-
Tell a friend
-
Similar Content
-
By அபராஜிதன்
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்-Elanko DSe
) .................. ஒருநாள் நண்பர் ஒருவரோடு பயணித்தபோது டிக்-டொக்கில் ஒரு பெண் நன்றாகப் பேசுகிறார் என ஒரு காணொளியைக் காட்டினார். அட, இவரை நன்கு தெரியுமே, எனது முகநூல் நண்பர் என்று சொன்னேன். அது தனுஜா. அவர் பல்லாயிரக்கணக்கனோர் பின் தொடர்கின்ற ஒரு பிரபல்யமாக டிக்-டொக்கில் இருக்கிறாரெனவெனவும் அந்த நண்பரினூடாகக் கேள்விப்பட்டேன். அப்படித்தான் பிறகு லெனின் சிவத்தின் 'ரூபா' திரைப்படம் வந்தபோது அது தனது வாழ்வின் பாதிப்பில் இருந்து உருவான கதையென்று தனுஜா தனது முகநூலில் எழுதியிருந்ததும் நினைவிலிருக்கிறது (?). இப்படியாகத் தொலைவிலிருந்து நான் அவதானித்துக் கொண்டிருந்த தனுஜாவினது சுயவரலாற்றுப் பிரதியான 'தனுஜா'வை ( ஈழத் திருநங்கயின் பயணமும், போராட்டமும்) வாசிக்கத் தொடங்கியபோது, அது இற்றைவரை தமிழ்ச்சூழலில் வெளிவராத ஒரு நூலென்ற எண்ணம் தொடக்கத்திலே வந்துவிட்டது. எல்லா privilagesம் இருக்கும் ஆண்களாகிய நாங்களே எமது வாழ்வில் நடந்தவற்றை அருகில் இருப்பவர்களிடம் கூடப் பகிரத் தயங்குகின்றபோது, நமது சமூகத்தில் விளிம்புநிலைக்குள்ளாக்கப்பட்ட திருநங்கையான ஒருவர் இவ்வளவு நேர்மையாக தன்னை முன்வைக்க முடியாமென என ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர இதை வாசித்தபோது முன்வந்தது. தனுஜாவின் சிறுவயது ஆணுடலுக்குள் சிக்குப்பட்ட பெண்ணின் கையறுநிலை என்றால், பின்னர் ஒரு பெண்ணாக 'நிர்வாணம்' செய்தபின், தனது இந்த நிலைக்காக அவமதித்த ஆண்களை அவர் 'பழிவாங்கும்' (கொழும்பு மாமா போன்றவர்களை) சந்தர்ப்பங்களைக் கூட நம்மால் அவ்வளவு எளிதால் செரித்துக்கொள்ளமுடியாது. ஆனால் இதுதான் நான், என்னை உங்களைப் போன்ற ஆண்களால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது என்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நமது புரிதல்களைக் கேள்விக்குட்படுத்திக்கொண்டிருந்தார். ஒவ்வொரு வாரவிறுதியிலும் நண்பர்கள் சிலர் கலந்து மெய்நிகர் உலகில் பேசிக்கொண்டிருந்தபோத் சாரு நிவேதிதாவின் படைப்புக்கள் பற்றிய பேச்சுவந்தது. அதன் தொடர்ச்சியில் சாருவின் எழுதிய 'உன்னத சங்கீதம்' கதைகள் போன்றவற்றுக்காய் சாருவை நிராகரிக்கின்றேன் என்று ஒரு நண்பர் சொல்ல அதுகுறித்து பேச்சு இழுபட்டது. நபகோவின் 'லொலிடா'வின் மிக மலினமான கதை 'உன்னத சங்கீதம்' என்பதும், அந்தக் கதை குறித்தே அன்றே புலம்பெயர் பெண்கள் பெரும் எதிர்ப்பை அறிக்கையாக/தொகுப்பாக முன்வைத்தார்கள் என்பதும் நாம் அறிந்ததே. நான் சாருவின் அனைத்துப் புனைவுகளையும் தேடித்தேடி வாசிக்கின்ற ஒருவன். அவரின் மொழியின் எளிமைக்கும், அங்கததற்குமாய் அவரை இன்னும் விடாது பின் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கின்றவன். ஒரு வளர்ந்த ஆணுக்கு, ஒரு சிறுமியோடு சலனம் வருவது சிலவேளைகளில் ஏற்றுக்கொள்ளக்கூடியதென்றாலும், அந்தச் சிறுமியின் பார்வையை