவர் சரியான ஒரு வேலைக்காரி. கஸ்ரங்களுக்குத் தாக்குப்பிடிக்க கூடியவர். விடுமுறையால் வந்ததும் அவரை கொம்பனிப் பொறுப்பாளராகத்தான் நியமித்தோம். பின்னர் சண்டைகளில் அவரின் திறமைகளைப் பார்த்து அன்பரசி படையணிக்குத் துணைத் தளபதியாக நியமித்தோம். மாங்குளம் பகுதியில் இவர்கள் நின்ற பகுதி சரியான பிரச்சினைக்குரிய பகுதி. எந்தநேரமும் சினைப்பிங்தான். அப்படி ஒரு துன்பமான கட்டத்துக்குள் தான் இவர்கள் நின்றார்கள். இரவு – பகல் நித்திரையில்லை. ஒரே சண்டைதான். ஞானியும் பிள்ளைகளுடன் தானும் சேர்ந்து கஸ்ரப்படுவார். அதனால் தான் அன்பரசி படையணிக்குள் அவரால் வேகமாக வளர்ச்சி எடுக்கக்கூடியதாக இருந்தது. இவர்களுக்கு ஓயாதஅலைகள் – 02 சமருக்கு முக்கியமான வேலை கொடுக்கப்பட்டது. இரண்டு கொம்பனி நுழையவேண்டிய பாதை. அதில் ஒரு பாதையை இவர்கள் உடைத்து கொடுக்கவேண்டும். இவர்களுக்கு அது முக்கியமான வேலை. தற்செயலாக தவறுதலாக இருந்தால் இந்தச் சண்டையே பிழைத்திருக்கும். இந்தச் சண்டையில் நான்கு பாதை முக்கியமானது. நான்கும் உடைத்து நான்கு அணிகள் உள்நுழைய வேண்டும். இந்த நடவடிக்கையில் முதல் பாதை பிடித்தது ஞானி ஆக்கள்தான். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாதையை குறிப்பிட்ட நேரத்திலேயே பிடித்துவிட்டார்கள். இதில் அவரின் செயற்பாடு ஒரு வேகமான செயற்பாடாக இருந்தது. தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்து உள்ளே அனுப்ப வேண்டிய அணிகளை அனுப்பிவிட்டு, பக்கத்து பாதை உடைபடாததால் அந்தப் பகுதியால் செல்லும் அணிகளையும் எடுத்து உள்ளே அனுப்பிவிட்டு, தொடர்ந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது தான் வீரச்சாவடைந்தார். மற்றப்படி அவருக்கென கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்துவிட்டார். இது பாராட்டத்தக்க ஒரு விடயம். ஞானி உண்மையிலேயே தன்னம்பிக்கை மிகுந்த ஒரு போராளி. அவரின் தனிப்பட்ட குணாம்சங்கள் என்று கூறினால், போராளிகளுடன் நன்றாகச் சேர்ந்து போகக்கூடியவர். மகளிர் படையணியின் தனித்துவத்தையே விரும்புபவர். எதையும் நாங்கள் தனிச்சுச் செய்யவேணும், இன்னும் நிறைய சாதித்துக் காட்டவேணும் என்றெல்லாம் எண்ணமுடையவர். ஞானியும் ஜெயசிக்குறுய் சமர் முழுவதும் நின்ற ஒரு பொறுப்பாளர் அவர். இந்தச் சமர்; இவர்களுக்கு பெரிய ஒரு அனுபவம், அவர் இருந்திருந்தால் பெரிய ஒரு வளர்ச்சியை நோக்கிப் போயிருப்பார். நான் நேரடியாகக் கவனித்த சில விடயங்களில் தங்களது காவலரண்கள் எல்லாவற்றையும் அழகாகத்தான் வைத்திருப்பார். தலைவரின் படமெல்லாம் வைத்து ஒவ்வொரு இடமும் நன்றாகத்தான் இருக்கும். கட்டளைகளை நிறைவேற்றுவதில் கூட ஒரு வேகம் இருக்கும். ஓயாதஅலைகள் – 02 இல்கூட அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத் திறம்படச் செய்வதற்குக் காரணம் அவரின் அர்ப்பணிப்புத் தன்மைதான்.” என்று கூறினார் மட்டு – அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி அவர்கள். லெப். கேணல் ஞானி தனது நீண்டகள வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பதித்துக்கொண்டவள். போராட்ட வரலாற்றின் பல வெற்றிப்பாதைகளுக்கு வழித்துணையாக நின்றவள். அன்பரசி படையணியின் வளர்ச்சிக்கு படிக்கல்லாக அமைந்த ஞானியின் வீரமும், செயல்திறனும், வளர்ச்சியும் இன்றும் அவள் வளர்த்த போராளிகளில் தெரிகின்றது. தன்னை வளர்த்த தளபதிகளும்,தான் வளர்த்த போராளிகளும் மனமுருக, “வேங்கைகள் ஆனவர்கள் நாங்கள் எந்த வேளையும் வெல்வோம் போங்கள்” என்று பாடிச் சென்றவள். இந்த சமரில் வென்றோம். ஆனால் ஞானி வரவில்லை. அவள் லெப். கேணல் ஞானியாய்… அவள் இறுதியாகப் பாடிச்சென்ற அந்த இரண்டு பாடல் வரிகளும் எல்லோரின் காதுகளுக்குள்ளும் இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நன்றி: களத்தில் இதழ் (23.09.1999).   https://thesakkatru.com/commander-lieutenant-colonel-gnani/
  • மேஜர் கனீபா அக்டோபர் 31, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து சாதனைகளின் ஊற்றுக்கண் மேஜர் கனீபா சாதிக்கவேண்டும் என்பதன்றி வேறு சிந்தனைகள் அவளிடம் இருக்கவில்லை. ஓயாத அலைகள் 02இன் போது தனக்குரிய பகுதியை நிச்சயமாகப் பிடிப்பேன். சண்டையில் இரண்டு அதிகாரிகளைப் பிடித்து போனமுறை (1998.02.01இல்) உள்ளே வந்து வீரச்சாவடைந்தவர்களை என்ன செய்தீர்கள் என்று கேட்பேன் என்று தான் சண்டை தொடங்கும் வரை சொல்லிக் கொண்டிருந்தாள். சண்டையின் போதான அவளின் அணியின் நகர்வு இலகுவாக இருக்கவில்லை ஒரு கட்டடக் காடாக இருந்த பெருந்தளத்தை நெருங்குவதற்காய் ஆங்காங்கே சில மரங்கள் கொண்ட நீண்ட வயல் வெளியை எதிரியின் கண்காணிப்பு நிலைகள், அவதானிப்புக் கோபுரங்கள் என்பவை அறியாதவாறு மிக்க கவனமாகக் கடந்து வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளை சுருள்கம்பிவலைகளை கண்ணிவெடிகளை அகற்றி சூடுகளை வழங்கியவாறு மண் அணைமீதிருந்த வேலியைப் பிரித்து அதன் பின்னிருந்த முட்கம்பி வேலிகளையும் வெட்டி அதன் வழியாக உள்நுழைந்து வலமும் இடமும் மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்த காவலரண்களை அல்ல காவற்கோட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டுபோய் சண்டை மிகவும் உக்கிரமாகவே நடந்தது. கனீபாவால் கைப்பற்றப்பட்ட காவலரண்கள் கரடிப்போக்குச் சந்தியில் இருந்து உருத்திரபுரம் போகும் பிரதான சந்தியில் வீதியுடன் அமைந்திருந்ததால் நகரப் பகுதிக்குப் போகும் இராணுவப் பின்னடைவுகளைத் தவிர்க்கும் நோக்குடன் இழந்த காவலரண்களை மீளக்கைப்பற்றுவதில் படையினர் கடுமையாக முயன்றனர். கைப்பற்றிய பகுதியை தக்கவைக்க கனீபாவின் அணியும் உக்கிரமாகப் போராடியது. தமது தளத்தைப் பாதுகாப்பதற்காக ஏற்கனவே பலமான நிலைகளை அமைத்து ஆயுத ஆள்பலத்தை குவித்து வைத்திருந்த படையினருக்கும் குறிப்பிட்டளவு ஆயுத தளவாடங்களுடன் உட்புகுந்த கனீபா அணியினருக்குமிடையே நடந்த கடுமையான சண்டையில் கனீபாவின் அணி அதிக இழப்புக்களைச் சந்தித்தது. உதவிக்கெனப்போன சிறு அணியும் இழப்புக்களைச் சந்திக்க, படையினர் கடும் முயற்சியின் பின் தமது பழைய நிலைகளைப் பிடித்துக்கொள்ள, எஞ்சிய ஒரு சிலருடன் வீரச்சாவடைந்தவர்களின் உடல்கள் ஆயுதங்களுடனும் கனீபா எதிரியின் காவல்வேலிக்கு உள்ளே. கிளிநொச்சியை சூழ பரவலாக நடந்த சண்டையில் ஏனைய பகுதிகள் எம்மால் கைப்பற்றப்பட்டு துடைத்து அழிக்கப்பட்டுக்கொண்டிருக்க, ஒரு சிறு பொறிக்குள் கனீபா தனித்துப்போராடினாள். ஒருபகுதியை உடைத்துக்கொண்டு எஞ்சியவர்களுடன் தப்பி வருமாறு அறிவிக்கப்பட்டபோது வீரச்சாவடைந்தவர்களையும் அவர்களது ஆயுதங்களையும் விட்டு வெளியேற மறுத்துவிட்டாள். காயப்பட்ட போராளிகளை வெளியேற்றியபின்னர், தன்னுடன் எஞ்சியிருந்த ஒரு சிலரையும் வெளியேறுமாறு பணித்தாள். அவர்கள் கனீபாவைத் தனித்துவிட்டு வெளியேற மறுக்க அவர்களை நெருங்கியவாறு நான்கு புறமும் இராணுவம் குவியத்தொடங்க, நிலைமையைக் கூறி இலக்குகளைக் குறிப்பிட்டு தங்களைப் பொருட்படுத்தாது எறிகணைகளை ஏவுமாறு அறிவித்தாள். வீரம் நிறைந்த அந்தச் சண்டையில் கனீபாவை நாங்கள் இழந்தோம். மட்டக்களப்பிலே எமது அமைப்புக்கு ஆதரவான குடும்பமொன்றிலே பிறந்த கனீபா 1990ன் ஆரம்பத்திலே அங்கிருந்து காடுமேடேல்லாம் கடந்து, இராணுவச் சுற்றிவளைப்புகளிலிருந்து தப்பி கால்நடையாக வன்னிக்கு வந்து 07 வது பயிற்சி முகாமிலே தன் பயிற்சியை ஆரம்பித்தபோது அவள் சின்னவள். பயிற்சி முகாம்களிலும் வேறு சந்தர்ப்பங்களிலும் தனக்கு விருப்பமான ‘காகங்களே காகங்களே காட்டுக்கு போவீர்களா’ அவள் ஆடும் நடனம் எல்லோருக்குமே விருப்பமானது. யார் மீதும் கோபப்படாத அவள் மீது யாரும் கோபப்படுவதில்லை. சரியான பகிடிக்காரி ஒரு வால் முளைக்காத குறை என்றாள் அவளோடு நீண்டகாலம் ஒன்றாக நின்ற ஒருத்தி ஆனையிறவுப் பகுதியில் எதிரியின் பலவேகய 2 இற்கான எதிர் நடவடிக்கையின் போது எம்மவர்களால் எதிரியின் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது வீழ்ந்துகொண்டிருந்த விமானத்தை தன்னுடைய அணி வீழ்த்தி விட்டதாக களத்தின் வேறொரு மூலையில் நின்ற தன் தோழிகளுக்கு தொலைத்தொடர்பு சாதனம் மூலம் அறிவிக்க எல்லோரும் நம்பியேவிட்டார்கள். பிறகுதான் உண்மை தெரிந்து தாங்கள் ஏமாந்தது புரிந்து சிரித்தார்கள். எந்தச் சண்டையின் போதுமே அவள் தனது பகிடிக்குணத்தை கைவிட்டதில்லை. எட்டு வருடங்களின் முன் பலாலியைச் சூழவிருந்த காவலரண்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையானவற்றை