முற்றாக மறுத்து ஒரு வளர்ந்த ஆணின் பார்வையிலும், வரலாற்றுப் பிழைகளோடும் (இந்திய இராணுவம் சிங்களப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்வது என்றும்) genuine இல்லாது எழுதப்பட்டதால் உன்னத சங்கீதத்தை எனக்கும் நிராகரிக்கக் காரணம் இருந்தது. அதை அந்த நண்பர்களின் கூடலில் சொல்லியுருமிருந்தேன். எனினும் அடுத்த நாள் ஒரே இருக்கையில் தனுஜாவின் இந்த நூலை வாசித்தபோது நான் சரியாகத்தான் பேசுகின்றேனோ என்பதில் கேள்விகள் எழுந்தன. தனுஜா ஒரு ஆணாகப் பால்நிலை சார்ந்து பிறந்ததால், அவரைப் பெண்ணாக இருக்க மறுக்கும் சமூகத்தில், தன்னைப் பெண்ணாக உணரவைக்கும் ஆண்களை எல்லாம் ஒருவித கருணையுடன் அவர் எதிர்கொள்கின்றார். தனுஜா தனது 12 வயதோடு ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்துவிட்டாலும், அவரின் இந்த ஆணின் உடலுக்குள் அடைபட்ட பெண் தன்மையால், அவர் அதற்கு முன் வாழ்ந்த இந்தியாவிலும், இலங்கையிலும் உடல் சார்ந்த வாதைகளுக்கு உட்படுகின்றார். இந்த நூலில் தனுஜா வயது வந்த ஆண்களோடு தனது சில அனுபவங்களை பாலியல் வன்புணர்ச்சிகளாகவும், சிலவற்றை அவ்வாறில்லாதும் குறிப்பிடும்போது குழந்தைப் பிராயத்தில் பாலியல் விழிப்புக்களைப் பற்றி நான் அறிந்துகொண்டவ சரியா என்ற கேள்விகளும் எழுந்துகொண்டிருந்தன. ......................... தனுஜாவின் இந்த நூலின் ஒவ்வொரு பகுதியை வாசிக்கும்போதும் இந்தளவுக்கு ஒருவர் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், அதைவிட முக்கியமாக பிறர் எவ்வளவு வன்முறையை/இழிவுகளைத் தனக்குச் செய்திருந்தாலும் எவரையும் judge செய்யாமல் எழுத முடிகிறதென்ற வியப்பே வந்துகொண்டிருந்தது. தனுஜா தனது உடல் சார்ந்த போராட்டங்களை மட்டுமில்லாது, திருநங்கை சமூகங்களுக்கிடையில் இருக்கும் சிக்கல்களையும், பிரச்சினைகளையும், பிணக்குப்பாடுகளையும் மறைக்காது முன்வைக்கின்றார். ஒருவகையில் நாமும் பலவீனமுள்ள மனிதர்கள்தான் என ஒருவர் தான் சார்ந்த சமூகத்தைப் பற்றி அங்கு நடக்கும் நிகழ்வுகள் சில்வற்றைப் பேசும்போது நமக்குப் புரியவைக்க முயல்கின்றார். இதுவே இந்தப் பிரதிக்கும் இன்னும் சிறப்பைக் கொடுக்கின்றது. ஒரு திருநங்கை இன்னொரு திருநங்கைக்கு வசதியின் நிமித்தமும், இளமையின் நிமித்தமும் பொறாமை கொண்டு ஏதாவது தவறைச் செய்தாலும், அவர்களுக்கு ஏதோ ஒரு சிக்கல் வரும்போது, அந்தச் சர்ச்சைகளை மறந்து நம்மைப் போன்றவர்களுக்கு நம்மைவிட வேறு யார் உதவப்போகின்றார்கள் என்று ஆதரவு அளிக்கின்ற சந்தர்ப்பங்கள் எல்லாம் அற்புதமானவை. ஜேர்மனியில் வசிப்பவராக இருந்தாலும் தனுஜாவின் புலம்பெயர் வாழ்வைச் சொல்கின்ற அனுபவங்கள் பெரும்பாலும் சுவிஸிலும், கனடாவிலும் நடக்கின்றவையாக இருக்கின்றது. முக்கியமாக கனடாவில் ஒருவரைத் திருமணம் செய்து வாழ்கின்றவராக அதுவும் நான் வசிக்கும் அதே நகரில் இருந்திருக்கின்றார் என்பது சுவாரசியம் தரக்கூடியது. அதிலொருவர் குறும்படங்களில் நடிப்பவர். அவரைத் தனுஜா வன்கூவரில் சந்தித்து பிறகு