மிகுந்த நம்பிக்கையோடு தலைவர் எமது படையணியிடம் தனித்துவமாகப் பொறுப்புக் கொடுத்திருந்த காலப்பகுதியில் தான், வழிமறித்துத் தாக்கும் எமது இப்போதய வளர்ச்சிநிலையின் அத்திவாரம் பலமாக அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் வழிமறிப்புச் சண்டை அனுபவம் சிறிதுமற்ற ஆனால் மனஉறுதியில் நம்பிக்கைவைத்த நிலையில் தான் எமது படையணி இன்றைய சூழ்நிலையை எதிர்கொண்டது. ஆரம்பத்தில் மிகநெருக்கமாக அமைந்திருந்த கட்டடங்களிற்கிடையேயும் வாழைத்தோட்டங்களிடையேயும் விழி பிதுங்க காவற்கடமையில் நின்றதும், படையினரும் இவர்களின் பக்கமாகவே அதிக தொல்லைகள் கொடுத்ததும், குறிப்பிட்ட காலத்தின்பின் நிலைமை வேறுவிதமாகி படையினர் இவர்களின் பக்கம் தலையைக் காட்டத் தயங்கியதுவுமாக இன்றுவரை தக்க வைத்துக்கொள்வதையும் கனீபா இடையிடையில் தன் பழைய தோழியருடன் இரைமீட்டுக் கொள்வாள். 1990, 1991 இலே பலாலியைச் சூழவிருந்த காவலரண் பகுதியிலே அவ்வப்போது நடந்த சண்டைகள், ஆகாய கடல்வெளிச்சமர், பலவேகய 1, 11, கட்டைக்காடு மினிமுகாம் தகர்ப்பு, தொண்டைமனாற்றில் ஒருந்து ஒட்டகப்புலம் வரையிலான நூற்றைம்பது காவலரண்கள் அழிப்பு என்பவற்றில் பங்கு கொண்ட, பின் இராணுவ அதிகாரியாகப் பயிற்சி அளிக்கப் பட்டு சண்டைகளுக்கான பயிற்சி ஆசிரியராகக் கடமையாற்றினாள். இவளின் நுணுக்கமான ரசனைக்கும் கலையுணர்வுக்கும் எடுத்துக்காட்டாக அதிகாரிகள் பயிற்சியின் போதான நாடகம் ஒன்று இன்றும் நெஞ்சில் நிழலாடுவதைக் குறிப்பிடலாம். கலை நிகழ்வன்று கல்லூரியே களைகட்டிவிடும், பெண் போராளிகளும் ஆண் போராளிகளும் போட்டியாக நிகழ்ச்சி தயாரிப்பார்கள் தொடர் வகுப்புக்களுக்கும் பயிற்சிகளுக்கும் இடையில் கிடைக்கும் சிறு ஓய்வின் போது அவசர அவசரமாக தயாரித்து சிலவேளைகளில் கடைசி ஒத்திகை கூடச் செய்யாமல் மேடையேறி, ஆனால் தரம் குறையாமல் சமாளித்து அசத்திவிடுவார்கள். அன்று அப்படித்தான் நாடகம் அரங்கேறியது சும்மா ஒருமுறை செய்து பார்த்துவிட்டு மேடையேறும் போது தான் அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு ஒப்பனை செய்து கொண்டனர் அவர்களின் திட்டப்படி ஒரு கள்ளுக்கடையை முதலாளி திறக்கும் காட்சியுடன் நாடகம் ஆரம்பமாகும். கனீபாதான் முதலாளி மேடையிலே திரைவிலகியது மேசையொன்றிலே வெள்ளைத்திரவம் நிரப்பப்பட்ட போத்தல்களைக்கண்டு நாடகக்கோஸ்டியே திகைத்துப்போனது. கனீபா உண்மையாக கள்ளை நிரப்பினாளோ, சவர்க்காரத்தை கரைத்து நிரப்பினாளோ என்ற அச்சத்திலேயே குடிப்பதுபோல் நடிக்க வேண்டியவர்களுக்கு வயிறு பகீரென்றது. திரை விலகிய பின்னும் கனீபாவை மேடையில் காணவில்லை. பார்வையாளருக்கு நடுவே இருந்து கனீபாவின் சின்ன உருவம் பட்டுடையுடனும் திருநீற்றுப் பூச்சுடனும் மடித்த சறக்கட்டுடனும் கையில் கொழுத்தப்பட்ட