அவரோடும் அவர் குடும்பத்தோடும் ரொறொண்டோவில் வசிக்கத் தொடங்குகின்றார் (குறும்பட உலகு சிறியது என்பதால் அவர் யாரென்பது அடையாளங்காண்பதும் அவ்வளவு கடினமில்லை). கிட்டத்தட்ட ஒரு சிறைபோல அவர் வீட்டுக்குள் இங்கு வைக்கப்பட்டிருந்தாலும், பிற எதைப்பற்றியும் கவலைப்படாது அப்படி ஒரு 'குடும்பப் பெண்'ணாக மட்டுமே இருப்பதே அவருக்கு போதுமாக இருக்கின்றது. ஏனெனில் இந்த ஆண் அவரை ஒரு முழுமையான பெண்ணாக ஏற்றுக்கொள்கின்றார் என்பதே தனுஜாவுக்கு முக்கியமானதாக இருக்கின்றது. இன்னொரு கனேடிய தமிழ் ஆண், அவரை மலேசியாவுக்குப் போவதற்கான பயணத்தின் செலவை ஏற்றுக்கொள்கின்றேன் எனச் சொல்லி தனுஜாவைக் கூட்டிக்கொண்டு இலங்கையின் தென்பகுதி முழுவதும் திரிகிறார். அவர் திருமணஞ் செய்த ஆண். தனது மனைவியின் உறவினர்களைக் காணச் செல்கின்றபோது மட்டும் இவரைக் கைவிட்டுவிடுகின்றார். இவ்வாறு தனக்கான துணையைக் கண்டடைந்துவிடுவேன், ஒரு அற்புதமான வாழ்வை வாழப்போகின்றேன் என்று தனுஜா நம்புகின்ற ஒவ்வொரு பொழுதும் காதலின் நிமித்தம் கைவிடப்படுகின்றார். பிறகு அவருக்கு ஆண்களை எளிதாகக் கற்றுக்கொள்ளமுடிகிறது. நீயும் நான் கண்ட இன்னொரு அந்த ஆண்தானே என ஒருவித பரிகாசப் புன்னகையுடன் எல்லா ஆண்களையும் எதிர்கொள்கின்றார். தன்னைப் பெண்ணாகப் பெருமையாக முன்வைத்து வாழ்வின் சவால்களை சந்திக்கின்றார். ஒருகாலத்தில் பெற்றோரினாலும், உறவுகளாலும் ஒடுக்கபப்ட்ட தனுஜாவைப் பிறகு அவரின் குடும்பம் ஏற்றுக்கொள்கின்றது. இடையில் இவரின் பெண் தன்மையைப் புரிந்துகொள்ளபோது இவரின் குடும்பம் ஒடுக்கியபோதும், தனுஜாவின் குடும்பம் அவரைத் தம்மோடு வைத்துக்கொள்வது கூட கவனிக்கத் தக்கது. கெளரவமும், சாதித்திமிரும், அடியுதைகளும், வார்த்தைகளால் அதைவிட வன்முறைகளும் செய்துகொண்டிருக்கும் தனுஜாவின் தந்தைகூட அவரைத் தமது குடும்பக் 'கெளரவத்தின்' காரணமாக வெளியே போகச் சொல்லாதுதான் விட்டு வைத்திருக்கின்றார். திருநங்கைகளுக்கு மட்டுமில்லை, நம் எல்லோருக்குமே தனுஜா தனது அடையாளஞ்சார்ந்து செய்கின்ற தேடல்களும், தடுமாற்றங்களும், வீழ்ச்சிகளும் கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்களாக இருக்கின்றன. இதுவரை -நாமாக திருநங்களைகளைப் பற்றிப் பேசுகின்றபோது- வைத்திருந்த நிறையக் கற்பிதங்களை உடைத்துச் செல்கின்ற பிரதியாக இந்த சுயவரலாற்று நூல் இருக்கின்றது. தனுஜா தன் அடையாளம் சார்ந்து சுவிஸ், மலேசியா, இந்தியா என்று எங்கெங்கோ தன்னைத் தேடி அலைகிறார். தனக்குப் பிடித்தமான விடயங்களைச் செய்கின்றார். நான் பெண்ணாக உணர்கின்றேன், என்னைப் புரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னபோது கேட்காதவர்களை, பிறகு அவ்வளவு அழகாக எதிர்கொள்கின்றார். அத்துடன் திருநங்கைகளைக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கேலியும் கிண்டலும் செய்துவிட்டு, அதே திருநங்கைகளைக் காமத்தின் பொருட்டு தேடிப்போகின்ற எண்ணற்ற தமிழ் ஆண்களை இந்த நூலில் காண்கின்றோம். உள்ளூர ஒன்றை விரும்பியபடி, ஆனால் அதை 'நாகரிகமாய்' மறைத்தபடி நமது ஆண் உள்ளங்களை நாமே மீண்டும் கண்ணாடியில் பார்ப்பதுபோல இந்த ஆண்கள் நம்மைக் கடந்துபோகின்றார்கள். ................... அதுவும் இன்னமும் முப்பதையே தொட்டுவிடாத தனுஜா கடந்து வந்திருக்கின்ற பாதை மிக நீண்டது. நாம் நினைத்தும் பார்க்க முடியாது. நாம் இவ்வாறு இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கமுடியாதவளவுக்கு அவ்வளவு கடுமையான பாதையது. ஆனால் அந்த கடின வழியைக் கடந்துவந்து, எதன் பொருட்டும்/எவர் பொருட்டும் தன்னைச் சமரசம் செய்யாது தனுஜா தனது கதையை வெளிப்படையாக முன்வைக்கின்றார் என்பதற்காய் நாம் கரங்களை நன்றியுடன் பற்றி அவரை அரவணைத்துக்கொள்ளவேண்டும். எத்தனையோ சீழ்களையும், புண்களையும் கொண்ட ஒரு சமூகத்தில், தன்னை அதிலிருந்து வெளியேற்றாது, தானும் அதில் ஒருவரே என தன்னையும் முன்வைத்து அதே சமயம் தான் சந்தித்தவர்களைக் கூட அதிகமாய் தாழ்த்தாது, இவ்வளவு அனுபவங்களுக்கிடையிலும் மிகுந்த கம்பீரமாக முன்வைக்கின்றார் என்பதே எனக்கு இந்த நூலில் முக்கியமாக இருந்தது. கொழும்பில் தன்னை அடித்த ஒரு மாமாவை தனுஜா நீண்ட வருடங்களின் பின் இலங்கையில் சந்திக்கின்றார். மாமா ஏன் என்னை எப்போதும் அடித்துக் கொண்டிருக்கின்றீர்கள்' எனக் கேட்கிறார் (தனுஜாவின் பெண்மைத்தன்மையின் நிமித்தம் சிறுவயதில் இந்த மாமாவின் வன்முறை மிகுந்த கொடுமையானது). அப்படி அந்தப் பெண்தன்மையை வெறுத்த மாமா தனுஜாவை முத்தமிடுகிறார். வாயில் பாம்பு கடிப்பதைப் போல அதிர்ந்துபோனேன் என்று சொல்கின்ற தனுஜா 'இவ்வளவு தானடா உங்கள் குடும்பப் பாசம்? இவ்வளவு தானடா உங்களது தமிழ்ப்பண்பாடு' என நினைத்துக்கொள்கிறார். பிறகு அவரோடு உடலுறவில் ஈடுபடுகிறார். நீங்கள் என்னை எவ்வளவோ அடக்கி வைத்திருந்தாலும், நான் எனது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துப் பெண்ணாக மாறிவிட்டேன். என் ஆன்மா விரும்பியதை நான் சாதிவிட்டேன்' என்பதை அந்த உடலுறவின் மூலம் அவருக்கு அறிவித்தேன்' என்கின்றார் தனுஜா. இப்படிச் சிறுவயதில் கொடுமை செய்த மாமாவுக்கு அவர் வித்தியாசமான ஒரு 'பழிவாங்கலை'ச் செய்கின்றார். ஆனால் வாசிக்கும் நமக்கோ அதிர்ச்சி வருகின்றது. அதையும் புரிந்துகொள்கின்ற தனுஜா இறுதியில் இவ்வாறு கூறூகின்றார். "ஒரு திருநங்கையின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மற்றவர்களால் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது. பொது அறங்களால் , பொது நீதியால், பொதுக் கலாசாரங்களால், பொது இலக்கியங்களால் , பொதுத் தத்துவங்களால் எங்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. வரலாறு முழுதும் வஞ்சிக்கப்படவர்களான எங்கள் பயணம் புதிர்வட்டப் பாதை. இந்தப் புதிரை யாரும் அவிழ்த்ததில்லை. நாங்கள் கூட அவிழ்த்ததில்லை.' (அச்சில் வரவிருக்கும் கட்டுரையில் ஒரு பகுதி)
Elanko DSe-fb
-
-
Topics
-
Posts
-
By பிழம்பு · பதியப்பட்டது