சாம்பிறாணிக் குச்சியுடன் வந்து தாவி மேடையேறியது போத்தல்களைச் சுற்றிசுற்றி சாம்பிறாணிப் புகை காட்டிய கனீபா மேசையின் ஓரத்தில் அவற்றைக் குத்தி நிறுத்திவிட்டு, இரண்டு கைகளாலும் நெற்றியில் குட்டி தோப்புக்கரணமும் போட்டுவிட்டு கல்லாப் பெட்டியில் குந்தினாள். எல்லோருக்குமே சிரிப்பை அடக்கமுடியாமல் போய்விட்டது. நாடகம் தொடர்ந்து நடந்தது கள்ளுக் குடிப்பவர்களாக நடிப்பவர்கள் வெள்ளைத்திரவத்தை மிக அருகில் பார்த்து அது அந்த மாதம் முடியும் வரையில் குடிக்கவேண்டிய தேநீருக்குரிய லக்ஸ்பிறே என்பதை இனம் கண்டு வயிறெரிந்ததும் அவர்களை கனீபா ஒருவாறு சமாளித்தும் எஞ்சியிருக்கும் ஒருசிலரின் நெஞ்சில் இன்றும் பசுமையாக இருக்கின்றது. மேஜர் மதனா, மேஜர் தாரணி இருவருமே கனீபாவின் சகபயிற்சி ஆசிரியர்கள். அப்போது சண்டைக்கான மாதிரிப் பயிற்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது நடந்த இடம் ஒரு பெரிய இராணுவத்தளத்தின் அயல். பகலில் தொடங்கும் பயிற்சி நள்ளிரவு வரையும் தொடரும் அதன் பின்னர்தான் எல்லோரும் நீண்ட தொலைவில் உள்ள தங்குமிடத்துக்கு நடந்து வந்து சேர்ந்து ஆயுதம் துப்பரவு செய்து குளித்துவிட்டுப் படுப்பார்கள். அன்றிரவு பயிற்சி முடியத் தாமதமாகிவிட்டது பயிற்சியாளர்கள் வந்துவிட்டார்கள் இவர்கள் மூவரையும் காணோம் பயிற்சி நடக்கும் வெளியோன்றிலேயே படுத்து உறங்கிவிட்டு காலையில் தங்குமிடத்துக்கு திரும்பிய மூவரையும் கொட்டில் தேவையில்லை என்று தானே வெட்டையில் போய்ப் படுத்த நீங்கள் இனி இஞ்ச இருக்கவேண்டாம் உடமைகளை தூக்கிக்கொண்டு வெட்டையிலேயே இருங்கோ என்று பொறுப்பாளர் துரத்திவிட்டார். ‘சரியக்கா’ என்றவாறு மூவரும் மறுபேச்சுப் பேசாமல் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள் போனவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காக மாலையில் பொறுப்பாளர் தேடிப்போனார் அங்கே இலை, குழை, ஓலைகளால் ஒரு வட்டக்குடில் அமைக்கப்பட்டு உள்ளே வெண்மணல் பரப்பப்பட்டு, பொருட்கள் எல்லாம் தட்டி ஒன்றிலே ஒழுங்காக அடுக்கப்பட்டு வாசலில் நல்வரவு எழுதப்பட்டு வாங்கோ அக்கா என்று வரவேற்பு அளிக்கப்பட்டு தேநீர் கொடுத்து உபசரிக்கப்பட்டு ஒன்றுமே நடக்காதது போல கனீபா உரையாடலைத் தொடர்ந்தாள் சவால்களைக் கூட இயல்பாக சமாளிக்கும் வல்லமை அவளிடம் இயல்பாகவே இருந்தது. கனீபாவின் வளர்ச்சியில் மேஜர் துளசிக்கு முக்கிய பங்குண்டு கனீபா சிறுத்தைப் படையணிக்கு பயிற்சி ஆசிரியராக இருந்த காலத்தில் ஒரு தவறு செய்துவிட்டு தண்டனையில் சமைத்துக்கொண்டிருந்தாள். இவளோடு ஒன்றாகவே அடிப்படைப் பயிற்சி எடுத்த துளசி அறிவு முதிர்ச்சியுள்ள நிதானமான போராளி அவருக்கு குடுகுடு என ஓடித்திரியும் கனீபாவில் நல்லநேசம் தண்டனையில் சமைத்துக் கொண்டிருந்த