இங்கிலாந்தில் லிங்கன்ஷயரில் நடந்த அகழ்வாய்வில் இரண்டு இரும்புக் கால எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த எலும்புக் கூடுகள், நேவன்பை என்னும் இடத்துக்கருகில் தனித் தனி அகழ்வாய்வுப் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டன. ஒரு தண்ணீர் குழாய்த் திட்டத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளின் போது இந்த எலும்புக் கூடுகள் கிடைத்தன. இதனோடு சிறு கட்டடங்கள் மற்றும் பானைகளின் உடைந்த பாகங்களும் கிடைத்திருக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் இந்த பகுதியின் கடந்த காலத்தைக் குறித்து, அகழ்வாய்வாளர்கள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள உதவும் என ஆங்லியன் வாட்டர் நிறுவனத்தின் தொல்பொருட்கள் மதிப்பீட்டாளரான ஜோ எவரிட் கூறினார். இரும்புக் காலம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன் 800 (கி.மு) முதல் ரோம் நகரத்தின் படையெடுப்பு நடந்த கி.பி 43 வரையிலான காலத்தை உள்ளடக்கியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. "நேவன்பை பகுதியில் இரும்புக் கால சமூகங்கள் வாழ்ந்தனர் என்பதை அறிவோம். அதோடு நன்கு வரையறுக்கப்பட்ட ரோமானியர்களின் வரலாறும் இங்கு இருக்கிறது. இது போன்ற கண்டுபிடிப்புகள், நம் முந்தைய வரலாற்றைக் குறித்து நிறைய விஷயங்களைக் கூறும். இரும்புக் காலச் சமூகத்தினர் ஒவ்வொரு நாளையும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைக் கூறும்" என்றார் எவரிட். பட மூலாதாரம்,ANGLIAN WATER இந்த எச்சங்களில் நாட்டிங்ஹாம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள் தங்களின் பகுப்பாய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஏங்லின் வாட்டர் நிறுவனத்தின் தண்ணீர் குழாய்த் திட்டத்தின் முதல் பகுதி லிங்கன் & க்ராந்தம் நகரங்களுக்கு இடையில் வரும் வசந்த காலத்தில் தொடங்க இருக்கிறது. இதற்கு முன்பு இந்தப் பகுதிகளைத் தோண்டிய போது, பல ரோமப் பேரரசு காலத்தின் நாணயங்கள் கிடைத்தன. அந்தக் காலகட்டங்களிலேயே, இந்த பகுதிகளில் மெக்டொனால்ட்ஸ் போன்ற துரித உணவகங்கள் இருந்தது என்கிற கருத்துக்கு வலுசேர்க்கும் விதத்தில் இந்த நாணயங்கள் இருக்கின்றன என அப்போது நிபுணர்கள் கூறினார்கள். இந்த பகுதிகளில் ரோமப் பேரரசின் சில கட்டட எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.ரோமப் பேரரசு வரலாற்று காலம்: இங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள் - BBC News தமிழ் -
By பிழம்பு · பதியப்பட்டது
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த பொதுச் சந்தைகள் இன்றையதினம்(18.01.2021) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 15 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு வழிகாட்டல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக வடக்கு மாகாணத்தில் மூடப்பட்டிருந்த பொதுச் சந்தைகள் இன்றையதினம் திறக்கப்பட்டுள்ளன. சந்தைகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி வியாபார நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சந்தைகளில் காவல்துறையினர், சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழில் பொதுச்சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறப்பு | Virakesari.lk -
By பிழம்பு · பதியப்பட்டது
(எம்.ஆர்.எம்.வசீம்) மரணிப்பவர்களை அடக்கம் செய்வது பற்றி குர்ஆனில் எங்கும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானதாகும். மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக குர்ஆனில் பத்து இடங்களுக்கும் அதிகம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் அரசியல் தேவைக்காக எந்தவொரு மதத்தையும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது. முஸ்லிம் ஒருவர் மரணித்தால் எரிக்கக்கூடாது. அடக்கம் செய்யவேண்டும் என குர்ஆனில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்து அவருக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதில் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் எம்,எஸ்.எம்.தாஸிம் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களை அடக்கம் செய்வது பற்றி திருகுர்ஆனில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நீங்கள் கூறிய தவறான கூற்று குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகுந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது. ஆளும் கட்சியின் முன்னணி உறுப்பினரும், ஒரு முக்கிய அமைச்சரும், ஒரு வழக்கறிஞருமான உங்களிடமிருந்து இதை விட விவேகமான அணுகுமுறையை நாம் எதிர்பார்த்தோம். 2021 ஜனவரி 8 ஆம் திகதி பாராளமன்றத்தில் நீங்கள் கூறியுள்ள கூற்றானது முற்றிலும் தவறானதாகும். இஸ்லாமிய மார்க்க தீர்வுகளை பெறுவதானது திருகுர்ஆனின் வசனங்களையும் அதனுடன் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்களுடைய வழிகாட்டல்களாகிய ஹதீஸ் கலைகளையும் நன்கு கற்ற இஸ்லாமிய அறிஞர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும். எவ்வாறாயினும், திருக்குர்ஆனை நீங்கள் இருதடவை வாசித்துப் பாரத்ததையிட்டு எங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கும் அதே வேளையில், கட்டாயம் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அதில் எங்கும் இல்லை என்று சொல்வது முற்றிலும் தவறானதாகும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இஸ்லாமீய மத போதனைகளுடன் தொடர்புடைய மார்க்கத் தீர்ப்புகளைப் பெறும் முறை தொடர்பான சில விடயங்களை தெளிவுபடுத்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விரும்புகிறது. இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் திருக்குர்ஆன், நபிமொழி (சுன்னா), இஜ்மா (அறிஞர்களின் இணக்கப்பாடு), கியாஸ் (ஒத்த சந்தர்ப்பங்கள்) ஆகிய நான்கு மூலங்களில் இருந்தே பெறப்படும். திருகுர்ஆன் என்பது இறை வசனமாவதோடு, மனித குலத்திற்கான முழுமையான வழிகாட்டியாகவும் உள்ளது. இது உலகத்தாருக்கு வழிகாட்டியாக இறக்கப்பட்டதுடன் விடயங்களை