கனீபாவை தான் ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவருவதாக பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டு அவளைத் தண்டனையில் இருந்து எடுத்து தன்னுடன் வைத்திருந்தார். ‘இஞ்ச வா கனீபா உனக்கு நான் விளையாட்டு ஒன்று சொல்லித்தாறன்’ என்று அவளைத் தன்னருகே இருத்தி கணினியின் செயற்பாடுகளைச் செய்து காண்பிக்க கனீபாவுக்கு அது ஆச்சரியமான புதுமையான விளையாட்டாக இருக்கவே ஆர்வத்துடன் ஈடுபட்டாள். தான் கணினி கற்பிக்கப்படுவது அறியாமலே அதில் தேர்ச்சி பெற்றுவிட்டாள். அவளுக்கு தன்னையே நம்பமுடியவில்லை தன்னை விளையாட்டாக நல்ல நிலைமைக்கு கொண்டுவந்த துளசியில் அவளுக்குச் சரியான மதிப்பும் பாசமும் எப்போதுமே உண்டு இரண்டு பேருமே ஒன்றாக களத்தில் நின்றபோது கனீபாவின் ஒன்று விட்ட சகோதரியான லெப்.மதனா மட்டு-புளுகுணாவை அதிரடிப்படை தளத் தகர்ப்பில் வீரச்சாவடைய இயக்கத்தில் இணைந்த ஏழு ஆண்டுகளின் பின் அப்போது தான் முதல் முதலாக விடுமுறையில் மட்டக்களப்பிலிருந்த தன் குடும்பத்திடம் போனாள். விடுமுறை முடிந்த ஒரு மாதத்தின் பின் வன்னி திரும்பியவளுக்கு மேஜர் துளசியின் வீரச்சாவு செய்தி அதிர்ச்சியைத் தந்தது. அந்த அதிர்ச்சியுடனேயே ஜயசிக்குறுய் களத்திற்கு திரும்பிவிட்டாள். தன் அணியிலிருந்த போராளிகள் யாரையுமே அவள் கடிந்து கொண்டதில்லை. நெருக்கடியான நேரங்களில் வேலைகள் நடந்து முடிந்திராவிட்டால் நிலைமையின் அவசரத்தை விளக்குவாளே தவிர யாரையும் சினந்ததில்லை. யார் மனதையும் நோகப்பண்ணியதில்லை யாருடைய வாழ்நாள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்குமே தெரியாததால் எல்லோருக்கும் தனதன்பைக் கொடுத்தாள். எல்லோருக்குமே உதவி செய்யவிரும்பினாள். சண்டைக்குப் புறப்படும் கடைசிநேரத்தில் மறிப்புத் தாக்குதல் அணியை வழிநடத்தப் போகும் லெப். கேணல் செல்வியிடம் ஓடிச்சென்று கவனம் உங்களுக்கு ஏதும் பிரச்சினையெண்டால் எனக்கு அறிவியுங்கோ நான் என்ர வேலையை முடிச்சுட்டு சப்போட்டுக்கு வருவன் என்றாள். கனீபா விருப்பப்பட்ட மாதிரியே பெண் போராளிகள் ஏராளம் படையினரைக் கொன்றனர். தெருவெங்கும் குருதிவடிய சிதறிக்கிடந்த படையினரின் உடலங்களிடையே நாம் நடந்தபோது படையினர் தப்பயோடிய வழியெங்கும் அவர்கள் வீசி எறிந்த ஆயுதங்கள், ஆவணங்கள், உடமைகள், இராணுவப் பட்டிகள், பாதணிகள் இன்ன பிறவெல்லாம் இறைந்து கிடந்தபோது, நிலைகளில் இருந்து பிடுங்கி ஏற்றப்பட்ட பலரக மோட்டார் பீரங்கிகளுடன் இராணுவ வாகனங்கள் நின்றபோது வெற்றிக் கொடியை தளபதி விதுசா அவர்கள் ஏற்றிவைத்தபோது பார்த்து அமைதியுற கனீபா இருக்கவில்லை. நினைவுப்பகிர்வு: மலைமகள் நன்றி – களத்தில் இதழ் (22.04.1999).   https://thesakkatru.com/mejor-ganiba/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.