கருத்தியல் ரீதியாகவும் உரையாற்றுகிறது. இதற்கு காலம் அல்லது பிராந்திய வரம்புகள் எதுவும் கிடையாது. இருப்பினும் சட்ட திட்டங்களுக்காக திருக்குருஆனை மட்டும் நோக்குவது சாத்தியமல்ல. ஏக இறைவனின் இறுதித் தூதரின் முன்மாதிரி மற்றும் அறிவுரைகளையும் நாம் சேர்த்தே நோக்க வேண்டும். உதாரணமாக, இஸ்லாத்தின் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகிய தொழுகை பற்றி குர்ஆன் மிக விளக்கமாக எதுவும் கூறவில்லை. ஐவேளை தொழுகைகளின் பெயர்கள், அவற்றிற்கான நேரங்கள், தொழுகை நிறைவேறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் அது எவ்வாறு உடல் ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன திருக்குருஆனில் விரிவாக விவரிக்கப்படவில்லை. அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்பதை காரணம் காட்டி முஸ்லிம்கள் அதை நிறைவேற்றத் தேவையில்லை என எவரும் வாதிட முடியாது. அதேபோல், உலகெங்கிலும் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் ரமலான் மாதத்தின் நோன்பு, வசதியுள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டிய ஸகாத் மற்றும் ஹஜ் யாத்திரை ஆகியவற்றை திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது திருக்குர்ஆனில் விரிவாக விளக்கப்படவில்லை. இதனை காரணம் காட்டி அப்பொறுப்புக்களைப் பற்றி முஸ்லிம்கள் கவலைப்படத் தேவையில்லை என்று ஒருவர் வாதிட முடியாது. ஏனென்றால், இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்காக திருக்குர்ஆனை மட்டும் நோக்குவது நமக்கான வழிமுறையல்ல. எனவே, இஸ்லாத்தின் மிக அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட விரிவாகப் புரிந்துகொள்வதற்கு மேற்கூறிய அடிப்படை ஆதாரங்களை கூட்டாகக் குறிப்பிட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு இஸ்லாமிய மார்க்க சட்டம் பற்றி நாம் தெரிந்து கொள்ள விரும்பினால், திருக்குர்ஆன் என்பது முதல் மற்றும் முக்கிய ஆதாரமாக இருந்த போதிலும், அதனுடன் சேர்த்து கவனத்தில் கொள்ள வேண்டிய ஏனைய பிற மூலங்களும் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய ஒருவருக்கு சிறப்பு கலைகளின் அறிவும் திறமையும் இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி, ஒரு முஸ்லிம் இறந்ததும், அவரை குளிப்பாட்டி, வெள்ளைத் துணியால் கபன் செய்து, தொழுகையை நிறைவேற்றி அதன் பின் மண்ணில் அடக்கம் செய்வது என்ற வரிசையான செயன்முறையை, ஒருவர் திருக்குர்ஆனை ஒராயிரம் தடவைகள் புறட்டினாலும் காண மாட்டார். மேலும், அடக்கம் பற்றி திருக்குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை என்று நீங்கள் சொல்லியிருப்பதும் முற்றிலும் தவறாகும். உண்மையில், திருக்குர்ஆன் சுமார் பத்து இடங்களில் அடக்கம் செய்வது பற்றி பேசியுள்ளது. ஏனைய இஸ்லாமிய கடமைகள் போலவே, அடக்கம் தொடர்பான முழுமையான செயன்முறையும் நாம் நபியவர்களின் வழிகாட்டுதல் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலமாகவும், மார்க்க அறிஞர்களின் உதவியுடனேயே அறிந்து கொள்கின்றோம். ஒவ்வொரு மதத்திற்கும் அதன் போதனைகள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான முறைகள் இருப்பதை புரிந்து கொள்வது முக்கியமாகும், இது அந்தந்த மத அறிஞர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும். குறிப்பிட்ட விடயத்தில் அதிகாரப்பூர்வ அறிவு உள்ளவர்களின் சரியான ஆலோசனை இல்லாமல் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் இத்தகைய அறிக்கைகள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன. இஸ்லாம் மற்றும் புனித குர்ஆன் அல்லது வேறு எந்த மதத்தையும்; எந்தவொரு அரசியல் தேவைக்கும் பயன்படுத்துவதைத் தவிர்ந்துகொள்ளுமாறு மரியாதைக்குரிய உங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறது. எங்கள் தாய்நாட்டில் உள்ள சமூகங்களுக்குள் தேவையற்ற பிரச்சினைகள், தவறான எண்ணங்கள் மற்றும் தவறான புரிதல்கள் தவிர்க்கப்படுவதை உறுதிசெய்ய மேற்கூறிய தவறான அறிக்கைகளை சரிசெய்யுமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம். இவ்விடயம் பற்றி மேலும் விரிவான விளக்கங்களைப் பெற நீங்கள் விரும்பினால் தங்களை நேரில் சந்தித்து தெளிவுரைகளை தரவும் நாம் தயாராக உள்ளோம். குர்ஆனில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன ? - ஜம்இய்யதுல் உலமா கம்மன்பிலவுக்கு பதில் | Virakesari.lk -
By பிழம்பு · பதியப்பட்டது
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை அதிகரித்துள்ளது. உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில், கடந்த வருடம் பல பொருட்களுக்கு அரசாங்கத்தினால் இறக்குமதித் தடை விதிக்கப்பட்டது. இதனடிப்படையில், உளுந்து இறக்குமதிக்கும் கடந்த ஜூன் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டின் உளுந்து விலை அதிகரித்துள்ளதுடன், உளுந்திற்கு பாரிய தட்டுப்பாடும் நிலவுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட காலப்பகுதியில் 300 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோ உளுந்து, தற்போது சுமார் 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். உளுந்து விலை அதிகரிப்பினால் சைவ உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், உளுந்து இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளமையினால், உள்ளூர் உளுந்து உற்பத்தியாளர்கள் நன்மை அடைந்துள்ளார்களா? இலங்கையின் உளுந்து பயிர் செய்கைக்குப் பிரசித்தி பெற்ற இடங்களில் வவுனியாவும் ஒன்று. எனினும், வவுனியாவில் சுமார் 13,500 ஏக்கரில் உளுந்து விதைக்கப்பட்ட நிலையில், தொடரும் மழையுடனான வானிலையால் உளுந்துச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் எந்த உணவுப் பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாட்டில் உளுந்தின் விலை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு | Virakesari.lk
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.